Home Blog Page 5778

பிரபல குணசித்திர நடிகர் டிஎஸ் ராகவேந்திரா காலமானார்

0

தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான டிஎஸ் ராகவேந்திரா இன்று சென்னையில் காலமானார்

விஜயகாந்த், ரேவதி நடிப்பில் சுந்தர்ராஜன் இயக்கிய ’வைதேகி காத்திருந்தாள்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான டிஎஸ் ராகவேந்திரா அதன்பின்னர் சிந்துபைரவி, விக்ரம், அண்ணா நகர் முதல் தெரு, சின்னத்தம்பி பெரியதம்பி உள்பட பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்தார்

இந்த நிலையில் இன்று காலை சென்னை மேற்கு கேகே நகரில் உள்ள தனது வீட்டில் டிஎஸ் ராகவேந்திரா காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் பல திரையுலக பிரமுகர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். டிஎஸ் எஸ் ராகவேந்திரா அவர்களுக்கு சுலோசனா என்ற மனைவியும், கல்பனா, ஷேகினா என்ற மகனும் உள்ளனர் என்பதும் இருவருமே பாடகர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

மறைந்த நடிகர் டிஎஸ் ராகவேந்திரா அவர்கள் ‘யாகசாலை’, ‘உயிர்’ மற்றும் ‘படிக்காத படம்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலை செய்தாரா ரஜினிகாந்த்?

0

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2002ஆம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழிலை செய்ததாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
கடந்த 2002ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை ரஜினிகாந்த் தாக்கல் செய்த வருமானவரி கணக்குகளில் குறைபாடு இருப்பதாகக் கூறி வருமானவரித்துறை அவருக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து ரஜினிகாந்த் வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திடம் மேல்முறையீடு தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணையின்போது ரஜினிகாந்த் தான் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்ததாகவும் அதில் வாராக் கடனாக 1.7 கோடி ரூபாய் ஏற்பட்டதால் தனக்கு நஷ்டம் ஆகி விட்டதாகவும் கணக்கு காட்டியதாக தெரிகிறது

ஆனால் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் குறித்த தகவலை வருமான வரித்துறை ஏற்கவில்லை. இருப்பினும் இந்த வழக்கு ரஜினிக்கு சாதகமாக முடிந்தது. இதனை எதிர்த்து வருமான வரித்துறை மேல்முறையீடு செய்தது என்பதும் இந்த வழக்கு சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

இன்னும் இரு தினங்களில் தூக்கு:இன்று வருகிறார் ஹேங்க்மேன்!முடிவுக்கு வருகிறது 8 வருட வழக்கு !

0

இன்னும் இரு தினங்களில் தூக்கு:இன்று வருகிறார் ஹேங்க்மேன்!முடிவுக்கு வருகிறது 8 வருட வழக்கு !

8 ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டையே உலுக்கிய டெல்லி நிர்பயா கொலை மற்றும் கற்பழிப்பு சம்பவம் நடந்தது. இந்த வழக்கில் ராம்சிங், மகேஷ்சிங், வினய் சர்மா, பவன்குப்தா, அக்‌ஷய குமார் மற்றும் ஒரு மைனர் சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதில் மைனர் சிறுவனுக்கு மட்டும் 3 ஆண்டு சிறைத் தண்டனையும் மற்றவர்களுக்கு தூக்குத் தண்டனை எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால் அவர்களின் தூக்குத் தண்டனையை நிறைவேற்றாமல் இழுத்தடிப்பதாகவும் அவர்களை உடனடியாக தூக்கிலிட வேண்டும் எனவும் நிர்பயாவின் தாயார் மகளிர் அமைப்புகளுடன் சேர்ந்து போராடினார். இதற்கிடையில் சிறையில் இருந்த குற்றவாளிகளில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் குற்றவாளிகளை விரைவில் தூக்கிலிடவேண்டும் என தீர்ப்பு வெளியானது. இதை அடுத்து பிப்ரவரி 1 ஆம் தேதி அவர்கள் நான்கு பேரும் தூக்கில் இடப்பட உள்ளனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திகார் சிறை நிர்வாகம் செய்து வருகிறது. கைதிகளின் குடும்பத்தினர் வந்து அவர்களைப் பார்த்து சென்றுள்ளனர். மேலும் கைதிகளின் கடைசி ஆசை என்ன என்பது குறித்தும் சிறைத்துறை கேட்டுள்ளது.

இன்னும் இரு தினங்களில் தூக்கு:இன்று வருகிறார் ஹேங்க்மேன்!முடிவுக்கு வருகிறது 8 வருட வழக்கு !

தன்டனை நிறைவேற்றத்துக்காக ஹேங்க்மேன் மற்றும் தூக்குக் கயிறு ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட இருக்கும் திஹார் சிறையில் ஹேங்க்மேன் இல்லை என்பதால்  உத்தரப் பிரதேசம் மீரட் நகரில் இருந்து பவான் ஜலாத் என்ற ஹேங்க்மேன் இன்று வர இருக்கிறார். அவருக்கு 15 ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்பு அளிக்க உள்ளனர்.

மீரட்டில் இருந்து அவர் திஹார் சிறைக்கு வரும் வழியை போலிஸார் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளனர். 4 பேருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதன் மூலம் அவருக்கு 1.25 லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்பட உள்ளது. இன்னும் இரு தினங்கள் உள்ள நிலையில் என்றைக்கு தண்டனை நிறைவேற்றம் செய்யப்படும் என்பதை சிறை நிர்வாகம் ரகசியமாக வைத்துள்ளது.

இவர் மனது வைத்தால்தான் தோனி விளையாட முடியும்: சுரேஷ் ரெய்னா திட்டவட்டம் !

0

இவர் மனது வைத்தால்தான் தோனி விளையாட முடியும்: சுரேஷ் ரெய்னா திட்டவட்டம் !

தோனி இனி இந்திய அணிக்காக விளையாடுவது இவர் மனது வைத்தால்தான் நடக்கும் என இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

பிசிசிஐ நிர்வாகம் ஆண்டு தோறும் இந்திய அணி வீரர்களுக்கான ஊதியப் பட்டியல் விவரங்களை ஆண்டு தொடக்கத்தில் வெளியிடும். இதில் இந்த ஆண்டுக்கான பட்டியல் தோனி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. கடந்த ஆண்டு ஏ பிரிவில் இருந்த தோனி ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் பெற்றார். ஆனால் இந்த ஆண்டு அவர் எந்த பிரிவிலும் இடம்பெறவில்லை. இதன் மூலம் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை கிட்டதட்ட முடிவுக்கு வந்துள்ளது.

ஏனென்றால் உலகக்கோப்பை போட்டிகளுக்குப் பின் தோனி 6 மாதமாக இந்திய அணிக்காக எந்த வொரு போட்டியிலும் விளையாடவில்லை. இதையெல்லாம் கணக்கில் தோனியின் சர்வதேசக் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டதாக அனைவரும் கருத ஆரம்பித்துள்ளனர். பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் இது குறித்து மறைமுகமாக கருத்து தெரிவித்திருந்தார்.

இவர் மனது வைத்தால்தான் தோனி விளையாட முடியும்: சுரேஷ் ரெய்னா திட்டவட்டம் !

இந்நிலையில் தோனி இந்த ஆண்டு சென்னை அணிக்காக ஐபிஎல்-ல் விளையாடுவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் சென்னை அணியின் முன்னணி வீரரான சுரேஷ் ரெய்னா தோனி ஐபிஎல் போட்டிகளுக்கு இப்போது தயாராகி விட்டார். விரைவில் அவர் சென்னை வந்து பயிற்சிகளை மேற்கொள்வார். இப்போது அவர் தனது குடும்பத்தோடு நாட்களை செலவிட்டு வருகிறார். தோனி இந்திய அணியில் விளையாடுவது கோலி எடுக்கும் முடிவில் தான் இருக்கிறது. அவர் இப்போதும் உடல்தகுதியோடு இருக்கிறார். அவர் இந்திய அணிக்குத் தேவை என்றே இப்போதும் நான் கருதுகிறேன்’ எனக் கூறியுள்ளார்.

ஒரு நாள் தப்புல கர்ப்பம் ஆக முடியுமான்னு கேள்வி கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி

0

ஒரு நாள் தப்புல கர்ப்பம் ஆக முடியுமான்னு கேள்வி கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி

பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் இயக்குனர் மோகன் ஜி அவர்களின் அடுத்த படைப்பாக உருவாகியுள்ள திரௌபதி திரைப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

பெண்களுக்கு எதிராக சிலர் குறிப்பிட்ட நபர்களால் நடத்தப்படும் நாடக காதல் குறித்தும், பெண்களின் பாதுகாப்பு குறித்தும் எடுக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் கூறியுள்ள நிலையில் தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. அதே நேரத்தில் பெரியார் சிந்தனை மற்றும் சாதி ஒழிப்பு போராளிகள் மத்தியில் கலக்கத்தையும் இந்த திரைப்படம் உண்டாக்கியுள்ளது.

அரசியல்வாதிகள் முதல் திரைத்துறையினர் வரை சாதியில்லை,சாதியை ஒழிக்க போகிறோம் என கூறிவரும் நிலையில் இந்த படத்தில் “சாதிகள் உள்ளதடி பாப்பா குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” என வெளிப்படையாக சாதியை ஆதரிப்பது தான் பெரும்பாலோனோருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இயக்குனர் கூறியது போல நாடக காதல் என்று எதுவும் இல்லை என பெரியார்வாதிகள் மற்றும் சாதி ஒழிப்பு போராளிகள் கூறிவரும் நிலையில் மூடர் கூடம் படத்தின் இயக்குனர் நவீன் இந்த படம் குறித்த கேள்விக்கு குப்பை குறித்து பதில் கூற விரும்பவில்லை என்று கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வாலிபர் ஒருவர் காதல் என்ற பெயரில் சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய செய்தியை இயக்குனர் மோகன் ஜி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு மூடர் கூடம் படத்தின் இயக்குனர் நவீன் அவர்களை டேக் செய்து இதற்கு குரல் கொடுக்க மாட்டீர்களா என்று கேள்வியெழுப்பியிருந்தார்.

இதனையடுத்து வழக்கம் போல பெரியர்வாதிகளும், சாதி ஒழிப்பு போராளிகளும் இதை விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றனர். இதில் ஒருவர் ஒருமுறை தப்பு செய்தால் கர்ப்பம் ஆகிருவாங்களா? என்று பாதிக்கப்பட்ட சிறுமியை குறை கூறும் வகையில் பதிவிட்டிருந்தார்.

தவறு செய்தவரை ஆதரிக்கும் நோக்கத்தில் பதிவிட்ட இவருக்கு சரியான செருப்படி கொடுக்கும் வகையில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர் அவர் வழியிலேயே “நீங்க வேணா வாங்களேன்.. ஒரு நாள் தப்புல கர்ப்பம் ஆக முடியுமான்னு நாம ரெண்டு பேரும் டெஸ்ட் பண்ணி பாக்கலாம்.. ” என்று பதில் அளித்துள்ளார்.

மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு திருத்த மசோதா 2020-க்கு அமைச்சரவை ஒப்புதல்

0

மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு திருத்த மசோதா 2020-க்கு அமைச்சரவை ஒப்புதல்

1971ம் ஆண்டின் மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான, மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு திருத்த மசோதா 2020-க்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா நாடாளுமன்றத்தின் வரும் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும்.

உத்தேச திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்:

  • 20 வார காலம் உள்ள கருவைக் கலைப்பதற்கு சேவை வழங்குவோர் ஒருவரின் கருத்து தேவை மற்றும் 20 முதல் 24 வாரம் வரையுள்ள கருவைக் கலைப்பதற்கு சேவை வழங்குவோரில் இருவரின் கருத்து தேவை என்ற பிரிவு அறிமுகம்.
  • கருவின் கால உச்சவரம்பை சிறப்புப் பிரிவு மகளிருக்கு 20 வாரத்திலிருந்து 24 வாரமாக உயர்த்துவது. சிறப்புப் பிரிவு மகளிர் என்பது மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு திருத்த விதிகளில் வரையறுக்கப்படும். இந்தப் பிரிவில் பாலியல் வன்முறையில் பிழைத்தவர்கள், தகாத உறவினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி பெண்கள், சிறுமியர் போன்ற எளிதில் பாதிக்கப்படக் கூடிய இதர பெண்கள் அடங்குவர்.
  • மருத்துவ வாரியம் நோய் அறியும் சோதனைகள் மூலம் கண்டுபிடித்த அதிக அளவில் இயல்பு நிலை மாறிய கரு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிகபட்ச கரு வயது பொருந்தாது. மருத்துவ வாரியத்தின் அமைப்பு, பணிகள், இதர விவரங்கள் இந்த சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்படும் விதிகளில் நிர்ணயிக்கப்படும்.
  • கருக் கலைப்பு செய்த பெண்ணின் பெயர் மற்றும் இதர விவரங்கள் சட்டப்படி அங்கீகாரம் பெற்ற ஒரு நபரைத் தவிர வேறு எவருக்கும் தெரிவிக்கப்பட மாட்டாது.

மருத்துவச் சிகிச்சை, குறைபாடுள்ள சிசு வாய்ப்பு, மனிதாபிமானம் அல்லது சமுதாய அடிப்படையில், சட்டப்படியான மற்றும் பாதுகாப்பான கருக்கலைப்பு பெண்களுக்கு கிடைப்பதை விரிவாக்கும் வகையில் மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு திருத்தச் மசோதா 2020 கொண்டு வரப்பட்டுள்ளது. உத்தேச திருத்தங்களில் சில உட்பிரிவுகள் மாற்றியமைக்கப்படும்.

தற்போதுள்ள 1971ம் ஆண்டின் மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு சட்டத்தில் சில புதிய பிரிவுகள் சேர்க்கப்படும். சில நிபந்தனைகள் அடிப்படையில் கருக்கலைப்பு உச்ச வரம்பை அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு இவை சேர்க்கப்படும். பாதுகாப்பான கருக்கலைப்பு சேவை மற்றும் தரத்தில் குறைகளின்றி கடுமையான நிபந்தனைகள் அடிப்படையில் விரிவான கருக்கலைப்புப் பராமரிப்புச் சேவையை வலுப்படுத்தவும், கருக்கலைப்புக்கு உச்ச வரம்பை அதிகரிக்கவும் திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன.

பெண்களின் பாதுகாப்பு மற்றும் உடல் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பல பெண்கள் பயனடைவார்கள். கருவின் அசாதாரணமான நிலைமை அல்லது பாலியல் வன்முறை காரணமான கர்ப்பங்கள் ஆகியவற்றை தற்போது அனுமதிக்கப்பட்ட வரம்புக்கு அப்பாற்பட்டு கருக்கலைப்பு செய்ய அனுமதி கோரி நீதிமன்றங்களில் சமீபத்தில் பல மனுக்கள் பெறப்பட்டிருந்தன. கருக்கலைப்பு உச்ச வரம்பை அதிகரிக்கும் உத்தேச திட்டம் கருக்கலைப்பு அவசியப்படும் பெண்களுக்கு கண்ணியம், சுதந்திரம், ரகசியத்தன்மை ஆகியவற்றை அளிக்கும்.

பெண்களுக்கு பாதுகாப்பான கருக்கலைப்பு சேவைகள் எளிதில் கிடைப்பதை அதிகரிக்கவும், மருத்துவத் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை மனதில் கொண்டும் அக்கறையுள்ள அனைவருடனும் பல்வேறு அமைச்சகங்களுடனும் விரிவான ஆலோசனை கலந்த பின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இந்த உத்தேச திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது.

ஹோமியோபதிக்கான தேசிய ஆணைய மசோதா திருத்தங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்

0

ஹோமியோபதிக்கான தேசிய ஆணைய மசோதா திருத்தங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்

ஹோமியோபதிக்கான தேசிய ஆணைய மசோதா 2019-ல் அதிகாரப்பூர்வ திருத்தங்களுக்கான யோசனைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

1973-ன் ஹோமியோபதி மத்திய கவுன்சில்(ஹெச்.சி.சி.) சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட ஹோமியோபதிக்கான தேசிய ஆணையமசோதா 2019-ல் அதிகாரபூர்வ திருத்தங்களுக்கான யோசனைகளுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது இம்மசோதா மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளது. 

  • ஹோமியோபதி மருத்துவக் கல்வியில் தேவைப்படும் சீர்திருத்தங்களை உறுதிசெய்வது,
  • பொதுமக்களின் நலன்களைப் பாதுகாக்க வெளிப்படைத் தன்மையையும், பதில் சொல்லும் கடமையையும் கொண்டிருப்பது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் குறைந்த செலவில் சுகாதார சேவைகளை இந்த ஆணையம் மேம்படுத்தும் என்பதாகத் திருத்தங்கள் இருக்கும்.

பின்னணி

ஹோமியோபதிக்கான மத்தியப் பதிவையும், இதுதொடர்பான விஷயங்களையும் பராமரிக்க, ஹோமியோபதிக்கான கல்வி மற்றும் நடைமுறையை முறைப்படுத்த, ஹோமியோபதிக்கான மத்தியக் கவுன்சிலை அமைக்க, ஹோமியோபதி மத்தியக் கவுன்சில் (ஹெச்.சி.சி.) சட்டம் 1973 இயற்றப்பட்டது. இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம், 1956 மாதிரியுடன் இந்த சட்டம் உள்ளது. விரிவான செயல்பாடுகள், அமைப்பு விதிகள், முறைப்படுத்தும் அதிகாரங்கள் ஆகியவை இந்திய மருத்துவக் கவுன்சிலை ஒத்தவையாக உள்ளன. இந்தச் சட்டம் மருத்துவக் கல்வியின் வளர்ச்சிக்கும், ஹோமியோபதி செயல்பாட்டுக்கும் உறுதியான அடித்தளத்தை அமைத்துள்ளது என்றாலும், இந்தக் கவுன்சில் செயல்பாட்டில் பல்வேறு சிக்கல்கள் இருந்தது அறியப்பட்டது. இதன் விளைவாக, மருத்துவக் கல்வியிலும், தரமான ஹோமியோபதி மருத்துவ சேவைகள் வழங்குவதிலும் பின்னடைவுகள் ஏற்பட்டன.    

Source: PIB

சிறிய மார்பகங்களை பெரிதாக்குவது எப்படி..? இயற்கை வழியில் சில தீர்வுகள்! பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

0

சிறிய மார்பகங்களை பெரிதாக்குவது எப்படி..? இயற்கை வழியில் சில தீர்வுகள்! பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

இயற்கை முறையில் மார்பகங்களை பெரிதாக்குவது எப்படி?

பெண்களின் அழகிற்கு தனி அங்கமாய் இருப்பது நன்கு திரண்ட மார்பகங்கள்தான்.
பல பெண்கள் தனக்கு மார்பகம் சிறியதாக இருப்பதை நினைத்து வருத்தம் கொள்வது இயல்பான ஒன்றுதான். வருத்தம் கொள்ளும் பெண்களின் மார்பகங்களை பெரிதாக்க இயற்கை வழியில் சில தீர்வுகளை (marbagam perithaga natural tips) இங்கு காணலாம்.

மார்பகத்தை பெரிதாக்கும் வழிகள் : marbagam perithaga tips

1) மார்பகத்தின் அளவு குறைந்து இருப்பதற்கு காரணம் ஈஸ்ட்ரோஜன் என்கிற ஹார்மோன் தேவையான அளவு சுரக்காமல் இருப்பதே காரணமாகும். இந்த ஈஸ்ட்ரோஜன் இயல்பாக சுரக்க வெந்தயம் உதவியாக இருக்கிறது. 3 ஸ்பூன் (உங்களுக்கு தேவையான அளவு ) வெந்தயத்தை ஒரு கப் தண்ணீரில் போட்டு இரவு முழுக்க ஊற வையுங்கள். மறுநாள் காலையில் தண்ணீரில் ஊறிய வெந்தயம் ஒரு விதமான பசைத்தன்மையுடன் மிருதுவாகி இருக்கும்.

காலை சாப்பிடுவதற்கு முன்பு அதை அப்படியே வெறும் வயிற்றில் உண்ணுங்கள், முடிந்தால் அந்த தண்ணீரையும் குடித்து விடுங்கள். இதுபோல் 20 நாட்களுக்கு தொடர்ந்து செய்து வந்தால் மார்பகத்தின் அளவு கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாக வளரும் மாற்றம் தெரியும்.

2) பசும்பால் 3 ஸ்பூன் இதனுடன் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அதிமதுரத்தை பொடியாக்கி 3 ஸ்பூன் பசும்பாலுடன் சேர்த்து, ஒரு சிறிய கப்பில் போட்டு மிதமான கலவையாக கலக்கிக் கொள்ளவும். பின்னர் உங்களது மார்பகத்தை ஆலிவ் ஆயில் மூலம் தடவி சிறிது நேரத்தில் தண்ணீரை கொண்டு சுத்தபடுத்துங்கள். இதன் பிறகு கலந்து வைத்த அதிமதுர கலவையை மார்பகங்களில் எல்லா பகுதிகளிலும் தடவுங்கள்.

இரவு முழுக்க அப்படியே இருக்கட்டும், காலை எழுந்தவுடன் கழுவிவிடுங்கள். இதனால் மார்பகத்தின் சுருக்கம் நீக்கப்பட்டு, நரம்புகளுக்கு நல்ல ரத்த ஓட்டத்தை அனுப்பி மார்பகத்தை பெரிதாக மாற்றுகிறது. இந்த செய்முறையை 18 லிருந்து 25 நாட்கள் செய்து பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

3) சோயா, சோம்புக் கசாயம் குடிப்பது, பட்டர் பீன்ஸ் போன்ற உணவுப் பொருட்களை உண்டு வந்தால் மார்பகத்தின் அளவு விரைவில் கூடுதலாகும்.

4) பாதாம் மற்றும் அதிமதுரத்தை பொடியாக அரைத்து தினமும் சரிபாதி அளவு 2 ஸ்பூன் அல்லது உங்களுக்கு தேவையான அளவு பாலில் கலந்து பருகுங்கள், இதனால் மார்பகங்கள் நல்ல வளர்ச்சியை அடைகிறது.

குறிப்பு : மார்பகம் சிறியதாக இருப்பதற்கு சினைப்பை மற்றும் கருப்பை நோய் இருப்பதும் ஒரு காரணம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த பிரச்சினை உங்களுக்கு இருந்தால் நல்ல மருத்துவரை அணுகுங்கள். செயற்கை மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்.

Keywords:

மார்பக வளர்ச்சிக்கான கிரீம்,மார்பக அழகு குறிப்புகள்,மார்பக கொழுப்பு குறைய,மாதவிடாய் மார்பக வலி,பெண்களின் மார்பகம் பற்றிய தகவல்கள்,மார்பக பால்,மார்பக உடற்பயிற்சி,மார்பகத்தை குறைக்கும் வழிகள்,மார்பக சதையை குறைக்க,மார்பக தொய்வு,ஆண் மார்பக வளர்ச்சி குறைய,ஆண் மார்பக வளர்ச்சி,மார்பில் பால் வருதல்,மார்பக வலி ஏற்பட காரணம்,மார்பகத்தில் நீர் கசிவு,மார்பகம் பெரிதாக மருத்துவம்,மார்பகம் சிறியதாக என்ன செய்ய வேண்டும்,மார்பகம் தொங்குவதை சரி செய்ய,மார்பக வளர்ச்சிக்கு சித்த மருத்துவம்,மார்பக வளர்ச்சி அதிகரிக்க மாத்திரைகள்,மார்பகம் பெரிதாக வளர டிப்ஸ்,மார்பகம் சிறியதாக டிப்ஸ்,தொங்கும் மார்பகத்தை சரி செய்ய டிப்ஸ்,மார்பகத்தை அழககாக்க டிப்ஸ்,மார்பக வளர்ச்சிக்கு என்ன சாப்பிட வேண்டும்,மார்பக வளர்ச்சி கிரீம்,மார்பகம் பெரிதாக வளர என்ன செய்வது,மார்பகம் சிறியதாக என்ன செய்வது,மார்பக வளர்ச்சிக்கான கிரீம்,மார்பகம் பெரிதாவது எப்படி,மார்பகம் பெரிதாக மருந்து,மார்பக புற்றுநோய் சுயபரிசோதனை,மார்பக நீர் கட்டி அறிகுறிகள்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!

0

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!

சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிவார்டு ஏற்படுத்தி பாதிப்பிலிருந்து மக்களை காக்க தமிழக அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது . பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுவரை சீனாவில் 130 க்கும் மேற்பட்டோர் இறந்து விட்டனர். 4,417 மேற்பட்டோர் பாதிகப்பட்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க சீன மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வருகின்றனர்.

இந்தியா சுகாதாரத்துறை கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பல்வேறு வகையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதே போல தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை விமான நிலையதில் சீனாவில் இருந்து வரும் பயணிகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அனைவரையும் நவின கருவிகள் மூலம் பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள்.

சென்னையில் உள்ள ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா வைரஸ் சிகிச்சை தனிவார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் டாக்டர் ஜெயந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க 6 தனித்தனி அறைகளுடன் படுக்கை அறைகளின் வசதி கொண்ட தனி வார்டு தயாராக உள்ளது. அனைத்து அறைகளிலும் நவின மருத்துவ கருவிகள் இருக்கின்றன. இந்த வார்டில் 10 டாக்டர்கள், 18 நர்ஸ்கள், 20 மருத்துவ உழியர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

இந்த வார்டில் பணி புரியும் அனைவருக்கும் பாதுகாப்பு உடைகள், முக கவசங்கள் மற்றும் மூக்கு கண்ணாடி உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப் பட்டவர்கள் நோய் அறிகுறி உள்ளவர்கள் விமான நிலையத்தில் இருந்து கொண்டு வர சிறப்பு ஆம்புலன்ஸ் வசதி உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

செல்பி எடுக்க முயன்ற ரசிகர்! சிவகுமாரை போல செல்போனை பறித்த பாலிவுட் சூப்பர் ஸ்டார்

0

செல்பி எடுக்க முயன்ற ரசிகர்! சிவகுமாரை போல செல்போனை பறித்த பாலிவுட் சூப்பர் ஸ்டார்

பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார்ரில் ஒருவரான நடிகர் சல்மான்கான் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இவர் ரசிகர் ஒருவரின் செல்போனை பறித்த வீடியோ சமூகவலை தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

சல்மான்கான் நேற்று கோவாவுக்கு விமானத்தில் பயணம் செய்தார். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்த போது திடீரென ஒரு ரசிகர் நெருங்கி வந்து அவருடன் செல்பி எடுக்க முயன்றார் .

அப்போது கோபம் அடைந்த சல்மான் கான் அந்த ரசிகரின் செல்போனை பறித்தார். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.