Home Blog Page 5796

தென் இந்தியாவில் தப்பித்த தர்பார் ! வட இந்தியாவில் மண்ணைக் கவ்வியது : கலக்கத்தில் விநியோகஸ்தர் !

0

தென் இந்தியாவில் தப்பித்த தர்பார் ! வட இந்தியாவில் மண்ணைக் கவ்வியது : கலக்கத்தில் விநியோகஸ்தர் !

தர்பார் திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றாலும் கையைக் கடிக்காத வசூல் வந்துள்ள நிலையில் வட இந்தியாவில் படுதோல்வி அடைந்துள்ளது.

பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான தர்பார் முதல் நாளிலேயே எதிர்மறை விமர்சனங்கள் பெற்றதால் கூட்டம் குறைய ஆரம்பித்தது. முதல் நாளின் மாலை மற்றும் இரவு காட்சிகளில் டிக்கெட்கள் சர்வ சாதாரணமாகக் கிடைக்க ஆரம்பித்தது. இதனால் முதல்நாள் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என சொல்லப்படுகிறது. இத்தனைக்கும் சிற்ப்புக்காட்சியின் டிக்கெட் விலை 1000 ரூபாயில் இருந்து 3000 ரூபாய் வரை விற்கப்பட்டது. இது அனுமதிக்க பட்ட விலையை பல மடங்கு அதிகமாகும்.

தமிழக திரையரங்குகள் மூலம் முதல் நாள் வசூலாக 16 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாக தெரிகிறது. இது வழக்கமாக ரஜினி படங்களின் வசூலை விட மிகக்குறைவு என சொல்லப்படுகிறது. ஆனால் தொடர் விடுமுறை இருந்ததால் ஓரளவு வசூல் வந்து கொண்டிருக்கிறது. இரு தினங்களுக்கு முன்னர் தர்பார் 200 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

தென் இந்தியாவில் தப்பித்த தர்பார் ! வட இந்தியாவில் மண்ணைக் கவ்வியது : கலக்கத்தில் விநியோகஸ்தர் !

படம் நன்றாக இல்லை என்ற விமர்சனங்கள் எழுந்தாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற திரையுலங்களில் சராசரியான வருவாய் வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியிலோ படம் படுதோல்வி அடைந்துள்ளது.  ரஜினி, முருகதாஸ், சுனில் ஷெட்டி என பாலிவுட் ரசிகர்களுக்கு தெரிந்த முகங்கள் இருப்பதால் அதிக தொகை கொடுத்த வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு இதுவரை 6 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தர்பார் தோல்விக்கு மற்றுமொரு காரணமாக பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிப்பில் தன்ஹாஜி : தி அன்சங் வாரியர் என்ற படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதால் தர்பார் திரைப்படத்துக்கு போதிய கவனம் கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு வெளியான பேட்ட திரைப்படமும் இந்தியில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

டோல்கேட்டில் துப்பாக்கி முனையில் முன்னாள் எம் எல் ஏ : மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் !

0

டோல்கேட்டில் துப்பாக்கி முனையில் முன்னாள் எம் எல் ஏ : மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் !

கரூர் – திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள மணவாசி சுங்கச்சாவடியில் முன்னாள் எம் எல் ஏ பாலபாரதி துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் பால பாரதி. இவர் கன்னியாகுமரி மாவட்டத்தின் முன்னாள் எம் எல் ஏ ஆவார். இவர் கும்பகோணத்தில் நடந்த குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றுவிட்டு ஈரோட்டில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக காரில் சென்றுள்ளார். அப்போது மணவாசி எனும் பகுதியில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் அவர் கார் நின்றபோது தனது முன்னாள் எம் எல் ஏ அட்டையைக் காட்டியுள்ளார்.

டோல்கேட்டில் துப்பாக்கி முனையில் முன்னாள் எம் எல் ஏ : மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் !

ஆனால் சுங்கச்சாவடி ஊழியர்கள் அவரிடம் அதை ஏற்க மறுத்து பணம் கட்ட வேண்டும் என வாக்குவாதம் செய்துள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. அப்போது ஊழியர் ஒருவர் இரட்டைக் குழல் துப்பாக்கியுடன் காரின் முன் மிரட்டுவது போல நின்றுள்ளார். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்த சுங்கச்சாவடி அருகே இருந்த புறக்காவல் நிலைய போலீஸார் வந்து பேச்சுவார்த்தை நடத்த பாலபாரதியை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவமானது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கனகராஜ் இதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில் சுங்கச்சாவடியில் துப்பாக்கியைப் பயன்படுத்த யார் அனுமதி கொடுத்தது என்றும் இது சம்மந்தமாக முதல்வர் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

அம்மா மற்றும் மகள் தகாத உறவால் நேர்ந்த கதி!

0

அம்மா மற்றும் மகள் தகாத உறவால் நேர்ந்த கதி!

வேலூர் கன்சால் பேட்டை பகுதியிலுள்ள ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்தவர் பரத். 36 வயதாகும் இவர் ஆட்டோ டிரைவராக பணி புரிந்து வருகிறார். மேலும் வேலூர் சாரதி மாளிகை அருகேயுள்ள ஆட்டோ ஸ்டாண்ட் சங்க தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். திருமணமான இவருக்கு மனைவி செல்வி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

வேலூர் சேண்பாக்கம் பகுதியிலுள்ள பர்மா காலனி பெரிய நகரை சேர்ந்தவர் தான் மைக்கேல். 27 வயதாகும் இவர் மக்கான் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்துள்ளார். அதே போல அந்த பெண்ணின் மகளுக்கும் ஆட்டோ டிரைவர் பரத்துக்கும் கள்ள தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த கள்ளத் தொடர்பு காரணமாக பரத் மற்றும் மைக்கேல் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் ஆட்டோ டிரைவர் பரத் புதியதாக வீடு கட்டி வந்திருக்கிறார். இந்நிலையில் வேலை முடிந்த அவரது வீட்டிற்கு கிரகப்பிரவேசம் நடந்ததுள்ளது. கிரகப்பிரவேசம் முடிந்த பிறகு சிறிது நேரம் கழித்து பரத் பெரியார் நகர் நோக்கி சென்றுள்ளார்..

அப்போது அங்கிருந்த மைக்கேலுக்கும் இவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.  ஒரு வழியாக பிரச்சினை முடிந்த பிறகு பரத் அங்கிருந்து சில அடி தூரம் நடந்து சென்றுள்ளார். ஆனால் அவரை விடாமல் பின்தொடர்ந்து துரத்தி சென்ற மைக்கேல் இரும்பு கம்பியால் பரத்தின் தலையில் பலமாக தாக்கியுள்ளார்.

அம்மா மற்றும் மகள் தகாத உறவால் நேர்ந்த கதி!

இந்த அடியில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் பரத் கீழே சரிந்து விழுந்துள்ளார். இருந்தாலும் ஆத்திரம் தீராத மைக்கேல் தொடர்ந்து அவரை இரும்பு கம்பியை கொண்டு தொடர்ந்து கடுமையாக தாக்கியுள்ளார்.  

இதனால் அடிபட்ட பரத் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார். இதுபற்றி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் பரத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து கொலையாளி மைக்கேலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கிரகப்பிரவேசம் முடிந்த அடுத்த சில மணி நேரத்தில் கள்ளதொடர்பால் ஆட்டோ டிரைவர் பரத் என்பவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்மா மற்றும் மகள் வைத்திருந்த தகாத உறவினால் ஏற்பட்ட இந்த கொலை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாநாடு படத்துக்காக சிம்பு செய்யும் வேலை : நம்பலாமா ? என ரசிகர்கள் கேள்வி !

0

மாநாடு படத்துக்காக சிம்பு செய்யும் வேலை : நம்பலாமா ? என ரசிகர்கள் கேள்வி !

மாநாடு படத்துக்காக சிம்பு கடினமாக உடல் பயிற்சி செய்து சிக்ஸ் பேக் கொண்டு வரப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சிம்புவை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், அந்த படம் முடியும் வரை வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு தான் இருப்பார்கள். அந்த அளவுக்கு சிம்பு டார்ச்சர் கொடுப்பார் என்றும் படப்பிடிப்புக்கு குறித்த நேரத்தில் வரமாட்டார் என்றும் அவர் மீது பரவலாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது. சிம்புவால் அன்பானவன் அடங்காதவன் அசராதவன், வல்லவன் உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டு புகார் செய்தது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் மீண்டும் மீண்டும் தயாரிப்பாளர்கள் தாமாகவே அவரைத் தேடிச் சென்று பின்னர் ஏமாறுவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில் சிம்பு நடிப்பில் ‘மாநாடு’ என்ற படத்தை தயாரிக்க திட்டமிட்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்ச. சிறுபட தயாரிப்பாளராக இருந்த அவருக்குப் பலரும் சிம்பு படம் வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர். ஆனாலும் துணிந்து இறங்கினார் சுரேஷ் காமாட்சி. ஆரம்பகட்ட பணிகளுக்காகவே ஒருசில கோடிகளை செலவு செய்தார். இருப்பினும் இந்த படத்தின் படப்பிடிப்புக்கு திட்டமிட்டபடி வராமல் இழுத்தடித்து வந்தார். இடையில் உடல் எடையைக் குறைப்பதற்காக வெளிநாடுகளுக்கு சென்றுவந்தார். ஆனால் உடை எடையில் எந்த மாற்றமும் இல்லஒ.

மாநாடு படத்துக்காக சிம்பு செய்யும் வேலை : நம்பலாமா ? என ரசிகர்கள் கேள்வி !

சிம்புவின் இம்சைகளால் படத்தை கைவிடுவதாக சுரேஷ் காமாட்சி அறிவித்தார். இதனால் சிம்புவின் இமேஜ் மேலும் டேமேஜ் ஆக, சிம்புவின் தாயார் சிம்பு கண்டிப்பாக மாநாடு படத்தில் நடிப்பார் என அறிவித்தார். இதையடுத்து இதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்ட்டார் சிம்பு என தகவல்கள் பரவின. இந்த செய்தியை உறுதிப்படுத்துவது போல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிம்புவோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ‘விரைவில் சிம்புவின் மாநாடு படப்பிடிப்பு தொடங்கும்’ என அறிவித்துள்ளார்.

இப்போது ஒருவழியாக இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது மாநாடு பணிகள். இம்மாத இறுதியில் படம் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போது சிம்பு ராப்பகலாக கஷ்டப்பட்டு சிக்ஸ்பேக் உடற்கட்டைக் கொண்டுவர முயற்சி செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன, ஆனால் இதை நம்பலாமா வேண்டாமா என்ற யோசனையில் உள்ளனர் ரசிகர்கள்.

சிம்பு, முஃப்தி , மகா முஃப்தி , மாநாடு, ஞானவேல்ராஜா, simbu, mufti, drop, சுரேஷ் காமாட்சி, வெங்கட் பிரபு.

மீண்டும் பால் விலை உயர்வு : தனியார் நிறுவனங்கள் முடிவு ! பொதுமக்கள் தலையில் மேலும் சுமை !!

0

மீண்டும் பால் விலை உயர்வு : தனியார் நிறுவனங்கள் முடிவு  ! பொதுமக்கள் தலையில் மேலும் சுமை !!

வரும் 20 ஆம் தேதி முதல் தனியார் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தப்பட உள்ளன.

தமிழகத்தில் அரசு நிறுவனமான ஆவின் தவிர, ஆரோக்யா, ஹெரிட்டேஜ், திருமலா உள்ளிட்ட தனியார் நிறுவனங்களும் பால் விநியோகம் செய்து வருகின்றன. பால் உற்பத்தியாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான பால் உற்பத்தி விலையை உயர்த்தி கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.

அதேசமயம் பால் விற்பனை விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி பால் உற்பத்தியாளர்களுக்கு பசும்பால் விலையை 4 ரூபாய் உயர்த்தியும், எருமை பால் விலையை 6 ரூபாய் உயர்த்தியும் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. விற்பனை விலையை 6 ரூபாய் அதிகப்படுத்தி இருந்தது. இதனால் பொதுமக்கள் மேல் அதிக சுமை விழுந்தது. இதையடுத்து தனியார் நிறுவனங்களும் தங்கள் பால் விலையை உயர்த்தினர்.

பால் விலையை உயர்த்தி ஒரு ஆண்டு கூட ஆகாத நிலையில் மக்களின் மீதான சுமையை உயர்த்தும் வன்ணம் ஆரோக்யா, ஹெரிட்டேஜ் உள்ளிட்ட நிறுவனங்கள் அனைத்தும் வரும் 20 ஆம் தேதி முதல் பால்விலை லிட்டருக்கு 4 ரூபாய் விலை உயர்த்த உள்ளனர். அதேப்போல தயிர் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும் உயர்த்த முடிவு செய்துள்ளனர்.

இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மேல் அதிக சுமை விழும் சூழல் உருவாகியுள்ளது.

ரிலிஸுக்கு முன்பே 200 கோடி வியாபாரம் – கோலிவுட்டை வியக்க வைத்த மாஸ்டர் !

0

ரிலிஸுக்கு முன்பே 200 கோடி வியாபாரம் – கோலிவுட்டை வியக்க வைத்த மாஸ்டர் !

விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ரிலிஸுக்கு முன்னதாகவே 200 கோடி ரூபாய் வியாபாரம் செய்து சாதனை படைத்துள்ளது.

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. காரணம் விஜய்யின் சமீபத்திய வெற்றிகள் அவரை கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக மாற்றியுள்ளன. அதேபோல இயக்குனர் லோகேஷ் கனகராஜும் கைதி படத்தின் மூலம் நம்பிக்கை இயக்குனராக உருவெடுத்துள்ளார்.

ரிலிஸுக்கு முன்பே 200 கோடி வியாபாரம் – கோலிவுட்டை வியக்க வைத்த மாஸ்டர் !

மாஸ்டர் திரைப்படத்தில் விஜயுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்டனி வழியே மற்றும் சாந்தனு பாக்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இதன் முதல் லுக் போஸ்டர் புத்தாண்டின் போது வெளியாகி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றது. அதே சமயம் அது ஹாலிவுட் படம் ஒன்றின் போஸ்டரின் காப்பி எனவும் கேலி செய்யப்பட்டது.

தற்போது கர்நாடகாவில் மாஸ்டர்  படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக செகண்ட் லுக் போஸ்டர் பொங்கல் பண்டிகையன்று மாலை 5 மணிக்கு ’மாஸ்டர்’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதுவும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

கோடை விடுமுறைக்கு வெளியாகும் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளதால் விநியோகஸ்தர்கள் மத்தியில் மிகப்பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்னும் ஷூட்டிங்கே முடியாத நிலையில் இதுவரை 200 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனமே அறிவித்துள்ளது. இத்தகைய இமாலய வியாபாரத்தைப் பார்த்து கோலிவுட்டே மூக்கில் விரல் வைத்துள்ளது.

விஷாலால் தான் செய்த தவறு ; கண்டுபிடித்து ரூட்டை மாற்றிய சுந்தர் சி !

0

விஷாலால் தான் செய்த தவறு ; கண்டுபிடித்து ரூட்டை மாற்றிய சுந்தர் சி !

விஷாலுக்காக ஆக்‌ஷன் திரைப்படம் இயக்கி படுதோல்வி அடைந்த நிலையில் மீண்டும் தன்னுடைய களமான காமெடியில் இறங்கவுள்ளார் சுந்தர் சி.

சுந்தர் சி எப்போதும் அந்தந்த காலத்தில் டிரண்ட் ஆக எந்த ஜானர் படங்கள் இருக்கிறதோ அதில் நுழைந்து வெற்றி காண்பார். காமெடி படங்களை இயக்கிய அவர் பேய் ட்ரண்ட் உருவானதை அடுத்து தனது காமெடிக் கதைகளில் பேயை நுழைத்துக் கொண்டு வெற்றிப் படங்களை கொடுக்க ஆரம்பித்தார்.

விஷாலால் தான் செய்த தவறு ; கண்டுபிடித்து ரூட்டை மாற்றிய சுந்தர் சி !

ஆனாலும் எப்போதும் தனது படங்களில் காமெடிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆக்‌ஷனைக் கொஞ்சம் அடக்கி வாசிப்பவர். ஆனால் முதன் முதலாக முழுக்க முழுக்க ஆக்‌ஷன் களத்தில் அவர் இயக்கிய ஆக்‌ஷன் படம் படுதோல்வி அடைந்தது. சுந்தர் சி யை நம்பி வந்த ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தது. இதனால் கடும் அப்செட்டான சுந்தர் சி இப்போது தனது தவறை உணர்ந்துள்ளார்.

விஷாலுக்காக ஒரு ஆக்‌ஷன் திரைப்படம் எடுக்க முடிவு செய்த தவறை உணர்ந்த அவர் இப்போதைக்கு ஆக்‌ஷன் கதைகள் வேண்டாம் என முடிவு செய்துள்ளார். இதையடுத்து தனது ஹிட் ரூட்டான காமெடிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். அரண்மனை 1, அரண்மனை 2 வரிசையில் இப்போது அரண்மனை 3 எடுப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இந்த படத்தில் ஆர்யா, யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்க இருக்கின்றனர். மற்ற நடிகர் நடிகையர் விவரம் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

97 வயதில் இந்த பாட்டி செய்துள்ள சாதனை ! உள்ளாட்சித் தேர்தல் சுவாரஸ்யம் !

0

97 வயதில் இந்த பாட்டி செய்துள்ள சாதனை ! உள்ளாட்சித் தேர்தல் சுவாரஸ்யம் !

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 97 வயது பாட்டி ஒருவர் வெற்றி பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த வாரம் நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. சிகார் மாவட்டத்தில் உள்ள புராணவாஸ் கிராமப் பஞ்சாயத்து தலைவர் தேர்தல் முடிவுகளின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஒரு பாட்டி ஈர்த்துள்ளார்.

பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு 97 வயது வித்யா தேவி எனும் அந்த பாட்டி போட்டியிட ஊரே அவரை ஆச்சர்யமாகப் பார்த்தது. அவரோடு சேர்த்து மொத்தம் 11 பேர் அந்த பதவிக்குப் போட்டியிட்டனர். ஆனாலும் அசராத பாட்டி தீவிரமாக தேர்த பிரச்சாரத்தில் ஈடுபட்டு முடிவுகளுக்காகக் காத்திருந்தார்.

இந்நிலையில் நேற்று முடிவு அறிவிக்கப்பட்ட நிலையில் வித்யா தேவி அனைவரும் ஆச்சர்யப்படும் விதமாக  803 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் அவரை விட கம்மியான வாக்குகளே பெற்றனர். இந்த வெற்றியின் மூலம் மிக அதிக வயதில் தேர்தலில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையை அவர் நிகழ்த்தியுள்ளார். அவரின் வெற்றியை அந்த ஊர்மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதற்கு முன்னதாக 30 ஆண்டுகளுக்கு முன்னர் அவரது கணவர் அதே ஊர் பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தகக்து.

ஆஸ்திரேலிய காட்டில் துளிர்விடும் மரங்கள்; கருணை காட்டும் இயற்கை!!

0

ஆஸ்திரேலிய காட்டில் துளிர்விடும் மரங்கள்; கருணை காட்டும் இயற்கை!!

பருவநிலை மாற்றத்தால் உண்டான ஆஸ்திரேலிய  காட்டுத்தீயில் பல லட்சம் உயிர்கள் தீயில் கருகியதை உலகமே சோகத்துடன் பார்த்தது. தீயில் போராடிய கரடி குட்டியை காப்பாற்றும் வீடியோ, பல்வேறு உயிர்கள் எருந்து அப்படியே வீழ்ந்து கிடப்பதை பார்த்து உலகமே கண்ணீர் விட்டது. காட்டு உயிரினங்களையும், பழங்குடியினரையும் இச்சம்பவம் அதிகம் பாதித்தது.

ஆஸ்திரேலிய காட்டில் துளிர்விடும் மரங்கள்; கருணை காட்டும் இயற்கை!!

தற்போது காட்டுத்தீ ஏற்பட்ட சில இடங்களில் மரங்கள் துளிர் விட ஆரம்பித்துள்ளது. துளிர்விடும் மரங்களை மேரி வூர்விண்டி என்ற புகைப்பட கலைஞர் படம்பிடித்து தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  அந்த புகைப்படங்களால் பார்க்கும் பலருக்கும் ஆறுதல் ஏற்பட்டு புகைப்பட கலைஞரை பாராட்டி வருகிறார்கள்.

ஆஸ்திரேலிய காட்டில் துளிர்விடும் மரங்கள்; கருணை காட்டும் இயற்கை!!

இதுபோலவே, அமேசான் காட்டில் சில மாதங்களுக்கு முன்பு பயங்கரமான காட்டுத்தீ ஏற்பட்டது. பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட இச்சம்பவமும் மக்களிடையே பெரும் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியது. இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற கூடாது என்றும், நல்ல மழை பொழிந்து காட்டில் இருக்கும் உயிர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே பலரின் ஆவலாக இருந்து வருகிறது.

இதுபோன்ற சம்பவங்கள் பூமியில் வாழும் உயிர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகவே அமையும் என்று இயற்கை வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஆஸ்திரேலிய காட்டில் துளிர்விடும் மரங்கள்; கருணை காட்டும் இயற்கை!!

கூட்டணி பற்றி வெளியில் பேசாதிங்க! உடன்பிறப்புகளுக்கு ஸ்டாலின் அட்வைஸ்!!

0

கூட்டணி பற்றி வெளியில் பேசாதிங்க! உடன்பிறப்புகளுக்கு ஸ்டாலின் அட்வைஸ்!!

காங்கிரஸ் திமுக இடையேயான கூட்டணி விவகாரம் சமீப நாட்களாக சர்ச்சையாக இருந்து வந்தது. பாஜகவிற்கு எதிரான நிலைப்பாடு கொண்ட அனைத்து எதிர்கட்சி கூட்டத்தினை காங்கிரஸ் நடத்திய டெல்லி மாநாட்டில் திமுக கலந்துகொள்ளவில்லை.

கூட்டணி பற்றி வெளியில் பேசாதிங்க! உடன்பிறப்புகளுக்கு ஸ்டாலின் அட்வைஸ்!!

இதையடுத்து, திமுக கலந்து கொள்ளாதது குறித்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில் திமுக, காங்கிரஸ் இடையே சர்ச்சை வெடித்தது. திமுக பொருளாளர் துரைமுருகன் காங்கிரசை ஒரு பொருட்டாகவே கண்டுகொள்ளவில்லை என்பதுபோல் அவரது பேட்டியில் கூறினார்.
காங்கிரஸ் திமுக கூட்டணி குறித்த கேள்விக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும் என டி.ஆர்.பாலு கூறியதும் இரு கட்சியினரிடையே வெறுப்பை ஏற்படுத்தியது.

கூட்டணி பற்றி வெளியில் பேசாதிங்க! உடன்பிறப்புகளுக்கு ஸ்டாலின் அட்வைஸ்!!

இந்த பிரச்சினை குறித்து அதிமுக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் காங்கிரஸ் கட்சி தன்மானத்துடன் செயல்பட வேண்டும் என்று போடு போட்டார். அதன் விளைவே இன்று ஸ்டாலின் பொதுவில் பேசும் அளவிற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினை தொடர்பாக ஸ்டாலின் வெளிட்ட அறிக்கையில் கூறியதாவது:

கூட்டணி பற்றி வெளியில் பேசாதிங்க! உடன்பிறப்புகளுக்கு ஸ்டாலின் அட்வைஸ்!!

திமுக மற்றும் காங்கிரஸ் இடையே எந்த கருத்து வேறுபாடும் கிடையாது என்றும், திமுகவின் முடிவுகளுக்கு தமிழக காங்கிரஸ் ஆதரவளிக்கும் என்றும் இனி கருத்து வேறுபாடு என்கிற பேச்சுக்க இடமில்லை என்பது போல கே.எஸ்.அழகிரி தன்னை சந்தித்து பேசி உள்ளதாகவும் கூறியுள்ளார்.

கூட்டணி பற்றி வெளியில் பேசாதிங்க! உடன்பிறப்புகளுக்கு ஸ்டாலின் அட்வைஸ்!!

திமுகவின் கூட்டணி குறித்து பொதுவில் யாரும் எந்த கருத்தும் கூற வேண்டாம் என்றும், திமுக கூட்டணியில் சிறு ஓட்டையாவது விழாதா என்று சிலர் நமக்குள் பிரிவினையை ஏற்படுத்த காத்திருக்கின்றனர். எந்த விமர்சனத்திற்கும் இனி இடம் கொடுக்க வேண்டாம் அதை நான் துளியும் விரும்பவில்லை எனவும் அறிக்கையில் கூறியுள்ளார்.