Home Blog Page 5823

ராகுல் – பிரியங்காவுக்கு அனுமதி மறுப்பு ???

0

குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக உத்தப்பிரதேசத்தில் நடந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில் போராட்டக்காரர்கள் 17 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இருவரும் மீரட் புறப்பட்டுச் சென்றனர்.

மீரட்டிற்கு வெளியே பர்தாபூர் காவல் நிலையம் அருகே போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். உத்தரப் பிரதேசத்தில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வரும் அசாதாரண சூழ்நிலையில் அவர்களை அனுமதிக்க மறுத்து விட்டனர்.

இது குறித்து ராகுல் கூறுகையில் “மீரட் நகருக்குள் நுழைய எங்களை போலீசார் அனுமதிக்கவில்லை. அதற்கான ஆணையை காட்டுமாறு கேட்டோம். போலீசாரிடம் பதில் இல்லை,அவர்கள் எங்களை திருப்பி அனுப்பினர்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மக்கள் தொகை பதிவேடு புதுப்பிக்கும் பணிக்கு ரூ.3941 கோடி – மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

0

நிதி ஒதுக்கீடு செய்வது, முக்கியமான திட்டங்கள் மற்றும் பணிகளுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்த முடிவுகளை எடுப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டில்லியில் நேற்று கூடியது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021,ல் நடக்கவுள்ளது. இதற்கு முன்பாகவே தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கான பணிகள் துவங்கிவிடும். அசாமை தவிர மீதமுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த பணிகள் நடக்கவுள்ளது.

இதன்படி நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தங்களை பற்றிய தகவல்களை, தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டியது அவசியம்.இந்த திட்டத்தின் கீழ் மக்கள் தொகை பற்றிய விபரங்களுடன் “பயோமெட்ரிக் “விபரங்களும் இடம் பெரும்.

இந்த பதிவேட்டை புதுப்பிக்கும் பணிகளுக்காக 3,941 கோடி ருபாய் நிதி ஒதுக்க நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பிக்கும் பணிகள் வரும் ஏப்ரலில் துவங்கவுள்ளது.

தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் எடுக்கப்படும் தகவல்களை அடிப்படையாக வைத்து தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையை செயல்படுத்தும் திட்டம் எதுவும் தற்போது அரசிடம் இல்லை என்று உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

ரஜினியிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்: ஏன் தெரியுமா?

0

ரஜினியிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்: ஏன் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களிடம் பிரபல நடிகரும் இயக்குனருமான ஒருவர் மன்னிப்பு கடிதம் எழுதி மன்னிப்பு கேட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்க பல இயக்குனர்கள் காத்திருக்கும் நிலையில் ரஜினியே ஒருவரிடம் தன்னுடைய படத்தை இயக்கி தருமாறு வேண்டுகோள் விடுத்தார். அவர்தான் பிரபல மலையாள நடிகரும் சமீபத்தில் வெளியான லூசிஃபர் என்ற திரைப்படத்தை இயக்கியவருமான பிரிதிவிராஜ்.

ஆனால் இந்த வாய்ப்பை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஏற்கனவே இரண்டு மலையாளப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் தன்னுடைய நிலையை எடுத்து தெரிவித்த பிரிதிவிராஜ், உங்கள் படத்தை இயக்க முடியாத நிலைக்கு தான் வருந்துவதாக கூறி ஒரு நீண்ட மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார் பிருதிவிராஜ்.

பிரித்விராஜ் நிலைமையை புரிந்து கொண்ட ரஜினிகாந்த் எதிர்காலத்தில் நாம் மீண்டும் இணைவோம் என்று ஆறுதல் கூறியுள்ளார். ரஜினி படம் இயக்க வாய்ப்பு கிடைத்தால் உடனே மற்ற படங்களை அம்போவென விட்டுவீட்டு ஓடி வரும் இயக்குனர்கள் மத்தியில் தான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்கள் தான் முக்கியம் என உறுதியாக முடிவெடுத்த பிரித்திவிராஜ்க்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

அரசியலை புகுத்தி மத நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்காதீர்கள்! திமுக காங்கிரசை எச்சரித்த ஜிகே வாசன்

0

அரசியலை புகுத்தி மத நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்காதீர்கள்! திமுக காங்கிரசை எச்சரித்த ஜிகே வாசன்

சென்னை:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம் அன்னிய நாடுகளில் இருந்து அகதிகளாக வந்து நிம்மதியை தொலைத்தவர்களுக்கு நிம்மதியான வழி வகுத்துள்ளது.

இந்த சட்டத்தை இஸ்லாமியவர்களுக்கு எதிரான சட்டம் என்று பேசுவது தவறு. அதில் உண்மை இல்லை என்று மத்திய அரசும் தெளிவுபடுத்தி இருக்கிறது.

இருப்பினும் இஸ்லாமியர்களுக்கு ஒரு சிறு பாதிப்பு இருப்பது உண்மை என்று தெரியவந்தால் எதிர்க்கும் முதல் கட்சியாக த.மா.கா இருக்கும்.

இந்த சட்டத்தை பற்றி மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை. யூகத்தின் அடிப்படையில் கருத்துக்களை பேசுவதும், பரப்புவதும் மக்களிடையே நல்ல உறவையும், சட்டம் ஒழுங்கையும் கெடுத்துவிடும்.

நாட்டின் வளர்ச்சியில் இஸ்லாமியர்களின் பங்கும் அதிகம் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை.

மத்திய-மாநில அரசுகள் கொண்டுவரும் எந்த திட்டமாக இருந்தாலும் பாரபட்சமில்லாமல் ஒரே மாதிரியாகத்தான் கொண்டு வரப்படுகின்றன. எந்த பிரச்சனையாக இருந்தாலும் எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமாக சிந்திக்க வேண்டும். அரசியலை புகுத்தி மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிப்பது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல.

இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் தமிழர்களுக்கும், சிங்களர்களுக்கும் இணையாக 100 சதவீதம் அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அப்படியானால் தான் தமிழர்களுக்கு அங்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். அப்படியும் விரும்பாதவர்களுக்கு ஒத்த கருத்து கொண்டவர்களுக்கு தான் இரட்டை குடியுரிமை வழங்குவது பற்றி ஆலோசிக்க வேண்டும்.

தமிழ் மாநில காங்கிரஸ் மதவாதத்தை எதிர்க்கிறது. அதே நேரத்தில் மதச்சார்பின்மை என்ற பெயரில் அரசியலை புகுத்தி பேசுபவர்கள் மீது நம்பிக்கை இல்லை. அரசியலை புகுத்துவது முக்கியம் அல்ல. மத நல்லிணக்கமே முக்கியம் என்று ஜி.கே.வாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கிறிஸ்துமஸ் ஸின் சிறப்புகள்!!!

0

உலகம் இன்று டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கிறிஸ்துவ மக்களால் கொண்டாட படும் பண்டிகை ஆகும் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை பற்றிய சிறப்புகளை நாம் பார்ப்போம்.

இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினம்தான் கிறிஸ்துமஸ் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

கிறிஸ்துமஸ் என்ற வார்த்தை “கிறிஸ்ட் மாஸ்” என்ற 2 வார்த்தைகளின் இணைப்பு மூலம் உருவானது. இயேசு கிறிஸ்து பிறந்த ஆண்டு சரியாக தெரியவில்லை என்பதால், கிமு 7க்கும் கிமு 2க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் பிறந்திருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.

அதேபோலவே யூதர்களின் பருவகால நாட் காட்டிகள் மூலம் கணக்கிட்டு, ஒரு யூக அடிப்படையில் தான் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுவதாக சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முதன் முதலில் 4வது நூற்றாண்டை சேர்ந்த சில மேற்கத்திய கிறிஸ்தவர்கள் கொண்டாடியதாக சில வரலாற்று குறிப்புகளில் இருப்பதாக கூறுகின்றன . ஆனால் வேறு சில பிரிவுகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து, ஜனவரி 6ம் தேதி இயேசு பிறந்ததாகவும் கொண்டாடியதாக கூறப்படுகிறது.

எப்படி இருப்பினும் கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதை உலகம் முழுவதும் கிறிஸ்தவ மக்கள் மிகச் சிறப்பான நாளாக கொண்டாடி மகிழ்கின்றனர். இந்தத் தினத்தை கிறிஸ்துவர்கள் விசேஷமாக கருதுவதால் அன்றைய தினம் பல புதிய பணிகளைத் தொடங்குவதையும் அவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

கிபி 800ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று, சார்லிமேனி என்ற பேரரசன் மன்னராக பதவியேற்றான் என வரலாற்று குறிப்பில் உள்ளது.கடந்த 1066ம் ஆண்டு இங்கிலாந்து மன்னன் வில்லியம் 1 மன்னராக முடிசூட்டப்பட்டார். மேலும் 1377ம் ஆண்டு இங்கிலாந்து மன்னன் ரிச்சார்ட் 2 கிறிஸ்துமஸ் பண்டிக்கையை மிக விமர்சியாக கொண்டாடினார் எனவும் உள்ளது.கடந்த 1643ம் ஆண்டு இந்தோனேஷியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தீவுக்கு “கிறிஸ்துமஸ் தீவு” என்று பெயரிடப்பட்டது.

இப்படி கிறிஸ்துமஸ் பண்டிகை நாட்டு மக்களிடையே பிரபலமடைந்து, பின்னர் உலகமெங்கும் விமரிசையாக கொண்டாடும் வழக்கம் உருவானது. கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள பரிசுப் பொருட்களை பரிமாறி கொள்வதும்,இல்லாத மக்களுக்கு பரிசு பொருட்களை வழங்குவதும் சிறப்பு அம்சம் ஆகும்.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக முதன்முதலில் கிறிஸ்துமஸ் மரம் வைக்கும் வழக்கம், 1510ம் ஆண்டும் ரிகா என்ற இடத்தில் துவங்கியது என கூறப்படுகிறது.  1840ம் ஆண்டு இங்கிலாந்தில் முதன் முதலாக கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் அனுப்பும் வழக்கம் துவங்கியது.

கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது கிறிஸ்துவர்கள் குழுக்களாக சேர்ந்து கேரல் சர்வீஸ் என்ற நிகழ்ச்சியை நடத்துகின்றனர். இந்த கேரல் நிகழ்ச்சியில் குழந்தை இயேசுவை வாழ்த்தியும், அவரது பிறப்பு, அவர் உலகில் வந்த நோக்கம் உள்ளிட்ட கருத்துகளை கொண்ட பாடல்கள் பாடப்படுவது அவர்களின் வழக்கம்.

கடந்த 1847ம் ஆண்டு பிரான்சில் தான் முதல் முதலாக கிறிஸ்துமஸ் கேரல் சர்வீஸ் நடத்தப்பட்டதாக தெரிகிறது வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஓட்டி வரலாற்றில் சில ருசிகரமான சம்பவங்கள் நடைபெற்று உள்ளன.

பண்டைய காலத்தில் வாழ்ந்த பாரசீகர்களும், பாபிலோனியர்களும் கிறிஸ்துமஸ் பண்டிகையை வருடத்தின் சிறந்த  நாளாக கொண்டாடி வந்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று, பாரசீக நாட்டில் உள்ள எல்லா அடிமைகளுக்கும் ஒருநாள் மட்டும்  விடுதலை அளிக்கப்படும்.

மேலும் சில எஜமான்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று மட்டும், அடிமைகளுக்கு வீ்ட்டில் முழு சுதந்திரம் கொடுத்ததாகவும் வரலாற்றில் குறிப்புகள் உள்ளது.

மொத்தத்தில் நல்லது ஓங்கவும், அல்லது அழியவும் இந்த நன்னாளை உலக மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இயேசு பெருமானை இறைஞ்சி, துதி பாடி மகிழ்கின்றனர் என்பது சந்தோஷமான விஷயம்தான்.அனைவருக்கும்  இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

போட்டோக்களிலிருந்து பேக்கிரவுண்டை நீக்க இதோ ஒர் எளிய வழி

0

போட்டோக்களிலிருந்து பேக்கிரவுண்டை நீக்க இதோ ஒர் எளிய வழி 

ஒவ்வோருத்தருக்கும் ஒவ்வோரு விசயம்  மகிழ்ச்சியை தரும், அப்படி பொதுவாக  எல்லாருக்கும் மகிழ்ச்சியை தருவது போட்டோஸ் தான், அந்த வகையில் ஒருவர் எடுக்கும் போட்டோ  நல்லா இருந்தாலும் அதன் பேக்கிரவுண்ட் சரி இல்லாத காரணத்தாலேயே பல சமயம் அந்த புகைப்படம் யூஸ் பண்ணமாலேயே போய்விடும்.

அப்படி குறிப்பிட்ட புகைப்படங்களில் இருந்து பேக்கிரவுண்டை (back ground) நீக்குவது எப்போதும் ஒர் சவாலான செயலாகும். அதே சமயம் பேக்கிரவுண்டை நீக்குவதற்கு செலவிடும் நேரமும் அதிகம். அதுக்கு எல்லாம்  (All in All solution) ஆல் இன் ஆல் சோலுஷன் ஆக இருக்கிறது ரிமூவ்.பீ.ஜி (Remove.bg) என்ற புதிய இலவச ஆன்லைன் கருவி. இதன் மூலம் ஐந்து விநாடிகளில் புகைப்படங்களில் இருக்கும் பின்னணியை சுலபமாக அகற்ற முடிகிறது.

How to change the Backround from Photos-News4 Tamil Online Technical News in Tamil1
How to change the Backround from Photos-News4 Tamil Online Technical News in Tamil1

ஃபோட்டோஷாப் அல்லது வேறு சிக்கலான புகைப்பட எடிட்டிங் மென்பொருளை விட இந்த புதிய டூல் வேகமாக பின்னணியை நீக்கிவிடுகிறது. ஒரு புகைப்படத்தில் இருக்கும் ஒரு நபரை மையக்கருத்தாக வைத்து அதன் பின்னணியை மட்டும் இந்த டூல் நீக்குகிறது.

How to change the Backround from Photos-News4 Tamil Online Technical News in Tamil2
How to change the Backround from Photos-News4 Tamil Online Technical News in Tamil2

இக்கருவியை பயன்படுத்த நாம் செய்யவேண்டியவை , கணினியிலிருந்து ஒரு புகைப்படத்தைத் தேர்ந்தெடுத்து அதை ரிமூவ்.பீ.ஜி (Remove.bg) டூலில் பதிவேற்றவேண்டும். பின்னர் சில விநாடிகளில் முடிவுகளை நாம் பெற முடியும். Remove.bg மூலம் பின்னணி நீக்கப்பட்ட புகைப்படத்தை (பி.என்.ஜி) PNG வடிவத்தில் விரைவாக பதிவிறக்கம் செய்ய முடியும்.

How to change the Backround from Photos-News4 Tamil Online Technical News in Tamil3
How to change the Backround from Photos-News4 Tamil Online Technical News in Tamil3

இந்த இலவச ஆன்லைன் கருவி AI (செயற்கை தொழில்நுட்பம்) பயன்படுத்தி பின்னணியில் இருக்கும் புகைப்படத்திற்க்கு தேவையில்லாதவைகளை வேகமாக நீக்கிவிடுகிறது.இந்த கருவியில் இருக்கும் குறைபாடு என்னவென்றால், இந்த டூலினால் போர்ட்டிரேட் வடிவத்தில் இருக்கும் புகைப்படத்தின் பின்னணியை மட்டுமே அகற்ற முடியும்.

மேலும் தற்போதைய நிலையில் இந்த டூலினை பயன்படுத்தி 500×500 பிக்சல்கள் அளவுள்ள படங்களை மட்டுமே பதிவிறக்க முடியும்.மேலும் இக்கருவியின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்த செய்தியின் படி, விரைவில் தங்களது வாடிக்கையாளர்களுக்கு தரமான புகைப்படங்களை பதிவிறக்கம் செய்யும்படி மாற்றப்போகிறோம் என தகவல் வெளியாகி இருந்தது.

How to change the Backround from Photos-News4 Tamil Online Technical News in Tamil5
How to change the Backround from Photos-News4 Tamil Online Technical News in Tamil5

இந்த தளத்தை பயன்படுத்திய போது அது நன்றாக வேலை செய்கிறது. ஆனால் புகைப்படத்தின் பின்னணி தெளிவாக இல்லை என்றாலோ அல்லது மிருகத்தின் புகைப்படம் இருந்தாலோ இந்த டூல் தடுமாறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

போர் அணியை நடத்திய ஸ்டாலினை வைத்தே தனக்கு விளம்பரமாக்கிய காங்கிரஸ்! திமுகவை புலம்ப வைத்த பேரணி

0

போர் அணியை நடத்திய ஸ்டாலினை வைத்தே தனக்கு விளம்பரமாக்கிய காங்கிரஸ்! திமுகவை புலம்ப வைத்த பேரணி

சென்னையில் நேற்று நடைபெற்ற தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக திமுக சார்பில் நடைபெற்ற பேரணியில் திமுகவினரும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ்,மதிமுக, கம்யூனிஸ்ட்கள் கட்சிகளை சேர்ந்த திரளானோர் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்,.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில் காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, வைகோ, கி.வீரமணி, கே.பாலகிருஷ்ணன், திருமாவளவன் போன்றோர் கலந்து கொண்டனர்,. கூட்டம் வெற்றிபெற்றதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இது பேரணி அல்ல போர் அணி என்று முடிவில் பேசினார்,.

இது ஒருபுறம் இருந்தாலும், தற்பொழுது மு.க.ஸ்டாலினை 2021 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் தங்கள் பிடியில் கொண்டு வர காங்கிரஸ் தற்போதே வியூகம் அமைத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காரணம், மு.க.ஸ்டாலின் அவர்கள் திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி போல் தன்னை தேசிய அளவில் மிகப்பெரிய தவிர்க்கமுடியாத தலைவராக காட்டிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தேசிய அளவில் எழும்பும் எதிர்ப்புகளுக்கும் மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார், மேலும் பல மாநிலங்களில் புதியதாக ஆட்சி அமைக்கும் முதலமைச்சர் பதவி ஏற்கும் விழாவில் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இதனை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பெரும்பாலோர் விரும்பவில்லை.

மு.க.ஸ்டாலின் அவர்கள் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவராக தொடர்ந்து தென்பட்டால், பா.சிதம்பரம் போன்ற காங்கிரஸ் தலைவர்கள், ஸ்டாலின் தயவால் தான் டெல்லியில் காலூன்றுகிறார்கள் என்ற தோற்றத்தை திமுகவினர் தேர்தல் சமயத்தில் ஏலனப்படுத்திவிடுவார்கள் என்ற பயம் காங்கிரஸ் தலைமைக்கு இருக்கின்றது.

இதன் காரணமாகவே மு.க.ஸ்டாலின் உடன் நேற்று நடைபெற்ற பேரணியில் அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம் யாரும் எதிர்பாராத விதமாக கலந்து கொண்டு தேசிய அளவில் உள்ள ஊடகங்களின் பார்வையை தன் மீதும் விழச்செய்தார்,

தேசிய அளவில் மிகப்பெரிய பேரணியை விளம்பரம்படுத்தியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எண்ணினாலும் காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம் பேரணியில் கலந்து கொண்டது காங்கிரஸுக்கு சாதகமாக தான் விளம்பரம் அமைந்தது.

காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் தான் பேரணியை பெருந்திரளாக கலந்து கொண்டு வெற்றி பெற செய்தார்கள் என்று காங்கிரஸ் ஆதரவு ஊடகங்கள் மற்ற மாநிலங்களில் பரபரப்பு செய்தியாக்கின. திமுக பேரணி மூலம் காங்கிரஸுக்கு சாதகமான விளம்பரத்தை தேடித்தந்தன என்பது தான் உண்மை.

இதனை சற்றும் எதிர்ப்பார்க்காத உடன்பிறப்புகளோ, நம் கட்சியினரை வைத்தே தலைவர் பேரணியை நடத்தி இருந்தால் வேற மாதிரி விளம்பரம் அமைந்து இருக்கும் என்று டீ கடையில் புலம்பி வருவதாக உறுதிப்படுத்த கூடிய தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

ஒரே இடத்தில் மோதிக்கொண்ட 50க்கும் மேற்பட்ட கார்கள்: அதிர்ச்சி தகவல்

0

ஒரே இடத்தில் மோதிக்கொண்ட 50க்கும் மேற்பட்ட கார்கள்: அதிர்ச்சி தகவல்

அமெரிக்காவில் உள்ள வர்ஜீனியா மாகாணத்தில் வில்லியம்ஸ் பர்க் என்ற பகுதியில் உள்ள பிசியான தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் சமீபத்தில் அடுத்தடுத்து 50க்கும் மேற்பட்ட கார்கள் வரிசையாக மோதிக்கொண்ட விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர்

இந்த பகுதியில் கடுமையான பனி மூட்டம் இருந்ததாகவும் காலை 8 மணிவரை பனிமூட்டம் இருந்ததால் பாதை சரியாக தெரியவில்லை என்றும் இதனால் அந்த பகுதியில் வந்த கார்கள் பாதை தெரியாததால் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது

இந்த நிலையில் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாகனங்களில் இருந்த காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்தில் மொத்தம் 69 வாகனங்கள் மோதி கொண்டதாகவும் 50க்கும் மேற்பட்ட பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் 11 பேர் பலத்த காயத்துடன் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருவதாகவும் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் பிஸியான சாலை ஒன்றில் அடுத்தடுத்து 69 கார்கள் மோதிக்கொண்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

நிசான் கார் வாங்குபவர்களுக்கு பம்பர் பரிசு?

0

ஜனவரி முதல் நிசான் கார்களின் விலை உயருகிறது. ஜப்பானிய நிறுவனமான நிசான் இந்திய மார்க்கெட்டில் மூலப்பொருட்களின் விலை உயர்வு கூடுதல் உற்பத்தி செலவு இன்னும் உள்ளிட்ட காரணங்களால் கார் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. வரும் 2020ம் ஆண்டு ஜனவரி முதல் தனது கார்களின் விலை 5 சதவீதம் இருப்பதாக நிசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படிதான் கார்களின் விலை மாடல்கள் தகுந்தவாறு 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து நிசான் இந்திய தலைவர் ரமேஷ் ஸ்ரீவஸ்தவா கூறுகையில் இந்திய வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்புமிக்க தயாரிப்புகளை வழங்கி வருகிறோம் என்றும் தற்போதைய சவாலான சந்தை சூழல் மற்றும் செலவினத்தை மனதில் வைத்து அனைத்து கார்களின் விலையை உயர்த்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என்றார். இதனிடையே தற்போது நிசான் ரெட் வீகென்ட்ஸ் என்ற பெயரில் கார்களுக்கான சிறப்பு தள்ளுபடி சலுகை வழங்கி வருகிறது.

இதன்படி suv காருக்கு 40 ஆயிரம் வரை தள்ளுபடியும் 40,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் தள்ளுபடியும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இது தவிர ரூபாய் ஒரு கோடி மதிப்புடைய சிறப்பு பரிசுகளும் வாடிக்கையாளர்களுக்கு நிசான் நிறுவனம் வழங்க உள்ளனர்.

கருப்பு பணம் குறித்த தகவல்கள் – வெளியிட அரசு மறுப்பு !!!

0

கருப்பு பணத்திற்கு எதிராக மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்திலுள்ள வங்கிகளில் இந்தியர்கள் செய்துள்ள முதலீடு குறித்து அந்த நாட்டிடமிருந்து தகவல்களை பெற்றுள்ளது.

தகவல்களை பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தம் கையெழுத்தாகி. முதல் பட்டியலை சுவிட்சர்லாந்து அரசு சமீபத்தில் அளித்துள்ளது. இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. சுவிட்சர்லாந்து அரசு அளித்துள்ள தகவல்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட கருப்பு பணம் தொடர்பாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஒரு செய்தி நிறுவனத்தின் நிருபர் கேள்வி கேட்டிருந்தார். “இந்த தகவல்கள் குறித்த ரகசியம் பாதுகாக்கப்படும் என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது, அதனால் இந்தத் தகவல்களை வெளியிட முடியாது” என மத்திய அமைச்சகம் பதில் அளித்துள்ளது.