Home Blog Page 5775

சீனாவில் 600 இந்தியர்கள்:சமூகவலைதளங்களில் கோரிக்கை!தனி விமானம அனுப்பும் இந்திய அரசு!

0

சீனாவில் 600 இந்தியர்கள்:சமூகவலைதளங்களில் கோரிக்கை!தனி விமானம அனுப்பும் இந்திய அரசு!

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் பீதி அதிகமாகி வரும் நிலையில் அங்குள்ள 600 இந்தியர்களை தனி விமானம் மூலம் இந்தியா கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சீனாவில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் உலக நாடுகளை அச்சுறுத்த ஆரம்பித்துள்ளது. இதையடுத்து தங்கள் நாடுகளில் பரவாமல் இருக்க பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுவரை சீனாவில் 213 க்கும் மேற்பட்டோர் வைரஸ் தாக்குதலால் இறந்து விட்டனர். 9000க்கும் மேற்பட்டோர் பாதிகப்பட்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க சீன மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தாக்குதல் அபாயமுள்ள பட்டியலில் இருக்கும் இந்தியா கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பல்வேறு வகையான நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே போல தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை விமான நிலையதில் சீனாவில் இருந்து வரும் பயணிகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அனைவரையும் நவின கருவிகள் மூலம் பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள். இதையடுத்து சீனாவுக்கான விமானப் பயணத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

சீனாவில் 600 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காக தங்கி வருகின்றனர். அவர்கள் அனைவரும் சமூகவலைதளங்களின் மூலம் தங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். இதையடுத்து மத்திய அரசு தனி விமானம் மூலம் அவர்களை இந்தியாவுக்குக் கொண்டுவர முடிவெடுத்துள்ளது. இதற்காக போயிங் 747 ரக விமானத்தை மத்திய அரசு நேற்று சீனாவுக்கு அனுப்பியது.

சீனாவில் இருந்து வெளியேற அனுமதி அளிக்கப்பட்ட முதல் 400 பேரை இன்று அதிகாலை இந்தியா கொண்டு வரப் படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் அனைவரும் 15 நாட்களுக்கு தனிமைப்படுத்தி பட வைக்கப்பட உள்ளனர். அதற்காக டெல்லி மனேசர் பகுதியில் உள்ளசிறப்பு மருத்துவமனையில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவர். கேரளாவைச் சேர்ந்த மாணவி ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நியுசிலாந்தும் சூப்பர் ஓவரும்:விடாமல் துரத்தும் சோதனை-சோக்கர்ஸ் ஆக மாறும் வீரர்கள் !

0

நியுசிலாந்து சூப்பர் ஓவரும்:விடாமல் துரத்தும் சோதனை-சோக்கர்ஸ் ஆக மாறும் வீரர்கள் !

நியுசிலாந்து அணி இதுவரை 8 முறை சூப்பர் ஓவர் போட்டிகளில் விளையாடி 7  முறை தோல்வியைத் தழுவியுள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு நான்காவது டி20 போட்டி நேற்று வெல்லிங்டன் நகரில் நடைபெற்றது. ஏறகனவே இந்தியா தொடரை வென்று விட்டதால் இந்த போட்டியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காக ரோஹித் மற்றும் ஷமிக்கு ஓய்வளிக்கப்பட்டு சஞ்சு சாம்சன் மற்றும் சைனி இறக்கப்பட்டனர். டாஸ் வென்ற நியூஸிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா நிர்ணயித்த 165 ரன்கள் இலக்கை நியுசிலாந்து சிறப்பாக துரத்தியது. ஆனால் கடைசி ஓவரில் மூன்று விக்கெட்களை இழந்து 7 ரன்கள் இலக்கை சேர்க்க முடியாததால் போட்டி சமனில் முடிந்தது.

இதையடுத்து வீசப்பட்ட சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த நியுசிலாந்து பூம்ரா ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 12 ரன்கள் சேர்த்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ராகுல் முதல் இரண்டு பந்துகளில் சிக்சரும் பவுண்டரியும் விலாசி அவுட் ஆனார். அதன் பிறககு கோலி 6 ரன்கள் சேர்த்து வெற்றி பெற வைத்தார். இதன் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 4-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. அடுத்தடுத்து இரண்டு போட்டிகளிலும் சூப்பர் ஓவர் வீசப்பட்டு இரண்டிலும் நியுசிலாந்து தோற்றிருப்பது அந்நாட்டு ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நியுசிலாந்தும் சூப்பர் ஓவரும்:விடாமல் துரத்தும் சோதனை-சோக்கர்ஸ் ஆக மாறும் வீரர்கள் !

ஆனால் இந்த இரு போட்டிகள் என்றில்லாமல் இதுவரை 8 சூப்பர் ஓவர்களை வீசியுள்ளது நியுசிலாந்து. அதில் மொத்தமாக 7 போட்டிகளை தோற்றுள்ளது. அதிலும் 4 முறை அந்த அணியின் முன்னணி பவுலர் சவுத்தி பந்துவீசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு நியுசிலாந்து வீரர்கள் சூப்பர் ஓவரில் சொதப்பியுள்ளது.

இதுவாவது பரவாயில்லை சூப்பர் ஓவரில் சொதப்பாமலேயே ஒரு போட்டியை இழந்துள்ளது. அதுவும் உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தை. இங்கிலாந்துக்கு எதிரான அந்த போட்டியில் சூப்பர் ஓவரில் இரு அணிகளும் சமமாக ரன் சேர்த்தனர். ஆனால் பவுண்டரிகளின் அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் கோப்பையையே இழக்கவேண்டிய சூழல் உருவானது. இதுபோல சூப்பர் ஓவர் சோகம் நியுசிலாந்து அணியை கடந்த 12 ஆண்டுகளாக துரத்தி வருகிறது.

கொரோனா வைரஸ் எதிரொலி: சீனாவை தனிமைப்படுத்தும் உலக நாடுகள்

0

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவில் மிக பயங்கரமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த போதும் சீன அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சீனாவில் இருந்து வெளிநாட்டுக்கு செல்லும் நபர்களால் இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவிலும் ஓரிரு பேருக்கு இந்த வைரஸ் பரவி இருப்பதாகவும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் சீனாவை உலக நாடுகள் தனிமைப்படுத்த தொடங்கிவிட்டன. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சீனாவுடனான எல்லையை மூட ரஷ்ய அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் சீனாவில் இருக்கும் வெளிநாட்டினர் பலரை வெளியேற்ற அந்தந்த நாடுகளில் இருந்து சிறப்பு விமானங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன

மேலும் சீனாவில் உள்ள பல்வேறு நாடுகளின் தூதரக அலுவலகம் மூடப்பட்டு அந்தந்த நாட்டு தூதர்கள் திரும்ப அழைக்கப்பட்டு வருகின்றனர். மேலும் சீனாவுக்கு செல்லும் பல்வேறு நாட்டின் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் தற்போது சீனா உலக நாடுகளில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது

பிக்பாஸ் தர்ஷன் என்னை ஏமாற்றிவிட்டார்: பிரபல நடிகை அதிர்ச்சி பேட்டி

0

பிக்பாஸ் 3’ நிகழ்ச்சியில் டைட்டில் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட தர்ஷன் கடைசி நேரத்தில் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கும்போதே தர்ஷன் தனக்கு வெளியே ஒரு காதலி இருப்பதாக கூறியிருந்தார். அதே நேரத்தில் நடிகை சனம் ஷெட்டி பிக்பாஸ் தர்ஷன் தான் தனது காதலன் என்றும் பேட்டி கொடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தர்ஷன், சனம்ஷெட்டி ஆகிய இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் திடீரென இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் சென்ற சனம் ஷெட்டி, ‘தர்ஷன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி விட்டு பின்னர் ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்துள்ளார்.

ஏற்கனவே தனக்கும் தர்ஷனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் ஆனால் திருமணம் செய்ய அவர் மறுப்பதாகவும் தனது புகார் மனுவில் கூறியுள்ளார். இந்த புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இந்த குறித்து விசாரணை செய்து தன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலிசார் கூறியதாக தெரிகிறது

கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய சனம்ஷெட்டி, ‘தர்ஷன் தன்னை மிரட்டுவதாகவும், திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறினால் தன்னுடைய ரசிகர்கள் மூலம் சமூக வலைத்தளத்தில் தன்னை அசிங்கப்படுத்தவுள்ளதாக தர்ஷன் கூறியதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் இருவருக்கும் நடந்த நிச்சயதார்த்த அழைப்பிதழையும் அவர் செய்தியாளர்களிடம் காட்டினார்.

’தலைவர் 168’ படத்தில் திடீரென இணைந்த நயன்தாரா

0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’தலைவர் 168’ திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்க உள்ளது. இந்த படப்ப்பிடிப்பிற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்தில் திடீரென நயன்தாரா இணைந்து உள்ளதாக சற்று முன்னர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் ஆகிய மூன்று நாயகிகள் நடித்து வரும் நிலையில் திடீரென நயன்தாரா இணைந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

நயன்தாரா சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாரா? அல்லது ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறாரா? என்ற கேள்வி எழுந்து உள்ளது .இருப்பினும் இந்த கேள்விக்கு படம் வெளிவந்த பின்னர் தான் விடை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

மோடியை விமர்சித்து பள்ளி மாணவர்கள் நாடகம்: பள்ளி தலைமையாசிரியர் கைது!

0

மோடியை விமர்சித்து பள்ளி மாணவர்கள் நாடகம்: பள்ளி தலைமையாசிரியர் கைது!

பிரதமர் மோடியை மோசமாக சித்தரித்து பள்ளி நாடகம் ஒன்று நடத்தியதாக பள்ளி தலைமையாசிரியரும் மாணவன் ஒருவனின் தாய் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள  பிதரில் அமைந்துள்ள ஷாஹீன் பள்ளியில் கடந்த ஜனவரி 21 ஆம் தேதி குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களை வைத்து நாடகம் ஒன்று இயற்றப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடியை மோசமாக விமர்சித்துள்ளதாக கண்டனங்கள் எழுந்தன.

இதுகுறித்து நீலேஷ் ரக்ஷியால் என்பவர் அளித்த புகாரில் ‘சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி நடைமுறைப்படுத்தப்பட்டால்  முஸ்லீம்கள் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என்பது போல அந்நாடகம் சித்தரிக்கப்பட்டுள்ளது. பிரதமருக்கு எதிரான சொற்கள் ஸ்கிரிப்டில் இல்லாத போதும் அதுசம்மந்தமாக ஒரு மாணவனின் தாயாரும் பள்ளித் தலைமை ஆசிரியையும் அதை ஒத்திகையின் போது சேர்த்துள்ளனர். இந்நாடகம் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டு வைரலானது.’ எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சம்மந்த பட்ட மாணவனின் தாய் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் இருவரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த கைதுக்கு பொதுமக்கள் மத்தியில் கண்டனங்கள் எழுந்துள்ளது.

மாணவிகளுக்கு ஸ்கூட்டி, சைக்கிள் இலவசம்: பாஜகவின் அசத்தல் தேர்தல் அறிக்கை!

0

டெல்லியில் பிப்ரவரி 8ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அங்கு தற்போது அரசியல் கட்சிகள் உச்ச கட்ட தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றன. இந்த நிலையில் சற்று முன்னர் பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இந்த தேர்தல் அறிக்கையில் பெண்களை கவர்வதற்கு பல கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்துள்ளது

குறிப்பாக கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டிகள் வழங்கப்படும் என்றும் பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. மேலும் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் பாஜக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

ஏற்கனவே பெண்களை கவர்வதற்காக இலவச மெட்ரோ ரயிலில் பயணம் உள்பட பல கவர்ச்சிகரமான திட்டங்களை தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே ஆம் ஆத்மி அறிவித்துள்ள நிலையில் தற்போது பெண்கள் வாக்குகளை கவர்வதற்காக பாஜகவும் கவர்ச்சி திட்டங்களை தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இருப்பினும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பாஜக என மும்முனைப் போட்டியில் ஆம் ஆத்மியே மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

மீண்டும் சொதப்பிய நியுசிலாந்து… கடைசி ஓவர் திக் திக் – சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி!

0

மீண்டும் சொதப்பிய நியுசிலாந்து… கடைசி ஓவர் திக் திக் – சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி!

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4 ஆவது டி 20 போட்டி டை ஆனதால் சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு நான்காவது டி20 போட்டி இன்று  வெல்லிங்டன் நகரில் இன்று நடைபெற்றது. ஏறகனவே இந்தியா தொடை வென்று விட்டதால் இந்த போட்டியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காக ரோஹித் மற்றும் ஷமிக்கு ஓய்வளிக்கப்பட்டு சஞ்சு சாம்சன் மற்றும் சைனி இறக்கப்பட்டனர். டாஸ் வென்ற நியூஸிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

சஞ்சு சாம்சனுடன் கே எல் ராகுல் களமிறங்கினார். இந்திய அணி பேட்டிங்கில் ஆரம்பத்தில் இருந்து சொதப்ப ஆரம்பித்தது சாம்சன், கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ஒற்றை இலக்க எண்களில் ஆட்டமிழந்தனர். இதனால் ஒரு கட்டத்தில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்து தடுமாறியது. அந்த நிலையில் களமிறங்கிய மனிஷ் பாண்டே தாக்குப்பிடித்து அரைசதம் அடித்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர்களுக்கு 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது.

மீண்டும் சொதப்பிய நியுசிலாந்து… கடைசி ஓவர் திக் திக் – சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி!

இதையடுத்து களமிறங்கிய நியுசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் முன்றோ மற்றும் விக்கெட் கீப்பர் இருவரும் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தனர். இதனால் எளிதாக அந்த அணி வெற்றி பெற்றுவிடும் என்று நினைக்க, கடைசி கட்டத்தில் இந்திய அணி பவுலிங்கில் மாயாஜாலம் செய்தது. கடைசி ஓவருக்க் முந்தைய ஓவர் நன்றாக விளையாடிய நியுசிலாந்து கடைசி ஓவரைல் சொதப்ப ஆரம்பித்தது. அந்த அணிக்கு கடைசி ஓவரில் 7 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. களத்தில் டெய்லர் மற்றும் செய்ஃபெர்ட் ஆகியோர் இருந்தது வெற்றி விரல் நுனியில் இருந்தது.

ஆட்டத்தை மாற்றிய கடைசி ஓவரை தாக்கூர் வீசினார். இதில் முதல் பந்தில் விக்கெட்டும் இரண்டாவது பந்தில் பவுண்டரியும் செல்ல போட்டி பரபரப்பானது.  அதற்கடுத்த பந்துகளில் ராஸ் டெய்லர் மற்றும் மிட்செல் ஆகியோரை அவுட் ஆக்கினார் தாக்கூர். கடைசி பந்தில் 2 ரன்கள் அடிக்கவேண்டும் என்ற இக்கட்டான சூழல் உருவாக சாண்ட்னர் பந்தை அடித்து விட்டு இரு ரன்கள் ஓட முயல இரண்டாவது ரன்னில் ரன் அவுட் ஆனார். இதனால் போட்டி டை ஆக இன்றைய போட்டியிலும் சூப்பர் ஓவர் வீச வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. போன போட்டியை போலவே இந்த போட்டியிலும் கடைசி நேர சொதப்பலால் நியுசிலாந்து அணி வெற்றி வாய்ப்பை மயிரிழையில் விட்டுள்ளது.

மீண்டும் சொதப்பிய நியுசிலாந்து… கடைசி ஓவர் திக் திக் – சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி!

இதையடுத்து வீசப்பட்ட சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த நியுசிலாந்து பூம்ரா ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 12 ரன்கள் சேர்த்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ராகுல் மற்றும் கோலி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 5 பந்துகளில் வெற்றி இலக்கை எட்ட முடிந்தது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 4-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

நடிப்பை விட்டு விலக நினைக்கிறாரா அஜித்? நடிகரின் பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சி !

0

நடிப்பை விட்டு விலக நினைக்கிறாரா அஜித்? நடிகரின் பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சி !

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்களுள் ஒருவரான அஜித் தான் இன்னும் சில படங்களில் மட்டுமே நடிக்க இருப்பதாக தன்னிடம் கூறியதாக சக நடிகர் ஒருவர் சொல்லியுள்ளார்.

தமிழ் சினிமாவில் காமடி மற்றும் குணச்சித்திர பாத்திரங்களில் 500 படத்துக்கும் மேல் நடித்திருப்பவர் ’லொள்ளு சபா’ சாமிநாதன். லொள்ளு சபா எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சந்தானத்தோடு இணைந்து நடித்து புகழ்பெற்றதால் அவர் லொள்ளு சபா சாமிநாதன் என அழைக்கப்படுகிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் அஜித் பற்றிய சொல்லிய தகவல் ஒன்று அஜித் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அந்த நேர்காணலில் தான் நடித்த காமெடி ஜாம்பவான்கள் மற்றும் சூப்பர் ஸ்டார் நடிகர்களான ரஜினி, அஜித் மற்றும் விஜய் போன்றவர்களுடனான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அப்போது அஜித்துடன் விவேகம் படத்தில் நடித்த அனுபவத்தைப் பேசிய அவர் ‘அஜித் மிகவும் எளிமையான மனிதர். எந்த வொரு ஹீரோவையும் விட என்னிடம் நெருக்கமாகப் பழகினார். என் மேல் கைபோட்டுக் கொண்டு பேசி என்னை நெகிழவைத்தார். அப்போது நான் இதுவரை எத்தனை படங்களில் நடித்திருக்கிறேன் போன்ற விவரங்களைக் கேட்டார்.

நடிப்பை விட்டு விலக நினைக்கிறாரா அஜித்? நடிகரின் பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சி !

பின்னர் நான் இன்னும் கொஞ்ச காலம்தான் நடிக்கலாம் என்று இருக்கிறேன் எனக் கூறி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். நான் ஏன் என்று கேட்டபோது ‘மக்கள் என்னை வேண்டாம் என்று முடிவு எடுப்பதற்குள் நானாக விலகிக் கொள்ள வேண்டும்’ எனக் கூறினார். சார் உங்களுக்காக உங்கள் ரசிகர்கள் காத்துக் கிடக்கிறார்கள் அப்படியெல்லாம் செய்யாதீர்கள் எனக் கூறினேன். என்னை மேலும் பல படங்கள் நடியுங்கள் என சொல்லி வாழ்த்தினார்’ எனக் கூறியுள்ளார்.

இதனால் அஜித் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். தற்போது 48 வயதாகும் அஜித் இன்னும் ஒரு 10 வருடமாவது நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே கார் ரேஸ் விபத்து ஏற்பட்ட போதும் மங்காத்தா படத்தின் போது எழுந்த பிரச்சனையின் போது அஜித் சினிமாவை விட்டு விலகும் முடிவில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி மாநாடு: இந்து மத வழக்கப்படி குத்துவிளக்கு ஏற்றி திமுகவின் மாநாடு தொடக்கம்..!!

0

திருச்சி மாநாடு: இந்து மத வழக்கப்படி குத்துவிளக்கு ஏற்றி திமுகவின் மாநாடு தொடக்கம்..!!

தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளை பாராட்டும் விதமாக திமுகவின் சார்பில் இன்று பிரம்மாண்டமான மாநாடு நடைபெற்று வருகின்றது. ஒட்டுமொத்த தமிழகம் முழுவதும் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் மற்றும் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் சார்பாக போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்கும் மாநாடு திருச்சியை கலக்கும் அளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திமுகவின் புதிய முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அவர்களின் நேரடி பார்வையில் மாநாட்டிற்கான பணிகளை மிக சிறப்பான முறையில் செய்து வைத்திருந்தார். விழாவில் திமுக கட்சியின் தூண்களான பெரியார், அண்ணா, கலைஞர் படங்கள் பெரிய பெரிய கட் அவுட்கள் வைக்கப்பட்டு இருந்தது. மாநாட்டின் தொடக்கமாக இந்துமத வழக்கப்படி குத்துவிளக்கேற்றி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். எப்போதும் திமுகவின் பாடல் ஒளிக்க கட்சியை கொடியை ஏற்றவது வழக்கம். இந்த முறை குத்துவிளக்கு முதல்முறையாக ஏற்றியது புதிய மாற்றமாக உள்ளது.

மாநாட்டில் திமுகவின் பொருளாளர் துரைமுருகன், துணை பொதுச் செயலாளர்கள் மற்றும் அமைப்புச் செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர். சிலருக்கு மட்டுமே மாநாட்டில் பேசுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது, பேசியவர்கள் அனைவரும் குறைந்த நேரமே எடுத்துக் கொண்டனர். கவுன்சிலர்கள், தலைவர்கள் மற்றும் முக்கிய பதவியில் உள்ளவர்களுக்கு தனித்தனியே இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதிலும் இருந்து திமுகவின் உடன்பிறப்புகள் பலர் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பித்தனர்.