Home Blog Page 5810

ஸ்டாலினை கலாய்த்து வீடியோ வெளியிட்ட RJ விக்னேஷ் தாக்கப்பட்டாரா?

0

ஸ்டாலினை கலாய்த்து வீடியோ வெளியிட்ட RJ விக்னேஷ் தாக்கப்பட்டாரா?

சமூக வலைத்தளமான யூடுப் சேனல் மூலமாக நகைச்சுவைக்காக நடிகர்கள் அரசியல்வாதிகள் என யாரையும் விட்டு வைக்காமல் கலாய்த்து வீடியோ பதிவிடும் நபர் தான் RJ விக்னேஷ். YouTube சேனல் மூலமாக அவருக்கு கிடைத்த விளம்பரம் மூலம் தற்போது ஒரு சில தமிழ் திரைப்படங்களில் துணை கதாபத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வருகிறார்.

இந்நிலையில் வழக்கமாக தனது சேனலில் அரசியல்வாதிகளை கிண்டல் செய்து பதிவிடுவது போல சமீபத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலினையும் வாங்க செயல் தலைவரே என்று ஆரம்பிக்கும் ஒரு வீடியோவின் மூலமாக என கிண்டல் செய்திருப்பார். கடந்த காலங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியது மற்றும் உளறியது என எதையும் விட்டு வைக்காமல் மிகவும் கடுமையாக அவரை அவரே விமர்சனம் செய்து கொள்வது போல அந்த வீடியோவை உருவாக்கியிருந்தார்.

திமுக தலைவர் ஸ்டாலினை கலாய்த்து RJ விக்னேஷ் உருவாக்கிய இந்த வீடியோவானது அதன் எதிர்க்கட்சி தொண்டர்களால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வைரலாகி வருகிறது. இந்நிலையில் பிரபல நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியில் ஸ்டாலினை விமர்சிக்கும் மீம்ஸ் மற்றும் வீடியோக்களை திமுகவை சேர்ந்தவர்கள் பணம் கொடுத்து நீக்க ஒரு டீம் உருவாக்கியுள்ளதாக குறிப்பிட்டிருந்தது. பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் திமுகவுடன் இணைந்து செயல்படுவதாக கூறிய நிலையில் இந்த செய்தியும் வெளியானதால் இது அவருடைய ஆலோசனை என்றும் பலர் யூகங்களின் அடிப்படையில் பரப்பி வந்தனர்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் RJ விக்னேஷ் திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சனம் செய்து உருவாக்கிய அந்த வீடியோவினை இணைத்து இந்த வீடியோவையா திமுகவினர் கோடி கணக்கில் பணம் கொடுத்து நீக்கினார்கள்? என கேள்வி கேட்கும் விதத்தில் பகிர்ந்து வந்தனர்.

இந்த சூழலில் தான் தற்போது அந்த வீடியோவை உருவாக்கிய RJ விக்னேஷ் அரசியல்வாதிகள் சிலரால் மிரட்டபடுவது போலவும், இனிமேல் யாரையும் விமர்சித்து வீடியோ பதிவிட கூடாது என வாக்கு மூலம் வாங்குவது போலவும் வீடியோ காட்சி ஒன்று முகநூல் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான இந்த வீடியோவில் RJ விக்னேஷ் தாக்கபடுவது மற்றும் மிரட்டபடுவது திமுகவினர் செய்தது தான் என செய்திகள் வெளியானது. வாக்குமூலம் கொடுப்பது போல உள்ள அந்த வீடியோவில் அவரை மன்னிப்பு கேட்க சொல்லியும், இனி இது போல செய்ய கூடாது என்றும் சிலர் வற்புறுத்தி எழுதி வாங்குவது போல அமைந்துள்ளது. இந்த சர்ச்சையான சூழ்நிலையில் தான் இதற்கு காரணமான RJ விக்னேஷ் இதற்காக விளக்கம் கொடுத்துள்ளார்.

அவர் தெரிவித்த விளக்கத்தில் “என்னை யாரும் தாக்கவில்லை என்றும், வழக்கம் போல தன்னுடன் வேலை செய்பவர்களை பிராங்க் செய்வதற்காக நாங்களே எடுத்த வீடியோ தான் அது என்றும், அதாவது ஸ்மைல் சேட்டையில் பணி புரிந்த போது உருவாக்கிய வீடியோ தான் அது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் எதோ சில காரணங்களால் அதை அப்போது வெளியிடவில்லை. ஆனால் வீடியோ எடுத்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிய நிலையில் தற்போது அந்த வீடியோவை எடிட் செய்து பரப்பியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அதிகாரபூர்வமான விளக்கம் கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ரஜினியின் தர்பாரை தட்டி தூக்கிய திரௌபதி! அதிர்ச்சியில் லைகா நிறுவனம்

0

ரஜினியின் தர்பாரை தட்டி தூக்கிய திரௌபதி! அதிர்ச்சியில் லைகா நிறுவனம்

பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகாவின் தயாரிப்பில் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா நடித்திருக்கும் தர்பார் வரும் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது.இதனையடுத்து படத்தின் ப்ரொமோசன் வேலைகளை படக்குழுவினர் செய்து வருகின்றனர். குறிப்பாக YouTube மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்களில் படத்தின் ட்ரைலர் மற்றும் படங்களை பதிவிட்டு விளம்பரபடுத்தி வருகின்றனர்.

இதனையடுத்து கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் தர்பார் படம் பற்றிய செய்திகள் அதிகமாக பகிரப்பட்டு ட்ரெண்ட் ஆகி வந்தது.

இந்நிலையில் தான் பழைய வண்ணாரப்பேட்டை பட இயக்குனரான மோகன். ஜி என்பவர் இயக்கியுள்ள அடுத்த படமான ‘திரௌபதி’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது. முழுக்க மக்களிடம் நிதி திரட்டி எடுக்கப்பட்ட இந்த படத்தில் நடிகர் அஜித் மனைவியான ஷாலினியின் தம்பி ரிஷி ரிச்சார்டு கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ஆரம்பத்தில் மணிரத்னம் இயக்கிய அஞ்சலி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் காதல் வைரஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

மேலும் இந்த படத்தில் ரிச்சார்டு ரிஷியுடன் தேசிய விருது வாங்கிய டூ லெட்படத்தின் கதாநாயகியான ஷீலா, மறுமலர்ச்சி படத்தின் இயக்குனர் பாரதி மற்றும் கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சென்னை மற்றும் விழுப்புரம் போன்ற வடமாவட்டங்களில் பெண்களுக்கு எதிரானக நடக்கும் குற்றங்கள் குறித்த உண்மை கதையையை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு ஜூபின் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு மனோஜ் நாராயணன் கேமரா கையாள, தேவராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். இப்படத்திலிருந்து வேல்முருகன் பாடிய ‘கண்ணாமூச்சி ஆட்டம்’ பாடல் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

வடமாவட்டங்களில் காதல் என்ற பெயரில் திட்டமிட்டே சில குறிப்பிட்ட சமுதாய பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்கொடுமைகளை பற்றிய உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் அதிகாரப்பூரவ ட்ரைலர் வெளியானது முதல் பல்வேறு பக்கமும் ஆதரவு பெருகியது.

இதில் “சாதிகள் உள்ளதடி பாப்பா! குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்”,”அடிச்சா திருப்பி அடி”, “நீ ஓடி வரும் போதே அங்க உங்க அப்பன் உசுர வுட்டுருப்பான்”,”அடங்குனா அடங்கக் கூடாதுன்னு எங்க அண்ணன் சொல்லிருக்காப்ள”, பெரிய வூட்டு பொண்ண கல்யாணம் பண்ணா தான் லைப் கெத்தா இருக்கும்னு சொல்லிருக்காப்ள”, ” அவன் ஊரு மண்ணுல நம்ம கால வைக்கனும்னா அவங்க வூட்டு பொண்ணு மேல நம்ம கைய வச்சே ஆகனும்”,”எங்களுக்கு மண்ணு பொண்ணு ரெண்டுமே முக்கியம் அதுல யாரு கைய வச்சாலும் கைய வெட்டுவோம்” என அனல் பறக்கும் அதிரடி வசனங்களுடன் இயல்பான தோற்றத்தில் விறுவிறுப்பாக அமைந்துள்ள இந்த ட்ரைலர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திரௌபதி திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது முதல் சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக இந்த திரௌபதி திரைப்படத்தின் ட்ரைலர் ட்விட்டர் மற்றும் யூடியூபில் நடிகர் ரஜினிகாந்த்தின் தர்பார் படப் ப்ரோமோவுக்கு இணையாக ட்ரெண்டிங் ஆகி வந்தது. இது தமிழ் திரையுலகினர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

திரௌபதி திரைப்படத்தின் ட்ரைலர்

இந்நிலையில் யூடியூபில் நடிகர் ரஜினிகாந்த்தின் தர்பார் படத்திற்கு இணையாக 4 ஆம் இடத்தில் ட்ரெண்டிங் ஆகி வந்த திரௌபதி திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது அதையும் தட்டி தூக்கிவிட்டு 1.6 மில்லியன் பார்வைகளை பெற்று 3 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

கோடிக்கணக்கான பட்ஜெட்டில் தயாரான ரஜினிகாந்த்தின் தர்பார் படத்தையே தாண்டி ஒரு சாதாரண பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரௌபதி திரைபடத்தின் ட்ரைலர் மக்களிடையே பிரபலமாகி வருவதை கண்டு அப்படத்தை தயாரித்த நிறுவனம் அதிர்ச்சியில் உள்ளது.

இளம்பெண் கற்பழித்து கொலை! திருச்சி அருகே பயங்கர சம்பவம்!! நாடக காதல் புள்ளிங்கோ..?

0

இளம்பெண் கற்பழித்து கொலை! திருச்சி அருகே பயங்கர சம்பவம்!! நாடக காதல் புள்ளிங்கோ..?

திருச்சி மாவட்டம் வடக்கு நாகமங்கலத்தை சேர்ந்த ராஜகோபால் என்பவரின் மகள்
கவிபிரியா. 11 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி கவிபிரியா கடந்த 31 ஆம் தேதி வீட்டை விட்டு சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

கவிபிரியாவை பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் நாகமங்கலம் அருகே காட்டுப்பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்டு பிணமாக கிடந்தார். தகவல் அறிந்த மணிகண்டம் காவல்துறை விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனையில் மாணவி கற்பழித்து கொன்றது உறுதியானது. இதனையடுத்து, காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இனாம்மாத்தூர் ஊரை சேர்ந்த மதிக்குமார் என்பவருக்கும், மாணவி கவிபிரியாவிற்கும் காதல் இருந்தது தெரிய வந்தது.

இந்நிலையில், தன்னை தவிர்த்துவிட்டு வேறு ஒருவருடன் பழகியது பிடிக்கவில்லை எனவும், திட்டமிட்டு காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று வாக்குவாதம் முற்றிய பிறகு மாணவியை கற்பழித்து தலையில் கல்லைபோட்டு கொன்று துப்பட்டாவால் மூடிவிட்டு மதிக்குமார் தப்பி ஓடியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இளம்பெண் கற்பழித்து கொலை! திருச்சி அருகே பயங்கர சம்பவம்!! நாடக காதல் புள்ளிங்கோ..?

இந்த கொலைக்கு பின்னணியில் மதிக்குமாரைத் தவிர வேறு பின்னணி உள்ளதா எனவும், மணிகண்டம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் கொலை
சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசிற்கு மருத்துவர் ராமதாஸ் ஆலோசனை

0

பெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசிற்கு மருத்துவர் ராமதாஸ் ஆலோசனை

பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதால் அதன் விலையை குறைப்பது குறித்து மத்திய அரசிற்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் “ஈராக் பதற்றம்: புதிய உச்சத்தைத் தொடும் பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும்!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.

சென்னையில் பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் உயர்ந்துள்ளன. பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.78.39-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 16 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.72.28-க்கும் விற்கப்படுகின்றன. கடந்த 12 நாட்களில் பெட்ரோல், டீசல் விலைகள் ஒரு நாள் கூட குறையாமல், தொடர்ந்து அதிகரித்து வருவது மிகவும் கவலையளிக்கிறது.

2019-ஆம் ஆண்டின் முதல் பாதியில் குறைந்து வந்த பெட்ரோல், டீசல் விலைகள் இரண்டாவது பாதியில் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கடந்த கிறித்துமஸ் நாளில் தொடங்கி இன்று வரையிலும் சரியாமல், தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த திசம்பர் 25-ஆம் தேதி 77.58 ரூபாயாக இருந்த பெட்ரோல் விலை கடந்த 12 நாட்களில் லிட்டருக்கு 81 காசுகள் அதிகரித்து ரூ.78.39 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், டீசல் விலை இதே காலத்தில் லிட்டருக்கு ரூ.1.46 உயர்ந்து இப்போது ரூ.72.28 ஆக உள்ளது.

2019-ஆம் ஆண்டில் கடந்த செப்டம்பர் 10-ம் தேதி தான் பெட்ரோல், டீசல் விலைகள் மிகவும் குறைவாக இருந்தன. அப்போது ரூ.74.51 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இன்று வரை ரூ.3.88 உயர்ந்துள்ளது. அதேபோல், ஒரு லிட்டர் டீசல் விலை கடந்த 3 மாதங்களில் ரூ.3.44 உயர்ந்துள்ளது. இன்றைய பெட்ரோல் விலை கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பர் மாத கடைசி வார நிலவரத்திற்கு பிந்தைய 15 மாதங்களில் மிக அதிக விலையாகும். இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து தொழில்துறைகளும், விவசாயமும் மிக மோசமான பின்னடைவுகளை சந்திப்பது உறுதி!

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் சவுதி அரேபியாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் நிறுவனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் பெட்ரோல், டீசல் விலைகள் கடுமையான உயர்வை சந்தித்தன. அதன்பின் விலை குறையாத நிலையிலேயே அடுத்த சுற்று விலையேற்றம் தொடங்கியுள்ளது.

ஈராக் தலைநகர் பாக்தாத் மீது அமெரிக்கப் படைகள் நேற்று வானூர்தித் தாக்குதல் நடத்தின. பாக்தாத் விமான நிலையம் மீது அமெரிக்கப்படைகள் நடத்திய தாக்குதலில் ஈரான் போர்ப்படைத் தலைவர் காசிம் சுலைமாணி உள்ளிட்ட 7 ராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டனர். அதனால், ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் மீண்டும் போர் ஏற்படக்கூடும் என்ற அச்சம் காரணமாக, வளைகுடா நாடுகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய் உற்பத்தி குறையும் என்ற அச்சம் காரணமாகவே, பன்னாட்டு சந்தையில் பெட்ரோல், டீசல் விலைகள் அதிகரித்து வருகின்றன.

இதேநிலை நீடித்தால் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலைகள் புதிய உச்சத்தைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வரலாற்றில் கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தான் பெட்ரோல், டீசல் விலைகள் உச்சக்கட்டத்தை எட்டின. அப்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.87.33-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.79.79&க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஈரானில் பதற்றம் தணிக்கப்படாவிட்டால் அடுத்த சில நாட்களில் பெட்ரோல், டீசல் விலைகள் பழைய உச்சத்தைக் கடந்து புதிய உச்சத்தை தொடக்கூடும்.

உலக அளவில் பொருளாதாரம் சரிவை சந்தித்துக் கொண்டிருந்தால், எரிபொருட்களின் தேவைகள் குறைந்து அவற்றின் விலைகளும் குறைய வேண்டும் என்பது தான் எழுதப்படாத விதி ஆகும். ஆனால், இந்தியாவில் பொருளாதாரம் சரிந்து கொண்டிருக்கும் நிலையில், பெட்ரோல், டீசல் விலைகளை உயர்ந்து வருவது மிகவும் விசித்திரமாகத் தெரிகிறது. இது குறித்து ஆய்வு செய்து பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியாவில் பெட்ரோல் மீது ஒரு லிட்டருக்கு ரூ.19.98 வீதமும், டீசலுக்கு ரூ.15.83 வீதமும் கலால் வரி வசூலிக்கப்படுகிறது. 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2016 ஜனவரி மாதம் வரையிலான 15 மாதங்களில் மட்டும் பெட்ரோல் மீதான கலால் வரி 11.77 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி 13.47 ரூபாயும் உயர்த்தப்பட்டன. இடைப்பட்ட காலத்தில் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை அடைந்ததைத் தொடர்ந்து, அவற்றின் மீதான கலால் வரி 2017 அக்டோபரில் லிட்டருக்கு 2 ரூபாயும், 2018 அக்டோபரில் லிட்டருக்கு 1.50 ரூபாயும் குறைக்கப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.2 வீதம் உயர்த்தப்பட்டது.

இந்தியப் பொருளாதாரம் மட்டுமின்றி, பொதுமக்களும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், பெட்ரோல், டீசல் விலைகள் அதிகரித்துக் கொண்டே செல்வது நன்மை பயக்காது. எனவே, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பெட்ரோல், டீசல் விலைகள் கட்டுக்குள் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

பிரபல விளையாட்டு வீராங்கனையுடன்!!! விஷ்ணு விஷால் நெருக்கமாக இருக்கும் புகைப்படம்?

0

2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடிகுழு படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான விஷ்ணு விஷால் தொடர்ந்து பலே பாண்டியா குள்ளநரிக்கூட்டம் நீர்ப்பறவை ஜீவா முண்டாசுப்பட்டி உள்ளிட்ட படங்களில் நடித்தார். இப்போது தமிழில் முன்னணி நாயகனாக திகழ்கிறார்.

அவரது நடிப்பில் 2018 வெளியான ராட்சசன் படம் பெரிய மாபெரும் வெற்றி பெற்றது விருதுகளையும் குவித்தது. 2011ம் ஆண்டு தனது நீண்ட நாள் கல்லூரி தோழியை காதல் திருமணம் செய்தார் இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

பிரபல விளையாட்டு வீராங்கனையுடன்!!! விஷ்ணு விஷால் நெருக்கமாக இருக்கும் புகைப்படம்?

நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் விளையாட்டு வீராங்கனை பாட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா இருவருக்கும் எற்பட்ட நெருக்கம் தான் விவாகரத்து ஏற்பட முக்கிய காரணம் என கிசுகிசுக்கப்பட்டது.

இது உண்மை என்று நிரூபிக்கும் வண்ணம் இருவரும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து கொண்டு இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் தற்போது வெளியிட்டுள்ளனர்.

பிரபல விளையாட்டு வீராங்கனையுடன்!!! விஷ்ணு விஷால் நெருக்கமாக இருக்கும் புகைப்படம்?

இதன் மூலம் தங்கள் காதலை அவர்கள் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள் இந்த புகைப்படங்கள் வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இரண்டாவது திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் என்று திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.

சாலையோரத்தில் குப்பையாக கிடந்த வாக்கு சீட்டுகள்! பெரம்பலூரில் பரபரப்பு! நடந்தது என்ன?

0

சாலையோரத்தில் குப்பையாக கிடந்த வாக்கு சீட்டுகள்! பெரம்பலூரில் பரபரப்பு! நடந்தது என்ன?

பெரம்பலூர் மாவட்டம் மேலமாத்தூர் ஊராட்சியில் சாலை அருகே வாக்கு முத்திரை குத்தப்பட்ட வாக்கு சீட்டுகள் குப்பையாக இருந்ததால் அங்கு பரபரப்பு உண்டாகியுள்ளது.

மேலமாத்தூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு மணிவண்ணன் என்பவர் பூட்டு சாவி சின்னத்திலும், கந்தசாமி என்பவர் உருளை சின்னத்திலும், மகேஷ்குமார் என்பவர் ஏணி சின்னத்திலும், தேவகி நாராயணசாமி என்பவர் ஆட்டோ சின்னத்திலும் போட்டியிட்டனர்.

இந்நிலையில், பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்ட மணிவண்ணன் என்பவர் 17 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனையடுத்து, சாலையோரம் கிடந்த வாக்கு சீட்டுகளில் ஆட்டோ சின்னம் மற்றும் உருளை சின்னத்தில் வாக்குகள் குத்தப்பட்டிருந்தது. இச்சம்பவம் தோல்வியடைந்த மற்ற வேட்பாளர்களுக்கும் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை கேள்விப்பட்டதும் அங்குமக்கள் கூட்டம் வரத் தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை முழு பாதுகாப்புடன் நடந்தபோதும் சாலையோரத்தில் வாக்கு சீட்டுகள் எப்படி வந்தது என காவல்துறை விசாரணையில் இறங்கியுள்ளது. விசாரணையில் தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு கிடைத்த ஜாக்பாட்?

0

இந்திய நாட்டில் நாளுக்கு நாள் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது இதனால் இந்தியா முழுவதும் காற்று மாசு அதிக அளவில் ஏற்படுகின்றது இதனால் பொது மக்களுக்கு நுரையீரல் சம்மந்தமாக பல நோய்கள் ஏற்படுகின்றன.

இதனால் புகை மாசுவை குறைக்க பேட்டரி வாகனங்களை பயன்படுத்தும்படி மத்திய அரசு வலியுறுத்தியும் அதை ஊக்குவிக்கும் விதமாக பேட்டரி வாகனங்களுக்கு மானியமும் அளித்து வருகிறது. மேலும் பேட்டரி வாகனங்களுக்கு ‘சார்ஜிங்’ செய்வதற்கான மையங்களையும் அமைத்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது 62 நகரங்களில் பேட்டரி வானங்களுக்கான 2,600 க்கும் அதிகமான ‘சார்ஜிங்’ மையங்களை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.இதில் தமிழ்நாட்டில் 256 சார்ஜிங் மையங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது.

தமிழகத்திற்கு கிடைத்த ஜாக்பாட்?

இந்த தகவலை மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பிரகா‌‌ஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் ‘சார்ஜிங்’ மையங்கள் அமைப்பதன் மூலம் மின்சார வாகனங்களை பயன்படுத்துபவர்களின் நம்பிக்கை அதிகரிப்பதுடன், புதிய மின்சார வாகனங்கள் அறிமுகம் ஆவதற்கான வாய்ப்பும் ஏற்படும் என்று குறிப்பிட்டார்.

இந்த விஷயத்தில் அரேபியா தேசத்தை பின்பற்றுமா இந்தியா?

0

டெல்லியில் 2012-ம் ஆண்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட ‘நிர்பயா’ வழக்கு குற்றவாளிகள் உள்பட சிலரது மரண தண்டனை உறுதி ஆகியுள்ள நிலையில் விரைவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்தியாவில் உள்ள பல்வேறு சிறைகளில் மரண தண்டனை நிறைவேற்றும் வசதி இருந்தாலும், குறிப்பிட்ட சில சிறைகளில் மட்டுமே தூக்கு கயிறு தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக பீகார் மாநில பக்சர் சிறையிலேயே அதிகமாக இந்த கயிறுகள் தயாரிக்கப்படுகின்றன. இவ்வாறு தயாரிக்கப்படும் தூக்கு கயிற்றின் சிறப்பு அம்சம் என்னவென்றால் அதை உடனடியாக பயன்படுத்த வேண்டும்.

நீண்ட நாட்களுக்கு பாதுகாப்பாக வைத்து இருந்து இதை பயன்படுத்த முடியாது.கடைசியாக அப்ஸல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற பட்டது இந்நிலையில்,
திகார் சிறையில் ஒரே தூக்கு மேடை உள்ள நிலையில், மேலும் சில தூக்கு மேடைகள் தயாராகி வருவதாக தகவல் வந்துள்ளன. இதோடு திகார் சிறையில், குழிகள் தோண்டும் பணிகள் நடப்பதாக கூறப்படுவதால், குற்றவாளிகள் எந்த நேரத்திலும் தூக்கிலிடப்படலாம் என கூறப்படுகிறது. 

ஒருவேளை நான்கு குற்றவாளிகளும் ஒரேநேரத்தில் தண்டிக்கப்பட்டால், அரேபிய தேசம் போல் நம் நாட்டிலும் நடக்கும் முதல் கூட்டுத் தூக்குத் தண்டனையாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.

தேர்தலில் தோல்வி பெற வைத்த மக்களுக்கு நன்றி… சொல்லி போஸ்டர் ஓட்டிய நபர் !!!

0

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் 2 கட்டங்களாக கடந்த மாதம் 27 மற்றும் 30ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கபட்டன . இதில் பெருபாலான கவுன்சிலர் பதவிகளை ஆளும் அ. தி. மு. க மற்றும் தி. மு. க. கணிசமாக பெற்றன மேலும் இந்த தேர்தல் முடிவில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. 

மதுரை மாவட்டத்திலுள்ள கேத்துவார்ப்பட்டியில் 2வது வார்டில் உறுப்பினர் பதவிக்கு முருகேசன் என்பவர் சுயேட்சையாக போட்டியிட்டுள்ளார். கட்டில் சின்னத்தில் போட்டியிட்ட இவர் தேர்தலில் தோல்வியடைந்தர். தோல்வி அடைந்தாலும் அவர் தம் ஊர் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதற்காக அவர் அந்த பகுதி முழுவதும் ஒட்டியுள்ள போஸ்டரில் கேத்துவார்பட்டி 2வது வார்டு உறுப்பினராக கட்டில் சின்னத்தில் போட்டியிட்ட தன்னை தோற்கடித்த பொதுமக்களுக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார். மேலும் அதில் மற்றொரு வேடிக்கையான விஷயமாய் நீங்க இப்படி செய்வீங்கனு நான் கனவுல கூட எதிர்பாக்கல…என கூறியுள்ளது சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. தற்போது இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அடிச்சா திருப்பி அடி அனல் பறக்கும் அதிரடி வசனம்! ட்விட்டரில் கலக்கும் திரௌபதி டிரெய்லர்

0

அடிச்சா திருப்பி அடி அனல் பறக்கும் அதிரடி வசனம்! ட்விட்டரில் கலக்கும் திரௌபதி டிரெய்லர்

தமிழ் திரையுலகில் சமீபகாலமாக சாதியை ஒழிப்பு மற்றும் அதன் கொடுமைகளை மையப்படுத்தி நிறைய படங்கள் வெளியாகியுள்ளது. சாதியை ஒழிப்பதாக கூறிக்கொண்டு அது போன்ற படங்களில் உதாரணமாக காட்டப்படும் காட்சிகள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்த நபர் வேறு ஒரு சமுதாயத்தை சார்ந்த பெண்ணை காதலிப்பதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவிவிக்கும் பெண்ணின் பெற்றோர்கள் கொடுமைகள் செய்யும் கொடூரமானவர்கள் போலவும் அமைக்கப்பட்டிருக்கும்.

கல்வி,வேலைவாய்ப்பு மூலம் பொருளாதாரம் உயர்ந்தால் சாதி பிரிவினைகள் தானாக மறைந்து விடும் என்ற எதார்த்தத்தை மறைத்து காதல் செய்வதால் மட்டுமே அது மறையும் என்று இது போன்ற படங்கள் மூலமாக போலிப் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.ஒரே சமுதாயமாக இருந்தாலும் காதல் என்றாலே பல பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் சூழ்நிலையில் அதற்கு சாதியை இணைத்து போலிப் பிரச்சாரம் செய்வது போல தான் அது போன்ற படங்கள் அமைந்துள்ளன.

மேலும் அரசியலில் தன்னுடைய இருப்பை காட்டி கொள்ள “தங்களிடம் சரக்கு மிடுக்கு” உள்ளதாக கூறி மாற்று சமுதாய பெண்களின் பின்னால் சுற்று வேண்டும் என குறிப்பிட்ட இளைஞர்களை தவறான வழியில் இழுத்து செல்லும் கீழ்த்தரமான செயல்களையும் சிலர் செய்து வருகின்றனர்.இது போல இயல்பாக வரக் கூடிய காதலை தங்களுடைய சாதி வெறியை காட்டவும், அரசியல் இருப்பை உறுதி செய்து கொள்ளவும் நாடக காதலாக மாற்றியுள்ளனர்.

Draupathi Trailer From Pazhaya Vannarappettai Director Mohan G-News4 Tamil Latest Cinema News in Tamil Today
Draupathi Trailer From Pazhaya Vannarappettai Director Mohan G-News4 Tamil Latest Cinema News in Tamil Today

இந்நிலையில் தான் இது போன்ற நாடக காதல் செய்யும் மற்றும் செய்ய தூண்டும் போலி சாதி ஒழிப்பு போராளிகளுக்கு எல்லாம் சவுக்கடி கொடுக்கும் வகையில் தமிழ்த் திரைப்படம் ஒன்று தயாராகி வந்தது. திரௌபதி என்ற பெயரில் இதனை பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் இயக்குனர் மோகன் ஜி இயக்கியுள்ளார்.இதில் நடிகர் அஜித் அவர்களின் மனைவி ஷாலினி அவர்களின் தம்பி ரிச்சர்ட் ரிசி,தேசிய விருது பெற்ற டூ லெட் திரைப்படத்தின் கதாநாயகி ஷீலா ராஜ்குமார்,கருணாஸ் மற்றும் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த மறுமலர்ச்சி படத்தின் இயக்குனர் பாரதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தியாவிலேயே முதல் முறையாக, Crowd Funding என்ற முறையில் முழுக்க மக்களிடம் பெறப்பட்ட நிதியை வைத்து எடுக்கப்படும் முதல் திரைப்படம் என்ற பெருமையையும் இந்த படம் பெற்றுள்ளது. இந்த திரௌபதி திரைப்படம் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள சில வட மாவட்டங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை குறித்தும் அதன் பின்னணி என்னவென்றும் உண்மை சம்பவத்தை கதைகளமாக கொண்டும் எடுக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் கூறுகின்றனர்.

Draupathi Trailer From Pazhaya Vannarappettai Director Mohan G-News4 Tamil Latest Cinema News in Tamil Today
Draupathi Trailer From Pazhaya Vannarappettai Director Mohan G-News4 Tamil Latest Cinema News in Tamil Today

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அந்த படத்தின் போஸ்டர் வெளியானது. இதில் “சாதிகள் உள்ளதடி பாப்பா! குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” என பாரதியார் பாடலையையே மாற்றி அதிரடி வாக்கியமாக அமைத்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர் படக்குழுவினர். இதனையடுத்து இன்று வெளியான அந்த படத்தின் டிரைலரில் ஒவ்வொரு காட்சியிலும் அனல் பறக்கும் அதிரடி வசனங்களுடன் கூடிய காட்சிகளை அமைத்து ஒட்டுமொத்த தமிழ் திரையுலகிற்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளனர்.

இன்று வெளியான இந்த திரௌபதி படத்தின் முன்னோட்டம் YouTube இல் தொடர்ந்து ட்ரெண்ட் ஆகி வருகிறது. மேலும் சமூக வலைத்தளமான ட்விட்டரில் #Draupathi மற்றும் #திரௌபதி என்ற அந்த படத்தின் இரண்டு ஹேஷ் டேக்குகளும் தேசிய அளவில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

Draupathi Trailer From Pazhaya Vannarappettai Director Mohan G-News4 Tamil Latest Cinema News in Tamil Today
Draupathi Trailer From Pazhaya Vannarappettai Director Mohan G-News4 Tamil Latest Cinema News in Tamil Today

“சாதியே இல்லை” சாதியை ஒழிக்க போகிறேன் என்று சொல்பவர்கள் மட்டுமே நடுநிலைவாதிகள் என்றும் மற்றவர்களை சாதி வெறியர்கள் போலவும் காட்டி வந்த தமிழ் சினிமாவிற்கு இந்த படம் ஒரு மாற்றத்தை ஆரம்பித்து வைக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

காதல் என்ற போர்வையில் படிக்கும் இளவயது பெண் குழந்தைகளின் வாழ்க்கையை சீரழிக்கும் நாடக காதல் கும்பலின் முகத்திரையை கிழிக்கும் நவீன நாடக காதல் காவியமாக இந்த திரௌபதி அமையும் என்று ட்விட்டரில் இந்த படத்திற்கு ஆதரவாக கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.

Draupathi-News4 Tamil Latest Cinema News in Tamil
Draupathi-News4 Tamil Latest Cinema News in Tamil

அதே வகையில் இது சாதி வெறிப் படம் இதை தடை செய்ய வேண்டும் என்று ஒரு சிலர் பதிவிட்டு வருகின்றனர்.இவ்வளவு எதிர்பார்ப்பை தூண்டும் இந்த படம் எந்த சர்ச்சையும் இல்லாமல் வெளியாகுமா? என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.