Home Blog Page 5811

தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி என மீண்டும் நிரூபித்த பாமக

0

தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி என மீண்டும் நிரூபித்த பாமக

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வந்துள்ள நிலையில் மீண்டும் தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி பாமக என்பதை இந்த உள்ளாட்சி தேர்தல் நிரூபித்துள்ளது என அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தமிழ்நாட்டில் திசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல்களின் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பா.ம.க. போட்டியிட்ட இடங்களில் கணிசமான அளவில் வெற்றி பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளைப் பொறுத்தவரை பாட்டாளி மக்கள் கட்சி மொத்தம் 36 இடங்களில் போட்டியிட்டு 16 இடங்களை கைப்பற்றியிருக்கிறது. ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 430 இடங்களில் களமிறங்கி 224 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஊராட்சி ஒன்றியங்களைப் பொறுத்தவரை, போட்டியிட்ட இடங்களில் பாட்டாளி மக்கள் கட்சி 52.09 விழுக்காட்டு இடங்களை வென்றிருக்கிறது. ஊராட்சி ஒன்றியங்களில் பிற கட்சிகளை விட பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றி விழுக்காடு தான் அதிகம். மாவட்ட ஊராட்சிகளைப் பொறுத்தவரை களமிறங்கிய இடங்களில் 44.44% இடங்களில் வெற்றி வாகை சூடியிருக்கிறோம். இது மிகப்பெரிய வெற்றி என்பதில் சந்தேகமில்லை. இன்னும் சில இடங்களில் முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளன. அப்போது வெற்றி விழுக்காடு உயரும்.

உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் அதிமுக தலைமையிலான அணி வென்ற இடங்களை விட திமுக தலைமையிலான அணி வென்ற இடங்களின் எண்ணிக்கை மெல்லிய அளவில் தான் அதிகமாகும். ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் நடத்தப்பட்டிருந்தால் அதிமுக அணி தான் முதலிடம் பிடித்து இருந்திருக்கும். திமுக அணி வென்ற இடங்களை விட அதிமுக தலைமையிலான அணி வென்ற இடங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

அதேபோல், கட்சி சின்னங்களின் அடிப்படையில் இல்லாமல் சுயேட்சை சின்னங்களின் அடிப்படையில் நடந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட பா.ம.க.வினர் ஆயிரக்கணக்கான இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இவற்றின் அடிப்படையில் தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி பா.ம.க. தான் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சி அதன் செல்வாக்கையும், வலிமையையும் ஒப்பிடும் போது மிகவும் குறைவான இடங்களில் தான் போட்டியிட்டது. பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்கள் பணத்தை வாரி இறைத்தார்கள். பா.ம.க.வோ சொந்த வலிமை, கூட்டணி தொண்டர்களின் உழைப்பு, மக்களின் ஆதரவு ஆகியவற்றை மட்டுமே நம்பி களமிறங்கியது. பல இடங்களில் எங்களுடன் இருக்க வேண்டிய நண்பர்களே, எங்களை எதிர்த்து நட்புடன் போட்டியிட்டனர். இவை அனைத்தையும் மீறி தான் பா.ம.க வெற்றி பெற்றுள்ளது. அவ்வகையில் இந்த வெற்றி சிறப்பானது.

ஒவ்வொரு தேர்தலிலும் பொய்மூட்டைகளை அவிழ்த்து விட்டு மக்களை ஏமாற்றும் வழக்கம் கொண்ட திமுக, இம்முறையும் அதிமுக, பா.ம.க. அங்கம் வகிக்கும் கூட்டணிக்கு எதிராக அவதூறுகளையும், பொய்களையும் அள்ளி வீசியது. அவற்றையெல்லாம் முறியடித்து வெற்றி பெற்றதன் மூலம் பாட்டாளி மக்கள் கட்சி அதன் வலிமையையும், செல்வாக்கையும் உலகிற்கு நிரூபித்து தலைநிமிர்ந்து நிற்கிறது.

பாட்டாளி மக்கள் கட்சியின் கோட்டையாக திகழும் விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்பட்டிருந்தால், இப்போது வென்றுள்ள இடங்களை விட இரு மடங்கிற்கும் கூடுதலான இடங்களில் பா.ம.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருப்பார்கள். ஆனால், தோல்விபயம் காரணமாக அந்த மாவட்டங்களில் நடைபெறவிருந்த தேர்தலுக்கு திமுக தடை வாங்கிவிட்டது. அந்த மாவட்டங்களுக்கு அடுத்த சில வாரங்களில் தேர்தல் நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும் போது அதிமுக – பா.ம.க. கூட்டணி தான் தமிழகத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற கூட்டணியாக இருக்கும்; இப்போது தற்காலிகமாக சிரிப்பவர்கள், அப்போது நம்மைக் கண்டு வியக்கப்போவது உறுதி.

இந்திய ஜனநாயகத்தின் அடித்தளம் உள்ளாட்சி அமைப்புகள் தான். உள்ளாட்சி அமைப்புகள் வலிமையாக இருந்தால் தான் ஜனநாயகம் தழைக்கும். இதை மனதில் கொண்டு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வெற்றி வெற்ற வேட்பாளர்கள் அனைவரும் செயல்பட வேண்டும். இந்த வெற்றியை அளித்த பொதுமக்கள் தான் தங்களின் ஜனநாயக எஜமானர்கள் என்பதை மனதில் நிறுத்தி, அவர்களின் நம்பிக்கைகளையும், பாராட்டுதல்களையும் வென்றெடுக்கும் வகையில் பாமகவினரின் செயல்பாடுகள் அமைய வேண்டும்.

ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் மக்கள் அளித்த தீர்ப்பை பாட்டாளி மக்கள் கட்சி உவப்புடன் ஏற்றுக் கொள்கிறது. அடுத்து நடைபெறவுள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள், தமிழ்நாடு முழுமைக்குமான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் ஆகியவற்றை எதிர்கொள்ள பா.ம.க. தயாராக உள்ளது. நடைபெற்று முடிந்த தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்காக உழைத்த அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நன்றிகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அதில் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பரபரப்பு!!! போண்டா சாப்பிட்ட பெண் மரணம்?

0

சென்னையில் பரபரப்பு!!! போண்டா சாப்பிட்ட பெண் மரணம்?

சென்னை சேர்ந்த கங்காதரன் இவர் சூளைமேட்டில் காமராஜர் நகரில் வசித்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் கங்காதரனுக்கு.பத்மாவதி என்ற மனைவி உள்ளார், நேற்று தமது தாயுடன் பத்மாவதி கடையில் போண்டா வாங்கி வந்து சாப்பிட்டுள்ளார்.

அப்போது எதிர்பாரவிதமாக பத்மாவதியின் தொண்டையில் போண்டா சிக்கி, மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் பக்கத்துக்கு வீட்டினரின் உதவியுடன் அவசர ஆம்புலன்சில் ஏற்றி பத்மாவதியை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். 

பத்மாவதியை சோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இது குறித்து சூளைமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.போண்டா சாப்பிட்ட பெண் உயிரிழந்த சம்பவம் சூளைமேடு பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

ஊரக உள்ளாட்சி தேர்தல் 1 மணி நிலவரம்?

0

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 27மற்றும் 30 இரண்டு கட்டங்களாக நடந்தது. பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

ஆளும் அ.தி. மு. க. இடையே ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு  கவுன்சிலர் பதவிகளுக்கான முடிவுகள் அறிவிக்கபட்டு கொண்டு இருக்கிறது. ஆனால், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கான வாக்குகள் எண்ணும் பணி விடிய விடிய நடைபெற்றது.

இந்நிலையில், இன்று இரண்டாவது நாளாக வாக்கு எண்ணிக்கை தொடர்கிறது. இதுவரை , 5090 ஒன்றிய கவுன்சிலர் இடங்களுக்கான முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. இதில், திமுக கூட்டணி 2327 இடங்களிலும், அதிமுக  கூட்டணி 2134 இடங்களிலும் வெற்றி பெற்றது. மற்ற கட்சிகள் 521 பதவிகளை கைப்பற்றின.

இதேபோல் மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 515 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், அதிமுக கூட்டணி 241இடங்களிலும், திமுக கூட்டணி 267 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

சூர்யா படத்தில் இணையும் பிரபல இசையமைப்பாளர்?

0

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இப்படத்தை இறுதிச்சுற்று புகழ் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்

பிரபல ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது.

சூர்யா படத்தில் இணையும் பிரபல இசையமைப்பாளர்?

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.இதன் செகண்ட் லுக் போஸ்டர் புத்தாண்டு அன்று வெளிவந்து லைக்ஸ்களை அள்ளியது.

இப்படத்தை அடுத்து 40படமாக வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார். இப்படத்தை அசுரன் படத்தை தயாரித்த வி.கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி தாணு தயாரிக்கும். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பதாக படக்குழுவினர் இது அவரது 75 படமாகும்.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் 12 மணி நிலவரம்?

0

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 27மற்றும் 30 இரண்டு கட்டங்களாக நடந்தது. பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு பதிவு தொடங்கியதில் இருந்து தி. மு. க முன்னிலையில் உள்ளது

ஆளும் அ.தி. மு. க. இடையே ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு  கவுன்சிலர் பதவிகளுக்கான முடிவுகள் அறிவிக்கபட்டு கொண்டு இருக்கிறது. ஆனால், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கான வாக்குகள் எண்ணும் பணி விடிய விடிய நடைபெற்றது.

இந்நிலையில், இன்று இரண்டாவது நாளாக வாக்கு எண்ணிக்கை தொடர்கிறது. இதுவரை , 5004 ஒன்றிய கவுன்சிலர் இடங்களுக்கான முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. இதில், திமுக கூட்டணி 2304 இடங்களிலும், அதிமுக  கூட்டணி 2142 இடங்களிலும் வெற்றி பெற்றது. மற்ற கட்சிகள் 468 பதவிகளை கைப்பற்றின.

இதேபோல் மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 507 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், அதிமுக கூட்டணி 239 இடங்களிலும், திமுக கூட்டணி 268 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

மீண்டும் நித்யானந்தா எஸ்கேப் !!!

0

ஆசிரமத்தில் தங்கியிருந்த பெண் சீடரை  கற்பழித்ததாக  நித்யானந்தா  மீது கர்நாடக மாநிலம் ராம்நகர் கோர்ட்டில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. இதைப்போல மேலும் சில வழக்குகள் அவருக்கு எதிராக பல்வேறு கோர்ட்டுகளில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் சாமியார் நித்யானந்தா இந்தியாவை விட்டு வெளியேறி தலைமறைவாக உள்ளார்.

கர்நாடக மாநிலம் பிடதியை தலைமையிடமாக கொண்டு ஆசிரமங்களை நடத்தி வரும் சாகச சாமியார்  நித்யானந்தா மீது குழந்தைகள் கடத்தல் மற்றும் சிறை வைத்தல் தொடர்பான வழக்கு குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அங்குள்ள அவரது ஆசிரம கிளை ஒன்றில் போலீசார் சோதனை நடத்தி 4 குழந்தைகளை மீட்டனர். இந்த சம்பவத்தில் ஆசிரம நிர்வாகிகளான 2 பெண் சீடர்கள் உள்பட மேலும் சிலரை போலீசார் கைது செய்தனர்.

தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் அவரை இந்தியா கொண்டு வர வேண்டும் என  கர்நாடக  கோர்ட்டு  உத்தரவிட்டுள்ளது.  ஈகுவடார்  நாட்டில் அவர்  பதுங்கியிருப்பதாக  கூறப்பட்ட  நிலையில், அவரை  இந்தியாவுக்கு  நாடு கடத்தி கொண்டுவர  மத்திய  அரசும்,  கர்நாடக  மாநில  அரசும்  தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளன.

ஆனால் நித்யானந்தா  பற்றி  எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என மத்திய அரசு கூறியுள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர்  ரவீஷ்குமார்  கூறுகையில், ‘நித்யானந்தாவை கண்டுபிடிக்கும் முயற்சியில் நாங்கள் பல நாடுகளின்  தூதரகங்களையும், அரசுகளையும் நாடியுள்ளோம். நித்யானந்தா  குறித்து  தகவல் இருந்தால் தெரிவிக்குமாறு கேட்டு இருக்கிறோம். ஆனால் இது தொடர்பாக  ஈகுவடார்  நாட்டை  தொடர்பு கொண்டபோது அவர்  அங்கிருந்து  வெளியேறிவிட்டதாக  தகவல் கிடைத்தது’ என்று கூறியுள்ளார்.

முன்னணியில் தி.மு.க !!! அ.தி.மு.க பின்னடைவு ???

0

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. மொத்தம் 515 மாவட்ட கவுன்சிலர்கள், 5090 ஒன்றிய கவுன்சிலர், 9624 கிராம ஊராட்சி தலைவர்கள், 76,746 ஊராட்சி கவுன்சிலர்கள் ஆகிய பதவிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்தது.  இதில் பதிவான ஓட்டுகளை என்னும் பணி நேற்று துவங்கியது.

இந்நிலையில் நேற்று இரவு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள முடிவுகளின்படி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கான இடங்களில், அதிமுக 308 இடங்களிலும், திமுக 378 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை குறித்து மாநில தேர்தல் கமிஷனர் பழனிசாமி சென்னையில் நேற்று இரவு பேட்டி அளித்தார்.

 அப்போது அவர் கூறியதாவது “ ஓட்டு எண்ணிக்கை முறையாக நடந்து வருகிறது. இதில் எந்த இடத்திலும் முறைகேடு நடைபெறவில்லை. ஓட்டு எண்ணும் ஊழியர்களை, சுழற்சி முறையில் பயன்படுத்துவது குறித்து தேர்தல் அலுவலர் முடிவு செய்வார். வெற்றி பெற்றவர்களுக்கு உடனடியாக சான்றிதழ்களை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தி.மு.க., முன்னிலையான இடங்களில் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை என அக்கட்சி அளித்துள்ள புகாரில் உண்மை இல்லை. கட்சி பாகுபாடின்றி வெளிப்படையாக செயல்படுகிறோம். புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கையும் எடுத்து வருகிறோம்.

மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவி இடங்களுக்கு பதிவான ஓட்டுகள் அனைத்தும் ஒவ்வொன்றாக எடுத்து யாருக்கு வாக்களித்திருக்கிறார்கள்? என்பதை கட்சி முகவர்களிடம் காண்பித்த பின்னரே அவை கட்சி வாரியாக பிரிக்கப்பட்டது. இதனால் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்களுக்கான முழுமையான முடிவுகளை வெளியிடுவதற்கு அதிக நேரமாகிறது” என்று தெரிவித்தார்

கோலத்திற்கும் பாகிஸ்தானிற்கும் தொடர்பு ; அதிர்ச்சி தகவல்

0

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில். சென்னையில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நூதன முறையில் வீடுகள் முன்பு கோலம் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் கூட கோலம் மூலம் தங்களது எதிர்ப்பை பதிவுசெய்தனர்.

இந்நிலையில் கடந்த 29-ந்தேதி, சென்னை பெசன்ட்நகரில் கல்லூரி மாணவிகள் சிலர் ஒன்று கூடி வீடுகள் முன்பு திடீரென கோலம் போட்டனர். கோலத்துக்கு அருகில் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான வாசகங்களையும் அவர்கள் எழுதி வைத்தனர். இது தொடர்பாக 8 பெண்கள் கைது செய்யப்பட்டு பிறகு  விடுவிக்கப்பட்டனர். இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் கோலம் போட்டு கைதான 8 பேரில் காயத்ரி என்ற பெண்ணுக்கு பாகிஸ்தானை சேர்ந்த அமைப்புடன் தொடர்பு இருப்பதாக சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில் “கோலம் போட்டு போலீசில் பிடிபட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட காயத்ரி கந்தாடை என்பவருக்கு பாகிஸ்தான் அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.இது தொடர்பாக அவரே தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். பேஸ்புக் புரோபைலில் ‘பைட்ஸ் பார் ஆல்’ பாகிஸ்தான் என்கிற நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.  இந்த நிறுவனம், “அசோசியே‌ஷன் ஆப் ஆல் பாகிஸ்தான் சிட்டிசன் ஜேனலிஸ்ட்” என்கிற அமைப்பை சேர்ந்ததாகும். இவரது தொடர்பு குறித்தும், பின்னணி பற்றியும் விசாரணை நடத்தி வருகிறோம். “இவ்வாறு விஸ்வநாதன் தெரிவித்தார்.

படிக்கும் போதே பஞ்சாயத்து தலைவர்! பெருமை கொள்ளும் இளைஞர் பட்டாளம்!

0

படிக்கும் போதே பஞ்சாயத்து தலைவர்!பெருமை கொள்ளும் இளைஞர் பட்டாளம்!

இன்று நடைபெற்ற விறுவிறுப்பான உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் கிருஷ்ணகிரி மாவட்டம் கே.என்.தொட்டி ஊராட்சி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 21 வயது கல்லூரி மாணவி சந்தியாராணி 210 வாக்குகள் முன்னிலை பெற்று வெற்றி வாகை சூடியுள்ளார்.

இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று எதிர்பார்த்தாலும் களத்தில் இருக்கும் சவால்கள் மிக அதிகம், அனைத்து தடைகளையும் உடைத்து வெற்றிக்கனியை பறித்த சந்தியாராணிக்கு சமூக வளைதளத்தில் மக்கள் சார்பாக வாழ்த்து மழை பொழிந்து வருகிறது.

இளைய சமுதாயத்தின் மனதில் ஊக்கமளித்த சந்தியா ராணியைப் போலவே, மதுரை மாவட்டம் மேலூர் ஒன்றியத்தில் உள்ள அரிட்டாப்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 79 வயது மூதாட்டி வீரம்மாள் 195 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

படிக்கும் போதே பஞ்சாயத்து தலைவர்! பெருமை கொள்ளும் இளைஞர் பட்டாளம்!

இவரைப்போலவே ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கான்சாபுரம் பஞ்சாயத்தில் துப்புரவு பணியாளராக வேலைபார்த்த சரஸ்வதி என்பவர் தனது அரசுப்பணியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட்டு பஞ்சாயத்து தலைவராக வெற்றி பெற்றுள்ளார்.

இறுதியான தேர்தல் முடிவுகள் நாளை அறிவிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கடற்கரையில் படு கிளாமராக புத்தாண்டை கொண்டாடிய நயன்தாரா?

0

கடற்கரையில் படு கிளாமராக புத்தாண்டை கொண்டாடிய நயன்தாரா?


தென்னிந்தியாவின் லேடீஸ் சூப்பர் ஸ்டாராக விளங்கி வருபவர் நயன்தாரா தமிழ் திரையுலகில் கமலைத் தவிர மீதி அனைத்து உச்ச நடிகர்களுடனும் நடித்து விட்டார்.

மேலும் இவரின் கால்ஷீட்டுக்காக நிறைய பேர் காத்துக் கொண்டிருக்கின்றனர். சென்ற வருடம் இவர் நடிப்பில் மொத்தம் 5 படங்கள் வந்தன அதில் கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களான அஜித்தின் விசுவாசம் விஜய்யின் பிகில் ஆகிய இரண்டு படங்களிலும் ஜோடியாக நடித்திருந்தார்.

கடற்கரையில் படு கிளாமராக புத்தாண்டை கொண்டாடிய நயன்தாரா?

இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் சிறந்த கலெக்ஷனை பெற்றது தன்னை முன்னணி கதாபாத்திரமாக நடித்த ஐரா மற்றும் கொலையுதிர் காலம் ஆகிய இரண்டு படங்களும் சுமாரான வெற்றியே பெற்றது.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படம் பொங்கல் வெளியீடாக வருகிறது அப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

சமூக வலைதளமான ட்விட்டரில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நயன்தாரா தனது புகைப்படங்களில் அதில் பதிவு ஏற்றுவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்.

கடற்கரையில் படு கிளாமராக புத்தாண்டை கொண்டாடிய நயன்தாரா?

கிறிஸ்மஸ் தினம் மற்றும் னது காதலருடன் வெளியே செல்லும் அனைத்து போட்டோக்களையும் அவர் ட்விட்டரில் பதிவு பதிவேற்றுவது வழக்கமாகக் கொண்டுள்ளார் மேலும் புத்தாண்டு தினமான நேற்று அவர் கடற்கரையில் எடுத்த போட்டோக்களை ட்விட்டரில் பதிவேற்றி உள்ளார் இது நயன்தாரா ரசிகர்களிடம் லைக்ஸ் அள்ளி வருகிறது.

கடற்கரையில் படு கிளாமராக புத்தாண்டை கொண்டாடிய நயன்தாரா?