Home Blog Page 5814

உயர்ந்தது ரயில் கட்டணம் !!!

0

ரயில் கட்டணம் நேற்று திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த கட்டண உயர்வு தொடர்பாக  ரயில்வே  நிர்வாகம்  நேற்று  இரவு வெளியிட்டுள்ள  அறிக்கையில்  “குளிர்சாதன வசதி இல்லாத சாதாரண ரயில்களுக்கான கட்டணம் ஒரு கிலோமீட்டருக்கு ஒரு பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது . மெயில் மற்றும் விரைவு ரயில்களில் குளிர்சாதன வசதி இல்லாத படுக்கை வசதியுடன் கூடிய வகுப்பிற்கான கட்டணம் ஒரு கிலோமீட்டருக்கு இரண்டு பைசா உயர்த்தப்பட்டுள்ளது . குளிர்சாதன வசதியுடன் கூடிய கட்டணம் ஒரு கிலோமீட்டருக்கு  நான்கு பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. சதாப்தி, ராஜதானி, துரோந்தோ, உள்ளிட்ட சொகுசு ரயில்களுக்கும் நான்கு பைசா உயர்த்தப்பட்டுள்ளது. முன்பதிவு கட்டணம் மற்றும் அதிவிரைவு கட்டணங்களில் மாற்றம் செய்யப்படவில்லை.

புத்தாண்டில் மாஸ் காட்ட போகும் 4 ராசிக்காரர்கள் !!! 2020 புத்தாண்டு ராசிபலன்.

0

ஒவ்வொரு நாளும், நமக்கு நல்லதாகவே இருக்க வேண்டும், என்ற எண்ணம் இல்லாத மனிதன்  இருக்கவே முடியாது, ஒரு நாளுக்கே இந்த எதிர்பார்ப்பு என்றால், புது வருடம் என்றால் சொல்லவே தேவையில்லை.

புத்தாண்டு பிறக்கயிருக்கும் நிலையில் அனைவரின் மனதிலும் எழும் மிகப்பெரிய கேள்வி, வரும் ஆண்டு நமக்கு எப்படி இருக்கும் ? 

2020ஆம் ஆண்டில் முக்கிய கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் சனிபகவான் தனுசு ராசியில் இருந்து ஆண்டின் முதலில் ஜனவரி 24ஆம் தேதி மகரம் ராசிக்கு நகர்கிறார். மிதுனத்தில் உள்ள ராகு 18.09.2020 அன்று இரவு 8.45 மணி ரிஷப ராசிக்கு நகர்கிறார். தனுசு ராசியில் உள்ள கேது விருச்சிக ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். குருபகவான் தனுசு ராசியில் இருக்கிறார். 2020 மார்ச் 30ஆம் தேதியன்று மகர ராசிக்கு செல்கிறார். ஜூன் 30ஆம் தேதிவரை மகர ராசியில் சஞ்சரிப்பார். பின்னர் வக்ரமடைந்து தனுசு ராசிக்கு வரும் குருபகவான் நவம்பர் வரை தனுசு ராசியில் சஞ்சரிப்பார்.

இந்த கிரஹ மாற்றங்கள் 12 ராசிக்காரர்களுக்கும் பல்வேறு வகையான பலன்களை தர இருக்கிறது. அதிர்ஷ்ட காற்று வீச போகும் 4 ராசிக்காரர்கள் பற்றி பார்ப்போம்.

மேஷம்:

 ராசிக்கு லாப வீடான 11-ம் வீட்டில் இந்த ஆண்டு பிறப்பதால் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். எதையும் தைரியமாகச் செயல்படுத்துவீர்கள். ஆழ்மனத்திலிருந்த பயம் நீங்கும். புது வீட்டில் குடிபுகுவீர்கள். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். சகோதரர் சகோதரிகள் உதவுவார்கள். வழக்கில் வெற்றி உண்டு. பழைய வாகனத்தைத் தந்துவிட்டு புதிய வாகனம் வாங்குவீர்கள். 26.12.2020 வரை சனி பகவான் உங்களின் ராசிக்கு 9-ம் வீட்டில் நிற்பதால் தொட்டது துலங்கும். பயணங்கள் அதிகரிக்கும். குரு உங்களின் ராசிக்கு 9-ம் வீட்டில் நிற்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பிதுர்வழி சொத்துகள் கைக்கு வரும். அயல்நாட்டிலிருக்கும் தோழிகள், உறவினர்களால் அனுகூலம் உண்டு. அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

பரிகாரம் : சனிக்கிழமை சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்து வழிபடலாம்.

மிதுனம்:

 ராசிக்கு 9-ம் வீட்டில் சந்திரன் அமர்ந்திருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் கலங்கிப்போயிருந்த மனத்தில் தெளிவு பிறக்கும். பணவரவு அதிகரிக்கும். அயல்நாடு சென்று வருவீர்கள். தந்தைவழிச் சொத்துகள் கைக்கு வரும். பிள்ளைகளைப் பயிற்சி வகுப்பில் சேர்ப்பீர்கள். 26.12.2020 வரை சனி 7-ம் வீட்டில் நின்று கண்டகச் சனியாக இருப்பதால், கணவன் மனைவி வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். குரு பகவான் 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களைப் பார்ப்பதால் மறைந்துகிடந்த திறமைகள் வெளிப்படும். திருமணம் தள்ளிப்போனவர்களுக்குக் கூடிவரும். கணவர் உங்களின் புத்திசாலிதனத்தைப் பாராட்டுவார். வியாபாரத்தில் விளம்பர யுக்திகளைக் கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். பழைய பாக்கிகளைப் போராடி வசூலிக்க வேண்டிவரும். புதிய இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கட்டளைகளை அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள். சக ஊழியர்களிடம் வளைந்துகொடுத்து போவது நல்லது.

பரிகாரம் : தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபடவும்

சிம்மம்:

ராசியைச் சந்திரன் பார்த்துக்கொண்டிருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் எதிர்பாராத பணவரவு உண்டு. இழந்த செல்வம், செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். மாமனார் மாமியார் வகையில் மகிழ்ச்சி தங்கும். 12.11.2020 வரை குரு உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் நிற்பதால் சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள். 13.11.2020 முதல் வருடம் முடியும் வரை குரு 6-ம் வீட்டிலேயே மறைவதால் வேலைச்சுமை அதிகரிக்கும். ஆகஸ்ட் மாதம் வரை உங்களின் ராசிக்கு 5-ம் வீட்டில் கேது நிற்பதால் பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாக முடியும். பங்குச் சந்தை மூலம் பணம் வரும். செப்டம்பர் மாதத்தில் கேது 4-ம் வீட்டிலும் ராகு 10-ம் வீட்டிலும் இருப்பதால் சில விஷயங்களில் அனுசரித்துப்போவது நல்லது. வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். அதற்கேற்ற பலனும் கிடைக்கும்..

பரிகாரம் : செவ்வாயில் முருகனுக்கு பால் அபிஷேகம்.

கும்பம்:

ராசிநாதன் சனி பகவான் லாப வீட்டில் அமர்ந்திருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் புதிய பொறுப்பும் பதவியும் தேடி வரும். திடீர் யோகம், பணவரவு, அந்தஸ்து வரும். பங்குச் சந்தை மூலம் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளுபடி விற்பனையால் லாபம் கூடும். கடையை விரிவுபடுத்துவது குறித்து யோசிப்பீர்கள். புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். உங்கள் ராசியிலேயே இந்த ஆண்டு பிறந்திருப்பதால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். சிக்கனமாக இருப்பது நல்லது. எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். கணவரின் புது முயற்சிக்குப் பக்கபலமாக இருப்பீர்கள். புதிய தொழில் தொடங்குவீர்கள். வங்கியில் அடமானமாக வைத்திருந்ததை மீட்பீர்கள். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே சென்று திருத்துவது நல்லது. உடல்நலனில் கவனம் செலுத்துங்கள். சக ஊழியர்களிடம் எல்லா ரகசியங்களையும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

பரிகாரம் : பிரதோஷத்தன்று நந்தீஸ்வரர் அபிஷேகம்.

கவர்ச்சியில் அக்காவையே கதரவிடும் தங்கை! வைரலாகும் புகைப்படம்

0

கவர்ச்சியில் அக்காவையே கதரவிடும் தங்கை! வைரலாகும் புகைப்படம்

தமிழ் திரைத்துறையில் தற்போதுள்ள முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் தான் காஜல் அகர்வால். இவர் 2007 ஆம் ஆண்டு வெளியான லஷ்மி கல்யாணம் என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து தொடர்ந்து தமிழ், இந்தி, மலையாளம் என்று பன்மொழிப் படங்களில் முன்னனி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

குறிப்பாக தமிழில் விஜய், கார்த்தி, விஷால் போன்ற பல முன்னணி ஹீரோக்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2-வில் அவருக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார். தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் அழகு பதுமையாக வலம் வரும் காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வாலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர் தெலுங்கில் “ஏமாய்ன்தி ஈ வேலா” என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்.

Kajal Aggarwal Sister Nisha Agarwal Hot Photos-News4 Tamil Latest Kollywood Cinema News in Tamil
Kajal Aggarwal Sister Nisha Agarwal Hot Photos-News4 Tamil Latest Kollywood Cinema News in Tamil

அது தமிழில் “இஷ்டம்” என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்ட வெளியானது. ஆனால் அவர் நடித்த அந்த படம் படுதோல்வியைத் தழுவியது. அந்த படத்தில் நடிகர் விமலுக்கு ஜோடியாக நிஷா அகர்வால் ஹீரோயினாக நடித்திருந்தார். இதனையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் வராததால், மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் நுழைந்து விட்டார். இந்த தம்பதிக்கு இஷான் என்ற மகன் உள்ளார். 

Kajal Aggarwal Sister Nisha Agarwal Hot Photos-News4 Tamil Latest Kollywood Cinema News in Tamil

இந்நிலையில் அக்கா காஜல் அகர்வாலுடன் இணைந்து அவரது தங்கை நிஷா அகர்வாலும் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். இதனையடுத்து அங்கு நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகிறார். சமீபத்தில் அக்கா காஜல் அகர்வால் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் கவர்ச்சி ஆட்டம் போட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. 

கவர்ச்சியில் அக்காவையே கதரவிடும் தங்கை! வைரலாகும் புகைப்படம்

இந்நிலையில் அக்காவுக்கு போட்டியாக அவரது தங்கை நிஷா அகர்வாலும் பிகினி உடையிலிருக்கும் தனது ஹாட்டான போட்டோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அவரது ரசிகர்களை அலற வைத்துள்ளார். கடற்கரையில் கறுப்பு நிற பிகினி உடையில் உல்லாசமாக படுத்திருக்கும் நிஷா அகர்வாலின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி தற்போது அது தாறுமாறாக வைரலாகி வருகிறது.

பான் கார்டு மற்றும் ஆதார் எண் இணைப்பிற்கான காலக்கெடு நீடிப்பு

0

பான் கார்டு மற்றும் ஆதார் எண் இணைப்பிற்கான காலக்கெடு நீடிப்பு

பான் எண் மற்றும் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை எட்டாவது முறையாக நீட்டித்து சிபிடிடி என்ற மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டுள்ளது

இந்த உத்தரவின் படி டிசம்பர் 31 ஆம் தேதியுடன் காலக்கெடு முடிவடையவிருந்த நிலையில் தற்போது அதை நீட்டித்து வரும் 2020 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முன்னதாக பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் முதன் முதலாக கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதியன்று அறிவித்திருந்தது. இதனையடுத்து ஆதார் மற்றும் பான் எண் இணைப்பிற்கான கால அவகாசமானது பல முறை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆதார் அட்டை வழங்குவதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வருமான வரி செலுத்துவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்றும் தீர்ப்பளித்தது.

மேலும் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யும் போது, பான் எண்ணுக்குப் பதிலாக சம்பந்தப்பட்டவரின் ஆதார் எண்ணைக் குறிப்பிட்டால் போதுமானது என்று மத்திய பொது பட்ஜெட்டில் கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதனால் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மேலும் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

ரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு: ரயில்வே அமைச்சகம் அதிரடி அறிவிப்பு

0

ரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு: ரயில்வே அமைச்சகம் அதிரடி அறிவிப்பு

நாளை ஜனவரி 1 ஆம் தேதி முதல் ரயில் டிக்கெட் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

முன்னதாக புறநகர் ரயில்களைத் தவிர்த்து ரயில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. அந்த வகையில் இந்த கட்டண உயர்வானது இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட மந்தநிலை ரயில்வே துறையிலும் எதிரொலித்துள்ளது. இதனால் ஏப்ரல் முதல் அக்டோபர் முதல் வரையிலுள்ள நடப்பு நிதியாண்டில் ரயில்வேக்கு ரூ.19 ஆயிரத்து 412 கோடி தான் சரக்கு போக்குவரத்தில் வருவாயாக கிடைத்துள்ளது. இந்த வருவாய் ரயில்வே திட்டமிட்டதைக் காட்டிலும் மிகக்குறைவு என்று கூறபடுகிறது.

மேலும் ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் கட்டணம் மூலம் வரும் வருமானமும் உயரவில்லை என்று கூறப்படுகிறது. ஏறக்குறைய ரூ.1.18 லட்சம் கோடி வரை எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வெறும் ரூ.99 ஆயிரத்து 223 கோடி மட்டுமே இதன் மூலமாக கிடைத்துள்ளது என்று கூறப்படுகிறது.

ஆனால், முன்னதாக செலவிற்காக ரூ.97 ஆயிரத்து 265 என மதிப்பிடப்பட்டிருந்த நிலையில் தற்போது கூடுதலாக ரூ.4 ஆயிரத்து 99 கோடி வரை செலவாகியுள்ளது. இதனால் வழக்கமான பயணிகள் இயக்கத்துக்கான செயல்பாட்டிற்கான இயக்க செலவைக் கூட சமாளிக்க முடியாமல் ரயில்வே துறையானது திணறி வருவதாக கூறப்படுகிறது. இதனால் விரைவில் பயணிகள் டிக்கெட் கட்டணம் மற்றும் சரக்குக் கட்டணத்தையும் குறிப்பிட்ட அளவு உயர்த்த ரயில்வே துறை ஆலோசித்து வந்ததாகத் தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்நிலையில், புத்தாண்டு நாளை பிறப்பதையொட்டி பயணிகள் ரயில் கட்டணத்தை அதிரடியாக ரயில்வே துறை உயர்த்தியுள்ளது. இந்தக் கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருகிறது. இதன்படி, புறநகர் ரயில்கள், புறநகர் ரயில்கள் சீசன் டிக்கெட் ஆகியவற்றின் கட்டணம் ஏதும் உயர்த்தப்படவில்லை. கட்டண உயர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரயில்வே துறை வெளியிட்டுள்ள தனது அறிக்கையில், ” ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளை அதிகப்படுத்துதல், நவீனப் பெட்டிகள் உருவாக்குதல் ஆகியவற்றின் மூலமாக பயணிகளுக்கு நிறைய வசதிகளை ரயில்வே துறையானது செய்து வருகிறது. ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையால் ரயில்வே துறைக்கு ஏற்பட்ட செலவைக் குறைக்க வேண்டும் என்பதற்காக கட்டணம் குறைந்த அளவு உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக எந்த வகுப்புப் பயணிகளையும் பாதிக்காத வகையில் கட்டண உயர்வானது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது” என்றும் அறிவித்துள்ளது.

புறநகர் அல்லாத மற்ற பயணிகள் ரயில் கட்டணமானது கிலோ மீட்டருக்கு ஒரு பைசா என்ற அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது இதன் மூலமாக குளிர்சாதன வசதி அல்லாத 2 ஆம் வகுப்பு அமர்வு, 2 ஆம் வகுப்பு படுக்கை வசதி, முதல் வகுப்பு ஆகியவற்றுக்கு கிலோ மீட்டருக்கு ஒரு பைசா என்ற கணக்கில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது

அதே போல மெயில் ,எக்ஸ்பிரஸ் குளிர்சாதன வசதி அல்லாத 2 ஆம் வகுப்பு அமர்வு, 2 ஆம் வகுப்பு படுக்கை வசதி மற்றும் முதல் வகுப்பு ஆகியவற்றின் டிக்கெட் கட்டணமும் கிலோ மீட்டருக்கு 2 பைசா என்ற அளவில் இதன் மூலமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அடுத்ததாக குளிர்சாதன வகுப்புகளில் ஏ.சி. சேர் கார், ஏ.சி.3 அடுக்கு படுக்கை வசதி, ஏசி 2 படுக்கை வசதி மற்றும் ஏசி முதல் வகுப்பு போன்றவற்றின் டிக்கெட் கட்டணம் கிலோ மீட்டருக்கு 4 பைசா என்ற அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் சதாப்தி, ராஜ்தானி மற்றும் துரந்தோ உள்ளிட்ட ரயில்களின் டிக்கெட் கட்டணமும் இதன் மூலமாக உயர்த்தப்படுகிறது.

கடந்த 2014-15 ஆம் ஆண்டில் தான் கடைசியாக அனைத்து வகுப்புகளுக்கும் பயணிகள் கட்டணம் 14.2 சதவீதம் உயர்த்தப்பட்டது. மேலும் சரக்குக் கட்டணமும் 6.5 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. அதன் பின்னர் ரயில்வே கட்டணம் எதுவும் நேரடியாக உயர்த்தப்படவில்லை.

இதற்கு மாறாக பிளக்ஸி பேர் என்ற திட்டம் கொண்டு வரப்பட்டு அதன் மூலமாக ஒரு சில குறிப்பிட்ட ரயில்களில் மட்டும் கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் மூலமாக சுவிதா எஸ்பிரஸ், வந்தே பாரத் மற்றும் தேஜாஸ் போன்றவற்றில் மற்ற ரயில்களைக் காட்டிலும் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது.

ஒருபக்கம் ஆதரவு மறுபக்கம் எதிர்ப்பு! பாமக பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானம்

0

ஒருபக்கம் ஆதரவு மறுபக்கம் எதிர்ப்பு! பாமக பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானம்

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 31 ஆம் தேதி பாமக சார்பாக புத்தாண்டு பொதுக்குழுவை நடத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறது. அந்த வகையில் இந்த புத்தாண்டிற்கான பொதுக்குழு இன்று திண்டிவனம் – புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் ஓமந்தூரில் உள்ள ‘பிரவாஸ் பேலஸ்’ அரங்கில் நடைபெற்றது.

இன்று நடைபெற்ற இந்த பொதுக்குழுவில் ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வேண்டும், என்.ஆர்.சி.யை தமிழ்நாட்டில் அமல்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக தமிழகத்தில் “தேசிய மக்கள் பதிவேடு” திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்றும் பாமகவின் இந்த பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் வாக்களித்து அது சட்டமாக நிறைவேற உதவிய நிலையில் “தேசிய மக்கள் பதிவேடு” திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்று நடைபெற்ற பாமகவின் பொதுகுழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவது.

தீர்மானம் 1 : ஈழத்தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும்

நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. தமிழ்நாட்டில் வாழும் ஈழத்தமிழர்கள் அனைத்து வசதிகளுடன் கல்வி மற்றும் வேலைவாய்ப்புரிமை பெற்று கண்ணியத்துடன் வாழ வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும்.

ஈழத்தமிழர்களைப் பொருத்தவரை இந்தியாவில் குடியுரிமை பெற்று விட்டால், அதன்பின்னர் ஈழத்திற்கு திரும்ப முடியாது; தங்களின் தாயகமான ஈழத்தை நிரந்தரமாக இழந்து விடுவோம் என அஞ்சுகின்றனர். அதனால் தான் ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளுக்கு சென்றவர்களில் பெரும்பான்மையானோர் இன்னும் குடியுரிமை பெறாமல் வசிக்கின்றனர். அதேநேரத்தில் என்றாவது ஒரு நாள் தாயகம் திரும்ப இயலும் என்று நினைக்கும் ஈழத்தமிழர்கள், அதுவரை தமிழகத்தில் தாங்கள் கண்ணியமாக வாழ்வதற்கு ஏற்ற வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்று கோருகின்றனர். அதனால் தான் ஈழத்தமிழர்களை பொறுத்தவரை அவர்களுக்கு எத்தகைய குடியுரிமை வேண்டும் என்பதை, அவர்களின் விருப்பம் அறிந்து அதற்கேற்றவாறு தீர்மானிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.

ஈழத்தமிழர்கள் தங்களின் சொந்த நாட்டு குடியுரிமையை இழக்காமல் தமிழகத்தில் கண்ணியத்துடனும், மதிப்புடனும் வாழ்வதை உறுதி செய்ய சிறந்த வழி அவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவது தான். இலங்கையைச் சேர்ந்தவர்கள் இன்னொரு நாட்டில் குடியுரிமை பெற்றால் அவர்களின் இலங்கை குடியுரிமை தானாக ரத்தாகி விடும். அதே நேரத்தில் இதுதொடர்பாக இலங்கையுடன் இருதரப்பு ஒப்பந்தம் செய்து கொள்ளும் நாடுகள் இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க முடியும். இலங்கை அதிபராக உள்ள கோத்தபாய இரஜபக்சே கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை இலங்கையிலும், அமெரிக்காவிலும் குடியுரிமை பெற்று அமெரிக்காவில் வாழ்ந்து வந்தார். இப்போது அமெரிக்கக் குடியுரிமையை ரத்து செய்து விட்டு இலங்கை அதிபர் ஆகியிருக்கிறார். அதேபோல், ஈழத்தமிழர்களும் இந்தியா மற்றும் இலங்கையில் விருப்பத்திற்கேற்ப வாழ வகை செய்ய முடியும்.

அதற்கு வசதியாக, இலங்கை அரசுடன் இருதரப்பு ஒப்பந்தம் செய்து கொண்டு, ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவில் இரட்டைக் குடியுரிமை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 2 : தமிழகத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை செயல்படுத்தக்கூடாது!

உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி அஸ்ஸாம் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens -NRC) திட்டம் இந்தியா முழுவதும் நீட்டிக்கப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியா முழுவதும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை (National Population Register -NPR) மேம்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பதே தேசிய குடிமக்கள் பதிவேட்டை தயாரிப்பதற்கான முன்னோட்டம் தான் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக மக்கள் மத்தியில் நிலவும் ஐயங்கள் அனைத்தும் போக்கப்பட வேண்டும்.

தமிழ்நாடு பிற நாடுகளுடன் நில எல்லையை பகிர்ந்து கொள்ளும் மாநிலம் அல்ல. அதனால் பிறநாட்டு மக்கள் தமிழ்நாட்டுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவும் வாய்ப்பு இல்லை. இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்த ஈழத்தமிழர்கள் அனைவரின் விவரங்களும் அரசிடம் உள்ளன. இதனால், தமிழ்நாட்டில் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை செயல்படுத்துவதற்கான தேவை இல்லை. அதுமட்டுமின்றி, தமிழகத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை தயாரித்தால் அது தமிழக மக்களிடம் தேவையற்ற அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தும். எனவே, தமிழ்நாட்டில் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தக்கூடாது என்று இக்கூட்டம் கோருகிறது.

தீர்மானம் 3 : தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும்; அதற்காக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்!

இந்தியா முழுவதும் சமூகநீதி குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. தேசிய அளவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன. அதையேற்று சத்தீஸ்கர் மாநிலத்தில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 14 விழுக்காட்டிலிருந்து 27% ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால் அம்மாநிலத்தில் மொத்த இடஒதுக்கீட்டின் அளவு வேறெங்கும் இல்லாத அளவுக்கு 82 விழுக்காடு ஆக உயர்ந்துள்ளது. மராட்டியம், ஹரியானாவிலும் தமிழகத்தை விட அதிகமாக முறையே 78%, 70% இட ஒதுக்கீடு உள்ளது.

தமிழ்நாட்டிலும் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் இடஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது. அதற்கு செயல்வடிவம் கொடுப்பதற்கான நேரம் இப்போது வந்துவிட்டது. தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டின் அளவை தீர்மானிக்க சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும்படி உச்சநீதிமன்றமும் ஏற்கனவே ஆணையிட்டிருக்கிறது. ஆகவே, உச்சநீதிமன்ற அறிவுறுத்தலை நிறைவேற்றும்படியும், சமூக நீதியை வலுப்படுத்தும் வகையிலும் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி அதன்படி இடஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்கும்படி மாநில அரசை பா.ம.க. சிறப்பு பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 4 : மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடு தேவை

இந்தியாவில் மாநில அரசுகளுக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களில் 15 விழுக்காடும், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களில் 50 விழுக்காடும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. இந்த இடங்கள் அனைத்தும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குனர் அலுவலகத்தால் நிரப்பப்படுகிறது. இந்த இடங்களில் பட்டியலினத்தவர், பழங்குடியினர், உயர்வகுப்பு ஏழைகள் ஆகியோருக்கு முறையே 15%, 7.5%, 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் நிலையில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் மட்டும் 27% இடஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. இது பெரும் அநீதி.

தமிழ்நாட்டிலிருந்து அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளிலேயே இருந்திருந்தால் 69% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இடங்கள் நிரப்பப்பட்டிருக்கும். அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் குறைந்தபட்சம் மத்திய அரசின் 59.5% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்பட்டு, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்க வேண்டும். மத்திய அரசு கல்வி நிறுவனங்களின் இந்த ஒதுக்கீடு வழங்கப்படும் நிலையில் தேசிய ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டும் இந்த ஒதுக்கீடு மறுக்கப்படுவது நியாயமற்றது.

இதுதொடர்பாக மத்திய அரசுக்கு மருத்துவர் அய்யா அவர்களும், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களும் பலமுறை கடிதம் எழுதியும் எந்த பயனும் இல்லாதது மிகவும் வருத்தமளிக்கிறது. எனவே, இந்த விஷயத்தில் பிரதமர் அவர்கள் உடனடியாக தலையிட்டு, அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க ஆணையிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 5 : காவிரி – கோதாவரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்!

தமிழ்நாட்டின் முக்கிய பாசன ஆதாரமாக திகழ்வது காவிரி ஆறு ஆகும். தமிழகத்தின் 14 மாவட்டங்களில் சுமார் 30 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன ஆதாரமாகவும், 20 மாவட்டங்களைச் சேர்ந்த 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் காவிரி ஆறு திகழ்கிறது.ஆனால், பருவமழை சரியாக பெய்யாததாலும், கர்நாடகத்துடனான காவிரி சிக்கல் காரணமாகவும் காவிரியில் தண்ணீர் வருவது கணிக்க முடியாததாக உள்ளது. குறித்த காலத்தில் காவிரியில் தண்ணீர் வராததால் காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த 8 ஆண்டுகளில் ஒருமுறை கூட குறுவை சாகுபடி செய்யப் படவில்லை. இதனால் காவிரி பாசன மாவட்டங்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடன் சுமையை தாங்கிக் கொள்ள முடியாமல் உழவர்கள் தற்கொலை செய்வது வாடிக்கையாகிவிட்டது.

காவிரி ஆற்றை வற்றாத ஜீவநதியாக மாற்றுவதற்கு சிறந்த வழி கோதாவரி -காவிரி இணைப்பு ஆகும். கோதாவரி ஆற்றில் ஒவ்வொரு ஆண்டும் 1100 டி.எம்.சி. நீர் வீணாக கடலில் கலக்கும் நிலையில், அதில் ஒரு பகுதியை காவிரியில் திருப்புவதன் மூலம் காவிரி பாசன மாவட்டங்களை மீண்டும் வளம் கொழிக்கும் பகுதியாக மாற்ற முடியும். காவிரியில் வரும் கோதாவரி நீரை குண்டாறு திட்டத்துடன் இணைப்பதன் மூலம் தென் மாவட்டங்களும் பயனடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் நேரில் வலியுறுத்திய பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களுக்கும், பிரதமரிடமும், நாடாளுமன்ற இரு அவைகளிலும் இந்தத் திட்டத்தை வலியுறுத்தி வரும் பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கும் பா.ம.க. பொதுக்குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது. மிகவும் அற்புதமான இத்திட்டத்தை வரும் 2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பொது நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பதுடன், அதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்யும்படியும் பா.ம.க. பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 6 : தமிழ்நாட்டில் ரூ. 1 லட்சம் கோடியில் நீர்ப்பாசனப் பெருந்திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்க வேண்டும்!

தமிழ்நாடு இயல்பாகவே தண்ணீர் பற்றாக்குறை உள்ள மாநிலமாகும். தமிழகத்தில் ஓடும் நதிகளில் தாமிரபரணியைத் தவிர மற்ற ஆறுகளின் தண்ணீருக்காக பிற மாநிலங்களைத் தான் நம்பியிருக்க வேண்டியுள்ளது. இத்தகைய சூழலில் பாசனத் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் தான் வேளாண்மையை சிறப்பாக செய்ய முடியும். ஆனால், இந்தியாவிலேயே போதிய அளவில் நீர்ப்பாசனக் கட்டமைப்புகள் குறைவாக உள்ள மாநிலம் தமிழ்நாடு என்பது தான் கவலையளிக்கும் உண்மையாகும்.

பாசனக் கட்டமைப்புகளில் தமிழகத்தை விட மிகவும் மோசமான நிலையில் இருந்த ஆந்திரம், மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கடந்த சில ஆண்டுகளில் வியக்கத்தக்க வகையில் பாசனத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மத்தியப் பிரதேசத்தில் 94,55,000 ஹெக்டேர் பரப்பளவிலும், இராஜஸ்தானில் 76,50,000 ஹெக்டேர் பரப்பளவிலும் பாசன வசதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் இன்று வரை பாசன வசதி பெற்ற நிலங்களின் பரப்பளவு 26,79,000 ஹெக்டேர் மட்டும் தான்.

தமிழ்நாட்டில் நீடித்த விவசாயம் செய்ய இப்போதுள்ள பாசனப் பரப்பை மும்மடங்காக உயர்த்த வேண்டும். முதல்கட்டமாக தமிழகத்தின் பாசனப்பரப்பை 50 லட்சம் ஹெக்டேராக விரிவுபடுத்த வேண்டும். அதற்குத் தேவையான நீர்ப்பாசன பெருந்திட்டத்தை ரூ. 1 லட்சம் கோடியில் அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தி முடிக்க மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்க வேண்டும் என்று பா.ம.க. கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 7 : தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஹைட்ரோ-கார்பன் திட்டங்களை ரத்து செய்யவேண்டும்

தமிழ்நாட்டிற்கும், காவிரி பாசன மாவட்டங்களுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்திருப்பவை ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் ஆகும். தமிழ்நாட்டில் இதுவரை 4 ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதுடன், விரைவில் 1863.24 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மேலும் இரு ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவுள்ளது.. இவற்றையும் சேர்த்தால் தமிழகத்தில் 5000 சதுர கி.மீ பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அரசு அனுமதி அளித்திருக்கும்.

காவிரி பாசன மாவட்டங்களில் மட்டும் 5000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால், காவிரி பாசன மாவட்டங்களும், கடலூர், விழுப்புரம் மாவட்டமும் பாலைவனமாவதை தடுக்க முடியாது. அதுமட்டுமின்றி, சுற்றுச்சூழலுக்கும் கடுமையான பாதிப்புகள் ஏற்படும். அதனால் ஏற்படும் மாற்றங்களால் தமிழகம் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

காவிரி டெல்டாவுக்கு இணையான வளம் கொண்ட நைஜீரியாவின் நைஜர் டெல்டாவில் இத்தகைய ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதால் அங்கு உழவுத்தொழில் அழிந்தது. எண்ணெய் வளத்துடன், உழவர்களின் வாழ்வாதாரமும் சுரண்டப்பட்டது. இதனால் அங்கு அறிவிக்கப்படாத உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அதேபோன்ற நிலை தமிழகத்திலும் ஏற்படுவதை தடுக்க காவிரி பாசன மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட அனைத்து ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும் கைவிட வேண்டும் என்று மத்திய அரசை பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 8 : காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்!

காவிரி படுகைக்கு ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் மட்டுமின்றி வேறு சில அச்சுறுத்தல்களும் உள்ளன. கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 45 கிராமங்களில் 53 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டை பகுதியில் மிகப்பெரிய அளவில் சாயப் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. நரிமனம் பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அதன் இப்போதைய திறனை விட 10 மடங்கு அதிக அளவுக்கு விரிவாக்கம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக 600 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மத்திய அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, காவிரி பாசன மாவட்டங்களையொட்டிய கடலோரப் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட அனல் மின்னுற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. சுற்றுச்சூழலைக் கெடுக்கும் இந்தத் திட்டங்கள் அனைத்தும் செயல்பாட்டுக்கு வந்தால் காவிரி பாசன மாவட்டங்கள் நெற்களஞ்சியமாக இருக்காது; மாறாக எண்ணெய்க் கிணறுகள் நிறைந்த பாலைவனமாக மாறிவிடும். அப்படி ஒரு நிலை ஏற்படாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு அரசுகளுக்கு உள்ளது. எனவே, காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப் பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும்படி மத்திய, மாநில அரசுகளை பா.ம.க. பொதுக்குழு கோருகிறது.

தீர்மானம் 9 : பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களுக்கு உடனடி விடுதலை அல்லது காலவரையற்ற பரோல் வழங்க வேண்டும்

இராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. அதனடிப்படையில் 7 தமிழர்களையும் விடுதலை செய்ய ஆளுனருக்கு பரிந்துரை செய்து தமிழக அமைச்சரவை கடந்த 09.09.2018 அன்று தீர்மானம் நிறைவேற்றியது. அதன் பின்னர் இன்று வரை 479 நாட்களாகிவிட்ட நிலையில் இதுவரை அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை.

மிக எளிதில் முடிவெடுக்கக்கூடிய இவ்விஷயத்தில் காரணமே இல்லாமல் காலதாமதம் செய்யப்படுவதும், தமிழர்களை விடுதலை செய்வதில் தமக்கு உடன்பாடில்லை என்று தமிழக ஆளுனர் அதிகாரப்பூர்வமற்ற முறையில் கூறிவிட்டதாக செய்திகள் வெளியாவதும் கவலையளிக்கின்றன. ஒரு மாநிலத்தின் ஆளுனராக இருப்பவர் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு, சட்டத்தின் அடிப்படையில் தான் முடிவெடுக்க வேண்டும். அதன்படி, 7 தமிழர்களை விடுதலை செய்ய ஆளுனர் ஆணையிட வேண்டும்.

7 தமிழர்கள் விடுதலை பற்றி முடிவெடுப்பதில் ஆளுனர் மாளிகை காலதாமதம் செய்தால், 29 ஆண்டுகளாக சிறையில் வாடும் தமிழர்களுக்கு தற்காலிக நிவாரணம் வழங்கும் வகையில் அவர்களுக்கு நீண்டகால பரோல் வழங்குவதற்கான வாய்ப்புகளை ஆராயும்படி தமிழக அரசை பா.ம.க. கேட்டுக்கொள்கிறது.

PMK General Council Meeting Today-News4 Tamil Latest Online Tamil News Today
PMK General Council Meeting Today-News4 Tamil Latest Online Tamil News Today

தீர்மானம் 10 : புவிவெப்பமயமாதலை கட்டுப்படுத்த காலநிலை அவசரநிலையை பிரகடனம் செய்க!

காலநிலை மாற்றமும், அதன்விளைவாக புவிவெப்பநிலை உயர்ந்து வருவதும் இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறது. 150 ஆண்டுகளுக்கு முன் 14 டிகிரி செல்சியசாக இருந்த பூமியின் சராசரி வெப்பநிலை தொழில்புரட்சிக்குப் பிறகு இப்போது 15.1 டிகிரி செல்சியசாக உயர்ந்துள்ளது. ஒரு டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை அதிகரித்ததற்கே மிகப்பெரிய அளவில் இயற்கை பேரழிவுகளை உலகம் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலை கட்டுப்படுத்தப்படாவிட்டால் எந்த நேரமும், எந்தவகையான பேரழிவும் நம்மை தாக்கும் ஆபத்து உள்ளது.

தமிழ்நாட்டில் பேரழிவுகள் ஏற்படுவதற்காக அறிகுறிகள் கடந்த சில ஆண்டுகளாக தென்படத் தொடங்கியுள்ளன. இவற்றைத் தடுக்க வேண்டுமானால், உலகின் சராசரி வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்த வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை 2030-ஆம் ஆண்டுக்குள் செய்து முடிக்க வேண்டும். இந்த விஷயத்தில் உலகின் பல நாடுகள் அலட்சியமாக இருந்தாலும் கூட, ஐரோப்பிய நாடுகள் புவிவெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வசதியாக காலநிலை நெருக்கடி நிலையை பிரகடனம் செய்துள்ளன. அதேபோல், நமது மத்திய, மாநில அரசுகளும் காலநிலை நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்த வேண்டும்; காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தும்படி பா.ம.க. வலியுறுத்துகிறது.

தீர்மானம் 11 : தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்!

இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் தரமான சாலைகளை அமைக்க வேண்டும்; அதற்கான செலவை அச்சாலைகளை பயன்படுத்துவோரிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் இந்தியாவில் சுங்கக்கட்டண சாலைகள் உருவாக்கப்பட்டன. ஆனால், இப்போது அந்த சாலைகள் வாகன உரிமையாளர்களை சுரண்டும் சாலைகளாக மாறிவிட்டன.

தமிழ்நாட்டில் 45 சுங்கக் கட்டண சாலைகள் உள்ளன. இவற்றில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ள பல சுங்கக்கட்டண சாலைகளில், அவற்றை அமைப்பதற்காக செய்யப்பட்ட முதலீடு பல ஆண்டுகளுக்கு முன்பே திரும்ப எடுக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. அவ்வாறு எடுக்கப்பட்ட சாலைகளில் பராமரிப்பு செலவுகளுக்காக 40% கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய விதிகள் தெரிவிக்கின்றன. ஆனால், அந்த சாலைகளில் முதலீடு இன்னும் எடுக்கப்படவில்லை என்று கூறி, முழுமையான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது பெரும் அநீதி ஆகும். இந்த அநீதியைப் போக்கும் வகையில் அனைத்து சுங்கச்சாலைகளிலும், அவை அமைக்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டிருக்கிறது என்பதை வசூல் தணிக்கை மூலம் கண்டறிந்து, முதலீடு எடுக்கப்பட்ட சாலைகளில் சுங்கக்கட்டணத்தை ரத்து செய்து, பராமரிப்பு செலவுகளுக்கான கட்டணத்தை மட்டும் வசூலிக்க அரசு ஆவண செய்ய வேண்டும்.

சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் சாலைகளில் பராமரிப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுவதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றமே கண்டனம் தெரிவித்துள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியும் இதை பல தருணங்களில் சுட்டிக்காட்டியிருப்பதுடன், போராட்டங்களையும் நடத்தியுள்ளது. இத்தகைய சாலைகள் முழுமையாக சீரமைக்கப்படும் வரை, அவற்றில் 50% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 12 : தமிழ்நாட்டில் தனியார்துறை வேலைவாய்ப்புகளில் 80% உள்ளூர் ஒதுக்கீடு தேவை

தமிழ்நாட்டில் அரசு மற்றும் பொதுத்துறை வேலைவாய்ப்புகள் வெகுவாக குறைந்து விட்டன. தமிழகத்தில் உள்ள மத்திய அரசு மற்றும் மத்திய பொதுத்துறை பணிகளில் பெரும்பாலானவற்றை வட இந்தியர்கள் சட்ட விரோதமாக கைப்பற்றி வரும் நிலையில், அமைப்பு சார்ந்த தனியார்துறை வேலைவாய்ப்புகளாவது மண்ணின் மைந்தர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆனால், தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளிலும் வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஊடுருவது அதிகரித்து வருகிறது.

இத்தகைய நிலை ஏற்படுவதை தடுப்பதற்காகத் தான் 21 ஆண்டுகளுக்கு முன் 1998-ஆம் ஆண்டு மறைமலைநகர் ஃபோர்டு மகிழுந்து நிறுவனத்தில் உள்ளூர் மக்களுக்கே வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மருத்துவர் அய்யா அவர்கள் போராட்டம் நடத்தினார். மருத்துவர் அய்யா அவர்கள் அப்போது நடத்திய போராட்டத்திற்கான காரணங்கள் இப்போதும் சற்றும் மாறாமல் அப்படியே உள்ளன.

இந்தியாவில் ஆந்திரா, கர்நாடகம், மராட்டியம், குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தனியார் துறை வேலைவாய்ப்புகளில் அதிகபட்சமாக 80% வரை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலும் மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய இத்தகைய சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. எனவே, தமிழ்நாட்டில் தனியார்துறை வேலைவாய்ப்புகளில் 80 விழுக்காட்டை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்குவதற்கான சட்டத்தை தமிழக அரசு சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.

அதேபோல், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களின் சி மற்றும் டி பிரிவு பணியிடங்களையும் பொதுத்துறை நிறுவனங்களில் தொழிலாளர் நிலை பணியிடங்களை முழுக்க முழுக்க தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யவும் மத்திய அரசு முன்வர வேண்டும் என்று பா.ம.க. கோருகிறது.

தீர்மானம் 13 : படிப்படியாக முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த நடவடிக்கை வேண்டும்!

மது அரக்கனால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முதன்மையானது தமிழ்நாடு ஆகும். மது விற்பனையால் கிடைக்கும் வருமானத்தை மட்டும் தான் அரசு எந்திரம் பார்க்கக்கூடாது. மாறாக, மதுவால் குடும்பங்களில் ஏற்படும் சீரழிவுகள், உற்பத்தித் திறன் இழப்பு, பொருளாதார பின்னடைவு, குற்றங்கள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து தான் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் கவலைப்பட வேண்டும்.

குடும்ப அளவிலும், தேசிய அளவிலும் மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட நாளில் இருந்தே வலியுறுத்தி வருகிறது. கட்டுப்பாடு இல்லாமல் மது விற்கப்படுவதன் விளைவாக பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பயிலும் மாணவர்கள் மட்டுமின்றி சில மாணவிகளும் கல்வி நிறுவன வளாகத்திலேயே மது அருந்துவதும், மயங்கி விழுவதும் வாடிக்கையாக மாறிவிட்டது. இது யாருக்கும் பெருமை அளிக்கும் செயல் அல்ல. இத்தகைய சீரழிவுகளை கட்டுப்படுத்தும் நோக்குடன், காலவரையறை நிர்ணயித்து படிப்படியாக முழுமதுவிலக்கை நடைமுறைப்படுத்த பா.ம.க. வலியுறுத்துகிறது.

தீர்மானம் 14 : புதிய மாவட்டங்களை உருவாக்க குரல் கொடுத்து வெற்றி பெற்ற மருத்துவர் அய்யா அவர்களுக்கு நன்றி!

சிறியதே அழகு (Small is Beautiful) என்ற தத்துவத்தின் அடிப்படையில் தமிழகத்திலுள்ள பெரிய மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அதையேற்று விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து கள்ளக்குறிச்சி என்ற புதிய மாவட்டமும், வேலூர் மாவட்டத்தைப் பிரித்து திருப்பத்தூர், இராணிப்பேட்டை ஆகிய இரு புதிய மாவட்டங்களும், காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டு மாவட்டமும், திருநெல்வேலியிலிருந்து தென்காசி மாவட்டமும் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் புதிய மாவட்டம் பிரிக்கப்பட்ட பகுதிகள் இனிவரும் காலங்களில் சிறப்பான வளர்ச்சி பெறக்கூடும்.

அந்த வகையில் புதிய மாவட்டங்களை உருவாக்க குரல் கொடுத்து வெற்றி பெற்ற பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களுக்கும், புதிய மாவட்டங்களை பிரிக்க ஆணையிட்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் இப்பொதுக்குழு பாராட்டுதல்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது. மாவட்ட மறுவரையறை பணிகளை இத்துடன் நிறுத்தாமல் 12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம் என்ற பெயரில் புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என பாமக கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 15 : விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றியைத் தேடிக்கொடுத்த மருத்துவர் அய்யா, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோருக்கு பாராட்டுகள்!

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தல் பாட்டாளி மக்கள் கட்சி அங்கம் வகிக்கும் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு மிகவும் முக்கியமானவையாக அமைந்தன. மக்களவைத் தேர்தலில் மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து வெற்றி பெற்றதைப் போலவே, இடைத்தேர்தலிலும் பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து வெற்றி பெற திமுக துடித்தது. அதன் ஒரு கட்டமாக தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரும்போது வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று கூறி விக்கிரவாண்டி மக்களை ஏமாற்றுவதற்கு திமுக முயன்றது. ஆனால், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் விஷயத்தில் திமுக செய்த துரோகங்களையும், வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்த போது அதை திமுக அரசு நிறைவேற்ற மறுத்ததையும் மருத்துவர் அய்யா அவர்கள் ஆதாரங்களுடன் விளக்கி கூறினார். இதனால் திமுகவின் முகமூடி கிழிந்தது.

பா.ம.க. இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களும் தொகுதி முழுவதும் தீவிர பரப்புரை மேற்கொண்டு திமுகவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தினார். அதன் பயனாகவும், பா.ம.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் களப்பணி காரணமாகவும் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 44,782 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் மூலம் விக்கிரவாண்டி பாட்டாளி மக்கள் கட்சியின் கோட்டை என்பதை நிரூபித்த மருத்துவர் அய்யா அவர்களுக்கும், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கும் இப்பொதுக்குழு நன்றி தெரிவிக்கிறது.

தீர்மானம் 16 : உள்ளாட்சித் தேர்தலில் நல்லாட்சி அமைய வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி!

தமிழ்நாட்டில் 2016-ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் நீதிமன்ற வழக்குகள் காரணமாக தாமதமாயின. 3 ஆண்டுகள் தாமதத்திற்குப் பிறகு 27 மாவட்டங்களில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தவிர மீதமுள்ள 515 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், 5067 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் உள்ளிட்ட 73,405 பதவிகளுக்கு கடந்த 27 மற்றும் 30-ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சியினருக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும், களப்பணியாற்றிய அதிமுக, பா.ம.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் பா.ம.க. புத்தாண்டு பொதுக்குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 17 : புதுச்சேரிக்கு முழுமையான மாநிலத் தகுதி வழங்க சட்டம் இயற்ற வேண்டும்!

இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடைபெறும் இரு யூனியன் பிரதேசங்களில் புதுச்சேரியும் ஒன்றாகும். ஆனால், 1963-ஆம் ஆண்டில் தொடங்கி இன்று வரை அடிப்படை கட்டமைப்பை உருவாக்குதல், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துதல், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட சேவைகளை வழங்குவதற்கு தேவையான நிதி உள்ளிட்ட ஆதாரங்கள் இல்லாமல் புதுவை அரசு திணறி வருகிறது.

புதுவை துணை நிலை ஆளுனருக்கும், முதலமைச்சருக்கும் இடையிலான இணக்கமற்ற சூழலால் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, புதுவை யூனியன் பிரதேசம் மோசமான பின்னடைவுகளை சந்தித்து வருகிறது. இந்நிலை மாற்றப்பட்டு, புதுவை வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வேண்டும் என பா.ம.க. விரும்புகிறது.

புதுவைக்கு முழுமையான மாநிலத் தகுதி வழங்குவதன் மூலம் தான் இச்சிக்கலுக்கு தீர்வு காண முடியும். புதுவையை மாநிலமாக்க வேண்டும் என்பது தான் புதுவை மாநில மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பும் ஆகும். எனவே, நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி, அதன் மூலம் புதுவைக்கு முழுமையான மாநிலத்தகுதி வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று பா.ம.க. பொதுக்குழு கோருகிறது.

தீர்மானம் 18 : 2020-ஆம் ஆண்டை அன்புமணி தம்பிகள் படை, அன்புமணி தங்கைகள் படைகளை வலுப்படுத்தும் ஆண்டாக கடைபிடிக்க உறுதி!

பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு பொதுக்குழு கூட்டங்களில் 2018-ஆம் ஆண்டு இளைஞர்கள் எழுச்சி ஆண்டாகவும், 2019-ஆம் ஆண்டை அரசியல் விழிப்புணர்வு ஆண்டாகவும் அறிவிக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இவற்றின் காரணமாக அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்தக்கட்டமாக அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு இளைஞர் சக்தியை தயார்படுத்தும் பணிகளை பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கியுள்ளது. இதற்காக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் வழிகாட்டுதலில் உருவாக்கப்பட்டுள்ள அன்புமணி தம்பிகள் படை, தங்கைகள் படை, மக்கள்படை ஆகியவற்றை வலுப்படுத்துவது என்று பா.ம.க. சிறப்பு பொதுக்குழு உறுதியேற்கிறது.

அன்புமணி தம்பிகள் படை, தங்கைகள் படை, மக்கள்படை ஆகியவற்றுக்கு முறையாக பயிற்சிகள் அளிப்பது, ஆலோசனைகள் வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் அன்புமணி படைகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை பா.ம.க. பொதுக்குழு தெரிவித்துக் கொள்கிறது.

இந்த வேடத்தில் தான் நடிக்கிறாரா தளபதி விஜய்?

0

இந்த வருடத்தில் மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை புரிந்த படம் பிகில் அட்லி இயக்கத்தில் வெளிவந்த இப்படம் தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி வெளியீடாக வந்தது. இப்படம் உலகம் முழுவதும் 250 கோடிக்கு அதிகமாக வசூலை ஈட்டி பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை படைத்தது பிகில் படம் முடித்த கையோடு விஜய் கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்த்தார் தளபதி விஜய்.

இந்த வேடத்தில் தான் நடிக்கிறாரா தளபதி விஜய்?

அவர் சொந்தக்காரரான சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் விஜய் 64 படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ளார் சூட்டிங் விறுவிறுப்பாக டெல்லி, சென்னை ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் பெயர் இன்று வெளியிடப்பட்டது.

இப்படத்திற்கு மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ளது மாஸ்டர் என்று பெயரிடப்பட்டு இருப்பதால் இந்த படத்தில் விஜய் ஆசிரியர் வேடம் ஏற்று நடித்திருக்கிறார் என்று தோன்றுகிறது.

இந்தப் படத்தின் தலைப்பு வெளியானவுடன் புத்தாண்டு கொண்டாட்டத்துடன் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மாஸ்டர் என்ற தலைப்பை கொண்டாடி வருகின்றனர்.

திமுகவிற்கு எதிராக CAAக்கு ஆதரவாக செயல்பட நினைத்து அசிங்கப்பட்ட பாஜக

0

திமுகவிற்கு எதிராக CAAக்கு ஆதரவாக செயல்பட நினைத்து அசிங்கப்பட்ட பாஜக

மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்த வண்ணமே உள்ளன. குறிப்பாக தமிழகத்தில் திமுக தலைமையில் அதன் கூட்டணி கட்சிகள் இணைந்து இந்த போராட்டத்தைப் எதிர்த்துப் பேரணி நடத்தினர்.

இதனையடுத்து சில நாட்களுக்கு முன்பு சென்னையில் CAA சட்டத்தை எதிர்த்து பொது வெளியில் கோலம் போட்டு போராடிய பெண்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்த திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கனிமொழி உள்ளிட்டோர் தங்களது வீடுகளின் முன் இந்த சட்டத்திற்கு எதிராக கோலமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

தலைமையின் கட்டளைப் படி திமுக தொண்டர்களும் CAA சட்டத்தை எதிர்த்து தங்கள் வீடுகளின் முன் கோலமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு எதிராக பாஜக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சி தொண்டர்கள் திமுகவிற்கு எதிராக மூலப் பத்திரம் எங்கே என்றும் தங்களது வீடுகளின் முன் கோலமிட்டு திமுகவை விமர்சிக்க தொடங்கினர்.

இந்நிலையில் தான் அடுத்த கட்டமாக சமூக வலைதளமான டிவிட்டரில் பாஜக ஆதரவாளர்கள் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக கருத்து தெரிவிப்பதாக நினைத்து, எழுத்துப் பிழைகொண்ட ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் CAA வுக்கு பதிலா CCA எனக் குறிப்பிட்டு ட்ரண்ட் செய்துள்ளனர்.

பாஜக தலைமையிலான மோடி அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்க் கட்சிகளை சேர்ந்தவர்கள் தங்களின் கருத்துகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

குறிப்பாக பாஜக கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும், மோடி அரசுக்கு எதிராகவும் ட்விட்டரில் தினமும் ஏதாவது ஒரு ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாஜக ஆதரவாளர்கள் மூலமும் அவ்வப்போது ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் செய்யப்பட்டன.

அந்த வகையில் தற்போது, பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக #IndiaSupportsCAA ஹேஷ்டேக்கிற்கு பதில் #IndiaSupportsCCA என்ற ஹேஷ்டேக்கை தவறாக பாஜக தரப்பினர் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

பணம் செலவும் செய்து தகவல் தொழில்நுட்ப அணியை நடத்தி வரும் திமுகவிற்கு இணையாக தமிழகத்தில் தகவல் தொழில்நுட்ப அணியை பாஜக வைத்துள்ளது என்று எண்ணிய நிலையில் ஹேஷ் டேக்கில் உள்ள எழுத்துப் பிழையைக் கூட கவனிக்காமல், அப்படியே சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது அக்கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

#IndiaSupportsCAA #IndiaSupportsCCA

20 ஆண்டுகளாக பதவியில் இருந்து அசைக்க முடியாத தலைவர்?

0

அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாகவும் இந்தியாவின் நெருங்கிய நணபனில் ஒரு நாடாக திகழ்வது ரஷ்யா. அந்த நாட்டின் சக்தி வாய்ந்த தலைவரில் ஒருவராக திகழ்பவர் அந்த நாட்டின் அதிபரான விளாடிமிர் புதின்.

1999-ம் ஆண்டு சோவியத் யூனியனின் உளவு அமைப்பில் விளாடிமிர் புதின் பணியாற்றி கொண்டு இருந்த புடின் அந்த ஆண்டு ரஷ்யாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது.அப்போது ரஷ்ய அதிபராக இருந்த போரிஸ் எல்ட்சின், பொறுப்பு(துணை) பிரதமராக புதினை நியமனம் செய்தார்.

அதன்பின் புதினுக்கு அதிபர் பொறுப்பை போரிஸ் எல்ட்சின் 1999-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி விட்டு கொடுத்து விட்டு அவர் தன் பதவியை ராஜினாமா செய்தார்.

அன்றுமுதல் 20 ஆண்டுகளாக புதின் ரஷ்யாவில் அதிபர் அல்லது பிரதமர் ஆகிய 2 பதவிகளில் ஏதாவது ஒன்றை வகித்தபடி தன்னை அரசியலில் நிலை நிறுத்தி வந்துகொண்டிருக்கிறார்.

1999 ஆண்டு கிளர்ச்சியாளர்களுக்கு வான்வழி தாக்குதல் கொடுத்தது. பல்வேறு விவகாரத்தில் அமெரிக்காவிடம் மல்லுக்கட்டுவது போன்றவற்றில். தன் வலிமையை நிரூபித்து கொண்டு இருக்கிறார்.

கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் புதின் அபாரவெற்றி பெற்றார். அவர் 2022-ம் ஆண்டு வரை அதிபராக நீடிப்பார். ரஷ்ய நாட்டு அரசாங்கத்தை தனது கை விரல் நுனியில் வைத்திருக்கும் புதின் இன்று தனது அரசியல் வாழ்க்கை பயணத்தின் 21-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.

மேலும் தொடர்ந்து 20 ஆண்டுகளாக அதிபர் அல்லது பிரதமர் பதவிகளில் நீடித்து எதிர்க்கட்சிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கி வருகிறார்.

சென்னை மக்களை அச்சுறுத்தும் பிரச்சனையில் தமிழக அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் வழங்கிய ஆலோசனை

0

சென்னை மக்களை அச்சுறுத்தும் பிரச்சனையில் தமிழக அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் வழங்கிய ஆலோசனை

நள்ளிரவு நேரங்களில் சென்னையின் பல்வேறு முக்கிய பகுதிகளில் இரு சக்கர வாகன பந்தயங்களின் எண்ணிக்கை வாரத்துக்கு வாரம் அதிகரித்து வருகிறது. இதனால் அவ்வப்போது உயிரிழப்புகளும் தொடர்ந்த வண்ணமாகவே உள்ளது. இதை தடுக்க தமிழக அரசு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று “மக்களை மிரட்டும் பைக் பந்தயங்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கை தேவை!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் நடைபெறும் இரு சக்கர வாகன பந்தயங்களின் எண்ணிக்கை வாரத்துக்கு வாரம் அதிகரித்து வருகிறது. அவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக காவல்துறை பல நடவடிக்கைகளை எடுத்தும் பந்தயங்களைக் கட்டுப்படுத்த முடியாதது மிகவும் வருத்தமளிக்கிறது.

சென்னையில் கிழக்கு கடற்கரை சாலை, கடற்கரை காமராஜர் சாலை, பெசன்ட் நகர் கடற்கரை சாலை, பெரம்பூர் பாலம் மற்றும் அவற்றை இணைக்கும் சாலைகள் ஆகியவை தான் இரு சக்கர ஊர்தி பந்தயத்திற்கான தலைநகரங்களாக திகழ்கின்றன. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் வீடுகள் அமைந்துள்ள பசுமைவழிச்சாலை, இராயப்பேட்டை, அண்ணா சாலை, டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலைகள் ஆகியவற்றிலும் இந்த பந்தயங்கள் நடத்தப்படுகின்றன.

நள்ளிரவில் இந்த சாலைகளில் கூடும் இளைஞர்கள், சாலைகளைப் பொறுத்து நீண்ட தொலைவு மற்றும் குறுகிய தொலைவு பந்தயங்களை நடத்துகின்றனர். 650 சி.சி. திறன் கொண்ட, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அதிவிரைவு இருசக்கர ஊர்திகளுடன் கலந்து கொள்ளும் இளைஞர்கள் மணிக்கு 200 கி.மீ வேகத்தில் பறக்கின்றனர். நள்ளிரவில் சாலைகளில் வேறு எவரும் பயணிக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் தான் இவர்கள் இந்த வேகத்தில் செல்கின்றனர்.

அப்போது எதிர்பாராத வகையில் சாலையில் எவரேனும் குறுக்கே வந்து விட்டால், யார் நினைத்தாலும் விபத்துகளை தடுக்க முடியாது. மாதத்திற்கு குறைந்தது ஓரிரு விபத்துகளும், உயிரிழப்புகளும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்த பந்தயங்களில் ஈடுபடுவோரில் பலரும் அரசியல், பொருளாதார செல்வாக்கு மிகுந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், இதுகுறித்த செய்திகள் பெரிதாக வெளியில் வருவதில்லை.

ஒவ்வொரு பந்தயத்துக்கும் லட்சக்கணக்கில் பரிசுத்தொகை நிர்ணயிக்கப்படுகிறது. பந்தயங்களில் பங்கேற்பவர்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் போதுமான பாதுகாப்பு கருவிகளை அணிவதில்லை. இதனால், கண்மூடித்தனமான வேகத்தில் செல்லும் போது விபத்து ஏற்படுவதும், அவற்றில் உயிரிழப்புகள் நிகழ்வதும் வாரந்தோறும் நடக்கும் வாடிக்கையாகி விட்டன. பந்தயங்களில் பங்கேற்பவர்கள் மட்டுமின்றி, பந்தயம் நடக்கும் சாலைகளை கடக்க முயல்பவர்கள், சாலைகளில் பயணிப்பவர்கள், சாலையோரங்களில் வசிப்பவர்கள் என பல்வேறு தரப்பினரும் இந்த பைத்தியக்காரத்தனமான பந்தயத்தில் பலியாகின்றனர்.

இரு சக்கர ஊர்தி பந்தயங்களைத் தடுக்க சென்னை பெருநகரக் காவல்துறை, அதனால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு தான் வருகிறது. ஆனால், சட்டத்தில் உள்ள ஓட்டைகளும், சட்டத்தை வளைக்கும் அளவுக்கு பந்தயக்காரர்களுக்கு உள்ள செல்வாக்கும் இதற்கு பெருந்தடையாக உள்ளது.

கடந்த சில வாரங்களில் மட்டும் பந்தயத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை சுற்றி வளைத்து பிடித்து, கடுமையாக எச்சரித்து அனுப்பியது. அவர்களில் பலரது இருசக்கர ஊர்திகளை காவல்துறை பறிமுதல் செய்தது. ஆனாலும், அதைப்பற்றிக் கவலைப்படாத அவர்கள் புதிய இரு சக்கர ஊர்திகளை வாங்கி, வழக்கம் போல வார இறுதி நாட்களின் நள்ளிரவுகளில் பந்தயம் நடத்தி வருகின்றனர்.

சென்னை மாநகரத்தின் தீராத வியாதியாக உருவெடுத்துள்ள இருசக்கர ஊர்தி பந்தயத்தை முற்றிலுமாக தடுப்பது சாத்தியமே இல்லாத செயல் அல்ல. மத்திய, மாநில அரசுகளின் ஆதரவுடன் காவல்துறை மூன்று அம்சத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் இந்த சமூகத் தீமைக்கு முடிவு கட்ட முடியும்.

1. இரு சக்கர ஊர்தி பந்தயங்களில் பங்கேற்போர் மீது அதிகபட்சமாக அதிவேகமாக வாகனத்தை ஓட்டியதாகத் தான் வழக்கு பதிவு செய்ய முடியும். இந்த வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ரூ.1000 வரை அபராதமும், 6 மாதம் வரை சிறை தண்டனையும் மட்டுமே விதிக்க முடியும். இதனால், சம்பந்தப்பட்டவர்கள் ரூ.1000 அபராதம் செலுத்தி விட்டு, தப்பி விடுகின்றனர்.

இந்த நிலையை மாற்றி இரு சக்கர ஊர்தி பந்தயங்களில் ஈடுபடுவோரை தண்டிக்க தனிச்சட்டப் பிரிவு கொண்டு வருவதுடன், அதற்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில் மோட்டார் வாகனச் சட்டத்திலும், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளிலும் தேவையான திருத்தங்களை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

2. பந்தயத்துக்காக பயன்படுத்தப்படும் 650 சி.சி. இரு சக்கர ஊர்திகள் மிகவும் ஆபத்தானவை. அதை இயக்குவதற்கு ஏற்ற சாலைகள் நமது நாட்டில் இல்லை. எனவே, 650 சி.சி மற்றும் அதற்கு கூடுதலான திறன் கொண்ட இரு சக்கர ஊர்திகளை, தொழில்முறை பந்தய பயன்பாட்டை த் தவிர, பிற பயன்பாடுகளுக்கு தடை செய்ய வேண்டும்.

3. இரு சக்கர ஊர்தி பந்தயங்களில் ஈடுபடுவோரின் பெற்றோரை அழைத்து, அவர்களது பிள்ளைகளின் செயல்கள், அதிலுள்ள ஆபத்துகள் போன்றவற்றை எடுத்துக் கூறி, பிள்ளைகளை கண்காணிப்பில் வைத்துக் கொள்ளும்படி அறிவுரை வழங்குதல்; இரு சக்கர ஊர்தி பந்தயங்களில் ஈடுபடுவோரை, அதன் தீமைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பொது இடங்களில் தினமும் சில மணி நேரங்கள் என ஒரு வாரத்திற்கு பிடித்துக் கொண்டு நிற்பது போன்ற நடத்தைத் திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்றவற்றை காவல்துறை செயல்படுத்த வேண்டும்.

மேற்குறிப்பிடப்பட்ட நடவடிக்கைகளை அரசும், காவல்துறையும் மேற்கொள்வதன் மூலமாகவும், இரு சக்கர ஊர்தி பந்தயங்களின் தீமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலமும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை ‘ஆபத்தான பந்தயம்’ இல்லாத பாதுகாப்பு பகுதிகளாக மாற்ற வேண்டும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.