Home Blog Page 5824

தமிழக சட்டசபை கூடும் நாள் அறிவிப்பு?

0

தமிழக சட்டசபை கூடும் நாள் அறிவிப்பு?

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் அடுத்த மாதம் 6 ஆம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்குகிறது. சட்டசபை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 28-ந் தேதி தொடங்கி ஜூலை 20-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் பல்வேறு துறை ரீதியான மானியக் கோரிக்கைகளும் மற்றும் பல்வேறு சட்ட மசோதாவும் இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டன.

6 மாதத்திற்குள் சட்டசபை கூட்டப்பட வேண்டும் என்பதால் அடுத்த மாதம் 6-ஆம் தேதி சட்டசபை கூட்ட படுகிறது இதில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார்.

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ந்தேதியுடன் முடிந்து புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு நிகழ்ச்சிகள் ஜனவரி 6-ந்தேதிக்குள் நடைபெறும் என தெரிகிறது.

மேலும் 12-ந் தேதிக்குள் சபை கூட்டத் தொடரை முடிக்க ஏற்பாடு நடந்து வருவதாக சட்டபேரவை செயலக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் 2-ந் தேதி வந்து விடும் என்பதால் சட்டசபையில் ஆளும் கட்சி-எதிர்க்கட்சியின் விவாதங்கள் அனல் பறக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த பிரபல நகைச்சுவை நடிகர்

0

பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த பிரபல நகைச்சுவை நடிகர்

மணிரத்னம் இயக்கத்தில் லைக்காவின் தயாரிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகிவரும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக தாய்லாந்து நாட்டின் காட்டுப் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பில் கார்த்தி மற்றும் ஜெயம் ரவி உள்பட பல முக்கிய நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளனர். விரைவில் விக்ரம் இந்த படத்திம் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் அவ்வப்போது புதிய நடிகர்கள் இணைந்து வருவதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் லேட்டஸ்டாக இந்த படத்தில் இணைந்திருப்பவர் மோகன் ராமன் என்ற நகைச்சுவை நடிகர். இவர் என்ற படத்தில் ஆழ்வார்க்கடியான் என்ற கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் நாவலில் ஆழ்வார்க்கடியான் என்ற கேரக்டர் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் மோகன்ராமுக்கு என் மிகப்பெரிய கேரக்டரை மணிரத்னம் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் விக்ரம், வந்தியத்தேவன் கேரக்டரில் கார்த்தி, ராஜராஜசோழன் கேரக்டரில் ஜெயம் ரவி, நந்தினி கேரக்டரில் ஐஸ்வர்யா ராய், பூங்குழலி கேரக்டரில் ஐஸ்வர்யா லட்சுமி, சுந்தரசோழர் கேரக்டரில் சரத்குமார், குந்தவை கேரக்டரில் த்ரிஷா மற்றும் பிரபு, விக்ரம் பிரபு, ரகுமான், ஜெயராம், லால், அஸ்வின் உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நண்பரை குடிக்க வைத்து விட்டு அவரது மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன்?

0

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 45 வயதான பாஸ்கர் மீன்பிடி தொழிலாளியானா இவருக்கு மாற்றுத்திறனாளி மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். மகள், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். பாஸ்கரின் நண்பர், அதே பகுதியைச் சேர்ந்த ஆரோக்கிய ஜீன்.  இருவரும் ஒன்றாக அடிக்கடி மது அருந்துவார்கள். அதன்படி, கடந்த 31-ம் தேதி இவருவரும் பாஸ்கரின் வீட்டில் அருகே மது அருந்தியுள்ளனர். 

அப்போது, பாஸ்கரின் மகள் வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்து கொண்ட கொடூரன் ஆரோக்கிய ஜீன், வேண்டுமென்றே, பாஸ்கருக்கு அளவுக்கு அதிகமாக மது ஊற்றிக் கொடுத்துள்ளார். உச்சக் கட்ட போதையில், பாஸ்கர் தன் நிலை மறந்து விழுந்து விட்டார் , இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட ஜூன் அவரது  வீட்டிற்குச் சென்றுள்ளான்.

வீட்டில் தனியாக இருந்த பாஸ்கரின் மகளை மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். பின்னர், இந்த சம்பவத்தை வெளியே சொன்னால், கொலை செய்துவிடுவதாக சிறுமியை மிரட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளான். 

காலையில் விஷயம் அறிந்த பாஸ்கர் இதுகுறித்து குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆரோக்கிய ஜீன் மீது புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் ஆரோக்கிய ஜீன் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவனை தேடி வந்தனர். 

போலீசார் தம்மை தேடுவதை அறிந்த ஆரோக்கிய ஜீன் தலைமறைவானான். மாறுவேடத்தில், ஊருக்குளேயே சுற்றித் திரிந்த அவன், போலீசாரின் பிடி இறுகுவதை உணர்ந்த ஆரோக்கிய ஜீன், பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். நண்பருக்கு மது வாங்கிக் கொடுத்து அவரது மகளையே பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வடகொரியாவில் திடீரென முளைத்த புதிய கட்டிடம்: சாட்டிலைட் புகைப்படத்தால் பரபரப்பு!

0

வடகொரியாவில் திடீரென முளைத்த புதிய கட்டிடம்: சாட்டிலைட் புகைப்படத்தால் பரபரப்பு!

வடகொரியாவில் புதிய கட்டிடம் ஒன்று திடீரென முளைத்து இருப்பது சேட்டிலைட் புகைப்படம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வட கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் சமீபத்தில் பேச்சுவார்த்தை நடந்து சமாதான பாதையை நோக்கி சென்று கொண்டிருந்தாலும், மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சனை வெடித்துள்ளது என்பது தெரிந்ததே.

அண்மையில் ’எங்கள் கிறிஸ்துமஸ் பரிசு வாஷிங்டன் எடுக்கும் முடிவைப் பொருத்தது’ என்று வடகொரியா அமெரிக்காவை எச்சரிக்கை விடுத்ததே மீண்டும் இருநாடுகளுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்பதை உறுதி செய்துள்ளது.

இந்த நிலையில் தனியார் நிறுவனம் ஒன்று எடுத்த சாட்டிலைட் புகைப்படத்தில் வடகொரியாவின் அணு ஆயுதம் தயாரிக்கும் தொழிற்சாலை அருகே புதிய கட்டிடம் ஒன்று திடீரென தோன்றி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கட்டத்தில்தான் அணு ஆயுத ஏவுகணைகள் சோதனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. டிசம்பர் 19 ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்த சேட்டிலைட் புகைப்படம் அமெரிக்காவை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. சமீபத்தில் அமெரிக்காவை வடகொரியா எச்சரிக்கை செய்ததற்கும், இந்த கட்டிடத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது நீண்ட தூர இலக்கை தாக்கும் ஏவுகணைகள் இந்த கட்டிடத்தில் இருந்துதான் ஏவ வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.

படம் தோல்வி அடைந்தால் நஷ்ட ஈடு: தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய கட்டுப்பாடு

0

படம் தோல்வி அடைந்தால் நஷ்ட ஈடு: தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய கட்டுப்பாடு

கோலிவுட் திரையுலகின் தற்போதைய மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் குறைந்தபட்சம் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது. அந்த திரைப்படம் வெற்றி அடைகிறதோ இல்லையோ, அந்த திரைப்படம் 200 கோடி மற்றும் 300 கோடி வசூல் செய்ததாக தனது ரசிகர்கள் மூலம் பொய்யான செய்தியை சமூகவலைதளத்தில் பரப்பி அடுத்த படத்திற்கு அதைவிட அதிகமாக சம்பளம் வாங்கும் பழக்கத்தை மாஸ் நடிகர்கள் உள்ளனர். இதனால் பல தயாரிப்பாளர்கள் கோலிவுட் திரையுலகில் காணாமல் போயுள்ளனர்.

இந்த நிலையில் இன்று கூடிய தயாரிப்பாளர் சங்கத்தில் இரண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி ஒரு உச்ச நட்சத்திர நடிகர்கள் நடித்த படங்கள் தோல்வி அடைந்தால் அந்த நடிகர்களே தோல்விக்கு பொறுப்பேற்று நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதேபோல் ஒரு திரைப்படம் வெளியாகி 100 நாட்கள் கழித்த பின்னரே டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த இரண்டு நிபந்தனைகளை அனைத்து தயாரிப்பாளர்களும், நடிகர்களும் பின்பற்ற வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

ஒரு திரைப்படத்தின் வெற்றி தோல்வி என்பது நடிகர்கள் மட்டுமின்றி இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், என அனைவரின் உழைப்பும் உள்ள நிலையில் தோல்வி அடைந்தால் நடிகரிடம் மட்டும் நஷ்ட ஈடு கேட்பது சரியா? என்றும் சிலர் கூறி வருகின்றனர். மொத்தத்தில் மாஸ் நடிகர்கள் இந்த கட்டுப்பாட்டுக்கு ஒப்புக் கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஓய்வு முடிவை அறிவித்த பிரபல கிரிக்கெட் வீரர்?

0

தென்ஆப்பிரிக்காவின் முன்னணி ஆல்ரவுண்டர் பிலாண்டனர். பந்தை ஸ்விங் செய்வதில் வல்லவர். இக்கட்டான நேரத்தில் சிறப்பாக பேட்டிங் செய்பவர் 34 வயதாகும் இவர் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அவர் சொந்த மைதானமான கேப்டவுன் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டுடன் அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் .

தென்னாப்பிரிக்காவில் வேகப்பந்து வீச்சில் மும்மூர்த்திகளாக விளங்கும் ஸ்டெய்ன் மோர்னி மோர்க்கல் ஆகிய இருவரும் ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டனர் தற்போது பிளாண்டரும் ஓய்வு முடிவு தென்னாப்பிரிக்க கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

34 வயதான பிலாண்டர் 60 டெஸ்ட் போட்டிகளில் 216 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார். அதில் 13 முறை ஐந்து விக்கெட்டுக்களும், இரண்டு முறை 10 விக்கெட்டுக்களும் வீழ்த்தியுள்ளார். 30 ஒருநாள் போட்டியில் 41 விக்கெட்டும், 7 டி20 போட்டியில் 4 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 8 அரைசதங்களுடன் 1619 ரன்கள் அடித்துள்ளார்.

தந்தைப் பெரியார் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து இராமதாஸ் அவர்கள் மரியாதை!

0

தந்தைப் பெரியார் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து இராமதாஸ் அவர்கள் மரியாதை!

தந்தைப் பெரியார் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மருத்துவர் இராமதாஸ் அவர்கள் மரியாதை செலுத்தினார்

தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படும் பகலவன் தந்தைப் பெரியாரின் 46-ஆவது நினைவு நாளையொட்டி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் பா.ம.க. அரசியல் பயிலரங்க வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அவருடன் வன்னியர் சங்கத் தலைவர் பு. தா. அருள்மொழி உட்பட பாமக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்

“NO CAA” “NO NRC” சொல்லும் கேரளாவின் புதுமண தம்பதியர்கள்

0

“NO CAA” “NO NRC” சொல்லும் கேரளாவின் புதுமண தம்பதியர்கள்

இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியான கேரளாவின் புதுமண தம்பதிகளின்  புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.  

திருமண நினைவுகளை மீண்டும் மீண்டும் மலரவைக்கும் வகையில் இருப்பது திருமணத்தில் புகைப்படம் தான்.  திருமணத்துக்காகச் செய்யப்படும் செலவுகளுக்கு நிகராக, திருமணத்துக்கு முன்னரும் பின்னரும் என `கப்புள் ஷூட்’ புகைப்படங்கள் எடுப்பதற்கும் செலவிடப்படுகிறது.  இப்போ எல்லாம் வெடிங் அவுட்டோர் போட்டோஷூட் என்பது சர்வசாதாரணமாகிவிட்டது.

அதனால் இதில் ஏதாவது வித்தியாசமாக செய்யலாமே என கேரளா திருவனந்தபுரத்தைச் சேர்ந்த புதுமண தம்பதிகளான ஜி எல் அருண் கோபி மற்றும் ஆஷா சேகர், அவுட்டோர் போட்டோ ஷூட்டுக்கு தேர்ந்தெடுத்த இடம், கடற்கரையோ, மலைப்பிரதேசமோ இல்லை,  இப்போது நாடு முழுவதும் எதிர்ப்பை சந்தித்து வரும் , குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான எதிர்ப்பையே இருவரும் திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட்டின் போது ஒரு செய்தியாக தெரிவிக்க முடிவு செய்தனர்.

அடுத்த ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி  திருமணத்துக்கு தயாராகும் இவ்விரு தம்பதிகள்  தங்கள் திருமணத்தின் ‘#savedate’ ப்ரீ வெடிங்  ஷீட் போட்டோவுக்கும் “NO CAA” மற்றும் “NO NRC” என  இரு தலைப்புகளுடன் கூடிய பலகைகளை கைகளில் வைத்தவாறு  போஸ் கொடுத்து உள்ளனர்.  இந்த படம் திருவனந்தபுரத்தில் உள்ள பொன்முடி ஹில்ஸில் படமாக்கப்பட்டு , டிசம்பர் 18ஆம் தேதி  அர்ஜுன் வி.பி. மற்றும் நிதின் சி.கே ஆகியோரின்  நிறுவனமான ஃபர்ஸ்ட் லுக் போட்டோகிராஃபி என்ற போட்டோகிராபி பேஸ்புக் பக்கத்தில் முதலில் வெளியிடப்பட்டது.

Couples use wedding photoshoots to protest against CAA and NRC
Couples use wedding photoshoots to protest against CAA and NRC
Couples use wedding photoshoots to protest against CAA and NRC
Couples use wedding photoshoots to protest against CAA and NRC
Couples use wedding photoshoots to protest against CAA and NRC
Couples use wedding photoshoots to protest against CAA and NRC

விரைவில், அவர்களின் படங்கள் பல சமூக ஊடக தளங்களில் வைரலாகின, பின்னர், இது ட்விட்டர் மற்றும் Instagram பல லட்ச கணக்குகளால் பகிரப்பட்டது. பலரும் இந்த ஜோடியின்   வெடிங்கிங்கின் 1st  போட்டோஷூட்டை       பாராட்டினர்.  இப்படத்தின் புகைப்படக் கலைஞர் அர்ஜுன் வுடன் பேசிய போது, சமீபத்தில் பல வெடிங் போட்டோ ஷீட்டில் கப்புள்களின் private space அற்று மிக மோசமானவைகளாக பகிர்ப்படுக்கின்றன, அதில் இருந்து தனி இருக்கவே இது போன்ற  போட்டோஷூட் எடுக்க முடிவு செய்தோம் என்றும், இது இப்படி நாடு முழுவதும் வைரலாகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறினார்.

Couples use wedding photoshoots to protest against CAA and NRC
Couples use wedding photoshoots to protest against CAA and NRC
Couples use wedding photoshoots to protest against CAA and NRC
Couples use wedding photoshoots to protest against CAA and NRC

மேலும் மணமகள், தன் சகோதரி  என்பதாலும் அதுமட்டும் இல்லமால் அவள் oru journalist என்பதாலே எனக்கு இந்த idea வை எனக்கும் implement panna mudithathu என்றும் ,  இந்த புகைப்படம் எங்களது  சமூக உறுதிப்பாட்டையும் பொறுப்பையும் வெளி காட்ட  சிறந்த வழியாக  அமைந்துவிட்டது என்றும் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

Couples use wedding photoshoots to protest against CAA and NRC
Couples use wedding photoshoots to protest against CAA and NRC
Couples use wedding photoshoots to protest against CAA and NRC
Couples use wedding photoshoots to protest against CAA and NRC
Couples use wedding photoshoots to protest against CAA and NRC

இதைத்  தொடந்து கேரளாவில் பலர் தங்கள் திருமணத்தின் “NO CAA” மற்றும் “NO NRC” என  இரு தலைப்புகளுடன் கூடிய பலகைகளை கைகளில் வைத்தவாறு புகைப்படங்கள் எடுத்து வருகின்றனர். 

தர்பார் படத்திற்காக பட்டைய கிளப்பிய அனிருத்: வைரலாகும் வீடியோ

0

தர்பார் படத்திற்காக பட்டைய கிளப்பிய அனிருத்: வைரலாகும் வீடியோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்திற்கு இசையமைத்த அனிருத் தற்போது மீண்டும் அவர் நடித்துள்ள தர்பார் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்காக அவர் கம்போஸ் செய்த பாடல்கள் அனைத்துமே ஏற்கனவே சூப்பர் ஹிட்டாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அவர் தர்பார் படத்தின் பின்னணி இசை பணிகளில் தீவிரமாக உள்ளார். இதனை அடுத்து இயக்குநர் ஏஆர் முருகதாஸ் அவர்கள் அனிருத் பின்னணி இசை அமைக்கும் ஒரு வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் தலைவர் ரஜினியின் அட்டகாசமான காட்சிகளுக்கு ஏற்ற பின்னணி இசையை அனிருத் அமைத்திருப்பது தெரியவந்தது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் பயங்கரமாக வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகிபாபு, தம்பி ராமையா, ஸ்ரீமான், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் லைகாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.

வெங்காய விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல் !!!

0

நாடு முழுவதும் நாளுக்கு நாள் வெங்காய விலை உயர்ந்துவருவதோடு தட்டுப்பாடும் நிலவிவருகிறது.வெங்காய விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட790 டன் வெங்காயம் மும்பை வந்தடைந்தது. இவை டில்லி மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

மத்திய அமைச்சக அதிகாரி இதுபற்றி தெரிவிக்கையில் ” நாடு முழுவதும் நாளுக்கு நாள் வெங்காய விலை உயர்ந்துவருகிறது, டில்லி,மும்பை உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு கிலோ 100 முதல் 160 ரூபாய் வரை விற்கப்படுகிறது, இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக எகிப்து, துருக்கி,ஆப்கானிஸ்தான், போன்ற நாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் பகுதியாக இறக்குமதி செய்யப்பட்ட790 டன் வெங்காயம் மும்பை வந்தடைந்துள்ளது. இவை டில்லி மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இவை கிலோ ஒன்று 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் எனவும் கூறினார்.

மேலும் “அடுத்த கட்டமாக இன்னும் 12 ஆயிரம் டன் வெங்காயம்  இந்த மாத இறுதிக்குள் இறக்குமதி செய்யப்பட்டு மற்ற மாநிலங்களுக்கும் அனுப்பப்படும்” என்றும் தெரிவித்தார்