Home Blog Page 5774

என்ன பட்ஜெட் போட்டிங்க..? தமிழ்நாட்டுக்கு கால்கிலோ அல்வாதானா! ஸ்டாலின் விமர்சனம்..!!

0

என்ன பட்ஜெட் போட்டிங்க..? தமிழ்நாட்டுக்கு கால்கிலோ அல்வாதானா! ஸ்டாலின் விமர்சனம்..!!

இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து, திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

2020-21 ஆம் ஆண்டு நிதியாண்டிற்கான பட்ஜெட்டை பற்றிய தகவலை அச்சேற்றும் பணிகள் சில தினங்களுக்கு முன்பு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நிதியமைச்சக ஊழியர்களுக்கு அல்வா கொடுத்து தொடங்கி வைத்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனால் தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் எந்த பயனும் இல்லாத நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாக ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். நடுத்தர மக்களை நடுத்தெருவில் நிறுத்துவது போல் உள்ளது என்றும், வேலைவாய்ப்பு இன்மை, பொருளாதார தேக்க நிலை மற்றும் கிராமப்புற வளர்ச்சி உட்பட நாட்டின் எந்த பிரச்சினைகளைப் பற்றியும் கொஞ்சம் கூட கவலைப்படாத நிதிநிலை அறிக்கையாகவே உள்ளது என்றும் சாடினார்.

மேலும், பாஜக விரும்புகின்ற இந்து கலாச்சாரத்தை திணிக்கும் வகையில் பட்ஜெட் போடப்பட்டுள்ளதாகவும் தனது அறிக்கையில் திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். பட்ஜெட் பற்றிய ஸ்டாலின் பேச்சானது, எதுவுமே இல்லையே அப்போ கால்கிலோ அல்வாதானா என்று காமெடியாக சொல்வது போல் இருந்தது. இதைப்போலவே, பட்ஜெட்டில் ஏழை மக்களுக்கான எந்த திட்டமும் இல்லை எனவும், பழைய அறிவிப்புகளை புதியது போன்று உள்ளதாகவும், எல் ஐ சி பங்குகளை விற்பது குறித்து பெரிய விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

வருமான வரி குறைப்பு மக்களுக்கு நன்மை பயக்கும் என்பதால் அதை வரவேற்கிறேன் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். பட்ஜெட்டுக்கான மதிப்பெண் 1 லிருந்து 10  வரை அளிப்பதாக இருந்தால், எத்தனை தருவீர்கள் என்ற கேள்விக்கு 1 லிருந்து 0 வரை ஏதாவது மதிப்பு இருந்தால் நீங்களே போட்டுக் கொள்ளலாம் என்று கிண்டலாக தெரிவித்தார்.

நஷ்ட ஈடு கேட்பவர்கள் ஆபிஸ் ரூம் வரவும்:ரஜினிக்காக அழகிரி டிவீட்!

0

நஷ்ட ஈடு கேட்பவர்கள் ஆபிஸ் ரூம் வரவும்:ரஜினிக்காக அழகிரி டிவீட்!

தர்பார் படம் தங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விநியோகஸ்தர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அழகிரி ரஜினிக்கு ஆதரவாக டிவிட் செய்துள்ளார்.

பெரிய நடிகர்கள் படங்கள் ரிலிஸாகும் அதை அதிக விலைக்கு வாங்கி அதிக டிக்கெட் கட்டணத்தில் விற்று அதிக லாபம் பார்க்கலாம் என விநியோகஸ்தர்கள் கணக்குப் போட்டு கையை சுட்டுக் கொள்வது வாடிக்கையாகி உள்ளது. இந்த நிலை இப்போது தர்பார் படத்துக்கு வருமோ என்ற சூழல் உருவாகியுள்ளது.

பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான தர்பார் முதல் நாளிலேயே எதிர்மறை விமர்சனங்கள் பெற்றதால் கூட்டம் குறைய ஆரம்பித்தது. முதல் நாளின் மாலை மற்றும் இரவு காட்சிகளில் டிக்கெட்கள் சர்வ சாதாரணமாகக் கிடைக்க ஆரம்பித்தது. இதனால் முதல்நாள் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என சொல்லப்படுகிறது. இத்தனைக்கும் சிற்ப்புக்காட்சியின் டிக்கெட் விலை 1000 ரூபாயில் இருந்து 3000 ரூபாய் வரை விற்கப்பட்டது. இது அனுமதிக்க பட்ட விலையை பல மடங்கு அதிகமாகும்.

இப்போது பெரும்பாலான தியேட்டர்களில் இருந்து தர்பார் படம் தூக்கப்பட்ட நிலையில் கணக்கு பார்த்தால் விநியோகஸ்தர்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனைத் தங்களால் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால் விநியோகஸ்தர்கள் அனைவரும் கூட்டம் போட்டு நஷ்ட ஈடு பெறுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. ஆனால் மற்றொரு தரப்பினரோ தர்பார் நல்ல லாபம் கொடுத்த படம்தான் என்றும் விநியோகஸ்தர்கள் வேண்டுமென்றே ரஜினிக்கு களங்கம் விளைவிப்பதாகவும் சொல்லப்படுகிறது. விநியோகஸ்தர் பொய்க்கணக்கு காட்டுவதாகவும் சொல்லப்படுகிறது.

நஷ்ட ஈடு கேட்பவர்கள் ஆபிஸ் ரூம் வரவும்:ரஜினிக்காக அழகிரி டிவீட்!

இந்நிலையில் ரஜினியின் நீண்டகால நண்பரும் முன்னாள் திமுக தலைவர் கலைஞரின் மகனுமான மு க அழகிரி இந்த விஷயத்தில் ரஜினிக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள டிவிட்டில் ‘நஷ்ட ஈடு கேட்பவர்களை ஆபிஸ் ரூம் அன்புடன் அழைக்கிறது’ எனவும் மிரட்டும் விதமாகக் குறிப்பிட்டுள்ளார். ஆபிஸ் ரூம் என்பது சிவாஜி படத்தில் ரஜினி அடியாட்களை வைத்து வெளுத்து வாங்கும் இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் பிக்ஸட் டெபாசிட் செய்திருக்கிறீர்களா? உங்களுக்கு இந்த பட்ஜெட்டில் நற்செய்தி!

0

நீங்கள் பிக்ஸட் டெபாசிட் செய்திருக்கிறீர்களா? உங்களுக்கு இந்த பட்ஜெட்டில் நற்செய்தி!

நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் நிர்மலா சீதாராமனால் இன்று காலை தாக்கல் செய்யப்பட்டது.

பாஜக அரசு மீண்டும் ஆட்சி அமைத்தை அடுத்து இரண்டாவது முறையாக் இன்று பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. இந்த பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டின் பல்வேறு அம்சங்கள் நிறை குறைகளோடு விமர்சனம் செய்யப்பட்டு வரும் நிலையில் மத்திய தர மக்களுக்கான ஒரு சிறப்பான அறிவிப்பை இந்த பட்ஜெட் கொண்டுள்ளது.

மத்திய வர்க்க மக்களின் நம்பிக்கையான முதலீடு என்றால் அது வங்கிகளில் செய்யப்படும் பிக்சட் டெபாசிட்தான். வட்டி குறைவாக இருந்தாலும் அதில் முதலீடு செய்த பணம் எந்த பிரச்சனையும் இல்லாமல் திரும்பி வந்துவிடும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உண்டு. இந்த டெபாசிட்களுக்கு தொகைக்கும் காலத்துக்கும் ஏற்றவாறு வட்டி வழங்கப்பட்டு வருகிறது.

ஒருவேளை நாம் பிக்சட் டெபாசிட் செய்த வங்கி திவாலானாலோ அல்லது வேறு காரணங்களுக்காக இயங்காமல் போனாலோ டெபாசிட் தாரர்களுக்கு  குறைந்தபட்ச ஷ்யூரிட்டி தொகையாக ஒரு லட்ச ரூபாய் வரைத் தரும். நீங்கள் எவ்வளவு டெபாசிட் செய்திருந்தாலும் ஒரு லட்ச ரூபாய்தான். இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் இந்த இழப்பீட்டுத் தொகை ஒரு லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் பிக்ஸட் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோலவே தனிநபர் வருமான வரி விலக்கு தொகை 5 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பதும் மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அந்த ஒளவையார் வேறு, இந்த ஒளவையார் வேறு: ரவிகுமார் எம்பி

0

பூமி திருத்தி உண் – என்ற ஆத்திச்சூடியை குறிப்பிட்டு அது , அவ்வை 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட் உரையின்போது கூறினார்.

நிர்மலா சீதாராமன் கூறிய இந்த கூறு தவறு என்றும், சங்ககால அவ்வையும் ஆத்திச்சூடி பாடிய அவ்வையும் வேறு வேறு என்றும் ஆத்திச்சூடி பாடிய ஔவை 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரவிக்குமார் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: பூமி திருத்தி உண் – என்ற ஆத்திச்சூடியை குறிப்பிட்டு அது , அவ்வை 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது என நிதி அமைச்சர் கூறினார். அது தவறு. சங்ககால அவ்வையும் ஆத்திச்சூடி பாடிய அவ்வையும் வேறு வேறு. ஆத்திச்சூடி பாடிய ஔவை 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்

சனம் ஷெட்டியுடன் நிச்சயதார்த்தம், ஷெரினுடன் நட்பு, இரண்டுமே உண்மைதான்: தர்ஷன் ஒப்புதல்

0

பிக்பாஸ் தர்ஷன் தன்னுடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டு தற்போது திருமணம் செய்ய மறுப்பதாக நேற்று நடிகை சனம் ஷெட்டி சென்னை காவல்துறை ஆணையத்தில் புகார் கொடுத்த நிலையில் தற்போது தனது தரப்பு விளக்கத்தை செய்தியாளர்களிடம் தர்ஷன் தெரிவித்துள்ளார்

சனம்ஷெட்டியை தீவிரமாக காதலித்து அவருடன் நிச்சயதார்த்தம் செய்தது உண்மைதான் என்றும், ஆனால் நிச்சயதார்த்தத்துக்கு பிறகு அவர் மிகவும் மாறி விட்டதால் அவரை பிரேக் அப் செய்ய முடிவு செய்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்

பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது சக பெண் போட்டியாளர்கள் இடம் பேசக்கூடாது என்றும், நான் நடிக்கும் படத்தில் தன்னையே ஹீரோயினாக ஒப்பந்தம் செய்ய சொல்லி கட்டாயப்படுத்த வேண்டும் என்று பல விதங்களில் அவர் தனக்கு டார்ச்சர் கொடுத்ததாகவும், இதையெல்லாம் செய்யாவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியதாகவும், தன்னை மனரீதியாக அவர் துன்புறுத்தியதாகவும் இதற்கெல்லாம் ஆதாரம் இருப்பதாகவும் தர்ஷன் தெரிவித்தார்

மேலும் ஷெரினுடன் தனக்கு நட்பு இருப்பது உண்மைதான் என்றும் ஆனால் அந்த நட்பு ஒரு எல்லையில் இருப்பதாகவும் அதை புரிந்து கொள்ளாமல் ஷெரினுடன் பேசக்கூடாது என்று சனம் ஷெட்டி கூறியதால் தனக்கு மனவருத்தம் அடைந்ததாக கூறினார்

மேலும் சனம் ஷெட்டிக்கு ஏற்கனவே ஒரு காதலன் இருந்ததாகவும் அவருடன் தற்போதும் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும் தர்ஷன் குற்றஞ்சாட்டினார். மேலும் தனக்கு ரூபாய் 15 லட்ச ரூபாய் செலவு செய்ததாக சனம்ஷெட்டி செய்தி கூறியது பொய் என்றும் அவர் தனக்காக மூன்றரை லட்சம் ரூபாய் மட்டுமே செலவு செய்ததாகவும் அந்த பணத்தையும் தான் பிக்பாஸ் பணம் வந்தவுடன் கொடுத்து விட்டதாகவும் சனம்ஷெட்டியிடம் இருந்து வேறு எந்த பணமும் தான் பெறவில்லை என்றும் தெரிவித்துள்ளார்

தனிநபர் வருமானவரி குறைப்பு! நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டிற்கு குவியும் பாராட்டு

0

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும்போது அனைத்து மக்களும் எதிர்பார்க்கும் ஒரு விஷயம் என்னவெனில் வருமான வரி சலுகை என்பது தான். குறிப்பாக ரூபாய் 5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் இதுவரை 20 சதவீதம் வருமான வரியாக கட்டி வந்ததால், அதன் சதவிகிதம் இந்த பட்ஜெட்டில் குறைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது

எதிர்பார்த்தபடியே தற்போது வரிச்சலுகை குறித்த அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளார். அதன்படி குறைக்கப்பட்ட வரிச்சலுகையின் முழு விபரம் இதோ:

ரூ.5 லட்சம் – 7.5 லட்சம் 20% இருந்து 10% ஆக குறைப்பு!

ரூ.7.5 லட்சம் – 10 லட்சம் 20% இருந்து 15% ஆக குறைப்பு!

ரூ.10 லட்சம் – 12.5 லட்சம் 30% இருந்து 20% ஆக குறைப்பு!

ரூ.12.5 லட்சம் – 15 லட்சம் 30% இருந்து 25% ஆக குறைப்பு!

இந்த பட்ஜெட்டில் 5% முதல் 10% வரை வருமான வரிச் சலுகை குறைக்கப்பட்டுள்ளதால் நடுத்தர வர்க்கத்தினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவ்வாறு வரிகள் குறைக்கப்பட்டால் தான் அனைத்து தரப்பினர்களும் வருமான வரியை முன்வந்து கட்டுவார்கள் என்று ஏற்கனவே பொருளாதார நிபுணர்கள் கூறி வந்த நிலையில் அதன்படியே தற்போது வருமான வரி குறைக்கப்பட்டுள்ளது. 10 சதவீதம் மட்டுமே வருமானவரி என்பதால் இதுவரை வருமான வரி கட்டாதவர்கள் கூட வருமான வரி கட்ட முன்வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

ஆத்திச்சூடியுடன் ஆரம்பித்த பட்ஜெட்: என்னென்ன சலுகைகள்?

0

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று 2020ஆம் ஆண்டு பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையை தொடங்குவதற்கு முன் ஒளவையார் குறித்த முன்னுரையை குறிப்பிட்ட அவர் ‘பூமி திருத்தி உண்’ என்ற ஆத்திச்சூடி பாடலை சுட்டிக்காட்டி தனது பட்ஜெட் உரையை தொடங்கினார் இந்த பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்களை தற்போது பார்ப்போம்

*விவசாயிகளுக்கு “கிசான் கிரடிட் கார்டு” வழங்கப்படும்

  • 6 ஆண்டுகளில் கடன் GDP 52% இருந்து 48% குறைந்துள்ளது
  • 2022க்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும்
  • சுமார் 27.1 கோடி பேர் வறுமையில் இருந்து உயர்த்த பட்டுள்ளனர்
  • பண வீக்கம் கட்டுக்குள் உள்ளது
  • ஜி.எஸ்.டி. வரிக்கு பின் ஒவ்வொரு குடும்பமும் தங்களது மாத செலவில் 4% மிச்சப்படுத்தி உள்ளனர்
  • தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் பெண்கள் விருப்பங்களை நிறைவேற்றுவதே இந்த பட்ஜெட் நோக்கம்
  • 2023ஆம் ஆண்டுக்குள் 200 லட்சம் டன் மீன் உற்பத்தி செய்வதற்கான இலக்கு
  • சிறு நகரங்களுக்கும் மருத்துவ வசதி கொண்டு செல்வதற்கான விரிவான திட்டங்கள்
  • ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் தனியார் பங்களிப்புடன் மருத்துவமனைகள் கட்ட திட்டம்
  • 2023ஆம் ஆண்டுக்குள் 200 லட்சம் டன் மீன் உற்பத்தி செய்வதற்கான இலக்கு
  • சிறு நகரங்களுக்கும் மருத்துவ வசதி கொண்டு செல்வதற்கான விரிவான திட்டங்கள்
  • ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் தனியார் பங்களிப்புடன் மருத்துவமனைகள் கட்ட திட்டம்
  • 6.11 கோடி விவசாயிகளுக்கு பிரதமரின் பயிர்க்காப்பீடு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்
  • விவசாயிகளுக்காக கிசான் ரயில் அறிமுகம் செய்யப்படும்
  • நபார்டு வங்கி மூலம் மறுகடன் திட்டம் விரிவுபடுத்தப்படும்
  • கிராமப்புற பெண்களுக்கு தானிய லட்சுமி சிறப்பு திட்டம்
  • தேசிய தடயவியல் மற்றும் சைபர் அறிவியல் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்
  • பொறியியல் படிப்பு முடித்த இளைஞர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி
  • தேசிய போலீஸ் பல்கலைக்கழகம் நிறுவப்படும்
  • இந்தியாவில் படிப்போம் என்ற திட்டம் முன்னெடுக்கப்படும்
  • திறன்மேம்பாட்டு ரூ.3000 கோடி

சிம்புவுக்கு ஜோடியாகும் யாஷிகா ஆனந்த்: புதிய தகவல்!

0

சிம்பு ஜோடியாக பிக்பாஸ் யாஷிகா ஆனந்த் நடிக்கவிருக்கும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் யாஷிகா ஒரு சில படங்களில் நடித்து வந்தாலும் இதுவரை பெரிய நடிகர்களின் படங்களில் அவர் நடிக்கவில்லை. அந்த வகையில் தற்போது சிம்பு நடிக்க உள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதுமட்டுமின்றி இந்த படத்தில் பிக் பாஸ் போட்டியாளர் மகத் மற்றுமொரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார்

மேலும் சிம்புவின் ‘மாநாடு’ படத்தை இயக்கும் வெங்கட்பிரபுவும் இந்த படத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மக்வென் என்பவர் இயக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். பரதன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் வேறு சில முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

மிரள வைக்கும் காட்டுத்தீயால் பொதுமக்கள் அச்சம்! ஆஸ்திரேலியாவில் அவசர நிலை அறிவிப்பு!

0

மிரள வைக்கும் காட்டுத்தீயால் பொதுமக்கள் அச்சம்! ஆஸ்திரேலியாவில் அவசர நிலை அறிவிப்பு!

பருவ காலநிலையின் காரணமாக ஏற்பட்ட ஆஸ்திரேலிய காட்டுத்தீ தற்போது மக்கள் வசிக்கும் இடத்தை நெருங்கும் காரணத்தால் பொது மக்களின் பாதுகாப்பு நலன் கருதி முக்கிய நகரத்தில் அவசர நிலை அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. சில மாதங்களாகவே தொடர்ந்து வரும் இந்த காட்டுத்தீயினால் பல மில்லியன் உயிர் இறந்துள்ளது. லட்சக் கணக்கான சதுர கிலோமீட்டர் காடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளன

வெப்பம் கலந்த காற்றின் வேகம் அதிகரித்து ஆஸ்திரேலியாவின் தலைநகரான கான்பெரா என்னும் இடத்தை காட்டுத்தீ நெருங்கி வரும் காரணத்தால் அந்நகரத்தில் அவரச நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. வேகமாக வீசும் காற்றின் மூலம் புகை மண்டலம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. இதுவரை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பரவிய காட்டுத்தீயினால் அடர்ந்த வனப்பகுதிகளும், புதர்களும் எரிந்து பல்வேறு பகுதிகளில் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது.

இந்த காட்டுத்தீ விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 33 பேரும், லட்சக் கணக்கான சதுர கிலோமீட்டர் பரப்பளவு தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. இந்த விபத்தினால் பல மில்லியன் ஆஸ்திரேலிய உயிரினங்கள் இறந்துள்ளன. வெப்பத்தின் தாக்கம் குறைந்து காட்டுத்தீயின் கோர தாண்டவத்திற்கு ஒரு நல்ல முடிவு வர வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ராமாயணத்திலேயே லாஜிக் இல்லை:சைக்கோ விமர்சனங்களுக்கு முட்டுக்கொடுக்கும் மிஷ்கின்!

0

ராமாயணத்திலேயே லாஜிக் இல்லை:சைக்கோ விமர்சனங்களுக்கு முட்டுக்கொடுக்கும் மிஷ்கின்!

சைக்கோ படத்தில் இருக்கும் லாஜிக் குறைபாடுகள் தொடர்பான விமர்சனங்களுக்கு இயக்குனர் மிஷ்கின் பதிலளித்துள்ளார்.

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைத்ரி, நித்யாமேனன் உள்பட பலர் நடித்த ’சைக்கோ’ திரைப்படம் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி வெளியாகியது. இளையராஜாவின் இசை மற்றும் கேமரா ஆகியவற்றுக்காக படம் ரசிகர்களால் பரவலாக பாராட்டப்பட்டாலும், லாஜிக் ஓட்டைகள் கொண்ட திரைக்கதையை பெரிதும் விமர்சித்து வருகின்றனர்.  விமர்சனங்கள் இருந்தாலும் படம் நகர்ப் பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

ராமாயணத்திலேயே லாஜிக் இல்லை:சைக்கோ விமர்சனங்களுக்கு முட்டுக்கொடுக்கும் மிஷ்கின்!

படத்தின் முக்கிய குறையாக விமர்சகர்கள் சொல்வது ‘இத்தனை கொலைகளை செய்யும் சைக்கோ கொலைகாரன் ஒரு சிசிடிவி கேமராவில் கூட மாட்டவில்லை யா?  என்றும் கேள்வி எழுப்பினார். இது சமம்ந்தமாக சமூக வலைதளங்களில் கேலிகளும் மீம்ஸ்களும் உலாவர ஆரம்பித்தன. இதற்குப் பதிலளிக்கும் விதமாக மிஷ்கின் ‘படத்துல சிசிடிவி இல்ல. அதனால் என்ன இப்போ? தியேட்டர்ல கொலைகாரன் கொலை எப்படி பன்றான்னு பாக்காம? ஏன் சிசிடிவிய தேடுறீங்க. ஒரு கொலைகாரன் கொலை செய்யும் போதோ அல்லது கடத்தும் போதோ அந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அப்புறப்படுத்திட்டுதான் செய்வான். அத நீங்கதான் புரிஞ்சிக்கணும்.’எனப் பதிலளித்தார்.

இதையடுத்து மீண்டும் ஒருமுறை இது சம்மந்தமாக விளக்கம் அளித்துள்ளார். நேற்று வால்டர் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் ‘என்னுடைய படங்களில் லாஜிக் இல்லை என்று சொல்கிறார்கள். ஏன் ராமாயணத்தில் கூடத்தான் லாஜிக் இல்லை. அடுத்தவன் மனைவியான சீதாவை ராவணன் கடத்திச் செல்வது என்ன லாஜிக்?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மிஷ்கினின் இந்த பேச்சு இப்போது சமூக வலைதளத்தில் வைரலாக இது தொடர்பான மீம்ஸ்கள் வரும் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.