சர்ச்சைகளில் சிக்கியுள்ள இவர் தான் முப்படைகளின் தலைவரா?
மத்திய பாஜக அரசு தொடர்ந்து இரண்டாவது முறையாக 2019ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை தக்க வைத்தது. ஆட்சி பொறுப்பு ஏற்றதும் பல மாற்றங்களை செய்து குறிப்பாக காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், குடியுரிமை சட்ட திருத்த மசோதா ஆகியவற்றை நாடாளுமன்றத்தில் இயற்றியது.
அதற்கு நாடு முழுவதும் ஆதரவுகளும் எதிர்ப்புகளும் இருந்தன. அந்த வகையில் பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தினத்தன்று உரையாற்றும் போது, ராணுவம் தொடர்பான சில அறிவிப்புகளை வெளியிட்டார்.
அந்த அறிவிப்பில் விரைவில் முப்படைகளுக்கும் சேர்த்து தலைமை தளபதி பதவியை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார்.
இதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 24-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரி சபை கூட்டத்தில் தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படைக்கும் சேர்த்து ஒரே தளபதியை நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, முப்படைகளுக்கான முதல் தலைமை தளபதியாக தற்போதைய ராணுவ தளபதி பிபின் ராவத் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிபின் ராவத்தின், ராணுவ தளபதி பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைந்து ஓய்வு பெற உள்ள நிலையில், புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே சில சர்ச்சைகளில் சிக்கியுள்ள பிபின் ராவத் முப்படை தளபதி ஆக்கப்பட்டுள்ளது எதிர் கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க முடியாது! சட்டபஞ்சாயத்து மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைக்க கோரி கடந்த சனிக்கிழமை சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது, நகர்ப்புற அமைப்புகளுக்கும் தேர்தலை நடத்திவிட்டு ஒன்றாக வாக்கு எண்ணிக்கையை நடத்தவேண்டும் எனவும், அதுவரையும் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்கில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இன்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் பஞ்சாயத்துராஜ் சட்டத்தின்படி வாக்கு எண்ணிக்கை நிறுத்த முடியாது என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்துள்ளனர், இந்நிலையில், திமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் வாக்கு எண்ணிக்கையை சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்யவேண்டுமென்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்ற வழக்கையும் இன்று விசாரிக்கிறது உயர்நீதிமன்றம்.
இங்கிலாந்து அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன் முதல் டெஸ்ட் செஞ்சுரியன் மைதானத்தில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி 284 ரன்களும், இங்கிலாந்து 181 ரன்களும் எடுத்தன.
103 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்கா இரண்டாம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்த நிலையில் மூன்றாவது நாளை தொடர்ந்து விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்சில் 61.4 ஓவர்களில் அவர்கள் 272 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.
இதன் மூலம் இங்கிலாந்து அணி 376 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 41 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது.
கைவசம் 9 விக்கெட் வைத்திருக்கும் இங்கிலாந்து அணி 255 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் நேற்று நான்காம் நாளை ஆட தொடங்கியது ஆனால் எதிர்பார்த்தது போல் அவர்களுக்கு அமையவில்லை. ராபடாவின் வேகத்தில் இங்கிலாந்து அணி நிலைகுலைந்தது.
அந்த அணியின் பர்ன்ஸ் மட்டும் 84 ரன்கள் சேர்த்தார், அடுத்த படியாக கேப்டன் ஜோ ரூட் 48 ரன்கள் எடுத்தார்.ராபாடா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை சாய்த்தார் இறுதியாக 268 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆல்அவுட் ஆனது இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து விதமான ICC (உலகக்கோப்பை 50/50, 20/20, சாம்பியன் ட்ரொபி) வென்ற ஒரே கேப்டன் நம்ம தல தோனி.இவரை பற்றி ரசிகர்கள் மட்டும் அல்லாமல் இவருடன் அணியில் விளையாடிய சக வீரர்கள் அவரின் களத்தில் அவரின் கேப்டன் ஷிப் பற்றி புகழ்ந்து தள்ளி உள்ளனர். ஆனால் அவரை பற்றி சக வீரர் குற்றம் சாற்றியுள்ளார் அவர்தான் தற்போது வரை ஆடிவரும் இஷாந்த் சர்மா.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த இஷாந்த் சர்மா, தோனி கேப்டனாக இருந்த காலத்தில் தங்களுக்கு போதுமான விளையாட்டு அனுபவம் கிடைக்கவில்லை என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் அணியில் 6 முதல் 7 வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்ததால், அவர்களை சுழற்சி முறையில் தோனி பயன்படுத்துவார் என்று தெரிவித்தார். அதனால் பந்துவீச்சாளர்களிடையே போதுமான புரிதலும், ஒருங்கிணைப்பும் இல்லாமல் இருந்ததாக இஷாந்த் சர்மா குற்றஞ்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து பேசிய இஷாந்த் சர்மா, தற்போது கோலியின் தலைமையில் பந்துவீச்சாளர்கள் இடையே தற்போது 3 முதல் 4 பத்துவீச்சாளர்கள் மட்டுமே பயன்டுத்தப்படுவதால் அவர்களிடையே நல்ல ஒருங்கிணைப்பும் புரிதலும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் குறைவான பந்துவீச்சாளர்கள் மட்டுமே இருப்பதால் அவர்களுக்கு அதிக அனுபவமும் அதிக போட்டிகளில் விளையாடும் வாய்ப்பும் கிடைக்கும் எனவும் கூறினார்.
மேலும் தோனி கேப்டனாக இருந்த காலத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
இந்திய அணியை பொறுத்தவரை, அதிகபட்சமாக கபில் தேவ் 131 டெஸ்ட் போட்டிகளிலும் அதற்கடுத்ததாக ஜாகீர் கான் 93 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளனர்.
96 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இஷாந்த் சர்மா இன்னும் 4 போட்டிகளில் விளையாடினால் 100 போட்டிகளில் விளையாடிய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெருவார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமாவளவன் வைத்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய ஓபிஎஸ்
சிறுபான்மை மக்களுக்கு எதிராக உள்ளதாக கூறி நாடு முழுவதும் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பெரும்பாலான மக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் போராடி கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சென்னையில் சில குறிப்பிட்ட மக்களை அவர்கள் வசிக்கும் பகுதியிலிருந்து சென்னைக்கு வெளியே இடம் பெயர அரசு வலியுறுத்தி வருகிறது.
சென்னையில் ஓடும் கூவம் நதியை சுத்தம் செய்வதற்காகக் கூறி அதன் கரையோரங்களில் வாழ்ந்து வரும் பெரும்பாலான குடும்பங்களை சென்னை மாநகராட்சி அகற்றி வருகிறது. சென்னை அண்ணா சாலைக்கு அருகிலுள்ள அன்னை சத்தியவாணி முத்து நகர் பகுதிகளில் தினக் கூலித் தொழிலாளர்கள், மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் என சுமார் 2,092 குடும்பங்கள் வசித்து வருகிறது. அங்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள், நாளை உங்கள் வீட்டை இடிக்கப் போகிறோம். அதற்குள் வீட்டை காலி செய்து கொள்ளுங்கள் என்று அறிவித்து விட்டு சென்றிருக்கின்றனர்.
அந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக அப்பகுதிகளில் வாழும் மக்கள் அங்கிருந்து இடம்பெயர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பொக்லைன் இயந்திரத்துடன் அப்பகுதிக்குள் நுழைந்த அதிகாரிகள், காவல் துறையினரின் உதவியுடன் அங்குள்ள வீடுகளை இடிக்கத் தொடங்கியுள்ளனர்.
அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் அவர்களது குழந்தைகள் அருகிலுள்ள பள்ளிகளில் படிக்கும் படிப்பதால்,அவர்களுக்கு இன்னும் ஐந்து மாதங்களில் முழு ஆண்டு தேர்வு நடைபெறவுள்ளது என்றும், தற்போது காலி செய்தால் அந்த குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும். ஆகவே, மாணவர்களின் முழு ஆண்டுத் தேர்வு முடியும் வரை அங்குள்ள வீடுகளை காலி செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது காலங்காலமாக தொடரும் பிரச்சனை என்பதால், அரசு அதிகாரிகள் இதை கவனத்தில் கொள்ளாமல் மேலும், அவர்களை பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளுக்கு மாற்றம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் அப்பகுதிக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து விவரங்களைக் கேட்டறிந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், “பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டேன். பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஏப்ரலில் முழு ஆண்டுத் தேர்வு எழுத உள்ளனர். இந்த நிலையில் சென்னையிலிருந்து 50 கிமீ அப்பால் பெரும்பாக்கம் பகுதிக்கு விரட்டியடித்தால் அம்மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் என்பதைச் சொல்லி ஆவேசப்பட்டனர்” என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அப்பகுதி மக்களின் துயரத்தையும் கோரிக்கைகளையும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்திடம் தொலைபேசியில் தெரிவித்ததாகக் கூறிய திருமாவளவன், “சில நிமிடங்கள் கழித்து துணை முதல்வர் தொலைபேசியில் தொடர்புகொண்டு முழு ஆண்டுத் தேர்வு வரையில் தற்காலிகமாகக் குடியிருப்புகள் அகற்றம் நிறுத்தப்படும் என்று தெரிவித்தார். அவருக்கும் தமிழக அரசுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் இது குறித்து கூறியுள்ளார்.
கோவையை
அடுத்த வடவள்ளி
ஜெய லட்சுமிநகரில் ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான
சொகுசு பங்களா உள்ளது. திமுக
பிரமுகரான ஆனந்தன் இந்த வீட்டை ஷேக்,
ரஷீத் ஆகிய இருவருக்கு வாடகைக்கு
விட்டு இருப்பதாக கூறப்படுகின்றது.
இவர்கள்
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் தங்களிடம்
இருப்பதாகவும், ஒரு லட்சம் ரூபாய்க்கு
புதிய ரூபாய் நோட்டுகள் கொடுத்தால்
அதற்கு பதிலாக இரண்டு லட்சம்
ரூபாய்க்கு பழைய நோட்டு தருவதாக
தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் அடிக்கடி பலர்
அந்த வீட்டிற்கு வந்து சென்றுள்ளனர். இதுகுறித்து
தகவல் அறிந்த மத்திய புலனாய்வு
பிரிவினர் கோவை மாவட்டக் காவல்
துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில்
நேற்று மதியம் பேரூர் டிஎஸ்பி
வேல்முருகன் தலைமையில் அந்த பங்களாவில் சோதனையில்
ஈடுபட்டனர். அப்போது அந்த பங்களாவில்
உள்ள அறைகளில் இருந்து 268 கட்டுகள் செல்லாத பழைய 500, 1000 ரூபாய்
பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 2.68 லட்சம்
ரூபாய் என தெரியவந்துள்ளது.
கைபற்றபட்ட
500, 1000 ரூபாய் கட்டுகளில் முதல் தாள் மற்றும்
கடைசி தாள்களில் பழைய 500, 1000-ம் ரூபாய்
நோட்டுகளை வைத்து விட்டு அதன்
இடையே வெறும் காகிதங்கள் வைக்கப்பட்டு
இருப்பதும் தெரியவந்துள்ளது.
போலீசார்
அந்த பங்களாவை சோதனையிட வந்த
போதே அங்கு இருந்த இருவரும்
தப்பிஓடி விட்டனர். அவர்கள் இருவரையும் வடவள்ளி
காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதற்கும் வீட்டின்
உரிமையாளரான தி.மு.க
பிரமுகருக்கும் தொடர்பு
இருக்கின்றதா என்பது குறித்தும் வடவள்ளி
போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
செவ்வாய் தோஷத்தால் திருமணம் தள்ளிப் போகிறதா? உங்களுக்கான எளிய பரிகாரம்
திருமண வயதில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவருக்கும் ஏதோ சில காரணங்களால் திருமணம் தள்ளி கொண்டே போகும். அதில் முக்கியமான காரணமாக அமைவது செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் திருமண தடை. இந்த செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் திருமண தடையை போக்க எளிய பரிகார முறையை இங்கே பார்க்கலாம்.
“கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்றெல்லாம் ஆன்றோர்கள் திருக்கோவிலின் இன்றியமையாமையைக் குறித்து அற்புதமாகக் கூறியுள்ளனர்.இந்த மொழிக்கு ஏற்றவாறு அமைந்துள்ளது பூவிருந்தவல்லி இருக்கும் அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயில். பூவிருந்தமல்லி உள்ள அனைத்து ஆலயங்களுக்கும் மகுடம் வைத்தாற்போல் அமைந்து உள்ளது இத்திருக்கோயில்.
கோவிலுக்கு செல்லும் வழி:
பூவிருந்தவல்லி இருந்து பெங்களூர் நெடுஞ்சாலையின் தென்பாலதாக அமைந்துள்ள இத்திருக்கோவில், இதன் இராஜ கோபுரம் வடக்கு நோக்கி அமைந்துள்ளது, வடக்கு குபேரனுக்கு உரிய திசை குபேர சம்பத்துடன் வாழ அருள் புரிபவர் வைத்தியநாதர் என்பதனை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது இக்கோவிலின் கோபுரம். திருமுல்லைவாயில், திருப்பாசூர், திருமழிசை, திருக்காரணீச்சரம் போன்ற ஆலயங்களில் இராஜகோபுரம் தெற்கு நோக்கியபடி இருப்பது போன்று இத்திருக்கோவில் இராஜ கோபுரமும் 3 அடுக்குகளுடன் தெற்கு நோக்கி அமைந்துள்ளது தனி சிறப்பு.
கோவிலின் அமைப்பு:-
இந்த கோவிலில் கிழக்கு வாயிலில் சிறிய அளவில் ஒரு ராஜகோபுரம் உள்ளது. எதிரில் அருமையும், பெருமையும் வாய்ந்த மங்கள தீர்த்தக்குளம் அமைந்துள்ளது. குளத்தின் கீழ்க்கரையில் பாணலிங்கம் ஒன்று உள்ளது. அதனை அடுத்து வேம்படி நீழலில் அழகிய பழமை வாய்ந்த துர்க்கை அம்மன் ஆலயம் ஒன்றும் உள்ளது.குளத்தின் வடமேற்கு மூலையில் பழமையான விநாயகப்பெருமான் அரசமர நீழலில் எழுந்தருளி உள்ளார்.
நோய்நொடி பிணி பீடைகள் அகல மக்கள் நீராடும் திருக்குளம் இது. தேவேந்திரன் தமக்குற்ற நோய் நீங்க இத்திருக்குளத்தில் நீராடினான் என்கிறது வரலாறு. கண்பார்வையற்ற தண்டியடிகள் திருவாரூர்க் கமலாலயத் திருக்குளத்தில் தூர் எடுத்துத் திருப்பணி செய்து கண்ணொளி பெற்றார் என்கிறது பெரியபுராணம்.
கிழக்கு நுழைவாயிலில் நுழைந்தவுடனே தென்படுவது கொடிமரம், பழைய கொடிமரம் பழுதுற்ற தால் புதிய கொடிமரம் ஒன்று சிறப்பான முறையில் அமைக்கப்பெற்றுள்ளது. அதை அடுத்து நான்கு கால்களுடன் கூடிய மண்டபம், திரு மடைப்பள்ளி, திருநந்தவனம், வாகன மண்டபம், அரசடி நாகத்தம்பிரான் மேடை,ஆலய அலுவலகம் என்று அடுத்து அடுத்து மண்டபங்கள் அணிசெய பழமை மாறாது விளங்குகிறது பிரகாரம் .
திருக்கோயிலின் உள் ஆவரணத்திற்கு முன்பாக அழகியதோர் முகப்பு மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் கருங்கற்றூண்கள் தாங்கக் கற்பலகைப் பாறைகள் மேலே பாவப்பெற்று விளங்குகிறது. இதனைக் கல்யாண மண்டபம் என்கிறார்கள் அங்குள்ள மக்கள்.
அடுத்து இங்குதான் சனிபகவான் கிழக்கு நோக்கித் திருநள்ளாறு திருத்தலம் இருப்பது போன்றே எழுந்தருளியுள்ளார். இதை எல்லாம் கடந்து இறைவனின் மண்டபத்தின் நுழைவாயிலில் நுழையும் முன்பு தொன்மை வாய்ந்த துவார கணபதியும், திருமுருகப் பெருமானும் எழுந்தருளி உள்ளனர் அழகிய கருங்கல் வேலைப்பாடுகளுடன் கூடிய இம்முகப்புத் திருவாயிலைக் கடந்தவுடன்
அதனையடுத்து அம்மையப்பபிள்ளையாம் சோமாஸ்கந்தமூர்த்தி மற்றும் உலாத்திருமேனிகள் அமைந்த சந்நிதி உள்ளது. மேற்குப் பகுதியில் வீரபத்திரர், விநாயகர், காசி விசுவநாதர், விசாலாட்சி, நந்தி, கும்பேசுவரர் முதலிய சிவலிங்கத் திருமேனிகள் உள்ளன. பூ இருந்த வல்லியாம் அன்னை திருமகள், ஆதிசங்கரர் முதலியனவர்களின் ஒன்றாக எழுந்தருளியுள்ளனர்.
அடுத்ததாக ஆலயத்தின் வடமேற்குப் பகுதியில் வேட மங்கை, வேழமங்கை என்று போற்ற பெறும் வள்ளி தெய்வானையுடன் கூடிய முத்துக் குமாரசுவாமி தனிக்கோயில் கொண்டு விளங்குகிறார். வடகிழக்குப் பகுதியில் அம்பலக்கூத்தனாம் சிவகாமசுந்தரியம்மை உடனாய நடராஜப்பெருமான் சபை உள்ளது.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள், மணிவாசகப் பெருமான் திருமேனிகள் தனி ஒரு மேடையில் அமைக்கப் பெற்றுள்ளமை காணலாம். அருகில் பைரவருடைய திருமேனியும் உள்ளது. சந்திரன் தனியே ஒரு மடத்தில் எழுந்தருளி யுள்ளார். இதை எல்லாம் கடந்து நாம் அடைவது அருள்மிகு வைத்தியநாத சுவாமி எழுந்தருளியுள்ள கருவறை என்கிற கர்ப்பகிரகம்.
கூடக்கோயில் வகையைச் சார்ந்த ஆலயமாக இருப்பினும் கருவறை அமைந்துள்ள பகுதி சற்று உயரமாக விளங்குகிறது. அழகிய திரிதள விமானத்தின் கீழதாக அமைந்துள்ள கருவறை பல தெய்வீக மகிமைகளைத் தன்னகத்துட் கொண்டு வசீகரிப்பதாய் உள்ளது. யாவற்றிற்கும் மகுடம் வைத்திருப்பது போல நடுநாயகமாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார் அருள்மிகு வைத்தியநாதசுவாமி.
“ஈர்த்து என்னை யாட்கொண்ட எந்தை சிவ பெருமானின் அருட்கலைகள் எக்காலத்திலும் நீங்காது உறைவது சிவலிங்கத் திருமேனிகளில் தான்” என தேவேந்திரன் தன் உடற்குற்ற பிணியை நீக்கிக் கொள்ள வேண்டி இந்நகரத்திற்கு வந்து சிவலிங்கத் திருமேனி ஒன்றைத் ஸ்தாபித்து நித்திய வழிபாடாற்றி தவம் செய்தான். கண்டகண்கள் புனல்பாய அழுது தொழுது வணங்கி நெக்குருகினான் இந்திரன்,நோய் நீங்கியது, சகல சௌபாக்கியங்களையும் பெற்றான் இந்திரன்.
இந்திரனுடைய வேண்டுகோளின்படி “எக்காலத்தும் நீங்காது இத்திருமேனியிலேயே எழுந்தருளியிருந்து உம்மைத் தொழுது வணங்குவோரது துயர்களைந்தருள வேண்டும்” என்று வேண்டி நின்றார்கள் தேவர்கள். அன்று முதல் ‘வினை தீர்த்தான்’ என்ற திருப் பெயர் வைத்தியநாதசுவாமிக்கு விளங்கலா யிற்று என்கிறது புராணம் .
சோழநாட்டுத் திருத்தலங்களில் ஒன்றான புள்ளிருக்கு வேளூர் வைத்தீஸ்வரன் கோயிலில் எவ்வாறு அங்காரகன் (செவ்வாய்) பூசித்த தலமாக விளங்குகின்றதோ அதை போல பூவிருந்தமல்லி அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயில் விளங்கிறது .
செவ்வாய் தோஷம் நீங்க :-
ஆலயத்த்தின் மூலவர் திருமண தடை, வரப்பிரசாதி,செவ்வாய் தோஷம் ,உத்தியோகம்,சனி தோஷம் கல்வி என்று எந்த நோக்கத்துக்காக வேண்டினாலும் கண்டிப்பாய் நிறைவேறும் என்பது இங்கு வாழும் பக்தர்களின் ஐதிகம்.
குறிப்பாக இக்கோவிலில் 11 செவ்வாய் கிழமை விளக்குகேற்றி சிவனை வழிப்பாட்டு வந்தால் பதினாறு வாரங்கள் முடியும் முன்னே திருமணம் தடை நீக்கும் என்கிறார்கள்.மேலும் சனிகிழமைகளில் இங்கு சிறப்பு பூஜை நடைப்பெறும்.
விழாக் காலங்கள் தவிர,மற்ற தினங்களில் காலை 6:30 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும்,மாலை 5:00 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கோயில் நடைதிறந் திருக்கும் ஆகமங்களில் சொல்லப் பெற்றுள்ள அமைப்பில் அனைத்து பரிவார மூர்த்திகளும் சூழ அமைந்துள்ள அற்புதமான திருக்கோயில் பூவிருந்தவல்லி அருள்மிகு தையல்நாயகி அம்மை உடனுறை அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோயில். கிடைத்தற்கு அரிதாகிய மானிடப் பிறவி பெற்ற மக்கள் அவசியம் சென்று தொழ வேண்டிய அரனார் ஆலயங்களில் ஒன்று .
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஐந்து கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பா.ஜ.க தனித்து ஒரு அணியாகவும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜே.எம்.எம் ), காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து மற்றொரு அணியாகவும் தேர்தலை சந்தித்தன. ஆட்சி அமைக்க 42 எம்.எல்.ஏ தேவை படும் என்ற நிலையில் ஜே.எம்.எம் கூட்டணி 47 எம்.எல்.ஏ க்களை பெற்று ஆட்சியை பிடித்தது.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11-வது முதல் மந்திரியாக ஹேமந்த் சோரன் (இவர் இரண்டு தொகுதியில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது) இன்று மதியம் பதவியேற்றார். அவருக்கு மாநில கவர்னர் திரவுபதி மர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல் மந்திரிகள் கலந்து கொண்டனர்.
கவர்ச்சியில் சினிமா ஹீரோயினையே மிஞ்சும் பத்திரிக்கையாளர் பனிமலர்! வைரலாகும் புகைப்படம்
ஆரம்பத்தில் தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி தற்போது அரசியல் கட்சி ஒன்றின் ஆதரவு தொலைக்காட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பவர் தான் இந்த பனிமலர். இவருடன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது கதாநாயகியாக உயர்ந்துள்ளார். இந்நிலையில் அவரை போலவே பனிமலரும் திரைத்துறையில் நுழைந்து கதாநாயகியாக பிரபலமாக வேண்டும் என்று முயற்சிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலில் சினிமா வாய்ப்பினை பெறுவதற்காக பல்வேறு உடற்பயிற்சிகள் செய்து உடல் எடையை குறைத்த அவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றி வந்தார். மேலும் பல்வேறு முக்கிய சினிமா நட்சத்திரங்களின் திரைப்படங்களை பற்றி கூட விமர்சனம் செய்து வந்தார், சமீபத்தில் நடிகர் கமலஹாசன் பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பனிமலர் பங்கு பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஏதோ காரணங்களால் அதுவும் தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவர் என்ன தான் சினிமா மீது தீவிர ஆர்வமாக இருந்தாலும், இவர் சார்ந்துள்ள அரசியல் கட்சி மற்றும் இவர் தீவிர பெரியார் ஆதாரவாளர் என்பதால் இவர் தெரிவிக்கும் கருத்துக்கள் சில சமயங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது அவர் பணி புரியும் தனியார் தொலைக்காட்சியில் அதிகமாக வேலைகள் இல்லாத காரணத்தால் கிடைக்கும் நேரங்களில் தனது சினிமா ஆர்வதிற்காக அவ்வப்போது பனிமலர் போட்டோ ஷூட் நடத்தி அதன் மூலமாக விதவிதமான புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றி வருகிறார்.
அந்த வகையில் வழக்கமாக புகைப்படங்களில் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை பதிவேற்றிய படங்களில் சினிமா கதாநாயகிகளை மிஞ்சும் அளவிற்கு சேலையில் கவர்ச்சிக் காட்டும் படத்தையும் வெளியிட்டுள்ளார். சேலை விளம்பரத்திற்காக கடற்கரையில் போட்டோ சூட்டில் இறங்கிய பனிமலர் தான் யாரும் எதிர்பார்க்காத வகையில் இவ்வாறு கவர்ச்சி புயலாக மாறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. மேலும் இவர் இதற்கு முன்னர் பெரியார் இப்போது உயிரோடு இருந்தால் அவரை திருமணம் செய்து குடும்பம் நடத்துவேன் என்று கூறி சர்ச்சையில் சிக்கியவர் என்பதும், MeToo புகாரின் போது பிரபல பத்திரிக்கையின் நிர்வாகத்தில் பணியாற்றியவர் மீது குற்றச்சாட்டை கூறியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன் முதல் டெஸ்ட் செஞ்சுரியன் மைதானத்தில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி 284 ரன்களும், இங்கிலாந்து 181 ரன்களும் எடுத்தன.
103 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்கா இரண்டாம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்த நிலையில் மூன்றாவது நாளான நேற்று தொடர்ந்து விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்சில் 61.4 ஓவர்களில் அவர்கள் 272 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.
இதன் மூலம் இங்கிலாந்து அணி 376 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 41 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது.
கைவசம் 9 விக்கெட் வைத்திருக்கும் இங்கிலாந்து அணி 255 ரன்கள் எடுக்க வேண்டும்.இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு சம அளவில் இருப்பதால் இந்த ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வெற்றி புள்ளிகள் உலக டெஸ்ட் சாம்பியன்க்கு எடுத்துக் கொள்ளப்படுவதால் வெற்றிபெற இரு அணிகளும் கடுமையாக போராடும்.