Home Blog Page 5788

பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர் ரஜினி: பிரபல நடிகர்

0

பெரியாரை அவமதிக்கும் வகையில் ரஜினி பேசியதாக கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் திரையுலகை சேர்ந்த யாரும் இதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் மெளனமாக உள்ளனர். இந்த நிலையில் ரஜினியின் தீவிர ரசிகரும் நடிகர், இயக்குனர், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:

எனக்கு அரசியல் தெரியாது! ஆனால் அண்ணன் சூப்பர் ஸ்டாரைப பற்றி எனக்கு மிக நன்றாகவே தெரியும்! திரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களைப் பொறுத்தவரை, யார் மனதையும் நோகும்படி பேசக்கூடியவர் அல்ல! ஏன் அவரை திட்டுபவர்களைக் கூட பதிலுக்கு பதில் திருப்பி திட்டாத பண்பாளர்! எதையும் ப்ளான் செய்தோ, திட்டமிட்டோ அவதூறாக பேசக்கூடியவர் அல்ல! ஆனால் பெரியாரைப் பற்றி அவதூறாக பேசிவிட்டதாக கூறுகின்றனர்.

அப்படி பேசக்கூடியவர் என்றால் 2006 ஆம் ஆண்டு பெரியாரின் தீவிரத்தொண்டரான இயக்குநர் திரு வேலு பிரபாகரன் அவர்கள், “பெரியார் கருத்துக்களை தாங்கி எடுத்த படத்தை வெளியிட முடியாமல் தவித்தபோது திரு வேலுபிரபாகரனே எதிர்பாராத பெரும் தொகையை கொடுத்து, அப்படத்தை வெளியிட எதற்காக ரஜினி சார் உதவி செய்ய வேண்டும்? பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர்தான் திரு சூப்பர் ஸ்டார் ரஜினி சார் அவர்கள், எனவே அவரை யாரும் தவறாக புரிந்து கொண்டு பேச வேண்டாம் என அவரது மனமறிந்த ரசிகனாக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்! இவ்வாறு ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

ரஜினி, சிறுத்தை சிவா காம்போவில் உருவாகும் படத்தின் தலைப்பு : வெளியான தகவல்… ரசிகர்கள் குஷி !

0

ரஜினி, சிறுத்தை சிவா காம்போவில் உருவாகும் படத்தின் தலைப்பு :வெளியான தகவல் ! ரசிகர்கள் குஷி !

ரஜினி தற்போது நடித்து வரும் படத்தின் தலைப்பு குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினியின் தர்பார் திரைப்படம் வெளியாகி எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும் நன்றாக கல்லா கட்டி வருகிறது. இதையடுத்து ரஜினி தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க, ரஜினியின் ஆஸ்தான கதாநாயகிகளான மீனா, குஷ்பு ஆகியோர் அவருடன் பல வருடங்களுக்குப் பிறகு இந்த படத்தில் நடிக்கின்றனர். ரஜினிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் சதீஷ், சூரி ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை பிரம்மாண்டமாக சன் பிக்ஸர்ஸ் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் படத்தின் தலைப்பு என்ன என்பது குறித்து ரசிகர்கள் ஆவலாகக் காத்திருந்தனர். சிறுத்தை சிவாவின் செண்ட்டிமெண்ட் படி படத்தின் தலைப்பு ஆங்கில வி எழுத்தில் ஆரம்பித்து எம் மில் முடியும் படி இருக்குமாறு பார்த்துக் கொள்வார். வீரம், வேதாளம், விவேகம், மற்றும் விஸ்வாசம் போன்றவை அதற்கு சான்று.

அதனால் அதேப் போன்ற பெயரைதான் இதற்கும் வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அண்ணன் தங்கை பாசத்தை மையமாகக் கொண்ட படம் என்பதால் இதற்கு தற்போது அண்ணாத்தே எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இந்த தகவலை இன்னும்  படக்குழு உறுதிப் படுத்தவில்லை. அதற்குள்ளாகவே ரஜினி ரசிகர்கள் டிவிட்டரில் அண்ணாத்தே என்ற ஹேஷ்டேக் உருவாக்கி டிரண்ட் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

சேவாக்கின் தலைமுடியை விட என்னிடம் அதிக பணம் உள்ளது ! பங்கமாக கலாய்த்த சோயிப் அக்தர் !

0

சேவாக்கின் தலைமுடியை விட என்னிடம் அதிக பணம் உள்ளது ! பங்கமாக கலாய்த்த சோயிப் அக்தர் !

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் விரேந்திர சேவாக் தன்னைப் பற்றி கூறிய கருத்து ஒன்றுக்கு நக்கலாக பதிலளித்துள்ளார். இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரரான சேவாக் நகைச்சுவைக்கு பெயர் போனவர். அவரது டிவிட்டர் பதிவுகள அவரது நக்கல் தொனிக்காக பெயர் போனவை.

இந்நிலையில் அவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தரைப் பற்றி ஒரு கமெண்ட் ஒன்றை அடித்தார். அதில் ‘அக்தருக்குப் பணம் தேவை என்பதால் இந்தியாவுக்கு சாதகமாக பேசுகிறார்’ எனக் கூறியிருந்தார்.

இதுபற்றி அப்போது எதுவும் பதில் அளிக்காத அக்தர் இப்போது தன்னுடய யுடியூப் சேனலில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் ‘ஒருவரிடம் எவ்வளவு செல்வம் இருக்க வேண்டும் என்பதை நீங்களோ நானோ முடிவு செய்ய முடியாது.

அது அல்லாவால் அளிக்க படுவது. என்னிடம் சேவாக்கின் தலையில் உள்ள முடிகளை விட அதிகமாக பணம் உள்ளது. இதை நான் விளையாட்டாகதான் சொல்கிறேன். பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்’ என அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

களத்தில் இருக்கும் போது எதிர் எதிர் அணியில் இருந்து மோதிக்கொண்ட இருவரும் ஓய்வு பெற்ற பின்னரும் அதுபோலவே தொடர்ந்து மோதிக்கொள்ள ஆரம்பித்துள்ளனர். அக்தரின் இந்த நக்கலுக்கு விரைவில் சேவாக் டிவிட்டரில் பதிலளிப்பார் என இந்திய ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.

மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த கணவர்:வழக்கு தொடுத்த மனைவி ! நீதிமன்றம் தீர்ப்பு !

0

மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த கணவர்:வழக்கு தொடுத்த மனைவி ! நீதிமன்றம் தீர்ப்பு !

டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் தன்னை கட்டாயப் படுத்தி  வல்லுறவு செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் அந்த பெண்ணுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. ஆனால் திருமனத்துக்குப் பிறகு தன்னுடைய கணவர் ஒரு திருடன் என்ற உண்மையை அறிந்து அவர் அதிர்ந்துள்ளார்.. இதனால் மனமுடைந்த அந்த பெண் தன்னுடையக் கணவரைப் பிரிந்து தனியாக சென்று வாழ்ந்துள்ளார்.

ஆனாலும் அவரை விடாத அந்த கணவன் டெல்லிக்கு சென்று தனது மனைவியிடம் இனிமேல் திருடமாட்டேன் என சத்தியம் செய்து அவரோடு வாழ ஆரம்பித்துள்ளார். அந்த பெண்ணும் அவர் திருந்திவிட்டார் என்ற நம்பிக்கையில் அவரோடு சந்தோஷமாக வாழ ஆரம்பித்துள்ளார்.

ஆனாலும் அந்த திருட்டுக் கணவர் வீட்டிலேயே தனது வேலையைக் காட்டியுள்ளார். வீட்டில் இருந்த 2 லட்ச ரூபாயைத் திருடிக்கொண்டு சென்றுள்ளார். இது சம்மந்தமாக அந்த பெண் தனது கணவர் மேல் புகார் கொடுக்க போலிஸ் அவரைக் கைது செய்துள்ளது.

அந்த வழக்கில் இருந்து ஜாமீனில் வெளியில் வந்த அவர், மனைவியின் வீட்டுக்கு சென்றுள்ளர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடக்க அவரிடம் அத்துமீறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து அந்த பெண் கணவர் தன்னை பலாத்காரம் செய்துவிட்டதாக போலீஸில் புகார் கொடுத்தார்.

இது சம்மந்தமான வழக்கு விசாரணை ஒரு வருடமாக நடைபெற்று வந்த நிலையில் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில் ’ 2016-ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி வல்லுறவு சம்பவம் நடந்ததாக பாதிக்கப்பட்ட பெண் சொல்லியுள்ளார். ஆனால் அதற்கு ஒரு வருடம் முன்பாக சம்மந்தப்பட்ட இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. அதனால் இந்த வழக்கில் பாலியல் பலாத்கார பிரிவின் கீழ் தண்டனைக் கொடுக்க முடியாது’ எனக் கூறியுள்ளனர்.

சென்னையில் மானிய உதவியுடன் கூடிய வீட்டு வசதி கடன் திட்ட இணையதள பயிலரங்கு

0

சென்னையில் மானிய உதவியுடன் கூடிய வீட்டு வசதி கடன் திட்ட இணையதள பயிலரங்கு

மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை, ஹட்கோ, தேசிய வீட்டு வசதி வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி ஆகியவற்றுடன் இணைந்து, மானிய உதவியுடன் கூடிய வீட்டு வசதி கடனுதவித் திட்டம் குறித்த ஒருநாள் இணையதள பயிலரங்கிற்கு சென்னையில் இன்று (23.01.2020) ஏற்பாடு செய்திருந்தது.  தென்னிந்தியாவில் உள்ள முதல்நிலை கடன் வழங்கும் நிறுவனங்களுக்காக  இந்த பயிலரங்கு நடத்தப்பட்டது.  

இதில், 60 முதல்நிலை கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் 125 பேர் கலந்து கொண்டனர்.  இந்த பயிலரங்கின்போது, மானிய உதவியுடன் கூடிய கடன் திட்ட செயல்பாடு, கிளாப் (CLAP) இணையதளம், சர்வர் கட்டுமானக் கலை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.  முதல் நிலை கடன் வழங்கும் நிறுவனங்கள் தங்களது புள்ளி விவரங்களை தரமான முறையில் பராமரிப்பதுடன், கிளாப் வலைதளம் மற்றும் செல்போன் செயலியை பயனாளிகள் 100% பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது. 

மானிய உதவியுடன் கூடிய வீட்டு வசதி கடனுதவித் திட்ட இணையதளத்தின் வெற்றி மற்றும் அதனை  செயல்படுத்துவதில் உள்ள சவால்கள் குறித்தும் பயிலரங்கில் விவாதிக்கப்பட்டது.  தென்னிந்தியாவில் இருந்து இன்னும் அதிகளவில் மானியத்துடன் கூடிய கடனுதவிகளை வழங்குமாறு முதல்நிலை கடன் வழங்கும் நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன.

மாற்ற மேலாண்மைக்கான பிரச்சார இயக்கமான அங்கீகார் (ANGIKAAR) குறித்த விழிப்புணர்வு அம்சங்களும் முதல்நிலை கடன் வழங்கும் நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டதுடன், மானிய உதவியுடன் கூடிய கடனுதவித் திட்ட பயனாளிகளுக்கு மாநில அரசுகளுடன் இணைந்து நிதிச் செலவின அறிவாற்றல் குறித்த முகாம்களை நடத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டன. 

ரிசர்வ் வங்கி சுற்றறிக்கைகளின்படி, நிதிச் செலவின அறிவாற்றல் குறித்து, நேரடி கலந்துரையாடல் வாயிலாக கலந்தாய்வு நிகழ்ச்சிகளை நடத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது.  இந்த நிகழ்ச்சி குறித்த கேள்வி-பதில் அரங்கம் ஒன்றும் நடத்தப்பட்டது.    இந்த அரங்கம் முதல் நிலை கடன் வழங்கும் நிறுவனங்களான வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிதி நிறுவனங்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருந்ததாக ஹட்கோ நிறுவனத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷ் படுக்கையறை புகைப்படங்கள் வெளியானது! அதிர்ச்சியில் ரசிகர்கள்

0

ஐஸ்வர்யா ராஜேஷ் படுக்கையறை புகைப்படங்கள் வெளியானது! அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஆரம்பத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் பங்கு பற்றி வெற்றியாளராக வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் பின்னர் திரைத்துறைக்குள் நுழைந்தார். கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் அறிமுகமானார். இதனையடுத்து பா ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி என்ற படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார்.

இதனைத் தொடர்ந்து ஆச்சரியங்கள் மற்றும் புத்தகம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். இந்த படங்களையடுத்து இவர் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இத்தனை படங்களில் நடித்திருந்தாலும் தான் நடித்த “காக்கா முட்டை” படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். வழக்கமாக டூயட் பாடவே விரும்பும் பெரும்பாலான நடிகைகளுக்கு மத்தியில், இந்தப் படத்தில் இரண்டு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்து தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி ஆச்சரியப்பட வைத்தார். 

இதனைத்தொடர்ந்து நடிகர் விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் கதாநாயகியாக இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.சமீபத்தில் வெளிவந்த மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட “கனா” திரைப்படத்தில் ஒரு கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்து விருதுகளையும், ரசிகர்களின் பாராட்டுகளையும் இவர் பெற்றுள்ளார். மேலும் சிவகார்த்தியேன் நடிப்பில் வெளியான எங்க வீட்டுப் பிள்ளை என்ற படத்தில் அவரது தங்கையாக நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். 

திரைத்துறையில் பிரபல நடிகையாக வலம் வர நிறம் முக்கியமல்ல என்பதை அனைவருக்கும் உணர்த்தியவர் தான் இந்த ஐஸ்வர்யா ராஜேஷ். மேலும் பக்கத்து வீட்டு பெண் போன்ற மிதமான அழகில் தமிழில் சினிமாவில் கலக்கி வந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது தெலுங்கிலும் கலக்கி வருகிறார். சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் என்ற படத்தின் டிரெய்லர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் தாறுமாறு வைரலானது. 

இவ்வாறு தமிழ், தெலுங்கு திரையுலகில் பிஸியாக நடித்து வந்தாலும் அவ்வப்போது இவர் புதிதாக ஃபோட்டே ஷூட் நடத்துவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் தற்போது பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்றிற்காக ஐஸ்வர்யா ராஜேஷ் படு கவர்ச்சியான ஹாட் போட்டோ ஷூட் ஒன்றையும் நடத்தியுள்ளார். இதுவரை குடும்பபாங்கான பெண்ணாக ஹோம்லி லுக்கில் அசத்தி வந்த ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த திடீர் கவர்ச்சி அவதாரம் அவரது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.படுக்கையறையில் உள்ளவாறு படு கவர்ச்சியாக ஹாட் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்துள்ள ஒவ்வொரு போஸும் லைக்குகளை குவித்து வருகிறது. 

ஐஸ்வர்யா ராஜேஷ் படுக்கையறை புகைப்படங்கள் வெளியானது! அதிர்ச்சியில் ரசிகர்கள்
ஐஸ்வர்யா ராஜேஷ் படுக்கையறை புகைப்படங்கள் வெளியானது! அதிர்ச்சியில் ரசிகர்கள்
ஐஸ்வர்யா ராஜேஷ் படுக்கையறை புகைப்படங்கள் வெளியானது! அதிர்ச்சியில் ரசிகர்கள்
ஐஸ்வர்யா ராஜேஷ் படுக்கையறை புகைப்படங்கள் வெளியானது! அதிர்ச்சியில் ரசிகர்கள்

நடிகைகள் பலரும் ஆங்கில நாளிதழுக்கு கவர்ச்சி போஸ்கள் கொடுப்பது புதிதல்ல என்றாலும் இவர் வெளியிட்டுள்ள படங்கள் அவர் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை கதைகளுக்கு முக்கியத்துவம் உள்ள சிறந்த கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து கவர்ச்சி இல்லாத குடும்பபாங்கான நடிப்பை வெளிப்படுத்தி வந்த ஐஸ்வர்யா ராஜேஷ். இப்படி ஒரே அடியாக ஓவர் கிளாமர் ரூட்டுக்கு மாறியது அவரது ரசிகர்களை சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

ராமாவரத்தில் வைத்து ரஜினியை எம்.ஜி.ஆர் அடித்தாரா? லதா அளித்த மழுப்பல் விளக்கம்! நடந்தது என்ன?

0

ராமாவரத்தில் வைத்து ரஜினியை எம்.ஜி.ஆர் அடித்தாரா? லதா அளித்த மழுப்பல் விளக்கம்! நடந்தது என்ன?

சமீபத்தில் சென்னையில் நடைபெற்று முடிந்த துக்ளக் பத்திரிக்கையின் பொன்விழாவில் பத்திரிக்கை ஆசியரான மறைந்த சோவின் நெருங்கிய நண்பரான ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.அவர் இந்த விழாவில் கலந்து கொள்வதாக அறிவித்த போதே அது அரசியலாக பேசப்பட்டது. இந்நிலையில் அனைவரும் எதிர்பார்த்த மாதிரியே அவர் பேச்சு தற்போது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

அதாவது விழாவில் கலந்து கொண்டு ரஜினிகாந்த் பேசிய போது,1971 ஆம் ஆண்டு உடை இல்லாமல் இருக்கும் ராமன் சிலைக்கு செருப்பு மாலை போட்டு பெரியார் ஊர்வலம் சென்றார் என்று குறிப்பிட்டார்.  மேலும் அன்றைக்கு அதை யாரும் துணிந்து பத்திரிகையில் பதிவு செய்யவில்லை என்றும், ஆனால்,துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியரான ‘சோ’ அதை அட்டைப்படத்தில் போட்டுக் கடுமையாகக் கண்டித்தார் என்றும் குறிப்பிட்டார்.

இதனையடுத்து அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதிக்கு இது சிக்கலை ஏற்படுத்தியது. இதனால் இந்த செய்தியை வெளியிட்ட துக்ளக் பத்திரிக்கையை ரத்து செய்தார்கள். ஆனால் இதனைக்கண்டு கொஞ்சமும் சளைக்காமல் மீண்டும் அச்சடித்து பிளாக்கில் பத்திரிக்கையை சோ வெளியிட்டார். இதனையடுத்து அப்புத்தகம் பிளாக்கில் அதிக விலைக்கு விற்பனையானது. இதன் மூலமாக பத்திரிக்கை உலகில் சோ மிகவும் பிரபலமானார் என்றும் நடிகர் ரஜினிகாந்த் அந்த விழாவில் பேசினார்.

நடிகர் ரஜினிகாந்த் பேசிய இந்த கருத்துக்கு பலர் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்து தெரிவித்து வந்தனர். குறிப்பாக பெரியார் கொள்கையை பின்பற்றுபவர்கள் நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். இந்நிலையில் ரஜினிகாந்த் தனது போயஸ்தோட்ட இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து இதற்காக விளக்கம் அளித்தார். அதில் தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்றும், பேசிய கருத்து உண்மை என்றும் அதற்கான ஆதாரத்தை காட்டி உறுதியாக கூறினார்.

இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் அளித்த இந்த பேட்டி தான் பெரியார்வாதிகளையும் திராவிட கட்சிகளையும் அவருக்கு எதிராக விமர்சனம் செய்ய வைத்துள்ளது. பல ஆண்டுகளாகவே நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கூறி வந்தாலும் இது வரை அவர் தெளிவாக எந்த ஒரு முடிவும் அறிவித்ததில்லை. இந்நிலையில் மத்தியில் ஆளும் பாஜக ரஜினியை வைத்து தமிழகத்தில் காய் நகர்த்துவதாகவும் பேச்சு அடிபடுகிறது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சம்பந்தமேயில்லாமல் பெரியார் பற்றி கருத்து தெரிவிக்க அதற்கு திராவிட இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதும், ரஜினிக்கு ஆதரவாக பாஜகவினர் செயல்பட்டு வருவதும் ஏறக்குறைய இரு பிரிவினருக்கும் இடையேயான மறைமுக தொடர்பு இருப்பதை உறுதிபடுத்துகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்கள் முழுவதும் பெரியார் மற்றும் ரஜினியின் கருத்துகள் தான் வைரலாகி பரவிக் கொண்டிருக்கிறது. திராவிட இயக்கமாக காட்டி கொள்ளும் திமுகவிற்கு எதிராக ரஜினி ரசிகர்களும் பாஜக தொண்டர்களும் கடுமையான விமர்சனங்களை பரப்பி வருகின்றனர். இதில் முரசொலி, மூலப்பத்திரம், பெரியார் வளர்ப்பு மகளை திருமணம் செய்தது என எதையும் விட்டு வைக்காமல் என்று கலங்கடித்து வருகின்றனர்.

What Happened between MGR and Rajini in Ramavaram Garden
What Happened between MGR and Rajini in Ramavaram Garden

பதிலுக்கு திமுகவினரும் ரஜினியின் கடந்த கால திரை வாழ்க்கை, தமிழக மக்களின் மீது அவர் கொண்டிருந்த ஓரவஞ்சனை என்று தங்கள் விருப்பம்போல விமர்சன கருத்துகளை பரப்பி வருகின்றனர். இதனையடுத்து சமூக வலைத்தளங்கள் முழுக்க ரஜினி Vs திராவிட கட்சிகள் என்று ஆதரவு மற்றும் விமர்சன பதிவுகளாக காணப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் கடந்த கால சினிமா வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு சில சம்பவங்களை வைத்து அவரது எதிர்ப்பாளர்களான திமுகவினர் பிரச்சாரம் செய்தனர். குறிப்பாக நடிகை லதா விவகாரத்தில் ராமாவரத்தில் வைத்து ரஜினியை எம்.ஜி.ஆர் அடித்தார் என்று பேசப்பட்டு வருவதை குறிப்பிட்டு விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரபல ஊடகம் ஒன்றில் நடிகை லதா இது குறித்து அளித்த விளக்கமான அந்த பேட்டியை ரஜினி ரசிகர்களும் பரப்பி வருகின்றனர்.

அந்த வீடியோவில் ரஜினிகாந்த் நடிகை லதாவை ஒருதலையாக காதலித்ததாகவும், அவரிடம் அத்துமீறி நடந்து கொண்டதால் கோபம் அடைந்த எம்.ஜி.ஆர். அவரை ராமாவாரம் தோட்டத்தில் வைத்து அடித்ததாகவும் பல ஆண்டுகளாக பேசப்படுகிறது .அந்த லதாவுடன் சேர முடியாத காரணத்தால் அதே பெயருடைய மற்றொரு பெண்ணை திருமணம் செய்தார் என்றும் கூறப்பட்டது இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என பத்திரிக்கையாளர் கேட்கிறார்.

இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளிக்கும் விதமாக பதிலளித்த நடிகை லதா கூறியதாவது. பாவம் அவரை பற்றி வேறு எதுவுமே சொல்ல முடியாது என்று நினைக்கிறார்கள் போல. ரஜினி பற்றி ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி சொல்கிறார்கள். அப்படி எதுவும் நடக்கவில்லை. மேலும் அது பற்றி எல்லாம் நான் பேச விரும்பவில்லை என்று மழுப்பலாக பதிலளித்தார். இதன் மூலமாக ராமாவரம் தோட்டத்தில் நடிகர் ரஜினிக்கு என்ன நடந்தது என்பது பற்றிய வதந்தி மர்மமாகவே உள்ளது.

அண்ணியின் அந்தரங்க படத்தை மனைவியிடம் காட்டிய காவல்துறை அதிகாரி! அடுத்து அரங்கேறிய கொடூரம்!

0

அண்ணியின் அந்தரங்க படத்தை மனைவியிடம் காட்டிய காவல்துறை அதிகாரி! அடுத்து அரங்கேறிய கொடூரம்!

சென்னையில் காவல் துறை அதிகாரியை திருமணம் செய்து கொண்ட 4 மாதங்களில் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் ஒதியடிகுப்பம் என்ற பகுதியை சேர்ந்தவரான அருள் காவல் துறையில் பணியாற்றி வருகிறார். 38 வயதாகும் இவர் காவல் துறையின் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இவருக்கும், கடலூர் மாவட்டதிலுள்ள பண்ருட்டி நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்தவரான வடிவேல் என்பவரின் மகள் ராஜேஸ்வரிக்கும் என்பவருக்கும் திருமணம் நடந்தது.

இதனையடுத்து திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் சென்னை மயிலாப்பூரில் உள்ள காவல் துறையினருக்கான குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு ராஜேஸ்வரி இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் ராஜேஸ்வரி தற்கொலை செய்து கொண்டது குறித்து அருகிலுள்ளவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பட்டினப்பாக்கம் காவல் துறையினர் தற்கொலை செய்து கொண்ட ராஜேஸ்வரி உடலை மீட்டு ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் ராஜேஸ்வரி தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவம் குறித்து அருகிலுள்ளவர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் தான் தற்கொலை செய்து கொண்ட ராஜேஸ்வரியின் தம்பி சரவணன் பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் இது குறித்த புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, “ கடந்த 20-ந்தேதி அவரது அக்கா ராஜேஸ்வரி செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார் என்றும், அப்போது அவர் அவரது கணவரும், அவரது அண்ணி வெண்ணிலாவும், ‘நீ வரும் போது என்ன கொண்டு வந்தாய், நாங்கள் இருவரும் சந்தோஷமாக இருக்க நீ இடையூறாக இருக்கிறாய், நீ வீட்டை விட்டு வெளியே போ அல்லது செத்து விட்டால் சொத்து அனைத்தும் எங்களுக்கே கிடைக்கும் என்றும் கூறி தினமும் கொடுமைப்படுத்துகிறார்கள்’ என கூறி அழுததாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்

மேலும் தனது செல்போனில் அண்ணியுடன் இணைந்துள்ள ஆபாச படங்களை காட்டி எனது அண்ணி எவ்வளவு அழகாக இருக்கிறார் பார் என்றும், அவரது கணவர் அடித்து துன்புறுத்துவதாக அக்கா கூறினார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து நேற்று முன்தினம் நாங்கள் புறப்பட்டு சென்னை வந்து கொண்டிருக்கும் போதே, எனது அக்கா இறந்து விட்டார் என்ற தகவல் கிடைத்தது. எனவே எனது அக்காவின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அதில் கூறியிருந்தார்.

அவர் அளித்துள்ள புகாரின் பேரில் பட்டினப்பாக்கம் இன்ஸ்பெக்டர் பீர்பாஷா இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

ராஷ்ட்ரிய பால புரஸ்கார் 2020 விருது பெற்றவர்களுடன் பிரதமர் நாளை கலந்துரையாடல்

0

ராஷ்ட்ரிய பால புரஸ்கார் 2020 விருது பெற்றவர்களுடன் பிரதமர் நாளை கலந்துரையாடல்

ராஷ்ட்ரிய பால புரஸ்கார் 2020 விருது பெற்றவர்களுடன் பிரதமர் கலந்துரையாடவுள்ளார்.பழங்குடியின கலைஞர்கள், தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்கள் மற்றும் அலங்கார ஊர்தி கலைஞர்கள் வரவேற்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்

பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் 2020 விருது பெற்ற 49 குழந்தைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி, நாளை, ஜனவரி 24, 2020 அன்று சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.

விருதுபெற்ற இந்த 49 பேரும், ஜம்மு & காஷ்மீர், மணிப்பூர் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த தலா ஒருவர் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களாவர். 

கலை & கலாச்சாரம், புதுமை கண்டுபிடிப்புகள், கல்வித் திறன், சமூக சேவை, விளையாட்டு மற்றும் வீர-தீர செயலுக்காக இந்த குழந்தைகள் விருதுபெற்றுள்ளனர்.

தேச வளர்ச்சியில் குழந்தைகளும் மிக முக்கியப் பங்குதாரர்கள் என்பதை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது.  அவர்களது நம்பிக்கையும், எதிர்பார்ப்புகளும் நிறைவேற்றப்படுவதுடன், அவர்களது சாதனைகளுக்கு உரிய விருது வழங்கி கவுரவிக்கப்படுகின்றனர். 

ஒவ்வொரு குழந்தையும் மிக முக்கியமானவர் என்பதோடு, அவரது சாதனைகள் பாராட்டப்பட வேண்டியவையாகும்.  இவர்களில் சிலரது சாதனைகள், மற்ற பலருக்கு ஊக்கமளிப்பதாக அமையும். 

அந்த வகையில்தான், நமது குழந்தைகளின் சிறப்புமிக்க சாதனைகளுக்காக அவர்களை அங்கீகரிக்கும் விதமாக, மத்திய அரசு ஆண்டுதோறும் இதுபோன்ற விருதுகளை வழங்கி வருகிறது. 

புதுமை கண்டுபிடிப்புகள், கல்வித் திறன், சமூக சேவை, கலை & கலாச்சாரம், விளையாட்டு  மற்றும் வீர-தீர செயலாற்றுவதில் சிறப்புமிக்க சாதனை படைத்த எந்தவொரு குழந்தையும், இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.  உயர்மட்டக் குழு ஒவ்வொரு விண்ணப்பத்தையும் கவனத்துடன் பரிசீலித்து விருதுபெறுவோரை தேர்வு செய்யும்.

குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருதுகளை நேற்று (22.01.2020) வழங்கினார். 

பழங்குடியின கலைஞர்கள், தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்கள் & அலங்கார ஊர்தி கலைஞர்களுக்கு வரவேற்பு

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கவுள்ள பழங்குடியின கலைஞர்கள்தேசிய மாணவர் படையினர்நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்கள் அலங்கார ஊர்தி கலைஞர்கள்1,730-க்கு மேற்பட்டோருக்கு 24.01.2020 அன்று  ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்று அவர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.