Home Blog Page 5805

ஸ்டாலினுக்கும் ஓபிஎஸ்-க்கும் பாதுகாப்பு நீக்கம் – வைரமுத்து டிவிட்டரில் கண்டனம் !

0

ஸ்டாலினுக்கும் ஓபிஎஸ்-க்கும் பாதுகாப்பை நீக்கிய – வைரமுத்து டிவிட்டரில் கண்டனம் !

தமிழக தலைவர்களான திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை மத்திய அரசு நீக்கியதற்கு பாடலாசிரியர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு தொடர்ச்சியாக அரசியல் தலைவர்களுக்கு வழங்கி வந்த சிறப்பு பாதுகாப்பை ரத்து செய்து பீதியைக் கிளப்பி வருகிறது. இதற்கு முன்னதாக சோனியா காந்திக்கு வழங்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பை நீக்கியது கண்டனக்குள்ளானது.

அதன் பின்னர் தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோருக்கு வழங்கப்பட்ட இசட் பிளஸ் மற்றும் ஒய் பிளஸ் சிறப்பு பாதுகாப்பை நீக்கியுள்ளனர். இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் இவர்களுக்கு தமிழக அரசு சிறப்பு பாதுகாப்பு அளிப்பதாக உத்தரவாதம் அளித்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து திமுக அனுதாபியான பாடலாசிரியர் வைரமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் ‘திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டிருந்த உச்சகட்டப் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது கவலையளிக்கிறது. ஒரு சமூகப் போராளிக்குச் சரியான பாதுகாப்பு வேண்டாமா? துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் பாதுகாப்பு நீக்கப்பட்டதற்கும் இதே கவலையை நீட்டிக்கிறேன்; கண்டிக்கிறேன்.’ எனத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வைரமுத்துவுக்கு நடக்க இருந்த பாராட்டு விழாவில் கலந்து கொள்ள இருந்த பாஜக அமைச்சர் ராஜ்நாத் சிங்கை கலந்து கொள்ள விடாமல் பாஜகவினர் தடுத்தனர். ஆண்டாள் பற்றி வைரமுத்து கருத்து தெரிவித்ததில் இருந்து பாஜகவினருக்கு வைரமுத்துவுக்கும் இடையில் கருத்து மோதல்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தர்பார் படத்தின் அந்த வசனத்தை நீக்கவேண்டும்… நீதிமன்றத்தில் முன்னாள் போலிஸ் புகார் !

0

தர்பார் படத்தின் அந்த வசனத்தை நீக்கவேண்டும்… நீதிமன்றத்தில் முன்னாள் போலிஸ் புகார் !

தர்பார் படத்தில் சீருடை பணியாளர்கள் மனதைப் புண்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாக முன்னாள் காவலர் ஒருவர் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ் மற்றும் சுனில் ஷெட்டி நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவான தர்பார் திரைப்படம் நேற்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியானது. முதல் காட்சிக்கு நல்ல வரவேற்பு இருந்த நிலையில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் நல்ல வசூல் செய்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால் படத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துகள் மற்றும் சில காட்சிகள் கேலிக்கும் கண்டனத்துக்கும் ஆளாகியுள்ளன. குறிப்பாக ரஜினி உடற்பயிற்சி செய்வது போன்ற காட்சிகளின் கிராபிக்ஸை பலர் கேலி செய்து வருகின்றனர். மேலும் ரஜினி என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடித்துள்ள கதாபாத்திரத்தை அவரது ரசிகர்கள் புகழ்ந்து பேசினாலும் சமூக ஆர்வலர்கள் அதன் மீது விமர்சனம் வைத்துள்ளனர். படத்தில் மனித உரிமைகள் ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவரை ரஜினி துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கையெழுத்து பெறுவது போன்ற காட்சியும் எதிர்ப்புகளை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் உள்ள சில காட்சிகள் போலிஸ், ராணுவம் உள்ளிட்ட சீருடை பணியாளர்களை இழிவுப் படுத்துவதாகவும் முன்னாள் சி.ஐ.எஸ்.எப் வீரர் மரியமைக்கேல் என்பவர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். அவரது மனுவில் இத்துடன் படத்தில் ரஜினி பேசும் ‘நான் போலிஸ் இல்லை ரௌடி’ என்ற வசனத்தை நீக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பாடம் கற்பிக்க வேண்டிய ஆசிரியர்களே பாலியல் தொல்லை தந்த அவலம்! கடுமையாக தண்டிக்க வலியுறுத்தும் ராமதாஸ்

0

பாடம் கற்பிக்க வேண்டிய ஆசிரியர்களே பாலியல் தொல்லை தந்த அவலம்! கடுமையாக தண்டிக்க வலியுறுத்தும் ராமதாஸ்

பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டிய ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுத்த அவலம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்த பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் நிலவும் நாடக காதல் போன்ற பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவரான மருத்துவர் ராமதாஸ் இது குறித்து இன்று

“மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த
ஆ‘சிறியர்கள்’ தண்டிக்கப்பட வேண்டும்!” என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தருமபுரி மாவட்டம் ஜக்கசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் இரு ஆசிரியர்கள், அதேபகுதியில் படித்து வந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தது ஆதாரங்களுடன் தெரியவந்துள்ளது. மாணவிகளுக்கு கல்வியும், ஒழுக்கமும் கற்றுத் தர வேண்டிய ஆசிரியர்கள் இத்தகைய ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

ஜக்கசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்றி வரும் சின்னமுத்து, லட்சுமணன் ஆகிய இருவரும் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வரும் 15 வயது மாணவி ஒருவருக்கு கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. பள்ளி வளாகத்திலேயே பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு வந்த அவர்கள், இதுகுறித்து வெளியில் யாரிடமும் தெரிவிக்கக்கூடாது என்றும் மிரட்டி வந்தனர். ஓரு கட்டத்தில் இரு ஆசிரியர்களின் பாலியல் சீண்டல்களைத் தாங்கிக் கொள்ள முடியாத அந்த மாணவி, நேற்று தமது உறவினர்களிடம் புகார் கூறியிருக்கிறார். அதைத் தொடர்ந்து ஊர்மக்கள் அனைவரும் திரண்டு சென்று, ஆசிரியர்கள் இருவரையும் பிடித்து மகேந்திரமங்கலம் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பள்ளிக்கூடம் என்பது மிகவும் புனிதமான இடம் ஆகும். அதேபோல், ஆசிரியர்களை பெற்றோருக்கு அடுத்தபடியாகவும், தெய்வத்திற்கு முன்பாகவும் வைத்து கொண்டாடும் சமுதாயம் நம்முடையது. அத்தகைய பெருமைக்குரிய ஆசிரியர்கள் அதற்கு ஏற்ற வகையில் நடந்து கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு கல்வியுடன், ஒழுக்கத்தையும் சேர்த்து கற்றுக் கொடுக்க வேண்டும். மாணவர்களின் மரியாதைக்குரியவர்களாகவும், முன்னுதாரணங்களாகவும் நடந்து கொள்ள வேண்டும். இவ்வுலகில் நமக்கு வழிகாட்டும் அனைத்து நூல்களும் ஆசிரியர்களை உயர்ந்த இடத்தில் வைத்து அழகு பார்க்கின்றன.

பாடம் கற்பிக்க வேண்டிய ஆசிரியர்களே பாலியல் தொல்லை தந்த அவலம்! கடுமையாக தண்டிக்க வலியுறுத்தும் ராமதாஸ்

ஆனால், ஜக்கசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் இரு ஆசிரியர்களின் செயல், மரியாதைக்குரிய ஆசிரியர் சமுதாயத்திற்கு அவப்பெயர் தேடித்தந்திருக்கிறது. பள்ளியில் அவர்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. தினமும் பள்ளிக்கூடத்திற்கு மது அருந்தி விட்டு வரும் அவர்கள் ஒழுக்கக்கேடாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டுகள் கூறப் படுகின்றன. மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பொதுமக்கள் பிடித்து, காவல்துறையிடம் ஒப்படைத்த போதும் கூட அவர்கள் இருவரும் குடிபோதையில் இருந்ததாகத் தான் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட மாணவி கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், பெற்றோரை இழந்து விட்ட அவர், தருமபுரி மாவட்டத்தில் உள்ள தமது பெரியம்மாவின் வீட்டில் தங்கி படித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையே அந்த ஆசிரியர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தவறு செய்துள்ளனர். அன்பும், அக்கறையும் காட்ட வேண்டிய ஒரு மாணவியிடம், அரக்கத்தனத்தைக் காட்டிய ஆசிரியர்களின் செயல் மன்னிக்க முடியாதது ஆகும். அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்ட ஆசிரியர்கள் சின்னமுத்து, லட்சுமணன் ஆகியோர் அப்பணியில் நீடிக்க தகுதியற்றவர்கள்.

ஆசிரியர்கள் இருவரையும் கண்டிக்க வேண்டிய தலைமை ஆசிரியரும் இந்த தீயச்செயல்களுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கூட்டணியில் அத்துமீறல் ஒரு மாணவியிடம் மட்டும் தான் அரங்கேற்றப்பட்டிருக்கிறதா? அல்லது வேறு எவரேனும் இவர்களின் மிருகத்தனத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். இரு ஆசிரியர்களையும், அவர்களுக்கு உடந்தையாக இருந்த தலைமையாசிரியரையும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்து, அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். அவர்கள் மீது போக்சோ சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்து கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழக அரசின் சார்பில் நிதி உதவி வழங்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, பாதுகாப்பான சூழலில் அம்மாணவி தொடர்ந்து கல்வி பயிலவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடுகள் அம்பலம்! உங்கள் பகுதியில் எவ்வளவு என்பதை அறிய உள்நுழையவும்

0

100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடுகள் அம்பலம்! உங்கள் பகுதியில் எவ்வளவு என்பதை அறிய உள்நுழையவும்

சில தினங்களுக்கு முன்னர் தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக திட்டத்தின் மூலமாக ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் செய்த முறைகேடுகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக கொண்டு வெளி கொண்டு வந்துள்ளார் 10 ரூபாய் இயக்கம் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் டாக்டர் நல்வினை விஸ்வராஜு.

https://bit.ly/2NdrzFr

உள் நுழைந்து பிறகு
State என்ற இடத்தில் TAMIL NADU என்று பதிவிட்டு அடுத்து உங்கள் District மாவட்டம் Block ஊராட்சி ஒன்றியம் Panchayat ஊராட்சி ஆகிய விபரங்களை பதிந்த பிறகு இல் Gram Shabha Date சமூக தனிகை கிராம சபை கூட்டம் தேதியை கிளிக் செய்து பிறகு Select Option என்ற இடத்தில் கொடுக்க்வும்

https://bit.ly/2NdrzFr

FM (நிதி முறைக்கேடு Financial Misappropration)

FD (நிதி இழப்பு Financial Diviation)
இரண்டும் முக்கியமாக கவணிக வேண்டிய முறைக்கேடுகள்
ஒவ்வொரு முறைக்கேடும் தனியாக பட்டியலிட்டு இருப்பார்கள்.

மாவட்டம் தோறும் நடைபெற்ற முறைகேடுகள்.

1 திருவண்ணாமலை ரூ. 347,50,83,307

  1. திருவள்ளூர் ரூ. 307,68,31,584
  2. கிருட்டிணகிரி ரூ. 293,86,05,325
  3. விழுப்புரம்+கள்ளக்குறிச்சி ரூ. 264,22,29,011
  4. காஞ்சிபுரம்+செங்கல்பட்டு ரூ. 253,96,37,762
  5. வேலூர்+ திருப்பத்தூர்+ இராணிப்பேட்டை ரூ. 239,90715,986
  6. தஞ்சாவூர் ரூ. 207,48,06,890
  7. திருச்சிராப்பள்ளி ரூ. 198,27,09,046
  8. கடலூர் ரூ. 178,48,65,703
  9. புதுக்கோட்டை ரூ. 169,79,19,024
  10. சிவகங்கை ரூ. 158,01,74,365
  11. சேலம் ரூ. 136,13,86,306
  12. திண்டுக்கல் ரூ. 126,91,82,401
    14 . திருப்பூர் ரூ. 102,05,41,773
  13. திருநெல்வேலி+தென்காசி ரூ. 101,69,07,418
  14. மதுரை ரூ. 74,37,39,525
  15. தூத்துக்குடி ரூ. 69,91,76,315
  16. நாமக்கல் ரூ. 66,89,73,227
  17. இராமநாதபுரம் ரூ. 63,17,40,659
  18. கரூர் ரூ. 55,82,92,492
  19. விருதுநகர் ரூ. 40,31,94,457
  20. ஈரோடு ரூ. 39,20,70,104
  21. பெரம்பலூர் ரூ. 35,63,81,861
  22. தருமபுரி ரூ. 34,60,72,028
  23. நாகப்பட்டினம் ரூ. 30,58,25,464
  24. கோயம்புத்தூர் ரூ. 26,15,17,705
  25. அரியலூர் ரூ 22,95,58,475
  26. திருவாரூர் ரூ 16,02,66,494
  27. கன்னியாகுமரி ரூ.18,50,59,037
  28. நீலகிரி ரூ. 15,34,31,095

மொத்தம்: ரூபாய் 4,204,23,14,332

தூக்கில் போடும் பணத்தை வைத்து தான் மகளின் திருமணம்! ஹேங்மேன் உருக்கம்!

0

தூக்கில் போடும் பணத்தை வைத்து தான் மகளின் திருமணம்! ஹேங்மேன் உருக்கம்!

நாடு முழுவதும் பரபரப்பைக் கிளப்பிய நிர்பயா கொலை வழக்கின் குற்றவாளிகள் வரும் ஜனவரி 22 ஆம் தேதி திஹார் சிறையில் வைத்து தூக்கில் போட இருக்கிறது சிறை நிர்வாகம்.

2012 ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் நள்ளிரவு நேரத்தில் மாணவி நிர்பயாவை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமாகக் கொலை செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து  இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட ராம்சிங், மகேஷ்சிங், வினய் சர்மா, பவன்குப்தா, அக்‌ஷய குமார் மற்றும் 16 வயது மைனர் சிறுவன் ஒருவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் சிறுவனுக்கு மட்டும் 3 ஆண்டு சிறைத் தண்டனையும் மற்றவர்களுக்கு தூக்கு தண்டனையும் விதித்தது நீதிமன்றம்.  

அதில் ஒரு குற்றவாளி சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார். 2013 ல் அறிவிக்கப்பட்ட தண்டனை பல மேல் முறையீடுகளால் 6 ஆண்டுகளாக தண்டனை நிறைவேற்றப்படாமல் இருந்தது.

தூக்கில் போடும் பணத்தை வைத்து தான் மகளின் திருமணம்! ஹேங்மேன் உருக்கம்!

இந்நிலையில் இந்த வழக்கில் விரைந்து தண்டனை அளிக்க வேண்டும் என நிர்பயாவின் தாய் ஆஷா தேவி மகளிர் அமைப்புகளுடன் சேர்ந்து போராடினார். இதையடுத்து இப்போது உயிரோடு இருக்கும் மற்ற நால்வருக்குமான தண்டனை வரும்  22 ஆம் தேதி நிறைவேற்றப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ள திஹார் சிறையில் ஹேங்மேன் மற்றும் தூக்குப் போடும் கயிறு  இல்லாததால் மீரட்டில் இருந்து பவான் ஜல்லார்ட் என்ற ஹேங்மேனும் நான்கு தூக்குக் கயிறுகளும் வரவழைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் பேசிய ஹேங்க் மேன் பவான் இந்த 4 பேரையும் தூக்கிலிட்டால் தனக்கு  நபருக்கு 25,000 ரூபாய் வீதம் ஒரு லட்சம் சம்பளமாகக் கிடைக்கும் எனவும் அதை வைத்து தான் தனது மகளின் திருமணத்தை முடிக்க இருப்பதாக அவர் சொல்லியுள்ளார்.

இதுபோல தண்டனை இல்லாத காலங்களில் அவருக்கு மாத சம்பளமாக 5,000 ரூபாய் மட்டுமே வழங்கப்படும் என சொல்லப்படுகிறது.

நிர்பயா, கொலை வழக்கு, தூக்கு தண்டனை, nirbaya, murder case, hang sentence

மாரி செல்வராஜ் படத்துக்காக கெட்டப் மாற்றிய தனுஷ்: கசிந்தது புகைப்படம் !

0

மாரி செல்வராஜ் படத்துக்காக கெட்டப் மாற்றிய தனுஷ்: கசிந்தது புகைப்படம் !

பரியேறும் பெருமாள் படத்துக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தை இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ்.

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படங்களில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற படங்களில் பரியேறும் பெருமாளும் ஒன்று. 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட முக்கிய விருதுகளில் இப்படம் விருதுகளை அள்ளியது. இந்த படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் அனைத்துத் தரப்பு ரசிகர்களாலும் பாரட்டப்பட்டார். இதையடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக இருக்கும் தனுஷ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார்.

மாரி செல்வராஜ் படத்துக்காக கெட்டப் மாற்றிய தனுஷ்: கசிந்தது புகைப்படம் !

இதையடுத்து கடந்த ஓராண்டாக நடந்த திரைக்கதை அமைக்கும் பணிகள் முடிவுற்று இப்போது கர்ணன் எனப் பெயர் சூட்டப்பட்டு அந்த படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. மாஞ்சோலை கலவரத்தில் கொல்லப்பட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தில் தனுஷ் தேயிலை தோட்ட தொழிலாளியாக நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட தனுஷின் புதிய புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த படத்துக்காக தனுஷ் தனது தோற்றம் மற்றும் சிகை ஆகியவற்றில் சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளார் என சொல்லப்படுகிறது.

அம்மாவும் மகனும் சேர்ந்து செய்து வந்த அசிங்கம்! காதலியின் மூலம் அனைத்தும் அம்பலம்

0

அம்மாவும் மகனும் சேர்ந்து செய்து வந்த அசிங்கம்! காதலியின் மூலம் அனைத்தும் அம்பலம்

தன்னை நம்பி வந்த காதலியை ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற வாலிபரை தக்க சமயத்தில் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

கல்பாக்கம் அருகிலுள்ள புதுப்பட்டினம் என்ற பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்த பெண் ஒருவர் சென்ற மாதம் 21 ஆம் தேதி முதல் திடீரென்று காணவில்லை என்று அவரது பெற்றோர் அருகிலுள்ள அப்பகுதியை சேர்ந்த காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர்.

இதனையடுத்து காணமல் போன மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரை வாங்கிக் கொண்ட காவல் துறையினர் அதனையடுத்து மாணவியை கண்டுபிடிக்கும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். காவல் துறையினர் மேற்கொண்ட இந்த விசாரணையின் போது அருகிலுள்ள ஆர்.எம்.ஐ நகர் பகுதியை சேர்ந்தவரான ஓட்டுநராக பணிபுரியும் கணேஷ் என்ற நபரின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து உடனடியாக காவல்துறையினர் சந்தேகத்திற்குரிய அவரிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையின் போது காவல் துறையினரே எதிர்பார்க்காத பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளது.

விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளதாவது, ஓட்டுனர் கணேஷ் என்பரும் அந்த மாணவியும் கடந்த சில வருடங்களாகவே காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று அந்த மாணவிக்கு ஆசைக்காட்டி அந்த சிறுமியை சென்னைக்கு இந்த கணேஷ் அழைத்து சென்றுள்ளார்.இதனையடுத்து அங்கிருந்து குஜராத் மாநிலத்திற்கு சென்ற அவர்கள் இருவரும் அங்கே திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

கணேஷின் தாயாரான சுகாசினி என்பவர் தனியார் டிராவல் ஏஜென்சி வைத்து நடத்தி வந்திருக்கிறார். மேலும் இவர் நடத்தி வரும் தன்னுடைய இந்த டிராவல் ஏஜென்சி மூலமாக தமிழ்நாட்டு பெண்களை குஜராத், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இயங்கி வரும் பாலியல் ஏஜென்ட்களுக்கு சுப்ளை செய்து வந்துள்ளார்.

இந்த விசாரணையின் மூலம் சிறுமி இருக்கும் இடத்தை அறிந்து கொண்ட காவல் துறையினர் தீவிரமாக செயல்பட்டு சிறுமியை மீட்டு எடுத்தனர். இதனையடுத்துபெண்களுக்கு எதிரான வன்கொடுமையில் ஈடுபட்ட கணேஷை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் இந்த குற்றத்தில் சம்பந்தப்பட்ட கணேஷின் தாயாரான சுஹாசினியையும் காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அம்மாவும் மகனும் சேர்ந்து செய்த இந்த அசிங்கமான செயலானது கல்பாக்கம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல் முறையாக தமிழ் சினிமாவில் காதல் மூலமாக கட்ட பஞ்சாயத்து செய்யும் சில ஆட்களின் உண்மை முகத்தை வெளிக்கொணரும் வகையில் திரௌபதி என்ற பெயரில் ஒரு திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.

பல்வேறு வகையான சர்ச்சைகளை கிளப்பிய அந்த திரைப்படம் பெண்களை ஏமாற்றும் நாடக காதல் என்ற வன்கொடுமை பற்றி விழிப்புணர்வு செய்ய எடுக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது போன்ற சம்பவங்கள் அந்த படக்குழுவினர் சொல்வது உண்மை என்றே உணர்த்துகிறது.

சமூக நீதியை சீரழிக்க துணிந்த பல்கலைகழகம்! கண்டிக்கும் மருத்துவர் ராமதாஸ்

0

சமூக நீதியை சீரழிக்க துணிந்த பல்கலைகழகம்! கண்டிக்கும் மருத்துவர் ராமதாஸ்

காலங்காலமாக கடைபிடித்துவரும் சமூக நீதியை சீரழிக்கும் வகையில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளுக்கு 54 ஆசிரியர்களை நியமிப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது குறித்து தமிழகத்தில் பல ஆண்டுகளாக சமூக நீதிக்காக போராடி வரும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்டித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் “பாரதிதாசன் பல்கலை.யில் இடஒதுக்கீட்டு முறை மாற்றம்: விசாரணை வேண்டும்!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளுக்கு 54 ஆசிரியர்களை நியமிப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் நியமனத்தில் காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறையை காற்றில் பறக்கவிட்டு, புதிய முறையில் ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க பல்கலைக் கழக நிர்வாகம் முடிவு செய்திருப்பது சமூகநீதிக்கு எதிரானதாகும். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள 28 துறைகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக 14 பேராசிரியர்கள், 14 இணைப் பேராசிரியர்கள், 26 உதவிப் பேராசிரியர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக ஆசிரியர் பணிக்கான இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை ஒவ்வொரு துறையும் ஓர் அலகாக கருதப்பட வேண்டும்; அதற்குள் 69% இடஒதுக்கீடு 200 புள்ளி ரோஸ்டர் முறையில் செயல்படுத்தப்பட வேண்டும் என்பது தான் தமிழ்நாட்டில் நீண்ட காலமாக கடைபிடிக்கப்படும் மரபாகும். ஆனால், இப்போது துறைகளுக்கு பதிலாக ஒட்டுமொத்த பல்கலைக்கழகமும் ஒரே அலகாக கருதப்பட்டு, 69% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

ஒவ்வொரு துறையையும் ஓர் அலகாக கருதி இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கும், ஒட்டுமொத்த பல்கலைக்கழகத்தையும் ஒரே அலகாக கருதி இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஒவ்வொரு துறையையும் ஓர் அலகாக கருதி இடஒதுக்கீட்டை செயல்படுத்தும் போது, ஒவ்வொரு துறையிலும் அனைத்து சமூகப் பிரிவினருக்கும் பணி நியமன வாய்ப்பு கிடைக்கும். இது தான் சமூகநீதியை தழைக்கச் செய்யும். மாறாக, ஒட்டுமொத்த பல்கலைக்கழகத்தையும் ஓர் அலகாக கருதி இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டால், ஒரு துறையில் முழுக்க முழுக்க ஒரே இடஒதுக்கீட்டுப் பிரிவினரும், இன்னொரு துறையில் முழுக்க முழுக்க பொதுப்பிரிவைச் சேர்ந்த உயர்சாதியினரும் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதனால் சமூக நீதி சீரழிக்கப்படும். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு துறையிலும் எந்த சமூகப்பிரிவு ஆசிரியர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்களோ, அந்த பிரிவு மாணவர்களுக்கு மட்டும் சலுகைகள் வழங்கப்படுவதற்கும், மற்றவர்கள் பழிவாங்கப்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. இது பல்கலைக்கழகக் கல்வி சூழலையே மாற்றி விடும்.

இதற்கெல்லாம் மேலாக, இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த துறை அலகை மாற்றிவிட்டு பல்கலைக்கழக அலகை அறிமுகப்படுத்தும்போது, 200% ரோஸ்டர் சுழற்சி முழுமையாக முடிவடைந்திருக்காத பட்சத்தில், இடஒதுக்கீட்டுப் பிரிவினர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். உதாரணமாக ‘துறை அலகு’ முறையில், கடந்த நியமனத்தின் போது ஒரு துறையின் பேராசிரியர் பணி பொதுப்பிரிவுக்கு வழங்கப்பட்டிருந்தால், அதற்கு அடுத்த 3 நியமனங்கள் முறையே பட்டியலினம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு வழங்கப்பட வேண்டும். ஆனால், இப்போது ‘துறை அலகு’ பல்கலைக்கழக அலகாக மாற்றப்படும் போது, ஏற்கனவே பணி நியமனம் பெற்ற பொதுப்பிரிவுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும். இதனால் இடஒதுக்கீட்டுப் பிரிவினர் கடுமையாக பாதிக்கப்படுவர். இது மிக மோசமான சமூகநீதியாகும்.

இவை ஒருபுறமிருக்க ‘துறை அலகு’ முறையிலிருந்து ‘பல்கலைக்கழக அலகு’ முறைக்கு மாறுவதற்கு பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி அளித்தவர் யார்? என்பது தான் உடனடியாக விடை காணப்பட வேண்டிய வினா ஆகும். தமிழக பல்கலைக்கழகங்களில் காலங்காலமாக ‘துறை அலகு’ முறை தான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் இடஒதுக்கீட்டுக்கு முக்கியத்துவம் அளிக்காத மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் வட இந்திய பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழக அலகு முறை கடைபிடிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், ‘துறை அலகு’ முறை தான் சிறந்தது என்பதால் மத்திய அரசுப் பல்கலைக்கழகங்களில் அம்முறையையே நடைமுறைப் படுத்த 2017-ஆம் ஆண்டில் ஆணையிட்டது. ஆனால், அதை ஏற்காத மத்திய அரசு, சட்டத்திருத்தத்தின் மூலம் மத்தியப் பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழக அலகு முறையையே மீண்டும் கொண்டுவந்தது.

ஆனால், அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்போ, மத்திய அரசின் சட்டத் திருத்தமோ தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது. எனவே, தமிழகத்தில் ‘பல்கலைக்கழக அலகு’ முறையை செயல்படுத்தத் தேவையில்லை. அநீதியான அந்த முறையை செயல்படுத்துவதாக இருந்தாலும் தமிழக அரசு முறைப்படி கொள்கை முடிவு எடுத்து அரசாணை பிறப்பிக்க வேண்டும். ஆனால், இத்தகைய நடைமுறைகள் எதையும் கடைபிடிக்காமல், ஆட்சிக் குழுவில் தன்னிச்சையாக தீர்மானம் நிறைவேற்றி ‘பல்கலைக்கழக அலகு’ முறையை செயல்படுத்த பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? அரசாங்கத்தை மதிக்காமல், அரசு கொள்கையை காலில் போட்டு மிதித்து விட்டு, சமூக அநீதி திணிக்கப்பட்டதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதைக் கண்டறிய விரிவான விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்; தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ‘பல்கலைக்கழக அலகு’ இடஒதுக்கீட்டு முறை தடுக்கப்படாவிட்டால், மற்ற பல்கலைக்கழகங்களும் அதையே கடைபிடிக்கத் தொடங்கிவிடும். அது சமூகநீதியை குழிதோண்டி புதைத்து விடும். எனவே, பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையை ரத்து செய்து விட்டு, ‘துறை அலகு’ இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பேராசிரியர்களை நியமிக்கும் வகையில் புதிய நியமன அறிவிக்கையை வெளியிடும்படி பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அரசு ஆணையிட வேண்டும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

எனக்கு எண்ட் கார்டா? இன்னும் 5 வருடத்துக்கு ஓய்வு கிடையாது! 40 வயது கெயில் முடிவு!

0

எனக்கு எண்ட் கார்டா? இன்னும் 5 வருடத்துக்கு ஓய்வு கிடையாது! 40 வயது கெயில் முடிவு!

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் 45 வயது வரை தான் கிரிக்கெட் விளையாடுவேன் என அறிவித்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்கள் நாடு, கண்டம் ஆகியவற்றைத் தாண்டியும் சில வீரர்களைதான் தங்கள் ஆதர்ச நாயகனாக கொண்டாடுவார்கள். அந்த வரிசையில் மேற்கிந்திய தீவுகள் வீரர் கிறிஸ் கெய்லுக்கு உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் ரசிகர் பட்டாளம் உண்டு. அதிரடி ஆட்டத்துக்குப் பேர் போன கெய்ல் கடந்த சில ஆண்டுகளாக அந்நாட்டு தேசிய அணியில் விளையாடுவதை விட ஐபிஎல், பிக்பாஷ் போன்ற லீக் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பையோடு கிரிக்கெட்டுக்கு முழுக்குப் போடப்போவதாக அறிவித்த அவர் பின்னர் அந்த முடிவை மாற்றிக்கொண்டார். அதன் பின்னரும் தங்கள் அணிக்காக தொடர்ந்து விளையாடாமல் 20 ஓவர் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது 40 வயதாகும் கெய்ல் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் ‘இப்போதைக்கு ஓய்வை பற்றி எந்த எண்ணமும் இல்லை. எனது உடல் இன்னும் கிரிக்கெட்டுக்கு ஏற்றார்போல உள்ளது. நாளாக நாளாக கிரிக்கெட் மீதான காதல் அதிகமாகிக் கொண்டே போகிறது. 45 வரை நான் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவேன்’ என அறிவித்துள்ளார்.

தற்போது 40 வயதாகும் கெய்ல் இன்னும் 5 ஆண்டுகளுக்கு விளையாடுவேன் என்று அறிவித்திருப்பது அவரது ரசிகர்களுக்க் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. யூனிவர்சல் பாஸ் என அழைக்கப்படும் கெய்ல் டி 20 போட்டிகளில் அதிக ரன், அதிக சதம், அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கன்னியாகுமரியில் உதவி ஆய்வாளர் சுட்டுக் கொலை! மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!!

0

கன்னியாகுமரியில் உதவி ஆய்வாளர் சுட்டுக் கொலை! மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!!

கன்னியாகுமரி மாவட்டத்தின் கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளையில் படந்தாலுமூடு என்ற பகுதி சோதனைச் சாவடியில் வழக்கம்போல காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். உதவி ஆய்வாளர் வில்சன் அவ்வழியே வந்த வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில், திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினார். காரில் இருந்தவர்கள் மீது சந்தேகம் ஏற்பட சோதனையை தொடர்ந்த போது திடீரென காரில் இருந்த மர்ம நபர்கள் உதவி ஆய்வாளர் வில்சனை பலமுறை சுட்டதில் மார்பு, தலை மற்றும் கால்பகுதியில் குண்டு பாய்ந்து அங்கேயே சரிந்து விழுந்தார்.

துப்பாக்கி சத்தம் கேட்டு மற்ற காவலர்கள் ஓடி வருவதற்குள் காரில் இருந்த மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். அங்கிருந்த மசூதி வழியாக இருவர் தப்பிச் ஓடும் வீடியோவின் பேரில் கன்னியாகுமரியை சேர்ந்த தவ்பீக், ஷமீம் கைது செய்யப்பட்டு அவர்களின் புகைப்படமும் வெளியிடப்பட்டது.

கன்னியாகுமரியில் உதவி ஆய்வாளர் சுட்டுக் கொலை! மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!!

வில்சனை மீட்டு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற போது வழியிலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து, மர்ம நபர்கள் யார் உதவி ஆய்வாளரை சுட காரணம் என்ன என்பது பற்றி பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. மர்ம நபர்கள் வந்த வாகனத்தின் எண்ணை போலீஸ் ஆய்வு செய்ததில் ஒட்டன்சத்திரம் ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டதாக தகவல் கிடைத்தது.

இச்சம்பவம் தொடர்பாக சட்டசபையில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, குற்றவாளிகளை உடனே கைது செய்யுமாறு தென்மண்டல ஐஜி_யிடம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். உதவி ஆய்வாளர் வில்சன் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தரப்படும் என்றும் தெரிவித்தார்.

கன்னியாகுமரியில் உதவி ஆய்வாளர் சுட்டுக் கொலை! மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!!

மேலும், தப்பிச் சென்ற குற்றவாளிகள் கேரளாவில் தஞ்சமடைய வாய்ப்புண்டு எனவும் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.