Home Blog Page 5794

பிண அரசியல் செய்யும் சீமானுக்கு சமஸ்கிருதம் பற்றி என்ன தெரியும்? எஸ்.வி.சேகர் டுவிட்டரில் பளார்!!

0

பிண அரசியல் செய்யும் சீமானுக்கு சமஸ்கிருதம் பற்றி என்ன தெரியும்?  எஸ்.வி.சேகர் டுவிட்டரில் பளார்!!

சமீபத்தில் நடிகர் ரஜிகாந்த் துக்ளக் பத்திரிகை நிகழ்வில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ரஜினியின் பேச்சானது அமைதியை கெடுக்கும் விதமாக இருப்பதாக திராவிடர் விடுதலை கழகம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த பிரச்சினை தொடர்பாக  பல்வேறு அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிண அரசியல் செய்யும் சீமானுக்கு சமஸ்கிருதம் பற்றி என்ன தெரியும்? எஸ்.வி.சேகர் டுவிட்டரில் பளார்!!

ரஜினியின் ரசிகர்கள் ஒரு பக்கம் ஆதரவு இருந்தாலும், சிலர் எதிர்த்தும் வருகின்றனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சமஸ்கிருத மொழியை செத்த மொழி என்றி விமர்சனம் செய்திருந்தார்.

இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகர் எஸ்.வி.சேகர் டுவிட்டரில் சீமானை கடுமையாக விமர்சித்து உள்ளார்.

பிண அரசியல் செய்யும் சைமனுக்கு சமஸ்கிருதம் செத்தமொழியாக தெரிவதில் ஆச்சரியபடுவதற்கில்லை என்றும், தமிழ்ப்பழமொழி செக்குக்கும், சிவலிங்கத்திற்கும் வித்தியாசம் நாய்க்கு தெரியுமா என்று டுவிட்டரில் கடுமையாக பதிவு செய்துள்ளார்.

பிண அரசியல் செய்யும் சீமானுக்கு சமஸ்கிருதம் பற்றி என்ன தெரியும்? எஸ்.வி.சேகர் டுவிட்டரில் பளார்!!

ராஜராஜ சோழன் போன்ற நாட்டை ஆண்ட மன்னர்கள் முழுமையாக தெய்வத்தின் நம்பிக்கையுடன் இருந்ததால் கோவில்களை கட்டி பராமரித்து வந்தனர். அதன் வழியே நடக்கும் ஆகம விதிகளை மாற்றுவதற்கு கடவுள் நம்பிக்கை இல்லாத எந்த நாதாரிக்கும் உரிமை இல்லை என காட்டமாக கூறியுள்ளார்.

இந்த விசயத்தில் பாஜக ஆதரவாளர் கிஷோர் கே சாமியும் சீமானை தற்குறி என குறிப்பிட்டு விமர்சனம் செய்திருந்தார். இந்த டுவிட்டருக்கு எதிராக சீமானின் தம்பிகளும் எதிர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

அல்வா கொடுத்து, பட்ஜெட் உருவாக்கும் பணிகளை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்..!!

0

அல்வா கொடுத்து, பட்ஜெட் உருவாக்கும் பணிகளை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்..!!

2020-21 ஆம் வருடத்தின் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை பற்றிய தகவலை அச்சேற்றும் பணிகளை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நிதியமைச்சக ஊழியர்களுக்கு அல்வா கொடுத்து தொடங்கி வைத்தார்.

அல்வா கொடுத்து, பட்ஜெட் உருவாக்கும் பணிகளை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்..!!

மத்திய அரசின் பொது பட்ஜெட் தாக்கல் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அவர்கள் தாக்கல் செய்யட உள்ளது. பொது பட்ஜெட் குறித்தான தகவல்களை தயாரிக்கும் ஊழியர்கள், நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யும் வரை வெளி நபர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள கூடாது என்று விதிமுறை உள்ளது.

அல்வா கொடுத்து, பட்ஜெட் உருவாக்கும் பணிகளை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்..!!

பட்ஜெட் உரை தயாரிக்கும் முன்பு ஊழியர்களுக்கு இனிப்பு வழங்கி தொடர்வது வழக்கமாக நடைபெறும் வழிமுறையாகும். இதன் பொருட்டு, பட்ஜெட் குறித்த தகவலை அச்சேற்றும் மத்திய நிதியமைச்சக ஊழியர்களுக்கு அல்வா வழங்கி அச்சேற்றும் பணிகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்து இலங்கை அரசுக்கு வாரி வழங்குவது மன்னிக்க முடியாத துரோகம்! கொந்தளிக்கும் வைகோ

0

தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்து இலங்கை அரசுக்கு வாரி வழங்குவது மன்னிக்க முடியாத துரோகம்! கொந்தளிக்கும் வைகோ

இலங்கை ராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்க இந்திய அரசு வழங்கவுள்ள ரூபாய் 355 கோடி நிதி உதவியை நிறுத்த வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளரும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “இலங்கையில் அதிபர் தேர்தல் நடந்த பின்னர், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கொழும்பு சென்று தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சவைச் சந்தித்து வாழ்த்துக் கூறியது மட்டுமல்லாமல், இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். கோத்தபய ராஜபக்ச இலங்கை அதிபரானதும் தனது முதல் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்தார்.

தற்போது இந்தியாவின் சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இலங்கைக்குச் சென்று, கோத்தபய ராஜபக்சவைச் சந்தித்து, ராணுவ உறவுகளை வலுப்படுத்துவது, கடல்சார் பாதுகாப்பு, உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கு தொழில்நுட்பங்களை அளிக்க இந்தியா உறுதி அளித்துள்ளது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார் என்று செய்தித்தாள்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அஜித் தோவல் – கோத்தபய சந்திப்பு குறித்து இலங்கை அரசு வெளியிட்டுள்ள செய்தியில், “இலங்கை ராணுவத்துக்குத் தேவையான ஆயுதங்கள் வாங்க இந்தியா ரூ.355 கோடி நிதி உதவி அளிப்பதாக அஜித் தோவல் உறுதி அளித்து இருக்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

கோத்தபய ராஜபக்சே தனது ட்விட்டர் பதிவில் “இந்தியாவின் பிரதிநிதி அஜித் தோவலிடம் கடல்சார் மற்றும் மண்டல ஒத்துழைப்பை வளர்ப்பது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினோம்” என்று கூறியுள்ளார்.

இலங்கையில் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களைக் கொன்று குவிப்பதற்குக் காரணமான கோத்தபய ராஜபக்ச பன்னாட்டு நீதிமன்ற குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டிய நபர் ஆவார். அவரை இந்தியாவுக்கு அழைத்து சிவப்புக் கம்பளம் விரித்து தமிழர்களின் நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டிய மத்திய பாஜக அரசு, இலங்கை ராணுவத்துக்குத் தேவையான ஆயுதத் தளவாடங்கள் வாங்குவதற்கு ரூ.355 கோடி நிதி உதவி அளிப்பது கடுமையான கண்டனத்துக்கு உரிய மாபாதகக் கொடுமை ஆகும்.

இந்தியக் கடல் எல்லையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தமிழக மீனவர்களை, அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்து கைது செய்து, இலங்கை சிறையில் அடைப்பதும், சித்திரவதை செய்து துன்புறுத்துவதும், மீன்பிடிப் படகுகள் மற்றும் வலைகள் உள்ளிட்ட கருவிகளைப் பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடக்கிறது.

கடந்த ஜனவரி 18 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினத்திலிருந்து 96 விசைப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்குச் சென்றார்கள். அவர்களில் பெரும்பாலோர் இந்தியக் கடல் எல்லையான நெடுந்தீவு பகுதியில் வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். நள்ளிரவு 2 மணிக்கு இலங்கைக் கடற்படைக்குச் சொந்தமான ரோந்துக் கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் பால்ராஜ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகைச் சுற்றி வளைத்து, நான்கு மீனவர்களையும் கைது செய்து, படகையும் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்தில் தமிழக மீனவர்கள் 4 பேரும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கோத்தபய ராஜபக்ச அதிபர் பொறுப்பு ஏற்ற பிறகு, இலங்கை கடற்படை எல்லை தாண்டி வந்து, தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி தாக்குவதும், கைது செய்வதும் தொடர் நிகழ்வுகளாக இருக்கின்றன.

இலங்கையில், தமிழர்களின் பூர்வீகப் பகுதியான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் நிலங்கள், வீடுகள் உள்ளிட்ட உடைமைகளையும் பறித்து, ராணுவம் முகாம் அமைத்து, தமிழர்கள் 24 மணிநேரமும் திறந்தவெளிச் சிறையில் இருப்பதைப் போன்று கட்டுக்காவல் ஏற்படுத்தி இருப்பதையும் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தி வரும் இந்திய அரசு, தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்து இலங்கை அரசுக்கு வாரி வழங்குவது மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். இச்செயல் ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல இங்குள்ள தமிழர்களுக்கும் பாஜக அரசு செய்யும் பச்சை துரோகம் ஆகும்.

எனவே இந்திய அரசு, இலங்கை ராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்க ரூபாய் 355 கோடி நிதி உதவி அளிப்பதை நிறுத்த வேண்டும் என அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சாலை விபத்தில்லா தமிழகம் படைக்க துணிச்சலான நடவடிக்கை வேண்டும்! மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள்

0

சாலை விபத்தில்லா தமிழகம் படைக்க துணிச்சலான நடவடிக்கை வேண்டும்! மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள்

விபத்தில்லா இந்தியாவை, குறிப்பாக தமிழகத்தை உருவாக்கத் தேவை துணிச்சலான நடவடிக்கைகள் தான் வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

நெடுஞ்சாலைகளில் பயணம் என்பது இலக்கை நோக்கியதாக இருக்க வேண்டும்; இறப்பை நோக்கியதாக இருந்து விடக்கூடாது. ஆனால், தேசிய நெடுஞ்சாலைகளிலும், மாநில நெடுஞ்சாலைகளிலும் வாகனங்கள் பறக்கும் வேகத்தையும், கண் முன்பே நடக்கும் விபத்துகளையும் பார்க்கும் போது நெஞ்சம் பதறுகிறது. விபத்துகளை விலைக்கு வாங்கும் போக்குக்கு முடிவு கட்டுவதே முதல் கடமையாக இருக்க வேண்டும்.

உலகிலேயே அதிக சாலை விபத்துகள் நடக்கும் நாடு இந்தியா தான். இந்தியாவிலேயே அதிகளவில் விபத்துகள் நிகழும் மாநிலம் தமிழ்நாடு தான். நாட்டிலேயே அதிக சாலை விபத்துகள் நடக்கும் பெரு நகரமும் சென்னை தான். இந்த சாதனைகள் நிச்சயம் நமக்கு மகிழ்ச்சியளிக்காது; வேதனையையே அளிக்கும். இந்த அவல நிலைக்கு ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு காரணமோ, அதே அளவுக்கு வாகன ஓட்டிகளும் காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது. வழுக்கிக் கொண்டு செல்லும் அளவுக்கு சாலைகளும், மின்னலாக சீறும் அளவுக்கு அதிநவீன வாகனங்களும் பெருகி விட்ட நிலையில் அவற்றை நமது கட்டுப்பாட்டில் வைக்காமல், அவற்றுக்கு நாம் அடிமையானது தான் இதற்கு காரணமாகும்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக நான்கரை லட்சம் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. அவற்றில் ஒன்றரை லட்சம் பேர் ஒவ்வொரு ஆண்டும் உயிரிழக்கின்றனர். உயிர்க்கொல்லி நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகளை விட சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகம் ஆகும். விபத்துகள் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கும் தமிழ்நாடு, உயிரிழப்புகளில் இரண்டாவது இடம் வகிக்கிறது. உதாரணமாக 2017-ஆம் ஆண்டில் இந்தியாவில் 4 லட்சத்து 64,910 விபத்துகள் நடந்தன. இவற்றில் உயிரிழப்பை ஏற்படுத்திய விபத்துகள் 1,34,796 ஆகும். இந்த விபத்துகளில் ஒரு லட்சத்து 47,913 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் தான் அதிகபட்சமாக 65,562 விபத்துகள் நடந்துள்ளன. உயிரிழப்புகளைப் பொறுத்தவரை உத்தரபிரதேசத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 16,661 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதை சாதாரணமான புள்ளிவிவரமாக கடந்து செல்ல முடியாது. சாலைகளில் நிகழும் விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் ஒன்றரை லட்சம் குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருகின்றன. விபத்துகளில் காயமடையும் நான்கரை லட்சம் பேரில் பெரும்பான்மையினர் வாழ்வாதாரத்தை ஈட்டும் திறனை இழக்கின்றனர். இவை எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாதவை. சாலை விபத்துகளை கட்டுப்படுத்துவதன் மூலம் தான் இனிவரும் காலங்களில் இத்தகைய இழப்பை கட்டுப்படுத்த முடியும்.

சாலைவிபத்துகளைக் கட்டுப்படுத்துவது மத்திய, மாநில அரசுகளால் முடியாதவை அல்ல. 1999-ஆம் ஆண்டு வரை இந்தியாவின் நான்கு திசைகளிலும் உள்ள பெருநகரங்களான புதுதில்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகியவற்றை இணைக்க தரமான சாலைகள் இல்லை. ஆனால், 1999-ல் அடிக்கல் நாட்டப்பட்டு, மிகவும் தாமதமாக பணிகள் தொடங்கப்பட்டு 2011-ஆம் ஆண்டுக்குள் இந்நகரங்களை இணைக்கும் அளவுக்கு 5846 கி.மீ தொலைவுக்கு தங்க நாற்கர சாலைகள் 4 வழிகளுடன் உருவாக்கப் பட்டன. 2010-11 ஆம் ஆண்டில் 70,934 கி.மீ நீளத்திற்கு மட்டுமே தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப் பட்டிருந்த நிலையில், அடுத்த 8 ஆண்டுகளில் அவை இரு மடங்காக, அதாவது 1,42,126 கிமீ நீளத்திற்கு விரிவுபடுத்தப்பட்டன. இந்த சாதனைகளுடன் ஒப்பிடும்போது சாலை விபத்துகளையும், அவற்றால் ஏற்படும் உயிரிழப்புகளையும் கட்டுப்படுத்துவது பெரிய பணி அல்ல… சாத்தியமாகக் கூடிய பணி தான்.

விபத்தில்லா இந்தியாவை, குறிப்பாக தமிழகத்தை உருவாக்கத் தேவை துணிச்சலான நடவடிக்கைகள் தான். இந்தியாவில் மணிக்கு 200 கி.மீ வேகத்திற்கு மேல் செல்லும் அதிவேக மகிழுந்துகள் அதிகரித்து விட்டன. அதற்கேற்ற வகையில் சாலைகளும் 4 வழிச்சாலைகளாகவும், 6 வழி, 8 வழிச்சாலைகளாகவும் விரிவடைந்து விட்டன. ஆனால், சாலைகளில் பாதுகாப்பு வசதிகள் மேம்படுத்தப்படாத நிலையில், சில வாகனங்கள் கண்மூடித்தனமான வேகத்தில் இயக்கப்படுவது தான் விபத்துகளுக்கு காரணமாகும். இதைக் கட்டுப்படுத்த வேண்டுமானால், நகரங்களுக்குள்ளும், மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளிலும் இருப்பதைப் போலவே தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலும் வேக உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, குறிப்பிட்ட இடைவெளிகளில் வேகத்தை அளவிடும் காமிராக்களைப் பொறுத்தி, அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்டறிந்து, கடுமையாக தண்டிக்க வேண்டும்.

வெளிநாடுகளில் ஏதேனும் ஒரு இடத்தில் அடிக்கடி விபத்து நடந்தால், அதற்கான காரணத்தை ஆய்வு செய்து கண்டுபிடிக்கும் அதிகாரிகள், அக்குறையை உடனடியாக சரி செய்கின்றனர். ஆனால், நமது நாட்டில் ‘இது விபத்துப் பகுதி’ என்று அறிவிப்புப் பலகை வைத்து விட்டு கடமையை முடித்துக் கொள்கின்றனர். இந்த வழக்கத்தைக் கைவிட்டு, விபத்துப் பகுதிகளில் உள்ள குறைகளை சீரமைத்து, அதில் விபத்துகள் நடக்காமல் தடுக்க வேண்டும். இரு சக்கர ஊர்திகளில் சைலன்சரை அகற்றிவிட்டு பிற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் அபாய சங்கு போன்று ஒலி எழுப்பிச் செல்வோரை பிடித்து அவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்க வகை செய்ய வேண்டும்.

முக்கியமாக ஓட்டுனர் உரிமம் வழங்கும் முறையை கடுமையாக்க வேண்டும். இந்தியாவில் சிறப்பாக வாகனம் ஓட்டும் ஓட்டுனர்களால் கூட, வெளிநாடுகளுக்கு செல்லும் போது எளிதாக ஓட்டுனர் உரிமம் பெற முடிவதில்லை. ஆனால், தமிழகத்தில் மிகவும் எளிதாக மகிழுந்து ஓட்டுனர் உரிமம் கிடைக்கிறது. இது தான் விபத்துக்கான முக்கியக் காரணமாகும். எனவே, தமிழகம் உட்பட நாடு முழுவதும் ஓட்டுனர் உரிமம் வழங்குவதற்கான நிபந்தனைகளை மிகவும் கடுமையானதாக மாற்றியமைக்க வேண்டும். மேற்கண்ட அதிரடியான நடவடிக்கைகளின் மூலம் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் இல்லாத இந்தியாவும், தமிழ்நாடும் உருவாக்கப்படுவதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.

இவற்றுக்கெல்லாம் மேலாக, வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு நான் கூறும் அறிவுரை அதிகாலை 2.00 மணி முதல் 4.00 மணி வரை வாகனங்களில் பயணிக்க வேண்டாம் என்பது தான். அந்த நேரத்தில் தான் உறக்கம் காரணமாக அதிக விபத்துகள் நிகழ்கின்றன என்பதால், அதிகாலை வேளையில் வாகனங்களில் பயணிப்பதை தவிர்த்து, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் அதில் கூறியுள்ளார்.

புதிய வடிவத்தில் பாராளுமன்றக் கட்டிடம் : வெளியானது மாதிரிப்படம் !

0

புதிய வடிவத்தில் பாராளுமன்றக் கட்டிடம் : வெளியானது மாதிரிப்படம் !

புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டுவதில் மத்திய அரசு முனைப்புக் காட்டிவரும் வேளையில் அதன் மாதிரிப் படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இரண்டாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள மோடி தலைமையிலான அரசு புதிதாக பாராளுமன்றக் கட்டிடம் கட்ட ஆர்வம் காட்டி வருகிறது. இந்த ஆண்டுக்குள்ளாகவே  அதை முடிக்க மோடி ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிகிறது.

தற்போது இது சம்மந்தமாக அகமதாபாத்தை சேர்ந்த எச்.எஸ்.பி என்ற டிசைனிங் நிறுவனம் முக்கோண வடிவத்தில் கட்டுவதற்கான மாதிரி வரைப்படத்தை தயார் செய்துள்ளது.தற்போதைய பாராளுமன்றக் கட்டிடம் வட்ட வடிவிலானது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாகக் கட்டப்படும் கட்டிடம் தற்போது பாராளுமன்றம் அமைந்துள்ள வளாகத்துக்குள்ளாகவே அமையும் எனத் தெரிகிறது. இதில்  1,350 பேர் உட்காரும் அளவுக்கான இருக்கை வசதியோடு அமைக்க படுவதாக சொல்லப்படுகிறது.

தற்போது 543 எம்.பி.கள் இருக்கும் மக்களவையில் அடுத்த தேர்தலின் போது 848 எம்.பி.க்கள் இருக்க வேண்டும் என அரசியல் வல்லுனர்கள் கணித்துள்ளனர். அதனால் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் என சொல்லப்படுகிறது.. அதனால் மத்திய அரசு மக்களவை எம்.பி.க்களின் எண்ணிக்கையை 1000 ஆக உயர்த்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி பிராணாப் முகர்ஜி வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த நபர் : தலைப்பொங்கல் கொண்டாடி முடித்த பின் நடந்த கொடூரம் !

0

கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த நபர் : தலைப்பொங்கல் கொண்டாடி முடித்த பின் நடந்த கொடூரம் !

கிருஷ்ணகிரி அருகே தலைப்பொங்கல் கொண்டாடிய புது மாப்பிள்ளை கொல்லப்பட்ட கள்ளக்காதல் விவகாரத்தால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் அங்குள்ள காமராஜ் நகரில் வசித்து வருகிறார். அதே பகுதியில் வேன் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட இவர், இந்த ஆண்டு தலைப் பொங்கலை மனைவியுடன் கொண்டாடியுள்ளார். பொங்கலை சிறப்பாகக் கொண்டாடிவிட்டு வெளியே சென்ற இவரை நீண்டநேரம் ஆகியும் காணாததால் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் பதற்றத்தில் தேட ஆரம்பித்துள்ளனர்.

ஒருநாள் முழுக்க தேடியும் கிடைக்காத இவர் மறுநாள் காலை அதே ஊரில் உள்ள ஏரிக்கரையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இறந்த நிலையில் கிடந்த அவரின் தலையில் பலமாக தாக்கப்பட்ட காயம் இருந்தது. அதை வைத்து யாரோ பாறாங்கல்லை அவர் மேல் போட்டுக் கொன்றிருக்க வேண்டும் என்று தெரிந்தது.

இதையடுத்து போலிஸாருக்குத் தகவல் சொல்ல அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து நடத்திய விசாரணையில் அவரைக் கொலை செய்தது மாரிமுத்து வசிக்கும் தெருவில் வசிக்கும் ராணுவ வீரரான தீர்த்த செல்வன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தீர்த்த செல்வன் ஊரில் இல்லாத நேரத்தில் அவரது மனைவிக்கும் மாரிமுத்துவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. அதைக் கண்டுபிடித்த தீபச்செல்வன் கள்ளக்காதலை நிறுத்துமாறு மாரிமுத்துவை எச்சரித்துள்ளார். ஆனாலுமவர் பேச்சைக் கேட்காத மாரிமுத்துவை தீர்த்த செல்வன் தனது நண்பர்களுடன் அழைத்துச் சென்று கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

இதையடுத்து தீபச்செல்வன் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சி எஸ் கே அணியிலாவது தோனிக்கு எதிர்காலம் இருக்கிறதா ? வெளியானது முக்கியத் தகவல் !

0

சி எஸ் கே அணியிலாவது தோனிக்கு எதிர்காலம் இருக்கிறதா ? வெளியானது முக்கியத் தகவல் !

தோனி அடுத்த ஆண்டும் சி எஸ் கே அணியில் தொடர்ந்து விளையாடுவார் என அந்த அணியின் உரிமையாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

பிசிசிஐ நிர்வாகம் ஆண்டு தோறும் இந்திய அணி வீரர்களுக்கான ஊதியப் பட்டியல் விவரங்களை ஆண்டு தொடக்கத்தில் வெளியிடும். இதில் இந்த ஆண்டுக்கான பட்டியல் தோனி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. கடந்த ஆண்டு ஏ பிரிவில் இருந்த தோனி ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் பெற்றார். ஆனால் இந்த ஆண்டு அவர் எந்த பிரிவிலும் இடம்பெறவில்லை. இதன் மூலம் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை கிட்டதட்ட முடிவுக்கு வந்துள்ளது.

சி எஸ் கே அணியிலாவது தோனிக்கு எதிர்காலம் இருக்கிறதா ? வெளியானது முக்கியத் தகவல் !

தோனி, கடைசியாக 2019 ஆம் ஆண்டு நியுசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் விளையாடினார். அதன் பின்னர் எந்த ஒரு சர்வதேசப் போட்டியிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தோனி இந்திய அணிக்காக இனிமேல் தொடர்ந்து விளையாடுவது பகல்கனவுதான் என்ற சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில் அவரது ரசிகர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் சி எஸ் கே அணிதான்.

ஐபிஎல் போட்டிகள் அறிமுகம் ஆனதில் இருந்து சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் தோனி சென்னை தனது இரண்டாவது தாய்வீடு என சொல்லி இருக்கிறார். தற்போது 38 வயதாகும் தோனி இந்த ஆண்டு ஐபிஎல் –ல் சென்னை அணிக்கு தலைமை தாங்க உள்ளார். ஆனால் அடுத்த ஆண்டு வீரர்களை முழுவதுமாக விடுவிக்கும் ஏலம் நடக்க இருப்பதால், தோனியை விடுவிக்க சி எஸ் கே நிர்வாகம் முடிவு எடுத்திருப்பதாக சொல்லப்பட்டது. இது சி எஸ் கே ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனரும் சி எஸ் கே அணி உரிமையாளருமான சீனிவாசன் ‘தோனி இந்த ஆண்டு சென்னை அணிக்குத் தலைமை தாங்குவார். அடுத்த ஆண்டு ஏலத்திலும் அவர் சி எஸ் கே அணியில் தக்கவைக்கப் படுவார். அவர் விரும்பும் வரை தொடர்ந்து சென்னை அணியில் ஆடுவார்.’ என நம்பிக்கை அளிக்கும் விதமாக பேசியுள்ளார்.

ரஜினியை வெளுத்து வாங்குவது ஏன் ? உதயநிதி ஸ்டாலின் மழுப்பல் பதில் !

0

ரஜினியை வெளுத்து வாங்குவது ஏன் ? உதயநிதி ஸ்டாலின் மழுப்பல் பதில் !

மறைந்த பத்திரிகையாளர் மற்றும் நடிகர் சோ ராமசாமி அவர்கள் தொடங்கிய துக்ளக் பத்திரிகையின் 50 ஆவது ஆண்டு நிறைவு விழா சமீபத்தில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் கொண்டாடப்பட்டது. அதில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ’சோ வாசகர் வட்டத்தை உருவாக்க வில்லை அவர் ஒரு இனத்தை உருவாக்கினார்.  ஒருவர் முரசொலி வைத்திருந்தால் திமுக காரன் என்று சொல்வார்கள். ஆனால் துக்ளக் வைத்திருந்தால் அவரை அறிவாளி என்று சொல்லலாம். சோவை வளர்த்துவிட்டது இருவர்தான். ஒருவர் பக்தவச்சலம் மற்றொருவர் கலைஞர். கலைஞர் துக்ளக்குக்கு இலவச விளம்பரம் செய்வதாகவே என்னிடம் சோ  கூறியிருக்கிறார்.  சோ போன்ற பத்திரிகையாளர்கள் இப்போது மிக மிக அவசியமாக தேவைப்படுகின்றன.  சமுதாயமும் அரசியலும் இப்போது கெட்டு விட்டது.  பாலில் தண்ணீர் கலந்து போல செய்திகளை திரிக்காமல் உண்மையான செய்திகளை பத்திரிக்கையாளர்கள் மக்களிடம் தெரிவிக்க வேண்டும்.’ எனக் கூறினார்.

ரஜினியை வெளுத்து வாங்குவது ஏன் ? உதயநிதி ஸ்டாலின் மழுப்பல் பதில் !

இதையடுத்து ரஜினியின் பேச்சால் அதிருப்தியான திமுக வினர் அவருக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்களைப் பதிவு செய்தனர். அதன் உச்சமாக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ‘முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவன்னா புரட்சித் தலைவன், தைரியலெட்சுமினா அம்மா-கால்நூற்றாண்டாக கால்பிடித்து காலம்கடத்தி ‘தலைசுத்திருச்சு’ என நிற்கும் காரியக்காரருக்கு மத்தியில், முரசொலியை கையிலேந்தி, பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே திமுகக்காரன். நான் திமுகக்காரன். பொங்கல் வாழ்த்துகள்’ என கேலியாக பதிவு செய்தார். இதுமட்டுமில்லாமல் இதற்கு முன்னதாக ஒரு முறை ரஜினியை வயதான பெரியவர் என்றும் கேலி செய்திருந்தார்.

ரஜினியை இது போல மறைமுகமாக டிவிட்டரில் விமர்சனம் செய்வது ஏன் என உதயநிதியிடம் கேள்வி எழுப்பிய போது ‘நான் என் டுவீட்களில் ரஜினியைதான் குறிப்பிடுகிறேன் என எதை வைத்து சொல்கிறீர்கள். அவர் இன்னும் அரசியலுக்கே வரவில்லை. அவர் வந்த பின் இந்த கேள்விக்கான பதிலை நான் உங்களுக்கு சொல்கிறேன்.’ எனக் கூறியுள்ளார்.

ஆஸியின் வேகத்துக்கு அசராத இந்திய பேட்ஸ்மேன்கள் ; வேற லெவல் ரோஹித் !தொடரைக் கைப்பற்றிய இந்தியா!

0

ஆஸியின் வேகத்துக்கு அசராத இந்திய பேட்ஸ்மேன்கள் ;ரோஹித் அபார சதம் ! தொடரைக் கைப்பற்றிய இந்தியா!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியை வென்ற இந்தியா தொடரையும் வென்றுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன. இன்று நடைபெற்று வரும் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி தான் தொடரை கைப்பற்ற முடியும்.

இந்நிலையில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா முதலில் தடுமாற்றத்தை சந்தித்தாலும் பிறகு நிதானித்து ஆடி வருகிறது. ஹிட்ஸ்மேன்களான ஆரோன் பின்ச் மற்றும் டேவிட் வார்னரை குறைந்த ரன்களிலேயே இந்தியா அவுட் ஆக்கிவிட்டதால் ஆஸ்திரேலியாவின் ரன் ரேட் வழக்கத்தை விட குறைந்துள்ளது.

ஆஸியின் வேகத்துக்கு அசராத இந்திய பேட்ஸ்மேன்கள் ; வேற லெவல் ரோஹித் !தொடரைக் கைப்பற்றிய இந்தியா!

ஆனாலும் அதன் பின் ஜோடி சேர்ந்த ஸ்மித் மற்றும் லபுஷான் ஆகியோர் நிலைத்து நின்று ஆடி சரிவைத் தடுத்தனர். 54 ரன்கள் எடுத்து அவுட்டாகி வெளியேறினார் லபுஷான். ஆனாலும் தொடர்ந்து ஆடிய ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் போட்டிகளில் தனது 9 ஆவது சதத்தைப் பூர்த்தி செய்துள்ளார். சிறப்பாக விளையாடிய அவர் 117 பந்துகளில் 100 ரன்களக் கடந்த அவர், 131 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்.

அதன்  பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆக ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய முகமது ஷமி 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஜடேஜா இரண்டு விக்கெட்களும் குல்தீப் மற்றும் சைனி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

அதன் பின் 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய இந்திய அணியில் ராகுல் 19 ரன்களில் அவுட் ஆகி வெளியேற, அதன் பின் ரோஹித்தோடு கைகோர்த்தார் கேப்டன் கோலி. இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 197 ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக விளையாடி சதமடித்த ரோஹித் ஷர்மா 119 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன் பின் விராட் கோலியுடன் சேர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சதத்தை நெருங்கிய கோலி 89 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதன் பின்னர் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் மனிஷ் பாண்டே கூட்டணி வெற்றிக்குத் தேவையான ரன்களை  ஓவர்களில் எடுத்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.

வாட்ஸ் ஆப் டௌன் ; எந்த பதிலும் சொல்லாத நிறுவனம் ! உலகளவில் ட்ரண்ட்டான ஹேஷ்டேக் !!

0

வாட்ஸ் ஆப் டௌன் ; எந்த பதிலும் சொல்லாத நிறுவனம் ! உலகளவில் ட்ரண்ட்டான ஹேஷ்டேக் !!

வாட்ஸ் ஆப்பில் இன்று காலை முதல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனுப்ப முடியாமல் பிரச்சனைகள் எழுந்துள்ளன.

வாட்ஸ் ஆப் மெஸெஞ்சர் இன்று உலகம் முழுவதும் அதிகமாக பயன்படுத்தப் படும் செயலியில் ஒன்றாக உள்ளது. இந்த செயலியின் மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள், தொடர்புகள் மற்றும் தங்கள் இருப்பிடம் ஆகியவற்றைப் பிறருக்கு அனுப்பலாம்.

அதுமட்டுமில்லாமல் இணைய வசதி இருந்தால் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ அழைப்புகளையும் செய்யும் வசதி உள்ளது. இத்தனை வசதிகள் இருப்பதால் உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலியாக வாட்ஸ் ஆப் உள்ளது.

இன்று காலை முதல் டெல்லி உள்ளிட்ட சில பகுதிகளில் வாட்ஸ் ஆப்பில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்ப முடியாமல் முடக்கம் ஏற்பட்டது. இதுபற்றி வாடிக்கையாளர்கள் பலரும் முறையிட்டனர். ஆனால் வாட்ஸ் ஆப் எந்த பதிலும் தெரிவிக்க வில்லை.

இதையடுத்து வாடிக்கையாளர்கள் வாட்ஸ்ஆப் டௌன் என்ற ஹேஷ்டேக் உருவாக்கி ட்ரண்ட் செய்து வருகின்றனர். விரைவில் இந்த பிரச்சனைகள் சரியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.