கோவை மாவட்டம் பன்னிமடையை சேர்ந்த 6 வயது சிறுமி கடந்த மார்ச் மாதம் தனது வீட்டின் அருகே சடலமாக மீட்கப்பட்டார். காவல்துறை விசாரணையில், தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ்குமார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது விசாரணையில் தெரியவந்தது.
அவர்மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோவையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.
விசாரணை முடிந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட சந்தோஷ்குமார் மீதான குற்றம் நிரூபணமானதால், அவர் குற்றவாளி என கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில், இன்று பிற்பகல் அவருக்கான தண்டனையை சிறப்பு நீதிபதி ராதிகா அறிவித்தார்.
அதன்படி, 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 302 பிரிவின்கீழ் குற்றவாளி சந்தோஷ் குமாருக்கு ஆயுள் மற்றும் தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே சிறுமியின் தாயார் மனு ஒன்றை அளித்தார் அதில் தனது மகள் பாலியல் வன்கொடுமை தொடர்பான மரபணு பரிசோதனையில் மேலும் ஒரு நபரின் டி.என்.ஏ இருப்பது தெரியவந்துள்ளதாகவும், அந்த நபரைக் கைதுசெய்ய வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணியில் சுழற்பந்து வீச்சாளராக இருந்த தனிஷ் கனேரியா, இங்கிலாந்தில் கவுண்டீ போட்டிகளில் விளையாடி சூதாட்ட புகாரில் சிக்கயவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தான் வீரர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கிறார்.பாகிஸ்தான் அணியில் இருந்து ஓய்வு பெற்ற அவரை பற்றி ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், தனிஷ் கனேரியா இந்து என்பதால், அவருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட பாகிஸ்தான் வீரர்கள் விரும்பியதில்லை என்று தெரிவித்திருந்தார்.அவரின் சாதனைக்கு கூட தக்க அங்கீகாரம் தர மறுக்கப்பட்டது என்று புதிய சர்ச்சை கிளப்பினார்.
இது குறித்து கருத்து தெரிவித்த தனிஷ் கனேரியா, அக்தர் கூறியிருப்பது உண்மை என்றும் , தன்னுடன் பேச விரும்பாத வீரர்களின் பெயரை விரைவில் வெளியிட உள்ளதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து பேச முன்பெல்லாம் தைரியம் இல்லாத நிலையில், தற்போது தன்னால் முடியும் என்றும் கனேரியா தெரிவித்துள்ளார்.
தனிஷ் கனோரியா 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 261 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். ஒரு நாள் போட்டிகளில் 18 ஆட்டங்களில் 15 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். பாகிஸ்தான் உள்ளூர் போட்டிகளில் 1000-க்கும் மேற்பட்ட விக்கெட்களை வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே தீவிரவாத காரணங்களால் கடந்த 10 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு எந்த அணியும் சுற்று பயணம் மேற்கொள்ளாத நிலையில் தனிஷ் கனோரியா இந்தக் கருத்து மேலும் அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
தளபதி 64: விஜய்-விஜய்சேதுபதி மோதும் படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்
தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிமோகாவில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருவது தெரிந்ததே. இந்த படப்பிடிப்பில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது விஜய்சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இன்னும் ஓரிரு நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் அதன் பின்னர் புத்தாண்டு கொண்டாட படக்குழுவினர் சென்னை திரும்ப உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது
இந்த நிலையில் ’தளபதி 64’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே? எப்போது? என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாகவும் இந்த படப்பிடிப்பில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி மோதும் காட்சிகள் படமாக்கப்பட்டு இருப்பதாகவும் இந்த படப்பிடிப்பு வரும் ஜனவரி மூன்றாம் வாரம் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன
கல்வித் துறையில் இருக்கும் ஊழல் குறித்து இந்த படத்தில் ஆழமாக அலசப்படவிருப்பதாகவும்,விஜய் கல்லூரி ஆசிரியராகவும், கல்லூரி நடத்தும் உரிமையாளராக விஜய்சேதுபதி நடிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் மாளவிகா மோகனன் , ஆண்ட்ரியா சாந்தனு உள்பட பலர் நடித்து வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகிவரும் இந்த படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். இந்த படம் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
மத்திய அரசின் அனைத்து பயன்களை பெறுவதற்கு ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது அதன் ஒரு நீட்சியாக மூத்த குடிமக்களுக்கான (‘பிரதான் மந்திரி வய வந்தன யோஜனா’) என்ற மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதிய திட்டம், கடந்த 2017-2018 மற்றும் 2018-2019 மத்திய பட்ஜெட்டுகளில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம், ஆண்டுக்கு 8 சதவீத உத்தரவாத தொகை மூலம் வழங்குகிறது.
இத்திட்டத்துக்கு ஆதார் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மூத்த குடிமக்கள் ஓய்வூதிய திட்டத்தில் பலனடைய தகுதி உடையவர்கள், ஆதார் வைத்திருப்பதற்கான ஆதாரம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அல்லது ஆதாருக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும்
தெளிவற்ற ‘பயோ மெட்ரிக்’ விவரங்களால், ஆதார் அடையாளத்தை உறுதி செய்ய முடியாவிட்டால், அத்தகைய நபர்களுக்கு ஆதார் எண் கிடைக்க மத்திய நிதி அமைச்சகத்தின் நிதிச்சேவைகள் பிரிவு உதவும்.
ஒருமுறை பெறப்படும் ரகசிய குறியீட்டு எண் (OTP) பெற சாத்தியம் இல்லாவிட்டால், ஆதார் கடிதம் மூலம் பலன்கள் அளிக்கப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது . மேலும் ஆதார் கடிதத்தில் அச்சிடப்பட்டுள்ள QR CODE மூலம் நம்பகத்தன்மை சரிபார்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புமணி மீது அவதூறு செய்தி வெளியிட்டது இதை மறைக்க தானா? பிரபல செய்தி நிறுவனத்தின் மெகா மோசடி
சமீபத்தில் பாமகவை சர்ச்சைக்கு உள்ளாக்கிய விவகாரமான மாநிலங்களவை உறுப்பினராக உள்ள அன்புமணி ராமதாஸ் அவர்கள் வருகைப் பதிவு குறைவாக உள்ளதாகவும், மேலும் அவர் எந்த கேள்வியையும் எழுப்பவில்லை என்றும் டைம்ஸ் ஆப் இந்தியா என்ற பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. இதை திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்தவர்களும், திமுக ஆதரவு பெற்ற ஊடகங்களும் வேகமாக பரப்பி வந்தன.
இதனையடுத்து அது பொய்யான செய்தி என பாமக நிர்வாகிகள் அந்த பத்திரிக்கை அலுவலகத்திற்கு சென்று விளக்கம் அளித்த பிறகு அதற்கு மறுப்பு தெரிவித்து உண்மையான செய்தியான அவர் மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விகள் மற்றும் அதற்கு அளித்த பதில்கள் பற்றியும் வெளியிட்டது.
இதன் பின்னணியில் திமுக செயல்பட்டதாக விமர்சனம் எழுந்துள்ள நிலையில், டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்தின் மீதே மேலும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதை உறுதி செய்யும் வகையில் ரூ.625 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனம் மீது சுப்ரமணிய சுவாமி குற்றசாட்டு கூறியுள்ளார்.
“டைம்ஸ் ஆப் இந்தியா குழுமம்” பல போலி நிறுவனங்கள் மூலம் பல்வேறு பண மோசடி மற்றும் வரி ஏய்ப்பு நடிவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக மனு ஒன்றை சுப்ரமணிய சுவாமி தாக்கல் செய்துள்ளார். பிரதமர் மோடி மற்றும் சில ஏஜென்ஸிகளுக்கு சுவாமி அனுப்பியிருக்கும் மனுவில் தெரிவித்திருப்பதாவது.
“இந்தியாவின் மிகப்பெரிய ஊடக நிறுவனமான டைம்ஸ் ஆப் இந்தியா குழுமத்தின் பெரும்பாண்மை பங்குதாரர்களான சமீர் ஜெயின்,வினீத் ஜெயின் மற்றும் அவர்களது தாயார் இந்து ஜெயின் ஆகியோர் பல்வேறு நிறுவனங்களை சட்டவிரோதமாக நிறுவியதாகவும், மேலும் பிற பங்குதாரர்களிடமிருந்து ரகசியமாக பங்குகளை வாங்கியதன் மூலம் பெரும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
26 பக்கங்கள் கொண்ட அவரது மனுவில், சட்டவிரோதமான நிறுவனங்கள் மூலம் நிகழ்ந்துள்ள வரி ஏய்ப்பு மற்றும் பண மோசடிகளுக்கு கையாளப்பட்ட ரகசிய வழிமுறைகள் குறித்து விளக்கமாக குறிப்பிட்டுள்ளார். இந்த மிகப்பெறிய ஊழல் குறித்து விசாரிக்க, வருமான வரித்துறை, சி.பி.ஐ, இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்(SEBI), உள்ளிட்ட அமைப்புகளுக்கு ஆணையிட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
டைம்ஸ் ஆப் இந்தியா குழுமத்தின் “பென்னட் அண்ட் கோல்மேன்” நிறுவனம் , பாரத் நிதி லிமிடெட், பி.என்.பி பைனான்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், அசோகா மார்க்கெட்டிங் லிமிடெட், உள்ளிட்ட 8 சட்டவிரோதமான நிறுவனங்கள் மூலம் நிர்வகிக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
SEBI’யின் கட்டுப்பாடுகளை மீறி பாரத் நிதி லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளை திரும்பப்பெற்றதின் மூலம் ரூ.625 கோடி ருபாய் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாகவும், மேலும் ஜெயின் குடும்பம் ஈடுபட்டுள்ள, வரி ஏய்ப்பு மற்றும் பண மோசடியின் மதிப்பு சுமார் 1000 கோடி இருக்க கூடும் என்று சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் பாதிப்புக்குள்ளான 300’க்கும் மேற்பட்ட பங்குதார்கள் செபி(SEBI) மற்றும் டெல்லி நீதிமன்றத்தை அணுகியிருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தங்கள் நிறுவனம் செய்த இந்த மெகா வரி ஏய்ப்பு முறைகேட்டை மறைக்க தான் அன்புமணி ராமதாஸ் பற்றி பொய்யான செய்தியை வெளியிட்டு திசை திருப்ப முயற்சித்ததாகவும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
சென்ற முறை ஐபில் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய இந்திய அணியின் டெஸ்ட் துணை கேப்டன் அஜிங்கா ரஹானே இம்முறை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வந்த அவர், 2020 சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மாறியுள்ளார் அது அவர் கூறுகையில்.
எனது மனதில் அடுத்த அணிக்காக விளையாட வேண்டும் போன்ற எந்த சிந்தனையும் உதிக்கவில்லை. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, அவர்களுக்காக நான் விளையாட வேண்டும் என்று விரும்பியது என கூறினார்.
நிறைய கற்றுக் கொள்ளவும், ஒரு வீரராக வளரவும் கிடைத்த நல்ல வாய்ப்பு என எண்ணுகிறேன். நீண்ட வருடமாக விளையாட வாய்ப்பு கொடுத்த ராஜஸ்தான் அணிக்கு நிர்வாகத்திற்கு எனது நன்றி. 2019 சீசன் மத்தியில் நடந்த சம்பவங்கள் எனக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.
கிரிக்கெட் எப்போதுமே டீம் ஸ்போர்ட் என்று நம்புகிறவன் நான். ஒரு வீரரின் தவறால் நீங்கள் தோல்வியடைய மாட்டீர்கள். அதேபோல், ஒரு வீரரின் சிறந்த ஆட்டத்தால் வெற்றி பெற முடியாது. நீங்கள் என்னை குற்றம்சாட்ட நினைத்தால், அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். என அவர் கூறினார்.
தேசிய நல்லாட்சி தினத்தை முன்னிட்டு மத்திய
அரசின் நிர்வாக சீர்திருத்தத்துறை மிகச்சிறந்த
நிர்வாகத்திறன் உள்ள மாநிலங்களின் பட்டியலை
நேற்று வெளியிட்டுள்ளது. பெரிய மாநிலங்கள், வடகிழக்கு
மற்றும் மலை மாநிலங்கள், யூனியன்
பிரதேசங்கள் என மூன்று வகைகளாகப்
பிரித்து இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
இந்தப்
பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. மஹாராஷ்டிரா இரண்டாவது இடத்தையும் கேரளா மூன்றாவது இடத்தையும்
பிடித்துள்ளது. ஒடிசா, பீகார், உத்தரப்பிரதேசம்,
கோவா மற்றும் ஜார்ஜண்ட் ஆகிய
மாநிலங்கள் நிர்வாகத்திறன் மிகவும் குறைவாக உள்ள
மாநிலங்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.
வடகிழக்கு
மாநிலங்களில் ஹிமாச்சல பிரதேசம் சிறந்த மாநிலங்களின் பட்டியலில்
முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஜம்மு காஷ்மீர், நாகலாந்து,
மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் கடைசி இடங்களைப் பிடித்துள்ளன.
யூனியன் பிரதேசங்களில் புதுச்சேரி முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய மத்திய அமைச்சர்
ஜிதேந்திர சிங், “அறிவியல்பூர்வமாக பல்வேறு
அளவுகோலின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது”
என்றார்.
வேளாண்மை,
வர்த்தகம், மனிதவள மேம்பாடு, சுகாதாரம்,
உள்கட்டமைப்பு, பொருளாதார நிர்வாகம், நீதித்துறை, பாதுகாப்பு, சுற்றுச்சூழல், பாதுகாப்பு போன்ற பத்துக்கும் மேற்பட்ட
துறைகளின் செயல்பாடுகளை அடிப்படையாக வைத்து இந்தப் பட்டியல்
தயாரிக்கப்பட்டுள்ளது. வேளாண்மை மற்றும் அதன் தொடர்புடையத்
துறைகளில் மத்தியப் பிரதேசம், மிசோரம் போன்ற மாநிலங்கள்
சிறப்பாகச் செயல்படுகின்றன.
வளர்ச்சி
விகிதம், உணவு தானியங்களின் உற்பத்தி,
பால் மற்றும் இறைச்சி உற்பத்தி,
பயிர்க் காப்பீடு போன்றவற்றை அடிப்படையாக வைத்தும் மதிப்பிடப்பட்டுள்ளது. மாநிலங்களின் வர்த்தகம் மற்றும் தொழில்களின் செயல்திறனை
மதிப்பிடுகையில், ஜார்கண்ட், உத்தரகண்ட் மற்றும் டெல்லி ஆகிய
மாநிலங்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கின்றன.
ஜப்பானில் 100 ஆண்டுகளில் இல்லாத பிறப்பு விகித வீழ்ச்சி: அரசு அதிர்ச்சி
ஜப்பானில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் 2019 ஆம் ஆண்டில் குழந்தை பிறப்பு விகிதம் மிகக் குறைவாக இருந்ததால் அந்நாடு அதிர்ச்சி அடைந்துள்ளது. மேலும் மக்கள் தொகை பெருக்க அந்நாடு பல்வேறு திட்டங்களை தீட்டி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஜப்பான் நாட்டில் கடந்த 1899ம் ஆண்டு முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இதில் இந்த ஆண்டு 8 லட்சத்து 64 ஆயிரம் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளதாகவும், கடந்த நூறு ஆண்டுகளில் மிகக் குறைந்த குழந்தை பிறப்பு விகிதம் இந்த ஆண்டுதான் என்றும் ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.
ஒரு பக்கம் தொழில் வளர்ச்சியில் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் ஜப்பான் நாடு, மக்கள் தொகை எண்ணிக்கையில் குறைந்துகொண்டே வருவது அரசின் கவலையை அதிகரித்துள்ளது. எனவே மக்கள் தொகை பெருக்கத்தை அதிகரிக்க அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்ளும் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் அதிக சலுகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு பக்கம் குழந்தைகள் பிறப்பு மிக குறைந்துள்ள நிலையில், 2019ஆம் ஆண்டு மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அசாம் தவிர
மற்ற மாநிலங்களில் தேசிய மக்கள் தொகை
பதிவேடு கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல்
முதல் செப்டம்பர் வரை நடைபெறும் என்று
மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கேரளாவை
சேர்ந்த எழுத்தாளர் அருந்ததி ராய் டெல்லியில் நேற்று
முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் பேசும் போது கூறியதாவது “தேசிய
குடிமக்கள் பதிவேட்டின்முன்னோட்டமாக, தேசிய மக்கள் தொகை பதிவேடு
கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
இதில் திரட்டப்படும் தகவல்கள் மூலம்
தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படும். மத்திய
அரசு முஸ்லிம்களுக்கு எதிராக காய் நகர்த்தி வருகிறது. எனவே மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்புக்காக
வரும்போது உங்கள் பெயர் முகவரிகளை மாற்றி கொடுங்கள், உதாரணமாக பெயரைக்கேட்டால்
“ரங்கா -பில்லா” என்று கூறுங்கள், முகவரியை கேட்டால் “எண் 7, ரேஸ் கோர்ஸ்
சாலை – டெல்லி, என்று பிரதமிரின் முகவரியை கூறுங்கள்” இவ்வாறு பேசியிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் ராஜீவ் குமார் ரஞ்சன்,
அருந்ததி ராய் மீது புகார்
அளித்துள்ளார். அதில் “தேசத்தின் நலனுக்கு
எதிராக அருந்ததி ராய் பேசியுள்ளதாகவும் இதுகுறித்து
விசாரணை நடத்தி உரிய தண்டனை
வழங்க வேண்டும், அப்போதுதான் அவர் மீண்டும் அவதூறாக
பேச மாட்டார் ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை
சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க
போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அதிலும் தலைநகர் டெல்லியில்
ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் நடத்திய
தாக்குதலுக்கு பிறகு, அனைத்துத்தரப்பினரும் தங்களது எதிர்ப்பை பல்வேறு வகையிலும் வெளிப்படுத்தி
வருகின்றனர்.
சோனியா
காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா
காந்தி போன்ற காங்கிரஸ் கட்சியின்
மூத்த தலைவர்களும் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கெடுத்தனர்.
இந்த நிலையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய
உள்துறை அமைச்சர் அமித்ஷா, “குடியுரிமை சட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கு
தவறான கருத்துக்களை தெரிவித்து டெல்லியில் எதிர்க்கட்சிகள் வன்முறையை தூண்டி வருகின்றன, இதுபோன்ற
துக்கடா கேங்குகளுக்கு, உரிய பாடம் கற்பிக்கப்படும்”
என்று தெரிவித்தார்.
மேலும்
அவர் பேசுகையில், “குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி டெல்லி
மக்களை தவறாக வழிநடத்துவதன் மூலம்
டெல்லியின் அமைதியைக் காங்கிரஸ் குலைத்துள்ளது. இந்த சட்டத் திருத்தம்
பற்றி நாடாளுமன்றத்திற்குள் விவாதிக்கப்பட்டது. அங்கு யாரும் எதுவும்
பேசத் தயாராக இல்லை. நாடாளுமன்றத்தை
விட்டு வெளியே வந்தவுடன், குழப்பத்தை
ஏற்படுத்தத் தொடங்கி, டெல்லியை கலவர பூமியாக மாற்றிவிட்டனர்.
பிரதம மந்திரி அவாஸ் யோஜனாவின்
பலன்களை, ஏழை மக்களுக்கு, முதல்வர்
கெஜ்ரிவால் வழங்கவில்லை. ஏனெனில் அந்த திட்டத்தில்
பிரதமரின் பெயர் இணைக்கப்பட்டுள்ளது. மோடி
வேகமாக செயல்பட விரும்புகிறார், ஆனால்
இந்த ஆம் ஆத்மி அரசு,
அதற்கு ஒரு பெரிய தடையாக
உள்ளது.
கெஜ்ரிவால்
முதல்வராகி, சுமார் 60 மாதங்கள் ஆகிவிட்டன, வாக்குறுதிகள் அனைத்தையும் ஏன் நிறைவேற்றவில்லை. இனியும்கூட
இந்த வாக்குறுதிகள் நிறைவேறப் போவதில்லை, விளம்பரத்தால் மட்டுமே அவர்கள் மக்களை
ஏமாற்றுகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் செய்யும்
ஒரே வேலை எதிர்ப்பு மற்றும்
மறியல் ஆகியவைதான்” என்று அமித் ஷா தெரிவித்தார்.