Home Blog Page 5795

சிங்கள அரசு மீது குற்றச்சாட்டு; ஈழத்தமிழர்களுக்காக மத்திய அரசை எதிர்க்கும் ராமதாஸ்!!

0

சிங்கள அரசு மீது குற்றச்சாட்டு; ஈழத்தமிழர்களுக்காக மத்திய அரசை எதிர்க்கும் ராமதாஸ்!!

இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்த சிங்கள அரசு போர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. ஈழத்தமிழர் நலன் மற்றும் தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யாதபோது, இலங்கை ராணுவத்திற்கு பாதுகாப்பு கருவிகளை வாங்க 50 மில்லியன் டாலர் வழங்கப்படும் என இந்திய அரசு அறிவித்திருப்பது ஏன்..? என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிங்கள அரசு மீது குற்றச்சாட்டு; ஈழத்தமிழர்களுக்காக மத்திய அரசை எதிர்க்கும் ராமதாஸ்!!

இந்திய அரசின் நிதி சம்பந்தமான அறிவிப்பானது ஈழத்தமிழர்களுக்கு எதிரான செயல் என்றும், இதனால் ஈழத்தமிழர்கள் வருங்காலத்தில் சிங்கள அரசால் ஒடுக்கப்படும் ஆபத்து உள்ளது என்றும் எச்சரித்துள்ளார்.

தமிழக மற்றும் இலங்கை கடல் பகுதிகளில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களின் பாதுகாப்பு குறித்து இந்தியாவிற்கு அளித்த உறுதியை இலங்கை காப்பாற்றவில்லை. இத்தகைய சூழலில் இலங்கை அரசுக்கு பாதுகாப்பு கருவி வாங்க இந்தியா உதவ வேண்டிய தேவை என்ன..? என்றும் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிங்கள அரசு மீது குற்றச்சாட்டு; ஈழத்தமிழர்களுக்காக மத்திய அரசை எதிர்க்கும் ராமதாஸ்!!

ஈழத்தமிழர்களின் படுகொலை சம்பவத்தில் நேர்மையை கடைபிடிக்காத சிங்கள அரசிற்கு இந்தியா உதவ கூடாது. மேலும் உதவி வழங்கினால் அது போர் குற்றத்திற்கான வெகுமதியாகும், ஆகவே இலங்கைக்கு நிதி வழங்கும் இந்திய அரசு தனது முடிவை திரும்ப பெற வேண்டும் என்பதே தமிழர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

இந்த ஆண்டு சுந்தர் பிச்சையின் சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

0

இந்த ஆண்டு சுந்தர் பிச்சையின் சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

தமிழகத்தைச் சேர்ந்தவரான சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்திற்கும் அதன் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்துக்கு தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.

கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக செயல்பட்டு வரும் சுந்தர் பிச்சை உலகளவில் அதிக சம்பளம் பெறும் நிறுவனர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இதையடுத்து தற்போது அவர் ஆல்பாபெட் நிறுவனத்துக்கும் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதனால் அவரது சம்பளம் பல மடங்கு உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டுக்கான அவரது சம்பளம் பற்றிய விவரம் இப்போது வெளியாகியுள்ளது. இந்நிலையில் சுந்தர் பிச்சை 2020 ஆண்டுக்கு ரூ.14 கோடி சம்பளம் பெற இருக்கிறார். என்னடா இவ்வளவுக் கம்மியாக இருக்கிறது என யோசிக்கிறீர்களா ?.

இந்த ஆண்டு சுந்தர் பிச்சையின் சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

சம்பளம்தான் கம்மி. ஆனால் அவருக்கு கூகுள் நிறுவனத்தில் சுமார் 1700 கோடி ரூபாய் பங்கு தொகையாக பெற இருக்கிறார். இதற்கு முன்னதாக அவர் இருமுறை இதுபோல அவர் பங்குகளை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து.

கடந்த 2004 ஆம் ஆண்டு சுந்தர் பிச்சை அந்த நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு அவரது செயல்திறனைப் பார்த்து 10 வருடங்களிலேயே அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்திய அளவில் சிறந்த தொழில் முனைவோர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

ஜனவரி 19 முதல் 22 வரை ; அமேசான் கிரேட் பெஸ்டிவல் ஆபர் ! நம்ப முடியாத ஆஃபர்கள் !

0

ஜனவரி 19 முதல் 22 வரை ; அமேசான் கிரேட் பெஸ்டிவல் ஆபர் ! நம்ப முடியாத ஆஃபர்கள் !

அமேசான் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கான கிரேட் பெஸ்டிவல் ஆஃபர்களை அறிவித்துள்ளது.

அமேசான் நிறுவனம் அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களுக்காக அவ்வப்போது ஆஃபர்களை அள்ளி வீசி வருகிறது. அதேப்போல 2020 ஆம் ஆண்டு தொடங்கியதை அடுத்து தங்கள் வாடிக்கையாளர்களுக்கான முதல் பெஸ்டிவல் ஆபரை அறிவித்துள்ளது.

ஜனவரி 19 முதல் 22 வரை ; அமேசான் கிரேட் பெஸ்டிவல் ஆபர் ! நம்ப முடியாத ஆஃபர்கள் !

இன்று ஆரம்பித்துள்ள இந்த சேல் இன்று அமேசானின் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை அதாவது ஜனவரி 19 முதல் 22 வரை அனைத்து வாடிக்கையாளர்களுக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மொபைல், லேப்டாப் உள்ளிட்ட அனைத்து வகையான எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிகல் பொருட்களும் நம்ப முடியாத சிறப்பு தள்ளுபடி விலையில் விற்கப்படும் என அறிவித்துள்ளனர்.

சேலம் மாவட்ட வன்னியர்களை குறி வைக்கும் திமுக எம்பி! விழித்து கொள்ளுமா பாமக

0

சேலம் மாவட்ட வன்னியர்களை குறி வைக்கும் திமுக எம்பி! விழித்து கொள்ளுமா பாமக

வட தமிழகத்தில் அதிகமாக வசிக்கும் சமூகமான வன்னியர் சமூக மக்களின் ஆதரவு இல்லாமல் தமிழகத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆட்சியை பிடிக்க முடியாது என்பது பல வருடங்களாக நிரூபிக்கப்பட்டு வரும் உண்மை.

அந்த வகையில் வன்னியர் சமுதாய மக்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தை ஆரம்பித்து அந்த சமுதாய தலைவராக உருவெடுத்தார் மருத்துவர் ராமதாஸ். அவர் ஆரம்பித்த இந்த இட ஒதுக்கீடு போராட்டத்தின் மூலமாக அந்த சமுதாயம் மட்டுமல்லாமல் அத்துடன் சேர்த்து தமிழகம் முழுவதும் உள்ள 108 சமுதாயங்களை இணைத்து இட ஒதுக்கீட்டை அறிவித்தார் அப்போதைய முதல்வர் கருணாநிதி.

இட ஒதுக்கீடு போராட்டத்தை தொடர்ந்து மருத்துவர் ராமதாஸ் வன்னியர்கள் அரசியல் அங்கீகாரம் பெற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியை ஆரம்பித்தார். இதனால் வன்னியர் சமுதாய மக்கள் பெரும்பாலும் பாமகவை ஆதரிக்க தொடங்கினர். இதன் பிறகு தமிழகத்தில் நடந்த ஒவ்வொரு தேர்தலிலும் பாமக ஆதரவு பெற்ற கட்சிகளே ஆட்சியமைக்க முடிந்தது. ஆனால் சமீபத்தில் நடந்த சில தேர்தல்களில் அந்த எதிர்பார்ப்பு முறியடிக்கப்பட்டது.

பல ஆண்டுகளாக பாமகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட இரு பெரும் திராவிட கட்சிகள் அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க முடியாத சூழ்நிலையில் பாமக மாறி மாறி கூட்டணி அமைத்தது என்ற கடுமையான விமர்சனங்களை தொடர்ந்து வைத்தன. இதன் பலனாக பாமக சரிவை சந்தித்தது. பின்னர் நிலைமையை சமாளிக்க அன்புமணி ராமதாஸ் அவர்களை முதல்வர் வேட்பாளராக அறிவித்து தனியாக தேர்தலை சந்தித்தது.

இதன் மூலமாகவும் பாமகவின் தொடர்ச்சியான ஆக்க பூர்வமான செயல்பாடுகள் காரணமாகவும் இழந்த செல்வாக்கை தற்போது மக்கள் மத்தியில் பெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 7 இடங்களில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியை தழுவியது. ஆனால் அதே நேரத்தில் அப்போது நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி போதுமான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்து கொள்ள பாமகவின் வாக்குகள் பெரிதும் உதவியது.

மக்களவை தேர்தல் ஆரம்பித்தது முதல் திமுக அதிமுகவை விமர்சிப்பதை விட அதன் கூட்டணி கட்சியான பாமகவை வழக்கத்தை விட அதிகமாக விமர்சித்து வந்தது. குறிப்பாக தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் S.R. பார்த்திபன் உள்ளிட்டோர் பாமகவை கடுமையான முறையில் விமர்சனம் செய்தனர். அதே போல விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுகவை தோல்வியுறச் செய்ததில் பாமக பெரும்பங்கு வகித்தது.

தங்கள் வசம் இருந்த அந்த இரண்டு தொகுதிகளையும் திமுக அதிமுகவிடம் பறிகொடுத்தது. மேலும் முரசொலி அலுவலகம் தொடர்பான மூலப் பத்திர விவகாரத்தை கிளப்பி விட்ட பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அக்கட்சியை நீதி மன்றம் வரை இழுத்து சென்று விட்டது அக்கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் பாமகவின் வாக்கு வங்கியை குறி வைத்து திமுகவினர் செயல்பட ஆரம்பித்தனர்.

அந்த வகையில் நடந்து முடிந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் குறிப்பாக வன்னியர்கள் அதிமாக வசிக்கும் மேட்டூர்,எடப்பாடி போன்ற தொகுதிகளில் திமுகவை பலப்படுத்தும் வகையில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் S.R பார்த்திபன் சுற்று பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார். இந்த சுற்று பயணத்தின் போது அதிமுக மற்றும் பாமகவில் உள்ள வன்னியர்களை குறிப்பிட்டே பேசி வருகிறார்.

ஏற்கனவே இவர் வீர வன்னியர் பேரவை மற்றும் விஜயகாந்த் அவர்களின் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளில் பதவி வகித்து வந்துள்ளார்.மேலும் தேமுதிக சார்பாக எம்.எல்.ஏ வாகாவும் பதவி வகித்து வந்துள்ளதால் சேலம் மாவட்டத்தில் அவருக்கு ஓரளவு செல்வாக்கு உள்ளது. இதனை பயன்படுத்தி தன்னுடைய சமுதாயமான வன்னியர் சமுதாய மக்களை திமுகவிற்கு இழுக்கும் பணியை ஆரம்பித்துள்ளார்.

சேலம் மற்றும் தருமபுரி மாவட்டத்தில் பாமகவின் செல்வாக்கு வளர்ந்து வரும் நிலையில் இவரின் செயல்பாடு பாமக தொண்டர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பாமக அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது பிடிக்காமல் இருக்கும் தொண்டர்களை வைத்து காய் நகர்த்தும் திமுகவின் இது போன்ற செயல்பாடுகள் பாமகவின் வாக்கு வங்கியை அசைத்து பார்க்குமா? அல்லது அதற்குள் பாமக தலைமை விழித்து கொள்ளுமா? என்று காத்திருந்து பார்ப்போம்.

தோள்பட்டையில் அடி; களத்தில் இருந்து வெளியேறிய தவான் ! பேட்டிங் செய்வாரா ?

0

தோள்பட்டையில் அடி; களத்தில் இருந்து வெளியேறிய தவான் ! பேட்டிங் செய்வாரா ?

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆஸியும் இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் மூன்றாவது போட்டி இன்று தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்று ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது. முதலில் தடுமாற்றத்தை சந்தித்தாலும் பிறகு நிதானித்து ஆடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களான ஆரோன் பின்ச் மற்றும் டேவிட் வார்னரை குறைந்த ரன்களிலேயே இந்திய பவுலர்கள் அவுட் ஆக்கிவிட்டதால் ஆஸ்திரேலியாவின் ரன் ரேட் வழக்கத்தை விட குறைந்துள்ளது.

ஆனாலும் அதன் பின் ஜோடி சேர்ந்த ஸ்மித் மற்றும் லபுஷான் ஆகியோர் நிலைத்து நின்று ஆடி சரிவைத் தடுத்தனர். இந்நிலையில் களத்தில் பீல்டிங் செய்து கொண்டிருந்த போது தொடக்க ஆட்டக்காரர் ஷிகார் தவானுக்கு தோள்பட்டையில் அடிபட்டது. அதனால் அவர் களத்தில் இருந்து வெளியேறினார்.

அவருக்குப் பதிலாக இப்போது சஹால் பீல்ட் செய்து வருகிறார். ஆஸ்திரேலியா விளையாடும் வேகத்தைப் பார்த்தால் எப்படியும் இலக்கு 300 ஐ நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் ஷிகார் தவானின் பேட்டிங் இந்திய அணிக்கு இன்றியமையாதது. அதனால் அவர் பேட் செய்வாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதற்கிடையில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தனது 9 ஆவது சதத்தைப் பூர்த்தி செய்துள்ளார். சற்று முன்பு வரை ஆஸி அணி 6 விக்கெட்களை இழந்து 241 ரன்கள் சேர்த்துள்ளது.

பொங்கலுக்கு மட்டும் 600 கோடி வசூல்! கெத்து காட்டிய குடிகார புள்ளீங்கோ!!

0

பொங்கலுக்கு மட்டும் 600 கோடி வசூல்!
கெத்து காட்டிய குடிகார புள்ளீங்கோ!!

பொங்கல் பண்டிகை நாட்களில் மது விற்பனை குறித்த முழு தகவல் வெளியாகியுள்ளது. மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு என்று அடுக்கு மொழியில் அரசு விளம்பரம் செய்தாலும் ஒவ்வொரு வருடமும் மது குடிப்போர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. வயதானவர்கள் வேலை களைப்பு மற்றும் கவலை மறக்க குடித்த காலங்களை தாண்டி,

பொங்கலுக்கு மட்டும் 600 கோடி வசூல்! கெத்து காட்டிய குடிகார புள்ளீங்கோ!!

இன்று கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்களும் மதுவுக்கு அடிமையாக இருப்பது வேதனைக்குரியதாகும். தமிழகத்தில் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மது விற்பனை மிக ஜோராக நடந்துள்ளது. 16 ஆம் தேதி திருவள்ளுவர் தினம் மட்டும் மது கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. போகிப் பண்டிகை நாளில் 178 கோடி ரூபாயும், பெரும் பொங்களன்று 253 கோடி ரூபாயும், பொங்கல் பண்டிகையின் கடைசி நாளான காணும் பொங்களன்று 174 கோடி ரூபாய்க்கும் மது விற்பனை அமோகமாக நடந்துள்ளது.

பொங்கலுக்கு மட்டும் 600 கோடி வசூல்! கெத்து காட்டிய குடிகார புள்ளீங்கோ!!

தமிழகத்தில் எந்த விழா நடந்தாலும் அதில் மது இல்லாமல் நடப்பதே இல்லை. இந்த முறை அதிகபட்ச விற்பனையாக திருச்சி மண்டலத்தில் மட்டும் 143 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது. மேலும் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் மூன்றே நாட்களில் 605 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது. குறிப்பிட்ட நாட்களில் அதிக வருமானம் ஈட்டுவதில் மதுக்கடைகளே முன்னிலை வகிக்கிறது.

யார் அழகு? பிரபல நடிகையுடன் போட்டியிட பத்திரிக்கையாளர் பனிமலர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்

0

யார் அழகு? பிரபல நடிகையுடன் போட்டியிட பத்திரிக்கையாளர் பனிமலர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்

பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பின்னர் பல்வேறு சேனல்களில் பணியாற்றிய பனிமலர் தற்போது அரசியல் கட்சி ஒன்றின் ஆதரவு பெற்ற தொலைக்காட்சியில் முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார்.

கோயம்பத்தூர் பகுதியை சேர்ந்தவரான பனிமலர் திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் விவாகரத்து வாங்கி தனியாக வசித்து வருகிறார். பெரியார்வாதியான இவர் சமீபத்தில் ஒரு முறை பெரியார் இருந்திருந்தால் அவரையே திருமணம் செய்திருப்பேன் என கருத்து தெரிவித்து சர்ச்சையை கிளப்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து அவ்வப்போது சமூக வலைதளங்களில் சாதி மறுப்பு மற்றும் மதச்சார்பின்மை என்ற பெயரில் இவர் பதிவிடும் கருத்துக்கள் தொடர்ந்து ஒரு சாராரையே விமர்சனம் செய்து வருவதால் அந்த தரப்பினர் இவருடைய கருத்துக்கு எதிராக விமர்சனம் செய்து பதிவிடுவதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.

இந்நிலையில் பனிமலர் அவ்வப்போது சினிமா பிரபலம் போல ஏதாவது ஃபோட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருவதும் நடந்து வருகிறது. அந்த வகையில் அவர் சில புகைப்படங்களை பதிவிட்டிருந்தார்.

https://twitter.com/PanimalarPs/status/1218193336873340928?s=19
https://twitter.com/PanimalarPs/status/1218192880956628993?s=19

சமீபத்தில் அவ்வாறு அவர் பதிவேற்றிய ஒரு புகைப்படத்தை அவரது பின் தொடர்பாளர் ஒருவர் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷுடன் ஒப்பிட்டு பதிவிட்டுள்ளார். அதை பனிமலரும் தன்னுடைய சமூக வலைதளமான டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

https://twitter.com/PanimalarPs/status/1218386710758739968?s=19

ஏற்கனவே இவர் கடற்கரையில் சேலையில் உள்ளவாறு ஒரு கவர்ச்சி புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.வழக்கம் போலவே இந்த படத்திற்கும் ஆதரவு மற்றும் விமர்சன கருத்துக்கள் வந்த வண்ணமே உள்ளன.

தொடர்ந்து 21 ஓவர்கள் மெய்டன் செய்த சாதனை இந்திய வீரர் : 86 வயதில் மரணம் !

0

தொடர்ந்து 21 ஓவர்கள் மெய்டன் சாதனை இந்திய வீரர் : 86 வயதில் மரணம் !

இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் பபு நட்கர்னி தனது 86 ஆவது வயதில் மரணமடைந்துள்ளார்.

இந்தியக் கிரிக்கெட் அணிக்காக நாசிக் நகரில்  பிறந்தவர் பபு நட்கர்னி. 1955 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக 41 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். சிறந்த ஆல் ரவுண்டராக விளங்கிய இவர் 1414 ரன்களும் 88 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். அதுமட்டுமல்லாது 191 முதல் தர போட்டிகளிலும்  விளையாடி 500 விக்கெட்டுகள் மற்றும் 8880 ரன்களும் எடுத்துள்ளார். 

தொடர்ந்து 21 ஓவர்கள் மெய்டன் செய்த சாதனை இந்திய வீரர் : 86 வயதில் மரணம் !

இவரின் முறிக்கப்படாத சாதனையாக 1964ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் வீசிய 32 ஓவர்களில் 27  ஓவர்கள் மெய்டன் செய்தது இன்னும் முறியடிக்கபடாமல் உள்ளது. 27 மெய்டன்களில் 21 மெய்டன்களை தொடந்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த போட்டியில் வெறும் 5 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

86 வயதான அவர் சமீப காலமாக உடல்நலம் சரியில்லாமல் இருந்த பபு நேற்று இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு  முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சுனில் கவாஸ்கர் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சிறுமியிடம் அத்துமீறிய கணவன்; காப்பாற்ற நினைத்த மனைவி – போக்ஸோ சட்டத்தில் கைது !

0

சிறுமியிடம் அத்துமீறிய கணவன்; காப்பாற்ற நினைத்த மனைவி – போக்ஸோ சட்டத்தில் கைது !

சென்னையில் டியுஷனுக்கு வந்த சிறுமி ஒருவரிடம் தவறாக நடந்து கொண்ட கணவனைக் காப்பாற்ற நினைத்த மனைவியும் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆவடியில் உள்ளது அந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்பு. அதில் ஒரு வீட்டில் வசித்து வரும் தம்பதிகள் நரேஷ்(33) மற்றும் விஜயலட்சுமி(32). நரேஷ் ஆட்டோ ஓட்டுனராகப் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி விஜயலட்சுமி தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலைப் பார்த்து வருகிறார். விஜயலட்சுமி ஆசிரியையாக இருப்பதால் மாலை நேரங்களில் தனது வீட்டில் குழந்தைகளுக்கு டியுஷன் சொல்லிக் கொடுத்து வந்துள்ளார். அவரது டியுஷனுக்கு நிறைய சிறுமிகள் மற்றும் குழந்தைகள் வந்துள்ளனர்.

சிறுமியிடம் அத்துமீறிய கணவன்; காப்பாற்ற நினைத்த மனைவி – போக்ஸோ சட்டத்தில் கைது !

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் டியுஷனுக்கு வந்த 6 வயது சிறுமி ஒருவரிடம் விஜயலட்சுமியின் கணவர் நரேஷ் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டுள்ளார். இதனால் அந்த சிறுமி சத்தம் போட்டு அலற அவரை விட்டுள்ளார். சிறுமி அழுதுகொண்டே வீட்டுக்கு செல்ல அவரை அந்த கோலத்தில் பார்த்த பெற்றோர் பதறியுள்ளனர். அதே டியுஷனில் படிக்கும் சிறுமியின் சகோதரர் நடந்ததைப் பற்றி பெற்றோரிடம் சொல்லியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியான அவர்கள் உடனடியாக அருகிலுள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். புகாரைப் பெற்றுக் கொண்ட போலிஸார் நரேஷ் வீட்டுக்குச் சென்று பார்க்க கணவன் மனைவி இருவரும் தலைமறைவாகியுள்ளனர்.

இதனால் அவர்களைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அவர்களின் செல்போன் சிக்னல்கள் மூலம் பூந்தமல்லியில் உறவினர்கள் வீட்டில் தலைமறைவாக இருந்த. அவர்களைப் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இந்த சம்பவமானது ஆவடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள் வீடியோவைப் பார்த்தேன்; கே எல் ராகுலுக்கு எதிராக தோனி ரசிகர்கள் !

0

இவர்கள் வீடியோவைப் பார்த்தேன்; கே எல் ராகுலுக்கு எதிராக தோனி ரசிகர்கள் !

மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாட ஸ்மித் மற்றும் வில்லியம்சன் ஆகியோரின் வீடியோக்களைப் பார்த்துக் கற்றுக் கொண்டதாக சொன்ன கே எல் ராகுலுக்கு தோனி ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆஸியும் இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் இரண்டாவது போட்டியில் ரிஷப் பண்ட் காயமடைந்ததால் கே எல் ராகுல் 5 ஆவது வீரராகக் களமிறங்கினார்.

இவர்கள் வீடியோவைப் பார்த்தேன்; கே எல் ராகுலுக்கு எதிராக தோனி ரசிகர்கள் !

வழக்கமாக தொடக்க ஆட்டக்காரராக இறங்கும் கே எல் ராகுல் 5 ஆவது இடத்தில் இறங்கி 52 பந்துகளில் 80 ரன்களை சேர்த்து ஆட்டநாயகன் விருது பெற்றார். சூழ்நிலைக்கு தக்கவாறு தன்னைத் தகவமைத்துக் கொண்ட கே எல் ராகுலுக்கு பாராட்டுகள் கிடைத்துள்ளன.

நடுவரிசையில் இறங்குவது குறித்து பேசிய கே எல் ராகுல் ‘நடுவரிசையில் சிறப்பாக விளையாட நியுசிலாந்தின் கேன் வில்லியம்சன் மற்றும ஆஸியின் ஸ்மித் ஆகியோரின் வீடியோக்காளைப் போட்டு பார்த்தேன்.’ என ராகுல் கூறினார்.ராகுலின் இந்த பேச்சு தோனி சமூக வலைதளங்களில் கொந்தளிக்க ஆரம்பித்துள்ளனர்.

உலகிலேயே சிறந்த நடுவரிசை வீரர் என புகழப்படும் தோனி இருக்கையில் ஏன் ஸ்மித் வீடியோவையையும் வில்லியம்ஸன் வீடியோவையையும் பார்க்க வேண்டும். தோனி வீடியோ எல்லாம் பார்க்க மாட்டீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.