சூப்பர் ஓவருக்கு முன் தொலைந்துபோன அப்டமன் கார்டு!ரோஹித் ஷர்மா சொன்ன சுவாரஸ்யக் கதை !

0
77

சூப்பர் ஓவருக்கு முன் தொலைந்துபோன அப்டமன் கார்டு!ரோஹித் ஷர்மா சொன்ன சுவாரஸ்யக் கதை !

நேற்றைய போட்டியில் சூப்பர் ஓவருக்கு முன்னதாக தன்னுடைய அப்டமன் கார்டு கிடைக்காமல் 5 நிமிடம் தேடியதாக ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. அதையடுத்து ஹேமில்டன் மைதானத்தில் இன்று தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற நியுசிலாந்து இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது. அதன் படி களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் ஷர்மா அதிரடியால் 179 ரன்களை சேர்த்தது.

அதன் பின் களமிறங்கிய நியுசிலாந்து அணி கேன் வில்லியம்சன் அதிரடியால் வெற்றியை நெருங்கியது. இதனால் போட்டி அவர்கள் கையில் இருந்தது. ஆனால் கடைசி ஓவரை வீச வந்த ஷமி அற்புதமாக இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றியதால் போட்டி டிரா ஆனது. இதையடுத்து சூப்பர் ஓவர் வீசப்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.

சூப்பர் ஓவரில் இந்தியா முதலில் பந்துவீச கேன் வில்லியம்சனும் டெய்லரும் சேர்ந்து 17 ரன்களை பூம்ரா ஓவரில் எடுத்தனர். அதன் பின் இந்தியா சார்பில் ராகுல் மற்றும் ரோஹித் இறங்கினர். முதல் 4 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. அதற்கடுத்த இரு பந்துகளிலும் சிக்ஸ் அடித்து போட்டியை இந்தியாவின் பக்கம் திருப்பினார் ரோஹித் ஷர்மா. இதன் மூலம் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.

இது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரோஹித் ஷர்மா ‘நான் இந்த போட்டியில் நியுசிலாந்து எளிதாக வென்றுவிடும் என நினைத்தேன். ஆனால் சூப்பர் ஓவர் வந்த போது, எனது மூட்டைக் கட்டபட்ட கிட் பேக்கை துழாவி அனைத்தையும் எடுத்து அவசரமாக அணிந்து கொண்டேன். ஆனால் எனது அப்டமன் கார்டு மட்டும் கிடைக்கவே இல்லை. அதை தேடி எடுப்பதற்கே எனக்கு 5 நிமிடம் ஆகி விட்டது’ என நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.

author avatar
Parthipan K