Home Blog Page 5777

சிம்புவை இப்படிதான் நான் வழிக்குக் கொண்டுவந்தேன்:முன்னாள் இயக்குனர் புலம்பல்!அப்பவோ அப்படியா?

0

சிம்புவை இப்படிதான் நான் வழிக்குக் கொண்டுவந்தேன்:முன்னாள் இயக்குனர் புலம்பல்!அப்பவோ அப்படியா?

சிம்பு நடிக்க வந்த புதிதிலேயே முன்னணி இயக்குனர் ஒருவரிடம் தனது வேலையைக் காட்டிய சம்பவம் பற்றி அவர் பேசியுள்ளார்.

சிம்புவால் பாதிக்கப்பட்டு பல கோடிகளை இழந்த தயாரிப்பாளர்கள் பலர் இன்று புலம்ப ஆரம்பித்துள்ளனர். இன்றாவது சிம்பு ஒரு முகம் தெரிந்த பிரபல நடிகர். அதனால் அவரது இத்தகைய சேட்டைகளை ஏதாவது கொஞ்சம் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் தனது ஆரம்பக் காலத்தில் இருந்தே சிம்பு இப்படிதான் என்பதை மூத்த இயக்குனர் ஒருவரின் சமீபத்தின் பேட்டி மூலம் தெரியவந்துள்ளது.

சிம்புவை இப்படிதான் நான் வழிக்குக் கொண்டுவந்தேன்:முன்னாள் இயக்குனர் புலம்பல்!அப்பவோ அப்படியா?

இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் ரஜினி, கமல், அஜித்,விஜய் உள்ளிட்ட அனைத்து தமிழ் சூப்பர் ஸ்டார்களையும் இயக்கியவர். அவர் இயக்கத்தில் சிம்பு நடிக்க ஒரு படம் உருவானது. அப்போது பிஸியாக இருந்தாலும் ரீமேக் படம் என்பதால் அதை இயக்க ரவிக்குமார் ஒத்துக்கொண்டுள்ளார். ரவிக்குமார் எப்போதுமே படத்தை குறுகிய காலத்தில் இயக்க வேண்டும் என நினைப்பவர். அதனால் பரபரப்பாக ஷூட்டிங்கை நடத்தி வந்துள்ளார். ஆனால் சிம்பு வழக்கம் போல தாமதமாக வந்ததால் இரண்டு நாட்கள் ஷூட்டிங் பாதித்துள்ளது.

இதனால் அதிருப்தியான கே எஸ் ரவிக்குமார் சிம்புவைத் தனியாக அழைத்து ‘நான் இந்த படத்தில் இருந்து விலகிக் கொள்கிறேன், நீ வேறு ஆளை வைத்து இயக்கிக் கொள்’ என சொல்லியுள்ளார். இதைக் கேட்டு சிம்பு அதிர்ச்சியாக கே எஸ் ரவிக்குமார்’ நான் பிஸியாக இருந்தாலும் சீக்கிரமே முடிக்கலாம் என்றுதான் இந்த படத்தை ஒப்புக்கொண்டேன். ஆனால் நீ தாமதமாக வந்தால் தயாரிப்பாளருக்கும் எனக்கும்தான் நஷ்டம்’ எனக்கூறியுள்ளார். அதன் பிறகே சிம்பு ஒழுங்காக ஷூட்டிங் வந்து அந்த படத்தை முடித்துக் கொடுத்துள்ளார்.

இந்த சம்பவத்தை கே எஸ் ரவிக்குமாரே சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

முரசொலி அலுவலக மூலப் பத்திர விவகாரத்தில் பாமகவிடம் மண்டியிட்ட திமுக! உற்சாகத்தில் பாமகவினர்

0

முரசொலி அலுவலக மூலப் பத்திர விவகாரத்தில் பாமகவிடம் மண்டியிட்ட திமுக! உற்சாகத்தில் பாமகவினர்

சமீபத்தில் தமிழகத்தில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது தலித் மக்களின் வாக்குகளை கவர திமுக தலைவர் ஸ்டாலின் அப்போது நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகியிருந்த அசூரன் படத்தை பார்க்க சென்றிருந்தார். இதனையடுத்து படம் குறித்தும் பஞ்சமி நில விவகாரம் குறித்தும் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதை கவனித்த பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடமே பஞ்சமி நிலம் தான் முதலில் அதை உரியவர்களிடம் ஒப்படையுங்கள் என ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்திருந்தார். இவ்வாறு திமுகவின் ஆதரவு பத்திரிக்கையான முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டுள்ளது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியது.

இந்நிலையில் மருத்துவர் ராமதாஸ் அவர்களை தொடர்ந்து அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளும் திமுகவிற்கு எதிராக இது குறித்து குற்றம் சாட்டினர்.இதனையடுத்து, பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் இந்த முரசொலி நில விவகாரம் குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் புகார் அளித்தார். பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உடனடியாக முரசொலி நிர்வாக இயக்குநர் உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதனை சமாளிக்க முரசொலி நில விவகாரத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரிக்க தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடுத்தது. மேலும் முரசொலி அலுவலக நிலம் தங்களுடையது தான் என்றும்,இதில் தவறான கருத்தை பரப்பிய பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர். மேலும் மூலப் பத்திர ஆதாரத்தை வெளியிட்டால் இரு மருத்துவர்களும் அரசியலிலிருந்து விலகுவார்களா? என்றும் திமுக தரப்பு கேள்வியெழுப்பிருந்தது.

PMK Leader Dr Ramadoss Issues Notice to DMK RS Bharathi-News4 Tamil Latest Political News in Tamil
PMK Leader Dr Ramadoss Issues Notice to DMK RS Bharathi-News4 Tamil Latest Political News in Tamil

இந்நிலையில் தற்போது நடந்த இந்த விசாரணையின் போது முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டிடத்தில் இயங்குவாதாக திமுக தரப்பின் சார்பாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆதாரம் உள்ளது என்று சவால் விட்டு கொண்டிருந்த திமுக தரப்பு திடீரென்று வாடகை கட்டிடம் என பல்டி அடித்துள்ளதை எதிர்க் கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.

இந்நிலையில் திமுகவிற்கு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்திய இந்த மூலப் பத்திர விவகாரத்தை ஆரம்பித்து வைத்தவரான மருத்துவர் ராமதாஸ் அவர்களும் கடுமையான விமர்சனங்களை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

1. முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டிடத்தில் இயங்குகிறதாமே…. அப்படியானால், அந்த பட்டா வெளியிட்டது, அரசியலில் இருந்து விலகத் தயாரா? என்று சவால் விட்டதெல்லாம் வழக்கம் போல் வெற்றுச் சவடால் தானா?

2. அரசியல் உலகில் எவ்வளவோ பல்டிகள் அடிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அவை அனைத்திலும் ஆகச்சிறந்த பல்டி… முரசொலி நிலம் மீதான பழியைத் துடைப்போம் என்று வீர வசனம் பேசி விட்டு, இப்போது நாங்களே வாடகைக்கு தான் இருக்கிறோம் என்று சரண் அடைந்தது தான்?

3. முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டிடத்தில் தான் இயங்குகிறது என்பதாவது உண்மையா? மூலப் பத்திரத்தைத் தான் வெளியிடவில்லை. குறைந்தபட்சம் வாடகை ஒப்பந்தத்தையாவது முரசொலி நிர்வாகம் வெளியிடுமா? கூடவே சவால் விட்டவர் அரசியலில் இருந்து விலகுவாரா?

4. அகில இந்தியாவில் மட்டுமல்ல…. ஈரேழு லோகத்திலும் வாடகைக் கட்டிடத்தில் இருந்து கொண்டு உரிமையாளர் சார்பில் அவதூறு வழக்குத் தொடர்ந்த ஒரே கம்பெனி…. நம்ம முரசொலி கம்பெனி தான். வெறும் கையால் முழம் போடுவதில் இவர்களை வெல்ல ஆளே இல்லை போலிருக்கிறது!

முரசொலி அலுவலக மூலப் பத்திரத்தை காட்டினால் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் அரசியலிலிருந்து விலகுவார்களா? என்று சவால் விட்ட திமுகவே தற்போது அவர்களிடம் சரணடைந்து விட்டது தமிழக அரசியலில் திமுகவிற்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. பல நாட்களாக இழுத்து கொண்டிருந்த இந்த விவாதத்திற்கு ஒரு முடிவு கிடைத்துள்ளது.இந்நிலையில் பாமக நிறுவனர் திமுகவிற்கு எதிராக கிளப்பிய குற்றச்சாட்டு இதன் மூலமாக உண்மையாகிறது என்று பாமகவினர் உற்சாகத்துடன் திமுகவை விமர்சித்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் அபாயம்:கூகுள் நிறுவனம் செய்த செயல்!மக்களைப் பாதிக்குமா?

0

கொரோனா வைரஸ் அபாயம்:கூகுள் நிறுவனம் செய்த செயல்!மக்களைப் பாதிக்குமா?

கொரோனா வைரஸ் தாக்குதலால் அவதிப்படும் சீன மக்களுக்கு மற்றுமொரு இன்னலாக கூகுள் நிறுவனம் தங்களுடைய அலுவலகங்களை மூடி தகவல் தொடர்பை துண்டித்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது . பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுவரை சீனாவில் 130 க்கும் மேற்பட்டோர் இறந்து விட்டனர். 4,417 மேற்பட்டோர் பாதிகப்பட்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க சீன மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வருகின்றனர்.

இந்தியா சுகாதாரத்துறை கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பல்வேறு வகையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதே போல தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை விமான நிலையதில் சீனாவில் இருந்து வரும் பயணிகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அனைவரையும் நவின கருவிகள் மூலம் பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள்.

கொரோனா வைரஸ் அபாயம்:கூகுள் நிறுவனம் செய்த செயல்!மக்களைப் பாதிக்குமா?

இந்நிலையில் சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் தாக்கும் அபாயம் உள்ள நாடுகள் பட்டியலில் தாய்லாந்து முதல் இடத்திலும் ஜப்பான், ஹாங்காங் ஆகிய நாடுகள் அடுத்த இடத்திலும் உள்ளன. இந்த பட்டியலில் இந்தியா 23 ஆம் இடத்தில் உள்ளது. இதனால் சீனாவில் இருந்து இந்தியா வரும் பயணிகள் அனைவரும் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப் படுகின்றனர். சீனாவில் மக்கள் அவசியம் ஏற்பட்டாலன்றி வெளியே வருவதில்லை. அதுவும் முகமூடி அணிந்து மட்டுமே வெளியே வந்து கொண்டு இருக்கின்றனர். இதனால் இண்டர்நெட் மூலமாக வெளி உலகில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் கூகுள் நிறுவனம் சீனாவில் செயல்பட்டு வந்த தங்கள் அலுவலகங்கள் அனைத்தையும் மூடியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதனால் சீனாவில் தகவல் தொடர்பு பெருமளவில் பாதிக்கப்படும் என சொல்லப்படுகிறது. ஆனால் சீன அரசு தங்களுக்காக தனியான தேடுபொறிகளை வைத்துள்ளதால் இதனால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது எனவும் சொல்லப்படுகிறது.

வெடித்தது ஆசியக்கோப்பை சர்ச்சை:மோதிக்கொள்ளும் இந்திய பாகிஸ்தான் வாரியங்கள்!

0

வெடித்தது ஆசியக்கோப்பை சர்ச்சை:மோதிக்கொள்ளும் இந்திய பாகிஸ்தான் வாரியங்கள்!

ஆசியக் கோப்பைத் தொடர் பாகிஸ்தானில் நடந்தால் அதில் இந்தியா பங்கேற்காது என பிசிசிஐ அறிவித்துள்ளது.

2009 ஆம் ஆண்டு இலங்கை வீரர்கள் மேல் பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து அங்கு எந்த ஒரு வெளிநாட்டு அணியும் சென்று கிரிக்கெட் விளையாடுவது கிடையாது. அதுபோல அரசியல் காரணங்களால் இந்தியாவுக்குள்ளும் பாகிஸ்தான் வீரர்களுக்கு கிரிக்கெட் விளையாட அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இது சம்மந்தமாக இருநாட்டு வாரியங்களும் அவ்வப்போது சர்ச்சையானக் கருத்துகளை வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு ஆசிய அணிகள் மோதும் ஆசியக் கோப்பை தொடரை பாகிஸ்தானில் நடத்த ஆசிய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதனால் இப்போது மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது. பாகிஸ்தானில் ஆசியக் கோப்பை நடந்தால் இந்திய அணி வீரர்களை அனுப்ப முடியாது என பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஆனால் இந்தியா கலந்து கொள்ளாவிட்டால் அது ஆசியக் கோப்பையே இல்லை. அதனால் போன முறை இந்தியாவில் நடக்க இருந்த வேளையில் பாகிஸ்தான் வீரர்களின் விசா கிடைக்காத காரணத்தால் துபாய்க்கு மாற்றப்பட்டது போல இந்த முறையும் மாற்றினால் இந்தியா கலந்துகொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆனால் இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடுமையான கனடனங்களைப் பதிவு செய்துள்ளது. இந்தியா விளையாடாவிட்டால் பெரிய அளவில் வருமானம் இருக்காது என்பதால் ஆசிய கிரிக்கெட் வாரியம் என்ன முடிவு எடுக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதில் மற்ற நாடுகளின் வாரியங்கள் சொல்லும் முடிவுகளும் முக்கியப் பங்காற்றும் என சொல்லப்படுகிஒறது.

கிரிக்கெட் உலகில் கோலோச்சும் பிசிசிஐ –யைப்  பகைத்துக்கொண்டு மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாது எனவும் பேசப்படுகிறது.

தர்பார் படம் நஷ்டம்:யாரைக் கேட்பது?குழப்பத்தில் விநியோகஸ்தர்கள்!

0

தர்பார் படம் நஷ்டம்:யாரைக் கேட்பது?குழப்பத்தில் விநியோகஸ்தர்கள்!

ரஜினியின் தர்பார் படத்தின் மூலம் ஏற்பட்ட நஷ்டத்தை யாரிடம் கேட்டுப் பெறுவது என்ற குழப்பத்தில் விநியோகஸ்தர்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

பெரிய நடிகர்கள் படங்கள் ரிலிஸாகும் அதை அதிக விலைக்கு வாங்கி அதிக டிக்கெட் கட்டணத்தில் விற்று அதிக லாபம் பார்க்கலாம் என விநியோகஸ்தர்கள் கணக்குப் போட்டு கையை சுட்டுக் கொள்வது வாடிக்கையாகி உள்ளது. இந்த நிலை இப்போது தர்பார் படத்துக்கு வருமோ என்ற சூழல் உருவாகியுள்ளது.

பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான தர்பார் முதல் நாளிலேயே எதிர்மறை விமர்சனங்கள் பெற்றதால் கூட்டம் குறைய ஆரம்பித்தது. முதல் நாளின் மாலை மற்றும் இரவு காட்சிகளில் டிக்கெட்கள் சர்வ சாதாரணமாகக் கிடைக்க ஆரம்பித்தது. இதனால் முதல்நாள் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என சொல்லப்படுகிறது. இத்தனைக்கும் சிற்ப்புக்காட்சியின் டிக்கெட் விலை 1000 ரூபாயில் இருந்து 3000 ரூபாய் வரை விற்கப்பட்டது. இது அனுமதிக்க பட்ட விலையை பல மடங்கு அதிகமாகும்.

தர்பார் படம் நஷ்டம்:யாரைக் கேட்பது?குழப்பத்தில் விநியோகஸ்தர்கள்!

இப்போது பெரும்பாலான தியேட்டர்களில் இருந்து தர்பார் படம் தூக்கப்பட்ட நிலையில் கணக்கு பார்த்தால் விநியோகஸ்தர்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனைத் தங்களால் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால் விநியோகஸ்தர்கள் அனைவரும் கூட்டம் போட்டு நஷ்ட ஈடு பெறுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.

ஆனால் நஷ்ட ஈட்டை யாரிடம் கேட்பது என்ற குழப்பம் அவர்களுக்குள் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. வழக்கமாக ரஜினி படங்களை அதிக விலைக்கு வாங்கி நஷ்டப்பட்டால் அதை ரஜினிதான் ஈடு கட்டுவார். அதனால் அவரிடம் முறையிடலாமா?அல்லது தயாரிப்பு நிறுவனமான லைகாவிடம் முறையிடலாமா?என கையைப் பிசைந்து வருகின்றனர். ஏற்கனவே லைகாவுக்கு தர்பார் மூலம் 40 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் விநியோகஸ்தர்களின் கோரிக்கையை ஏற்க மாட்டார்கள் என சொல்லப்படுகிறது. விநியோகஸ்தர்களுக்காக மனம் இறங்கி வருவாரா?… 100 கோடி சம்பளம் வாங்கிய ரஜினி ?

விஜய்சேதுபதி-நயன்தாரா படத்தின் டைட்டில் இதுதான்!

0

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் ‘நானும் ரவுடிதான்’ என்ற திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றியை அடுத்து மீண்டும் இதே குழுவினர் ஒரு திரைப்படத்தில் இணைய முடிவு செய்தனர். அந்தத் திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் தயாரிப்பதாக இருந்தது. இந்த திரைப்படத்திற்கு ’காத்துவாக்கில் ரெண்டு காதல்’ என்ற டைட்டிலும் வைக்கப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படம் ட்ராப் ஆனது

இந்த நிலையில் தற்போது மீண்டும் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் விக்னேஸ்வரன் இயக்க இருப்பதாக கூறப்படும் படத்திற்கு ’காத்துவாக்கில் ரெண்டு காதல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை ’மாஸ்டர்’ படத்தை தயாரித்து வரும் லலித் என்பவர் தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது

சீனாவில் இருந்து திரும்பிய கேரள மாணவருக்கு கொரோனா வைரஸ்: தலைமை செயலகத்தில் அவசர கூட்டம்

0

உலகம் முழுவதும் குறிப்பாக சீனாவில் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த வைரசால் இதுவரை 170 பேர் பலியாகி உள்ளதாகவும் 2000க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை இல்லை என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது சீனாவின் வுஹான் பல்கலைகழகத்தில் இருந்து வந்த மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர், தனி கண்காணிப்பு பிரிவில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சீனாவில் இருந்து கேரளா திரும்பிய மாணவருக்கு, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளதை அடுத்து கேரள சுகாதாரத்துறை அமைச்சகம் அவசர கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.

கேரளாவின் தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் சீனாவில் இருந்து கேரளா திரும்பிய மாணவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் இந்த வைரஸ் பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஓவருக்கு முன் தொலைந்துபோன அப்டமன் கார்டு!ரோஹித் ஷர்மா சொன்ன சுவாரஸ்யக் கதை !

0

சூப்பர் ஓவருக்கு முன் தொலைந்துபோன அப்டமன் கார்டு!ரோஹித் ஷர்மா சொன்ன சுவாரஸ்யக் கதை !

நேற்றைய போட்டியில் சூப்பர் ஓவருக்கு முன்னதாக தன்னுடைய அப்டமன் கார்டு கிடைக்காமல் 5 நிமிடம் தேடியதாக ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. அதையடுத்து ஹேமில்டன் மைதானத்தில் இன்று தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற நியுசிலாந்து இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது. அதன் படி களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் ஷர்மா அதிரடியால் 179 ரன்களை சேர்த்தது.

அதன் பின் களமிறங்கிய நியுசிலாந்து அணி கேன் வில்லியம்சன் அதிரடியால் வெற்றியை நெருங்கியது. இதனால் போட்டி அவர்கள் கையில் இருந்தது. ஆனால் கடைசி ஓவரை வீச வந்த ஷமி அற்புதமாக இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றியதால் போட்டி டிரா ஆனது. இதையடுத்து சூப்பர் ஓவர் வீசப்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.

சூப்பர் ஓவருக்கு முன் தொலைந்துபோன அப்டமன் கார்டு!ரோஹித் ஷர்மா சொன்ன சுவாரஸ்யக் கதை !

சூப்பர் ஓவரில் இந்தியா முதலில் பந்துவீச கேன் வில்லியம்சனும் டெய்லரும் சேர்ந்து 17 ரன்களை பூம்ரா ஓவரில் எடுத்தனர். அதன் பின் இந்தியா சார்பில் ராகுல் மற்றும் ரோஹித் இறங்கினர். முதல் 4 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. அதற்கடுத்த இரு பந்துகளிலும் சிக்ஸ் அடித்து போட்டியை இந்தியாவின் பக்கம் திருப்பினார் ரோஹித் ஷர்மா. இதன் மூலம் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.

இது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரோஹித் ஷர்மா ‘நான் இந்த போட்டியில் நியுசிலாந்து எளிதாக வென்றுவிடும் என நினைத்தேன். ஆனால் சூப்பர் ஓவர் வந்த போது, எனது மூட்டைக் கட்டபட்ட கிட் பேக்கை துழாவி அனைத்தையும் எடுத்து அவசரமாக அணிந்து கொண்டேன். ஆனால் எனது அப்டமன் கார்டு மட்டும் கிடைக்கவே இல்லை. அதை தேடி எடுப்பதற்கே எனக்கு 5 நிமிடம் ஆகி விட்டது’ என நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.

பாஜக பிரமுகரை எதிர்த்து போட்டியிடும் பாடகி சின்மயி: பெரும் பரபரப்பு

0

சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகர் ராதாரவி, டப்பிங் சங்கரை யூனியன் சங்கத்தின் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளார். இந்த நிலையில் நடிகர் ராதாரவியை எதிர்த்து அதே பதவிக்கு பாடகி சின்மயி போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் டப்பிங் யூனியனில் இருந்து சின்மயி நீக்கப்பட்டார். அதற்கு ராதாரவி தான் காரணம் என்று சின்மயி குற்றம் சாட்டி இருந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சின்மயிக்கு சாதகமான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியது. இதனால் மீண்டும் அவர் டப்பிங் யூனியனில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்

இந்த நிலையில் தற்போது தலைவர் பதவிக்குப் போட்டியிடும் ராதாரவியை எதிர்த்து சின்மயி போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராதாரவியின் செல்வாக்கை மீறி சின்மயி வெற்றி பெறுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

கொரோனா வைரஸ் அபாயம் உள்ள நாடுகள்:பட்டியலில் இந்தியா!

0

கொரோனா வைரஸ் அபாயம் உள்ள நாடுகள்:பட்டியலில் இந்தியா!

கொரோனா வைரஸ் அதிகமாக தாக்க வாய்ப்புள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் ஒரு நாடாக உள்ளதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது . பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுவரை சீனாவில் 130 க்கும் மேற்பட்டோர் இறந்து விட்டனர். 4,417 மேற்பட்டோர் பாதிகப்பட்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க சீன மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வருகின்றனர்.

இந்தியா சுகாதாரத்துறை கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பல்வேறு வகையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதே போல தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை விமான நிலையதில் சீனாவில் இருந்து வரும் பயணிகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அனைவரையும் நவின கருவிகள் மூலம் பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில் சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் தாக்கும் அபாயம் உள்ள நாடுகள் என்ற பட்டியலை இங்கிலாந்தில் உள்ள சவுத் ஆம்டன் என்ற பல்கலைக்கழக ஆய்வு செய்துள்ளது. அதில் சீனா விமானம் மூலம் தொடர்பு கொள்ளும் நாடுகளின் பட்டியலை வைத்து இந்த முடிவை வெளியிட்டுள்ளது. இதில் தாய்லாந்து முதல் இடத்திலும் ஜப்பான், ஹாங்காங் ஆகிய நாடுகள் அடுத்த இடத்திலும் உள்ளன. இந்த பட்டியலில் இந்தியா 23 ஆம் இடத்தில் உள்ளது. இதனால் சீனாவில் இருந்து இந்தியா வரும் பயணிகள் அனைவரும் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப் படுகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் இது போல சோதித்ததில் சந்தேகத்துக்கு இடமான 68 பேரை கண்காணிப்பில் வைத்துள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.