Home Blog Page 5806

தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்ட தர்பார்! 300 கோடி பட்ஜெட் அவுட் ; படக்குழுவினர் அதிர்ச்சி!!

0

தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்ட தர்பார்! 300 கோடி பட்ஜெட் அவுட் ; படக்குழுவினர் அதிர்ச்சி!!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படம் 300 கோடி செலவில் மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு, இன்று காலை 4 மணிக்கு சிறப்பு காட்சிகள் ரசிகர்களின் வரவேற்புடன் பல்வேறு திரையரங்குளில் வெளியிடப்பட்டது. சில தியேட்டர்களில் காலை 9 மணிக்கு மேல் முதல் காட்சி வெளியிட்டனர்.

தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்ட தர்பார்! 300 கோடி பட்ஜெட் அவுட் ; படக்குழுவினர் அதிர்ச்சி!!

தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் பேனர் வைத்து, நடனமாடி ரஜினியின் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வரும் வேளையில், இணையத்தில் புதுப்படங்களை சட்டத்திற்கு புறம்பாக வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் மூலம் தர்பார் படமும் வெளியாகியுள்ளது.

இந்த செய்தியை அறிந்த தர்பார் படக்குழுவினரும், ரஜினியின் ரசிகர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை தடைசெய்ய வேண்டும் என்று பல நாட்களாக சினிமா துறையை சார்ந்தவர்கள் போராடியும் தடை செய்ய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொங்கல் பரிசும், சிறப்பு பேருந்துகளும்! தமிழக அரசின் தரமான ஏற்பாடு..!!

0

பொங்கல் பரிசும், சிறப்பு பேருந்துகளும்; தமிழக அரசின் தரமான ஏற்பாடு..!!

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைகளின் அடிப்படையில் அரிசி, ஏலக்காய், கரும்பு, சர்க்கரை, உலர் திராட்சை ஆகிய பொங்கல் பரிசு உணவு வகைகளும் 1000 ரூபாய் பணமும் வழங்கப்படுகிறது.

இன்றிலிருந்து வரும் 12 ஆம் தேதி வரை பொங்கல் பரிசு வழங்கப்படும், பொருட்களை சரியான நேரத்தில் வாங்காதவர்கள் 13 ஆம் தேதி வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயபுரத்தில் இருக்கும் நியாயவிலை கடைக்கு நேரில் சென்று அமைச்சர் ஜெயக்குமார் பரிசு வழங்கும்  நிகழ்வை தொடங்கி வைத்தார்.

இதையடுத்து, நியாய விலை கடைகள் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை திறக்கப்பட்டு பொங்கல் பரிசுப் பொருட்கள் வழக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

பொங்கல் பரிசும், சிறப்பு பேருந்துகளும்! தமிழக அரசின் தரமான ஏற்பாடு..!!

பொங்கல் பண்டிகைக்காக வெளியூரில் இருந்து தனது ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிற்கு ஏற்ப  மொத்தம் 30 ஆயிரத்து 120 பேருந்துகள் சிறப்பு பேருந்துகள்  உட்பட இயக்கப்படும் என்றும், சென்னையில் இருந்து மட்டும் 16 ஆயிரத்து
75 பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவை தொடங்கி வைத்து பேசினார்.

பொங்கல் பரிசும், சிறப்பு பேருந்துகளும்! தமிழக அரசின் தரமான ஏற்பாடு..!!

தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பது பற்றி புகார் வந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

காலில் விழுந்தும் கருணையில்லை! ஓடுகாலி மகளால் தற்கொலை செய்து கொண்ட விவசாயி! வேலூர் அருகே பரபரப்பு.

0

காலில் விழுந்தும் கருணையில்லை! ஓடுகாலி மகளால் தற்கொலை செய்து கொண்ட விவசாயி! வேலூர் அருகே பரபரப்பு.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே வள்ளிமலை கோட்டை நத்தம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ரவி. இவரின் மகளான திவிதாவும் மேல்பாடி காலனியை சேர்ந்த இம்மானுவேல் மகன் சியாம் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமில்லாமல் திவிதாவின் பெற்றோருக்கு இத்திருமணத்தில் விருப்பமில்லை.

கடந்த ஜனவரி இரண்டாம் தேதி யாருக்கும் தெரியாமல் வீட்டைவிட்டு ஓடிப்போய் பெங்களூரில் திருமணம் செய்துவிட்டு மீண்டும் வேலூருக்கு திரும்பினர். மகளை
காணவில்லையென்று ரவி மேல்பாடி காவல் நிலைத்தில் புகார் கொடுத்திருந்தார். இதையடுத்து திவிதா காதலனுடன் நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்தில் தனக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்று மனு கொடுத்தார்.

காலில் விழுந்தும் கருணையில்லை! ஓடுகாலி மகளால் தற்கொலை செய்து கொண்ட விவசாயி! வேலூர் அருகே பரபரப்பு.

கலெக்டர் சண்முக சுந்தரத்தின் உத்தரவின் பேரில், திவிதாவின் பெற்றோரை
விசாரணைக்கு மேல்பாடி காவல்நிலையம் அழைத்து வரப்பட்டனர். மணக்கோலத்தில் வந்த திவிதாவை கண்டதும் விவசாயி ரவி கண்கலங்கி அழுக ஆரம்பித்தார்.

விசாரணையில், தன்னுடன் வந்துவிடுமாறு திவிதாவின் காலில் விழுந்து ரவி கெஞ்சியும் கேட்கவில்லை. அந்த பெண் நகர்ந்த போது ரவியின் முகத்தில் கால் எட்டி உதைத்தது போல் மேலே பட்டது. “அப்பாவையே எட்டி உதைக்கிறீயா” என்று கேட்டுவிட்டு ரவி வேகமாக வெளியே கிளம்பினார்.

விரக்தியுடன் வீட்டிற்கு சென்ற விவசாயி ரவி, ஓடுகாலி மகளால் ஏற்பட்ட அவமானத்தை தாங்க முடியாமல் பூச்சி மருந்து குடித்து மயக்கத்தில் விழுந்தார். மயங்கிய ரவியை குடும்பத்தினர் மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உடல்கூறு ஆய்விற்காக ரவியில் உடல் வேலூர் அடுகம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் வள்ளிமலை பகுதியில் இரு பிரிவினருக்கும் மோதல் ஏற்படும் என்கிற காரணத்தால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

விவசாயி ரவியின் இறப்பு அவர்களின் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காமத்தை தவிர எதைப் பற்றியும் சிந்திக்காதவர்கள் அவர்கள்! மனம் திறந்த பத்திரிக்கையாளர் பனிமலர்

0

காமத்தை தவிர எதைப் பற்றியும் சிந்திக்காதவர்கள் அவர்கள்! மனம் திறந்த பத்திரிக்கையாளர் பனிமலர்

பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பின்னர் பல்வேறு சேனல்களில் பணியாற்றிய பனிமலர் தற்போது அரசியல் கட்சி ஒன்றின் ஆதரவு பெற்ற தொலைக்காட்சியில் முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார்.

கோயம்பத்தூர் பகுதியை சேர்ந்தவரான பனிமலர் திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் விவாகரத்து வாங்கி தனியாக வசித்து வருகிறார். பெரியார்வாதியான இவர் சமீபத்தில் ஒரு முறை பெரியார் இருந்திருந்தால் அவரையே திருமணம் செய்திருப்பேன் என கருத்து தெரிவித்து சர்ச்சையை கிளப்பினார்.

இதனையடுத்து தொடர்ந்து சமூக வலைதளங்களில் சாதி மறுப்பு மற்றும் மதச்சார்பின்மை என்ற பெயரில் இவர் பதிவிடும் கருத்துக்கள் தொடர்ந்து ஒரு சாராரையே விமர்சனம் செய்து வருவதால் அந்த தரப்பினர் இவருடைய கருத்துக்கு விமர்சனம் செய்து பதிவிடுகின்றனர்.

இவ்வாறு பதிவிடும் நபர்களில் பலர் இவரை பெண் என்றும் பார்க்காமல் தொடர்ந்து தகாத வார்த்தைகளால் விமர்சித்து வந்தனர். ஆரம்பத்தில் இதையெல்லாம் கண்டுகொள்ளாத பத்திரிக்கையாளரான பனிமலர் தற்போது அவர்களையெல்லாம் விமர்சிக்கும் வகையில் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

இதில் மறைமுகமாக பாஜக மற்றும் நாம் தமிழர் தொண்டர்களை குறிப்பிடும் வகையில் விமர்சனம் செய்துள்ளார்.

இந்நிலையில் எதற்கும் அசராத அவரது ரசிகர்கள் மீண்டும் வழக்கம் போல விமர்சன பதில்களை பதிவிட்டு வருகின்றனர். பனிமலரின் இந்த கருத்துக்கு வந்த விமர்சனங்களில் சில உங்களின் பார்வைக்காக.

https://twitter.com/Tamilrac/status/1214821411014840320

இவர் சமீபத்தில் தான் சினிமா ஹீரோயின் போல படு கவர்ச்சியான படத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினர். இந்நிலையில் அடுத்த சர்ச்சை கருத்தை வெளியிட்டுள்ளார்.

பனிமலர் வெளியிட்ட கவர்ச்சியான படங்கள் பற்றிய தகவலுக்கு கீழுள்ள லிங்கில் செல்லுங்கள்.

கவர்ச்சியில் சினிமா ஹீரோயினையே மிஞ்சும் பத்திரிக்கையாளர் பனிமலர்! வைரலாகும் புகைப்படம்

டிக் டாக் செயலியும், அதிகரிக்கும் குற்றங்களும்; அன்றே எச்சரித்த ராமதாஸ்!

0

டிக் டாக் செயலியும், அதிகரிக்கும் குற்றங்களும்; “அன்றே எச்சரித்த ராமதாஸ்!

சம்பவம் 1 : தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை போலீசார் வளாகத்தின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறை வாகனத்தின் மீது ஏறி 3 இளைஞர்கள் டிக் டாக்கில் சினிமா பாடலுக்கு ஏற்றவாறு வீடியோ எடுத்தனர். இந்த விசயம் காவல்துறைக்கு தெரியவர மூன்று இளைஞர்களையும் அழைத்து எச்சரித்தது மட்டுமில்லாமல்,

டிக் டாக் செயலியும், அதிகரிக்கும் குற்றங்களும்; அன்றே எச்சரித்த ராமதாஸ்!

தூத்துக்குடி மார்க்கெட் சிக்னலில் 8 மணி நேரம் போக்குவரத்தை சரி செய்யும் வேலையை தண்டனையாக கொடுத்தார்கள்.
இளைஞர்களை நல்வழிப்படுத்தும் நோக்கத்திலும் காவல்துறை பணியின் சிரமத்தை உணர வேண்டும் என்பதற்காகவும் இந்த தண்டனை கொடுத்ததாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.

சம்பவம் 2 : சென்னை அம்பத்தூரை சேர்ந்த தயாநிதி என்பவர் போதை பொருட்களும், கொலை செய்யும் ஆயுதங்களையும் டிக் டாக் வீடியோவில் பதிவிட்டதால் சமூக அமைதிக்கு ஊறுவிக்கும் வகையிலும், கஞ்சா போன்ற சட்டவிரோத செயல்களுக்காகவும் கைது செய்யப்பட்டார்.

சம்பவம் 3 : நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே குறிஞ்சிக்குளம் கிராமத்தில் மாயாண்டி என்பவரின் சொல்போன் உதவியில் தொடர்ந்து டிக் டாக் வீடியோவை பதிவிட்ட 9 வயது சிறுவன் கொம்பையா அதே  மாயாண்டியால் ஓரினச் சேர்க்கைக்காக முட்புதரில் கொல்லப்பட்டான்.

சம்பவம் 4 : தனது கணவன் சிங்கப்பூரில் இருந்த காரணத்தால் தனிமையை தவிர்க்க நினைத்த வினிதா என்கிற பெண்மணி அபி என்பவருடன் டிக் டாக்கில் நெருங்கி பழகியதால் நாளைடைவில் வினிதாவும்,அபியும் 25 சவரன் நகைகளுடன் வீட்டை விட்டு ஓடிப்போன சம்பவம் குடும்பத்தில் பிரச்சினையாகி அந்த குடும்பமே நிம்மதியற்று போனது.

சம்பவம் 5 : கேரளா அருகே டிக் டாக் மூலமாக தொடர்பாகி ஜோடியாக ஆடிப்பாடி வந்த காதலர்களின் திருமணத்திற்கு பெண் வீட்டார் ஏற்கமறுத்த காரணத்தால் காதலி ஆஷிகா தனது காதலனால் கொல்லப்பட்டார்.

சம்பவம் 6 : கிருஷ்ணகிரி பாரதியார் நகரைச் சேர்ந்த ரேவதி என்கிற பெண்மணி பொழுதுபோக்கிற்காக டிக் டாக் பயன்படுத்த ஆரம்பித்தார். இவருடன் டிக் டாக்கில் ஈரோட்டை சேர்ந்த மோகன்குமார் என்பவர் நெருங்கி பழக ஆரம்பித்தார், ஒரு கட்டத்தில் மோகன்குமார் பாலியல் தொல்லை கொடுத்தது அல்லாமல் ரேவதியின் வீட்டிற்கே நேரில் வந்து பெரும் பிரச்சினை ஆனது.

கலை, நடனம் மற்றும் பொழுதுபோக்கிற்காக உண்டாக்கப்பட்டதே இந்த டிக் டாக் செயலி. இந்த செயலியினால் சமூகத்தில் பல்வேறு கொலைகளும், குற்றங்களும் தொடர்ந்து
நடந்து வருவதாலும், பல்வேறு பெண்களும் குடும்பங்களும் பாதிக்கப்படுவதை தவிர்க்க இந்த டிக் டாக் செயலியை தடைசெய்ய வேண்டும் என்று கடந்த வருடம் ஜனவரி 2 ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் எச்சரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல பெண்களிடம் உல்லாசம் ; 50 லட்சம் மோசடி செய்த கில்மா பார்ட்டி கைது ; சேலத்தில் பரபரப்பு சம்பவம்!

0

பல பெண்களிடம் உல்லாசம் ; 50 லட்சம் மோசடி செய்த கில்மா பார்ட்டி கைது ; சேலத்தில் பரபரப்பு சம்பவம்!

சேலம் மாவட்டம் அம்மாபாளையத்தை சேர்ந்த டேவிட் என்பவர் மீது தனக்கு வேலை தருவதாக கூறி வாங்கிய 4.25 லட்சம் பணத்தை திருப்பி தராமல் பணமோசடி செய்ததாக சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த அஸ்ரப் அலி என்பவர் சூரமங்கலம் காவல்துறையில் புகார் கொடுத்திருந்தார்.

இன்ஜினியரிங் படிப்பு முடித்த அஸ்ரப் அலி வேலை தேடி பெங்களூர் தனியார் நிறுவனத்தின் நேர்முகத் தேர்வுக்கு சென்று திரும்பிய போது பேருந்தில் உடன் பயணித்த டேவிட் என்ற என்பவருடன் தொடர்பு ஏற்பட்டு வேலை நிமித்தமாக இருவரும் தொடர்ந்து பேசிவந்த சூழலில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசைகாட்டி நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட பணத்தை டேவிட் திட்டமிட்டு வாங்கியுள்ளார்.

பணம் வாங்கி பல நாட்களாகியும் வேலை வாங்கி தரவில்லை, பணத்தையும் திருப்பி தராத காரணத்தால் காவல்துறையின் புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கியது விசாரணைக்கு பின்பு பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசுவேலை, வெளிநாட்டு வேலை வாங்கிக் கொடுக்க மேல்மட்டத்தில் ஆள் இருப்பதாக கூறி 5 ஆண்டுகளில் மட்டும் 62 நபர்களிடம் ஐம்பது லட்சத்திற்கும் மேற்பட்ட பணமோசடி செய்தது தெரிய வந்தது. மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பல பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியதும், கள்ளக்காதலிகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மோசடி செய்த பணத்தை மனைவியர் மற்றும் கள்ளக்காதலிகளிடம் கொடுத்து உல்லாச வாழ்க்கை நடத்தியதை காவல்துறைக்கு கொடுத்த வாக்குமூலத்தில் மாற்றுத்திறனாளி டேவிட் தெரிவித்துள்ளான். இச்சம்பவம் காவல்துறை மற்றும் பணம் கொடுத்து ஏமாந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசு எடுத்த தைரியமான முடிவு! தேவையற்ற மத்திய அரசின் தலையீட்டை கண்டிக்கும் மருத்துவர் ராமதாஸ்

0

தமிழக அரசு எடுத்த தைரியமான முடிவு! தேவையற்ற மத்திய அரசின் தலையீட்டை கண்டிக்கும் மருத்துவர் ராமதாஸ்

தமிழக அரசின் சார்பில் 7 தமிழர் விடுதலைக்காக எடுக்கப்பட்ட முடிவில் சம்பந்தமே இல்லாமல் மத்திய அரசு தலையிடுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தொடர்ந்து தமிழர்களின் நலனிற்காக குரல் கொடுத்து வரும் மருத்துவர் ராமதாஸ் இது குறித்து இன்று அவர் “7 தமிழர் விடுதலை வழக்கு: மத்திய அரசின் குறுக்கீடு தேவையற்றது!” என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தமிழ்நாடு அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று தம்மை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி தொடர்ந்துள்ள வழக்கில், 7 தமிழர்களையும் விடுதலை செய்யக் கூடாது என்று மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் முறையிட்டிருக்கிறார். 7 தமிழர்கள் விடுதலை குறித்த இந்த வழக்கில் மத்திய அரசின் தலையீடு சிறிதும் தேவையற்றது; அநீதியானது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின்படி, பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 6-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனடிப்படையில் தான் தமிழக அமைச்சரவை 09.09.2018 அன்று கூடி 7 தமிழர்களை விடுதலை செய்வதற்கு பரிந்துரைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றி தமிழக ஆளுனருக்கு அனுப்பி வைத்தது. அதனடிப்படையில் தம்மை விடுதலை செய்யாதது சட்டவிரோதம் என்றும், தம்மை விடுதலை செய்யும்படி ஆணையிட வேண்டும் என்றும் கோரி தான் நளினி வழக்கு தொடர்ந்துள்ளார். ஆளுனரின் செயல்பாடின்மை குறித்த இந்த வழக்கில் மத்திய அரசு சேர்க்கப்படவில்லை; மத்திய அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. இது முழுக்க முழுக்க தமிழக ஆளுனர், தமிழக அரசு, மனுதாரர் நளினி ஆகியோர் மட்டுமே சம்பந்தப்பட்ட வழக்கு ஆகும்.

இந்த வழக்கில் மத்திய அரசின் சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் எந்த அடிப்படையில், தமிழக தலைமைச் செயலாளருக்கு மத்திய உள்துறை செயலாளர் கடந்த 18.04.2018 அன்று எழுதிய கடிதத்தை தாக்கல் செய்தார் என்று தெரியவில்லை. மத்திய அரசின் ஆணைப்படியோ அல்லது அனுமதி பெற்றோ இந்தக் கடிதத்தை அவர் தாக்கல் செய்தாரா…. அல்லது தனிச்சையாக செயல்பட்டாரா? என்பதும் தெரியவில்லை. ஆனால், இந்த வழக்கில் தலையிட மத்திய அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது. இதற்கு முன் 7 தமிழர் விடுதலை குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ஆளுனர் விளக்கம் கேட்டிருப்பதாக செய்திகள் வெளியான போது, அதை மறுத்த ஆளுனர் மாளிகை, இந்த விஷயத்தில் ஆளுனரே இறுதி முடிவு எடுப்பார்; இதில் மததிய அரசு தலையிட முடியாது என்று விளக்கமளித்தது. அவ்வாறு இருக்கும் போது ஆளுனருக்கு எதிரான வழக்கில் மத்திய அரசு எவ்வாறு தலையிட முடியும்?

இவ்வழக்கில் மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ள கடிதம் 2018&ஆம் ஆண்டு தமிழக தலைமைச் செயலாளருக்கு மத்திய உள்துறை செயலர் எழுதியதாகும். 7 தமிழர்கள் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு முன்வைக்கும் காரணங்கள் அந்தக் கடிதத்தில் இடம் பெற்றுள்ளன. அவை எதுவும் புதிதல்ல. அக்கடிதம் 2018&ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10&ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் இடம்பெற்றுள்ள அனைத்து அம்சங்கள் குறித்தும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்ஹா, கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் மிக விரிவாக விவாதிக்கப்பட்டது. அதன் முடிவில் அந்தக் காரணங்கள் அனைத்தையும் நிராகரித்து விட்டு தான் 7 தமிழர்களையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசும், ஆளுனரும் முடிவெடுக்கலாம் என்று நீதியரசர் ரஞ்சன் கோகாய் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு 06.09.2018 அன்று தீர்ப்பளித்தது.

7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக மத்திய அரசு கூறிய காரணங்கள் அனைத்தையும் உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டு, அடுத்தக்கட்டத்துக்கு சென்று விட்டது. இந்த நிலையில், நிராகரிக்கப்பட்ட அம்சங்களை மீண்டும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து 7 தமிழர் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு வாதாடுவது நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதற்கும், விடுதலையை தாமதப்படுத்துவதற்கும் மட்டுமே பயன்படும். இது மனித உரிமைக்கும், இயற்கை நீதிக்கும் கூட எதிரான செயலாகும். எனவே, 7 தமிழர் விடுதலையில் மத்திய அரசு தேவையின்றி குறுக்கிடுவதை தவிர்த்து. அந்தக் கடிதத்தை திரும்பப்பெற வேண்டும்.

பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலை தொடர்பான விஷயத்தில் எந்த சர்ச்சையும் இல்லை. 7 தமிழர்களை விடுதலை செய்ய பரிந்துரை செய்து தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை ஏற்றுக் கொள்வதைத் தவிர தமிழக ஆளுனருக்கு வேறு வழியில்லை. இந்த விஷயத்தில் முடிவெடுப்பதில் கால அவகாசம் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்பதை காரணம்காட்டி, காலவரையின்றி ஆளுனர் தாமதம் செய்வது அநீதியாகும். தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று 7 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய ஆளுனர் ஆணையிட வேண்டும்; அவருக்கு ஏதேனும் மாற்றுக் கருத்து இருந்தால் பரிந்துரையை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்ப வேண்டும்.

அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுனர் திருப்பி அனுப்பும் பட்சத்தில், தாமதிக்காமல், அமைச்சரவை மீண்டும் கூடி, அதேபோன்ற மற்றொரு பரிந்துரையை நிறைவேற்றி அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பும் பட்சத்தில் அதை ஏற்று அடுத்த சில நாட்களில் 7 தமிழர்களையும் ஆளுனர் விடுவித்தே ஆக வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

அரசு வேலைக்கு ஆசைப்படாதிங்க! மீன் சாப்பிடுங்க கண்ணுக்கு நல்லது ! அமைச்சரின் புதிய ஆலோசனை?

0

அரசு வேலைக்கு ஆசைப்படாதிங்க! மீன் சாப்பிடுங்க கண்ணுக்கு நல்லது ! அமைச்சரின் புதிய ஆலோசனை?

இன்றைய கால இளைஞர்கள் அரசு வேலைக்கு ஆசைப்படாமல் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் தமிழக சட்டசபைக் கூட்டத் தொடரில் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபைக் கூட்டத் தொடரின் கேள்வி நேரத்தின் போது பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், இளைஞர்கள் அரசு வேலைக்கு ஆசைப்படாமல் தொழில் தொடங்க முயற்சி செய்ய வேண்டும். மீன் வளர்ப்பு தொழிலுக்கு சிறப்பான முறையில் அரசு மானியம் வழங்க தயாராக உள்ளது.

ஒரு ஹெக்டரில் மீன் வளர்ப்பு செய்தால் பத்து மாதங்களில் ஒரு லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டலாம் என்றும், மீன் சாப்பிட்டால் கண் பார்வை கோளாறு, ஹார்ட் அட்டாக், கேன்சர் போன்ற நோய்கள் வராது என்றும் கூறினார்.

பார்வை இல்லாமல் பயணம் ; பரவசமூட்டும் 9 வயது சிறுவனின் சாதனை..?

0

பார்வை இல்லாமல் பயணம் ; பரவசமூட்டும் 9 வயது சிறுவனின் சாதனை..?

கண் பார்வை இல்லாமல் சிறிது தூரம் நடப்பதே சவால்தான் ஆனால், தனது இரு கண்களையும் கட்டிக்கொண்டு 35 கிலோமீட்டர் தூரம் சைக்கிளை ஓட்டி சாதனை படைத்திருக்கிறார் ஒரு சிறுவன்.

பார்வை இல்லாமல் பயணம் ; பரவசமூட்டும் 9 வயது சிறுவனின் சாதனை..?

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவன் ஆசிவ். சிறுவயதில் இருந்தே கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டுவதில் அலாதி பிரியம் கொண்டவர். சொந்த ஊரிலேயே கண்களை மூடிக்கொண்டு பல கிலோமீட்டர் சைக்கிளில் வலம் வந்து பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

பார்வை இல்லாமல் பயணம் ; பரவசமூட்டும் 9 வயது சிறுவனின் சாதனை..?

இதனையடுத்து, இன்று பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து நகரம் மற்றும் முக்கிய புறச்சாலைகளின் வழியாக பேராவூரணி சாலையில் சைக்கிள் பயணத்தை தொடர்ந்து 35 கிலோமீட்டர் தொலைவை கடந்து திருச்சிற்றம்பலத்தில் முடித்தார்.

முதலில் 20 கிலோமீட்டர் மட்டுமே இலக்காக இருந்த நிலையில், மாணவன் 35 கிலோமீட்டர் கண்களை கட்டிக்கொண்டு சைக்கிளை ஓட்டி சாதனை படைத்த நிகழ்ச்சி பொது மக்களை வியப்பில் ஆழ்த்தியது. சிறுவனின் சாதனையை இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் பதிவு செய்ததுள்ளது. சாதனை சிறுவனுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வருகிறது.

புறப்பட்ட சில மணி நேரத்தில் ஏற்பட்ட விமான விபத்து! 180 பயணிகளின் நிலை கேள்விக்குறி?

0

புறப்பட்ட சில மணி நேரத்தில் ஏற்பட்ட விமான விபத்து! 180 பயணிகளின் நிலை கேள்விக்குறி?

இன்று காலையில் புறப்பட்ட சில மணி நேரங்களில் ஈரானில் பறந்த உக்ரைன் நாட்டு பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் பயணித்த 180 பயணிகளின் நிலையானது தற்போது என்ன என்பது கேள்விகுறி ஆகியுள்ளது.

ஈரான் தலைநகரான டெஹ்ரான் அருகில் இந்த விபத்தானது நடந்துள்ளது. டெஹ்ரான் விமான நிலையத்தில் இருந்து கிளம்பி பஹ்ரைன் நோக்கி அந்த போயிங் 737 ரக விமானம் புறப்பட்டது. இந்நிலையில் விமானம் புறப்பட்டு சில நிமிடங்களில் இந்த விபத்தானது நடந்துள்ளது.

போயிங் விமானம் உலகம் முழுக்க அதிக விபத்துக்கு உள்ளாகிறது என்பது பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் இந்த விமான விபத்தின் மூலமாக மீண்டும் அந்த விமானங்களின் மீது சந்தேகம் வலுக்கிறது. பொதுவாக போயிங் ரக விமானங்களில் நிறைய தொழில்நுட்ப கோளாறுகள் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

புறப்பட்ட சில மணி நேரத்தில் ஏற்பட்ட விமான விபத்து! 180 பயணிகளின் நிலை கேள்விக்குறி?

ஆரம்ப கட்ட விசாரணையில் இந்த விமானமும் தொழில்நுட்ப கோளாறினால் தான் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த விமானத்தில் பயணம் செய்த 180 பயணிகளின் நிலை என்ன ஆனது என்று எந்த விவரமும் அறியப்படவில்லை.

இதனையடுத்து விமான விபத்து நடந்த பகுதிக்கு மீட்பு படையினர் சென்று இருக்கிறார்கள். மேலும் அங்கு ராணுவமும் குவிக்கப்பட்டு தொடர்ந்து அவசர மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த விமான விபத்தில் எத்தனை பயணிகள் காயம் அடைந்தார்கள். அவர்களின் தற்போதைய நிலை என்ன என்பது பற்றிய தகவல்கள் இன்னும் முழுமையாக தெரியவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.