Home Blog Page 5820

ஓய்வு முடிவை அறிவித்த பிரபல வீரர் !

0

இந்திய மூத்த டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் அடுத்த ஆண்டு உடன் (2020)டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவைத்துள்ளார்.46 வயதான லியாண்டர் பேஸ் 28 ஆண்டுகளாக சர்வதேச டென்னிஸ் விளையாடி வருகிறார் இதுவரை 18 இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி மகேஷ் பூபதியுடன் இணைந்து பல வெற்றிகளை குவித்துள்ளார். அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இந்த இணை பிரிந்தது.

மேலும் 7 ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஒரே இந்தியர் ஆவார் 1996 ஆம் ஆண்டு அட்லாண்டா ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தியாவுக்கு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று தந்தார்.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் இரட்டையர் பிரிவில் அதிக வெற்றிகளை குவித்த பெருமையும் இவருக்கு உள்ளது.மேலும் இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்

நான் 2020 ஆம் ஆண்டு சீசன் ஆவலுடன் எதிர்பார்த்து எதிர்நோக்கி உள்ளேன். எனது அணியினருடன் பயணித்த சில குறிப்பிட்ட தொடர்களை தேர்வு செய்து விளையாடுவேன் உலகம் முழுவதும் எனது நண்பர்கள் ரசிகர்களுடன் மகிழ்ச்சியைக் கொண்டாடும் இந்த ஆண்டு எனக்கு உணர்வுபூர்வமாக இருக்கும் உங்களுக்கு நன்றி சொல்லும் ஆண்டாக இதை எடுத்துக் கொள்வேன் என்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இரட்டையர் பிரிவில் முன்னாள் நம்பர் ஒன் வீரராக இருந்த பேஸ் தற்போது இரட்டையர் தரவரிசையில் 105 இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தேசிய கீதம் தமிழில் பாட தடை! சிங்கள இனவெறியின் உச்சம் என இராமதாஸ் கண்டனம்

0

இலங்கையில் தேசிய கீதம் தமிழில் பாட தடை! சிங்கள இனவெறியின் உச்சம் என இராமதாஸ் கண்டனம்

இலங்கையில் வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் அந்த நாட்டின் 72-ஆவது விடுதலை நாள் விழாவில், தேசிய கீதத்தின் தமிழ் வடிவம் இசைக்கப்படாது என்று கோத்தபாய இராஜபக்சே அரசு அறிவித்திருக்கிறது. இது இலங்கையில் வாழும் தமிழர்களை அவமதிக்கும் செயல் என்பது மட்டுமின்றி, உலக அளவில் கடைபிடிக்கப்பட்டு வரும் மரபுகளுக்கும் எதிரானது ஆகும்.

‘‘ஸ்ரீலங்காத் தாயே’’ என்று தொடங்கும் இலங்கை தேசிய கீதத்தின் தமிழ் வடிவத்திற்கு அந்நாட்டு அரசியலமைப்புச் சட்டம் அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. இதற்காக அந்நாட்டு அரசியலமைப்பு சட்டத்தின் மூன்றாவது அட்டவணையில் தமிழ் வடிவ தேசிய கீதம் சேர்க்கப்பட்டிருக்கிறது. அத்தகைய தேசிய கீதம் இலங்கையின் விடுதலை நாள் விழாவில் இசைக்கப்படாது என்பது அந்நாட்டு ஆட்சியாளர்களின் சிங்கள இனவெறியை வெளிப்படுத்தும் செயலாகும். இது கடுமையாக கண்டிக்கத்தக்கதும் ஆகும்.

இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் பல மொழிகள் பேசப்பட்டாலும் ஒற்றை மொழியில் தான் தேசிய கீதம் இசைக்கப்படுவதாகவும், அதே வழக்கத்தை இலங்கையிலும் நடைமுறைப்படுத்தும் நோக்கத்துடன் தான் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படுவது நிறுத்தப்படுவதாகவும் இலங்கை அரசு கூறியுள்ளது. இது அபத்தமான வாதம் ஆகும். உலகில் பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, கனடா உள்ளிட்ட ஏராளமான நாடுகளில் அங்கு பேசப்படும் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் தேசியகீதம் இசைக்கப் படுகிறது. அதேபோல், சிங்கப்பூரில் 75% சீனர்கள் வாழும் போதிலும் சீன மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படுவதில்லை; மாறாக, சிறுபான்மை மொழியான மலாய் மொழியில் தான் இசைக்கப்படுகிறது.

இந்தியாவிலும் தேசிய கீதம் பெரும்பான்மை மொழியான இந்தியில் இசைக்கப்படுவதில்லை; மாறாக சிறுபான்மை வங்க மொழியில் தான் இசைக்கப்படுகிறது. இவற்றைக் கடந்து நாட்டை ஒருங்கிணைக்கும் கருவியாக தமிழ் தேசிய கீதம் கருதப்படும் நிலையில், அதை நீக்குவது இனவெறியின் உச்சமாகும்.

1948-ஆம் ஆண்டு இலங்கை விடுதலை அடைந்த நிலையில், 1949-ஆம் ஆண்டு நடந்த இரண்டாவது விடுதலை நாள் விழாவில் தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன. தொடர்ந்து தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாநிலங்களில் தமிழிலும், சிங்களர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் சிங்களத்திலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு வந்தது. 2009-ஆம் ஆண்டு இலங்கைப் போர் முடிவடைந்த பிறகு 2011-ஆம் ஆண்டு முதல் இலங்கையில் எந்தப் பகுதியில் நடைபெறும் விடுதலை நாள் விழாவாக இருந்தாலும் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாது என்று 2010-ஆம் ஆண்டு மகிந்த இராஜபக்சே அரசு அதிகாரப்பூர்வமற்ற வகையில் அறிவித்தது. அதன்பின் 5 ஆண்டுகள் நீடித்த தடை, தமிழர் கட்சிகளின் ஆதரவுடன் மைத்திரிபால சிறிசேனா அரசு பதவியேற்றவுடன் அகற்றப்பட்டது. 2016-ஆம் ஆண்டு நடந்த விடுதலை நாள் விழாவில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

தமிழ் தேசிய கீதத்திற்கான தடையை அகற்றிய சிறிசேனா இலங்கையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், இது தமிழர்களை சமாதானப்படுத்துவதற்கான முயற்சி என்றும் கூறியிருந்தார். இலங்கையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்குடன் முந்தைய அரசால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை இன்றைய அரசு ரத்து செய்கிறது என்றால், தங்களுக்கு வாக்களித்த பெரும்பான்மை சிங்களர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக சிறுபான்மை தமிழர்களை பல வழிகளில் அவமதிக்கவும், கொடுமைப்படுத்தவும் கோத்தபாய அரசு தயாராகிவிட்டது என்பது தான் பொருளாகும்.

இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்ற பிறகு பல்வேறு தருணங்களில் தமது அரசின் கொள்கைகள் குறித்து பேசிய அதிபர் கோத்தபாய, இலங்கையில் பெரும்பான்மை சிங்களர்களின் விருப்பங்களுக்கு மாறாக தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க முடியாது என்று உறுதியாக கூறியிருக்கிறார். இந்தியா- இலங்கை உடன்பாட்டின் அடிப்படையில் செய்யப்பட்ட 13-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்பதுடன், தமிழும் இலங்கையின் தேசிய, அலுவல் மொழியாக்கப்பட வேண்டும். ஆனால், தமிழில் தேசிய கீதம் பாட தடை விதித்திருப்பதன் மூலம், 13-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை மதிக்க மாட்டோம் என்று இலங்கை சொல்லாமல் சொல்லியிருக்கிறது. ஏற்கனவே, தமிழர்கள் இலங்கையில் மூன்றாம் தர குடிமக்களாக வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்று அப்போதைய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவும், போர்ப்படைத் தளபதி சரத் பொன்சேகாவும் கூறியிருந்தனர். இவற்றை வைத்து பார்க்கும் போது இலங்கையில் சிங்களர்களுடன் இணைந்து தமிழர்கள் கண்ணியமாக வாழ்வதற்கு சிறிதும் வாய்ப்பில்லை என்பது உறுதியாகிறது.

இத்தகைய சூழலில் தமிழர்கள் அவர்களின் தாயகமான ஈழத்தில் கண்ணியத்துடன் வாழ்வதற்கு வகை செய்வது இந்தியா உள்ளிட்ட நாடுகளின் கடமையும், பொறுப்பும் ஆகும். எனவே, ஐக்கிய நாடுகள் அவையின் மூலம் உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தி, அவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் தமிழீழம் அமைத்துத் தர இந்தியா உள்ளிட்ட நாடுகள் முன்வர வேண்டும்.

“அவரது பேச்சைவிட, அவரது அமைதி சக்தி வாய்ந்தது” – வாஜ்பாய்க்கு பிரதமர் மோடி புகழாரம் !!!

0

முன்னாள் பிரதமர் வாஜ்பாய், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது பிறந்த டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள தலைமை செயலகமான லோக் பவனில் அவரது பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. ரூ.89.6 லட்சம் மதிப்பில் வாஜ்பாய்க்கு அமைக்கப்பட்டுள்ள 25 அடி உயர வெண்கலச் சிலையை ஜெய்ப்பூரைச் சேர்ந்த பிரபல சிற்பி ராஜ் குமார் பண்டிட் வடிவமைத்துள்ளார்.

வாஜ்பாயின் 95ஆவது பிறந்த தினத்தையொட்டி லக்னோவில் உள்ள தலைமை செயலகமான லோக் பவனில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்சியில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் அனந்தி பென் பாட்டீல், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சிலை திறப்பு நிகழ்ச்சியை தொடர்ந்து அடல் பிகாரி மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது  பிரதமர் மோடி பேசியதாவது, “எப்போது பேச வேண்டும், எப்போது அமைதி காக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர் வாஜ்பாய். அவரது பேச்சைவிட அவரது அமைதி சக்தி வாய்ந்தது. நாட்டில் மிக நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் இழுபறியில் இருந்த சில முக்கிய விஷயங்கள் அமைதியான முறையில் நிறைவேற்றுபட்டு வருகின்றன. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370ஆவது பிரிவு, ராமர் கோயில் பிரச்சினைகள் சுமூகமாக முடிக்கப்பட்டன. அதேபோல் பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து வந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் திட்டமும் முன்வைக்கப்பட்டுள்ளது. 130 கோடி இந்தியர்களும் நம்பிக்கையுடன் இத்தகைய சவால்களுக்கான தீர்வை கண்டுள்ளனர். ஆனால் இதை புரிந்துகொள்ளாமல், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அடுத்த தலைமுறையினருக்கு சொந்தமான சொத்துக்களை அடித்து நொறுக்குகின்றனர்.

அத்துடன் போரட்டம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுட்டு பொதுச் சொத்துகளுக்கு சேதம் விழைவிப்போர் வீட்டில் அமைதியாக அமர்ந்து யோசிக்க வேண்டும், தங்களது செயல் சரியா தவறா என்று  தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்”  எனவும் பிரதமர் மோடி அப்போது வலியுறுத்தினார்.

’தளபதி 64’ படம் குறித்து ஒரு வார்த்தை கூட கூறமுடியாது: ஆண்ட்ரியா பேட்டி

0

’தளபதி 64’ படம் குறித்து ஒரு வார்த்தை கூட கூறமுடியாது: ஆண்ட்ரியா பேட்டி

’தளபதி 64’ படம் குறித்து ஒரு வார்த்தை கூட தன்னால் கூற முடியாது என்றும் அதற்கு தனக்கு அதிகாரம் இல்லை என்றும் நடிகை ஆண்ட்ரியா பேட்டி ஒன்றில் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் மாளவிகா மோகனன் நாயகியாக நடித்திருந்த போதிலும் முக்கிய கேரக்டரில் நடிகை ஆண்ட்ரியா நடித்து வருகிறார். இவர் தான் படம் முழுவதும் விஜய்க்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு நடத்தி வருவதாகவும் அவர் இந்த படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் மாளவிகா மோகனனை விட ஆண்ட்ரியா தான் அதிக நாட்களில் இந்த படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகை ஆண்ட்ரியா ’தளபதி 64’ படம் குறித்து கூறுமாறு கேட்ட போது ’இந்த படம் குறித்தும், இந்த படத்தில் என்னுடைய கேரக்டர் கொடுத்து ஒரு வார்த்தை கூட தன்னால் கூற முடியாது என்றும் அதற்கு தனக்கு அதிகாரம் இல்லை என்றும் கூறினார்.

மேலும் இதுவரை நடித்திராத ஒரு முக்கியமான கேரக்டரில் இந்த படத்தில் நடித்து இருப்பதாகவும் விஜய்யுடன் தன்னை ஸ்கிரீனில் பார்க்கும் ரசிகர்கள் நிச்சயம் ஆச்சரியம் அடைவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். அதே போல் விஜய்யுடன் நடித்தபோது தான் அவருடைய எளிமை, அவருடைய குணம், அவருக்கு ஏன் இத்தனை கோடி ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதும் தனக்கு புரிந்ததாகவும் அவர் தன்னுடைய பேட்ட்யில் தெரிவித்தார்.

அயோத்திக்கு ஆபத்து – உளவுத்துறை எச்சரிக்கை.

0

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி நில வழக்கில், உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 9-ஆம் தேதி தீா்ப்பளித்தது. அங்கு சா்ச்சைக்குள்ளாகியிருந்த 2.77 ஏக்கா் நிலத்தில் ராமா் கோயில் கட்ட அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றம், இதற்காக 3 மாதங்களுக்குள் ஓா் அறக்கட்டளையை ஏற்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

மேலும், முஸ்லிம் தரப்பினா் புதிதாக மசூதி கட்டிக்கொள்வதற்கு அயோத்தி நகரிலேயே 5 ஏக்கா் நிலத்தை ஒதுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த தீா்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்கள் அனைத்தும் கடந்த 12-ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டன. உச்சநீதிமன்றத்தில் இறுதி வாய்ப்பாக, சீராய்வு மனு தாக்கல் செய்வது மட்டுமே உள்ளது.

இதனிடையே, கடந்த 16-ஆம் தேதி ஜார்கண்டில் பிரசாரம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ‘அயோத்தியில் 4 மாதங்களுக்குள் பிரம்மாண்ட ராமா் கோயில் கட்டப்படும்’ என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதுபோன்ற சூழலில், அயோத்தியில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது.

ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு, அண்டை நாடான, பாக்., எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதால், எவ்வித தாக்குதலிலும், பாக்., ராணுவமோ, அதன் ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்புகளோ மேற்கொள்ள முடியவில்லை. சமீபத்தில், குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ‘இது முஸ்லிம்களுக்கு எதிரானது’ என, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்து வருகின்றன.இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் ஹிந்து, முஸ்லிம் இடையே பிரச்னையை ஏற்படுத்தும் வகையில், அண்டை நாடான, பாக்., சதி திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. அயோத்தியில், ராம ஜென்ம பூமி இடத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது.பாக்., அரசின் ஆதரவு பெற்ற, ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பு, இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அயோத்தியில் தாக்குதல் நடத்தும்படி, தன் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு, சமூக வலைதளத்தில், ஜெய்ஷ் – இ – முகமது தலைவர் மசூத் அசார் உத்தரவிட்டுள்ளார். இந்தத் தகவல், நமது உளவு அமைப்புகளுக்கு கிடைத்துள்ளது.அதையடுத்து, அயோத்தி உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய துாதரகங்களை தாக்க, பாக்., உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ., திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இது குறித்து உளவு அமைப்புகள் கூறியுள்ள தாவது:ஆப்கானிஸ்தானின் காபூலில் இந்திய துாதரகம் மீது தாக்குதல் நடத்த, பாக்., உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ., திட்டமிட்டுள்ளது. இதற்காக, ஆப்கானிஸ்தானில் உள்ள சில பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

வெடிகுண்டுகள் நிரப்பிய கார் மூலம் தாக்குதல் நடத்தப்படலாம் என, தெரிகிறது. லஷ்கர் – இ – தொய்பா உட்பட பல பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய, லாகூரைச் சேர்ந்த சயிபுல்லா என்ற பயங்கரவாதியிடம் இந்தப் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது.காபூலைத் தவிர, ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் மற்றும் ஹெராத்தில் உள்ள இந்திய துாதரகங்களை தாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு, உளவு அமைப்புகள் கூறியுள்ளன.

தொடங்கியது சூரிய கிரகணம்?

0

சூரியன், நிலவு, பூமி என மூன்றும் ஒரே நேர் கோட்டிற்கு வருகின்றன. இதனால் சூரிய வெளிச்சத்தை சில மணி நேரம் நிலவு மறைக்கும். சூரியனை முழுவதுமாக நிலவு மறைப்பதால் முழு சூரிய கிரகணம் என படுகிறது.

சூரியனை நிலா முழுமையாக மறைத்தால் அது முழு சூரியனின் மையப் பகுதியை மட்டும் சந்திரன் மறைத்து விளிம்பில் வளையம் போல விழுகிறபோது அது வளைய சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. இந்த அரிய நிகழ்வு இன்று காலை எட்டு மணிக்கு தொடங்கிய இந்த கிரகணம் 11.16 வரை தெரியும் மக்கள் வெறும் கண்களில் பார்க்க கூடாது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

சூரிய கிரகணத்தைப் பார்ப்பதற்காக, மாநிலம் முழுவதும் சிறப்பு  ஏற்பாடுகளை தமிழ் நாடு அறிவியல் இயக்கம் செய்துள்ளது. சென்னையில் பிர்லா கோளரங்கம் மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் பார்ப்பதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்பகுதிகளுக்கு ஏராளமான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சென்று, சூரிய கண்ணாடி மூலமாக கிரகணத்தை பார்த்து ரசித்தனர். 

இதற்கு பிறகு 2031 ஆம் ஆண்டு தான் தமிழ்நாட்டில் மதுரை மற்றும் தேனியில் சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்.

ஜெ.,வின் சொத்துக்கள் முழுவதும் எனக்கே!!! – சொந்தம் கொண்டாடும் சசிகலா ?

0

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர்  5’ம்  தேதி மரணமடைந்தார் . அவரது மறைவிற்கு பின் அவரது தோழியான சசிகலா பிப்ரவரி மாதம் சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை உறுதி செய்யப்பட்டு கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சசிகலா குடும்பத்தினர், உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் உட்பட, அவருக்கு தொடர்புடைய, 187 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனை, 2017 நவம்பரில் நடந்தது.

அதேபோல, சென்னை, போயஸ் கார்டனில் உள்ள, ஜெ., வீட்டில் சோதனை நடந்தபோது, வருமான வரித் துறை, ஒரு புத்தகத்தை கைப்பற்றியது. அந்த புத்தகத்தில், பல்வேறு நிறுவனங்களின் கணக்கு, வழக்குகள் குறித்து விபரங்கள் இடம் பெற்றிருந்தன.இந்த சொத்துக்கள் வாங்கியது, பல்வேறு நிறுவனங்களில் பங்குதாரராக இருப்பது குறித்து, விளக்கம் கேட்டு சசிகலாவுக்கு, 2017 அக்.,15ல், வரித்துறை, ‘நோட்டீஸ்’ அனுப்பி இருந்தது. இதற்கு, சசிகலா சிறையில் இருப்பதால், பதில் அளிக்க அவசாகம் கேட்டனர்.அதன் பின், சசிகலா தரப்பு ஆடிட்டர், 2017 டிச., 11ல், நோட்டீசுக்கு விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையை வருமான வரித்துறையினர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இந்த அறிக்கை குறித்த விபரங்கள், மிக தாமதமாக கசியத் துவங்கி உள்ளன.

சசிகலா, 1,600 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் வாங்கியது எப்படி; எங்கெங்கே சொத்துக்கள் உள்ளன; பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, 237 கோடி ரூபாய்க்கு, புதிய நோட்டுக்களை சசிகலா தரப்பினர் மாற்றினர் என்பது போன்ற தகவல்கள் வெளியாகின. தற்போது, இது தொடர்பான கூடுதல் விபரங்கள் வெளியாகி உள்ளன.

கோடநாடு எஸ்டேட், ராயல் வேலி புளோரிடேல் எக்ஸ்போர்ட், கிரீன் டீ எஸ்டேட், ஜெயா பப்ளிக்கேஷன்ஸ், சசி எண்டர்பிரைசஸ், ஜெயா பார்ம் ஹவுஸ், ஜெயா ஹவுசிங் டெவலப் மென்ட் ஆகிய நிறுவனங்களில், ஜெ.,வும், சசிகலாவும் பங்குதாரராக இருந்துள்ளனர்.மேலும், இந்தோ தோகா கெமிக்கல் நிறுவனம், ஆஞ்சநேயா பிரின்டர்ஸ் ஆகிய நிறுவனங்களில் சசிகலா பங்குதாரராகவும், ஜாஸ் சினிமாசில், 41.66 லட்சம் பங்குகளை சசிகலா வைத்துள்ளார். நமது எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயா பிரிண்டர்ஸ் ஆகியவற்றின் உரிமையாளர் நான் தான் என, சசிகலா தெரிவித்து உள்ளார்.ஜெ.,வின் கோடநாடு எஸ்டேட் மற்றும் இதர நான்கு நிறுவனங்களில் பங்குதாரராக இருந்த சசிகலா, ஜெ., இறந்த பின், அந்த நிறுவனங்களின் பங்குதாரர் உரிமையை கலைத்து, உரிமையாளர் ஆனார்.

ஜெ., இறந்த பின், உரிமையாளரான சசிகலா, வணிகத்தில் தீவிரமாக ஈடுபட்டார். இருந்தாலும், 2016 டிச., 6 முதல், 2017 மார்ச், 31 வரை, வணிகத்தில் தீவிரம் காட்டவில்லை என, அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.இந்த வகையில், ஜெ.,வின் சொத்துக்கள் முழுவதும் என்னுடையது தான் என, சசிகலா சொந்தம் கொண்டாட துவங்கி உள்ளார். சசிகலா தொடர்பாக தினம் தினம் வெளியாகும் தகவல்கள் அனைத்தும் உண்மை தான் என்பதால், வருமான வரித் துறையும் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் உள்ளது. தொடர்ந்து வரும் தகவல்களால், சசிகலா தரப்பினர் கலக்கம் அடைந்து உள்ளனர்.

ரூ.8 ஆயிரம் விலையில் நோக்கியா அறிமுகம் செய்துள்ள 2.3 ஆண்ட்ராய்டு போன்

0

ரூ.8 ஆயிரம் விலையில் நோக்கியா அறிமுகம் செய்துள்ள 2.3 ஆண்ட்ராய்டு போன்

செல்போனை இந்தியாவில் முதல்முதலில் அறிமுகம் செய்தது நோக்கியா தான். ஆனால் அதன் பின் தொழில் போட்டிகள் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ஒதுங்கியிருந்த நோக்கியா தற்போது மீண்டும் களமிறங்கியுள்ளது.நோக்கியா – 2.3′ என்ற புதிய மாடல் ஆண்ட்ராய்டு போனை அறிமுகம் செய்துள்ள நோக்கியா, தற்போது, இந்தியாவிலும் இந்த போன் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.8199 என்ற விலையில் அறிமுகமாகியிருக்கும் இந்த மொபைல்போனில் உள்ள ஹார்டுவேர் பிரச்னைகளுக்கு, ஓராண்டுக்கு மாற்றித் தரும் வகையிலான கேரண்டி கொடுக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த போனுடன் இணைப்பாக வரும் பொருட்களுக்கு, ஆறு மாத வாரண்டியும் தரப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

6.2 இன்ச் எச்.டி., டிஸ்ப்ளே கொண்டுள்ள இந்த போனில் இரண்டு பின்புற கேமராக்கள் உள்ளன. மேலும், 4,000 எம்.ஏ.எச்., திறன் கொண்ட பேட்டரி, ‘கூகுள் அசிஸ்டென்ட்’டுக்காக பிரத்யேக பட்டன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

32 ஜி.பி ஸ்டோரேஜ் உள்ள இந்த மொபைல் போனில் மேலும் ஸ்டோரேஜ் தேவையெனில் மைக்ரோ எஸ்.டி., கார்டு மூலம், 400 ஜி.பி., வரை சேமிக்கலாம். இந்த புதிய வகை போன் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுனாமி 15ஆம் ஆண்டு நினைவு தினம்!

0

2004 கிறிஸ்துமஸ் கொண்டாடி விட்டு உறங்க சென்ற நிறைய பேருக்கு தெரியாது அந்த கிறிஸ்துமஸ் தான் தமக்கு கடைசி கிறிஸ்துமஸ் என்று ஆம் இந்தியாவே ஆட்டி போட்ட ஆழி பேரலை அது வரை இந்தியர்களுக்கு சுனாமி என்றால் என்ன வென்றே தெரியாது.

2004 டிசம்பர் காலை 6.30 மணிக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள சுமத்ரா தீவில் 9.2 ரிக்டர் நில நடுக்கம் ஏற்பட்டு அது சுனாமி பேரலையாக மாரி இந்தியாவை தாக்கியது 8 மணிக்கு இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து, மியான்மார், தான்சேனியா, கென்யா போன்ற நாடுகளில் சுனாமி ஏற்பட்டது இதில் சுமார் 2, 30, 000 பேர் வரை உயிர் இழந்தனர்.

சுனாமி 15ஆம் ஆண்டு நினைவு தினம்!

இந்தியாவை பொறுத்தவரை அந்தமான், சென்னை,கடலூர், பாண்டிச்சேரி, நாகப்பட்டினம் அதில் அதிகமாக பாதிக்க பட்டது நாகப்பட்டினம் மாவட்டம் தான். இந்த சுனாமி பாதிப்பில் இந்தியாவில் மட்டும் சுமார் 10000பேரும், இந்தோனோஷியாவில் 94000பேரும், இலங்கையில் 30196பேரும், தாய்லாந்தில் 5187பேரும் கோரத்தாண்டவத்திற்கு பலியாகினர். பலர் உடமைகளையும் இழந்தனர்.

இன்று சுனாமி தாக்கி 15 ஆம் ஆண்டு நினைவு ஆகும். சுனாமியால் தம் உறவினர்களை இழந்த சொந்தங்கள் கடற்கரையில் பால் ஊற்றி தங்களது உறவினர்களை நினைவுபடுத்தி கொள்வது வழக்கமான ஒன்றாக உள்ளது. என்ன தான் மனிதன் விஞ்ஞான வளர்ச்சி அடைந்திருந்தாலும் இது மாதிரி அழிவுகள் மூலம் இயற்கை தன் இருப்பைக் காட்டிக் கொண்டுதான் இருக்கிறது.

ஸ்டாலினுக்கு செக் வைக்க தயாரான சோனியா! சிதம்பரத்தை வைத்து ஆடப்போகும் காங்கிரஸ்

0

ஸ்டாலினுக்கு செக் வைக்க தயாரான சோனியா! சிதம்பரத்தை வைத்து ஆடப்போகும் காங்கிரஸ்

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பா.சிதம்பரத்தை நியமிக்க அகில இந்திய காங்கிரஸ் தலைமை பரிசீலிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன,.

தற்போது இடைக்கால தலைவராக இருக்கும் சோனியா காந்தி வயது முதிர்வு காரணமாக மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களை வீரியமாக எடுத்து செல்ல முடியாமல் தவித்து வருகிறார்,. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவர்களும் தற்போதைக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியை மீண்டும் ஏற்க மறுத்து வருகிறார்,. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கட்சியை மேலும் பலப்படுத்தி பழைய நிலைக்கு கொண்டுவர சோனியாகாந்தி முடிவெடுத்துள்ளார்,.

ஏற்கனவே ராஜதந்திரம் மூலம் மகாராஷ்டிராவை பாஜகவிடம் இருந்து கைப்பற்றியது போல் காங்கிரசுக்கு செல்வாக்கு உள்ள மாநிலங்களை மீண்டும் மாநிலக் கட்சிகளின் உதவியுடன் கைப்பற்ற வேண்டும் என்ற முடிவில் சோனியா காந்தி தீவிரமாக செயல்படுகிறார்,. சிறந்த பொருளாதார வல்லுநர் பா.சிதம்பரத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவராக நியமித்து பாரதிய ஜனதா கட்சிக்கு பொருளாதார வீழ்ச்சியின் வாயிலாக நெருக்கடியை கொடுக்க திட்டம் வகுத்து வருகிறார் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன,.

மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக பெற்ற வெற்றியின் மூலம் மு.க.ஸ்டாலின் அகில இந்திய அளவில் மிகப்பெரிய தலைவராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு வருகிறார், இதற்கு துணையாக திமுக எம்பிக்கள் இருந்து வருகின்றனர்,. மு.க.ஸ்டாலினின் இந்த வளர்ச்சி பா.சிதம்பரத்திற்கு நெருக்கடியை உருவாக்கும் என தமிழக காங்கிரஸார் அகில இந்திய தலைமை பொறுப்பாளர்களிடம் சொல்லி வருகின்றனர்,.

தேசிய அளவில் சிறந்த பொருளாதார நிபுணரும் முன்னாள் மத்திய அமைச்சரும் போன்ற பெருமை பா.சிதம்பரத்திற்கு இருக்கின்றது,. ஸ்டாலின் நமக்கு பின் தான் என்றுமே அடையாளமாக இருக்க வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சிதம்பரமும் காய் நகர்த்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன,.

ஐ.என்.எக்ஸ் வழக்கில் சிக்கி தவித்து வரும் சிதம்பரத்தை தற்போது காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டால் நமக்கு மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கும் என்று இதற்கு காங்கிரஸின் மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.