Home Blog Page 5822

நித்தியானந்தா பற்றிய அடுத்த சர்ச்சை! வைரலாகும் வீடியோ?

0

பெங்களூர் அருகே பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடந்து வருவதாக அடிக்கடி புகார்கள் வந்த நிலையில் நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுமிகள் தவறாக பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது இதனிடையே பெங்களூருவைச் சேர்ந்த ஜனார்த்தன் சர்மா என்பவர் தனது மகளை மீட்டுத் தரக்கோரி குஜராத் போலீசில் புகார் அளித்தார்.

மேலும் அகமதாபாத் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார் இந்த மனு மீதான விசாரணை நடத்திய அகமதாபாத் நீதிமன்றம் சிறுமிகளின் நிலை என்ன என்பதை கண்டறிந்து தகவல் கொடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடார் அருகே நித்யானந்தா கைலாசா என்ற ஒரு நாட்டை உருவாக்க இருக்கிறார் என்ற பேச்சும் அடிபட்டது.

இதனிடையே ஈரோட்டை சேர்ந்த பல் மருத்துவர் ஒருவர் நித்யானந்தா ஆசிரமத்தில் சட்டவிரோதமாக சிறை வைக்கப்பட்டுள்ளதாக புதிய புகார் தகவல் வந்துது.

இன்டர்போல், சி.பி.ஐ. உதவியுடன் அவரை கைது செய்ய கர்நாடகா போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனாலும் இதுவரை அவரது இருப்பிடத்தை போலீசாரால் கண்டு பிடிக்க முடியவில்லை.

போலீஸ் தேடினாலும் நித்யானந்தா அவ்வப்போது சமூகவலைதளங்களில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவர் புதிதாக வெளியிட்ட வீடியோவில் கூறி இருப்பதாவது:-

பாலியல் பலாத்கார வழக்கில் என்னை போலீசார் கைது செய்தபோது அதற்கான காரணத்தை இன்றும் கூறவில்லை. கைது செய்த பிறகே புகார் தருபவர்களை கூவி கூவி போலீசார் தேடினர்.

2002-ம் ஆண்டு முதல் எனது வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்வும் வீடியோ பதிவாக உள்ளது. எனவே என் மீதான பாலியல் புகார்கள் எடுபடாமல் போய்விடும்.

நான் பல வி‌ஷயங்களில் ஜெயித்த போராளி என்றும் . நெத்தியடி என்பது போல் நித்தியடி என்ற ‘டிரண்டு’ உருவாகி உள்ளது. எனது சீடர்கள் நித்தியடி கொடுக்க வேண்டும்.என அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

டெல்லி மற்றும் பீகார் சட்டசபை தேர்தல்களிலும் பா.ஜ.க தோற்கும் – காங்கிரஸ் மூத்த தலைவர் ஆருடம்.

0

ஜார்க்கண்ட் மாநிலத்தில்  ஐந்து கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது ஜே.எம்.எம் 30 தொகுதிகளிலும், காங்கிரஸ் 14 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஒரு தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. பா.ஜ.க 25 தொகுதிகளில் வெற்றிபெற்றது. ஜே.எம்.எம் கூட்டணி, பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளை விட கூடுதல் தொகுதிகளில் முன்னணி பெற்றது.

இதைத் தொடர்ந்து 47 தொகுதிகளில் ஜே.எம்.எம் கூட்டணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஜே.எம்.எம் கட்சியின் ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் முதல்வராக பதிவியேற்கவுள்ளார்.

இந்த ஒரு ஆண்டில் மட்டும் ஏற்கனவே ராஜஸ்தான், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பா ஜ க ஆட்சியை இழந்திருந்த நிலையில் தற்போது ஜார்கண்டிலும் தோல்வியை சந்தித்திருப்பது பா ஜ க வுக்கு பெருத்த பின்னடைவாக கருதப்படுகிறது.  இந்நிலையில்,அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் டெல்லி மற்றும் பீகார் சட்டசபை தேர்தல்களிலும் பா ஜ க தோல்வியடையும் என்று பிரித்விராஜ் சவாண் கூறியுள்ளார்

இதுதொடர்பாக மராட்டிய மாநில முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரிதிவிராஜ் சவாண் நேற்று மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது

“ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் 65 தொகுதிகளை கைப்பற்றுவோம் என்று பா.ஜனதா கூறியது. ஆனால், அதில் பாதியைக்கூட கைப்பற்ற முடியவில்லை. சட்டசபை தேர்தல்களில் பா.ஜனதாவின் வீழ்ச்சி, குஜராத் தேர்தலிலேயே தொடங்கி விட்டது.

மோடி, அமித் ஷாவை போல், காங்கிரஸ் மேலிட தலைவர்கள் மராட்டியம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் பிரசாரம் செய்யவில்லை. இருந்தாலும், அங்கு பா.ஜனதா வீழ்ந்து விட்டது. அடுத்த ஆண்டு நடக்க உள்ள பீகார், டெல்லி சட்டசபை தேர்தல்களிலும் பா.ஜனதா தோற்கும்.” என்று கூறினார்.

‘விக்ரம் 58’ படத்தின் டைட்டில் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

0

‘விக்ரம் 58’ படத்தின் டைட்டில் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

டிமான்டி காலனி, இமைக்காநொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் ஒரு படத்தில் நடித்து வந்தார் என்பதும் அந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் இந்த படத்திற்கு ஏற்கனவே ’அமர்’ மற்றும் கோப்ரா’ போன்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்த நிலையில் இந்த இரண்டில் ஒன்றுதான் இன்று அறிவிக்கப்படும் டைட்டில் என தெரிகிறது.

‘விக்ரம் 58’ படத்தின் டைட்டில் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

விக்ரம் ஜோடியாக ஸ்ரீனிதிஷெட்டி நடிக்கும் இந்த படத்தில் கிரிக்கெட் வீரர்கள் இர்பான் பதான் மற்றும் கே எஸ் ரவிக்குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகும் இந்த படத்தை லலித்குமார் தயாரித்து வருகிறார்.

இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு நடிகர் விக்ரம், ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரைக் குடிக்கும் சாலைகள்: போக்குவரத்து கொள்கையில் மாற்றங்கள் செய்ய வேண்டும்! மருத்துவர் ராமதாஸ்

0

உயிரைக் குடிக்கும் சாலைகள்: போக்குவரத்து கொள்கையில் மாற்றங்கள் செய்ய வேண்டும்! மருத்துவர் ராமதாஸ்

விற்பனையை அதிகரிக்க மகிழுந்துகள் மற்றும் பேருந்துகளில் செல்வோரின் பாதுகாப்பில் காட்டும் அக்கறையை மிதிவண்டிகள் மற்றும் இரு சக்கர ஊர்திகளில் செல்வோரின் பாதுகாப்பில் மத்திய அரசு காட்டுவதில்லை என்றும், இதனால் ஏற்படும் விபத்துகளை குறைக்க போக்குவரத்து கொள்கையில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.

இந்தியாவில் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்கள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளில் தெரிய வந்துள்ள உண்மைகள் மிகவும் அதிர்ச்சியளிப்பவையாக உள்ளன. மகிழுந்துகள் மற்றும் பேருந்துகளில் செல்வோரின் பாதுகாப்பில் காட்டும் அக்கறையை மிதிவண்டிகள் மற்றும் இரு சக்கர ஊர்திகளில் செல்வோரின் பாதுகாப்பில் மத்திய அரசு காட்டுவதில்லை என்று ஓர் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

இந்தியாவில் சாலை விபத்துகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை குறித்து மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் துறை ஒவ்வொரு ஆண்டும் புள்ளிவிவரங்களை வெளியிட்டு வருகிறது. மத்திய அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரமான அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் தான் உண்மை என்று அனைவரும் நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அதில் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கையை விட 50%க்கும் கூடுதலான மக்கள் விபத்துகளில் இறக்கின்றனர் என்பது தான் ஆய்வுகளில் தெரியவந்துள்ள உண்மையாகும்.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் மருத்துவ உலகின் தலைசிறந்த ஆய்வு இதழாக போற்றப் படும் லான்செட் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. மருத்துவமனைகளில் நடத்தப்படும் உடல்கூறு ஆய்வுகளில் தெரியவரும் இறப்புக்கான காரணங்களின் அடிப்படையில், 2017 ஆம் ஆண்டில் நெடுஞ்சாலைகளில் நிகழ்ந்த விபத்துகளில் மட்டும் 2 லட்சத்து 18,876 பேர் உயிரிழந்துள்ளனர். இது அதே ஆண்டில் மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்த எண்ணிக்கையான ஒரு லட்சத்து 47,913&ஐ விட 70,963 அதிகமாகும்.

நெடுஞ்சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களில் 2 லட்சத்து 17,379 பேர் இரு சக்கர ஊர்திகளிலும், மோட்டார் வாகனங்களிலும், நடந்தும் பயணித்தவர்கள் ஆவர். உயிரிழந்தவர்களில் 76,729 பேர் (35.1%) பாதசாரிகள் ஆவர். 67,524 பேர், அதாவது 30.90 விழுக்காட்டினர் இரு சக்கர வாகனங்களிலும், 57,802 பேர்(26.40%) மோட்டார் வாகனங்களிலும் பயணம் செய்தவர்கள். மிதிவண்டிகளில் சென்றவர்களில் 15,324 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புகள் நியாயப்படுத்த முடியாத அளவுக்கு அதிகம் ஆகும்.

உலக அளவில் சாலை விபத்துகளில் உயிரிழப்போரின் விகிதம் 1990-ஆம் ஆண்டிலிருந்து 2017-ஆம் ஆண்டு வரையிலான 27 ஆண்டுகளில் 8.10% மட்டுமே அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் மட்டும் இந்த விகிதம் 58.70% அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம் தவறான போக்குவரத்து கொள்கை தான்.

இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்ட பிறகு வாகனப் புரட்சி நடைபெற்று வருகிறது. அதற்கு முன் ஓரிரு நிறுவனங்கள் மட்டுமே வாகனத் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில், இன்று உலகின் அனைத்து நிறுவனங்களின் மகிழுந்துகள் உள்ளிட்ட வாகனங்களும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதனால், சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்த அளவுக்கு சாலைப்பாதுகாப்பின் அளவும், கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்படவில்லை. இதனால் தான் இந்தியாவில் சாலைவிபத்தில் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

இந்தியாவின் போக்குவரத்துக் கொள்கையும், அணுகுமுறையும் மகிழுந்துகள் உள்ளிட்ட வாகனங்களை மனதில் கொண்டே உருவாக்கப்படுகின்றன. வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டால் நாட்டின் பொருளாதாரம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை தான் இதற்கு காரணம் ஆகும். இந்த தவறான நம்பிக்கைக் காரணமாக சாலைகளில் மகிழுந்துகள் உள்ளிட்ட வாகனங்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசுகள், மகிழுந்து வாங்க முடியாமல் இரு சக்கர ஊர்திகளிலும், மிதிவண்டிகளிலும் பயணிப்போரின் பாதுகாப்பில் அக்கறை செலுத்துவது இல்லை.

வாகனங்களுக்கு ஆதரவான கொள்கையால் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுவது மட்டுமின்றி, சுற்றுச்சூழலுக்கும், பொருளாதாரத்திற்கும் கூட பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. உலகில் வளர்ச்சியடைந்த நாடுகள் எதுவும் வாகனங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. பொதுப் போக்குவரத்துக்கு தான் வளர்ந்த நாடுகள் முக்கியத்துவம் அளிக்கின்றன. இந்தியாவில் மட்டும் தான் பொருளாதார வலிமை மிக்க வாகன தயாரிப்பு நிறுவனங்கள் லாபி, தங்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி நெடுஞ்சாலைப் போக்குவரத்துக் கொள்கை மற்றும் அணுகுமுறையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதே அணுகுமுறை நீடித்தால் இன்னும் பல பத்தாண்டுகள் ஆனாலும் விபத்து உயிரிழப்புகள் குறையாது.

இந்த நிலையை மாற்றி இந்தியாவை சாலைவிபத்துகளில் உயிரிழப்புகள் குறைந்த நாடாக மாற்ற வேண்டும். இதற்காக சாலைகளில் இரு சக்கர ஊர்திகள், மிதிவண்டிகள் ஆகியவற்றுக்கு தனித்தனி தடங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்; நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். அதிவிரைவுப் பேருந்து பாதைகள் (Chennai Bus Rapid Transit System – BRTS ) அமைக்கப்படுவதுடன், பொதுப்போக்குவரத்து வலுப்படுத்தப்பட வேண்டும். இவற்றுக்கெல்லாம் மேலாக நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் நிரந்தரமாக மூடப்பட வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் வாஜ்பாயின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது!

0

முன்னாள் பிரதமரும் மூத்த தலைவராக இருந்த மறைந்த அட்டல் பிகாரிவாஜ்பாயின் 95-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவர் நினைவிடம் அமைந்திருக்கும் டெல்லி ராஷ்டிரிய ஸ்மிருதி ஸ்தல் பகுதியில் அலங்கரிக்கப்பட்டு, தலைவர்கள் மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது

இந்நிலையில், அட்டல் பிகாரி வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாஜக தலைவர்களான அமித் ஷா, மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், பாஜக மூத்த தலைவரும் அவரது நண்பருமான அத்வானி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நினைவிடம் அருகே சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் பாஜக கட்சியினரும் மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இதேபோல் சென்னையில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலம் உள்ளிட்ட நாடு முழுவதிலும் உள்ள பாஜக அலுவலகங்களிலும் வாஜ்பாய் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்படுகிறது.

விழாக்காலங்களில் ஈஸியா டிக்கெட் புக் செய்வது எப்படி? உங்களுக்காக ஐ.ஆர்.டி.சியின் சில டிப்ஸ்

0

விழாக்காலங்களில் ஈஸியா டிக்கெட் புக் செய்வது எப்படி? உங்களுக்காக ஐ.ஆர்.டி.சியின் சில டிப்ஸ்

விழாக்கள் நிரம்பிய இந்த நேரத்தில், ஊருக்கு போகனும் இல்லனா குடும்பத்துடன் பயணம் செய்ய ப்ளான் பண்ணி இருக்குற எல்லாருக்கும் IRCTC டிக்கெட் புக்கிங் என்பது ஓர் பெரிய சவால் தான் !

இந்நிலையில் ஈஸியா தட்கல் டிக்கெட் எப்படி புக் பண்ணலாம், அப்படியே டிக்கெட் போட்டாலும், நாம போக முடியாத சுழ்நிலையில் நாம போட்ட டிக்கெட்டை வேறோருவர் பெயருக்கு மாற்றுவது எப்படி என, ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் அடிக்கடி டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் கூட கவனிக்காத பல ஐ.ஆர்.சி.டி.சி புக்கிங் டிப்ஸ்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

உங்கள் இரயில் டிக்கெட்டை இன்னொருவர் பெயருக்கு மாற்ற முடியும், ஆனால் அவர் உங்களது தந்தை, தாய், மனைவி/கணவர், சகோதரர், சகோதரி ஆகிய உறவுகளில் ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால் இதை ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் செய்ய முடியாது. அருகில் உள்ள இரயில் நிலையத்தின் முன்பதிவு மையத்துக்குச் சென்று தான் இதைச் செய்ய முடியும்.

விழாக்காலங்களில் ஈஸியா டிக்கெட் புக் செய்வது எப்படி? உங்களுக்காக ஐ.ஆர்.டி.சியின் சில டிப்ஸ்

இரயில் புறப்படும் நேரத்திலிருந்து 24 மணிநேரத்துக்கு முன் உங்களது இ-டிக்கெட்டை பிரிண்ட் எடுத்து (electronic reservation slip) அதையும், உங்களது ID ப்ரூஃப்பில் ஏதேனும் ஒன்றையும், பெயர் மாற்ற நினைப்பவருக்கும், உங்களுக்குமான உறவை உறுதி செய்யும் ஏதேனும் ஓர் ஆவணத்தையும் அங்கு கொடுத்தால் உங்கள் டிக்கெட் அவர் பெயருக்கு மாற்றித்தரப்படும். பணிக்காக பயணம் செய்யும் அரசு ஊழியர்களுக்கு டிக்கெட்டை இன்னொருவர் பெயருக்கு மாற்றச் சிறப்பு சலுகைகள் உண்டு.

அடுத்து பிரீமியம் தட்கல் பற்றி, தட்கல் இரயில் டிக்கெட்கள் பற்றி அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். இது ரயில் புறப்படும் நாளுக்கு முந்தைய நாள் கொடுக்கப்படும், இதனுடன் பிரீமியம் தட்கல் என்ற பிரிவு டிக்கெட்களும் கொடுக்கப்படும். ஆனால், பிரீமியம் தட்கல் என்றால் என்னவென்று புரியாமல் அதை அப்படியே விட்டுவிடுவார்கள்.

பிரீமியம் தட்கல் என்றால் என்ன? பிரீமியம் தட்கலுக்கும் சாதாரண தட்கலுக்கும் இருப்பது ஒரே ஒரு வித்தியாசம் தான். தட்கலுக்கு வசூலிக்கப்படும் சிறப்பு கட்டணத்துடன் பிரீமியம் தட்கல் டிக்கெட்களுக்கு ‘Dynamic Fare’ என்ற கட்டணமும் வசூலிக்கப்படும். இந்தக் கட்டணம் என்பது மக்கள் டிக்கெட் எடுக்க எடுக்க அதிகரிக்கும்.

அதாவது 120 டிக்கெட்கள் பிரீமியம் தட்கல் பிரிவில் விற்கப்படுகிறது என்றால் முதல் சில டிக்கெட்கள் எடுப்பவர்களுக்கு ‘Dynamic Fare’ இருக்காது. பின் அது ஏறிக்கொண்டே இருக்கும். கடைசி சில டிக்கெட்கள் மட்டும் மீதமிருக்கும் போது டிக்கெட்டின் விலை மிக அதிகமாக இருக்கும். எனவே தட்கல் டிக்கெட்கள் கொடுக்கும் நேரத்தில் சரியாக முன்பதிவு செய்தால் டிக்கெட் விலை சாதாரணமாக இருக்கும், தட்கலுக்கு பதில் இதையும் நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.

விழாக்காலங்களில் ஈஸியா டிக்கெட் புக் செய்வது எப்படி? உங்களுக்காக ஐ.ஆர்.டி.சியின் சில டிப்ஸ்

மேலும் அவசரமாக ஊருக்குச் செல்ல வேண்டும் என்ற நிலை வருகையில் பிரீமியம் தட்கல் பிரிவில் டிக்கெட் இருக்கிறதா என்று பார்க்கலாம். பல நேரங்களில் சார்ட் ரெடி ஆகும் முன்வரை இதில் டிக்கெட் இருக்கும். ஆனால், விலை அதிகமாக இருக்கும். இது அவசர வேளைகளில் கூடுதல் விலை என்றாலும் பரவாயில்லை என்று இருப்பவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் .

அடுத்தபடியாக நிறைய பேருக்கு ஏசியில் பயணிக்கனும்னு ஆசை இருக்கும், ஆனால் பணப் பற்றாக்குறை காரணமாக ஸ்லீப்பர் டிக்கெட் போட வேண்டி இருக்கும். ஆனால் ஐ.ஆர்.சி.டி.சி யில் ஸ்லீப்பர் டிக்கெட் எடுத்து ஏசியில் பயணிக்க முடியும் ! அது எப்படி என்றால், நீங்கள் ஸ்லீப்பரில் முன்பதிவு செய்யும்போது ‘Consider for Auto Upgradation’ என்ற செக்பாக்ஸை டிக் செய்திருந்தால் ஸ்லீப்பர் டிக்கெட் போட்டு ஏசியில் பயணிக்க வாய்ப்பு கிடைக்கும். அதாவது நீங்கள் ஸ்லீப்பர் முன் பதிவு செய்து சார்ட் தயார் செய்யும் போது ஏசி கோச்சில் காலி இடங்கள் இருந்தால் உங்கள் ஸ்லீப்பர் டிக்கெட் ஏசி கோச்சிற்கு மாற்ற வாய்ப்புண்டு.

விழாக்காலங்களில் ஈஸியா டிக்கெட் புக் செய்வது எப்படி? உங்களுக்காக ஐ.ஆர்.டி.சியின் சில டிப்ஸ்

விழாக்கள் விடுமுறைகள் தொடந்து வந்து கொண்டு இருக்கும் இந்நிலையில் இந்த ஐ.ஆர்.சி.டி.சி டிப்ஸை யூஸ் பண்ணி பயன் பெறுங்கள்.

நயன்தாராவின் அடுத்த படம் டிராப்பா? என்ன காரணம்

0

நயன்தாராவின் அடுத்த படம் டிராப்பா? என்ன காரணம்

நயன்தாரா நடித்த படம் என்றாலே அந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்கி திட்டமிட்ட காலத்துக்குள் முடிக்கப்பட்டு விடும் என்பதும், நயன்தாரா அந்த அளவுக்கு தான் ஒப்புக்கொண்டு படத்திற்கு ஒத்துழைப்பு கொடுப்பார் என்பதும் தெரிந்ததே.இந்த நிலையில் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாக இருக்கும் ’நெற்றிக்கண்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்தை மிலிந்த் ராவ் என்ற இயக்குனர் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த படம் அறிவிக்கப்பட்ட பின்னர் எந்த விதமான ஆரம்பகட்ட பணிகளும் தொடங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படம் கிட்டத்தட்ட டிராப் என கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. சிவகார்த்திகேயன் நடிப்பில் விக்னேஷ்சிவன் இயக்குவதாக இருந்த திரைப்படம் எதிர்பாராத காரணத்தினால் டிராப் ஆகி விட்டதால் நெற்றிக்கண் படத்தையும் விக்னேஷ் சிவன் டிராப் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த படம் வேறு தயாரிப்பாளரின் தயாரிப்பில் உருவாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் ரஜினியுடன் ‘தர்பார்’ படத்தில் நடித்து முடித்துள்ள நயன்தாரா, தற்போது ஆர்ஜே பாலாஜி இயக்கி வரும் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் நடித்து வருகிறார். ‘நெற்றிக்கண்’ படத்திற்கு கொடுத்த தேதிகளையும் அவர் இந்த படத்திற்கே கொடுத்துவிட்டதால் இந்த படம் திட்டமிட்ட காலத்திற்கு முன்னரே முடிக்கப்படும் என தெரிகிறது.

“குடியுரிமை மசோதாவில் இஸ்லாமியர்கள் ஏன் இடம்பெறவில்லை ??? ” – பா.ஜ.க வின் சந்திர குமார் போஸ் அதிரடி !!!

0

மதத்தின் அடிப்படையில் இந்தியாவில் குடியுரிமை வழங்க வழிவகை செய்யும் வகையில் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் திருத்திற்கு, ‘இந்திய அளவில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில்’ மிகப் பெரும் எதிர்ப்பு நிலவி வருகிறது. நாளுக்கு நாள், ட்விட்டர், பேஷ் புக் போன்ற சமூக வலைத்தளங்களில் அவர்களின் எதிர்ப்பு பல்வேறு வகைகளில் வெளிப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு, மேற்கு வங்க மாநில  பா.ஜ.க  துணை தலைவரும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பேரனுமான, சந்திர குமார் போஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் அவர் கூறியுள்ளதாவது “குடியுரிமை திருத்த சட்டம் எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல, என கூறப்படுகிறது, ஆனால் ஹிந்து, சீக்கியர், கிறிஸ்துவர் என குறிப்பிட்ட மதத்தினர் மட்டும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளனர். அப்படியானால் முஸ்லீம் மதத்தினர் ஏன் இதில் இடம்பெறவில்லை. இது குறித்து வெளிப்படையான விளக்கம் தேவை “என்று அதிரடியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

திடீரென லண்டன் சென்ற விஜய்: தளபதி 64 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எப்போது?

0

திடீரென லண்டன் சென்ற விஜய்: தளபதி 64 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எப்போது?

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகிவரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு சென்னை, டெல்லி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஷிமோகாவில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் விஜய் நேற்று முன்தினம் சென்னை திரும்பி அதன் பின்னர் தனது குடும்பத்தினருடன் லண்டன் சென்றுள்ளார். லண்டனில் அவர் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாக்களை கொண்டாடிவிட்டு அதன் பின்னர் ஜனவரி 10-ஆம் தேதி விஜய் சென்னை திரும்ப இருப்பதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து பொங்கலுக்கு பின்னர் தளபதி 64 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாகவும், இந்த படப்பிடிப்பில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி மோதும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ஷிமோகாவில் நடைபெற்றுவரும் படப்பிடிப்பில் விஜய் இல்லை என்றாலும் மற்ற காட்சிகளின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், மாளவிகா மேனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிலோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.

இந்தியாவிற்கு “தலைமை தளபதி” – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

0

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்திய பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், முப்படைகளுக்கும் சேர்த்து புதிய தலைமை தளபதியை நியமிக்க வசதியாக ஒரு புதிய பதவியை உருவாக்கவும் அவரே பாதுகாப்பு விவகாரங்கள் துறையின் தலைவராக இருப்பார் என்றும், பாதுகாப்பு அமைச்சகம் முன்மொழிந்த பரிந்துரை முறைப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இந்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

1999-ஆம் ஆண்டில் கார்கில் போருக்கு பிறகு இந்திய அரசு நியமித்த உயர்நிலைக்குழு, முப்படைகளின் தேவை கருதியும் தேச பாதுகாப்பு தொடர்புடைய முக்கிய முடிவுகளை எடுக்கும் வகையில், அரசுக்கும் முப்படைகளுக்கும் இடையே ஒரு பாலம் போல செயல்பட்டு ஆலோசனை வழங்க உயர்நிலை அதிகாரி நியமிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது.

இந்நிலையில் கடந்த சுதந்திர தினத்தன்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி,”முப்படைகளுக்கு தலைமை தளபதியை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அறிவித்தார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில், இதற்காக குழு அமைக்கப்பட்டு விரிவான வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டது. இதன்படி முப்படைகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும், இது குறித்து பிரதமர் மற்றும் ராணுவ அமைச்சருக்கு ஆலோசனை வழங்கவும் தலைமை தளபதியை நியமிக்க முடிவு செய்யப்பட்டது.

நேற்று  நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இதற்க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ராணுவ அமைச்சகத்தின் கீழ் ராணுவ விவகாரங்களுக்கான துறை உருவாக்கப்பட்டு, அதன் தலைவராகவும் தலைமை தளபதி செயல்படுவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ராணுவம், கடற்படை  விமானப்படை தளபதிகளை போல் தலைமை தளபதியும் நான்கு நட்சத்திர அந்தஸ்து பெற்று செயல்படுவார். இதுதொடர்பான தகவலை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க பதவியை ஏற்கப்போவது யார் என்பது பற்றிய விவரம் தெரிவிக்கப்படவில்லை. எனினும் தற்போதைய ராணுவ தளபதி பிபின் ராவத் முதல் தலைமை தளபதியாக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.