Home Blog Page 5812

தொடர்ந்து தமிழகத்தை புறக்கணிக்கும் மத்திய அரசு! கடமையிலிருந்து தப்பிக்க முடியாது என மருத்துவர் ராமதாஸ் விமர்சனம்

0

தொடர்ந்து தமிழகத்தை புறக்கணிக்கும் மத்திய அரசு! கடமையிலிருந்து தப்பிக்க முடியாது என மருத்துவர் ராமதாஸ் விமர்சனம்

காவிரியை தூய்மை படுத்தும் தமிழக அரசின் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்காததை குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் “காவிரியை தூய்மைப்படுத்தும் திட்டம்: மத்திய அரசு நிதி வழங்க வேண்டும்! ” என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.

காவிரி ஆற்றைத் தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு நிதியுதவி வழங்க மத்திய அரசு மறுத்து விட்டதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சி அளிக்கின்றன. இந்தியாவின் பெரிய நதிகளில் ஒன்றும், புனிதமான நதிகளில் குறிப்பிடத்தக்கதுமான காவிரி ஆறு அசுத்தங்களாலும், கழிவுகளாலும் நஞ்சாக மாறிக் கொண்டிருக்கும் நிலையில் அதை தடுக்க உதவ மறுப்பது நியாயமற்றது.

காவிரியை தூய்மைப்படுத்துவதற்காக ‘‘நடந்தாய் வாழி காவேரி’’ என்ற திட்டத்தை தமிழக அரசு தயாரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 15-ஆம் தேதி தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்தித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இந்தத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதன் தொடர்ச்சியாக கடந்த திசம்பர் இறுதியில் தில்லியில் மத்திய நீர்வள அமைச்சக செயலாளர் யு.பி.சிங் அவர்களை தில்லியில் சந்தித்த தமிழக தலைமைச் செயலர் சண்முகம், இத்திட்டம் மற்றும் அதற்கான நிதியுதவி பற்றி நினைவூட்டியிருக்கிறார். அப்போது திட்டத்தின் நோக்கம் மற்றும் அவசியத்தை பாராட்டிய யு.பி.சிங், அதேநேரத்தில் இத்திட்டத்திற்கு மத்திய அரசால் எந்த நிதி உதவியும் வழங்க இயலாது என்று கூறி விட்டதாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

மத்திய அரசிடம் போதிய நிதியுதவி இல்லை என்று கூறியோ, வேறு காரணங்களை அடுக்கியோ இந்தத் திட்டத்திற்கு நிதியுதவி வழங்க மத்திய அரசு மறுக்க முடியாது. காரணம் காவிரியை சுத்தப்படுத்த உதவி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய அரசுக்கு உண்டு. காரணம், காவிரி ஆற்றை அசுத்தப்படுத்தியதில் பெரும்பங்கு கர்நாடக அரசுக்கு உண்டு. பெங்களூரு நகரிலும், அதையொட்டிய பகுதிகளிலும் உள்ள வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து ஒவ்வொரு நாளும் 150 கோடி லிட்டர் கழிவுகள் காவிரியில் கலக்கவிடப்படுகின்றன. இதை கர்நாடக சட்டப்பேரவையில் அம்மாநில அமைச்சர் ஒருவரே வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறார். மேலும், காவிரி ஆறு மாநிலங்களிடையே ஓடும் ஆறு என்ற வகையிலும் அதன் தூய்மைப்பணிக்கு மத்திய அரசு கட்டாயமாக உதவ வேண்டும்.

இந்தியாவில் வேகமாக சீரழியும் ஆறுகளில் காவிரியும் ஒன்று. ஆறுகள் சீரழிவதை தடுக்க வேண்டிய கடமையிலிருந்தும் கடந்த கால மத்திய அரசுகள் தவறி விட்டன. ஆறுகள் மாசுபடுவதற்கு காரணம் வீடுகள் மற்றும் தொழிற்சாலை கழிவுகள் கலக்கவிடப்படுவது தான். அதைத் தடுப்பதற்காக பெரிய நகரங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை மாநில அரசுகள் அமைப்பதை மத்திய அரசு உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால், இந்தியாவில் நகர்ப்புற பகுதிகளில் ஒரு நாளுக்கு 6194 கோடி லிட்டர் கழிவு நீர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் நிலையில், அவற்றில் 38% கழிவுநீரை சுத்திகரிக்கும் அளவுக்கு மட்டும் தான் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றிலும் மூன்றில் இரு பங்கு அளவுக்கு மட்டும் தான் கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகிறது என்பதால், ஒவ்வொரு நாளும் 3800 கோடி லிட்டர் கழிவு நீர் ஆறுகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தான் கலக்கின்றன. உண்மை இவ்வாறு இருக்கும் நிலையில், இதனால் ஏற்பட்ட பாதிப்புகளை களைவதற்கு உதவ முடியாது என்று கூறி, தமது கடமையிலிருந்து மத்திய அரசு ஒருபோதும் விலகிச் செல்ல முடியாது.

காவிரி பாயும் மாநிலங்களில் தமிழகத்தை எடுத்துக் கொண்டால், நகர்ப்புறங்களில் இருந்து மட்டும் தினமும் 559 கோடி லிட்டர் கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. ஆனால், தமிழகத்தின் கழிவுநீர் சுத்திகரிப்பு திறன் வெறும் 179 கோடி மட்டும் தான். அதேபோல், கர்நாடகத்தின் நகர்ப்புறங்களில் இருந்து தினமும் 377 கோடி லிட்டர் கழிவு நீர் வெளியேற்றப்படும் நிலையில், அம்மாநிலத்தின் சுத்திகரிப்பு திறன் வெறும் 130 கோடி லிட்டர் மட்டும் தான். இந்த புள்ளி விவரங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரின் அளவு குறித்தவை மட்டும் தான். தொழிற்சாலைகளில் இருந்தும், கிராமப்புறங்களிலிருந்தும் வெளியேற்றப்படும் கழிவுநீர் குறித்த துல்லியமான புள்ளிவிவரங்கள் எந்த அரசு நிறுவனத்திடமும் இல்லை.

‘‘காவிரியைக் காப்போம்’’ என்ற தலைப்பில் பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், 2017-ஆம் ஆண்டு ஓகனேக்கல் முதல் பூம்புகார் வரை மேற்கொண்ட விழிப்புணர்வு பரப்புரையின் போது காவிரியில் கழிவுகள் கலப்பது தொடர்பான புள்ளி விவரங்களை ஆவணப்படுத்தினார். மேட்டூர் கெம்பிளாஸ்ட் ஆலையிலிருந்து மட்டும் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய கார்சினோஜென், நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கும் டையாக்சின் உள்ளிட்ட 28 வகையான நச்சுப்பொருட்கள் காவிரியில் கலக்க விடப்படுவதாகவும், பொதுமக்கள் புனித நீராடும் கும்பகோணத்தில் மட்டும் 52 வகை நச்சுப்பொருட்கள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

காவிரி ஆற்றின் நிலைமை இவ்வளவு மோசமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், காவிரியை தூய்மைப்படுத்துவதில் மத்திய அரசு பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது. கங்கை ஆற்றை தூய்மைப்படுத்த 2020&ஆம் ஆண்டிற்குள் ரூ.20,000 கோடி செலவிடப்படும் என்று அறிவித்து மத்திய அரசு நிதி ஒதுக்கி வருகிறது. யமுனை ஆற்றை சீரமைக்கும் திட்டத்திற்காக உத்தரப்பிரதேசம், ஹரியானா, தில்லி ஆகிய மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.1,515 கோடி ஒதுக்கியுள்ளது. அவ்வாறு இருக்கும் போது காவிரியை தூய்மைப்படுத்துவதற்காக நிதி உதவி வழங்க மத்திய அரசு மறுப்பது நியாயமல்ல.

காவிரியை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு மொத்தம் ரூ.11,250 கோடி செலவாகும் என மதிப்பிடப் பட்டுள்ளது. அதில் ஒரு பகுதியை மானியமாகவும், தமிழக அரசின் பங்களிப்பு தவிர மீதமுள்ள தொகையை பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து கடனாகவும் பெற்றுத்தர மத்திய அரசு முன்வர வேண்டும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

சிறுமியை சீரழித்த வங்கி ஊழியர்?

0

கோவை மாவட்டம் பன்னிமடையை சேர்ந்த 6 வயது சிறுமி கடந்த மார்ச் மாதம் தனது வீட்டின் அருகே சடலமாக மீட்கப்பட்டார். காவல்துறை விசாரணையில், தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ்குமார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது விசாரணையில் தெரியவந்தது.

கொலை செய்யப்பட்ட வழக்கில் 302 பிரிவின்கீழ் குற்றவாளி சந்தோஷ் குமாருக்கு ஆயுள் மற்றும் தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு வந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள தில்லை நகரை சேர்ந்தவர் ராம்குமார் (34). இவன் அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் ஊழியராக பணியாற்றி வருகிறான்.

இவன் அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படித்து கொண்டு இருக்கும் 14 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்தாரன் . இதனை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக அந்த சிறுமியை மிரட்டி உள்ளான்.

இதனை அச்சிறுமி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை பலாத்காரம் செய்த ராம்குமாரை கைது செய்து அவன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர் கைதான ராம்குமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.

பலத்த எதிர்ப்பை அடுத்து மோடியின் கலந்துரையாடல் தேதியில் மாற்றம்?

0

பள்ளி மாணவர்கள் எந்த வித மன அழுத்தம் இன்றி தேர்வுகள் எழுதும் வகையில் அவர்களை ஊக்கப்படுத்துவதற்காக பிரதமர் மோடி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் வருடம்தோறும் கலந்துரையாடல் நடத்தி வருகிறார் அந்த வரிசையில் இந்த ஆண்டு வருகிற 16-ஆம் தேதி கலந்துரையாடல் நடத்துவதற்கு அவர் திட்டமிட்டிருந்தார்.

இதில் கலந்துகொள்ளும் மாணவர்களை தேர்வு செய்வதற்காக 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சிறப்பு கட்டுரைப்போட்டி ஒன்றை நடத்தியிருந்தது மேலும் இதில் கலந்து கொள்வதற்காக வருகிற 16-ஆம் தேதி மாணவர்கள் பள்ளிக்கு கட்டாயமாக வரவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் 16ஆம் தேதி விடுமுறை என்பதால் அன்றைய தினம் மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்க கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை கிளப்பியது.

அதே போல் வட இந்தியாவில் மகரசங்கராந்தி இருப்பதால் மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி வரும் 20ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தன் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

2020 ஆண்டில் 20 ஓவர் போட்டியில் வெற்றி பெறுமா?

0

இலங்கை அணி இன்று இந்தியா வருகிறது.

2019ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்தியா பலமான அணியாக இருந்தது உலகக்கோப்பை கண்டிப்பாக இந்தியா வெல்லும் என்று ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர் இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் எதிர்பாராதவிதமாக இந்தியா தோல்வியடைந்து உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

அதன் பிறகு இந்தியா மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் இருபது ஓவர் ஒருநாள் தொடரை வென்றது. அதன்பிறகு தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 20-20 தொடரில் விளையாடியது இதில் இந்திய அணி டெஸ்ட் தொடரை முழுவதுமாக வென்றது. மேலும் இருபது ஓவர் தொடர் 1-1 நிலையில் சமநிலையில் முடிந்தது.

அதன்பிறகு பங்களாதேஷ் அணி இந்தியா வந்து 3 டெஸ்ட் மற்றும் 3 இருவது ஓவர் போட்டி தொடரில் விளையாடியது, இதில் டெஸ்டில் அனைத்து போட்டியிலும் 20 ஓவர் போட்டியில் 2க்கு 1என்று இந்தியா வெற்றி பெற்றது.

அதன் பிறகு மேற்கிந்திய தீவுகள் அணி மூன்று இருபது-20 ஓவர் மற்றும் மூன்று ஒருநாள் போட்டியையும் விளையாடியது.

இதில் இரண்டிலும் இந்திய 2-1 என்று வெற்றி பெற்று ஆண்டு நிறைவை வெற்றியுடன் நிறைவு செய்தது. இதன்பிறகு 2020 ஆம் ஆண்டின் தொடக்கமாக இந்தியாவிற்கு இலங்கை வந்து மூன்று இருபது ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இதன் முதல் போட்டி வரும் 5-ஆம் தேதி நடைபெறுகிறது இதற்காக இலங்கை அணி இன்று இந்தியா வருகிறது.

தமன்னா மீது ஸ்ரீரெட்டி போலீசில் புகாரா?

0

ஆந்திராவைச் சேர்ந்தவர் நடிகை ஸ்ரீரெட்டி இவர் தெலுங்கு மற்றும் தமிழ் நடிகைகள் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

சமீபத்தில்கூட ஒரு இணையதள சேனலில் விஷாலின் அந்தரங்கத்தை பற்றி கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.ஐதராபாத்தில் வசித்து வந்த ஸ்ரீரெட்டி அங்கிருந்து வெளியேறி தற்போது சென்னை வளசரவாக்கத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார் இவரது வீட்டின் அருகே தமன்னா நடிக்கும் வெப் தொடரின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீரெட்டி முகநூல் பக்கத்தில் சென்னையில் உள்ள எனது வீட்டின் அருகே தமன்னா நடிக்கும் வெப் தொடரின் படப்பிடிப்பு நடந்து வருகிறது என்றும் அவர்களின் தொல்லை தாங்க முடியவில்லை என்றும் கடந்த 10 நாட்களாக நான் தொல்லை அனுபவித்து வருகிறேன்.

இனி என்னால் பொறுக்க முடியாது அவர்களிடம் நேரில் சென்று பேசி இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டப் போகிறேன் என்று பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் அவருக்கு சொந்தமான சொகுசு சொந்தக்கார் சில மர்ம நபர்கள் சேதப்படுத்தபட்டுள்ளது.

இதுகுறித்து ஸ்ரீரெட்டி போலீசில் புகார் அளித்துள்ளார் ஸ்ரீ ரெட்டியின் சமூக வலைதளப் பதிவுக்கும் அவரின் கார் சேதப்படுத்திதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாக்கு பெட்டிகளின் சாவியை காணவில்லை! அதிகாரிகள் ஓட்டம்! உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தாமதம்?

0

வாக்கு பெட்டிகளின் சாவியை காணவில்லை! அதிகாரிகள் ஓட்டம்! உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தாமதம்?

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் 315 வாக்கு எண்ணும் மையங்களில் எண்ணப்படுகிறுது. இதன் மூலம் 91 ஆயிரத்து 975 உள்ளாட்சி காலியிடங்கள் நிரப்பப்படும்.

கடந்த 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் இரண்டு  கட்டமாக நடைபெற்ற இத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் மூலமாக பாசக,அதிமுக,திமுக,பாமக,நாதக போன்ற கட்சிகள் இடையே பெரும்போட்டி நிலவுகிறது.

இந்த தேர்தலில் ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், யூனியன் கவுன்சிலர், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் ஆகிய நான்கு பதவிகளுக்கான போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளார் ஒன்றியம் மற்றும் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஒன்றியத்திலும் சீல் வைக்கப்பட்ட வாக்குப் பெட்டியின் சாவியை காணவில்லை, இதேபோல் சேலம் மாவட்டம் செங்கவல்லியில் வாக்குப் பெட்டியில் சீல் இல்லாத காரணத்தால் வாக்கு எண்ணிக்கை பணி நிறுத்தம்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரத்தில் 73 தபால் ஓட்டுகளும், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியத்தில் 58 தபால் ஓட்டுகளும், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் 96 தபால் ஓட்டுகளும்  செல்லாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குன்னூர் வாக்கு எண்ணும் மையம் அருகே காட்டெருமைகள் வந்ததால் அலுவலர்கள் ஓட்டம். சில வாக்கு மையங்களில் வாக்கு எண்ணிக்கையாளர்களுக்கு உணவு தரவில்லை என்பதாலும் போதிய வாக்கு எண்ணிக்கை பணியாளர்கள் இல்லை என்ற காரணத்தாலும் வாக்கு எண்ணிக்கை பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாக்கு சுற்று  முடியும் போதும் சுற்றுவாரியாக வாக்கு எண்ணிக்கை முடிவுகள் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்படுகிறது. இன்று நள்ளிரவு அல்லது நாளை காலை வரை வாக்கு எண்ணும் பணி தொடரும் என்று தேர்தல் ஆணைய வட்டாரம் அறிவித்துள்ளது.

தேர்தல் செயல்பாடுகள் அனைத்தும் சிசிடிவி கேமிரா மூலம் பதிவு செய்யப்படுகிறது,  பாதுகாப்பிற்காக 30,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கணிக்க முடியாத கதைக்களத்தில் சூர்யா?

0

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இப்படத்தை இறுதிச்சுற்று புகழ் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.

பிரபல ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றது.

கணிக்க முடியாத கதைக்களத்தில் சூர்யா?

அதன்படி இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை 5 மணிக்கு வெளியிடப்பட பட்டது.இந்த போஸ்டரில் ஒரு சிட்டு குருவியின் சிறகில் இருந்து சூர்யாவின் முகம் தெரிவது அமைந்துள்ளது கதைக்களம் ஒரு கணிக்க முடியாத வண்ணம் அமைந்துள்ளது. மேலும் சூர்யாவின் ரசிகர்கள் இந்த செகண்ட் லுக் போஸ்டரை கொண்டாடி வருகின்றனர். மேலும் ரசிகர்களுக்கு கூடுதல் விருந்தாக அதன் டீஸர் வரும் 7-ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

முடிவுக்கு வந்த வர்த்தகப்போர் !!!

0

உலகின் மிகப்பெரிய பொருளதார வல்லரசாக இருக்கும் நாடு அமெரிக்கா இதன் பொருளாதார வல்லம்மை 20 ட்ரில்லியன் டாலர் ஆகும். இதற்கு அடுத்த படியாக சீனா உள்ளது இதன் பொருளாதார வல்லம்மை 13.7 ட்ரில்லியன் டாலர் ஆகும்.

இந்த இரு பெரும் பொருளாதார வர்த்தக போர் நடந்து வந்தது. இந்த வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ள இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக தகவல் வந்துள்ளது.

இதனை ஒட்டி இரு தரப்பு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில். இதன் பலனாக கடந்த மாதம் 14-ந் தேதி இரு நாடுகள் இடையே முதல் கட்ட ஒப்பந்தம் ஒன்று ஏற்பட்டது. அதன் முதல் கட்டமாக சீன இறக்குமதி பொருட்கள் மீதான கூடுதல் வரியை அமெரிக்கா ரத்து செய்தது. அதேபோல் சீனாவும் அமெரிக்க பொருட்கள் மீதான கூடுதல் வரிவிதிப்பை நிறுத்தி வைத்தது.

இதன் அடுத்த கட்டமாக அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான முதற்கட்ட ஒப்பந்தம் வருகிற 15-ந்தேதி கையெழுத்தாகும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் சீனாவின் உயர்மட்ட பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அவர் கூறினார்.

இந்த முதற்கட்ட ஒப்பந்தம், இரு பொருளாதார சக்திகளுக்கும் இடையிலான பதற்றத்தை குறைக்கும் என்று தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.


இதன் பின்னர் அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனாவுக்கு சென்று 2-ம் கட்ட ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையை தொடங்கப்போவதாக டிரம்ப் தெரிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

விஜய் மல்லையாவுக்கு செக் !!!

0

இந்திய வங்கிகளில்  ரூ.9,000 கோடி அளவுக்குக் கடன் வாங்கி, அதைத் திருப்பிச் செலுத்தாத தொழிலதிபர் விஜய் மல்லையா, தற்போது பிரிட்டனில் தஞ்சம் அடைந்துள்ளார். விஜய் மல்லையா வங்கிகளுக்கு தர வேண்டிய ரூ.6 ஆயிரம் கோடியை திரும்ப பெறுவதற்கு, அவரது சொத்துகளை பயன்படுத்தி கொள்ள அனுமதிக்க வேண்டும் என பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான 15 வங்கிகளின் கூட்டமைப்பு மும்பையில் உள்ள பணமோசடி தடுப்பு சட்ட சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தன..

வங்கிகளில் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்ட விஜய் மல்லையாவின் அசையும் சொத்துகளை விற்பனை செய்து, அதன் மூலம் கடனை ஈடுசெய்ய சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.இதன் மூலம் மல்லையாவின் யுபிஹெச்எல் நிறுவனத்தின்  வசமுள்ள  பங்குகள்  உள்ளிட்டவற்றை வங்கிகளால் விற்பனை செய்ய முடியும்.

மகாராஷ்டிர தலைநகா் மும்பையில் உள்ள கருப்புப் பண மோசடி தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம், தலைமறைவு நிதி மோசடியாளா் சட்டத்தின்கீழ், மல்லையாவை தலைமறைவு நிதி மோசடியாளராக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிவித்தது. அதைத் தொடா்ந்து, அந்தச் சட்டத்தின்கீழ், அவரது சொத்துகள் முடக்கப்பட்டன.இந்நிலையில், மல்லையாவுக்கு அளித்த கடனை ஈடுசெய்யும் வகையில், முடக்கப்பட்ட சொத்துகளை விற்பதற்கு அனுமதி கோரி எஸ்பிஐ உள்ளிட்ட 15 வங்கிகள் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா். இதன் மீதான விசாரணை, சிறப்பு நீதிமன்றத்தில்  நடைபெற்றது. அப்போது, வங்கிகள் சார்பில் மூத்த வழக்குரைஞா் ராஜீவ் பாட்டீல் ஆஜராகி வாதிட்டார். விஜய் மல்லையா சார்பில் மூத்த வழக்குரைஞா் அமித் தேசாய் ஆஜரானார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட சிறப்பு நீதிபதி, வங்கிகள் அளித்த கடனை ஈடுசெய்யும் வகையில், முடக்கப்பட்ட அசையும் சொத்துகளை விடுவித்து உத்தரவிட்டார். எனினும், இந்த விவகாரத்தில் மல்லையா தரப்பினா் மும்பை உயா்நீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக, வரும் 18-ஆம் தேதி வரை இந்த உத்தரவை அமல்படுத்த தடை விதிப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

இன்று வங்கிக்கு செல்பவர்கள் இதை மறக்காதீர்கள்?

0

ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்த வங்கி முறையின் புதிய மாற்றங்கள்!

2020-ம் ஆண்டு, ஜனவரி 1-ம் தேதி முதல் வங்கி முறையில் பல்வேறு மாற்றங்களும் புதிய விதிமுறைகளும் நடைமுறைக்கு வந்துள்ளன.
டெபிட் மற்றும் ஏடிஎம் கார்டு
அனைத்து வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் டெபிட் கார்டுகளை வழங்கியுள்ளன.

ஆனால், ரிசர்வ் வங்கியின் உத்தரவின்படி, பழைய மேக்னடிக் டெபிட் கார்டுகளை மாற்றி, EMV சிப் பொருத்தப்பட்ட டெபிட் கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் வழங்கி வருகின்றன.

தற்போது வாடிக்கையாளர்கள் மேக்னடிக் டெபிட் கார்டுகளை வைத்திருந்தால், நேற்று முதல் அந்த கார்டுகள் செயல்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளன . அவ்வாறு பழைய மேக்னடிக் டெபிட் கார்டுகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியை அணுகி EMVசிப் பொருத்தப்பட்ட டெபிட் கார்டுகளை எவ்விதக் கட்டணமும் இன்றி பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்த பட்டுள்ளது.

மேலும் அனைத்து வங்கிகளும் ஜனவரி 1-ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் என்இஎப்டி வழியாக வாடிக்கையாளர்கள் பணம் அனுப்பும்போது வசூலிக்கப்படும் கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு இருந்தது. இது நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

எஸ்பிஐ வங்கி தங்கள் வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் பாதுகாப்பாகப் பணம் எடுக்க வேண்டும் என்பதற்காக விதிமுறைகளைப் பலப்படுத்தியுள்ளது. இதன்படி, இரவு 8 மணிக்கு மேல் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள், எஸ்பிஐ ஏடிஎம்களில் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்தால், அவர்களின் செல்போன் எண்ணுக்கு OTP எண் வரும்.

அந்த எண்ணை ஏடிஎம் இயந்திரத்தில் பதிவு செய்தால்தான் பணம் எடுக்க முடியும் என்ற வழிமுறையை ஏற்படுத்தியுள்ளது. இது ஜனவரி 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் வேறு வங்கி ஏடிஎம்களில் பணம் எடுத்தால் இந்த விதிமுறை பொருந்தாது.