பெங்களூர் அருகே பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடந்து வருவதாக அடிக்கடி புகார்கள் வந்த நிலையில் நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுமிகள் தவறாக பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது இதனிடையே பெங்களூருவைச் சேர்ந்த ஜனார்த்தன் சர்மா என்பவர் தனது மகளை மீட்டுத் தரக்கோரி குஜராத் போலீசில் புகார் அளித்தார்.
மேலும் அகமதாபாத் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார் இந்த மனு மீதான விசாரணை நடத்திய அகமதாபாத் நீதிமன்றம் சிறுமிகளின் நிலை என்ன என்பதை கண்டறிந்து தகவல் கொடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடார் அருகே நித்யானந்தா கைலாசா என்ற ஒரு நாட்டை உருவாக்க இருக்கிறார் என்ற பேச்சும் அடிபட்டது.
அதற்கு ஏற்றார் போல தனி பாஸ்போர்ட், தனி சின்னங்கள், அமைச்சரவை என தனி நாடு அமைக்கப்போவதாக செய்தி வெளியானது. இது குறித்து அவர் தனிப்பட்ட kailaasa.org என்ற இணையதளத்தை ஏற்படுத்தி அதில் தகவல்களை வெளியிட்டு உள்ளார்.
இதற்கிடையே திருச்சி நாவலூர் குட்டபட்டு மேலத்தெருவை சேர்ந்த ஜான்சி ராணியின் மகள் சங்கீதா கடந்த 2014-ம் ஆண்டு பிடதியில் மர்மமான முறையில் ஆசிரமத்தில் இறந்தார். இவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக தாய் ஜான்சி ராணி குற்றம்சாட்டினார்.
சங்கீதாவின் மர்ம சாவு பற்றிய விசாரணையும் நடைபெற்று வந்த நிலையில் இந்த நிலையில் சங்கீதா சாவு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஜான்சிராணி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக மத்திய உள்துறை அமைச்சகம், கர்நாடக அரசுக்கு அவசரமாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நித்யானந்தா வெளிநாட்டில் உள்ளார். நித்யானந்தாவை வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும். இதற்காக நித்யானந்தா மீது சம்பந்தப்பட்ட கோர்ட்டில் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டு பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் இண்டர்போல் மூலம் நித்யானந்தாவுக்கு எதிராக ரெட்கார்னர் நோட்டீஸ் வழங்கப்படும். அவரை நாடுகடத்தி இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும் என தெரிவிக்க பட்டுள்ளது.
திராவிட புதல்வன் ஸ்டாலினும் திமுகவும் பிராமணன் பிடியில்! பெரியார் அண்ணா வளர்த்த இயக்கம் இதுதானா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கார்ப்பரேட் அரசியல் வியாபாரி என்று அழைக்கப்படும் பிராமணர் பிரசாந்த் கிஷோர் கட்டுப்பாட்டில் சென்று விட்டார்.
நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற பிரம்மாண்ட வெற்றி விக்ரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத் தேர்தல்களில் நீடிக்கவில்லை, இதை அலசி ஆராய்ந்து திமுக தரப்பு பார்த்தபோது நாடாளுமன்றத் தேர்தலில் கொடுத்த கவர்ச்சி வாக்குறுதிகளால் தான் நாம் தேர்தலில் வெற்றி பெற்றோம் என்று திமுக உடன் பிறப்புகள் புரிந்துகொண்டனர்,.
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இடைத்தேர்தலில் கிடைத்த மிகப்பெரிய அடி தான், வடநாட்டுகாரன் பீகார் மாநிலத்தை சேர்ந்த பிராமணர் பிரசாந்த் கிஷோரிடம் உதவிக்கு தேடி ஓடவைத்தது, தமிழக ஆட்சிக் கட்டிலில் உட்கார வைக்க பலநூறு கோடிகள் ஒப்பந்தம் முடிவடைந்த பிறகு தான் ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்தார் பிரசாந்த் கிஷோர்.
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியின் பிரச்சாரத்திற்கு வழிவகுத்து கொடுத்தவர், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இவர்களின் வரிசையில் மு.க.ஸ்டாலினை கொண்டு வர மருமகன் சபரீசன் விடாமுயற்சியால், அரசியல் வியாபாரியின் ஆதரவை கெஞ்சி கேட்டு வாங்கியுள்ளார்,
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தவிர வேறு எந்த கட்சி தலைவரும் மக்கள் முன் பெரிய ஆளுமையாக தெரிய கூடாது, அவர்களுடைய விளம்பரம் கூட மக்களிடம் சென்றடைய கூடாது ஏதாவது ஒரு பிரச்சினையில் சிக்க வைத்து அவர்களின் செல்வாக்கை சரியசெய்வதே பிரசாந்த் கிஷோர் என்ற அரசியல் வியாபாரியின் தந்திரம்.
தற்போது இணைய உலகம் கையில் இருப்பதால் சமூக வலைதளங்கள் மூலம் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் செய்யும் வேலைகள் அனைத்தும் சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களிடம் எளிதாக கொண்டு சென்று விடுகின்றனர்,.
பிரசாந்த் கிஷோரின் முக்கிய நோக்கமே சமூக வலைத்தளங்களில் திமுகவிற்கும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலினும் எதிராக பரப்பப்படும், விமர்சிக்கப்படும் பதிவுகளை கொண்ட அனைத்து சமூக வலைத்தளங்களையும் முடக்க செய்வதே முதல் பணி,. மேலும் சமூக வலைத்தளங்களில் சிறப்பாக செயல்படும் இளைஞர்களை தங்கள் வசம் கொண்டு வந்து திமுக ஆதரவாக செயல்பட வைப்பது இன்னொரு தந்திரம்,.
அதுமட்டுமில்லாமல் ஸ்டாலின் அவர்கள் பொது மேடையில் எதை பற்றி பேசலாம், அறிக்கை வெளியிடலாம் என்பதை முழுவதும் தீர்ப்பளிப்பது IPAC எனப்படும் பிராமணர் பிரசாந்த் கிஷோரின் கார்ப்பரேட் கம்பெனி ஆகும், திமுக மாவட்ட செயலாளர்கள் அனைவரையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, தான் செய்ய சொல்லும் வேலைகளை செய்தால் மட்டும் போதும் என்று ஒரு நிழல் தலைவர் போல் செயல்படப் போகிறார் பிரசாந்த் கிஷோர், கட்சியில் மேல் மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் வரை அனைத்து திமுக பிரமுகர்களுக்கும் தொண்டர்களுக்கும் இனி செயல்திட்டம் வகுத்து கொடுத்து வேலை வாங்க போவதே பிரசாந்த் கிஷோரின் IPAC கார்ப்பரேட் கம்பெனி தான்.
தமிழகத்தின் மிகப்பெரிய ஜாம்பவனாக மக்கள் முன் விளம்பரப்படுத்தி 2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் முதலமைச்சராக ஆட்சிக் கட்டிலில் ஸ்டாலினை உட்கார வைக்க செயல்படுத்தப்பட இருக்கின்ற திட்டங்கள் அனைத்தும் அமலுக்கு வந்துவிட்டன. இந்த செயலை பிடிக்காமல்தான் மூத்த அரசியல் தலைவர் பழ.கருப்பையா அவர்கள், “ஒரு அரசியல் தலைவன் தனது செயல்பாட்டினால் மூலம் தான் மக்களை கவர வேண்டுமே தவிர” “கார்ப்பரேட் கம்பெனி மூலம் மக்களை கவரலாம் என்று எண்ணினால் அது தவறானது” என்று அதிரடியாக தெரிவித்து திமுகவில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் முக்கியமானது என்னவென்றால் பிரசாந்த் கிஷோர் ஒரு பிராமணர், பிகார் மாநிலத்தை சேர்ந்த வட நாட்டுக்காரர், திமுக என்பது ஒரு திராவிட இயக்கம், அதன் நோக்கமே பிராமணர்களை எதிர்த்து கட்சி ஆரம்பிக்கப்பட்ட ஒரு தீவிரமான இயக்கமாகும். திமுகவில் பிராமணர்களுக்கு இடம் கிடையாது என்பது எழுதப்படாத விதி, ஒரு பிராமணர் திராவிட கட்சியை கட்டுப்பாட்டில் வைக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
திராவிட புதல்வன் என்று திராவிடர்களால் அழைக்கப்படும் மு.க.ஸ்டாலின் ஒரு பிராமணர் கட்டுப்பாட்டில் வந்து விட்டார், பெரியார், திராவிடம் என்று கொக்கறித்து கொண்டு இருக்கும் திராவிட கூடாரங்களின் தலைவர்கள் கீ.வீரமணி, சுப.வீரபாண்டியன் போன்ற தலைவர்கள், திமுகவின் உடன்பிறப்புகள் எல்லாம் அடிமைகளாகவே இருந்து விடலாம் என்று எண்ணுகிறார்களோ என்று தெரியவில்லை.
தமிழக மக்களிடம் பெரியார் மண், திராவிடம் என்ற சொல்லை திராவிட முன்னேற்றக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒவ்வொரு நாளும் தூக்கத்தில் கூட சொல்லிக் கொண்டு இருப்பார்,. நிஜத்தில் ஒரு பிராமணர் கையில் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெரியார் அண்ணா வழி வந்த மாபெரும் இயக்கம் சிக்கித் தவிக்க போகிறது என்பதை திமுக தொண்டர்கள் எண்ணிப்பார்க்கவேண்டும்,
தன்னுடைய சுயநலத்திற்காக பெரியார், அண்ணாவின் திராவிடம் யாரை எதிர்த்து ஒரு இயக்கமாக மாறியதோ அந்த இயக்கத்திற்கு ஒரு மிகப்பெரிய கரும்புள்ளியை ஸ்டாலின் வைத்துவிட்டார் என்பதே திராவிடத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் சிந்தித்து பார்க்க வேண்டும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 5’ம் தேதி மரணமடைந்தார். அவரது மறைவிற்கு பின் அவரது தோழியான சசிகலா பிப்ரவரி மாதம் சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை உறுதி செய்யப்பட்டு கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டார். ஜெ.,வின் சொத்துக்கள் முழுவதும் தன்னுடையது தான் என, சசிகலா சொந்தம் கொண்டாட துவங்கி உள்ளார்.
இந்நிலையில் ” ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது என்றும், ஜெயலலிதாவின் சொத்துகளை அரசுடைமையாக்க, அ.தி.மு.க., அரசை வலியுறுத்துவேன்,” என்றும் அ.ம.மு.க., முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி கூறியுள்ளார்.
சேலத்தில் நேற்று, நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் “ மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை, சசிகலா, ஜெ.தீபா உள்ளிட்ட யாரும், சொந்தம் கொண்டாட முடியாது. சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதலான சொத்துகள், சட்ட ரீதியாக, அரசுடைமையாக்க வேண்டும். அது, யாருக்கும் சொந்தமல்ல என, தீர்ப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், ஜெயலலிதாவின் சொத்துகளை அரசுடைமையாக்க, முதல்வர் பழனிசாமி, நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன்.
ஜெயலலிதாவின் சொத்துகள், ஏழைகளை சென்றடைய வேண்டும். அதை, வேறு யாரும் அனுபவிக்க முடியாது. அதனால், அவரது சொத்துகளை கையகப்படுத்த, அரசுக்கு எந்த தடையும் இல்லை. இல்லையெனில், நீதிமன்றத்தை நாடுவேன். இதுகுறித்து, அ.தி.மு.க.,வினர் கருத்து தெரிவிக்காதது ஏன்? என தெரியவில்லை. விடுபட்ட ஒன்பது மாவட்டங்கள் உள்பட, ஒட்டுமொத்த உள்ளாட்சி அமைப்பு தேர்தல் முடியும் நிலையில், அ.ம.மு.க., கட்சி காணாமல் போய்விடும். காலம் கனியும்போது, நான், அ.தி.மு.க.,வில் இணைவேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உத்தர பிரதேசத்தில்
நோட்டீஸ் வரும் முன்பே, வன்முறையில் பொது சொத்துகள் சேதம் அடைந்ததால் தங்களது தவறை
உணர்ந்து ரூ.6.27 லட்சம் நஷ்டஈடு வழங்கிய கிராம மக்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டிற்கே இது ஒரு முன்னுதாரணம் என்றும் இனி இப்படி வன்முறைகள் நடைபெறாமல் இருக்கும்
என்று நம்புவதாகவும் மாவட்ட நீதிபதி கருத்து.
குடியுரிமை
திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் பொதுச்
சொத்துகளை சேதப்படுத்திய கிராம மக்கள், அதற்கான
நஷ்டஈடாக ரூ.6.27 லட்சத்தை உத்தரப்
பிரதேச அரசிடம் வழங்கினர். உத்தரப்
பிரதேசத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கடந்த 20ம் தேதி
பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் வன்முறை வெடித்தது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொதுச் சொத்துகளை அடித்து
நொறுக்கியும், தீ
வைத்தும் சேதப்படுத்தினர். இதன் மூலம், ₹50 லட்சம்
மதிப்புள்ள பொதுச் சொத்துகள் சேதமாகி
இருப்பதாக உபி அரசு கணக்கிட்டுள்ளது.
மேலும், போராட்டக்காரர்களிடம் இருந்து இந்த தொகையை
வசூலிக்கும் அதிரடி நடவடிக்கையை அது எடுத்துள்ளது.
அந்தந்த
பகுதிகளில் ஏற்பட்ட சேதத்தின் அடிப்படையில்,
வன்முறையில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ள 130 பேருக்கு இந்த தொகையை செலுத்தும்படி
அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் இந்த நடவடிக்கை,
போராட்டக்காரர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், கலவரத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட புலசந்த்சார்
மாவட்டத்தில் உள்ளது உப்ரீத்காட் கிராமம்.
இப்பகுதியைச் சேர்ந்த உள்ளூர் அரசியல்வாதியான
ஷகிலுல்லாவின் தலைமையிலான குழு, நேற்று முன்தினம்
மாவட்ட கலெக்டர் சந்தோஷ்
குமார் சிங்கை சந்தித்தது.
அப்போது, தங்கள் பகுதியில் நடந்த
சேதத்துக்கான நஷ்டஈடாக ரூ.6.27 லட்சத்தை அவரிடம்
வழங்கினர். தாங்கள் செய்த தவறை
உணர்ந்து, இந்த முடிவை எடுத்ததாக
அவர்கள் தெரிவித்தனர். இத்தனைக்கும் இந்த மாவட்ட நிர்வாகம்
இன்னும் இப்பகுதியை
சேர்ந்தவர்களுக்கு நோட்டீஸ் வழங்கவில்லை. நோட்டீஸ் வரும் முன்பாகவே, இவர்கள்
நஷ்டஈடு தொகையை வழங்கியதற்காக பாராட்டுகள்
குவிகின்றன. அதேபோல், இதே மாவட்டத்தை சேர்ந்த
கோட்வாலி பகுதி மக்களும், ‘இனிமேல்
வன்முறையில் ஈடுபட மாட்டோம்’ என்று
மாவட்ட கலெக்டரை சந்தித்து உறுதிமொழி கடிதம் கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து
புலசந்த்சார் மாவட்ட நீதிபதி ரவீந்திர
குமார் கூறுகையில்,
“கடந்த வெள்ளிக்கிழமை நடந்த வன்முறையில் அரசாங்கத்திற்கு
சொந்தமான கோடி கணக்கான சொத்துக்கள்
சேதமடைந்தன,மக்கள் அவர்களாகவே முன்வந்து
சேதத்தை கணக்கிட்டு மக்களிடம் வசூலித்து நஷ்ட ஈட்டை வழங்கியுள்ளனர். நாட்டிற்கே இது ஒரு முன்னுதாரணம் என்றும்
இனி இப்படி வன்முறைகள் நடைபெறாமல் இருக்கும் என்று நம்புவதாகவும் நீதிபதி. ரவீந்திர குமார்
தெரிவித்தார்.
உஷாராக இருக்க வேண்டிய 4 ராசிக்காரர்கள் !!! 2020 புத்தாண்டு ராசி பலன்
அறிவியல் ரீதியாக பல்வேறு பரிணாம வளர்ச்சிகளை மனிதயினம் அடைந்திருந்தாலும், இன்னமும் ஒரு சில விஷயங்களில் ஒவ்வொரு மனிதனின் எண்ண ஓட்டமும், குறிப்பாக எதிர்பார்ப்பு ரீதியாக பெரிய மாற்றங்களை அடையவில்லை என்று தான் கூறவேண்டும்.
ஒவ்வொரு நாளும், நமக்கு நல்லதாகவே இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாத மனிதன் இருக்கவே முடியாது, ஒரு நாளுக்கே இந்த எதிர்பார்ப்பு என்றால் புது வருடம் என்றால் சொல்லவே தேவையில்லை.
புத்தாண்டு
பிறக்கயிருக்கும் நிலையில் அனைவரின் மனதிலும் எழும் மிகப்பெரிய கேள்வி,
வரும் ஆண்டு நமக்கு எப்படி
இருக்கும் ?
2020 ஆம் ஆண்டில் முக்கிய கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் சனிபகவான் தனுசு ராசியில் இருந்து ஆண்டின் முதலில் ஜனவரி 24ஆம் தேதி மகரம் ராசிக்கு நகர்கிறார். மிதுனத்தில் உள்ள ராகு 18.09.2020 அன்று இரவு 8.45 மணி ரிஷப ராசிக்கு நகர்கிறார். தனுசு ராசியில் உள்ள கேது விருச்சிக ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். குருபகவான் தனுசு ராசியில் இருக்கிறார். 2020 மார்ச் 30ஆம் தேதியன்று மகர ராசிக்கு செல்கிறார். ஜூன் 30ஆம் தேதிவரை மகர ராசியில் சஞ்சரிப்பார். பின்னர் வக்ரமடைந்து தனுசு ராசிக்கு வரும் குருபகவான் நவம்பர் வரை தனுசு ராசியில் சஞ்சரிப்பார்.
இந்த கிரஹ மாற்றங்கள் 12 ராசிக்காரர்களுக்கும்
பல்வேறு வகையான பலன்களை தர
இருக்கிறது. மற்ற ராசிக்கார்களை காட்டிலும்
பின்வரும் இந்த 4 ராசிக்காரர்கள்
சற்றே கூடுதல் கவனத்துடன் இருப்பது
நல்லது.
ரிஷபம்:
ஆண்டின் துவக்கத்தில்
ஏற்படும் சிரமங்களை பொறுத்துக் கொள்ளுங்கள். செலவுகள் அதிகரிக்கும், சிக்கனம் தேவை.
நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் தோல்வியடையலாம், தீவிர முயற்சியின் காரணமாக வெற்றி
கிடைக்கும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர்
விட்டுக்கொடுத்து போவது நல்லது. ஆனால்
மார்ச் மாதத்திற்கு பிறகு நிலைமைமாறும். மார்ச்
27 முதல் ஜூலை 7’ம் தேதி வரை, பொருளாதார வளம் மேம்படும். தொழிலதிபர்களுக்கு பணப்புழக்கம்
அதிகரிக்கும், வெளியிழந்த ஐ.டி
துறையினருக்கு மீண்டும் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும், கலை துறையினருக்கு புகழ், பாராட்டுகள் கிடைக்கும்,புதிய
ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். விவசாயிகளுக்கு
எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும், மாணவர்களுக்கு
நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
சுக்கிரன் சாதகமாக
இருக்கும் நிலையில் புத்தாண்டு மலர்கிறது. ஆண்டின் துவக்கத்தில் வீண் அலைச்சல் இருக்கும்,
கணவன் மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்காது. குடும்பத்தில்
பிரச்சனைகள் தலைதூக்கும். மதிப்பு மரியாதை சுமாராக இருக்கும்.
குருபகவானால் மன உளைச்சல் ஏற்பட்டு
அகலும். நீங்கள் சிந்தித்து
செயல்பட்டாள், சிகரத்தை கூட எட்டி பிடிக்கலாம். உங்களுக்கு மார்ச்
27 முதல் ஜூலை 7 வரை அனுகூலமான சூழல் உருவாகும். செயலில் வெற்றிகிட்டும், மனநிம்மதி ஏற்படும். குருபலத்தால் தங்கம்,வெள்ளி,வைர
நகைகள் வியாபாரம் செய்பவர்கள் வளர்ச்சிப்பாதையில் வெற்றி நடை போடுவர். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு
சாதகமான சூழல் உருவாகும். அரசியல்வாதிகள்,
வாழ்வில் மேன்மை அடைவர்,விரும்பிய பதவியும் ஆதாயமும் கிடைக்க பெறுவர். பெண்களுக்கு கணவரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்,உங்களால் குடும்பம்
முன்னேற்ற பாதையில் செல்லும்.
உங்கள்
ராசிக்கு நட்பு கிரகமான சுக்கிரன்
சாதகமாக இருக்கும்நிலையில் புத்தாண்டு பிறக்கிறது. ஆகஸ்ட் 31’க்கு பிறகு ராகு
சாதகமான இடத்திற்கு வருகிறார். அதுவரை எதிலும் பொறுமையைக்
கடைபிடியுங்கள். தொழிலதிபர்களுக்கு பகைவர் இடையூறு அவ்வப்போது
தலைதூக்கலாம். யாருடனும்
விழிப்புணர்வுடன் பழகுவது நல்லது.
வியாபாரிகள், புதிய வியாபாரம் துவங்குவதை
தவிர்க்கவும்.கலைஞர்களுக்கு விடாமுயற்சி இருந்தால் மட்டுமே புதிய ஒப்பந்தங்கள்
கிடைக்கும். திருமணம் போன்ற சுபவிஷயத்தில் தாமதம் ஏற்படும்.
மார்ச் 27 முதல் ஜூலை 7 வரை உங்களுக்கு
அனுகூலமான காலகட்டம். மனதில்
உற்சாகம் பிறக்கும், நினைத்ததை உற்சாகமாக செய்து முடிக்கலாம். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
பரிகாரங்கள்: சனிக்கிழமைகளில் நவகிரஹத்திற்கு அர்ச்சனை
செய்து வழிபட வும்.
மகரம்:
ஆண்டின்
முற்பகுதியில் ராகுவும் பின்னர் கேதுவும் நற்பலன்
தர காத்திருக்கின்றனர். எனினும் குரு சாதகமற்ற நிலையில் இருப்பதால் வீண் விவாதங்களை தவிர்க்கவும்,அவ்வப்போது
மனக்குழப்பம் ஏற்படும். சந்தோசத்தை எதிர்கொள்ளும் சூழல் ஏற்பட்டாலும் கூட அதை முழுமையாக
அனுபவிக்க முட்டியாமல் போகலாம். ஆகஸ்ட்
31’க்கு பிறகு பொருளாதார நிலை மேம்படும் தடைகள் விலகும்,பணப்புழக்கம் அதிகரிக்கும்.
தொழிலதிபர்களுக்கு ராகுவால் நன்மை
உண்டாகும்.வியாபாரிகளுக்கு லாபம் படிப்படியாக அதிகரிக்கும். கலைஞர்கள் ரசிகர்களின் மத்தியில் புகழையும்
பாராட்டையும் பெறலாம். பெண்கள்
ஆண்டின் துவக்கத்தில் குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போகவும், மார்ச் 27’ க்கு பிறகு குருவின்
பார்வையால் நன்மையை எதிர்பார்க்கலாம். பொன்
பொருள் சேர்க்கை இருக்கும், குருபகவானின்
ஒன்பதாவது இடத்துப் பார்வையால் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார்.
2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் ட்ரெண்டான டாப் 7 ட்விட்டர் ஹேஷ்டேக்கள்
Loksabhaelections2019 முதல் #chandrayaan2 மற்றும் #cwc19 வரை, இந்த ஆண்டு இந்தியாவில் ட்விட்டரில் பல உரையாடல்களையும் , பங்கேற்புகளையும் பெற்று இருந்தது
ஒரு சராசரி இந்தியனின் சமூக பொறுப்பை இப்போதெல்லாம் ட்விட்டரில் ஹேஸ்டேக்குகள் மூலமே அறிந்து கொள்ள முடிகிறது, அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு இந்தியாவின் டாப் ட்ரெண்டிங் ஹேஸ்டேக்குகளை பற்றி பார்க்கலாம்.
1.உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் , 2019 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தல் பற்றிய விவாதங்களை உள்ளடக்கிய #loksabhaelections2019 ஹேஸ்டேக் ட்விட்டர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
2.இதைத் தொடர்ந்து # சந்திரயான் 2, உலகின் முதல் ரோபோ ரோவரை சந்திரனின் தென் துருவத்தில் தரையிறக்கும் இஸ்ரோவின் தரைவழிப் பணி நெருக்கமாகப் பின்பற்றப்பட்டது, இந்தியர்கள் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் உள்ள மக்களும் இதை அதிக படியாக ட்வீட் செய்ததால், சந்திரயன் 2, ஹேஸ்டேக் ட்விட்டர் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
3.ட்விட்டர் ஹேஸ்டேக் பட்டியலில் முன்றாவது இடத்தில் இருப்பது #cwc19. கிரிக்கெட் உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா நியூசிலாந்திடம் தோல்வியடைந்த போதிலும், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ட்விட்டரில் அதிகமாக ட்விட் செய்தது #cwc19 பற்றி தான்.
4.இதைத் தொடர்ந்து #Pulwama. புல்வாமா மாவட்டத்தில் ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நடத்தப்பட்ட தாக்குதலில் 40 மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் உயிரிழந்த செய்தி இந்தியர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
5.இதேபோல், #அரசியலமைப்பு 370 மற்றும் #ayodhyaverdict போன்ற முக்கிய அரசியல் நிகழ்வுகள் பற்றிய ஹேஷ்டேக்கும் அதிக அளவில் ட்விட்டரில் பேசு பொருளாக இருந்தது.
6.எல்லா வருடம் போல 2019 வருடமும் திரைப்படங்கள் பற்றிய ஹேஷ்டேக்குகளில் ட்விட்டரில் முக்கிய பங்கு வகித்தது. தமிழ் மற்றும் ஹாலிவுட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களான அவென்ஜர்ஸ் எண்ட்கேம் மற்றும் நடிகர் விஜய் நடித்த திரைப்படமான பிகில் தான்.
இவை இரண்டும் கடந்த ஆண்டில் ட்விட்டரில் அதிகம் ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது, அப்படங்களை பற்றிய ஒவ்வோரு அப்டேட்டயும் ரசிகர்கள் #பிகில், #அவென்ஜர்ஸ்எண்ட்கேம் என பதிவிட, அதுவே அடுத்து அடுத்து ட்விட்டர் ஹேஸ்டேக் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பிடித்து இருக்கிறது.
விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்பி நிருபர்களிடம் பேட்டியளித்தார் அதில்.
அரசு மற்றும் தனியார் பங்களிப்பில் செயல்படுத்தப்பட்ட தங்க நாற்கரச் சாலைத் திட்டத்தில் 5 ஆண்டுகள் அல்லது ஏழு ஆண்டுகள் மட்டும் தான் சுங்க வரி வசூலிக்க வேண்டும் ஆனால் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் எடுத்துக்கொண்டால் கடந்த 12 ஆண்டுகளாக வசூலித்து வருகின்றனர்.
அந்த சாலையின் மொத்த செலவை 545 கோடி தான் இருக்கும் ஆனால் இதுவரை சுங்க வரியாக 1100 கோடி வரை வசூலித்து விட்டு இன்னும் 300 கோடி வசூலிக்க வேண்டும் என சொல்கின்றனர்.
இந்த சாலையில் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் வாகனங்கள் செல்கிறது என்றால் அவர்கள் கணக்கில் வெறும் பத்தாயிரம் வாகனங்கள் மட்டும் தான் வரும் மீதி 40 ஆயிரம் வாகனங்களுக்கு சுங்க வரியை கணக்கில் காட்டாமல் எடுத்துக்கொள்கின்றனர் அதனால் சுங்க வரி வசூலில் மிகப்பெரிய மோசடி நடக்கிறது.
எனவே இதுபோன்ற சுங்க வரி வசூலிக்கும் சுங்கச்சாவடிகள் அனைத்தையும் குறிப்பிட்ட காலத்திற்குள் மூட வேண்டும் என அவர் கூறினார்.
இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் சமீபத்தில் நிகழ்ச்சி
ஒன்றில் பேசுகையில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப்
போராடுபவா்களை விமா்சிக்கும் வகையில் பேசியிருந்தார்.இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
ராணுவ தளபதி ஒருவர் அரசியல்
பேசியதற்கு, பல்வேறு கட்சி தலைவர்களும்
கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே மதிமுக பொதுச்செயலாளா் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்
செயலாளா் இரா.முத்தரசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்த
நிலையில், பிபின் ராவத்தின்
கருத்திற்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்
கேரளாவின்
திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும்
முன்னாள் மத்திய மந்திரியான ப.
சிதம்பரம் கட்சி கூட்டமொன்றில் பேசுகையில்,
“அரசை ஆதரிக்கும் வகையில் பேசும்படி டி.ஜி.பி. மற்றும்
ராணுவ தளபதி கேட்டு கொள்ளப்பட்டு
உள்ளனர் என்பது ஓர் அவமானம்.ராணுவ தளபதி ராவத்திடம்
நான் வேண்டுகோள் வைக்கிறேன். நீங்கள்
ராணுவ தலைமை தளபதியாக இருக்கிறீர்கள். உங்களது
வேலையில் நீங்கள் கவனம் வைத்திடுங்கள்.
அரசியல்வாதிகள் என்ன செய்ய வேண்டுமோ
அதனை அவர்கள் செய்திடுவார்கள்.
நீங்கள் எப்படி போரிட வேண்டும்
என்று கூறுவது எங்கள் வேலையல்ல
என்பதுபோல், நாங்கள் என்ன செய்ய
வேண்டும் என அரசியல்வாதிகளுக்கு கூறுவது
ராணுவத்தினரின் பணியல்ல. நீங்கள்
உங்களது யோசனையின் படி போரிடுங்கள்.
நாட்டின் அரசியலை நாங்கள் கவனித்து
கொள்வோம்” என்று கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 16-ம் தேதி பள்ளி நேரடியாக மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி, தூர்தர்ஷன் தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது.இதில் தமிழகத்தில் இருந்து இந்த 66 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
அன்றைய தினம் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளை அனைத்து வகை பள்ளிகளிலும் படிக்கும் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தவறாமல் பார்க்க வேண்டும்.என்ற முறையில் அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வரவேண்டும் என சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதனால் ஜனவரி 16 (திருவள்ளூர் தினம் )அன்று ரத்து செய்யப்படுமோ? என்ற சந்தேகம் எழுந்தது. இதனால் அனைத்து தரப்பினர் இடம் பெரும் கண்டங்கள் எழுந்தன.
இதுபற்றி பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறும்போது, பொங்கலுக்கு மறுநாளான ஜனவரி 16-ம்தேதி மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என எந்த கட்டாயம் இல்லை என்றார்.
பிரதமர் மோடியின் பேச்சை மாணவர்கள் வீட்டில் இருந்தே கேட்டு பார்த்துக்கொள்ளலாம். விருப்பமுள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்றே சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது’ என்று அமைச்சர் கூறினார்.
இந்திய விமானப்படை சேவையிலிருந்து மிக்-27 ரக போர் விமானங்கள் விடைபெற்றன. இந்திய விமானப்படையில் தரை தாக்குதலுக்கு பெயர் பெற்றவை மிக்-27 ரக போர் விமானங்கள் கடந்த 40 ஆண்டு காலமாக விமானப்படையில் இந்த விமானப்படை விமானங்கள் சேவையற்றி உள்ளன.
குறிப்பாக 1999 ஆம் ஆண்டு கார்கில் போரின்போது மிக்-27 ரக போர் விமானங்கள் ஆற்றிய சேவை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும் எதிரிகளின் குண்டுகளையும் வீசி அளித்து பெயர் பெற்றவை.
இந்த நிலையில் மிக்-27 போர் விமானங்கள் 40 ஆண்டுகால சேவை பின்னர் இந்திய விமானப்படையில் இருந்து நேற்று ஓய்வு பெற்றன.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்புரில் உள்ள விமானப்படை தளத்தில் மிக்-27 விமானங்களை கொண்ட படைப்பிரிவு பிரிவு இருந்தது இவற்றிற்கு பிரியா விடை அளிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
தென்மேற்கு விமானப் படைத் தலைவர் கலந்து கொண்டார் இந்நிகழ்ச்சியில் அவர் பேசும்போது 1999 ஆம் ஆண்டு கார்கில் போரின்போது மிக்-27 போர் விமானங்கள் முன்னணியில் இருந்து, தங்கள் மதிப்பை நிரூபித்துக் காட்டின, எனக்கூறினார்.