Home Blog Page 5817

ATM இல் பணம் எடுக்க OTP எண் ஜனவரி 1 முதல் அமல்?

0

சமீபகாலமாக ATM எந்திரங்களில் ‘ஸ்கிம்மர்’ என்ற கருவியை பொருத்தி பணத்தை திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.இதனால் ATM எந்திரங்களில் பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் அஞ்சுகின்றனர்.

இதுபோன்ற மோசடிகளை தடுக்கும் வகையில் ATM எந்திரத்தில் அதிகபட்ச பணம் எடுக்கும் வரம்பை ரூ.40 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக SBI வங்கி குறைத்தது.இது ஒரு வழியில் உபயோகப் பட்டாலும் வாடிக்கையாளர்கள் ஒரு நிரந்தரத் தீர்வுகாண வேண்டும் என எண்ணினார்.

இந்த நிலையில் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் ATM எந்திரத்தில் பணம் எடுக்க ஒரு முறை பயன்படுத்தும் ரகசிய எண் (OTP) முறையை ஸ்டேட் வங்கி அறிமுகம் செய்கிறது.

இதுகுறித்து பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது

ATM எந்திரத்தில் நடக்கும் சட்டவிரோத பணபரிவர்த்தனையை குறைக்கும் விதமாக ரூ.10 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுப்பதற்கு ஒரு முறை ரகசிய எண் பயன்படுத்தும் திட்டத்தை நாங்கள் அறிமுகம் செய்கிறோம்.

இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை இந்த முறை அமலில் இருக்கும். இந்த OTP வாடிக்கையாளர்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு வரும். இது சட்டவிரோத பணபரிவர்த்தனைகளில் இருந்து ஏ.டி.எம். வாடிக்கையாளர்களை பாதுகாக்க ஒரு சிறந்த வழிமுறை.

ஜனவரி 1-ந்தேதி முதல் நாடு முழுவதும் இம்முறை செயல்பாட்டுக்கு வருகிறது. ஆனால் ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் இதர வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்தால் இந்த பாதுகாப்பு முறை பொருந்தாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புத்தாண்டில் புதிய சர்ச்சை?

0

பிறக்கப் போகிற புத்தாண்டு ஒரு அபூர்வமான புத்தாண்டாகும் முதல் இரண்டு இலக்கங்கள் அடுத்து இரண்டு இலக்கங்களும் அமைந்துள்ளன(2020).

இதே போன்று இனி அமைவதற்கு இன்னும் 100 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அப்போதுதான் 2121 என்ற ஆண்டு வரும் இன்று அவசரமான உலகத்திலே எல்லாவற்றையும் சுருக்கமாக தான் நாம் சொல்ல வேண்டியிருக்கிறது.

உதாரணமாக 01. 01. 2020 என்ற புத்தாண்டு நாளில் 01.01.20 என்றுதான் நம்மில் பெரும்பாலானோர் கையெழுத்திட்டு தேதி குறிப்பிடுகின்ற பொழுது இப்படி சுருக்கமாக எழுதுவது மரபாக பின்பற்றி வருகின்றனர்.

ஆனால் இந்தப் புத்தாண்டில் ஒரு புதிய குழப்பம் நீடிக்கிறது சொத்து ஆவணங்கள் கடன் பத்திரங்கள் போன்றவற்றின் முக்கிய ஆவணங்களை எழுதுகிறபோது 2020 என்று எழுதுங்கள் ஏனென்றால் முறைகேடு செய்பவர்கள் அதை தங்கள் வசதிக்கேற்ப ஒன்று முதல் 19 வரை சேர்த்து விடுவார்கள் எடுத்துக்காட்டாக நீங்கள் 05. 01.20 என்று எழுதியிருந்தால் அதை 05.01. 2018 ஆகவும் மாற்றிக்கொள்ள முடியும்.

எனவே இந்த ஆண்டு முழுவதும் சிரமம் பாராமல் ஆண்டை 20 என சுருக்க குறிப்பிடாமல் 2020 என முன் ஜாக்கிரதை உணர்வுடன் எழுதிப் பழகி விடுங்கள்.

இது பிரச்சினை வருவதற்கு முன்னரே தடுக்க உதவும் இதே போன்று எந்த ஒரு ஆவணத்தையும் நீங்கள் வாங்கும் பொழுதும் 2020 என்று முழுமையாக ஆண்டு குறிப்பிடப் பட்டு உள்ளதா என பார்த்து வாங்குவது நல்லது.

வெங்காயத்தின் விலை மேலும் குறைய வாய்ப்பு?

0

விளைச்சல் பாதிப்பு காரணமாக வெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்தது கிலோ ரூபாய் 200 வரை சென்றது.நாட்டு மக்களை மிகவும் உலுக்கியது வெங்காய வரத்து கடந்த சில நாட்களாக அதிகரித்து அதன் விலை கடந்த குறைந்து வருகிறது.

இருப்பினும் அருணாச்சல பிரதேசத்தில் இன்னும் 150 வரை வெங்காயம் விற்கப்பட்டு வருகிறது கொல்கத்தாவில் 120 ஆகவும் சென்னையில் 80 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெங்காயம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதற்காக வெளிநாடுகளிலிருந்து எகிப்து, துருக்கி, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது

இதனிடையே மேலும் 1120 டன் வெங்காயம் இறக்குமதி இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்து இருந்தது அந்த வெங்காயம் தற்போது மும்பை துறைமுகத்திற்கு வந்து சேர்ந்து உள்ளதாக மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் வெங்காயம் உள்ளது மேலும் 10 ஆயிரத்து 560 டன் வெங்காயம் இன்னும் மூணு அல்லது நாலு நாட்கள் இந்தியா வந்தடையும் என்றும் அந்த அதிகாரி கூறினார் இதனால் வெங்காயத்தின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது.

 

தமிழகம் முதலிடம் பெறுவதற்கு கடுமையாக உழைத்த ஈபிஎஸ் ஓபிஎஸ்க்கு வாசன் பாராட்டு!

0

தமிழகம் முதலிடம் பெறுவதற்கு கடுமையாக உழைத்த ஈபிஎஸ் ஓபிஎஸ்க்கு வாசன் பாராட்டு!

மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் பட்டியலில் நாட்டிலேயே நிர்வாகத்திறனில் தமிழகம் 5.62 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளது மகிழ்ச்சிக்குரியது, பாராட்டுக்குரியது.

முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா ஆசியோடு நடைபெறுகின்ற அ.தி.மு.க ஆட்சியில் தமிழகத்திற்கு பேரும், புகழும் கிடைக்கின்ற வகையில் நிர்வாகத் திறனில் முதல் இடம் பெற்றிருக்கிறது. தமிழகத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மேற்கொண்ட கடின உழைப்பிற்கும், உயர் பணிக்கும் கிடைத்திருக்கின்ற அங்கீகாரமாக இதை நான் கருதுகிறேன்.

குறிப்பாக பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் அடிப்படையில் நிர்வாகத்தில் தமிழகம் முதலிடம் பெற்றிருப்பது பெருமையாக இருக்கிறது. அதாவது சாலை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளிலும், சட்டம் ஒழுங்கிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இப்படி தமிழகம் நிர்வாகத்தில் முதலிடம் பெறுவதற்கு பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் சிறப்பாக அமைந்ததற்கு காரணமாக இருந்த அந்தந்த துறையின் அமைச்சர், உயர் அதிகாரிகள், பணியாளர்கள் ஆகியோரது பணிகளும் பாராட்டுக்குரியது.

தமிழகம் நிர்வாகத் திறனில் சிறந்து விளங்குவதால் மக்களுக்கான அடிப்படைத் தேவைகள், வளர்ச்சிப் பணிகள், பாதுகாப்பு போன்றவை பூர்த்தி செய்யப்பட்டு, மக்கள் நலன் காக்கப்பட்டு, மாநிலமும் வளம் பெறுகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இருவரையும் பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தான் விவகாரம் கம்பீர் கடும் தாக்கு?

0

பாகிஸ்தான் அணியில் சுழற்பந்து வீச்சாளராக இருந்த தனிஷ் கனேரியா, இங்கிலாந்தில் கவுண்டீ போட்டிகளில் விளையாடி சூதாட்ட புகாரில் சிக்கயவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தான் வீரர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கிறார்.பாகிஸ்தான் அணியில் இருந்து ஓய்வு பெற்ற அவரை பற்றி ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், தனிஷ் கனேரியா இந்து என்பதால், அவருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட பாகிஸ்தான் வீரர்கள் விரும்பியதில்லை என்று தெரிவித்திருந்தார்.அவரின் சாதனைக்கு கூட தக்க அங்கீகாரம் தர மறுக்கப்பட்டது என்று புதிய சர்ச்சை கிளப்பினார்.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரும் பாஜகவின் எம்பியுமான கம்பிர் தமது ஆழ்ந்த கண்டனங்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் இதுதான் பாகிஸ்தானில் உண்மையான முகம் ஒரு விளையாட்டு வீரர் பிரதமராக இருந்த போதிலும் அந்த நாட்டில் இவ்வாறு நடக்கிறது பாருங்கள்.

நமது அணியை பாருங்கள் முகமது அசாருதீன் சிறுபான்மையினராக இருந்த போதும் இந்திய அணியின் கேப்டனாக நீண்டகாலம் செயல்பட்டால் முகமது கைப், இர்பான் பதான், முனாஃப் படேல் மிகவும் மரியாதையுடன் நடத்தப் பட்டனர் இதில் முனாஃப் படேல் எனக்கு நெருக்கமான நண்பர் நாங்கள் ஒரு அணியாக ஒருங்கிணைந்து விளையாடி இந்தியாவிற்கு பெருமை சேர்த்தோம் ஆனால்

பாகிஸ்தானில் இருந்து வரும் இந்த தகவல் உண்மையிலேயே துரதிஷ்டம் அந்த அணிக்காக அந்த அணியில் சிறந்த முறையில் விளையாண்ட வீரரை நடத்திய விதம் மிகவும் வெட்கக்கேடானது என தன் கண்டனத்தை தெரிவித்தார்.

இந்திய அணியின் அடுத்த ஆண்டு சுற்று பயண விவரம்?

0

இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டு உலக கோப்பையை சிறப்பாக ஆடியது எனினும் அரைஇறுதி ஆட்டத்தில் எதிர்பாராத விதமாக ஏமாற்றம் அடைந்து நியூஸிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது.
அந்த தோல்வியை தவிர இந்திய அணிக்கு ஏறுமுகம் தான் எல்லா தொடர்களிலும் குறிப்பிட்ட வெற்றிகளை குவித்தது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது கோலி தலைமையிலான படை.
இதனிடையே 2020-ம் ஆண்டுக்கான சுற்றுப் பயண விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.

முதலாவதாக இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஜனவரி 5-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

ஆஸ்திரேலியா இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஜனவரி 14-ந்தேதி முதல் ஜனவரி 19-ந்தேதி வரை மூன்று ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடும்.

அதன்பின் இந்திய நியூஸிலாந்து செல்கிறது ஜனவரி 24-ந்தேதி முதல் மார்ச் 4-ந்தேதி வரை நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்கிறது. இதில் ஐந்து டி20, 3 ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

அதன்பின் தென்ஆப்பிரிக்கா இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. மார்ச் 12-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை செய்து மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

அதன்பிறகு சிறப்புமிக்க மார்ச் 28-ந்தேதி முதல் மே 24-ந்தேதி வரை IPL கிரிக்கெட் தொடர் நடக்கிறது.

ஜூலை மாதம் இந்திய அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து தலா மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் வரை இங்கிலாந்து அணி இந்தியா வருகிறது. இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாடுகிறது.

அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து டி20 தொடரில் விளையாடுகிறது. அதன்பின் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரில் விளையாடுகிறது.

அதன்பின் டிசம்பர் மாதம் முதல் 2021 ஜனவரி வரை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடும். என தெறிக்கவிக்கப்பட்டுள்ளது.

அணு ஆயுத போட்டியின் புதிய அத்தியாயத்தை துவங்கியுள்ளதா ரஷ்யா ???

0

உலகின் வல்லரசாக திகழும் அமெரிக்காவிற்கு சவால் விடும் வகையில், உலகில் எந்த நாட்டிடமும் இல்லாத, யாராலும் தடுக்கவே முடியாத அதிபயங்கர அவங்கார்டு ஹைப்பர் சோனிக் அணு ஏவுகணையை ரஷ்யா தனது ராணுவத்தில் இணைத்து உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

உலகில் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக ஏவிய முதல் நாடு என்ற பெருமையை கைவசப்படுத்தியது  ரஷ்யா. ராணுவ உயர் அதிகாரிகளுடனான சந்திப்புக்கு பின்னர் முக்கிய ஊடகங்களிடம் தகவல் வெளியிட்ட ரஷ்ய அதிபர் புதின், “ உலகில் எந்த நாடும் இந்த ஏவுகணையை தடுத்து நிறுத்தவோ முறியடிக்கவோ முடியாது” என தெரிவித்துள்ளார்.

மேலும் “ஹைப்பர்சோனிக் ஆயுதங்களில் நாங்கள் “தனித்துவமான” முன்னேற்றம் கண்டு உள்ளோம். எங்களைப் பிடிக்க மற்ற நாடுகள் முயற்சிக்கின்றன, இந்த ஏவுகணையை உலகின் எந்த நாட்டு ராணுவமும் தடுத்து நிறுத்த முடியாது எனவும், வானில் இருந்து வெளியேறிய எரிகல் போன்று இது இலக்கை தாக்கி அழிக்கும், “3M22 ஷிர்கோன் (Tsirkon)” என பெயரிடப்பட்டுள்ள இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணையானது மணிக்கு சுமார் 7,000 மைல்களை தாண்டும் “ எனவும் புதின் அறிவித்துள்ளார்.

ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் ; மேஜா் ஜெனரல் விபின் ராவத்திற்கு வைகோ கண்டனம் !!!

0

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அதிலும் தலைநகர் டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலுக்கு பிறகு, அனைத்துத்தரப்பினரும் தங்களது எதிர்ப்பை பல்வேறு வகையிலும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடுபவா்களை விமா்சிக்கும் வகையில் ராணுவ தளபதி விபின் ராவத் பேசியுள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளா் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள  அறிக்கையில் “குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் தன்னெழுச்சியாக மக்கள் போராடி வருகின்றனா். இந்நிலையில், தில்லியில் நடைபெற்ற சுகாதாரம் தொடா்பான மாநாட்டில் இந்திய ராணுவத் தலைமைத் தளபதி மேஜா் ஜெனரல் விபின் ராவத், மக்களைத் தவறான பாதையில் வழிநடத்துபவா்கள் தலைவா்கள் அல்ல, ஏராளமான பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள மாணவா்கள் தலைமையேற்று நடத்தும் போராட்டங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுவதை நாம் பார்த்து வருகிறோம். இது சரியான தலைமை அல்ல என்று கூறியிருக்கிறார்.

விடுதலை பெற்ற இந்தியாவின் 70 ஆண்டு கால வரலாற்றில் ராணுவ தளபதி ஒருவா் உள்நாட்டுப் பிரச்னை மற்றும் அரசியல் விவகாரங்களில் தலையிட்டதோ, கருத்துக் கூறியதோ இல்லை. மறைமுகமாக எதிர்கட்சிகளை அவா் விமா்சனம் செய்திருப்பதும் ஏற்றுக்கொள்ளவே முடியாத கண்டனத்துக்கு உரியதாகும். ஜனநாயக நாட்டில் ராணுவத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவா் அரசியல் கருத்துகளை வெளிப்படையாக தெரிவிப்பது ஆபத்தான விளைவை ஏற்படுத்தும்.” என்று கூறியிருக்கிறார்

20 கோடி முஸ்லிம்களுக்கு பாதிப்பு – என்.ஆர்.சி குறித்து அமெரிக்க நாடாளுமன்ற அமைப்பு அறிக்கை.

0

நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. 1955ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை கடந்த 2016ஆம் ஆண்டிலேயே பாஜக நிறைவேற்ற முனைப்பு காட்டியது.

ஆனால், மாநிலங்களவையில் போதிய பெரும்பன்மை இல்லாமை. கடந்த அரசின் பதவிக்காலம் முடிவு உள்ளிட்ட காரணங்களால் அப்போது அந்த மசோதா காலவதியாகி விட்டது. இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்தார்.

 ‘பிரதமர் மோடி தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவேட்டுடன் (என்ஆர்சி) இணைந்த குடியுரிமை திருத்த சட்டத்தால், இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினரின் நிலை பாதிக்கப்படலாம்,’ என அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வு சேவை (சிஆர்எஸ்) அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் தன்னாட்சி ஆய்வு அமைப்பான சிஆர்எஸ், உள்நாட்டு மற்றும் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து, அதன் முடிவை எம்பி.க்களுக்கு தெரிவிக்கும் வகையில் அறிக்கை தாக்கல் செய்யும். இந்த அமைப்பு, இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக ஆய்வு நடத்தி கடந்த 18ம் தேதியிடப்பட்ட அறிக்கையை சமர்பித்துள்ளது. இதில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 1955ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்திய குடியுரிமைச் சட்டம், சட்ட விரோதமாக குடியேறியவர்கள் குடிமக்களாக மாறுவதை தடை செய்கிறது. அதன் பின் இச்சட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டாலும், எந்த ஒரு மத அம்சமும் சேர்க்கப்படவில்லை.ஆனால், சுதந்திர இந்திய வரலாற்றில் முதல் முறையாக, நாட்டின் நடுநிலை செயல்பாட்டில் மத அடிப்படையிலான அளவுகோல் சேர்க்கப்பட்டுள்ளது.

 மத்திய அரசால் திட்டமிடப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, அதனுடன் இணைந்த குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவற்றால் இந்தியாவில் உள்ள 20 கோடி முஸ்லிம் சிறுபான்மையினரின் நிலை பாதிக்கப்படலாம். பாஜ மற்றும் பிரதமர் மோடியின் இந்துத்துவா கொள்கையாலும், முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டாலும் இந்தியாவின் மதச்சார்பற்ற அந்தஸ்துக்கு அச்சுறுத்தலும், சர்வதேச மனித உரிமை மீறல்களும் நடக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் அச்சம் தெரிவித்துள்ளன. குடியுரிமை திருத்த சட்டத்தில், இலங்கையில் பாதிக்கப்படும் இந்துக்களான தமிழர்கள்,  மியான்மரின் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு குடியுரிமை தருவதில் ஏன் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவாக விளக்கவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட திமுக எம்பி கல்லூரிக்கு வருகையா? ராஜ்நாத் சிங்கை நிறுத்திய ஹெச் ராஜா

0

பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட திமுக எம்பி கல்லூரிக்கு வருகையா? ராஜ்நாத் சிங்கை நிறுத்திய ஹெச் ராஜா

பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்துவிற்கு திமுக கூட்டணி எம்.பி பச்சமுத்து என்கின்ற பாரிவேந்தரின் கல்லூரியான எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் சார்பாக டாக்டர் பட்டம் வழங்க உள்ளது,. இதனை வழங்குவதற்காக சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் நாளை கலந்து கொண்டு வைரமுத்துவிற்கு டாக்டர் பட்டம் வழங்க உள்ளார் என்று அழைப்பிதழில் குறிப்பிட்டு இருந்தது,

ஆனால் திடீரென மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன,. கவிப்பேரரசு வைரமுத்து சில மாதங்களுக்கு முன் இந்து தெய்வமான ஆண்டாளை கடுமையாக விமர்சித்து கவிதை எழுதி இருந்தார், இதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வந்தன, மேலும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வைரமுத்துவிற்கு நெருக்கடி கொடுத்தனர்,. வைரமுத்துவிற்கு ஆதரவாக திமுக போன்ற கட்சிகள் ஆதரவாக இருந்தன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிரபல பாடகி சின்மயி, வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்தார், இது தமிழக மக்களிடையே பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது, இப்படி பல சர்ச்சைகளில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் வைரமுத்துவிற்கு ராஜ்நாத் சிங் அவர்கள் கவுரவ டாக்டர் பட்டம் வழங்க கூடாது என பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தின, உடனடியாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அவர்கள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தொடர்பு கொண்டு தமிழகத்தில் பாஜகவிற்கு எதிராக நிலவும் சூழ்நிலை பற்றியும், வைரமுத்துவிற்கு டாக்டர் பட்டம் உங்கள் கையால் கொடுத்தால் சரியாக இருக்காது என்று கூறி வருகையை ரத்து செய்ய வைத்திருக்கிறார்,.

மேலும் திமுக கூட்டணியில் அங்கம் வகித்துக் கொண்டிருக்கும் இந்திய ஜனநாயக கட்சி தலைவரும், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய பச்சமுத்து என்கின்ற பாரிவேந்தர் அவர்களின் பல்கலைக்கழகத்தில் பல மாணவர்கள் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டனர் என்பதையும் ஹெச்.ராஜா அவர்கள் பாதுகாப்புத் துறை அமைச்சரிடம் தகவலை தெரிவித்து இருக்கிறார்,. இதனையடுத்தே ராஜ்நாத் சிங் தனது முடிவை மாற்றி இருக்கிறார்,.

தமிழக பாஜகவினர் மற்றும் இந்து அமைப்புகள் மத்திய அரசுக்கு கொடுத்த அழுத்தம் காரணமாகவே கவிஞர் வைரமுத்துவிற்கு டாக்டர் பட்டம் வழங்க ராஜ்நாத் சிங் தனது நிகழ்ச்சியை ரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.