Home Blog Page 5763

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை:ஆட்சி அமைக்குமா ஆம் ஆத்மி?

0

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை:ஆட்சி அமைக்குமா ஆம் ஆத்மி?

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியுள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

டெல்லி சட்டமன்றத்துக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி நடந்தது. அதையடுத்து வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே கடுமையானப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லியில் உள்ள 70 தொகுதிகளில் ஆட்சியமைக்க 36 தொகுதிகள் தேவை. இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு இடையில் காலை வாக்கு எண்ணிக்கை ஆரம்பமானது. இந்த வாக்கு எண்ணிக்கையில் ஆரம்ம முதலே ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வந்தது. சற்று முன்பு வரை ஆம் ஆத்மி 53 தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது.

பாஜக 16 தொகுதிகளிலும் , காங்கிரஸ் 1 தொகுதியிலும் முன்னிலை வகித்து வருகின்றது. இதனால் தனிப் பெரும்பான்மையாக ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமித்ஷா மற்றும் மோடி ஆகியோரின் தீவிரப் பிரச்சாரங்களுக்கு இடையில் ஆம் ஆத்மி வெற்றி பெறுவது அக்கட்சிக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கையேக் காட்டுகிறது.

இந்த தேர்தலில் குடியுரிமைத் திருத்தச் சட்டம், டெல்லி பல்கலைக் கழக மாணவர்கள் தாக்கம், எனப் பல காரணிகள் பாஜகவுக்கு எதிராக அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. மக்களவைத் தேர்தல் வெற்றிக்குப் பின் பாஜக சட்டமன்றத் தேர்தல்களில் வரிசையாக தோற்றுவருவது வாடிக்கையாக உள்ளது.

டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி: 3வது முறை முதல்வராகும் அரவிந்த் கெஜ்ரிவால்

0

டெல்லியில் பிப்ரவரி எட்டாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு தேசிய கட்சிகளுக்கு இடையே ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நடைபெற்றது

இந்த தேர்தல் முடிவடைந்தவுடன் அனைத்து கருத்துக் கணிப்புகளும் ஆம் ஆத்மி மிக அபாரமாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்றே கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையிலேயே அதிக அளவிலான தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வந்தது. இந்த நிலையில் சற்றுமுன் கிடைத்த தகவலின்படி டெல்லியில் ஆம் ஆத்மி 53 இடங்களிலும் பாஜக 16 இடங்களிலும் காங்கிரஸ் கட்சியில் ஒரே ஒரு தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

டெல்லியில் மொத்தம் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளில் 36 தொகுதிகளில் வெற்றி பெற்றாலே ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில் தற்போது ஆம் ஆத்மி 53 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதால் அக்கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்ததாகவே கருதப்படுகிறது ஏற்கனவே இரண்டு முறை முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக முதல்வர் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம் ஆத்மி வெற்றியை அடுத்து அக்கட்சிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

நெய்வேலியை மொய்க்கும் ரசிகர்கள் கூட்டம்:இயக்குனருக்கு விஜய் கொடுத்த புது ஐடியா!

0

நெய்வேலியை மொய்க்கும் ரசிகர்கள் கூட்டம்:இயக்குனருக்கு விஜய் கொடுத்த புது ஐடியா!

படப்பிடிப்புத் தளத்துக்கு தினமும் வந்து காத்திருக்கும் ரசிகர்கள் குஷிப்படுத்தும் விதமாக மாஸ்டர் படக்குழு ஒரு செயலை செய்யவுள்ளது.

விஜய் நடித்த பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரின் அலுவலகங்களில் நேற்று வருமான வரிச்சோதனை நடந்தது. இதையடுத்து விஜய் வீட்டிலும் சோதனை நடத்தும் பொருட்டு ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்புக்கு வந்த வருமானத் துறை விஜய்யை சென்னைக்கு அழைத்துச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நெய்வேலி ஷூட்டிங்கில் இருந்து பாதியிலேயே அவர் வந்து விட்டதால் மீண்டும் எப்போது ஷுட்டிங் தொடங்கும் எனத் தெரியாது என செய்திகள் வெளியான நிலையில் அடுத்த நாளே நெய்வேலியில் ஷூட்டிங் தொடங்கியது. இந்நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் கூட்டமாக சென்ற பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்து படப்பிடிப்புக்கு இடையூறு செய்தனர். இதையடுத்து போலிஸார் பாதுகாப்போடு படப்பிடிப்புத் நடைபெற்று வருகிறது.

நெய்வேலியை மொய்க்கும் ரசிகர்கள் கூட்டம்:இயக்குனருக்கு விஜய் கொடுத்த புது ஐடியா!

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் படப்பிடிப்பை முடித்துவிட்டு வெளியே வந்த விஜய், ரசிகர்களை நோக்கி கையசைத்து படப்பிடிப்பு குழுவினர்களின் வேன் ஒன்றின் மீது தனது மொபைல் போனை எடுத்து ரசிகர்களுடன் அவர் செல்பியும் எடுத்துக் கொண்டார். அந்த செல்பி சமூக வலைதளங்களில் வைரல் ஆக, இப்போது ரசிகர்களை குஷிப்படுத்தும் இன்னொரு விஷயத்தையும் செய்ய உள்ளது படக்குழு.

படப்பிடிப்பு தளத்துக்கு தினமும் கூட்டமாக வரும் ரசிகர்களைப் படம் பிடித்து அதனைப் படத்தில் இடம்பெறும் பாடலில் வைத்துக் கொள்ளும்படி இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளருக்கு விஜய் அறிவுரை வழங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக படத்துக்கு பயன்படுத்தும் கேமராக்களையே பயன்படுத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே தலைவா படத்தில் இதுபோல காட்சி ஒன்று இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது போட்டி:சொதப்பிய கோலி!கைகொடுக்குமா ஸ்ரேயாஸ்&ராகுல் கூட்டணி?

0

மூன்றாவது போட்டி:சொதப்பிய கோலி!கைகொடுக்குமா ஸ்ரேயாஸ்&ராகுல் கூட்டணி?

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா முதலில் பேட் செய்து வருகிறது.

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

ஆனால் அதன் பின் தொடங்கிய ஒருநாள் தொடர் இந்திய அணிக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இல்லை. நடந்து முடிந்த இரு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரை இழந்துள்ளது. இன்று பே ஓவல் மைதானத்தில் நடைபெறும் மூன்றாவது போட்டியிலாவது வெற்றி பெற்று இந்திய அணி கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இன்று காலை தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற நியுசிலாந்து இந்தியாவை பேட் செய்ய அழைத்தது. அதை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 1 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். பின்னர் வந்த கேப்டன் கோலி 9 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி இக்கட்டான சூழலில் உள்ளது.

இதையடுத்து பிருத்வி ஷாவுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர். இருவரும் நிதானமாக விளையாட, பிருத்வி ஷா சிறப்பாக விளையாடி அரைசதத்தை நெருங்கினார். ஆனால் 40 ரன்களில் இருந்த போது அவர் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். இதையடுத்து வந்த ராகுல் ஸ்ரேயாஸ் ஐயரோடு இப்போது களத்தில் விளையாடி வருகிறார். தற்போது வரை இந்திய அணி 16 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 83 ரன்களை சேர்த்துள்ளது. ராகுல் 13 ரன்களுடனும் ஸ்ரேயாஸ் 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

ஒட்டகத்தில் ஊர்வலம் வந்த மணமகன் கையில் சிஏஏ எதிர்ப்பு பதாகை: கேரளாவில் பரபரப்பு

0

கேரளாவில் சிஏஏ சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மணமகன் ஒருவர் நூதனமாக போராட்டம் நடத்தியது என்ற அந்த பகுதியில் உள்ளவர்களை பரபரப்பில் ஆழ்த்தியது

திருமணம் நடக்கவிருக்கும் மண்டபம் இருக்கும் பகுதிக்கு 20 கிலோ மீட்டர் ஓட்டகத்தில் வந்த மணமகன் கையில் சிஏஏவுக்கு எதிரான பதாகைகளை காண்பித்துக் கொண்டு வந்தார். இதனைப் பார்த்த அந்த பகுதி மக்கள் ஆச்சரியமடைந்தனர். மணமகனுடன் அவருடைய நண்பர்களும் ஒட்டகத்தில் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மணமகனும் அவரது நண்பர்களும் சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் போட்டவாறு 20 கிமீ ஒட்டகத்தில் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த சில வாரங்களாகவே கேரளாவில் சிஏஏவுக்கு எதிராக பல இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சி அமைப்புகள் போராட்டம் செய்து வரும் நிலையில் ஒட்டகத்தில் நூதனமான முறையில் மணமகன் திருமணத்தன்று செய்த போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து மேலும் சில இளைஞர்கள் தங்களுடைய திருமண தினத்தன்றும் இதேபோல் ஒட்டக ஊர்வலம் வர முடிவு செய்துள்ளனர்.

மேலும் திருமணம் முடிந்த பின்னர் மணமகள் கையில் சிஏஏ சட்ட நகல் ஒன்றை கொடுத்து சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க மணமகளிடமும் மணமகன் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது

மக்களவையில் எதிரொலித்த விஜய் விஷயம்:சன் டீ வி தயாநிதி மாறனா இது!

0

மக்களவையில் எதிரொலித்த விஜய் விஷயம்:சன் டீ வி தயாநிதி மாறனா இது!

விஜய் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரிடம் வருமான வரித்துறை நடந்து கொண்டது தொடர்பாக மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் பேசியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

விஜய் நடித்த பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரின் அலுவலகங்களில் நேற்று வருமான வரிச்சோதனை நடந்தது. இதையடுத்து விஜய் வீட்டிலும் சோதனை நடத்தும் பொருட்டு ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்புக்கு வந்த வருமானத் துறை விஜய்யை சென்னைக்கு அழைத்துச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மக்களவையில் எதிரொலித்த விஜய் விஷயம்:சன் டீ வி தயாநிதி மாறனா இது!

நெய்வேலி ஷூட்டிங்கில் இருந்து பாதியிலேயே வந்ததால் ரெய்டு முடிந்த அடுத்த நாளே நெய்வேலியில் ஷூட்டிங் தொடங்கியது. இந்நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் கூட்டமாக சென்ற பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்து படப்பிடிப்புக்கு இடையூறு செய்தனர். இதையடுத்து போலிஸார் பாதுகாப்போடு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2002ஆம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழிலை செய்ததாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
கடந்த 2002ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை ரஜினிகாந்த் தாக்கல் செய்த வருமானவரி கணக்குகளில் குறைபாடு இருப்பதாகக் கூறி வருமானவரித்துறை அவருக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டது.

மக்களவையில் எதிரொலித்த விஜய் விஷயம்:சன் டீ வி தயாநிதி மாறனா இது!

இந்த உத்தரவை எதிர்த்து ரஜினிகாந்த் வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திடம் மேல்முறையீடு தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணையின்போது ரஜினிகாந்த் தான் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்ததாகவும் அதில் வாராக் கடனாக 1.7 கோடி ரூபாய் ஏற்பட்டதால் தனக்கு நஷ்டம் ஆகி விட்டதாகவும் கணக்கு காட்டியதாக தெரிகிறது. இதை ஏற்று வருமான வரித்துறை வழக்கை வாபஸ் பெற்றது. அதனால் விஜய் மற்றும் ரஜினி சம்மந்தப்படட் இரு வழக்குகளிலும் வருமான வரித்துறைக்குப் பின்னால் பாஜக இருப்பதாகப் பேசப்பட்டது.

இந்நிலையில் இப்போது இந்த விவகாரம் மக்களவை வரை சென்றுள்ளது. மத்திய அமைச்சரான தயாநிதி மாறன் ‘ரஜினிக்கு மத்திய அரசு ஒரு கோடி ரூபாய் வரை வரிச்சலுகை அளித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் விஜய் குறி வைக்கப்பட்டு தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். படப்பிடிப்புத் தளத்தில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளார். இது எந்தவிதத்தில் நியாயம்.’ எனக் கூறியுள்ளார். தயாநிதி மாறனின் நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினியை வைத்துப் படம் ஒன்றைத் தயாரித்து வரும் வேளையில் அவருக்கு எதிராக பேசியுள்ளது சலசலப்பை உண்டாக்கியுள்ளது.

ரஜினி தலையில் மூளை இல்லை மாட்டு சாணம்தான் இருக்கிறது!! ஆபாச வீடியோவில் சிக்கிய பிரசன்னா பேச்சு?

0

ரஜினி தலையில் மூளை இல்லை மாட்டு சாணம்தான் இருக்கிறது!! ஆபாச வீடியோவில் சிக்கிய திமுகவின் பிரசன்னா பேச்சு?

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பேசிய நடிகர் ரஜினிகாந்த்தை போயஸ் தோட்டத்து மனநோயாளி என்றும், குரு மூர்த்தியை பற்றியும் தரக்குறைவாக பேசி திமுகவின் செய்தி தொடர்பாளர் பிரசன்னா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மேலும் பலரை குறிப்பிட்டு பல்வேறு விதமாகவும், ஒருமையிலும் திட்டியுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பொது கூட்டத்தில் கலந்து கொண்ட பிரசன்னா பேசியதாவது: போயஸ் தோட்டத்தில் இருக்கும் பைத்தியங்களுக்கு NRC பற்றியோ NCR பற்றியோ சரியாக தெரியாது. குடியுரிமை திருத்த சட்டத்தை பற்றி என்னவென்று தெரியாமல் ஆதரிக்கும் ரஜினிகாந்த் ஒரு மனநோயாளி என்றும், அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவன் இல்லை என்றும் பிரசன்னா ஆவேசமாக பேசினார்.

எனது தலையில் திறந்து பார்த்தால் அதில் மூளை இருக்கும், ரஜினியின் தலையை திறந்து பார்த்தால் மாட்டு சாணம்தான் இருக்கும் என்றும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரிப்பவர்கள் சங்கிகள் என்று உச்சகட்டமாக பேசினார். பாஜக நாராயணன் மற்றும் கேடி ராகவன் போன்றவர்களையும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்தார். குடியுரிமை சட்டம் கொண்டு வந்த ஆண்டு கூட இவர்களுக்கு சரியாக தெரியவில்லை. நான் சட்டம் படித்தவன் எனக்கு தெரியும் என்று விமர்சன வரிகளை தொடர்ந்தார்.

பிரசன்னாவின் பேச்சுக்கு சிலர் கைதட்டிக் கொண்டே இருந்தனர். திமுக கட்சியின் செய்தி தொடர்பாளரான பிரசன்னாவின் அநாகரிகமான பேச்சு இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. திமுகவின் அரசியலுக்கு முக்கிய ஆலோசனை வழங்கும் இடத்தில் பிரசாந்த் கிஷோர் என்னும் பிராமணர் இருந்து வருகிறார் என்றாலும், ஒரு கட்டத்தில் பிராமணர்களை பற்றியும் கூட்டத்தின் நடுவே பிரசன்னா விமர்சித்தார். இதே பிரசன்னா சில நாட்களுக்கு முன்பு ஒரு ஆபாச வீடியோவில் இருப்பதாக ஒரு வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. ( அந்த வீடியோவில் இருந்தது அவர்தானா என்று உறுதியாக நிரூபிக்கப்படவில்லை)

கல்லூரியில் நுழைந்து மாணவிகளை கற்பழித்த போதை ஆசாமிகள்; டெல்லியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

0

கல்லூரியில் நுழைந்து மாணவிகளை கற்பழித்த போதை ஆசாமிகள்; டெல்லியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

சென்ற வாரம் டில்லி கார்கி கல்லூரியில் மாலை 6 மணிக்கு நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியின் போது, சில போதை ஆசாமிகள் விழா நடக்கும் கல்லூரிக்குள் புகுந்து பலாத்காரம் செய்யும் எண்ணத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இந்த சம்பவத்தினால் அங்கிருந்த மாணவிகளுக்கு பெரும் அதிர்ச்சியை சந்தித்து பயத்தை அதிகரித்தது.

இந்த கொடூர சம்பவத்தை பற்றி ஒரு மாணவி தான் கற்பழிக்கப்பட்டதாக சமூக வலைதளமான டுவிட்டரில் பதிவிட்டார். ஆண்டு விழாவின் போது நடந்த இச்சம்பவத்தை தெரிந்தும், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களும், காவல் துறையினரும் எங்களின் பாதுகாப்பை உறுதி செய்யாமல் வேடிக்கை பார்த்ததாகவும் மாணவிகள் தமது குற்றச்சாட்டை முன் வைத்தனர். அங்கு வந்த போதை ஆசாமிகள் கல்லூரி நபர்கள் கிடையாது முப்பது வயதிற்கும் மேற்பட்டவர்கள் என்றும் அனைவரும் மது குடித்துவிட்டு புகைபிடித்த படங்களும் எங்களிடம் இருக்கிறது என்று ஒரு மாணவி கூறினார்.

இந்த சம்பவத்தால் சில மாணவிகள் மயங்கி விழுந்தனர். சில மாணவிகள் அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடியதாக கூறப்படுகிறது. போதை ஆசாமிகள் கும்பலாக வந்ததால் எங்களால் தப்பிக்க முடியவில்லை என்றும் மாணவிகள் சார்பாக கூறப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக யாரும் காவல்துறையில் புகார் தெரிவிக்கவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த சம்பவத்தை குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என்றும் கல்லூரியின் முதல்வர் பிரமிளா குமார் தெரிவித்துள்ளார்.

கல்லூரியிலேயே நடந்த பாலியல் சம்பவத்தை கண்டித்து மாணவிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்த செய்தி குறித்து எங்கும் பெரிதாக பேசப்படவில்லை என்பது வேதனையான விஷயமாகும். பெண்கள் கல்லூரிக்குள் பாதுகாப்பு இருந்தும் பாலியல் சம்பவம் அரங்கேறியிருப்பது டெல்லியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

மத்திய பட்ஜெட் 2020:தமிழகத்துக்கு இவ்வளவு!உத்தரபிரதேசத்துக்கு அவ்வளவு!

0

மத்திய பட்ஜெட் 2020:தமிழகத்துக்கு இவ்வளவு!உத்தரபிரதேசத்துக்கு அவ்வளவு!

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு வெறும் 10,000 ரூபாய் மட்டுமே ஒதுக்கி வஞ்சித்திருப்பதாக மக்களவை உறுப்பினர் சு வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தமிழக ரயில்வேத் துறைக்கு மிகவும் கம்மியான தொகையை ஒதுக்கி மத்திய அரசு வஞ்சித்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் சு வெங்கடேசன் கனடனம் தெரிவித்துள்ளார். இது சம்மந்தமாக அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அவரது பேச்சில் ‘தமிழகத்திற்கு கடந்த ஆண்டுகளில் அறிவிக்கப்படட் ரயில்வே திட்டங்களுக்கான மதிப்பீட்டு தொகை மட்டுமே 10,000 கோடி ரூபாய். ஆனால் பட்ஜெட்டில் தமிழக ரயில்வேவுக்காக ஒதுக்கப் பட்டுள்ள தொகையோ வெறும் 10,000 ரூபாய். ஆனால் உத்தர பிரதேச ரயில்வேக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை 7000 கோடி ரூபாய். இப்படி ஒரு செயலை செய்து தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து உள்ளது. இத்தனைக்கும் ஜி எஸ் டி வரி அதிகமாக அளிக்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட வேண்டும்.’ எனத் தெரிவித்தார்.

மத்திய பட்ஜெட் 2020:தமிழகத்துக்கு இவ்வளவு!உத்தரபிரதேசத்துக்கு அவ்வளவு!

திட்டமிடப்பட்டுள்ள தமிழக ரயில்வே திட்டங்கள் குறித்து தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

  • திண்டிவனம் – செஞ்சி – திருவண்ணாமலை: 70 கி.மீ: ரூ.900 கோடி
  • அத்திப்பட்டு-புத்தூர் (2008-09): 88 கி.மீ: ரூ. 1,150 கோடி
  • ஈரோடு-பழனி (2008-09): 91 கி.மீ : ரூ.1,140 கோடி
  • சென்னை–கடலூர்-மயிலாடுதுறை(2008-09): 179கி.மீ: ரூ. 2,300 கோடி
  • மதுரை-அருப்புக்கோட்டை-தூத்துக்குடி(2011-12): 143 கி.மீ: ரூ.1,800 கோடி
  • கூடுவாஞ்சேரி-ஸ்ரீபெரும்புதூர்-இருங்காட்டுக் கோட்டை-ஆவடி: 60கோடி (2013-14): 60 கிமீ: ரூ.1,500 கோடி
  • மொரப்பூர்-தர்மபுரி (2016-17): 36 கி.மீ: ரூ.360 கோடி
  • திண்டிவனம்-ஏஹிரி: (2006-07): 179கி.மீ: ரூ. 2,300 கோடி

’தளபதி 65’ உறுதியான இரு விஷயங்கள்:புது ரூட்டில் புகுந்த விஜய்!

0

’தளபதி 65’ உறுதியான இரு விஷயங்கள்:புது ரூட்டில் புகுந்த விஜய்!

விஜய் அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தின் இயக்குனர் மற்றும் முக்கியக் கதாநாயகி ஆகியோர் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய்யின் தன் 64 ஆவது படமான மாஸ்டர் படத்தின் படப்பிடிப்புகளில் இப்போது கவனம் செலுத்தி வருகிறார். இந்தப் படம் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருக்கிறது.  சமீபத்திய ரெய்டு நடவடிக்கைகளால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இதையடுத்து விஜய்யின் 65 ஆவது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. அந்த படத்தின் இயக்குனர் என்பது பற்றி இதுவரை அறிவிக்காத நிலையில் இப்போது அதுபற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

அந்த படத்தை கனா படத்தின் இயக்குனரும் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பருமான அருண்ராஜா காமராஜா இயக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இவரின் முதல் படமானக் கணா வெற்றி பெற்றதை அடுத்து அவர் விஜய்யின் குட் லிஸ்ட்டில் இருந்திருக்கிறார். இந்நிலையில் பல இயக்குனர்கள் விஜய்க்காக அடுத்த படத்தின் கதை சொல்லியுள்ள நிலையில் இவரின் கதை விஜய் மற்றும் சன் பிக்சர்ஸ் தரப்புக்குப் பிடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் இவரையே தனது அடுத்தப் படத்தின் இயக்குனராக விஜய் டிக் அடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

’தளபதி 65’ உறுதியான இரு விஷயங்கள்:புது ரூட்டில் புகுந்த விஜய்!

மேலும் இந்த படத்தில் விஜய்யின் தங்கையாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. முன்னதாக தளபதி 65 –ன் இயக்குனர் பட்டியலில் பேரரசு மற்றும் பாண்டிராஜ் அகிய முன்னணி இயக்குனர்களின் பெயர்கள் பரிசீலனையில் இருந்த நிலையில் ஒரே ஒரு படம் இயக்கிய அருண்ராஜாவுக்கு வாய்ப்புக் கிடைத்தது எப்படி என கோலிவுட்டே ஆச்சர்யமடைந்துள்ளது. சமீபகாலமாக விஜய் தனது வழக்கமான ரூட்டை மாற்றி அட்லி, லோகேஷ் போன்ற இளம் இயக்குனர்களின் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.