Home Blog Page 5803

தன் வீட்டுக்கு கூலிப்படை அனுப்பிய நபர் ; சொத்துக்காக மனைவி கொலை செய்த ஊதாரி கணவன் !

0

தன் வீட்டுக்கு கூலிப்படை அனுப்பிய நபர் ; சொத்துக்காக மனைவி கொலை செய்த ஊதாரி கணவன் !

மதுரை அருகே சொத்தைத் தன் பேரில் மாற்றிக் கொடுக்க மறுத்த மனைவியைக் கூலிப்படை அனுப்பி கொலை செய்திருக்கிறார் கொடூர கணவர் ஒருவர்.

மதுரையில் பாத்திரக்கடை வைத்திருப்பவர் குமரகுரு. இவர் தன் மனைவி லாவண்யாவோடு ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பாரதி உலா வீதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நள்ளிரவில் லாவண்யாவை சிலர் இரண்டு பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து சரமாரியாக வெட்டினர். இதில் லாவண்யா சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

இது  சம்மந்தமாக குமரகுரு அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். லாவண்யாவின் வீடருகே இருந்த சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்தபோது அவை செயல் படாமல் இருந்தது சந்தேகத்தை கிளப்பியது. மேலும் நள்ளிரவில் கதவை உடைத்து உள்ளே செல்லாமல் எளிதாகக் கதவை திறந்து சென்றதும் கண்டு பிடிக்கப்பட்டது. அதனால் வீட்டுக்குள் இருந்து யாராவது கதவைத் திறந்து வைத்திருக்கலாம் என்ற கோணத்தில் லாவண்யாவின் கணவர் குமரகுரு மேல் சந்தேகம் கிளம்பியது.

இதையடுத்து உடனடியாக அவரைக் கைது செய்து விசாரணை செய்ய, மனைவியைக்  கூலிப்படை அனுப்பி கொலை செய்ததை ஒத்துக்கொண்டார். ஆனால் அந்த கொலைக்கான காரணம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

குமரகுரு பாத்திரக் கடை வைத்திருந்தாலும் அதில் வரும் வருமானத்தை ஆடம்பர செலவுகள் செய்து மேலும் சொத்துகளை விற்றும் ஜாலியாக உலாவந்துள்ளார். இதனால் அவரது தந்தை பாதி சொத்தை தனது மருமகள் லாவன்யா பேரில் எழுதி வைத்துள்ளார். இது குமரகுருவுக்குக் கோபத்தை ஏற்படுத்த, லாவண்யாவிடம் சொத்துகளைத் தன் பேரில் மாற்றி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் லாவண்யா மறுக்கவே தனது நண்பர் ஒருவர் மூலமாக கூலிப்படையை ஏவி லாவண்யாவைக் கொலை செய்துள்ளார். இதையடுத்து கூலிப்படையைச் சேர்ந்த இருவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

வெற்றிமாறன் & சூர்யா நடத்த இருக்கும் ஜல்லிக்கட்டு! இணையத்தில் வைரலான படத்தின் பெயர்!

0

வெற்றிமாறன் & சூர்யா நடத்த இருக்கும் ஜல்லிக்கட்டு! இணையத்தில் வைரலான படத்தின் பெயர்!

சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் படத்துக்கு வாடிவாசல் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என்ற செய்தி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக வெற்றிமாறன் இருந்து வருகிறார். அவரது இயக்கத்தில் நடிக்க பலரும் ஆசைப்பட்டு வருகின்றனர். ஆனால் அவர் தனது நண்பர் தனுஷோடு மட்டுமே கூட்டணி அமைத்து படங்களை இயக்கி வருகிறார். சமீபத்தில் அவர்கள் கூட்டணியில் உருவான அசுரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அதையடுத்து வெற்றிமாறனின் இயக்கத்தில் நடிக்க சூர்யா ஆர்வமாக இருக்கிறார். இந்த படத்தை தாணு தயாரிக்க, ஜி வி பிரகாஷ்குமார் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த படம் பற்றி ரசிகர்களின் ஆவலைத் தூண்டும் விதமாக மேலும் ஒரு செய்தி கசிந்துள்ளது.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவரிடம் அந்த படம் பற்றி கேள்வி எழுப்பியபோது அந்த படத்துக்கு வாடிவாசல் என்று பெயர் வைத்துள்ளதாக கூறினார். இதனால் இந்த படம் ஜல்லிக்கட்டு சம்மந்தமானது என உறுதியாகியுள்ளது.

தொடர்ந்து தனது திரைக்கதைகளை நாவல்களை ஒட்டி அமைத்து வரும் வெற்றிமாறன், இந்த முறையும் ஒரு நாவலைதான் திரைப்படமாக எடுக்க இருப்பதாக தெரிகிறது. வாடிவாசல் என்ற பெயரில் எழுத்தாளர் சி சு செல்லப்பா ஒரு நாவல் ஜல்லிக்கட்டை மையப்படுத்தி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் மையம் தலித் இளைஞர் ஒருவர் ஜல்லிக்கட்டில் கலந்துகொள்வது தொடர்பானது என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா நடிக்கும் படத்துக்கு முன்னதாக சூரியைக் கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கும் முய்ற்சியில் வெற்றிமாறன் இறங்கியுள்ளார்.

ஒரு நொடியில் என் வாழ்க்கையே மாறிப்போச்சு! ஆசிட் தாக்குதலுக்கு ஆளான நடிகையின் சகோதரி ஆதங்கம்!

0

ஒரு நொடியில் என் வாழ்க்கையே மாறிப்போச்சு! ஆசிட் தாக்குதலுக்கு ஆளான நடிகையின் சகோதரி ஆதங்கம்!

தேசிய விருது பெற்ற நடிகையான கங்கனா ரனாவத்தின் சகோதரி ரங்கோலி சந்தல் தன் மீது ஆசிட் ஊற்றப்பட்ட சம்பவம் பற்றி கட்டுரை ஒன்று எழுதியுள்ளார்.

ஆசிட் வீச்சு தாக்குதலில் இந்தியா நம்ப முடியாத அளவுக்கு முன்னணியில் இருக்கிறது. நாடு முழுவதும் ஆண்டுதோறும் பெண்களுக்கு எதிராக ஆசிட் வீச்சுத் தாக்குதல் அதிகரித்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் தீபிகா படுகோன் நடிப்பில் உருவான சப்பாக் திரைப்படம் அப்படி பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் வாழ்க்கையை ஒட்டி உருவாக்கப்பட்டதுதான்.

இந்தியாவின் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரனாவத்தின் சகோதரி ரங்கோலி சந்தலும் இதுபோல ஆசிட் வீச்சு தாக்குதலுக்கு ஆளானவர். சமீபத்தில் அவர் நாளிதழ் ஒன்றுக்கு எழுதிய கட்டுரையில் தனக்கு நடந்த கொடூரமான சம்பவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

அவரது கட்டுரையில் ‘என் மீது ஆசிட் வீசிய நபரின் பெயர் அவினாஷ் ஷர்மா. நாங்கள் இருவரும் ஒரே கல்லூரியில் ஒன்றாகப் படித்தோம். ஒரு நாள் அவர் என்னிடம் காதலைத் தெரிவித்தார். நான் அவர் காதலை ஏற்கவில்லை. அதனால் அதிருப்தியடைந்த அவர் என்னை ஏதாவது செய்யவேண்டும் என நண்பர்களிடம் கூறியுள்ளார்.

அதனை நான் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. பின் ஒருநாள் என் அறைக்கு யாரோ என்னை பார்க்க வந்திருப்பதாக சொல்ல நான் சென்ற போது என் முகத்தில் ஆசிட் ஊற்றப்பட்டது. ஒரு நொடியில் என் வாழ்க்கையே மாறிவிட்டது.’ எனக் கூறியுள்ளார்.

பெண்களுக்கு நீலப்படம் அனுப்பிய தென்காசி இளைஞர்; விசாரணையில் போலீசார் சும்மா கிழி..!!

0

பெண்களுக்கு நீலப்படம் அனுப்பிய தென்காசி இளைஞர்; விசாரணையில் போலீசார் சும்மா கிழி..!!

கல்லூரி மாணவியின் செல்போனை திருடி அதில் இருந்த முப்பதுக்கும் மேற்பட்ட பெண்களின் வாட்சப் நம்பருக்கு ஆபாச படம் அனுப்பிய நபரை காவல்துறை கைது செய்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கடந்த நான்காம் தேதி வாட்ஸ்அப் மூலம் பல ஆபாச படங்கள் வந்தது.

இதை கண்டதும் அதிர்ச்சி அடைந்த அப்பெண் வீடியோ அனுப்பிய நம்பரை தொடர்பு கொண்டு எச்சரித்த போது, எதிர் முனையில் பேசிய ஆபாச நபர் பெண் குரலில் கேவலமாக பேசியுள்ளார். போனை துண்டித்த பிறகும் மீண்டும் மீண்டும் ஆபாச படங்கள் வந்து கொண்டே இருந்தன.

பெண்களுக்கு நீலப்படம் அனுப்பிய தென்காசி இளைஞர்; விசாரணையில் போலீசார் சும்மா கிழி..!!
ஆபாச படம் அனுப்பியவன்

இது சம்பந்தமாக ஜனவரி 8 ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி டாக்டர் விஜயகுமார் அவர்களிடம் பாதிக்கப்பட்ட பெண்மணி புகார் அளித்திருந்தார். இதையடுத்து, நாட்றாம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து ஆபாச நபரை தேடும் பணி தொடங்கியது. ஆய்வில் அந்த நபரின் மொபைல் எண் சிக்னல் மூலம் சென்னையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து “சும்மா கிழி” பாணியில் போலீசார் விசாரித்தனர். தென்காசி மாவட்டம், தலைவன் கோட்டை முள்ளிக்குளம் பகுதியைச் சேர்ந்த ராஜூ என்பவரின் மகன் வினோத் என்பது விசாரணையில் தெரிய வந்தது. இவர் குரோம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டு பல பெண்களுக்கு செல்போனில் ஆபாச படங்களை அனுப்பியும், நம்பரை வைத்து பெண் குரலில் அநாகரிகமாக பேசி வந்ததையும் விசாரணையில் ஒப்புக் கொண்டான்.

பெண்களுக்கு நீலப்படம் அனுப்பிய தென்காசி இளைஞர்; விசாரணையில் போலீசார் சும்மா கிழி..!!

மேலும், இதைப் போன்ற ஆபாச படம், ஆபாச செய்தி அனுப்பினால் அந்தந்த பகுதி காவல் நிலையத்திற்கு புகார் கொடுங்கள். புகாரின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பத்தூர் எஸ்.பி.விஜயகுமார் தெரிவித்தார். பொது மக்களின் பாதுகாப்பிற்காக சில நாட்களுக்கு முன்பு “காவலன்” செயலி தமிழக காவல்துறையால் அறிமுகபடுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

அண்ணன் தானே என வீட்டிற்கு சென்ற சிறுமியை சீரழித்த மாணவன்

0

அண்ணன் தானே என வீட்டிற்கு சென்ற சிறுமியை சீரழித்த மாணவன்

அண்ணன் என நினைத்து தன்னுடன் வந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஐடிஐ மாணவனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள காரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சிவா.17 வயதாகும் இவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள ஐ.டி.ஐ.யில் படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று காரப்பட்டு பகுதியில் இவர் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த பகுதியை சேர்ந்த 4 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியான 9 வயது சிறுமி அந்த வழியாக வந்திருக்கிறார். ஏற்கனவே அங்கு நின்று கொண்டிருந்த இந்த சிவா சிறுமியிடம் லேசாக பேச்சு கொடுத்துள்ளார். அப்படியே பேசிக் கொண்டே சிறுமியை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துள்ளார். அவரை அண்ணன் போல நினைத்த சிறுமியும் அவருடன் சென்றிருக்கிறார். இதனையடுத்து அவரது வீட்டுக்கு அழைத்து சென்ற அந்த சிறுமியை கட்டாயபடுத்தி பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார் இந்த மாணவர்.

இதனையடுத்து அங்கு நடந்த இந்த சம்பவத்தை வேறு யாரிடமும் கூறக் கூடாது என அந்த சிறுமியை சிவா மிரட்டி அனுப்பியுள்ளர். அவர் மிரட்டலுக்கு பயந்த சிறுமி தனக்கு நடந்த இந்த கொடுமையை வேறு யாரிடமும் சொல்லாமல் மறைத்து விட்டு வழக்கம் போலவே இருந்திருக்கிறார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக அடிக்கடி வயிறு வலிப்பதாக அந்த சிறுமி அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அடிக்கடி வயிறு வலிப்பதாக கூறிய அந்த சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அவரது பெற்றோர் முடிவு செய்தனர்.

இதனையடுத்து சிறுமியை மருத்துவ சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் இந்த சிறுமியை பரிசோதித்து பார்த்தனர். அந்த சோதனையின் போது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது அவர்களுக்கு தெரிய வந்தது.

இதனையடுத்து சிறுமியை அவரது பெற்றோர் விசாரிக்கையில் நடந்த நிகழ்வுகளை சிறுமியும் கூறியுள்ளார்.பின்னர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான காவல் துறையினர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று சிறுமியிடம் விசாரித்தனர்.

அப்போது அந்த சிறுமி தனக்கு நேர்ந்த இந்த கொடுமையை காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து போக்சோ சட்டத்தில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மாணவன் சிவாவை கைது செய்தனர்.அண்ணன் என நினைத்து வீட்டிற்கு வந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கையைக் கடிக்கும் தர்பார் வசூல் – விநியோகஸ்தர்கள் அதிர்ச்சி !

0

கையைக் கடிக்கும் தர்பார் வசூல் – விநியோகஸ்தர்கள் அதிர்ச்சி !

தர்பார் படத்தின் முதல் நாள் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் விநியோகஸ்தர்கள் நஷ்டம் ஏற்படும் எனப் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.

பெரிய நடிகர்கள் படங்கள் ரிலிஸாகும் அதை அதிக விலைக்கு வாங்கி அதிக டிக்கெட் கட்டணத்தில் விற்று அதிக லாபம் பார்க்கலாம் என விநியோகஸ்தர்கள் கணக்குப் போட்டு கையை சுட்டுக் கொள்வது வாடிக்கையாகி உள்ளது. இந்த நிலை இப்போது தர்பார் படத்துக்கு வருமோ என்ற சூழல் உருவாகியுள்ளது.

பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான தர்பார் முதல் நாளிலேயே எதிர்மறை விமர்சனங்கள் பெற்றதால் கூட்டம் குறைய ஆரம்பித்தது. முதல் நாளின் மாலை மற்றும் இரவு காட்சிகளில் டிக்கெட்கள் சர்வ சாதாரணமாகக் கிடைக்க ஆரம்பித்தது. இதனால் முதல்நாள் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என சொல்லப்படுகிறது. இத்தனைக்கும் சிற்ப்புக்காட்சியின் டிக்கெட் விலை 1000 ரூபாயில் இருந்து 3000 ரூபாய் வரை விற்கப்பட்டது. இது அனுமதிக்க பட்ட விலையை பல மடங்கு அதிகமாகும்.

தமிழக திரையரங்குகள் மூலம் முதல் நாள் வசூலாக 16 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாக தெரிகிறது. இது வழக்கமாக ரஜினி படங்களின் வசூலை விட மிகக்குறைவு என சொல்லப்படுகிறது. ஒருவேளை பொங்கல் விடுமுறை ஆரம்பித்ததும் வசூல் அதிகமாகும் எனத் தெரிகிறது.

வேலைக்கு போகாமலே ஒரு லட்சம் வாங்கலாம்! நீங்களும் லட்சாதிபதிதான்?

0

வேலைக்கு போகாமலே ஒரு லட்சம் வாங்கலாம்! நீங்களும் லட்சாதிபதிதான்?

“உழைச்சாதானே காசு” வேலைக்கு போகாமலே எப்படி லட்சம் கிடைக்கும் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் இதுதான் ஒரு நாட்டின் நடைமுறையாக உள்ளது.

உலகத்திலேயே மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடு எது என்று 2012 ல் ஒரு ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வு 156 நாட்டு மக்களை சந்தித்து பேசி அதன்மூலம் நடைமுறை தகவல்களை ஒரு நிபுணர் குழு சேமிக்கிறது.  அதை வைத்து அம்மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்று ஒரு பட்டியலைத் தயார் செய்கிறார்கள்.

வேலைக்கு போகாமலே ஒரு லட்சம் வாங்கலாம்! நீங்களும் லட்சாதிபதிதான்?

கடந்த இரண்டு ஆண்டுகளில் பின்லாந்து மட்டுமே இரண்டு முறை முதலிடத்தை பிடித்துள்ளது. World Happiness Index Report ஐ அடிப்படையாக வைத்து முதல் இடங்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறது. மகிழ்ச்சியான நாடுகளின் முதல் இடங்களை வட ஐரோப்பா மற்றும் வட அட்லாண்டிக் நாடுகளே பட்டியலை நிரப்புகிறார்கள். வல்லரசு நாடான அமெரிக்காவே 19 வது இடமாம்.

வேலைக்கு போகாமலே ஒரு லட்சம் வாங்கலாம்! நீங்களும் லட்சாதிபதிதான்?

அயல் நாடான டென்மார்க்கில் ஒரு நாளைக்கு சராசரி 7.5 மணி நேரம்தான் வேலை பார்ப்பார்களாம். வேலை நேரத்திற்கு இடையில் தேவையில்லாத ஓய்வோ, வெட்டி அரட்டையோ செய்வதில்லையாம். வேலை முடித்துவிட்டு ஊழியர் நண்பர்களோடு வெளியே செல்வதும் மிக குறைவுதான். குறித்த நேரத்தில் தரமாக வேலையை முடித்துவிடுகிறார்களாம்.

வேலைக்கு போகாமலே ஒரு லட்சம் வாங்கலாம்! நீங்களும் லட்சாதிபதிதான்?

பின்லாந்து போன்ற நாடுகளில் வாரத்தில் ஒருநாள் ஆபிஸ் போகாமல் வீட்டிலேயே வேலை செய்யும் வழிமுறையை பின்லாந்து அரசு வழிவகுத்துள்ளது. அதே சமயம் விடியற்காலை மூன்று மணிக்கே வேலையை தொடங்குவதும், கமிட்மண்ட் இருந்தால் வேலையை மூன்று மணி நேரம் தள்ளிப் போடுவதற்கும் சட்டத்தில் இடம் இருக்கிறதாம்.

வேலை பறிபோனாலோ அல்லது வேலையை கைவிட்டாலோ அடுத்த வேலை வாய்ப்பை பெறுவதற்கு அரசே தேவையான கல்வி உதவி, கவுன்சிலிங், பட்டப் பயிற்சியும் தருகிறது. டென்மார்க் போன்ற நாடுகளில் வேலையில் “மன அழுத்தம்” இருப்பதை  சொன்னால் போதும் மாதம் 2000 அமெரிக்க டாலர் (நமது ரூபாய் மதிப்பில் 1.4 லட்சம்) கொடுத்து மன அழுத்தத்தில் இருந்து வெளிவர சொல்வார்களாம்.

வேலைக்கு போகாமலே ஒரு லட்சம் வாங்கலாம்! நீங்களும் லட்சாதிபதிதான்?

இந்தியாவில் பகல், இரவாக  வேலை செய்தாலும் பலருக்கு போதிய வருமானம்  கிடைப்பதில்லை. டென்மார்க் போன்ற நாடுகளில் பிறந்திருந்தால் நீங்களும் லட்சாதிபதிதான்.

முருகதாஸுக்கு இதே வேலை தான்! கடுப்பான ரசிகர்கள்

0

முருகதாஸுக்கு இதே வேலை தான்! கடுப்பான ரசிகர்கள்

ஒரு வசனத்தை வைப்பதும் பிறகு பிரச்சனை வந்தால் அதை நீக்குவதும் இதுவே முருகதாஸூக்கு வேலையாக இருக்கிறது என ரசிகர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

தர்பார் படத்தில் சிறையில் செல்போன் உபயோகிப்பது சம்மந்தமான காட்சி ஒன்றில் ’இது என்ன சிறையில் இருந்த படி ஷாப்பிங்கே செய்யலாம்’ என ஒரு வசனம் வரும். இதற்கு சசிகலாவின் ஆதரவாளர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்க அந்த வசனம் உடனடியாக நீக்கப்பட்டுள்ளது. இதனால் பலரும் சிறையில் இருக்கும் சசிகலாவுக்கே இவ்வளவு அதிகாரமா என வியந்துள்ளனர். இதுபற்றி குறிப்பிட்ட கமல் வசனத்தை நீக்க வைத்ததும் ஒரு வகையான ஷாப்பிங்தான் எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால் முருகதாஸ் படத்தில் இதுபோல் ஒரு வசனம் வைக்கப் படுவதும் பின்பு பிரச்சனையானதும் அதை நீக்குவதும் ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே ஏழாம் அறிவு படத்தில் இதுபோல் ஒரு வசனத்தை பிரச்சனை வந்ததும் அவர் நீக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல் கத்தி திரைப்படத்தின் நடிகர் விஜய் 2 ஜி ஸ்பெக்ட்ரம் பற்றி குறிப்பிடும் போது காற்றில் ஊழல் ஊழல் செய்த ஊர் நம்மூர் என்று திமுக எம்பி ஆ ராசாவைப் பற்றி குறிப்பிடுவார். ஆனால் உண்மையில் இப்போது ஆ ராசா 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டு விட்டார்.

இதனால் பரபரப்புக்காக ஒரு வசனத்தை வைத்து அதன் பின்பு பிரச்சினை வந்ததும் அதை நீக்குவது முருகதாசுக்கு ஒன்றும் புதிதல்ல எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் அவர் படங்களில் அவர் சமூகப் பிரச்சினைகளை கதைக்களமாக கொன்றாலும் அவற்றுக்கு சொல்லும் தீர்வுகள் மிகவும் முட்டாள்தனமானது எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆபாச மெசேஜ்கள்: போன் செய்து பார்த்தால் பெண் குரல்! தென்காசி இளைஞரின் குரூரம்!!

0

ஆபாச மெசேஜ்கள்: போன் செய்து பார்த்தால் பெண் குரல்! தென்காசி இளைஞரின் குரூரம்!!

கல்லூரி மாணவி ஒருவரிடம் இருந்து செல்போனை திருடிய இளைஞர் அந்த போனில் சேமிக்கப்பட்டிருந்த பெண்களின் எண்ணிற்கு ஆபாச மெசேஜ் அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த காலத்தில் பெண்கள் எவ்வளவுதான் பாதுகாப்பாக இருந்தாலும் அவர்கள் மீதான பாலியல் அத்துமீறல் மற்றும் தாக்குதல் நடத்த வண்ணம் உள்ளது. அதற்கு செல்போன் போன்ற நவீன தகவல் தொழில்நுட்ப கருவிகளும் உதவியாக உள்ளன. தான் எந்த ஒரு தவறும் செய்ய விட்டாலும் பெண்கள் ஆண்களால் தொடர்ந்து இதுபோல் பாதிப்புக்குள்ளாவது வாடிக்கையாகி வருகிறது.

இளம்பெண் ஒருவருக்கு அவரது மொபைலில் இல்லாத நம்பரில் இருந்து வாட்ஸ் அப்பில் ஆபாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வந்துள்ளன. இதை பார்த்து அதிர்ச்சியான அந்தப் பெண் சம்பந்தப்பட்ட நம்பருக்கு போன் செய்து திட்டியுள்ளார். அப்போது எதிர்முனையில் பேசிய பெண் குரல் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் அந்தப் பெண்ணிடம் பேசியுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் திருப்பத்தூர் காவல் நிலையத்தில் இது சம்பந்தமாக புகார் அளித்து சம்பந்தப்பட்ட மெசேஜ்களை காட்டியுள்ளார். இதையடுத்து சம்பந்தப்பட்ட நம்பரின் மொபைல் சிக்னலை டிராக் செய்த திருப்பத்தூர் காவல் நிலையத்தினர், அந்த எண் தற்போது சென்னையில் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

அதையடுத்து தொடர்ந்து அந்த நம்பரை கண்காணிக்க தென்காசியைச் சேர்ந்த வினோத் என்பவரை கைது செய்துள்ளனர். வினோத்தை கைது செய்து விசாரித்ததில் கல்லூரி மாணவி ஒருவரின் செல்போன் திருடிய அவர், அந்த மொபைலில் இருந்த பெண்களின் எண்ணிற்கு இதுபோல் ஆபாசமான மெசேஜ் அனுப்பியது தெரிந்துள்ளது. இதுபோல் அவர் மொத்தமாக 30க்கும் மேற்பட்ட பெண்களின் எண்ணிற்கு மெசேஜ் அனுப்பியுள்ளார்.

விந்து தானம் செய்யும் கதாநாயகன்! ஹரிஷ் கல்யாணின் தாராள பிரபு!!

0

விந்து தானம் செய்யும் கதாநாயகன்! ஹரிஷ் கல்யாணின் தாராள பிரபு!!

ஹரிஷ் கல்யாண் புதிதாக நடிக்கும் படத்தின் படத்திற்கு தாராளப் பிரபு என பெயர் சூட்டப்பட்டுள்ளது இந்த படத்தின் மையக் கதை விந்து தானம் செய்வது பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுஷ்மான் குரானா நடிப்பில் ஆறு வருடங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் விக்கி டோனர்.  இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றதற்கு முக்கிய காரணம் அதன் கதைக்களன். விந்து தானம் செய்யும் கதாநாயகன் ஒருவன் சந்திக்கும் பிரச்சினைகளே இப்படத்தின் மையக்கரு. இந்த வித்தியாசமான கதை ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி வசூலை அள்ளியதுடன் விருதுகளையும் தட்டிச்சென்றது.

பாலிவுட்டின் முக்கிய வளரும் நட்சத்திரமாக உருவாகி வரும் ஆயுஸ்மான் குர்ரானா முதன்முதலாக அறிமுகமான திரைப்படம் இது.  இதையடுத்து 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்தப் படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு இருக்கிறது. விந்து தானம் செய்யும் கதாநாயகனாக நடிக்க தயங்கிய நிலையில் பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் இந்த படத்தில் தைரியமாக நடித்துள்ளார். இதன் முதல் லுக் போஸ்டர் நேற்று சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் தடம் படத்தில் நடித்த தன்யா ஹோப் மற்றும் நகைச்சுவை நடிகர் விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விந்து தானம் பற்றிய படம் என்றாலும் ஆபாசமாக இல்லாமல் குடும்பத்துடன் அனைவரும் பார்க்கும் படமாக இதை உருவாக்கி உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது குடும்பமாக வந்து ரசிகர்கள் பார்க்கிறார்களோ இல்லையோ இளைஞர்களின் ஆதரவு இந்த படம் பெற்றுவிடும் என்பது சமூக வலைதளங்களில் அது பெற்றுள்ள வரவேற்ப்பை பார்த்தாலே தெரிகிறது.