Home Blog Page 5809

சுலைமானி கொலைக்கு பழிவாங்குவோம் ; ஈரானின் புதிய தளபதி அதிரடி

0

ஈராக் தலைநகர் பாக்தாத்தில், அமெரிக்கா  நடத்திய  வான்வழி  தாக்குதலில், ஈரானின் சக்தி வாய்ந்த நபர்களில் ஒருவரான ராணுவ தளபதி  குவாசிம்  சுலைமானி  கொல்லப்பட்டார்.  இந்த தாக்குதலில்,  அவருடன்  ஈராக்  துணை ராணுவ தளபதி அபு மஹதி அல் முகந்திஸ்  உட்பட 6  பேரும் கொல்லப்பட்டனர். அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால், மத்திய கிழக்கு  நாடுகளில் பதற்றம்  அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், ஈரானின் புரட்சிகர  ராணுவ  தளபதியாக, குவாசிம் சுலைமானிக்கு அடுத்த நிலையில் இருந்த இஸ்மெயில் கானி  பொறுப்பேற்றுள்ளார். குவாசிம் சுலைமானி அமெரிக்கா வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டது  குறித்து  பேசிய  இஸ்மெயில் கானி, “சுலைமானி  கொல்லப்பட்டதற்கு பழி தீர்ப்போம்” என்று கூறினார்.

ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற வேண்டும் என்று ஈராக்  பாராளுமன்றம் கேட்டுக்கொண்டுள்ள  நிலையில், ஈரானின்  புதிய ராணுவ தளபதி  மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கிடையே, 2015 போடப்பட்ட அணு சக்தி ஒப்பந்தத்தில்  எஞ்சியிருந்த  நிலுவைகளையும்  கைவிடப்போவதாக  ஈரான் தெரிவித்துள்ளது. இதன்மூலம், ஈரான் மீண்டும் அணு ஆயுதங்களை  தயாரிக்கும்  வாய்ப்பு உருவாகியுள்ளது.

மத்திய கிழக்கில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஈராக்கில் இருந்து அமெரிக்க  படைகளை  வெளியேற்றினால், பல பில்லியன் டாலர்கள் இழப்பீடாக  ஈராக்  தர வேண்டியிருக்கும். அவ்வாறு தர மறுக்கும்  பட்சத்தில், ஈராக்கிற்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பொருளாதார  தடைகள்  விதிக்கப்படும் என்று  மிரட்டல்  விடுத்துள்ளார்.

ஆளும்கட்சியால் தயாரிக்கப்பட்ட ஆளுநர் உரை நிராகரிப்பு; மு.க.ஸ்டாலின்

0

தமிழக  சட்டப்பேரவை  ஒவ்வொரு  ஆண்டும்  ஜனவரி  முதல்  வாரம் கூடுவது வழக்கம். அதன்படி  இந்தாண்டின்  முதல்  கூட்டம்  இன்று  தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறி ஆளுநர் உரையை தொடங்கினார். இந்நிலையில் ஆளுநர் உரையை புறக்கணித்து பேரவையில் இருந்து  திமுக  உறுப்பினர்கள் வெளிநடப்பு  செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “ஆளும்கட்சியால் தயாரிக்கப்பட்ட ஆளுநர் உரையை நிராகரிப்பதாகவும் , குடியுரிமை சட்டத்தை கண்டித்து ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளோம் “என்று தெரிவித்தார்.

மேலும் அவர்  கூறுகையில் “  7 பேர் விடுதலை குறித்து அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியும் ஆளுநர்  எந்த முடிவும் எடுக்கவில்லை. தமிழகத்தின் கடன் 4 லட்சம் கோடியாக  உயர்ந்துள்ளது;  இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளது. நீட் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளதாக  கபட நாடகம் , “ என்று தனது கண்டனத்தை தெரிவித்தார்

இதனை தொடர்ந்து காங்கிரஸ்  கட்சியினரும், டிடிவி தினகரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்டோரும் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு  செய்தனர்.

திரெளபதி ட்ரெய்லர் பற்றி செய்தியாளர்கள் கேள்வி! யாரும் எதிர்பார்க்காத திருமாவின் ரியாக்ஸன்?

0

திரெளபதி ட்ரெய்லர் பற்றி செய்தியாளர்கள் கேள்வி! யாரும் எதிர்பார்க்காத திருமாவின் ரியாக்ஸன்?

தமிழகம் முழுவதும் மிக பரபரப்பாக தற்போது பேசப்படும் விவாதம் ‘திரௌபதி” என்ற திரைப்படத்தின் ட்ரெய்லர் ஆகும் முழுக்க முழுக்க மக்களிடம் நிதி பெற்று ஒரு திரைப்படத்தை எடுத்து தமிழக அளவில் மிகப் பிரபலம் அடைந்துள்ளார் பழைய வண்ணாரப்பேட்டை இயக்குனர் மோகன் ஜி அவர்கள்,

வடமாவட்டங்களில் திட்டமிட்டு பெண்களை காதல் வலையில் வீழ்த்தி கடத்தி அவர்களின் வாழ்க்கையை சீரழித்து, பெற்றவர்களின் கையில் பேரம் பேசி பணம் பெறும் கொடூரமான கும்பலின் முகத்திரையை கிழிக்கும் கருவை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் டிரைலர் தமிழகம் முழுவதும் பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகின்றது,.

திரெளபதி ட்ரெய்லர் வெளியான 3 நாட்களில் சுமார் 25 லட்சம் பேர் டிரெய்லரை யூடியூப் மூலமாக பார்த்துள்ளனர், அதுமட்டுமில்லாமல் சமூக வலைத்தளங்களில் மிக வைரலாக ட்ரெய்லர் பரவியதன் மூலம் கிட்டத்தட்ட 50 லட்சம் பார்வையாளர்கள் திரௌபதி திரைபடத்தின் ட்ரெய்லரை பார்த்துள்ளனர்,.

இச்சூழ்நிலையில் நாடக காதல் விவகாரத்தில் சிக்கியுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை தாக்கிய ஒரு சில வசனங்கள் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளன,. திருமாவளவன் போல் டிரைலரில் ஒரு உருவம் காட்டப்பட்டுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரெளபதி டிரெய்லருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று திருமாவளவனை சந்தித்த செய்தியாளர்கள் திரெளபதி திரைப்படத்தில் உங்களையும் உங்கள் கட்சியினரையும் சார்ந்து இருப்பதால் நீங்கள் என்ன கருத்து தெரிவிக்கிறிர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அவர் எதுவும் பேசாமல் குடியுரிமைச் சட்டத்தை பற்றி பேசி செய்தியாளர்களை திசை திருப்பினார்., அவர் முகத்தில் குற்றம் புரிந்த ஒரு கலக்கம் தெரிந்தது.

செய்தியாளர்களுக்கு திருமாவளவன் அளித்த பேட்டி:

தமிழகத்தில் பாஜக அதன் கூட்டணிக் கட்சிகளை மறைமுகமாக மிரட்டுகிறதா?

0

தமிழகத்தில் பாஜக அதன் கூட்டணிக் கட்சிகளை மறைமுகமாக மிரட்டுகிறதா?

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவை விட சில இடங்களில் அதிகமாக வெற்றி பெற்றாலும் ஏறக்குறைய இரண்டு கட்சிகளும் சம பலத்துடன் உள்ளதாகவே கருதப்படுகின்றது. ஆனால் அதிமுக மற்றும் திமுக என இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி அமைத்து போட்டியிட்ட மற்ற கட்சிகள் எதுவும் அவ்வளவாக வெற்றி பெறவில்லை.

இதில் விதி விலக்காக அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக போட்டியிட்ட இடங்களில் ஏறக்குறைய பாதி இடங்களில் வெற்றி பெற்று தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக கட்சிகளுக்கு அடுத்து 3 வது கட்சி என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது. ஆனால் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய கட்சியான பாஜக மற்ற கட்சிகளை விட அதிகமான இடங்களில் போட்டியிட்டு அதில் 10 சதவீத இடங்களில் கூட வெற்றி பெறவில்லை.

அதிமுக :
மாவட்ட கவுன்சிலர்:
வெற்றி – 214
போட்டியிட்டது – 435
ஒன்றிய கவுன்சிலர்:
வெற்றி – 1781
போட்டியிட்டது -3842

பாமக :
மாவட்ட கவுன்சிலர்:
வெற்றி – 16 (தோராயமாக)
போட்டியிட்டது -36
ஒன்றிய கவுன்சிலர்:
வெற்றி – 224
போட்டியிட்டது -430

தேமுதிக :
மாவட்ட கவுன்சிலர்:
வெற்றி – 3
போட்டியிட்டது -29
ஒன்றிய கவுன்சிலர்:
வெற்றி – 99
போட்டியிட்டது -434

பாஜக :
மாவட்ட கவுன்சிலர்:
வெற்றி – 7
போட்டியிட்டது -81
ஒன்றிய கவுன்சிலர்:
வெற்றி – 85
போட்டியிட்டது -535

இந்நிலையில் அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான வானதி சீனிவாசன் பாஜகவிற்கு அதிமுக வழங்கிய இடங்கள் போதவில்லை என்று விமர்சனம் செய்திருந்தார். அதே போல பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் பேசிய போதும் அதிமுகவை விமர்சிக்கும் வகையிலேயே குறிப்பிட்டிருந்தார்.

கடந்த காலத்தில் தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் பாஜக மற்றும் பாமக கட்சிகள் வாங்கிய வாக்குகளின் சதவீதத்தை பார்க்கும் போது பாமகவை விட பாஜக குறைவான வாக்கு வங்கியை தான் வைத்துள்ளது. இந்நிலையில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பாமகவை விட பாஜக அதிக இடங்களை பெற்றது கூட்டணி கட்சி தொண்டர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.மத்தியில் ஆட்சியில் இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி இவ்வாறு அதிக இடங்களை பெற்றதா? என்றும் சந்திக்கபடுகிறது.

எந்த அதிகாரத்தை பயன்படுத்தி அதிக சீட்டுகளை வாங்கினாலும் தமிழக மக்கள் மத்தியில் செல்வாக்கு இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என பாஜக நிர்வாகிகளுக்கு இந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் புரிய வைத்திருக்கும் என்று அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த தொண்டர்கள் விமர்சித்து வருகின்றனர்.

நீட் நுழைவு தேர்வு எழுதுபவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு?

0

இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘NEET(National eligibility cum entrance test) நுழைவு தேர்வு மதிப்பெண் எடுத்து கொள்ள படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 2020-21-ம் கல்வியாண்டில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு வருகிற மே மாதம் 3-ந்தேதி நடைபெறும் என அறிவிப்பு வந்துள்ளது.

இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்த உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் www.ntaneet.nic.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும் என குறிப்பிட பட்டு இருந்தது.

இதற்கு விண்ணப்பிக்க ஏற்கனவே டிசம்பர் மாதம் 31-ந்தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில்
கோரிக்கையை ஏற்று, 6-ந் தேதி வரை நீட்டிப்பு செய்வதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். மேலும் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கு நாளை 07.01.2020 (நாளை )கடைசி நாளாக தேர்வு முகமை அறிவித்துள்ளது.

திருமாவளவன் பெயரை சொல்லி போலீசார் மீது கல்வீசி தாக்குதல்! விசிக பிரமுகரின்‌ அராஜகம்

0

திருமாவளவன் பெயரை சொல்லி போலீசார் மீது கல்வீசி தாக்குதல்! விசிக பிரமுகரின்‌ அராஜகம்

புதுச்சேரி யூனியன் பிரதேசம் வில்லியனூர் பகுதியை சேர்ந்த தலித் பகுதியான வள்ளுவன் பேட் என்ற பகுதியில் குடித்துவிட்டு அங்குள்ள பெண்களிடம் தகராறில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் சதீஷ் என்பவர் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வில்லியனூர் பகுதி காவல் துறையினர் அவரை கைது செய்ய முற்படும் போது காவல் துறையினரை தாக்கிவிட்டு தன்னுடைய சமூகத்தின் பெயரை சொல்லி எங்கள் தலைவர் திருமாவளவனை தாண்டி என்னை கைது செய்வீர்களா, சாதி வெறி பிடிச்சவனுங்களா என்று காவல் துறையினரை மிரட்டி அவர்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தி விட்டு தப்பி ஓடி இருக்கிறார்.

இந்நிலையில் சாதியின் பெயரால் வன்முறையில் ஈடுபட்டு தப்பி ஓடிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் சதீஷை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

வீடியோ ஆதாரம்:

இதனையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்து வருகின்றனர்.

காங்கிரசாரின் நாடகம் எடுபடாது; குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக எடியூரப்பா கருத்து

0

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் தீவிர போராட்டம் நடந்து வருகிறது. கர்நாடகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் மங்களூருவில் வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் மரணம் அடைந்தனர். இந்த நிலையில் பா.ஜனதா சார்பில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து சிறுபான்மையின மக்களுக்கு உண்மையை தெரியப்படுத்தும் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய முடிவு திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி கர்நாடகத்தில் இந்த பிரசாரத்தை பா.ஜனதா தொடங்கியுள்ளது. பெங்களூரு சிவாஜிநகரில் குடியுரிமை திருத்த சட்ட விழிப்புணர்வு பிரசாரம் தொடக்க விழா நடைபெற்றது.

இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு, பிரசாரத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது “காங்கிரசை சேர்ந்த முன்னாள் மந்திரி ஜமீர்அகமதுகான், பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் ஆவணங்களை தாக்கல் செய்யட்டும் என்று கேட்டுள்ளார். ஜமீர்அகமதுகான் தனது பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும். வாய்க்கு வந்தபடி பேசுவது சரியல்ல. எதிர்ப்பவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தால் யாருக்கு அநீதி ஏற்படும் என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும்.

இந்த சட்டம் அமலுக்கு வருவதால், நமது நாட்டின் எந்த குடிமகனுக்கும் பாதிப்பு இல்லை என்று பிரதமரே  கூறியுள்ளார். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் இந்த விஷயத்தில் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வந்த இந்து, கிறிஸ்தவர்கள், பார்சிக்கள், சீக்கியர்களுக்கு குடியுரிமை வழங்கவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சியினர் வன்முறையை தூண்டிவிடும் வேலையை செய்கிறார்கள்.

மத்திய அரசு இயற்றியுள்ள இந்த சட்டத்தை அனைத்து மாநிலங்களும் அமல்படுத்த வேண்டும். கூட்டாட்சி தத்துவத்தை பின்பற்றும்  நமது  நாட்டில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை  ஆதரவுடன்  நிறைவேற்றப்பட்ட  சட்டத்தை எந்த மாநிலமும் நிராகரிக்க முடியாது. நமது  நாட்டின்  உண்மையான குடிமக்களுக்கு எள் அளவு கூட பாதிப்பு இல்லை.. முஸ்லிம் ஓட்டுகள் சென்றுவிடுமோ என்ற பயத்தில் காங்கிரஸ் கட்சியினர் முஸ்லிம் மக்களை திசை திருப்புகிறார்கள். இனி காங்கிரசாரின் நாடகம் எடுபடாது.

நேரு, இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி ஆகிேயாரது ஆட்சி காலத்திலும் குடியுரிமை சட்டம் திருத்தப்பட்டது. அப்போது எந்த பிரச்சினையும் உண்டாகவில்லை. இப்போது பிரதமர் மோடி ஆட்சியில் மட்டும் அந்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்துவது ஏன்?. காங்கிரஸ் கட்சியின் தவறான பிரசாரத்தை தடுக்கவே, முஸ்லிம் மக்களுக்கு தெளிவு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பிரசாரத்தை பா.ஜனதா தொடங்கியுள்ளது.நாடு முழுவதும் 3 கோடி பேருக்கும், கர்நாடகத்தில் மட்டும் 30 லட்சம் பேருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்ய உள்ளோம். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மக்களிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. முஸ்லிம் மக்களுக்கு தெளிவு ஏற்படுத்தவே உண்மையை அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறோம்” என்று எடியூரப்பா தெரிவித்தார்.

ஈரான் அமெரிக்கா இடையே மேலும் பதற்றம்?

0

ஈரான் அமெரிக்கா இடையே மேலும் பதற்றம்?

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்துள்ளது. தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்கா நடத்திய வான்வெளி தாக்குதலில் ஈரானின் 2-வது சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார் என தகவல் வந்துள்ளது. இந்த தாக்குதலில் அவருடன் ஈராக்கின் முக்கிய ராணுவ தளபதிகள் கொல்லப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் மத்திய கிழக்கு நாடுகளில் மேலும் பதற்றம் அதிகரித்த வண்ணம் உள்ளது. அமெரிக்காவை பழி தீர்ப்போம் என்று ஈரான் வெளிப்படையாக அறிவித்துள்ளது. இதன் அடுத்த கட்டமாக ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் அமெரிக்க ராணுவ முகாமை குறி வைத்து ஈரான் ராணுவத்தின் காத்ஸ் பிரிவு இந்த தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், ஈரானில் உள்ள 52 முக்கிய இடங்களின் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்ததாக தகவல் கிடைத்துள்ளது.

பலமுறை சுட்டிக்காட்டியும் துரோகம்! உடனடியாக தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: மருத்துவர் ராமதாஸ்

0

பலமுறை சுட்டிக்காட்டியும் துரோகம்! உடனடியாக தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: மருத்துவர் ராமதாஸ்

பலமுறை சுட்டிக்காட்டியும் இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்துவதில் சமூக நீதிக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் துரோகம் செய்வது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் விமர்சித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் “ஆசிரியர்கள் நியமனத்தில் மீண்டும் சமூக அநீதி : உடனே சரி செய்யப்பட வேண்டும்!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

தமிழ்நாடு அரசு பள்ளிகளுக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதில் மீண்டும் ஒருமுறை இடஒதுக்கீட்டு விதிகள் மீறப்பட்டுள்ளன. பலமுறை சுட்டிக்காட்டியும் இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்துவதில் சமூக நீதிக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் துரோகம் செய்வது கண்டிக்கத்தக்கதாகும்.

அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் 17 பாடங்களுக்கான 2144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 27, 28, 29 ஆகிய தேதிகளில் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. அவற்றில் ஆங்கிலம், கணிதம், இயற்பியல் உள்ளிட்ட 12 பாடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் கடந்த ஆண்டு நவம்பர் 20-ஆம் தேதி வெளியிடப்பட்டது. மீதமுள்ள பாடங்களில் தமிழ், வரலாறு, பொருளாதாரம் ஆகிய பாடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதுநிலை ஆசிரியர்கள் பட்டியல் கடந்த 2-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. முதலில் செய்யப்பட்ட நியமனங்களில் இடஒதுக்கீட்டு விதிகள் எவ்வாறு அப்பட்டமாக மீறப்பட்டனவோ, அதேபோல், இப்போதும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன.

உதாரணமாக தமிழ் பாடத்திற்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பின்னடைவுப் பணியிடங்கள் 54, பொதுப்பிரிவில் ஆட்டிசம் மற்றும் கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பின்னடைவுப் பணியிடங்கள் 3 என மொத்தம் 57 பின்னடைவுப் பணியிடங்கள், 245 நடப்புக் காலியிடங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு 4 பணியிடங்கள், கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கு ஓர் காலியிடம் என மொத்தம் 319 ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். இவர்களில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பின்னடைவுப் பணியிடங்களில் அச்சமுதாயத்தினரை நியமித்து விட்டு, மீதமுள்ள பணியிடங்களுக்கு மட்டும் தான் 69% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் தான் உண்மையான சமூகநீதியை நிலைநிறுத்த முடியும்.

ஆனால், பின்னடைவுப் பணியிடங்கள், நடப்புக் காலியிடங்கள் என அனைத்துக்கும் ஒன்றாக சேர்த்து ஒரே தரவரிசைப் பட்டியல் தயாரித்துள்ள ஆசிரியர் தேர்வு வாரியம், அதில் மட்டும் ஒட்டுமொத்தமாக 20% இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது. அதுமட்டுமின்றி, பொதுப்பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும் இடஒதுக்கீட்டுப் பிரிவினராக தேர்வு வாரியம் கணக்குக் காட்டியுள்ளது. தமிழ் பாடத்திற்கான நடப்புக் காலியிடங்கள் 245 என்பதால், அதில் 31%, அதாவது 76 இடங்கள் பொதுப்பிரிவினருக்கானதாகும். அவற்றில் 28 இடங்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கைப்பற்றியுள்ளனர். அந்த 28 இடங்களையும் பொதுப்பிரிவு இடங்களாக கருதி, அவர்கள் தவிர்த்து மீதமுள்ள மிகவும் பிற்படுத்தப் பட்டோருக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யப்படவில்லை.

இட ஒதுக்கீட்டு விதி முறையாக பின்பற்றப்பட்டிருந்தால், பின்னடைவுப் பணியிடங்களில் 54 பேர், பொதுப்பிரிவில் 28 பேர், இட ஒதுக்கீட்டில் 49 பேர் என மொத்தம் 131 மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு ஆசிரியர் பணி கிடைத்திருக்க வேண்டும். ஆனால், 28 பேர் குறைவாக 103 பேருக்கு மட்டும் தான் வேலை கிடைத்துள்ளது. அதேபோல், பொருளாதார ஆசிரியர்கள் நியமனத்தில் 12 பணியிடங்கள், வரலாற்று ஆசிரியர்கள் நியமனத்தில் 6 பணியிடங்கள் என்று மொத்தம் 46 மிகவும் பிற்பட்டோருக்கு சமூக நீதி மறுக்கப்பட்ட்டிருக்கிறது. மேலும், பட்டியலினத்தவர்கள் 6 பேருக்கும், அருந்ததியர் 2 பேருக்கும் இதேபோல் சமூக அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

இதற்கு முன் வேதியியல் உள்ளிட்ட 7 பாடங்களுக்கான ஆசிரியர்கள் நியமனத்தில் இதேபோன்று துரோகம் இழைக்கப்பட்ட போது, அதை பா.ம.க. கடுமையாகக் கண்டித்தது. அதுமட்டுமின்றி, ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவரை பா.ம.க. குழுவினர் சந்தித்து இதுபற்றி முறையிட்ட போது, கடந்த கால நடைமுறைகளின்படியே இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டிருப்பதாகவும், அந்த நடைமுறையை மாற்ற முடியாது என்றும் கூறினார். இட ஒதுக்கீடு வழங்குவதில் தவறு நடக்கிறது என்பதை ஆதாரங்களுடன் விளக்கிய பிறகும், இழைக்கப்பட்ட துரோகத்தை சரி செய்யாமல், கடந்த காலங்களில் செய்ததையே நாங்களும் செய்கிறோம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கூறுவது சிறிதும் பொறுப்பற்ற செயலாகும்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கடந்த காலங்களில் ஒதுக்கப்பட்ட இடங்கள் அவர்களைக் கொண்டு நிரப்பப்படாததால் தான் அவை பின்னடைவுப் பணியிடங்களாக அறிவிக்கப்படுகின்றன. அது அவர்களுக்கு வழங்கப்படும் சலுகை அல்ல… மாறாக மிகவும் காலம் கடந்து வழங்கப்படும் நீதி ஆகும். ஆனால், அதை மதிக்காமல் பின்னடைவு பணியிடங்களால் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைக்க வேண்டிய நீதியை தடுத்து நிறுத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முயல்வது பெரும் பாவமாகும்.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களின் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை புரிந்து கொள்ளவும், சமூக நீதியை காப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தயாராக இல்லை. எனவே, இந்த விஷயத்தில் முதலமைச்சரும், பள்ளிக்கல்வி அமைச்சரும் தலையிட்டு ஆசிரியர்கள் நியமனத்தில் சமூக நீதியை நிலை நிறுத்த முன்வர வேண்டும் என்றும் அவர் அதில் கூறியுள்ளார்.

அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் பாஜகவை கண்டிக்கும் வைகோ

0

அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் பாஜகவை கண்டிக்கும் வைகோ

பாஜக தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்த முயற்சிக்கும் தேசிய மக்கள் தொகை பதிவேடு கையேட்டில் முஸ்லிம் பண்டிகைகள் நீக்கப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய பா.ஜ.க. அரசு, எதேச்சதிகாரப் போக்குடன் நடைமுறைப்படுத்த முனைந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகவும் நாடெங்கும் போராட்டங்கள் எரிமலையென வெடித்துள்ளன.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையிலும், நாட்டின் பன்முகத் தன்மையைச் சீர்குலைக்கவும், குடிமக்கள் திருத்தச் சட்டம் மற்றும் குடிமக்கள் பதிவேட்டை நடைமுறைப்படுத்த பா.ஜ.க. துடிக்கிறது.

இந்திய அரசுக்கு எதிராக உலக அரங்கத்தில் எழுந்துள்ள கண்டனங்களையும் மோடி அரசு பொருட்படுத்தவில்லை.
இந்நிலையில், அனைத்து மாநிலங்களிலும் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (சூஞசு) நடத்துவதற்கு உத்தரவிட்டு இருக்கிறது. இதற்கான கையேடு வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆங்கிலம் மற்றும் கிரிகோரியன் மாதங்களுடன் தொடர்புடைய முக்கியமான திருவிழாக்கள் என்ற பட்டியல் தரப்பட்டுள்ளது.

அதில் வழக்கமாகக் கொண்டாடப்படும் இந்து மதப் பண்டிகைகள் மற்றும் மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, கிறிஸ்துமஸ், குருநானக் ஜெயந்தி, குருகோவிந்த் சிங் ஜெயந்தி மற்றும் புத்தபூர்னிமா போன்ற சமண, சீக்கிய, கிறிஸ்தவ மற்றும் பௌத்த மதங்களைச் சேர்ந்த பண்டிகைகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் முஸ்லிம் பண்டிகைகளான ரம்ஜான், மிலாடி நபி போன்றவை இடம்பெறவில்லை.

இந்திய நாட்டின் மக்கள் தொகையில், 13 விழுக்காடாக உள்ள கோடிக்கணக்கான இசுலாமிய மக்களின் பண்டிகைகளை திட்டமிட்டே பாரதிய ஜனதா அரசு மக்கள் தொகைப் பதிவேட்டின் கையேட்டில் புறக்கணித்து இருக்கிறது. இது மோடி அரசின் அப்பட்டமான இந்துத்துவா மதவாத சனாதன மனப்பான்மையைக் காட்டுகிறது.

ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவா அடிப்படைக் கொள்கையான இந்துராஷ்டிரத்தைக் கட்டி அமைக்க அரசியலமைப்புச் சட்டத்தை காலில் போட்டு மிதிப்பதையும், அரசு நிர்வாகத்தைப் பயன்படுத்துவதையும் இந்நாட்டு மக்கள் ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டார்கள். பா.ஜ.க. அரசின் இத்தகைய போக்கு கடும் கண்டனத்துக்குரியது. தேசிய மக்கள் தொகைப் பதிவேடு கையேட்டில் இசுலாமிய பண்டிகைகளையும் உடனடியாகச் சேர்க்க வேண்டும்.

பாரதிய ஜனதா கட்சி அரசு அல்லாத எதிர்க்கட்சிகள் ஆட்சி நடத்தும் மேற்குவங்காளம், கேரளா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநில அரசுகள் தேசிய மக்கள் தொகைத் திட்ட பதிவேடு பணியை மேற்கொள்ள மாட்டோம் என்று அறிவித்துள்ளன.

“மக்கள் தொகைச் சட்டம் மற்றும் குடிமக்கள் சட்டம் 2003ன் படி, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, மக்கள் தொகை பதிவேடு புதுப்பிக்கும் பணிகளை மத்திய – மாநில அரசு ஊழியர்கள் மேற்கொள்வது கட்டாயமாகும். இந்தப் பணிகளைச் செய்ய மறுக்கும் அரசு ஊழியர்களுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உளளது. மேலும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும்” என்று மத்திய பா.ஜ.க. மிரட்டல் விடுத்துள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்தந்த தேசிய இனங்களின் உணர்வுகளைத்தான் மாநில அரசுகளின் கருத்துகள் பிரதிபலிக்கின்றன. அவற்றை அலட்சியப்படுத்திவிட்டு, பாசிச சர்வாதிகார முறையில் மாநில அரசுகளை மிரட்டுவதும், அரசு ஊழியர்களுக்கு மத்திய பா.ஜ.க. அரசு மிரட்டல் விடுப்பதும் கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.
மக்களாட்சிக்கு எதிரான பா.ஜ.க. அரசின் இத்தகைய போக்குகள் உடனடியாகக் கைவிடப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.