Home Blog Page 5819

அன்புமணி மீது வீண்பழியை சுமத்த திமுகவிற்கு பிரசாந்த்கிஷோர் வகுத்து கொடுத்த திட்டம்! பாமக அதிர்ச்சி தகவல்

0

அன்புமணி மீது வீண்பழியை சுமத்த திமுகவிற்கு பிரசாந்த்கிஷோர் வகுத்து கொடுத்த திட்டம்! பாமக அதிர்ச்சி தகவல்

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவில்லை என்று அப்பட்டமான பொய் செய்தியை டைம்ஸ் ஆப் இந்தியா என்ற பிரபலமான ஆங்கில நாளிதழ் வெளியிட்டது,. இதனை மறுத்து ஆதாரத்துடன் தட்டிக் கேட்க சென்ற பாமக செய்தி தொடர்பாளர் வினோபா பூபதி மீது தாக்குதல் நடத்த அங்குள்ள நாளிதழ் ஊழியர்கள் முற்பட்டனர்,.

இதனை திரித்து திமுக செய்தி தொடர்பாளர் இளங்கோவன் பாமக மீது அப்பட்டமான பழியை சுமத்தி அறிக்கை விட்டார், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாமக வழக்கறிஞர் கே.பாலு அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்,

இதனை தொடர்ந்து, பாமகவைவும் அதன் தலைவர் அன்புமணியும் சிறுமைப்படுத்த கார்ப்பரேட் அரசியல் புரோக்கர் என்று அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோர் திமுகவிற்கு வகுத்துக் கொடுத்துள்ள திட்டத்தை பசுமைத் தாயகம் தலைவர் திரு. அருள் ரத்தினம் அவர்கள் அம்பலப்படுத்தியுள்ளார்

அதன் விபரம்!

“பிஹாரி பிராமணரின் வியூகம்: திமுகவின் கூலிப்படை பாய்ச்சல்!”

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தற்போது பிஹாரி பிராமணர் பிரசாந்த் கிஷோர் பாண்டேவின் பாதங்களில் சரணடைந்திருப்பது அனைவரும் அறிந்ததுதான். பிரசாந்த் கிஷோர் பாண்டேவின் முக்கியமான தந்திரங்களில் ஒன்று – அவர் வேலை செய்யும் கட்சிக்கு எதிராக வலிமையாக இருக்கும் தலைவர்கள் குறித்து பொய்யான செய்திகளை பரப்புவது ஆகும்.

2014 நாடாளுமன்றத் தேர்தல், பீஹார் தேர்தல், பஞ்சாப் தேர்தல், மணிப்பூர் தேர்தல், ஆந்திர தேர்தல் என பிரசாந்த் கிஷோர் பாண்டே இதற்கு முன்பு வேலை செய்த அனைத்து இடங்களிலும் அவர் இத்தகைய சதித்திட்டத்தை அரங்கேற்றியுள்ளார். ஹிட்லரின் போய்ச்செய்தி ஆலோசகர் கோயபல்ஸ் காட்டிய அதே வழியை பிரசாந்த் கிஷோர் பாண்டே பின்பற்றுகிறார். இதற்காக பலநூறு கோடி பணம் லஞ்சமாக ஊடகங்களுக்கும், சமூக ஊடகங்களில் செய்திபரப்பும் கூலிப்படைக்கும் தரப்படுவதாக கூறப்படுகிறது.

“டைம்ஸ் ஆப் இந்தியா எடுத்துக்காட்டு”

மு.க. ஸ்டாலினை பெரிய தலைவராக காட்ட வேண்டும் என்றால், அதற்காக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் உள்ளிட்டவர்களை சிறுமைப்படுத்தி காட்ட வேண்டும் – என்பதை பிரசாந்த் கிஷோர் பாண்டே ஒரு உத்தியாக வகுத்துள்ளதாக தெரிகிறது.

டைம்ஸ் ஆப் இந்தியாவில் கோலோச்சும் மலையாள லாபியை விலைக்கு வாங்கி, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் குறித்த பொய் செய்தியை வெளியிட செய்திருப்பது இந்த சதியின் ஒரு அடையாளம் ஆகும்.

இதனை சமூக ஊடகங்களில் உடனடியாக பெரிதாக பகிரும்படி 200 ரூபாய்க்கு கூலிக்கு மாரடிக்கும் உபிஸ் கும்பலுக்கு ஆணையிடப்பட்டு, அதன்படி, டைம்ஸ் ஆப் இந்தியா பொய் செய்தியை உபிஸ் கும்பல் சமூக ஊடகங்களில் பெரிதாக பகிர்ந்து சுய அரிப்பை தீர்த்துக்கொண்டது. மறுபக்கம் ஒரு பதிவுக்கு 200 ரூபாய் கூலியும் பெற்றது (பிரசாந்த் கிஷோர் பாண்டே வந்தபிறகும் இந்த பேட்டா உயரவில்லை போலிருக்கிறது).

இந்நிலையில் – பாமகவின் சார்பில், டைம்ஸ் ஆப் இந்தியா நிர்வாகத்தின் ஒப்புதலுடன் அங்கு சென்ற பாமக செய்தி தொடர்பாளர் விநோபா பூபதி, பாமக தரப்பு நியாயங்களை எடுத்துவைத்தார்.

“கூலிப்படை தாண்டவம்”

பத்திரிகையில் வந்த பொய் செய்திக்கு எதிராக ஒரு நியாயமான விளக்கத்தை அளிப்பது இயல்பான, தார்மீகமான செயல். மேலும், பாமகவினர் மிரட்டினார்கள் என்று டைம்ஸ் ஆப் இந்தியா நிர்வாகம் யாரிடமும் கூறவில்லை. அப்படி ஒரு நிகழ்வு நடக்கவே இல்லை. ஒருவேளை உண்மையாகவே மிரட்டப்பட்டிருந்தால், இன்று அது தேசிய அளவில் முக்கியமான செய்தியாக ஆகியிருக்கும்.

ஆனால், எதுவுமே நடக்காத நிலையில், ‘பாமகவினர் பத்திரிகையை மிரட்டினார்கள்’ என்கிற பொய்யானை கோயபல்ஸ் செய்தியை வைத்து திமுக கூலிப்படை பலமுனை தாக்குதல் நடத்துகிறது.

  1. திமுக அறிக்கையும், பாலுவின் பதிலடியும்

திமுகவில் ‘முதல் கலைஞர் தொடங்கி, நான்காம் கலைஞர் வரை’ அனைவருக்கும் சாமரம் வீசிவரும் டி.கே.எஸ் இளங்கோவன், கார்ப்பரேட் கும்பல் அளித்த அவதூறு அறிக்கையை வெளியிட்டார் (இவரது அவதூறு அறிக்கைக்கு வழக்கறிஞர் பாலு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.)

  1. கூலி பத்திரிகையாளார் கும்பல்

மருமகனிடம் காலம் காலமாக கூலிவாங்கும் கும்பலை சேர்ந்த ஷபீர் அகமது என்பவர், கொந்தளித்து சமூக ஊடகத்தில் எழுதினார். அவரை தொடர்ந்து வரிசையாக கூலிப்படையினர் பூச்சாண்டி காட்டினார்கள்.

  1. போலி பத்திரிகையாளார் சங்கங்கள்

பொறுக்கி தின்பதற்காகவே சங்கம் நடத்தும் சாதிவெறி கும்பலை சேர்ந்த சிலர், குடித்துவிட்டு கிழக்கு கடற்கரையில் கும்மாளம் அடிப்பதற்காகவே வைத்திருக்கும் போலி பத்திரிகையாளார் சங்கம் சார்பில் கண்டனம் வெளியிட்டனர்.

  1. பதினைந்து கோடி பாலகிருஷ்ணன்

கடந்த தேர்தலில் திமுகவிடம் 15 கோடி பணம் வாங்கிய பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) – நடக்கவே நடக்காத சம்பவமான ‘டைம்ஸ் ஆப் இந்தியாவை பாமகவினர் மிரட்டினார்கள்’ என்பதை கண்டித்து கண்டன அறிக்கை வெளியிட்டார். (இன்னும் ஒரு 15 கோடி வேண்டும் போலிருக்கிறது!)

“கார்ப்பரேட் அரசியல் – நடப்பது என்ன?”

போலி செய்திக்கு மறுப்பு தெரிவித்ததற்காக – ‘பாமகவினர் பத்திரிகையை மிரட்டினார்கள்’ என்கிற பொய்யான கோயபல்ஸ் செய்தியை வைத்து திமுக கூலிப்படை பலமுனை தாக்குதல் நடத்துகிறது.

அரசியல் ஆலோசகர் பிஹாரி பிராமணர் பிரசாந்த் கிஷோர் பாண்டேவின் கார்ப்பரேட் அரசியல் வியூகத்தை செயல்படுத்துவதற்காக திமுக தூக்கி எறியும் பணம் தான் இதன் பின்னணி ஆகும். இந்த ஒரு அவதூறு பொய்ப்பிரச்சத்திற்காக மட்டும் பல கோடிகள் நேற்றும் இன்றும் செலவிடப்பட்டிருக்கும்.

இனி தமிழ்நாடு அரசியல் இப்படித்தான் போகும். கார்ப்பரேட் அரசியல் கும்பல் தமிழக ஜனநாயகத்தை சீரழிக்காமல் விடாது. பொறுக்கித்தின்னும் போலி பத்திரிகையாளர் முதல் 15 கோடி பாலகிருஷ்ணன் வரை – திமுக கூலிப்படையினர் இனி பணத்தை வாரி குவிப்பார்கள். இழப்பு தமிழக மக்களுக்கு மட்டுமே! என்று அறிக்கையில் காட்டமாக தெரிவித்துள்ளார்.

விமானத்தை கடத்த முயன்ற 17 வயது சிறுமி: தீவிரவாதிகள் பின்னணியா?

0

விமானத்தை கடத்த முயன்ற 17 வயது சிறுமி: தீவிரவாதிகள் பின்னணியா?

விமானங்களை திருடி அதை பெரிய கட்டிடங்கள் மீது மோத வைத்து மிகப்பெரிய இழப்பை சந்திக்க வைப்பது தீவிரவாதிகளின் ஸ்டைலாக இருந்து வரும் நிலையில் அமெரிக்காவில் 17 வயது சிறுமி ஒருவர் விமானத்தை கடத்த முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் 17 வயது சிறுமி ஒருவர் விமான நிலையத்தில் இருந்த விமானத்தில் திடீரென ஏறி விமானத்தை இயக்கி உள்ளார். இதனால் விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கு உள்ளாகவே அந்த விமானம் விமான நிலையத்தின் கட்டிடத்தில் மோதி நின்றது

இதனையடுத்து அந்த சிறுமியை பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை செய்தபோது அந்த சிறுமிக்கு சிறுவயதில் இந்த விமானம் என்றால் உயிர் என்றும் பொம்மை விமானத்தை ஓட்டிக் கொண்டிருந்த தான் நிஜ விமானத்தை ஓட்ட வேண்டும் என்பதற்காகவே அவர் விமானத்தில் ஏறி விமானத்தை இயக்கியதாகவும் தெரிகிறது. மேலும் முதல்கட்ட விசாரணையில் அவர் தீவிரவாத குழுவை சேர்ந்தவர் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் அந்த சிறுமி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

கிபி 5070ஆம் ஆண்டு வரை என்னென்ன நடக்கும்: கண்பார்வை இல்லாத பாபாவின் கணிப்பு

0

கிபி 5070ஆம் ஆண்டு வரை என்னென்ன நடக்கும்: கண்பார்வை இல்லாத பாபாவின் கணிப்பு!

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நாஸ்டர்டாம்ஸ் உலகில் நடப்பவற்றை முன்கூட்டியே கணித்து கூறியவர் என்றும் இவர் கணித்த பெரும்பாலானவை தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறுவதுண்டு. இந்த நிலையில் கண்பார்வை இல்லாத பாபா வாங்கா என்பவர் கணித்த பெரும்பாலனவைகளும் அப்படியே நடந்து வருகிறது. வரும் 2020ஆம் ஆண்டு இவர் என்னென்ன நடக்கும் என்பதை கணித்துள்ளார் என்பதை பார்ப்போம்.

  • வெள்ளை மாளிகைக்கும் கிரெம்ளினுக்கும் ஐரோப்பிய மக்களுக்கும் கெட்ட நேரம்
  • 2020ல் ரஷ்ய அதிபர் புடினை கொல்ல முயற்சி நடக்கும்.
  • மூளைப்புற்று நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மன நலம் பாதிக்கப்படலாம் அல்லது உயிரிழக்கலாம்
  • ஐரோப்பா காணாமல் போகும்.
  • ஐரோப்பாவை தீவிரவாதிகள் ரசாயன ஆயுதங்களுடன் தாக்குவார்கள்.

என்று பாபா வாங்கா கணித்துள்ளார். இதெல்லாம் நடக்கின்றதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ரயிலில் இருந்து தவறி விழுந்து கட்டிட தொழிலாளி பலி?

0

நாகபட்டினம் மாவட்டம் சேத்தூர் பருத்திகுடியை சேர்ந்த சத்தியசுந்தரம் கட்டிட தொழிலாளியானா இவர் கேரளா மாநிலம் கோழிகோட்டில் இருந்து ஈரோடு வருவதற்காக மங்களுர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் gentral பெட்டியில் பயணித்தார்.

பொது பெட்டி என்பதால் கூட்டம் நிரம்பி வழிந்தது இதனால் சத்திய சுந்தரம் படிக்கட்டில் நின்று பயணம் செய்தார். ரெயில் பெருந்துறை- தொட்டிபாளையம் இடையே நேற்று நள்ளிரவு வந்து கொண்டிருந்தது.தூக்க கலக்கத்தில் இருந்த அவர் எதிர்பாரதவிதமாக தவறி கீழே விழுந்தார்.

இதில் அவரது வலது கை மற்றும் வலது கால் துண்டானது. தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கிருந்த மக்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அவரது குடும்பத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

என்னை காதலித்து ஏமாற்றியவர் நடிகர்-அரசியல்வாதியா? ஆண்ட்ரியா அதிரடி பேட்டி!

0

என்னை காதலித்து ஏமாற்றியவர் நடிகர்-அரசியல்வாதியா? ஆண்ட்ரியா அதிரடி பேட்டி!

ஆண்ட்ரியாவை நடிகர் ஒருவர் காதலித்து ஏமாற்றி விட்டதாகவும், அந்த நடிகர் தற்போது பிரபல அரசியல்வாதியாக இருப்பதாகவும், இது குறித்து ஆண்ட்ரியா தனது வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் எழுதி இருப்பதாகவும், அந்த புத்தகம் விரைவில் வெளியாக இருப்பதாகவும் ஒரு செய்தி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இணையதளங்களில் மிக வேகமாக பரவியது. இதற்கு ஆண்ட்ரியா தரப்பில் இருந்து எந்தவித விளக்கமும் வரவில்லை என்பதால் இந்த செய்தி உண்மையாகவே இருக்கும் என்று கருதப்பட்டது. இந்த நிலையில் தற்போது அந்த பேட்டி ஒன்றின் போது நடிகை ஆண்ட்ரியா இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது:

நான் அளித்த ஒரு பேட்டியில் என்னுடைய காதல் தோல்வி பற்றி கூறியது உண்மைதான். ஆனால் என்னை காதலித்தவர் நடிகர் என்றோ அரசியல்வாதி என்றோ நான் கூறவே இல்லை. இந்த செய்தி திரிக்கப்பட்டு வதந்தியாக பரவியது. ஒரு வதந்திக்கு விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றுதான் நான் அமைதியாக இருந்தேன். இந்த வதந்தி எப்படி பரவியது? யார் பரவ விட்டது? என்று எனக்கு தெரியவில்லை. மொத்தத்தில் நான் காதலித்து தோல்வி அடைந்தது உண்மைதான். அது பத்து வருடங்களுக்கு முன் நடந்தது. ஆனால் அந்த நபர் நடிகரும் இல்லை அரசியல்வாதியும் இல்லை அவ்வாறு வந்த செய்தியில் உண்மையில்லை என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது ’தளபதி 64’ படத்தில் நடித்து வரும் நடிகை ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது அவர் 2 தமிழ் மற்றும் 2 தெலுங்கு படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் இந்த படங்களுக்கான ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட என்றும் கூறப்படுகிறது.

முந்திரி ஏற்றுமதி கடந்த ஆண்டைவிட குறைவு?

0

டெல்லி ஜெய்ப்பூர் லக்னோ போன்ற நகரங்களில் அதிகமாக நுகரப்படுகிறது.தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் அதிகம் இல்லை. எனினும் நாட்டின் முந்திரி நுகர்வு ஆண்டுக்கு சராசரியாக 8 சதவீதம் அதிகரித்து வருகிறது நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் முந்திரி ஏற்றுமதி 336 கோடியாக இருந்தது பிப்ரவரியில் அது 306 கோடியாக குறைந்தது,

மார்ச் மாதத்தில் 396 கோடியாக உயர்ந்தது, ஏப்ரல் மாதத்தில் 295 கோடியாக இருந்தது ஜூனில் 309 கோடியாகவும் ஜூலை மாதத்தில் 332 கோடியை எட்டியது ஆகஸ்ட் மாதத்தில் 427 கோடியாக உயர்ந்தது செப்டம்பரில் 313 கோடியாகவும் அக்டோபர் 331 கோடியாக அதிகரித்தது.

ஏற்றுமதி செய்யப்பட்டு இருப்பது கடந்த ஆண்டின் இதே மாதத்தில் ஒப்பிடும்போது இது 34 சதவீதம் குறைவாகும்.

அப்போது ஏற்றுமதி 543 கோடியாக இருந்தது அதே காலத்தில் டாலர் மதிப்பில் முந்திரி ஏற்றுமதி 33 சதவீதம் குறைந்து 5 கோடி டாலராக இருக்கிறது சென்ற ஆண்டின் இதே மாதத்தில் 7.5 கோடி டாலராக இருந்தது. சில்லறை விலையில் தற்போது ஒரு கிலோ முந்திரி பருப்பின் விலை 1000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

சூரிய கிரகணத்தையொட்டி, சபரிமலை, ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற பல்வேறு கோயில்களின் நடை சாத்தப்பட்டன?

0

சூரிய கிரகணத்தையொட்டி, சபரிமலை, ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற பல்வேறு கோயில்களின் நடை சாத்தப்பட்டன.

இன்று காலை சூரிய கிரகணம் ஏற்பட்ட நிலையில் வருகிற அதிகாலை 3 மணி முதல் நடை திறக்கப்பட்டு காலை 6.45 மணி வரை திறந்து இருந்தது. தொடர்ந்து பூஜைக்கு பிறகு 7.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டு. 4 மணி நேரத்திற்கு பிறகு பகல் 11.30 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டது.

தொடர்ந்து பரிகார பூஜைகளும், கலசாபிஷேகமும் நடைபெற்றதாக தெரிவிக்கபட்டது. ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு விசே‌ஷ தீபாராதனை காட்டப்பட்டது . நாளை 27-ந்தேதி மண்டல பூஜை நடைபெறும்.

இதே போல் பிரசித்திபெற்ற விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலில் மார்கழி மாதத்தையொட்டி, நாள்தோறும் அதிகாலை 4 மணி முதலே நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், இன்று சூரிய கிரகணம் என்பதால், கோயில் நடை சாத்தப்பட்டது.மாலை 4 மணிக்கு வழக்கம் போல் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள புகழ்பெற்ற கற்பக விநாயகர் கோயில் நடையும் சாத்தப்பட்டது. காலை 7 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை கோயில் நடை சாத்தப்பட்டது.

சூரிய கிரகணத்தையொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களின் நடையும் அடைக்கப்பட்டது. பரிகார பூஜைக்குப் பின்னர் நடை திறக்கப்பட்டது.

தேர்தல் என்றாலே தி. மு. க. வுக்கு பயம் வந்துவிடும்?

0

15-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்க படுகிறது சுனாமியால் இறந்த மீனவர்களுக்கு அவரது உறவினர்கள் மெழுகுபத்தி ஏந்தியும் கடற்கரையில் பால் ஊற்றியும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். இதன் ஒரு பகுதியாக சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார். சுனாமி நினைவு கல்வெட்டினையும் திறந்து வைத்தார். பின்னர் படகில் கடலுக்குள் சென்று மலர் தூவினார்.

அப்போது அமைச்சர் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார்
மத்திய அரசிடம் இருந்து மாநிலத்துக்கு தேவையான நிதியை பெற்று மக்களுக்கு சேவை செய்து வருவது நமது அ.தி.மு.க. அரசுதான் என்றும்.

மற்ற மாநிலங்களை விட மத்திய அரசிடம் இருந்து அதிக நிதி பெறுவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக இருக்கிறது.

மத்தியிலும் மாநிலத்திலும் 13 ஆண்டுகளாக காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணியில் இருந்தது. ஆனால் மக்களுக்கு ஒரு திட்டமும் செய்யவில்லை என கூறினார்.

தேர்தல் வந்தாலே தி.மு.க.வுக்கு பயத்தில் ஜூரம் வந்துவிடும். மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி பட்டை நாமமும் போடுவது காலம் காலமாக தி.மு.க. வின் வழக்கம் என கூறினார்.

பாத்ரூமில் வழுக்கி விழுந்த பிரேசில் அதிபர்: முந்தைய நினைவுகளை மறந்து விட்டதால் பரபரப்பு!

0

பாத்ரூமில் வழுக்கி விழுந்த பிரேசில் அதிபர்: முந்தைய நினைவுகளை மறந்து விட்டதால் பரபரப்பு!

பிரேசில் அதிபர் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கடந்த சில நாட்களுக்கு முந்தைய நினைவுகளை மறந்து விட்டதால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பிரேசில் அதிபர் ஜெயீர் போல்சனரோ என்பவர் தனது குளியல் அறைக்குச் சென்றபோது அங்கு எதிர்பாராத விதமாக விழுந்துவிட்டார். இதனால் அவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சுமார் 10 மணி நேரம் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்குப் பின்னர் அவர் குணமடைந்தாலும் அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முந்தைய நினைவுகள் மறந்து விட்டதாகவும் பின்னந்தலையில் அடி பட்டதால் தான் இந்த பிரச்சனை அவருக்கு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் அவரது நினைவுகள் மீட்கப்பட தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அவர் குணமாகி விடுவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் தொடர்ச்சியான சிகிச்சையின் காரணமாக அவர் தற்போது முழு குணம் அடைந்து விட்டதாகவும், அவருக்கு தற்போது அனைத்து நினைவுகளும் திரும்ப வந்து விட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அதிபர் ஜெயீர் போல்சனரோவும் பேட்டி ஒன்றில் உறுதி செய்துள்ளார். மேலும் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கும் கடவுளுக்கும் நன்றி கூறுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். தற்போது பிரேசில் அதிபர் முழு அளவில் குணம் ஆகிவிட்டதால் மீண்டும் அதிபர் பணியை கவனிக்க தொடங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்புமணி பற்றி பொய் செய்தி வெளீயிட்ட பிரபல நாளிதழ்! திமுகவின் சதித்திட்டத்தை அம்பலப்படுத்திய கே பாலு

0

அன்புமணி பற்றி பொய் செய்தி வெளீயிட்ட பிரபல நாளிதழ்! திமுகவின் சதித்திட்டத்தை அம்பலப்படுத்திய கே பாலு

“டைம்ஸ் அலுவலக நிகழ்வு குறித்த புகார் அப்பட்டமான பொய்” கொலைகார கட்சி திமுகவுக்கு இதுபற்றி பேச தகுதியில்லை என பாமக வழக்கறிஞர் கே.பாலு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சி குறித்து செய்தி வெளியிட்டதற்காக பா.ம.க. செய்தித்தொடர்பாளர் வினோபா பூபதி தலைமையில் பா.ம.க.வினர் டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ் அலுவலகத்திற்கு சென்று வன்முறையில் ஈடுபட்டதாக திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார். சில பத்திரிகையாளர் அமைப்புகளும் உண்மையறியாமல் இதே புகாரை கூறியிருக்கின்றன.

இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்ற, உள்நோக்கம் கொண்டவை ஆகும். இவை ஜமுக்காளத்தில் வடிகட்டிய அப்பட்டமான பொய் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.

25.12.2019 தேதியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் ஆறாவது பக்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் நாடாளுமன்ற வருகைப்பதிவு குறித்து Anbumani Ramadoss has worst attendance among TN MPs என்ற தலைப்பில் தவறான, ஒருதலைப்பட்சமான செய்தி வெளியாகியிருந்தது. அந்த செய்தியில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மாநிலங்களவையில் கடந்த இரு கூட்டத்தொடர்களில் இரு விவாதங்களில் மட்டுமே கலந்து கொண்டார் என்றும், ஒரு வினா கூட எழுப்பவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த விவரங்கள் அனைத்தும் நாடாளுமன்ற மாநிலங்களவையின் இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது. ஆனால், இந்த விவரங்கள் அனைத்தும் பொய்யானவை; தவறானவை.

மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் மட்டும் புவிவெப்பமயமாதல், காவிரி – கோதாவரி இணைப்பு, வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை, உயர்கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு ஆகிய நான்கு முக்கிய பிரச்சினைகள் குறித்து மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பேசியுள்ளார். மருத்துவர் அன்புமணி எழுப்பிய சில பிரச்சினைகளுக்காக அவரை மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் பாராட்டியதுடன், வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை என்ற அவரது கோரிக்கையை கவனத்தில் கொள்ளும்படி மத்திய அரசுக்கும் பரிந்துரைத்தார். அதுமட்டுமின்றி, 10 வினாக்களை அவர் எழுப்பியுள்ளார்.

அவற்றில் 4 வினாக்களுக்கு பதிலளித்துள்ள மத்திய அரசு, கூட்டத்தொடர் முடிவடைந்து விட்டதால் மீதமுள்ள வினாக்களுக்கு விடையளிக்க முடியவில்லை என்பதையும் தெரிவித்துள்ளது. இவ்விவரங்கள் மாநிலங்களவை இணையதளத்தில் உள்ளன. ஆனால், உண்மைகளை மறைத்து விட்டு, பொய்யான தகவல்களை அந்த செய்தியில் பி.சிவக்குமார் என்ற செய்தியாளர் அளித்துள்ளார்.

ஊடக அறத்தை பாதுகாப்பதற்காக இந்திய பிரஸ் கவுன்சில் வகுத்துள்ள 42 நடத்தை விதிகளில் இரண்டாவது விதியின்படி, ஒரு செய்தியை வெளியிடுவதற்கு முன்பாக அந்த செய்தியின் உண்மைத்தன்மையை ஒன்றுக்கும் மேற்பட்ட ஆதாரங்களில் இருந்து சரிபார்க்க வேண்டும்; அதுமட்டுமின்றி, சம்பந்தப்பட்ட நபர்களிடம் பேசி அவர்களின் கருத்து என்ன? என்பதை கேட்டறிந்து வெளியிட வேண்டும். ஆனால், இவற்றை செய்தியாளர் பி.சிவக்குமார் செய்யவில்லை. கடந்த காலங்களில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவரது தொகுதி மேம்பாட்டு நிதியை செலவிடவில்லை என்று பொய்யான செய்தி ஒன்றை டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டிருந்தது. இப்போதும் அதே போன்று பொய்யான செய்தியை அந்த நாளிதழ் வெளியிட்டிருப்பதால் அதன் பின்னணியில் ஏதேனும் உள்நோக்கம் இருக்கலாம் என பா.ம.க. சந்தேகிக்கிறது.

அதனால், இதுகுறித்த உண்மை நிலையை விளக்கும் நோக்கத்துடன் செய்தியாளரை பாட்டாளி மக்கள் கட்சியின் செய்தித்தொடர்பாளர்களில் ஒருவராகிய வினோபா பூபதி நேற்று காலை பலமுறை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், அந்த செய்தியாளர் செல்பேசி அழைப்புகளை ஏற்கவில்லை. அதைத்தொடர்ந்து டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் அரசியல் பிரிவு ஆசிரியர் ஜெயாமேனனை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதைக் கேட்ட ஜெயா மேனன், மருத்துவர் அன்புமணி இராமதாசின் மாநிலங்களவை செயல்பாடுகள் குறித்த விவரங்களுடன் தம்மை பிற்பகல் 2.30 மணிக்கு டைம்ஸ் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் சந்திக்கும்படி கூறியுள்ளார். அவரது அழைப்பின்படியே செய்தித்தொடர்பாளர் வினோபா, பா.ம.க. நிர்வாகி கோபால் ஆகிய இருவரும் ஜெயா மேனனை அவரது அலுவலகத்தில் சந்தித்து உண்மை நிலவரத்தை விளக்கியுள்ளனர். அப்போது செய்தியாளர் பி. சிவக்குமாரும் உடன் இருந்திருக்கிறார்.

நாடாளுமன்ற இணையதளங்களில் இருந்து தான் மருத்துவர் அன்புமணி இராமதாசின் செயல்பாடுகள் குறித்த விவரங்களை எடுத்ததாக செய்தியில் செய்தியாளர் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், நாடாளுமன்ற இணையதளங்களில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எழுப்பிய பிரச்சினைகள், வினாக்கள் ஆகியவை பற்றி குறிப்பிடப்பட்டிருப்பதை ஆதாரங்களுடன் வினோபா பூபதி எடுத்துக்காட்டியதும் உடனடியாக தமது நிலையை மாற்றிக்கொண்ட அந்த செய்தியாளர், ஒரு தொண்டு நிறுவனத்தின் இணையதளத்தில் இருந்து தான் இத்தகவல்களை எடுத்து வெளியிட்டதாகக் கூறினார். அவர் எழுதிய செய்தி பொய்யானது என்பதற்கு இதைவிட வேறு உதாரணங்கள் தேவையில்லை. இதுதொடர்பாக ஜெயாமேனன், சிவக்குமார் ஆகியோருக்கும் வினோபா பூபதிக்கும் இடையே விவாதம் நடந்து கொண்டிருந்த போது, ஜெயாமேனனின் அறைக்குள் வந்த நாளிதழ் ஊழியர்கள் சிலர் வினோபா பூபதியை மிரட்டியதுடன், முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர். அப்போது அவர்களை எச்சரித்த ஜெயாமேனன் அறையிலிருந்து வெளியேறும்படி ஆணையிட்டிருக்கிறார். அதுமட்டுமின்றி தங்களின் செய்தியாளர் தரப்பில் தவறு இருப்பதாகவும், பா.ம.க. தரப்பில் விளக்கச் செய்தி கொடுத்தால் அதை விதிகளுக்கு உட்பட்டு பிரசுரிப்பதாகவும் உறுதியளித்தார். அதைத் தொடர்ந்து வினோபா பூபதியும், கோபாலும் அவருக்கு நன்றி கூறி திரும்பினர். இதைத் தவிர டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் அலுவலகத்தில் வேறு எதுவும் நடைபெறவில்லை.

அவ்வாறு இருக்கும் போது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் அலுவலகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் அத்துமீறி நுழைந்து வன்முறையில் ஈடுபட்டதாகவும், அங்கிருந்த பொருட்களை வாரி இறைத்து கலவரம் செய்ததாகவும், ஊழியர்களை மிரட்டியதாகவும் திமுகவின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவனும், சில பத்திரிகை அமைப்புகளின் நிர்வாகிகளும் எங்கிருந்து கண்டுபிடித்தனர் என்பது தெரியவில்லை.

இந்த நிகழ்வில் சம்பந்தப்பட்டவர்கள் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் அரசியல் பிரிவு ஆசிரியர் ஜெயாமேனன் அவர்களும், வினோபா பூபதி அவர்களும் தான். இவர்கள் இருவரும் சொல்லாத ஒன்றை மற்ற அனைவரும் எப்படி துப்பறிந்தனர்?

டைம்ஸ் ஆஃப் இந்தியா அலுவலகத்துக்குள் பாட்டாளி மக்கள் கட்சியினர் நுழைந்திருந்தால் அங்கு இருந்த பத்திரிகை புகைப்படக்காரர்கள் படம் எடுத்திருந்திருக்கலாம்; ஜெயா மேனன் அறையில் இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து காவல்துறையில் புகார் செய்திருக்கலாம். ஆனால், எதுவும் நடக்கவில்லை. அதற்கும் மேலாக இந்த நிகழ்வு குறித்து சமூக வலைத்தளங்களில் சில பத்திரிகை அமைப்புகளின் பெயர்களின் வெளியாகியுள்ள செய்திகளுக்கு தாங்கள் பொறுப்பல்ல என்று அந்த நாளிதழின் அரசியல் பிரிவு ஆசிரியர் ஜெயாமேனன் பா.ம.க.வுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்திருக்கிறார்.

இவ்வளவுக்குப் பிறகும் நடக்காத ஒன்றை வைத்து பா.ம.க மீது பழிசுமத்துவோரின் நெஞ்சம் முழுவதும் நஞ்சும், வஞ்சமும் நிறைந்துள்ளன என்பதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்?

பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஊடக அறம் குறித்தும் தெரியும்; ஊடகத்தினரை எவ்வாறு மதிக்க வேண்டும் என்பது குறித்தும் நன்றாகத் தெரியும். ஊடக அறம் குறித்து பத்திரிகையாளர்களுக்கு பலமுறை பயிலரங்குகளை பா.ம.க. நடத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நிழல்நிதிநிலை அறிக்கை தயாரித்து வெளியிடும்போதும், 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரித்து வெளியிட்ட போதும் பத்திரிகையாளர் நலனுக்காக உண்மையாக செயல்படும் பத்திரிகையாளர் அமைப்புகளை அழைத்து ஆலோசனைகளை பெற்று பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்டுள்ளது. பத்திரிகையாளர் உரிமைகளுக்காக அதிகமாக குரல் கொடுத்தது பாட்டாளி மக்கள் கட்சி மட்டும் தான்.

அன்புமணி பற்றி பொய் செய்தி வெளீயிட்ட பிரபல நாளிதழ்! திமுகவின் சதித்திட்டத்தை அம்பலப்படுத்திய கே பாலு

உண்மை இவ்வாறு இருக்க ஊடக அறம், பத்திரிகையாளர் சுதந்திரம் குறித்த விஷயத்தில் திமுகவோ, இல்லாத பத்திரிகையில் எழுதாத சிலர் தங்களின் செயல்களுக்கு கேடயமாக நடத்தும் அமைப்புகளைச் சேர்ந்தவர்களோ பா.ம.க.வுக்கு பாடம் நடத்த வேண்டியதில்லை; அதற்கு அவர்களுக்கு தகுதியுமில்லை.

திமுகவையும், ஊடகங்களையும் இணைத்துப் பார்த்தால் முதலில் நினைவுக்கு வருவது என்ன? மதுரை தினகரன் அலுவலகம் கொழுந்து விட்டு எரியும் காட்சியும், அதில் பணியாற்றிய அப்பாவிகள் மூவர் உடல் கருகி உயிரிழந்த காட்சியும் தானே. குடும்பத் தகராறில் தினகரன் அலுவலகத்தை எரித்து, 3 தொழிலாளர்களை சாம்பலாக்கிய திமுகவின் முதன்மைக் குடும்பம், குறிப்பிட்ட இடைவெளிக்குப் பிறகு அதிகார சுகத்தை பங்கிட்டுக் கொள்வதற்காக ‘‘இதயம் இனித்தது; கண்கள் பனித்தன’’ என்று கூறி கை குலுக்கிக் கொண்டன. ஆனால், அவர்களால் கொல்லப்பட்ட மூவரின் குடும்பங்கள் வாழ்வதற்கு வக்கற்று கிடக்கின்றனவே…. அந்தக் குடும்பங்களை திமுக தலைமை கண்டு கொண்டதா? இப்படிப்பட்ட மாபாதகர்களுக்கு பத்திரிகையாளர்கள் நலன் குறித்து பேசுவதற்கு அருகதையுண்டா?

2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் படுதோல்வி அடைந்தது. அதற்கு பொறுப்பேற்று திமுகவின் பொருளாளர் பதவியிலிருந்து மு.க.ஸ்டாலின் விலகி விட்டதாக செய்திகள் வெளியாகின. அது குறித்து மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு சென்று திமுகவின் முன்னணி நிர்வாகிகளிடம் பேட்டி கேட்டதற்காக டைம்ஸ் நவ் இதழின் செய்தியாளர் சபீர் அகமது என்பவரை திமுக குண்டர்கள் துரத்தி துரத்தி தாக்கினார்களே? காவல்துறையினர் மட்டும் தங்கள் வாகனத்தில் அவரை ஏற்றிச் செல்லவில்லை என்றால் அங்கு அவர் படுகொலை செய்யப்பட்டிருப்பாரே?

அந்தத் தாக்குதலில் ஒளிப்பதிவாளர் ஜெயப்பிரகாஷ், புகைப்படக்காரர் டேனியல், புதிய தலைமுறை செய்தியாளர் கார்த்திகேயன் ஆகியோரும் தாக்கப்பட்டார்களே? செய்தியாளர்களின் காமிராக்களை திமுக குண்டர்கள் உடைத்து சேதப்படுத்தினார்களே? அப்போதும் ஆத்திரம் தீராமல் டைம்ஸ் நவ் மற்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா அலுவலகத்திற்கு திமுக குண்டர்கள் சென்று அங்குள்ளவர்களை மிரட்டினார்களே? அது தொடர்பாக திமுக குண்டர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்களே? தாக்கப்பட்டவர்களில் சிலரை வேண்டுமானால் திமுக விலைக்கு வாங்கியிருக்கலாம்; ஆனால், பத்திரிகையாளர்களுக்கு எதிரான திமுகவின் வன்முறை வெறியாட்டத்தை மறைக்க முடியுமா?

1968-ஆம் ஆண்டில் அமைச்சராக இருந்த போது ஜவகரிஸ்ட் என்ற பத்திரிகையின் ஆசிரியரும், நேர்மையாளருமான என்.கே.டி சுப்பிரமணியம் என்பவரை கலைஞர் கைது செய்து சிறையில் அடைத்தது குறித்தும், அதன் பின்னணி குறித்தும் கூறினால் அது அருவருக்கத்தக்கதாக இருக்கும். திமுகவால் பழிவாங்கப்பட்ட, பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் பட்டியல் மிகவும் நீண்டது.

அதுமட்டுமா?… 2009 தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக பிரச்சாரம் செய்ததற்காக இயக்குனர் பாரதிராஜா அலுவலகத்தை தங்கள் கூட்டாளிகளை அனுப்பித் தாக்கியது, ஓசியில் பிரியாணி தர மறுத்ததற்காக உணவு விடுதியை அடித்து நொறுக்கியது, பெரம்பலூரில் அழகு நிலையத்திற்குள் நுழைந்து அங்கிருந்த பெண்ணை வயிற்றில் எட்டி உதைத்து காயப்படுத்தியது, வீட்டு வேலைக்கு வந்த ஏழைப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்ததற்காக பெரம்பலூர் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது,

செல்பேசி கடையை தாக்கியது, மாமூல் தர மறுத்ததற்காக தெருவோரத்தில் வணிகம் செய்யும் மூதாட்டியை தாக்கியது, பஜ்ஜி கடையை தாக்கியது என திமுகவின் வன்முறைகளை பட்டியலிட்டால் இந்த அறிக்கையில் பக்கங்கள் போதாது.

வன்முறைகள் மற்றும் கொலைகார கட்சியான திமுக பத்திரிகையாளர்கள் சுதந்திரம் குறித்து பேசுவதற்கு முன் அதன் முதுகில் உள்ள அழுக்கு மூட்டைகளை அகற்றிக் கொள்வது தான் அறமாக இருக்கும்.

ஒரு செய்தியை எழுதுவதற்கு முன் அதன் உண்மைத்தன்மையை ஊடகங்கள் ஒருமுறைக்கு பத்து முறை ஆராய வேண்டும். ஊடகத்துறையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடக அமைப்புகள் ஒரு கட்சி மீது புகார் கூறும் போது இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும். மனம் போன போக்கில் அவதூறு பரப்புவதை தவிர்க்க வேண்டும்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் வன்முறை செய்ததாக பா.ம.க. மீது அவதூறு பரப்பிய திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் அதற்காக மன்னிப்பு கோர வேண்டும். அவ்வாறு மன்னிப்பு கோரா விட்டால் அவர்கள் மீது அவதூறு வழக்கு உள்ளிட்ட சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.