Home Blog Page 5781

பாமக அறிக்கை மூலம் சுட்டி காட்டியும் கண்டு கொள்ளாத மத்திய அரசு! இனியாவது கவனத்தில் கொள்ளுமா? ராமதாஸ் கோரிக்கை

0

பாமக அறிக்கை மூலம் சுட்டி காட்டியும் கண்டு கொள்ளாத மத்திய அரசு! இனியாவது கவனத்தில் கொள்ளுமா? ராமதாஸ் கோரிக்கை

ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு நிதி நெருக்கடி ஏற்படும் என்பதை கடந்த திசம்பர் 15-ஆம் தேதியே அறிக்கை மூலம் சுட்டிக்காட்டியிருந்தேன். ஆனால், அதை மத்திய அரசு பொருட்படுத்தாததன் காரணமாகவே நிலைமை இப்போது மோசமடைந்திருக்கிறது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மத்திய அரசை விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் “ஊரக வேலை உறுதி திட்டம்: தமிழகத்திற்கு ரூ.1,000 கோடி கூடுதல் நிதி வேண்டும்!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்த கிட்டத்தட்ட செலவழிக்கப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு ரூ.300 கோடி வரை ஊதியம் வழங்கப்பட வேண்டியிருப்பதாக தி இந்து ஆங்கில நாளிதழில் வெளியாகியுள்ள செய்தி ஊரகப் பொருளாதாரம் குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் மிகப்பெரிய வாழ்வாதாரத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு 2019-20ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட ரூ.60,000 கோடியில் ஜனவரி 26-ஆம் தேதி வரை ரூ.57,500 கோடி, அதாவது மொத்த நிதியில் 96% செலவழிக்கப்பட்டு விட்டதாக மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மீதமுள்ள தொகை அடுத்த 10 நாட்களுக்குக் கூட போதாது என்ற நிலையில், பிப்ரவரி, மார்ச் ஆகிய இரு மாதங்களுக்கு இத்தொகையைக் கொண்டு எவ்வாறு வேலை வழங்குவது என்ற வினா எழுந்துள்ளது.

மாநிலங்களைப் பொறுத்தவரை தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக செலவழிக்கப்பட்டு விட்டது மட்டுமின்றி, ரூ.2,000 கோடிக்கும் கூடுதலாக ஊதிய நிலுவை வழங்க வேண்டியுள்ளது. தமிழ்நாட்டில் ரூ.300 கோடி வரை ஊதிய நிலுவை வழங்கப்பட வேண்டியிருக்கிறது. தென் மாநிலங்களைப் பொறுத்தவரை கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய அனைத்து மாநிலங்களிலும் உபரித் தொகை உள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் பல வாரங்களுக்கு ஊதிய பாக்கி உள்ளது.

தமிழ்நாட்டில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் இப்படி ஒரு நிலை ஏற்படும் என்பது எதிர்பார்த்த ஒன்று தான். இதற்கு காரணம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு நடப்பாண்டில் மிகக் குறைந்த அளவில் நிதி ஒதுக்கப்பட்டது தான். 2018-19 ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்காக மொத்தம் ரூ.61,084 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்நிதியும் போதாத நிலையில், பல்லாயிரம் கோடி ரூபாய் நிலுவை வைக்கப்பட்டிருந்தது. நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் போது இவற்றைக் கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டுக்கான ஒதுக்கீட்டை விட 10 விழுக்காடாவது கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கடந்த ஆண்டை விட குறைவாக ரூ.60,000 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு இது தான் காரணமாகும்.

ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு நிதி நெருக்கடி ஏற்படும் என்பதை கடந்த திசம்பர் 15-ஆம் தேதியே அறிக்கை மூலம் சுட்டிக்காட்டியிருந்தேன். ஆனால், அதை மத்திய அரசு பொருட்படுத்தாததன் காரணமாகவே நிலைமை இப்போது மோசமடைந்திருக்கிறது. தமிழ்நாட்டிற்கு இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் ரூ.4686.87 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மாநில அரசின் பங்கையும் சேர்த்து ரூ. 4977.45 கோடி நிதி இத்திட்டத்திற்கு கிடைத்தது. இந்தத் தொகை ஏற்கனவே முற்றிலுமாக செலவழிக்கப்பட்டு விட்டது.

தமிழ்நாட்டில் வேளாண் பணிகள் நிறைவடைந்து விட்டன. அடுத்த இரு மாதங்களுக்கு வேளாண் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்காது என்ற சூழலில், அவர்களுக்கு ஊரக வேலை உறுதித் திட்டம் மூலம் வேலை வழங்கியாக வேண்டும். நடப்பாண்டில் இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்ட பணிகளின் எண்ணிக்கை 6.91 லட்சம் ஆகும். அவற்றில் இதுவரை 3.16 லட்சம் பணிகள் மட்டுமே இதுவரை முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 3.74 லட்சம் பணிகள், அதாவது பாதிக்கும் மேற்பட்ட பணிகள் செயல்பாட்டில் உள்ளன. இந்தப் பணிகள் அனைத்தும் நடப்பாண்டிற்குள் முடிக்கப்படாவிட்டால், ஊரக வளர்ச்சியையும், பொருளாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும். அது தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுக்கும்.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் கொண்டு வரப்பட்டதன் நோக்கங்களில் ஒன்று ஊரகப் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவது ஆகும். இந்தியப் பொருளாதாரம் மிகக் கடுமையான பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் அதிக தொகையை முதலீடு செய்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தையே தூக்கி நிறுத்த முடியும். எனவே, நாட்டின் வளர்ச்சியையும், ஊரக மக்களின் வேலைவாய்ப்பையும் கருத்தில் கொண்டு ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் அடுத்த இரு மாதங்களுக்கு செலவழிப்பதற்காக கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழகத்திற்கு மட்டும் ரூ.1000 கோடியை கூடுதலாக அரசு ஒதுக்க வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

’தளபதி 65’ படத்தை இயக்கப்போகும் பெண் இயக்குனர்? ருசிகரத் தகவல் !

0

’தளபதி 65’ படத்தை இயக்கப்போகும் பெண் இயக்குனர்? ருசிகரத் தகவல் !

விஜய் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் சுதா கொங்குரா இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விஜய்யின் 64 ஆவது படமான மாஸ்டர் படம் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருக்கிறது. இதையடுத்து விஜய்யின் 65 ஆவது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. அந்த படத்தின் இயக்குனர் என்பது பற்றி இதுவரை அறிவிக்காத நிலையில் இப்போது அதுபற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்பதுதான் கோலிவுட்டின் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி. இதற்காக பாண்டிராஜ், பேரரசு, வெற்றிமாறன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. ஆனால் இப்போது மற்றொரு இயக்குனரின் பெயரும் அடிபடுகிறது.

’தளபதி 65’ படத்தை இயக்கப்போகும் பெண் இயக்குனர்? ருசிகரத் தகவல் !

இறுதிச்சுற்று மற்றும் சூரரைப் போற்று ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்துள்ள சுதா கொங்குரா விஜய்க்கும் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸுக்கும் கதை சொல்லியுள்ளதாகவும் விஜய்க்கு சுதாவின் கதை பிடித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் சின்னும் சில நாட்களில் தொடங்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இரு தரப்பில் இருந்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்கள் அரிது. அதிலும் வணிகப் படங்கள் எடுத்து வெற்றி பெற்றவர்கள் அரிதிலும் அரிது. ஆனால் அதை உடைக்கும் வகையில் வரிசையாக மாதவன், சூர்யா, விஜய் ஆகிய உச்ச நடிகர்களை வைத்தும் இயக்கும் அளவுக்கு முன்னணி இயக்குனராக ஆகியுள்ளார் சுதா கொங்குரா. விஜய்யின் மாஸ்டர் திரைப்படமும் இவர் சூர்யாவை வைத்து இயக்கியுள்ள சூரரைப் போற்று திரைப்படமும் ஒரே நேரத்தில் ரிலிஸாக உள்ள வேளையில் இந்த செய்தி விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

முகினின் தந்தை, சாண்டியின் மாமனார்: ஒரே நாளில் இரண்டு சோக நிகழ்வு

0

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சி முடிவடைந்த பின்னரும் அதில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் சக போட்டியாளர்களின் நிகழ்வுகளில் கலந்துகொண்டு தொடர்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று அதிகாலையில் பிக்பாஸ் வின்னர் முகினின் தந்தையார் மலேசியாவில் காலமாகி விட்டதாக செய்திகள் வெளி வந்ததும் உடனடியாக சக போட்டியாளர்கள் முகினுக்கு ஆறுதல் கூறி இரங்கல் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சிலர் மலேசியாவுக்கு இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள சென்று உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் முகினின் தந்தை மறைந்த சோகத்தில் இருந்தே இன்னும் மீண்டு வராத நிலையில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் ரன்னரான சாண்டியின் மாமனார் டேவிட் சுந்தர் ராஜ் என்பவர் மரணமடைந்துவிட்டதாக வெளிவந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது

இதனை அடுத்து சாண்டிக்கும் அவரது மனைவிக்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்றும் பிக்பாஸ் ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். ஒரே நாளில் இரண்டு பிக்பாஸ் போட்டியாளர்களின் வீடுகளில் சோக நிகழ்வு நிகழ்ந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

3ஜி சேவையை நிறுத்திய ஏர்டெல்:வாடிக்கையாளர்கள் அதிருப்தி!

0

3ஜி சேவையை நிறுத்திய ஏர்டெல்:வாடிக்கையாளர்கள் அதிருப்தி!

ஏர்டெல் நிறுவனம் தனது 3ஜி சேவையை அடுத்த கட்டமாக சில மாநிலங்களில் நிறுத்தியதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

ஏரடெல் நிறுவனம் கடந்த ஆண்டே தங்களுடைய 3ஜி நெட்வொர்க் சேவையைப் படிபடியாகக் குறைக்க போவதாக அறிவித்தது. அதனால் வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள 3 ஜி சிம்களை 4 ஜி சிம்களாக மாற்றிக்கொள்ள அறிவுறுத்தியது. அதையடுத்து முதன் முதலாக கொல்கத்தாவில் தங்கள் சேவையை நிறுத்தியது. அங்கு 2ஜி மற்றும் 4 ஜி சேவையை மட்டுமே வழங்கி வந்தது.

இந்நிலையில் தற்போது கொல்கத்தாவை தொடர்ந்து தற்போது மகாராஷ்டிரா, கொல்கத்தா, கோவா, மத்திய பிரதேசம், குஜராத், கேரளா, சத்திஸ்கர், கர்நாடகா, பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களிலும் தனது 3 ஜி சேவையை நிறுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையால் வாடிக்கையாளர்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனால் 3ஜி சேவை மட்டுமே வேலை செய்யும் மொபைல்களில் இனி 2ஜி சேவையை மட்டுமே பெறமுடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது.

மேலும் மார்ச் மாதத்துக்குள் இந்தியா முழுவதும் 3 ஜி சேவை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின் 2ஜி மற்றும் 4 ஜி சேவைகள் மட்டுமே வழங்கப்படும் என அறிவித்துள்ளது. ஜியோவின் வருகைக்குப் பின் தொலைதொடர்பு துறையில் பலமாக அடிவாங்கிய ஏர்டெல் அதிலிருந்து மீள பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சமீபத்தில் ஏர்டெல்லின் குறைந்தபட்ச ரீசார்ஜ் தொகையை 23 ரூபாயில் இருந்து 45 ருபாயாக மாற்றியது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்காகவே இந்த இருக்கை காலியாக உள்ளது:தோனியின் நினைவைப் பகிர்ந்த இந்திய வீரர் !

0

உங்களுக்காகவே இந்த இருக்கை காலியாக உள்ளது:தோனியின் நினைவைப் பகிர்ந்த இந்திய வீரர் !

பேருந்தில் வழக்கமாக தோனிக்காக ஒதுக்கப்படும் இருக்கையில் தற்போதும் யாரும் உட்கார்வதில்லை என இந்திய சுழற்பந்து வீச்சாளர் யஷ்வேந்திர சஹால் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடைசியாக இந்திய அணிக்காக விளையாடியது உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டம். அதன் பிறகு அவர் சர்வதேசப் போட்டிகளில் விளையாடவில்லை. அவரின் இடம் என்ன ஆனது? உலகக்கோப்பை 20-20 தொடரில் விளையாடுவாரா என்பது எல்லாம் சிதம்பர ரகசியமாக உள்ளது. சமீபத்தில் பிசிசிஐ அவரின் ஒப்பந்தத்தை ரத்து செய்தது அவரது ரசிகர்களை மேலும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்நிலையில் தோனி குறித்த தனது நினைவினைப் பகிர்ந்துகொண்டுள்ளார் யஷ்வேந்திர சஹால்.

உங்களுக்காகவே இந்த இருக்கை காலியாக உள்ளது:தோனியின் நினைவைப் பகிர்ந்த இந்திய வீரர் !

இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் சஹால் தனது மொபைல் போனில் சக வீரர்களை நேர்காணல் செய்து அதை வீடியோவாக வெளியிட்டு வருகிறார். ஒவ்வொரு போட்டிக்குப் பின்னரும் இதுபோன்ற வீடியோக்களை அவர் எடுத்து வருகிறார். இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது நியுசிலாந்தில் இருக்கும் இந்திய அணி மூன்றாவது டி 20 போட்டிக்காக ஹாமில்டன் மைதானத்துக்கு சென்றுள்ளது. அந்த பேருந்து பயணத்தின் போது சஹால் தோனி குறித்த தனது நினைவினைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அப்பயனத்தில் அவர், ஒவ்வொரு பூம்ரா, பண்ட் ஆகிய ஒவ்வொரு வீரரிடமும் கேள்விகளை எழுப்பினார். அப்போது பேருந்தின் கடைசி இருக்கைக்கு சென்ற அவர் காலியாக இருந்த அந்த சீட்டைப் பார்த்து உணர்ச்சிகரமாக ‘கடைசி சீட்டில் இருக்கும் ஜன்னலோர இருக்கை எப்போதும் லெஜண்ட்(தோனி) ஒருவருக்காக ஒதுக்கப்படும். அவருக்காக சீட்டில் இப்போதும் யாரும் உட்காருவதில்லை. அணியில் உள்ள அனைவரும் அவரை மிஸ் செய்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவானது சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

இந்தியா பக்கம் திரும்பும் சீன நிறுவனங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்

0

இந்தியா பக்கம் திரும்பும் சீன நிறுவனங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்

உலக அளவில் இந்தியா மிகப்பெரிய நுகர்வோர் சந்தையும், பல நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தயாராக இருக்கும் வாடிக்கையாளர்களாகிய இளைய தலைமுறையினரையும் மிகவும் அதிகமாக கொண்ட நாடு என்பது அனைவரும் அறிந்ததே.இது போன்ற பல சாதகமான காரணங்களை பயன்படுத்தி கொள்ள நினைத்த அமெரிக்க, ஐரோப்பிய முதலீட்டாளர்கள் தற்போது இந்தியச் சந்தையில் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது சீனாவில் பல்வேறு காரணங்களுக்காக அந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சி மிகப்பெரிய வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதற்கு முக்கியக்காரணமாக கூறப்படுவது அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் தான், அதாவது சீனாவிற்கு எதிராக அமெரிக்காவும், அமெரிக்காவிற்கு எதிராகச் சீனாவும் என இரு நாடுகளும் அதிகளவிலான வரியை விதித்துள்ளன. இந்நிலையில் தான் இதையெல்லாம் சமாளிக்க முடியாத நிலையில் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறி வருகிறது. இந்நிலையில் தான் தற்போது கரோனாவைரஸ் பாதிப்புச் சீனாவில் உணவு சந்தையை மிகப் பெரிய அளவில் பாதித்துள்ளது.

இவ்வாறு சீனாவின் மந்தமான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் சீனாவில் மேலும் புதிய வாய்ப்புகள் எதுவும் பெரிதாகக் கிடைக்காத சூழ்நிலையில், சீனா முதலீட்டாளர்கள் தற்போது வளரும் நாடான இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களிலும், உற்பத்தித் துறையிலும் முதலீடு செய்யத் திட்டமிட்டு தற்போது இந்தியாவிற்குப் படையெடுத்து வருகின்றன.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்தியாவில் முதலீடு செய்ய பல்வேறு சீன பெரும் நிறுவனங்கள், வென்சர் பண்ட்ஸ் மற்றும் பெரும் பணக்காரர்கள் வாய்ப்புகளைத் தேடி வருகின்றனர். இதற்கு முக்கியக் காரணம் இந்தியா தான் அடுத்த 10 ஆண்டுகளில் ஆசியாவின் வர்த்தக மையமாக இருக்கப் போகிறது. இதை உணர்ந்த சீன முதலீட்டாளர்கள் தற்போது இந்தியாவில் முதலீடு செய்யத் தீவிரம் காட்டி வருகின்றனர். 

தற்போதைய நிலையில் Boyu Capital, Horizons China, Sinovation Ventures, Legend Capital, ZhenFund, XVC Capital, Integrated Capital ஆகிய முதலீட்டு நிறுவனங்களும், Jingdong, Kunlun, Kuaishou, Ping An மற்றும் YY.com ஆகிய கார்பரேட் முதலீட்டாளர்களும் இந்தியாவில் முதலீடு செய்யச் சந்தையை ஆய்வு செய்ய அவர்களது ஆய்வாளர்களை இதற்காக நியமித்து உள்ளனர்.

ஏற்கனவே இந்தியாவில் அலிபே, டிடி, சியோமி மற்றும் டென்சென்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் முதலீடு செய்துள்ள நிலையில் தற்போது புதியதாக முதலீடு செய்ய வரும் சீன முதலீட்டாளர்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சீன முதலீட்டாளர்கள் கடந்த 2019ஆம் ஆண்டே இந்தியாவில் அதிகளவிலான முதலீட்டைச் செய்துள்ளனர். 2018 ஆம் ஆண்டில் இந்தியச் சந்தையில் வெறும் 2 பில்லியன் டாலர் முதலீடு செய்த நிலையில் 2019 ஆம் ஆண்டில் சுமார் 3.9 பில்லியன் டாலர் முதலீடு செய்து சுமார் 100 சதவீத அதிகப் பணத்தை இந்தியச் சந்தையில் முதலீடு செய்துள்ளனர்.

தற்போது நிலையில் இந்திய சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வரும் சீன முதலீட்டாளர்களின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது இந்த முதலீட்டு அளவானது 2020 ஆம் ஆண்டில் 6 முதல் 8 பில்லியன் டாலர் வரையில் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தஞ்சை குடமுழுக்கு: தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளிலும் நடத்தப்படும்.

0

தஞ்சை குடமுழுக்கு: தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளிலும்
நடத்தப்படும்.

தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கு வருகிற பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. குடமுழுக்கு நீண்ட காலமாக சமஸ்கிருத்மொழியில் நடத்தப்பட்டு வந்தது. தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கை தமிழில்தான் நடத்த வேண்டும் என்று தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் மற்றும் பலர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இதைப்போலவே, கோயிலின் ஆகம விதிப்படி குடமுழுக்கு சமஸ்கிருதத்தில் நடத்த வேண்டும் என்று மயிலாப்பூர் ரமேஷ் என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் தஞ்சை கோயிலில் குடமுழுக்கு தடை செய்ய வேண்டும் என்றும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு சம்பந்தமான விசாரணை நீதிபதிகள் ரவீந்திரன் மற்றும் துரைசாமி ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரிக்கப்பட்டது.

இந்து சமய அறநிலையத்துறை சார்பாக ஆஜரான வக்கீல், தஞ்சை கோயிலின் குடமுழுக்கு தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழியிலும் நடத்தப்படும் என்றும், நிகழ்வின் போது தேவாரம், திருவாசகம் போன்ற தமிழ் மந்திரங்கள் ஓதப்படுவதுடன் எல்லா சாதி அர்ச்சகர்களும் குடமுழுக்கில் மந்திரம் ஓத வாய்ப்பு அளிப்பதாகவும் கூறினார்.

இதனையடுத்து, இந்து சமய அற நிலையத்துறை குடமுழுக்கு சம்பந்தமாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், குடமுழுக்கை தடைசெய்யக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. குடமுழுக்கு சம்பந்தமான மற்ற வழக்குகள் நாளை விசாரிக்கப்பட்டு தீர்ப்பு அளிக்கப்படும் என தெரிவித்தனர். குடமுழுக்கு நிகழ்வில் சாமிக்கு தமிழில் சிறப்பு வழிபாடுகளும், சமஸ்கிருதத்தில் வேதம் குறித்த மந்திரங்கள் ஓதப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் கமல்-பாரதிராஜா

0

பாரதிராஜா இயக்கிய ’ஒரு கைதியின் டைரி’ என்ற சூப்பர்ஹிட் கிரைம் திரைப்படம் கடந்த 1985ஆம் ஆண்டு வெளிவந்தது. கமல்ஹாசன் ஸ்ரீதேவி நடிப்பில் பாக்கியராஜ் திரைக்கதையில் பாரதிராஜா இயக்கிய இந்த திரைப்படம் அந்த காலத்திலேயே வெள்ளி விழா கொண்டாடிய படம் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்திற்கு பின்னர் கடந்த 35 ஆண்டுகளாக பாரதிராஜாவின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்காத நிலையில் தற்போது இருவரும் இணைந்து ஒரு படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது

இன்று நடிகர் கமலஹாசனை பாரதிராஜா தனது மகன் மனோஜ் பாரதியுடன் சென்று சந்தித்ததில் இருந்தே இந்த தகவல் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. பாரதிராஜா மற்றும் கமல்ஹாசன் ஆகிய இரண்டு திரையுலக மேதைகள் இணைந்து உருவாகும் படம் நிச்சயம் கோலிவுட் திரையுலகில் ஒரு மறக்க முடியாத படமாகத்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

இரவு முழுக்க உல்லாசம்! கையும் களவுமாக சிக்கிய கள்ளக்காதல் ஜோடி!!

0

இரவு முழுக்க உல்லாசம்! கையும் களவுமாக சிக்கிய கள்ளக்காதல் ஜோடி!!

திருச்சி மாவட்டம் புலிவலம் பகுதியை சேர்ந்த சிராஜூநிஷா என்பவரின் தம்பியான முகமது ஜக்ரியா என்பவர், ஏழு வருடங்களுக்கு முன் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜக்ரியா தனது மனைவியை தவிர்த்துவிட்டு, வேறுறொரு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடியதாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இதையடுத்து, தனது தம்பியை சில நாட்களாக காணவில்லை என்று சிராஜூநிஷாவும், ஜக்ரியாவின் மனைவியும் தனித்தனியாக புலிவலத்தில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ராமர் என்னும் தலைமைக் காவலர் இப்பிரச்சினை குறித்து விசாரணை நடத்தி வந்தார்.

புகார் சம்பந்தமாக காவலர் ராமரும், ஜக்ரியாவின் மனைவியும் அடிக்கடி சந்தித்து பேசியுள்ளனர். இந்த பேச்சு இருவருக்கும் இடையே அதிக நெருக்கத்தை உண்டாக்கி கள்ளக்காதல் வரை சென்றுள்ளது. இதை அறிந்துகொண்ட சிராஜூநிஷா இருவரையும் பிடிக்க வேண்டுமென்று எண்ணினார். கடந்த சனிக்கிழமை இரவு ராமுவின் வாகனம் அப்பெண்ணின் வீட்டு வாசலில் நின்றதை கவனித்த சிராஜூநிஷா, வேகமாக சென்று வீட்டை பூட்டுபோட்டு பூடினார்.

பின்னர், உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை அழைத்து கதவை திறந்து உல்லாசமாக இருந்த கள்ளக்காதல் ஜோடியை கையும் களவுமாக பிடித்தனர். இதன் காரணமாக காவலர் ராமர் ஆயுதப்படைக்கு உடனடியாக மாற்றம் செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக புகார் அளிக்க வந்த பெண்ணை மயக்கி தன் சுய விருப்பத்திற்கு மாற்றிய போலீசால் காவல்துறைக்கே அசிங்கம் ஏற்பட்டதாக பலர் வேதனையோடு சொல்கிறார்கள்.

திருட்டு மாங்காய்க்கு ருசி அதிகம், மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்பதுபோல, புகார் அளிக்க வந்த பெண்ணை ராமர் தனக்கு சாதகமாக மாற்றிய சம்பவம் திருச்சி புலிவலம் பகுதி மக்களிடையே முகம் சுழிக்க வைத்துள்ளது.

கொரோனோ வைரஸால் உலகப்போர்: ஒரு ஆண்டுக்கு முன்னரே எச்சரித்த பில்கேட்ஸ்

0

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனோ வைரஸ் தாக்குதலால் அந்நாட்டில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதுவரை நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகி இருப்பதாகவும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

கொரோனோ வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதி மற்ற நகரங்களில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவில் பரவ ஆரம்பித்த இந்த வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருவதாகவும் இந்த வைரஸை கட்டுப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இப்படி ஒரு வைரஸ் உலகம் முழுவதும் பரவி கோடிக்கணக்கானோர் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது என ஒரு ஆண்டுக்கு முன்னரே மசாசூட்ஸ் மருத்துவ சங்கத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டபோது மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கூறியுள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

இது குறித்து அவர் பேசியபோது ’உலகம் முழுவதும் ஒரே ஒரு வைரஸால் தாக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் இந்த வைரஸால் உலகப் போர் மூளும் அபாயம் உள்ளதாகவும் இந்த வைரஸில் இருந்து மக்களை காப்பாற்ற நாம் தயாராக வேண்டும் என்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பேசியுள்ளார். அவர் கொரோனோ வைரஸ் குறித்துதான் முன்கூட்டியே பேசி இருப்பதாக தற்போது கூறப்படுகிறது.