Home Blog Page 5790

தனுஷூக்காக தேசிய விருதையும் புறக்கணிப்போம்: இயக்குனர் அமீர்

0

தனுஷ் நடித்த ‘அசுரன்’ திரைப் படத்திற்கு தேசிய விருது கிடைக்கவில்லை என்றால் தேசிய விருதை புறக்கணிப்போம் என்று இயக்குனர் அமீர் கூறியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற சினிமா விழா ஒன்றில் இயக்குனர் அமீர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் ‘அசுரன்’ படம் குறித்து மிகப் பெருமையாக பேசினார். இந்தியாவில் உள்ள மிகச்சிறந்த இயக்குனர்களில் வெற்றிமாறன் ஒருவர் என்றும், வடசென்னை படத்தில் தன்னுடைய ராஜன் கேரக்டர் மிகச் சிறப்பாக அமைய அவர் தான் காரணம் என்றும் புகழாரம் சூட்டினார்.

மேலும் வெற்றிமாறன் இயக்கிய ‘அசுரன்’ திரைப்படம் இந்திய திரைப்படங்களில் குறிப்பிடத்தக்க ஒரு திரைப்படம் என்றும் அந்த படத்திற்கு தேசிய விருதும் கிடைக்கவில்லை என்றால் ஒட்டுமொத்த தேசிய விருதையும் தமிழ் சினிமா புறக்கணிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

வெற்றிமாறனின் முந்தைய படமான ’வடசென்னை’ திரைப்படம் பல தேசிய விருதுகளை வென்று இருக்க வேண்டும் என்றும் ஆனால் ஒரு சில அரசியல் காரணங்களால் அந்தப் படத்துக்கு விருது வழங்கப்படவில்லை என்றும் அமீர் அதை விழாவில் பேசினார். அமீரின் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

துரைமுருகன் திமுகவின் தலைவராக முடியுமா..? தெறிக்கவிடும் அதிமுக அமைச்சர்!!

0

துரைமுருகன் திமுகவின் தலைவராக முடியுமா..? தெறிக்கவிடும் அதிமுக அமைச்சர்!!

அதிமுகவில் எல்லோருமே முதலமைச்சர்தான் என்று கூறும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது முதலமைச்சர் பதவியை ஓ.பன்னீர் செல்வத்திற்கு விட்டுத் தருவாரா..? என்று திமுகவின் துரைமுருகன் விமர்சனம் செய்திருந்தார். இது பற்றி அதிமுக மீன்வளத்துறை அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது:

உங்களால் முடிந்தால் திமுகவின் தலைவராகி காட்டுங்கள் என்று துரைமுருகனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார் மேலும், உள்ளாட்சித் தேர்தல் இடைவேளை போன்றதுதான் என்றும், எப்போதும் அதிமுக மட்டும்தான் ஹூரோ 2021 தேர்தலிலும் நாங்களே வெற்றி பெறுவோம் என்று கூறினார்.

பாஸ்டேக் முறையில் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து மத்திய அரசிடம் தெரிவிக்கப்படும் என்றும், டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேட்டில் யார் ஈடுபட்டிருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். சமீப நாட்களாக திமுக, அதிமுக இடையே அரசியல் புகைச்சல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

திமுக கூட்டணி சலசலப்பு மற்றும் துரைமுருகனின் பேட்டிகளுக்கு அதிமுக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் பேட்டிகள் சரியான பதிலடியாக அமைந்துள்ளது. துரைமுருகன் திமுகவின் தலைவராக முடியுமா..? என்கிற பதிலடி பேச்சு திமுக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உதயநிதிக்கு ஜீனியர் கலைஞர் பட்டம் பார்சல்! சீனியர் உடன்பிறப்புகள் பெருமிதம்!!

0

உதயநிதிக்கு ஜீனியர் கலைஞர் பட்டம் பார்சல்! சீனியர் உடன்பிறப்புகள் பெருமிதம்!!

கடைசி தொண்டனாக இருந்து இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின் வரவு ஆரம்ப கட்டத்தில் பலருக்கு திருப்தி இல்லை. காரணம் அவரிடம் எந்த ஒரு ஈர்ப்பும் இல்லாமல் இருந்தது. தற்போது சீனியர் நிர்வாகிகளிடம் நல்ல நகைச்சுவை மற்றும் கட்சி ரீதியான கணிப்புகளோடு பேசுவதை பார்த்து சீனியர் உடன்பிறப்புகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சீனியர்களை ஈர்க்கும் விதமாக செயல்படும் உதயநிதியை பலருக்கு மிகவும் பிடித்துவிட்ட காரணத்தால், ஜீனியர் கலைஞர் என்று பாராட்டு பத்திரம் வாசிக்கின்றனர். தனக்கு எந்த பட்டப் பெயரும் வேண்டாம் என உதயநிதி தெரிவித்துள்ள நிலையில், திமுகவின் மூத்த அரசியல் தலைகள் உதயநிதிக்கு ஜீனியர் கலைஞர் என்று பட்டத்தை கொடுப்பதாக கூறப்படுகிறது.

சினிமா களத்தில் இருந்தவருக்கு அரசியல் களம் செட்டாகுமா என்கிற கட்சியினரின் குறுக்கு கணக்குகளை உடைத்தெரிந்த உதயநிதி. தற்போது பல லட்சம் இளைஞர்களை புதிதாக கட்சியில் இணைக்க ஆயத்தமானது பலருக்கு வியப்பில் ஆழ்த்தியது. அரசியல் அனுபவம் இல்லாத உதயநிதிக்கு பெரிய பொறுப்புகளை எப்படி சமாளிப்பார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு தனது அரசியல் பேச்சுகள் மூலம் பதிலடி கொடுத்து வருகிறார்.

ஆரம்ப கட்டத்தில் உதயநிதி ஸ்டாலினை சின்னவர் என்று கட்சியினர் கூறினாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், புகழ் பேசும் பெயர்களை தவிர்த்து நாம் அனைவரும் அண்ணன் தம்பியாக இருப்போம் என்று புகழ்ச்சியினை புறந்தள்ளினார்.

தொடக்க அரசியலில் உதயநிதியை பிடிக்காத சீனியர் நிர்வாகிகளுக்கும் தற்போது பாராட்டக்கூடிய அளவிற்கு தனது அரசியல் பார்வையை மாற்றியுள்ளார் உதயநிதி. அவருக்கான ஜீனியர் பட்டம் கொடுக்கும் மூத்த நிர்வாகிகள் பெருகி வருகின்றனர்.

ரஜினி-பெரியார் விவகாரத்தில் கமல், டிடிவி தினகரன் அமைதி ஏன்?

0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் துக்ளக் ஆண்டு விழாவில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக திமுக, திக, அதிமுக, காங்கிரஸ் உள்பட பல அரசியல் கட்சிகள் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பெரியாரின் கொள்கைகளை தீவிரமாக கடைபிடித்து வருவதாக கூறப்படும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் தினகரன் ஆகிய இரண்டு இருவரும் இது குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரஜினி-பெரியார் விவகாரத்தில் கமல், டிடிவி தினகரன் அமைதி ஏன்?

கடந்த சில மாதங்களாகவே பாஜகவுடன் நெருக்கமாகி வருவதாக டிடிவி தினகரன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அண்ணா பல்கலைகழகத்தில் பகவத்கீதையை பாடத்திட்டத்தில் சேர்ப்பது தவறில்லை என்று சொன்னதில் இருந்தே டிடிவி தினகரன் பாஜகவை நெருங்கி விட்டார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் பெரியாரின் கொள்கைகளில் தீவிரமாக இருந்து வரும் டிடிவிதினகரன் ரஜினியை இன்னும் விமர்சனம் செய்யாமல் இருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. வரும் பொதுத்தேர்தலில் ரஜினியுடன் கூட்டணி அமைக்க டிடிவிதினகரன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படும் நிலையில் அவர் விமர்சனம் செய்யாததற்கு இதுவே காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதேபோல் கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் இணைந்து அரசியல் செய்ய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுவதால் தான் கமலஹாசன் அமைதியாக இருப்பதாக தெரிகிறது மொத்தத்தில் ரஜினி – பெரியார் விவகாரம் தமிழகத்தில் ஒரு புதிய கூட்டணியை உருவாக்கி விடும் போல் தெரிகிறது.

வழக்கறிஞரையும் சிறையில் தள்ளுங்கள்: நிர்பயா வழக்கு குறித்து பிரபல நடிகை ஆவேசம்

0

நிர்பயா குற்றவாளிகளை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என்று கூறிய வழக்கறிஞரை சிறையில் அடையுங்கள் என பிரபல நடிகை ஒருவர் ஆவேசமாக பேட்டி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது குறித்த வழக்கில் நான்கு குற்றவாளிகளுக்கு வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

இந்த நிலையில் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் என்பவர் ராஜீவ் கொலையாளிகளை சோனியா காந்தி மன்னித்தது போன்று நிர்பயா கொலையாளிகளையும் நிர்பயா தாய் மன்னிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

இதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பிரபல நடிகை கங்கனா ரனாவத் ’நிர்பயா கொலை குற்றவாளிகள் இருக்கும் சிறையில் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கையும் நான்கு நாட்கள் அடைக்க வேண்டும் என்றும் இவர் போன்ற பெண்களால்தான் நாட்டில் அரக்கர்கள் மற்றும் கொலைகாரர்கள் அதிகரித்து வருகிறார்கள் என்றும் ஆவேசமாக பதிலளித்தார். கங்கனா ரனாவத் இந்த பதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

காஷ்மீர் விவகாரம்; டிரம்புக்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடி!

0

சமீபத்தில் சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொண்டார். இதே மாநாட்டில் கலந்து கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை அவர் சந்தித்துப் பேசிய போது ’காஷ்மீர் பிரச்சனையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் சம்மதித்தால் மத்தியஸ்தம் செய்ய தயார்’ என்றும் தனது விருப்பத்தை வெளியிட்டார்.

காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை அனுமதிக்க முடியாது என இந்தியா ஏற்கனவே பலமுறை கூறி இருந்தும் டிரம்ப் இவ்வாறு கூறியுள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்தது. இந்த நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நாடு தலையிட எந்த காரணத்தை முன்னிட்டும் அனுமதிக்க முடியாது என அமெரிக்க அதிபருக்கு பிரதமர் மோடி திட்டவட்டமாக பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் ’காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நாடு தலையீடு இருக்கக்கூடாது என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என்றும், இரு நாடுகள் இடையே இருக்கும் இந்த பிரச்சனையை இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்க்க முடியும் என்றும், ஆனால் அதே நேரத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதத்தைக் கைவிட்டால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு இந்தியா முன்வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது அமெரிக்க அதிபர் டிரம்புக்கு இந்திய அரசு கொடுத்துள்ள பதிலடியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முச்சதம் அடித்த மற்றொரு இந்திய வீரர் ! கடும் காய்ச்சலிலும் தொடர்ந்து விளையாடிய தன்னம்பிக்கை !

0

முச்சதம் அடித்த மற்றொரு இந்திய வீரர் ! கடும் காய்ச்சலிலும் தொடர்ந்து விளையாடிய தன்னம்பிக்கை !

ரஞ்சி கோப்பை போட்டியில் மும்பை அணியைச் சேர்ந்த சர்பராஸ் கான் முச்சதம் அடித்து அசத்தியுள்ளார்.

மும்பை மற்றும் உத்திரப் பிரதேச அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை போட்டி நேற்று முடிவடைந்தது. இதில் இரு அணிகளும் தலா ஒரு இன்னிங்ஸே விளையாடின. முதலில் பேட் செய்த உ.பி. அணி தனது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 625 ரன்களை சேர்த்தது. அந்த அணியைச் சேர்ந்த யு டி யாதவ் 203 ரன்களை சேர்த்தார்.

இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி முதலில் விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஒரு கட்டத்தில் 128 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஆனால் அதன் பிறகு லாத் (98), கேப்டன் ஆதித்ய தாரே (97), முலானி (65)  சேர்த்து சரிவில் இருந்து மீட்டனர். அதன் பின் வந்த சர்பராஸ் கான் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முச்சதம் அடித்து அசத்தினார். இதனால் மும்பை அணி 688 ரன்கள் சேர்த்து 7 விக்கெட்களை இழந்தது.

இதனால் போட்டி இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் டிரா ஆனது. ஆட்டநாயகன் விருது பெற்ற சர்பராஸ் கான் ‘இரு நாட்களாக எனக்கு இருமலும் காய்ச்சலும் இருந்தது. அதனால் களத்தில் இருந்து வெளியேறி விடலாம் என்று கூட நினைத்தேன். ஆனால் அவர்கள் எங்களை இரண்டு நாள் வெயிலில் பீல்ட் செய்ய வைத்ததைப் போல நானும் அவர்களை காக்க வைக்கவேண்டும் என எண்ணினேன். எப்போதும் நான் களத்தில் இருந்தால் என்னால் ஆட்டத்தின் போக்கை மாற்ற முடியும் என்ற நம்பிக்கை எப்போதும் எனக்கு உண்டு’ எனக் கூறினார்.

சேவாக், கருன் நாயர் ஆகியோருக்கு அடுத்த படியாக இளம் வீரரான சர்பராஸ் கான் முச்சதம் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

10 நிமிட சிம்பு கேரக்டரை 45 நிமிடமாக நீட்டித்த இயக்குனர்

0
10 நிமிட சிம்பு கேரக்டரை 45 நிமிடமாக நீட்டித்த இயக்குனர்

ஹன்சிகா நடித்து வரும் ’மஹா’ என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் சிம்பு நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்தது என்பதும் இந்தப் படத்தில் அவர் பைலட்டாக நடிக்கிறார் என்று என்பதை உறுதி செய்யும் வகையில் சமீபத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தில் சிம்பு அதிகபட்சமாக 10 நிமிடங்கள் வரும் காட்சிகள் இருக்கும் என்று படக்குழுவினர் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது இந்த கேரக்டர் விரிவாக்கப்பட்டு சுமார் 45 நிமிடங்கள் வரும் காட்சிகளாக இருப்பதாக தெரியவருகிறது

கோவாவில் 30 வருடங்களுக்கு முன் பைலட் ஒருவரின் வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது தான் இந்த படத்தின் சிம்பு கேரக்டர் என்றும் அந்த பைலட் குறித்து அவ்வபோது கேள்விப்பட்ட தகவல்கள் அந்த கேரக்டரை நீடிக்க செய்ய வைத்தது என்றும் இயக்குனர் தெரிவித்துள்ளார்

மேலும் சிம்பு ஹன்சிகாவுக்கு ஒரு பாடல் காட்சியும் இருப்பதாகவும் இந்த பாடல் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாதி படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் இந்த படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் இன்னும் ஓரிரு நாளில் ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பில் சிம்பு கலந்து கொள்ள இருக்கிறார் என்பதும் வெங்கட்பிரபு இயக்கும் இந்த படத்தில் எஸ்ஏ சந்திரசேகர், பாரதிராஜா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

ரஜினி உயிரோடு நடமாட முடியாது ! போராட்டத்தில் வைராலான மிரட்டல் !

0

ரஜினி உயிரோடு நடமாட முடியாது ! போராட்டத்தில் வைராலான மிரட்டல் !

துக்ளக் விழாவில் ரஜினி பெரியாரின் சேலம் மாநாடு குறித்துப் பேசிய சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை.

துக்ளக் 50 ஆவது ஆண்டுவிழாவில் பேசிய ரஜினி ‘சேலத்தில் 1971 ஆம் ஆண்டு பெரியார் நடத்திய ராமர் மற்றும் சீதை ஊர்வலம் பற்றி சிலக் கருத்துகளைப் பேசி சர்ச்சைகளைக் கிளப்பினார். அதற்குப் பெரியாரியவாதிகள் மற்றும் திமுகவினர் ஆதாரப்பூர்வமான விளக்கங்களை வெளியிட்டு மறுப்புத் தெரிவித்தனர். மேலும் மன்னிப்புக் கேட்காவிட்டால் ரஜினியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்தனர்.

இதனால் இன்று தனது வீட்டில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரஜினி ‘நான் கற்பனையாக எதையும் பேசவில்லை. இந்து குழுமத்தின் ப்ரண்ட்லைன் ஆங்கில நாளிதழ் வெளியிட்ட செய்தியினை வைத்துதான் பேசினேன். நான் கேட்டவற்றை மற்றவர்கள் சொன்னதை வைத்துதான் பேசினேன். அதனால் நான் யாரிடமும் மன்னிப்புக் கேட்கமுடியாது என்பதை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்தார்.

ரஜினி உயிரோடு நடமாட முடியாது ! போராட்டத்தில் வைராலான மிரட்டல் !

ரஜினியின் இந்த பேச்சில் ‘பிரண்ட்லைன் இந்து குழுமத்தைச் சேர்ந்தது என்பது தகவல் பிழை என்றும் ரஜினி சுட்டுக்காட்டிய கட்டுரை 2017 ஆம் ஆண்டு வெளியானது. ஆகவே 1971 ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்வைப் பற்றி அப்போது வெளியான நாளிதழ்களில் இருந்து ஆதாரம் காட்டாமல் 2017 ல் வெளியான கட்டுரையை ஆதாரம் காட்ட்வேண்டியது ஏன் உள்ளிட்ட கேள்விகள் எழுப்பப் பட்டன.

இந்நிலையில் ரஜினிக்கு எதிராகப் போராட்டம் சில இடங்களில் நடந்து வருகிறது. ரஜினி வீட்டின் முன் நேற்று கூடிய சிலர் அவருக்கு எதிராகக் கோஷம் எழுப்பினர். அதில் ஒருவர் ‘ரஜினி தமிழ்நாட்டில் உயிருடன் நடமாட முடியாது. அவரது கையை வெட்டுவோம்.’ எனக் கூறியது சம்மந்தமான வீடியோ வெளியானது. அந்த நபர் பேசியது குறித்து போலிஸ் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என ரஜினி ரசிகர்கள் சார்பில் புகார் எழுந்துள்ளது. மேலும் ஒரு சிலர் சம்மந்தப்பட்ட அந்நபர் பெரியாரிஸ்ட் எனவும், இதுதான் பெரியார் சொல்லிக் கொடுத்த அரசியல் நாகரிகமாக எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

புதிய என்ஐடி-களின் நிரந்தர வளாகங்கள் அமைப்புக்கான திருத்தப்பட்ட செலவு மதிப்பீட்டிற்கு அமைச்சரவை ஒப்புதல்

0

புதிய என்ஐடி-களின் நிரந்தர வளாகங்கள் அமைப்புக்கான திருத்தப்பட்ட செலவு மதிப்பீட்டிற்கு அமைச்சரவை ஒப்புதல்

புதிய என்ஐடி-களின் நிரந்தர வளாகங்கள் அமைப்புக்கான திருத்தப்பட்ட செலவு மதிப்பீட்டிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

தேசிய தொழில்நுட்பக் கல்விக் கழகங்களுக்கு (என்ஐடி-களுக்கு) புதிதாக நிரந்தர வளாகங்களை அமைப்பதற்கான திருத்தப்பட்ட செலவு மதிப்பீட்டிற்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2021-22 வரையிலான காலத்திற்கு மொத்த செலவு ரூ.4,371.90 கோடியாக இருக்கும்.

2009 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட என்ஐடி-க்கள் மிகவும் அளவான இடத்தில் குறைவான அடிப்படைக் கட்டமைப்புடன் தத்தம் தற்காலிக வளாகங்களில் 2010-11 கல்வியாண்டிலிருந்து செயல்பாட்டைத் தொடங்கின. கட்டுமானத்திற்குத் தேவையான நில ஆர்ஜிதத்தை இறுதி செய்வதில் ஏற்பட்ட தாமதமும் உண்மையான தேவையை விட மிகவும் குறைந்த கட்டுமானப் பணிகளுக்கான செலவு ஒப்புதல் அளிக்கப்பட்டதாலும் நிரந்தர வளாகத் திட்டங்களைப் பூர்த்தி செய்ய முடியவில்லை.

தற்போது திருத்தப்பட்ட செலவு மதிப்பீட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதால் இந்த என்ஐடி-க்கள் தத்தமது நிரந்தர வளாகங்களில் 2022 மார்ச் 31 வாக்கில் முழுமையாக செயல்படத் தொடங்கும். இவற்றின் ஒட்டு மொத்த மாணவர் திறன் 6,320 ஆகும்.

என்ஐடி-க்கள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் சிறந்த பயிற்சி அளிக்கும் நிறுவனங்களாக தேசிய முக்கியத்துவம் பெற்றவை. உயர்தரமான தொழில்நுட்பக் கல்வி அளிப்பது இவற்றின் சிறப்பம்சம். நாடு முழுவதும் தொழில் முனைவோரை உருவாக்கவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் தேவையான உயர்தரமுள்ள தொழில்நுட்பத் திறனாளிகளை உருவாக்கும் திறனை இந்த நிறுவனங்கள் கொண்டுள்ளன.