Home Blog Page 5813

மாநிலங்களுக்கு நிர்பந்தம் – குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு

0

குடியுரிமை திருத்த சட்டத்தை தங்கள் மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என எதிர்க்கட்சிகள் ஆளுகிற மேற்கு வங்காளம், பஞ்சாப், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் மாநில முதல் மந்திரிகளும் ஆந்திரா, கேரளா உள்ளிட்ட முதல் மந்திரிகளும் அறிவித்துள்ளனர். ஆனால் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியே தீர வேண்டும் என்ற ரீதியில் மாநிலங்களை மத்திய அரசு  நிர்பந்திக்க துவங்கியுள்ளது.

இது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது “குடியுரிமை உள்ளிட்ட மத்திய பட்டியலில் உள்ள பல்வேறு விஷயங்கள் தொடர்பாக நாடாளுமன்றம் சட்டம் இயற்ற முடியும். குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட நாடாளுமன்றம் இயற்றுகிற சட்டங்களை மாநிலங்கள் அமல்படுத்த வேண்டும் என்பது அரசியல் சாசன கடமை ஆகும். நாடாளுமன்றத்தினால் இயற்றப்பட்ட எந்தவொரு சட்டமும், பிராந்தியத்துக்கு புறம்பான செயல்பாட்டை கொண்டிருக்கும் என்ற அடிப்படையில் செல்லுபடியாகாது என்று கூறக்கூடாது. இதை அரசியல் சாசன சட்டம் பிரிவு 245 உட்பிரிவு 2 சொல்கிறது.குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று சூளுரைப்பவர்கள் தகுந்த சட்ட ஆலோசனையை பெற வேண்டும். அரசியல் சாசனத்தின்படி பதவிப்பிரமாணம் செய்து கொண்டு அதிகாரத்துக்கு வருகிறவர்கள், அரசியல் சாசனத்துக்கு விரோதமான கருத்துகளை கூறுவது ஆச்சரியத்தை அளிக்கிறது “என்று கூறியுள்ளார்.

நெல்லை கண்ணன் கைது – பாஜகவினரால் தாக்கப்பட்டதாக தகவல்???

0

நெல்லை கண்ணன் கைது – பாஜகவினரால் தாக்கப்பட்டதாக தகவல்???

நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்திய குடியுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று நெல்லை கண்ணன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா ஆகியோரைக் கொலை செய்யத் தூண்டும் வகையில் நெல்லை கண்ணன் பேசியதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்’ என்று நெல்லை மாவட்ட பா.ஜ.க சார்பாக மாநகரக் காவல்துறை ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. மோடி, அமித் ஷா ஆகியோரைக் கடுமையாக விமர்சித்த நெல்லை கண்னனை உடனடியாகக் கைது செய்யக் கோரி தமிழக பா.ஜ.கவினர் போர்க்கொடி தூக்கினர்.

அவரை உடனடியாகக் கைது செய்யக் கோரி பா.ஜ.க சார்பில் சென்னை மெரினா காந்தி சிலை முன்பாக  போராட்டமும் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இதனை தொடர்ந்து, திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதன் காரணத்தால் மருத்துவமனையில் நெல்லை கண்ணன் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அதே நேரத்தில் அவர் திருவனந்தபுரம் தப்ப முயன்றதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் நெல்லை கண்ணன் சில முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பில  பெரம்பலூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் அவரை சுற்றி வளைத்தனர். 

இதையடுத்து நெல்லை கண்ணனை  கைது செய்ய  முயன்றபோது அவர் வர மறுத்தால் , அவரை போலீசார் போலீஸ் வேனுக்கு இழுத்து  சென்றனர்.  அப்போது அங்கிருந்த பாஜக தொண்டர்கள்  நெல்லை கண்ணணை  சரமாரியாக தாக்கினர். இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட நெல்லை கண்ணன் திருநெல்வேலிக்கு அழைத்து செல்லப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்குப்பின், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்க்கு இலுமினாட்டிகளுடன் தொடர்பா?

0

நடிகர் விஜய்க்கு இலுமினாட்டிகளுடன் தொடர்பா?

இந்த வருடத்தில் மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை புரிந்த படம் பிகில் அட்லி இயக்கத்தில் வெளிவந்த இப்படம் தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி வெளியீடாக வந்தது. இப்படம் உலகம் முழுவதும் 250 கோடிக்கு அதிகமாக வசூலை ஈட்டி பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை படைத்தது பிகில் படம் முடித்த கையோடு விஜய் கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்த்தார் தளபதி விஜய்.

இப்படத்திற்கு மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ளது மாஸ்டர் என்று பெயரிடப்பட்டு இருப்பதால் இந்த படத்தில் விஜய் ஆசிரியர் வேடம் ஏற்று நடித்திருக்கிறார் என்று தோன்றுகிறது.

இந்தப் படத்தின் தலைப்பு வெளியானவுடன் புத்தாண்டு கொண்டாட்டத்துடன் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மாஸ்டர் என்ற தலைப்பை கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் விஜய்க்கு இலுமினாட்டிகளுடன் தொடர்பா?

இந்நிலையில்,சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற பாரி சாலன் என்பவர் இந்த போஸ்டர் குறித்து சர்ச்சையான கருத்து ஒன்றை கூறியுள்ளார். இவர், தொடர்ச்சியாக உலகத்தை தங்கள் கட்டுக்குள் கொண்டு வர துடிக்கும் ரகசிய சமூகங்கள் அதாவது இழுமினாட்டி பற்றி இணையத்தில் அடிக்கடி பேசி வருகிறார்.

அந்த வகையில்,சமீபத்தில் ரஜினியின் தர்பார் படத்தை பற்றி கூட பேசியிருந்தார் அது பல்வேறு தரப்பினர் இடையே நகைச்சுவையாக பார்க்கபட்டது. அதனை தொடர்ந்து இப்போது இவர் MASTER ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பற்றியும் சில பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய்க்கு இலுமினாட்டிகளுடன் தொடர்பா?

அவர் கூறியுள்ளதாவது,இந்த போஸ்டரில், முக்கோண வடிவமும், பிசாசின் கொம்பும் இடம் பெற்றுள்ளது நடிகர் விஜய்யும் அந்த ரகசிய சமூகத்திற்குள் சென்று விட்டார் என்றும் தமிழ் நாட்டை நெருப்பின் மூலம் அழிக்க சதிகள் நடை பெறுகின்றன. அணு உலை, மீத்தேன் கிணறுகள், நிலத்தடி கேஸ் பைப்கள் என இப்படி தமிழ்நாட்டை சுற்றி நடந்து வரும் ஆபத்தான விஷயங்களுக்கும் இதற்கும் தொடர்பு இருப்பது போல தெரிகின்றது என்றும் தன் டீவீட்டில் கூறியுள்ளார்.

மேலும், நடிகர் விஜய் அவர்கள் அந்த பிடியில் இருந்து வெளியேற வேண்டும். இல்லையென்றால், மைக்கேல் ஜாக்சன் மரணத்தை போல மர்மமான மரணத்த்தில் தான் விஜய் வாழ்கை முடியும் என பீதியை கிளப்பும் படி பதிவு செய்துள்ளார்.

தமிழக இளைஞர்கள் பலரும் உங்களை (விஜய்யை) பின் தொடருகிறார்கள். உங்கள் கைகளாலேயே(ரசிகர்களை) அவர்களை கொன்று விடாதீர்கள் என்று விஜய்க்கு வேண்டுகோளும் வைத்துள்ளார்.

கோலமிட்டு போராடிய பெண்ணுக்கு பாகிஸ்தான் அமைப்புடன் தொடர்பா? ஸ்கெட்ச் போட்ட காவல் துறையினர்

0

கோலமிட்டு போராடிய பெண்ணுக்கு பாகிஸ்தான் அமைப்புடன் தொடர்பா? ஸ்கெட்ச் போட்ட காவல் துறையினர்

பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் “மத உணர்வை காயப்படுத்தும் சட்டம்” என்றும், சிறுபான்மை மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் இச்சட்டத்தை அமல்படுத்த கூடாது என்றும், மத்திய அரசு இச்சட்டத்தை திரும்ப பெறக் கோரி திமுக சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் சில தினங்களுக்கு முன்பு பெரும் திரளான போராட்டம் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

திமுக மட்டுமல்லாது நாதக,தவாக போன்ற அதன் கூட்டணியில் உள்ள பல்வேறு கட்சிகளும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வரிந்து கட்டி களத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோலம் போட்டு பலர் தனது எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

இதனையடுத்து சென்னை பெசன்ட் நகரில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அடுத்தவர் வீட்டு வாசலில் கோலமிட்டு ரகளை செய்த நான்கு பெண்களை திடீரென்று காவல்துறை கைது செய்தது.

இன்னொரு பக்கம், இந்த கைதை கண்டித்து திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது சகோதரி கனிமொழி உள்ளிட்டோர் தங்களது வீடுகளின் முன் கோலமிட்டு குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்நிலையில் ஸ்டாலின் வீட்டு வாசலில் இருந்த கோலத்தை வைத்து கோலம் போடத் தான் கடந்த பாராளுமன்ற தேர்தலில் 39 எம்பிக்களை ஜெயிக்க வைத்தோமா என்று திமுகவை ஒரு புறம் நெட்டிசன்கள் மக்கள் சார்பாக கலாய்த்து வருகின்றனர். அதே போல பாமக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் மூலப் பத்திரம் எங்கே என கோலமிட்டு திமுகவை விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கோலமிட்டு போராட்டம் நடத்திய காரணத்திற்காக கைது செய்யப்பட்ட 4 பெண்களில் காயத்ரி கந்தாதே என்பவர் பாகிஸ்தான் பத்திரிகையாளர் அமைப்பில் உறுப்பினர் என்றும், அரசுக்கு எதிராக போராடும் கும்பலுடன் தொடர்பில் இருப்பவர் என்றும் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.

வெளிநாட்டு அமைப்புடன் தொடர்பில் இருப்பதால் மேலும், அப்பெண்ணிடம் விசாரணை நடத்தி வருவதாக காவல் ஆணையர் தெரிவித்தார்.

50,000 கோடி முதலீடு செய்ய என்டிபிசி நிறுவனம் திட்டம்!

0

ரூபாய் 50,000 கோடி முதலீடு செய்ய என்டிபிசி நிறுவனம் திட்டம் பொதுத்துறையை சேர்ந்த என்டிபிசி நேரம் சூரிய சக்தி மின் உற்பத்தி துறையில் ரூ 50,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ள என்டிபிசி நிறுவனம் 2022ம் ஆண்டிற்குள் தனது சூரிய சக்தி மின் உற்பத்தி திறனை 10,000 மெகாவாட் அளவிற்கு அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.

இதற்காக 50 ஆயிரம் கோடி முதலீடு செய்ய முடிவு செய்து இருக்கிறது இந்த நிதியில் பெரும்பகுதி பசுமை கடன் பத்திரங்கள் வெளியிடப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

என்டிபிசி நிறுவனம் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் 3400 கோடி ஒட்டு மொத்த நிகர லாபம் ஈட்டியுள்ளது கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் 2493 கோடியாக இருந்தது. இது 36% நிகர லாபம் ஆகும்.

மும்பை பங்குச்சந்தையில் செவ்வாய்க்கிழமை வர்த்தகம் தொடங்கும்போது என்டிபிசி நிறுவனப் பங்குகளுக்கு கைமாறியது வர்த்தகத்தை அதிகபட்சமாக119 க்கும் குறைந்தபட்சமாக 116க்கும் கண்டிப்பாக இறுதியில் 119.05 என்ற நிலை கொண்டது இது திங்கட்கிழமை இறுதிநிலை உடன் ஒப்பிடும் பொழுது 2% உயர்வு ஆகும்.

விஜய்க்கு போட்டியாக களம் இறங்கிய சூர்யா?

0

கடந்த சில வருடங்களாக திரை உலகில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வெற்றி கொடுக்க முடியாமல் தவித்து கொண்டு வருகிறார் சூர்யா கடைசியாக வந்த காப்பான் படம் K.V.ஆனந்த் இயக்கத்தில் நடித்தார் இந்த படம் சுமாரான வெற்றிதான் பெற்றது.

காப்பான் படத்திற்கு பிறகு சூர்யா தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இப்படத்தை இறுதிச்சுற்று புகழ் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும், மோகன் பாபு, ஜாக்கி ஷெராப், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

பிரபல ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், புத்தாண்டு தினமான இன்று இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.நேற்று விஜய் 64 தலைப்பு வெளிவந்த நிலையில் இன்று சூர்யாவின் செகண்ட் லுக் வருவது சூர்யா ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதிமுக பாமக கூட்டணியில் உரசல் ஆரம்பம்! அன்புமணி ராமதாஸின் அதிரடி

0

அதிமுக பாமக கூட்டணியில் உரசல் ஆரம்பம்! அன்புமணி ராமதாஸின் அதிரடி

தமிழக அரசியலில் மற்ற எந்த கட்சிகளையும் போல் அல்லாமல் தனக்கென்று சிறப்பான கொள்கைகள் கொண்டு செயல்பட்டு வருவது தான் பாட்டாளி மக்கள் கட்சி. குறிப்பாக மது ஒழிப்பு,புகையிலை ஒழிப்பு, மக்கள் பிரச்சினை,ஆளும் ஆட்சியின் குறைகள் மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்து தினமும் அறிக்கைகள், அரசிற்கு உதவி செய்யும் வகையில் மாதிரி பட்ஜெட் மற்றும் விவசாயத்திற்கு என தனி பட்ஜெட் என செயல்பட்டு தமிழக அரசியலில் பாமக தனக்கென ஒரு பாணியை பின்பற்றி வருகிறது.

இதை போலவே ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 31 ஆம் தேதி புத்தாண்டு பொதுக்குழு கூட்டம் நடத்துவது பாமகவின் வழக்கம் அந்த வகையில் நேற்று அக்கட்சியின் சார்பாக பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் தமிழர் நலன் மற்றும் கட்சியின் அடுத்தகட்ட செயல்பாடு குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியை முடித்து கொண்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்த அக்கட்சியின் இளைஞர் அணி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தற்போது அங்கம் வகிக்கும் அதிமுக கூட்டணி குறித்து தன்னுடைய அதிர்ப்தியை தெரிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது.

மக்களவைத் தேர்தலின்போது 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வந்தது. அந்த நேரத்தில் நாம் கேட்ட போது ஆட்சிக்கு வரவேண்டும் என்றார்கள் அதனால் அனைத்தையும் கூட்டணிக்காக விட்டு கொடுத்து விட்டோம். ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் பார்த்தால் அரை சீட், கால் சீட் என நம்மை அவர்களிடம் கெஞ்ச வைப்பது வருத்தமளிக்கிறது. அதிமுகவுடன் கூட்டணி வைத்ததற்கான அங்கீகாரம் நமக்கு கிடைக்கவில்லை என தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

மேலும் கூட்டணியே வேண்டாம் என்று செயல்பட்டு வந்த நாம் அவர்களுக்காக கொள்கையை மாற்றி கூட்டணிக்குச் சென்றோம். இப்போது நாம் அவர்களிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறோம். அதுவும் அந்தந்த மாவட்ட அதிமுக தலைவர்களிடம் சீட் கேட்டு பேச்சுவார்த்தை நடத்துவது வருத்தமளிக்கிறது. அதிமுக தலைமை எங்களது கருத்துகளை ஏற்று இனி வரும் காலங்களில் இதையெல்லாம் சரி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

அதிமுக பாமக கூட்டணியில் உரசல் ஆரம்பம்! அன்புமணி ராமதாஸின் அதிரடி

சமீபத்தில் நாம் வெளியிட்ட செய்தியில் அதிமுக பாமகவை பயன்படுத்தி கொண்டு துரோகம் செய்ததாக குறிப்பிட்டதை தான் தற்போது அக்கட்சியின் இளைஞர் அணி தலைவரும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்த செய்தியை படிக்க கீழுள்ள இணைப்பில் செல்லுங்கள்:

ராமசாமி படையாச்சியார் நினைவு மண்டப திறப்பு விழா: பாமக புறக்கணிப்பு! காரியத்தை சாதித்து கொண்ட எடப்பாடி பழனிசாமி செய்த துரோகம்

திமுகவிற்கு எதிராக மெகா கூட்டணியை அதிமுக மற்றும் பாமக இணைந்து வைத்துள்ளது என்று எண்ணிய நிலையில் இது போன்ற உரசல்கள் கூட்டணியை பிளவுபடுத்தவே செய்யும். விரைவில் தமிழகத்தில் அடுத்த சட்டமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் இரு கட்சிகளும் என்ன முடிவு செய்ய போகின்றன என்று அனைவரும் ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர்.

என்ன செய்ய போகிறார் இந்த தளபதி?

0

மத்திய பாஜக அரசு தொடர்ந்து இரண்டாவது முறையாக 2019ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை தக்க வைத்தது. ஆட்சி பொறுப்பு ஏற்றதும் பல மாற்றங்களை செய்து குறிப்பாக காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், குடியுரிமை சட்ட திருத்த மசோதா ஆகியவற்றை நாடாளுமன்றத்தில் இயற்றியது.

அதற்கு நாடு முழுவதும் ஆதரவுகளும் எதிர்ப்புகளும் இருந்தன. அந்த வகையில் பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தினத்தன்று உரையாற்றும் போது, ராணுவம் தொடர்பான சில அறிவிப்புகளை வெளியிட்டார். 

அந்த அறிவிப்பில் விரைவில் முப்படைகளுக்கும் சேர்த்து தலைமை தளபதி பதவியை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார்.

அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது ராணுவ தளபதி பிபின் ராவத்தை, முப்படைகளுக்கான முதல் தலைமை தளபதியாக மத்திய அரசு நியமித்தது. ஏற்கனவே பல சர்ச்சைகளில் இருந்த பிபின் ராவத் ராணுவ தளபதி பொறுப்பில் இருந்து நேற்று ஓய்வு பெற்றதையடுத்து, இன்று முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக பொறுப்பேற்றார்.

பதவியேற்ற பிறகு பிபின் ராவத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘முப்படைகளின் தலைமை தளபதி பணி கடினமான பணியாகும். முப்படைகளும் ஒருங்கிணைந்து ஒரு அணியாக செயல்படும். அணியாக, இலக்கை நோக்கி செயல்படுவோம்’ என்று தெரிவித்தார்.

பட்டாசு வெடித்த நபருக்கு 15 லட்சம் அபாரதமா?

0

இந்தியா தொழிலாளர்களின் சொர்கபூமிகாக திகழும் ஒரு நாடு சிங்கப்பூர் குறிப்பாக தமிழர்கள் கணிசமாக சிங்கப்பூரில் வேலை செய்கின்றனர் அதே போல் அந்த நாட்டில் சட்ட திட்டங்களும் மிகவும் கடுமையாக இருக்கும் பொது இடத்தில் குப்பை போட்டாலே நம்ம நாடு போல சாதாரணமாக விட்டு வைக்க மாட்டார்கள்.

அது போல பொது இடங்களில் பட்டாசுகள் வெடிக்க தடை உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதி தீபாவளி பண்டிகையின்போது இந்தியர்கள் அதிகம் வசிக்கும் லிட்டில் இந்தியா பகுதியில் சீனிவாசன் சுப்பையா முருகன் (வயது 43) என்ற தமிழர், தடையை மீறி பட்டாசுகளை வெடித்ததாக தகவல் அந்நாட்டு போலீசாருக்கு வந்தது.

முருகன் பட்டாசு வெடித்த விவகாரம் தொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு சிங்கப்பூர் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்து முடிந்தது. இதில் முருகன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன.

அதனை தொடர்ந்து, இந்த வழக்கில் முருகனுக்கு 3 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.15 லட்சம்) அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

மேலும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும்?

0

புத்தாண்டு பரிசாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது வடகிழக்கு பருவமழை வழக்கத்தைவிட குறைவாக பொழிந்து இருந்தது மேலும் நேற்றுடன் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில்.

திடீரென நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. மழை மேலும் சில நாட்கள் நீடிக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறி இருந்தார்.

சென்னையில் தொடர்ந்து கோடம்பாக்கம், மீனம்பாக்கம், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், பல்லாவரம், பூந்தமல்லி, போரூர், ஆலந்தூர், மடிப்பாக்கம், துரைப்பாக்கம் அடையாறு வேளச்சேரியில் கனமழை பெய்து வருகிறது.

வடபழனி, கிண்டி, ஈக்காட்டுதாங்கல், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை உள்பட சென்னை நகரில் பல்வேறு இடங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது.