Home Blog Page 5802

உங்களுக்கு எல்லாம் குடும்பமே இல்லையா ? ஆபாச செய்தி அனுப்பிய ரசிகருக்கு நடிகை கேள்வி !

0

உங்களுக்கு எல்லாம் குடும்பமே இல்லையா ? நடிகைக்கு ஆபாச செய்தி அனுப்பிய ரசிகருக்கு நடிகை கேள்வி !

நடிகை நந்திதா ஸ்வேதாவுக்கு ரசிகர் ஒருவர் ஆபாச செய்தி அனுப்பியதை அடுத்து அதைப் பகிர்ந்து புலம்பியுள்ளார் அவர்.

நடிகை நந்திதா அட்டகத்தி, எதிர் நீச்சல்,இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி ஆகியப் படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் சமூகவலைதளங்களில் தீவிரமாக செயல்படுவர். இப்போது பெரிதாக பெரிய வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார். இந்நிலையில் இவரைப் பின் தொடர்ந்த ரசிகர் ஒருவர் ஆபாச செய்தி அனுப்பியதாக குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

உங்களுக்கு எல்லாம் குடும்பமே இல்லையா ? ஆபாச செய்தி அனுப்பிய ரசிகருக்கு நடிகை கேள்வி !

வாஞ்சி செழியன் என்பவர் எப்படியோ அவரது மொபைல் எண்ணைக் கண்டுபிடித்து தொடர்ந்து ஆபாசமான செய்திகளை அனுப்ப ஆரம்பித்துள்ளார். இதனால் மன வேதனை அடைந்த நந்திதா இதுபற்றி சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தனது ஸ்டேட்டஸாக அவரது ஆபாச மெஸேஜ்களை வைத்த நந்திதா மேலும் ‘எப்படி இவ்வாறெல்லாம் இவர்களால் மெஸேஜ் அனுப்ப முடிகிறது.  இது போன்ற நபர்களை என்ன செய்வது இவர்களுக்கெல்லாம் குடும்பம், குழந்தை எதுவுமே இல்லையா? ’ எனப் புலம்பியுள்ளார்.

சமூகத்தில் சாதாரண பெண்களுக்குதான் ஆண்களால் பாதுகாப்பு இல்லை என்றால் இதுபோல பிரபலமான பெண்களும் நிம்மதியாக இருக்க முடியாத வண்ணம் கொடூரர்களாக சிலர் இருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது.

பொன்னியின் செல்வன் ; தாய்லாந்து ஷூட்டிங் ஓவர் – இந்தியா திரும்பிய படக்குழு !

0

பொன்னியின் செல்வன் ; தாய்லாந்து ஷூட்டிங் ஓவர் – இந்தியா திரும்பிய படக்குழு !

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்து வந்த நிலையில் இப்போது படக்குழு சென்னைக்குத் திரும்பியுள்ளது.

1950 ஆம் ஆண்டு வெளியான கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் வெகுஜன இலக்கியத்தில் ஆல் டைம் கிளாசிக் நாவலாக இருந்து வருகிறது. இந்த நாவலைப் படமாக்க எம்.ஜி.ஆர், கமல் ஆகியோர் முயற்சி செய்து முடியாமல் கைவிட்டனர். அதன் பின் மணிரத்னம் இரு முறை முயற்சி செய்து பட்ஜெட் காரணமாக கைவிட்டார். இந்நிலையில் கடந்த ஆண்டு இந்தியாவின் பல மொழிகளில் திறமையான நடிகர்களை உள்ளடக்கி படத்தை ஆரம்பித்தார்.

இதையடுத்து நட்சத்திர பட்டாளத்தோடு தாய்லாந்தில் கடந்த ஒரு மாத காலமாக படப்பிடிப்பை நடத்தினார் மணிரத்னம். அதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்து படக்குழு இந்தியா திரும்பியுள்ளது.

அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்க உள்ளதாக தெரிகிறது. அதற்கான திட்டமிடல் மற்றும் வி எஃப் எக்ஸ் காட்சிகள் சம்மந்தமான ஆலோசனை இப்போது நடைபெற்று வருகிறது. இதையடுத்து நடிகர்கள் அனைவரும் இந்த இடைவேளையில் தங்களின் வேறு வேலைகளைக் கவனிக்க உள்ளனர். பொன்னியின் செல்வன் படத்துக்காக நடிகர் நடிகைகள் தங்கள் உடல் தோற்றங்களை மாற்றிக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏன் டைவ் அடிக்கவில்லை என இப்போதும் யோசிக்கிறேன் ! உலகக்கோப்பை ரன் அவுட் குறித்து வருத்தப்படும் தோனி !

0

ஏன் டைவ் அடிக்கவில்லை என இப்போதும் யோசிக்கிறேன் ! உலகக்கோப்பை ரன் அவுட் குறித்து வருத்தப்படும் தோனி !

இந்தியா உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேற முக்கியக் காரணமாக இருந்த தன்னுடைய ரன் அவுட் குறித்து தோனி இப்போது பேசியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக தோனியின் ஆட்டம் மந்தமாக இருந்து வருகிறது. முக்கியமான போட்டிகளில் அவர் ரன்கள் சேர்க்க அதிகப் பந்தை எடுத்துக் கொள்வது விமர்சனங்களுக்கு உள்ளானது. இது குறித்து சச்சின் கூட தோனி மேல் விமர்சனம் வைத்தார்.

இந்நிலையில் உலகக்கோப்பையின் அரையிறுதிப் போட்டியிலும் இதுபோல மந்தமாக விளையாடிய தோனி அந்தப் போட்டியில் ரன் அவுட் ஆனார். வழக்கமாக தோனி விக்கெட்களுக்கு இடையே வேகமாக ஓடுபவர் என்பதால் அவர் ரன் அவுட் ஆவது மிகவும் அபூர்வமானது. ஆனால் அந்த ரன் அவுட்டின் போது அவர் டைவ் அடித்திருந்தால் தன் விக்கெட்டை இழந்திருக்க மாட்டார்.

அதுதான் தோனி இந்தியாவுக்காக கடைசியாக ஆடிய போட்டி. அதன் பின் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. எதிர்வரும் டி 20 உலகக்கோப்பையில் அவர் தேர்வாவதற்காக அறிகுறி எதுவும் தெரியவில்லை. இந்நிலையில் தோனி ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் ‘எனது முதல் போட்டியிலும் ரன் அவுட் ஆனேன்,, நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதி போட்டியிலும் ரன் அவுட் ஆனேன்.  அந்த போட்டியில் தாம் ஏன் டைவ் அடிக்கவில்லை என்று இப்போதும் யோசித்துக் கொண்டு இருக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

நியுசிலாந்துக்கு எதிரான டி 20 தொடருக்கான டி 20 அணியிலும் தோனி சேர்க்கப்படவில்லை என்பது அவரது ரசிகர்களுக்கு மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடல் அடைப்பான் நோய்; தையல் பிரிந்து தொப்புள் வழியாக வெளியேறிய மலம் ! சிறுவனுக்கு மறுபிறவி கொடுத்த மருத்துவர்கள் !!

0

குடல் அடைப்பான் நோய்; தையல் பிரிந்து தொப்புள் வழியாக வெளியேறிய மலம் ! சிறுவனுக்கு மறுபிறவி கொடுத்த மருத்துவர்கள் !!

குடல் அடைப்பான் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவனை 25 நாட்கள் போராடி காப்பாற்றியது குறித்து தஞ்சாவூர் அரசு மருத்துவர் தனது முகநூலில் பதிவு செய்துள்ளார்.

மருத்துவர் பிரகாஷ் ராஜேந்திரனின் பதிவு :-

12 வயது சிறுவன் வயிற்று வலிக்காக, பட்டுக்கோட்டை யில் இருந்து அனுப்பி இருந்தார்கள். எங்கள் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு… பரிசோதனையில் வயிறு வீங்கி இருந்தது , இதய துடிப்பு மிக அதிகமாக இருந்தது , மேலும் நீர் சத்து குறைந்து ஷாக் என்ற நிலையில் இருந்தான்.

உடனே அவனுக்கு நெரம்பு வழியாக க்ளுகோஸும் ஆன்டி பையோட்டிக் மருந்தும் செலுத்தி ரத்த அழுத்தத்தை சரி செய்தோம். மேலும் வயிறு வீங்கி போனது. ஸ்கேன் எடுத்ததில் குடல் அடைப்பு இருப்பதாகவும் ஆனால் காரணம் தெரிய வில்லை என்று வந்தது.ரிஸ்க் அனைத்தையும் தெளிவு படுத்திவிட்டு அறுவை சிகிச்சைக்கு தயார் செய்தோம். வயிற்றை கிழித்த வுடன் சுமார் 1 லிட்டர் அழுகிய ரத்தம் வெளியே வந்தது. பின்னர் குடல் அழுகி இருப்பதை கண்டுபுடித்தோம். சிறு குடல் கிட்டத்தட்ட 100 சென்டி மீட்டர் அழுகி இருந்தது. அழுகிய குடலை வெட்டி எடுத்து விட்டு ,

சிறு குடலையும் பெரு குடலையும் ஒன்றோடு ஒன்று சேர்க்கும் அறுவை சிகிச்சை செய்தோம்.  குடல் அழுக காரணம். வாழ்வுலஸ் என்று கண்டுபிடித்தோம் , அப்படியென்றால் ரத்த ஓட்டம் தடை பட்டு குடல் அழுகி போவது என்று அர்த்தம் . அறுவை அரங்கம் முழுவதும் மூன்று நாட்களுக்கு துர்நாற்றம் வீசியது. குடல் அறுவை சிகிச்சை செய்தால் 5 நாட்களுக்கு உணவு கிடையாது.Icu இல் வைத்து இரவு பகலாக பயிற்சி மருத்துவரும் , செவிலியர்களும் கவனித்து கொண்டனர்.

மெதுவாக உடல் தேறியது .6 வது நாள் காத்து பிரிந்த பிறகு தண்ணியும் இளநீரும் கொடுக்க ஆரம்பித்தோம். சிறு குடல் 80 சதவீதம் இல்லாததால் , வயிற்று போக்கு ஏற்பட்டு மிக சிரமம் ஏற்பட்டது. 9 ஆம் நாள் இட்லி , சாதம் ஆரம்பித்தோம். 11 நாள் யாரும் எதிர்பார்க்காதது நடந்தது. தையல் போட்ட தொப்புள் பகுதியில் இருந்து மலம் வர ஆரம்பித்தது. உள்ளே தைத்து வைத்த குடல் தையல் விட்டு போயுடுச்சுனு அர்த்தம். மலம் வயிற்று மேலே வருவதை பார்த்து சிறுவனின் அம்மா கதறி அழுதார்.

பிறகு அறுவை சிகிச்சை இல்லாமல் ,நெரம்பு மூலம் சத்து மருந்து , மற்றும் உணவில் உள்ள சத்துக்கள் கலந்த விசேஷ நெரம்பு மருந்துகள் செலுத்தியதில் ,தொப்புள் அருகே வந்த மலம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. ஒரு கட்டத்தில் நார்மலாக மலம் கழிக்க ஆரம்பித்தான். உடல் தேறி , இன்று வீட்டுக்கு போறான் தம்பி

இது மறுபிறவி இவனுக்கு. கிட்டத்தட்ட 25 நாட்கள் எங்கள் வார்டில் இருந்துள்ளான். இவர்களுக்கு ஒரு ருபாய் கூட செலவு இல்லை. இந்த அறுவை சிகிச்சை மற்றும் கவனிப்பின் மதிப்பு தனியார் மருத்துவமனையில் 10 முதல் 12 லட்ச ருபாய் இருக்கும்

அரசு மருத்துவமனையில் முற்றிலும் இலவசம் …

இது போல அரசு மருத்துவமனையில் பல உயிர்கள் வருடம் முழுவதும் காப்பாற்றப்படுகிறது. என்ன ஒன்று. இதை யாரும் வெளியே சொல்வது இல்லை, விளம்பரம் செய்வதும் இல்லை …

மரு . பிரகாஷ் ராஜேந்திரன்

தஞ்சாவூர்

நிம்மதியான வாழ்க்கைக்கு நிரந்தரமான சில வழிகள்..!!!

0

நிம்மதியான வாழ்க்கைக்கு  நிரந்தரமான சில வழிகள்..!!!

ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் பணம், பொருள் மற்றும் பல வசதி வாய்ப்புகளை அடைந்தாலும், கடைசிவரை நிம்மதியை மட்டும் தேடிக் கொண்டிருக்கிறான். ஏனெனில், அந்த நிம்மதிதான் பலரின் வாழ்க்கையை பயனுள்ளதாகவே வைத்துள்ளது.
“சாப்பிடும் போதும், சாகும் போதும்” மனிதனுக்கு நிம்மதி வேண்டும் என்று ஒரு சொலவடை உண்டு..!

நிம்மதியான வாழ்க்கைக்கு நிரந்தரமான சில வழிகள்..!!!

நிரந்தரமான நிம்மதிக்கு சில வழிகள் :

*  உங்களுக்கு தெரிந்த தியானத்தை தினமும் காலையில் கடைபிடியுங்கள், இது உங்கள் மனதை அமைதி வழிக்கு கொண்டு செல்லும்.

*  ஏமாற்றத்தையும், தோல்வியையும் எப்போதும் எதிர்பார்த்தே இருங்கள். இது உங்களை கவலையில் சிக்காமல் வைத்திருக்கும். இதுவும் ஒரு வகை நிம்மதிதான்.

*  எவரிடமும் பொறாமை கொள்ளாதீர்கள், பிறரிடம் இருக்கும் நல்ல குணத்தை பாரட்டுங்கள். (பொறாமை…இந்த வார்த்தையை திருப்பிப் போட்டால் “மைறாபொ” என்று ஒரு அர்த்தம் தருகிறது)

*  உங்களுக்கு பிடித்த செல்லப் பிராணியை வளருங்கள், செல்லப் பிராணிகளால் உலகத்தில் மகிழ்ச்சி அடையாதவர்களே இல்லை எனலாம். இதன் மூலம் உங்களுடைய மன அழுத்தம், கவலை மறந்து நிம்மதி கிடைக்கும்.

நிம்மதியான வாழ்க்கைக்கு நிரந்தரமான சில வழிகள்..!!!

*   மனதை எப்போதும் பூட்டி வைக்காதீர்கள் இசை கேட்பது, பாடுவது, ஆடுவது, பிடித்த இடத்தில் சற்று நேரம் அமர்வது, நல்ல நண்பர்களுடன் உரையாடுவது, நல்ல புத்தகங்களை படிப்பது போன்ற உங்கள் மனதிற்கு பிடித்த ஏதேனும் ஒன்றை தினமும் செய்யுங்கள்.

*  பிறருடைய பாராட்டிற்கு ஏங்காதீர்கள், நல்ல செயலுக்காக பிறரை மனமுவந்து பாராட்டுங்கள். இது மற்றவரிடம் உங்கள் மீதான மதிப்பை கூட்டி, அவரை மீண்டும் சந்திக்கும் போதெல்லாம் மகிழ்ச்சியான சந்திப்பாகவே இருக்கச் செய்யும்.

*   உங்களால் எதை செய்ய முடியுமோ அதை சரியாக செய்யுங்கள், தேவையற்ற விசயங்களை சவாலாக ஏற்றுக் கொள்ளாதீர்கள், இதனால் புதிய சிக்கல் உண்டாகி வெறுப்பு மனநிலை வந்துவிடும்.

*  பிறருக்கு தேவையானதை விட்டு கொடுங்கள், உங்களுக்கு தேவை இல்லாததை விட்டு விடுங்கள். இதனால் மன அமைதி கிடைக்கும்.

குறிப்பு :  முடிந்தவரை எல்லோரிடமும் புன்னகை சிந்துங்கள் இதனால் புதிய நிம்மதி கிடைக்கலாம்.

இந்தியா இந்துக்களின் நாடு அதில் எந்த சந்தேகமும் இல்லை – பிரேமலதா விஜயகாந்த் சர்ச்சைக் கருத்து!

0

இந்தியா இந்துக்களின் நாடு அதில் எந்த சந்தேகமும் இல்லை – பிரேமலதா விஜயகாந்த் சர்ச்சைக் கருத்து!

சி ஏ ஏ சட்டம் குறித்துப் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலாதா விஜயகாந்த் இந்தியா இந்துக்களின் நாடு என பேசியுள்ளது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

இன்று ஜனவரி 12 ஆம் தேதி  சென்னை கொரட்டூரில் தேமுதிக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் நீண்ட நாட்களுக்குப் பின் கலந்து கொண்டு பேசினார். அவரது பேச்சில் ’தொண்டர்களே எனது முதல் கடவுள். மக்களுக்கு நல்லது செய்ய விரைவில் பூரண நலம்பெற்ற்ய் வருவேன்’  என்றும் கூறியது அக்கட்சியினருக்கு புத்துணர்ச்சியை அளித்துள்ளது.

விஜயகாந்துக்குப் பின் பேசிய அவரது மனைவியும் கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் சில சர்ச்சையானக் கருத்துகளைப் பேசியுள்ளார். அவரது பேச்சில் ’தலைவர் விஜயகாந்துக்கு எல்லா மதத்தினரும் ஒன்றுதான். உள்ளாட்சி தேர்தல் வெற்றி என்பது யானைப் பசிக்கு சோளப்பொறி போலதான். இனிமேல் நம் ஆட்டம் தொடங்க உள்ளது. அடுத்து நடக்கும் தேர்தலில் நமக்கு அதிக இடம் கிடைக்கும். சி ஏ ஏ சட்டத்துக்கு எதிராக குரல்கள் எழுந்ததைப் போல அச்சட்டத்துக்கு ஆதரவும் உள்ளது.

இந்தியா என்றால் இந்துக்கள் நாடுதான். அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இந்துக்களோடு இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் இங்கு சகோதரத்துவத்துடன் பழகி வருகிறார்கள். நமது நாட்டில் பிரிவினை இல்லை.

ஆனால் மதத் தீவிரவாதத்தில் ஈடுபடுபவர்களுக்கு இந்தியாவில் இடம் இல்லை.’ எனப் பேசியுள்ளார். இந்திய அரசியலமைப்புப் படி இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பது குறிப்பிடத்தகக்து.

கள்ளக் காதல் ஜாலி! பார்த்த மகன் காலி! மதுரையில் நடந்த கொடூர சம்பவம்!!

0

கள்ளக் காதல் ஜாலி! பார்த்த மகன் காலி! மதுரையில் நடந்த கொடூரம்!!

கள்ளகாதலுக்காக தான் பெற்ற மகனையே கழுத்தை நெரித்து கொன்ற கொடூரமான சம்பவம் மதுரையில் அரங்கேறியுள்ளது.

மதுரை மாவட்டம் டி கல்லுப்பட்டி அருகேயுள்ள குச்சமரபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராம்குமார். இவரின் மனைவி ஆனந்தஜோதி இவர்களுக்கு ஜீவா , லாவண்யா என இரு குழந்தைகள் உள்ளனர். குடும்ப வருமானத்திற்காக ராம்குமார் கொத்தனார் வேலை செய்து வந்தார். அவரது மனைவி ஆனந்தஜோதி விருதுநகரில் ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார்.

கள்ளக் காதல் ஜாலி! பார்த்த மகன் காலி! மதுரையில் நடந்த கொடூர சம்பவம்!!

இவர்களின் ஐந்து வயது மகனான ஜீவா அங்கிருந்த அங்கன்வாடியில் படித்து வந்தார். சம்பவ நாளன்று பள்ளியில் இருந்து வந்த ஜீவா வீட்டில் தூங்கியுள்ளார். நீண்ட நேரமாக தூங்கிய ஜீவாவை ஆனந்தஜோதி எழுப்பியும் எந்த அசைவும் இல்லை. இதன்பிறகு சிறுவனை விருதுகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், ஜீவா இறந்து நீண்ட நேரம் ஆவதாகவும் சிறுவனின் கழுத்தை நெரித்த தடயம் இருப்பதாகவும் கூறினர். இது எப்படி நடந்தது என மனைவியிடம் ராம்குமார் கேள்விகளை கேட்டபோது மழுப்பலான பதிலை ஆனந்தஜோதி கூறியதால் ராம்குமாருக்கு மனைவியின் மேல் சந்தேகம் ஏற்பட்டது.

இந்நிலையில், தனது மகன் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும் மனைவியின் மீதும் சந்தேகம் இருப்பதாக சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் ராம்குமார் புகாரளித்தார். இதனையடுத்து ஆனந்தஜோதியிடம் கிடுக்குப் பிடி விசாரணையை போலீசார் மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில் தனது மகனை தானே கொன்றதாக ஒப்புக் கொண்டார்.

கள்ளக் காதல் ஜாலி! பார்த்த மகன் காலி! மதுரையில் நடந்த கொடூர சம்பவம்!!

நீண்ட நாட்களாக ஆனந்தஜோதிக்கும், அவரது உறவினரான மருதுபாண்டி என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இருவரும் வீட்டில் தனியாக உல்லாசம் அனுபவித்ததை மகன் ஜீவா பார்த்துவிட்டதாலும், இது ராம்குமாருக்கு தெரிந்தால் பிரச்சினையாகும் என்பதால் நானும், மருதுபாண்டியும் சேர்ந்து ஜீவாவை கொன்றதாக தனது வாக்குமூலத்தில் ஆனந்தஜோதி தெரிவித்தார். இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

மனைவியிடம் தகராறு செய்த கணவன்; தட்டிக் கேட்ட மகனைக் கொல்ல முயற்சி – கொடூரத் தந்தைக்கு இறுதியில் நேர்ந்த முடிவு

0

மனைவியிடம் தகராறு செய்த கணவன; தட்டிக் கேட்ட மகனைக் கொல்ல முயற்சி – கொடூரத் தந்தைக்கு இறுதியில் நேர்ந்த முடிவு

மேட்டுப்பாளையத்தில் 6 வருடமாகப் பிரிந்து வாழும் மனைவியிடம் தகராறு செய்த மனிதரை அவரது மகனே வெட்டிக் கொலை செய்துள்ளார்.

மேட்டுப்பாளையம் சிராஜ் நகரை சேர்ந்தவர் கருப்பசாமி. இவருக்கு அமுதவள்ளி எனும் மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். கருப்பசாமி, குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் 6 ஆண்டுகளாக இவரது மனைவி அமுதவள்ளியும் குழந்தைகள் இருவரும் தனியாக வாழ்ந்து வருகின்றனர். ஆனாலும் அவர்களை நிம்மதியாக வாழவிடாமல் அவ்வப்போது வந்து தகராறு செய்து வந்துள்ளார் கருப்பசாமி.

வழக்கம்போல நேற்று இரவு குடிபோதையில் இருந்த கருப்பசாமி மனைவிக்கு போன் செய்து வீட்டுக்கு அழைத்துள்ளார். அவரை நம்பிய அமுதவள்ளி தனது மூத்த மகன் சச்சின் குமாரை அழைத்துக்கொண்டு கருப்பசாமியின் வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கே கருப்பசாமி மீண்டும் பிரச்சனை செய்ய ஆரம்பித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை பார்த்து கடுப்பான மகன் சச்சின் தந்தையிடம் தாய்க்கு ஆதரவாகப் பேச ஆரம்பித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கருப்பசாமி ஆத்திரத்தில் சச்சினை வெட்ட முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியான சச்சின் அவரிடம் இருந்த அரிவாளை பிடுங்கி தந்தையை கழுத்து மற்றும் தலையில் வெட்டியுள்ளார்.. இதில் கருப்பாசாமி சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

இது சம்மந்தமாக போலீஸுக்கு தகவல் செல்ல அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று கருப்பசாமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு  அனுப்பியுள்ளனர். மேலும் கொலையாளி சச்சினைக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

அணியில் இருப்பதும் இல்லாமல் இருப்பதும் என் தலைவலி இல்லை ; மனம் திறந்த ஷிகார் தவான் !

0

அணியில் இருப்பதும் இல்லாமல் இருப்பதும் என் தலைவலி இல்லை ; மனம் திறந்த ஷிகார் தவான் !

சில மாதங்களாக இந்திய அணியில் தொடக்க ஜோடியாக யார் யாரை இறக்குவது என்ற குழப்பம் எழுந்துள்ளது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் வரிசையில் ஷிகார் தவான், கே எல் ராகுல், ரோஹித் ஷர்மா ஆகிய 3 பேரும் இருக்கின்றனர். இவர்கள் மூன்று பேருமே சிறப்பாக விளையாடுவதால் எந்த இருவரை அணியில் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் எழுந்துள்ளது.

இதனால் சுழற்சி முறையில் தொடக்க ஆட்டக்காரர்களை இறக்கி வருகிறார் கேப்டன் கோலி. சமீபத்திய இலங்கைக்கு எதிரான தொடரில் ரோஹித்துக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால் அடுத்து வரும் நியுசிலாந்து தொடர் மற்றும் டி 20 உலகக்கோப்பை ஆகிய தொடர்களில் யார் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக பார்ம் அவுட்டில் இருந்த ஷிகார் தவான், இலங்கைக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி தன்னை நிரூபித்தார். அதனால் அனுபவம் வாய்ந்த அவரை நீக்க முடியாத சூழல் உள்ளது. இதுபற்றி சமீபத்தில் பேசிய ஷிகார் தவான் ‘ நாங்கள் மூவரும் டாப் ஆர்டரில் சிறப்பாக விளையாடி வருகிறோம்.

கடந்த சில தொடர்களாக ராகுல் நன்றாக விளையாடுகிறார். நானும், எனக்குக் கொடுத்த வாய்ப்பையும் நான் நன்றாக பயன்படுத்திக் கொண்டுள்ளேன். எனவே நான் இருப்பேனா அல்லது இல்லையா என்பதெல்லாம் என் தலைவலி அல்ல. அது என் கையில் இல்லாததால் எனக்கு அதுபற்றி யோசனை இல்லை. வாய்ப்புக் கிடைத்தால் மகிழ்ச்சி’ எனக் கூறியுள்ளார்.

ஊதிய உயர்வும்; வார விடுமுறையும் வேண்டும்! காவல்துறைக்கு ஆதரவாக சீமான் கோரிக்கை!!

0

ஊதிய உயர்வும்; வார விடுமுறையும் வேண்டும்! காவல்துறைக்கு ஆதரவாக சீமான் கோரிக்கை!!

பொது மக்களின் நலனை பாதுகாப்பதில் காவல்துறையின் பங்கு அளப்பரியது. சமூக நலனுக்காக தங்களையே அர்பணித்துக் கொண்டு வேலை பணிச்சுமை, நெருக்கடி போன்ற காரணங்களால் தற்கொலை செய்து கொள்வதும், பணியின் போதே பல்வேறு தாக்குதலை சந்திப்பதும் நடந்து வருகிறது. இதன் காரணமாகவே காவல்துறைக்கு போதுமான ஊதிய உயர்வும், வார விடுமுறையும் தர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றார்.

மேலும், சமீபத்தில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட கன்னியாகுமரி உதவி ஆய்வாளர் வில்சன் கொலையில் சம்மந்தபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.இது சம்பந்தமாக அறிக்கையில் கூறியதாவது:

ஊதிய உயர்வும்; வார விடுமுறையும் வேண்டும்! காவல்துறைக்கு ஆதரவாக சீமான் கோரிக்கை!!

கேரள எல்லையில் உதவி ஆய்வாளர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. அவரது குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து அவர்களின் துயரில் பங்கெடுக்கிறேன். வேலை நேரத்திலேயே ஒரு அரசு அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பொது மக்களிடையே பயத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஊதிய உயர்வும்; வார விடுமுறையும் வேண்டும்! காவல்துறைக்கு ஆதரவாக சீமான் கோரிக்கை!!

இதுபோன்ற சமூக அமைதியை கெடுக்கும் குற்றவாளிகளை கைது செய்து உடனடியாக சட்டப்படி தண்டிக்க வேண்டும். ஓய்வும், உறக்கமும் இல்லாமல் இரவு பகலாக பணியில் ஈடுபடும் காவலர்களின் துயரம் சொல்லி மாளாதவை. பிற அரசு ஊழியர்கள் விடுமுறை நாட்களையும், சுதந்திரமான வாழ்க்கையும் அனுபவிக்கிறார்கள். அவர்களைப் போல எந்த வழிமுறையும் இல்லாது தொடர்ந்து பணிச்சுமை, மன உளைச்சலில் உள்ளாகிற போதும் மன வலிமையுடன் தொடர்ந்து கடமை தவறாமல் பணியாற்றும் செயல் மகத்தானது.

உதவி ஆய்வாளர் வில்சனை கொன்றவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். அவருக்கு எமது கண்ணீர் வணக்கத்தை செலுத்துகிறோம். இந்த கொலையை மையமாக வைத்து மத துவேசத்தில் ஈடுபடும் மத சூழ்ச்சிக்கு பலியாகாமல் இருக்க சமூக ஒற்றுமையும், அமைதியும் நிவுவதை உறுதி செய்ய வேண்டும் என்று நாம்தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு சீமான் பேசினார்.