Home Blog Page 5825

தண்ணீர்கான “waterbell”பெற்றோர்கள் மகிழ்ச்சி?

0

பள்ளியில் படிக்கும் குழந்தைகள் சரிவர தண்ணீர் குடிப்பதில்லை என பெற்றோர்கள் மிகவும் வருத்த படுகின்றனர். இதனால் குழந்தைகளுக்கு பல உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.

இந்த நிலையில் போக்க கேரளா மாநிலம், குழந்தைகள் குடிநீர் குடிக்கவே காலை மற்றும் நண்பகலில் 2 முறை ‘water bell‘ நடைமுறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இது பெற்றோரிடம் மிகுந்த வரப்பேற்பை பெற்றது. இதே நடைமுறை கர்நாடகத்திலும் அமல்படுத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் ஏற்கனவே தனது முகநூல் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் கர்நாடகத்தில் ‘water bell‘ நடைமுறை அமல்படுத்த மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் கல்வித்துறை சார்பில் உத்தரவு பிறப்பித்துள்ளது .

அதில் காலையில் ஒரு முறை, மதிய உணவுக்கு பிறகு என ஒரு முறை ஒரு நாளைக்கு 2 முறை இந்த ‘water bell‘ ஒலிக்க செய்யப்பட வேண்டும்.

ஒவ்வொரு முறையும் 10 நிமிடம் வீதம் 20 நிமிடம் ஒதுக்க வேண்டும். இந்த 20 நிமிடத்தில் குழந்தைகள் கண்டிப்பாக தண்ணீர் குடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கர்நாடகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இந்த விதிமுறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இது அம்மாநில பெற்றோரிடம் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.

இந்திய வம்சாவளி பெண் எம்பியை சந்திக்க மறுத்த மத்திய அமைச்சர்: அமெரிக்கா கண்டனம்

0

இந்திய வம்சாவளி பெண் எம்பியை சந்திக்க மறுத்த மத்திய அமைச்சர்: அமெரிக்கா கண்டனம்

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் எம்பி ஒருவரை சந்திக்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுத்ததை அடுத்து அமெரிக்க எம்பிக்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்

மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் அதிபர் டிரம்ப் உள்பட முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் நாடாளுமன்ற குழு ஒன்றை சந்திக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் இந்த குழுவில் இந்திய வம்சாவளிப் பெண் எம்பி பிரமிளா ஜெயபால் இடம் பெற்றிருந்ததை அறிந்ததும் அந்த குழுவை சந்திக்க மத்திய அமைச்சர் ரவிசங்கர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனை பேட்டி ஒன்றில் மத்திய அமைச்சர் ஒப்புக் கொண்டதாகவும் தெரிகிறது

இந்தியாவில் காஷ்மீரில் 370 ஆவது பிரிவை இந்திய அரசு நீக்கிய போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானத்தை கொண்டு வந்தவர்தான் இந்த பிரமிளா எம்பி. அதனால்தான் அவர் இருக்கும் குழுவை சந்திக்கமத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மறுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கருத்து கூறிய அமெரிக்க பெண் எம்பிக்கள் பெர்னி சாண்டர்ஸ் மற்றும் எலிசபெத் வாரன் ஆகியோர், ‘அமெரிக்க எம்பிக்களின் குரலை ஒடுக்க இந்திய அமைச்சரும் இந்தியாவும் முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். மேலும் பிரமிளா ஜெயபாலனுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பல எம்பிக்கள் கருத்து தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் மம்தா பானர்ஜீயின் கருத்து என்ன?

0

ஜார்க்கண்ட் மாநிலத்தில்  ஐந்து கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பா.ஜ.க தனித்து ஒரு அணியாகவும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜே.எம்.எம் ), காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து மற்றொரு அணியாகவும் தேர்தலை சந்தித்தன.

ஐந்து கட்டங்களாக பதிவான வாக்குகள் நேற்று காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் நேற்றே அறிவிக்கப்பட்டன.
இதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி குறித்து மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தாபானர்ஜி தனது டுவிட்டர் வலைத்தளபக்கத்தில் கருத்து தெரிவித்து உள்ளார்.

அதில் அவர் ‘வெற்றி பெற்ற ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாக தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் ப.ஜ.க.வால் ஏற்ற பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது கிடைத்து இருப்பது. மக்களுக்கு கிடைத்த வெற்றி’ என பதிவிட்டுள்ளார்.

“5 பேருக்கு தூக்கு” – பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் தீர்ப்பு.

0

அமெரிக்காவில் வெளிவரும் “வாஹிங்டன் போஸ்ட்” என்ற பத்திரிக்கையில் சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு எதிராக கட்டுரைகள் எழுதி வந்தார் பிரபல பத்திரிகையாளரான ஜமால் கசோகி. சவுதியில் பிறந்தவரான அவர் கடந்த அக்டோபரில் துருக்கியில் அமைந்துள்ள சவுதி அரேபியா தூதரகத்துக்கு, விவாகரத்து தொடர்பான ஆவணங்களில் ஒப்புதல் வாங்க சென்றிருந்தார்.

அவர் திரும்பி வராத நிலையில், கொலை செய்யப்பட்டு உடல் பாகங்கள் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இளவரசர் முகமது பின் சல்மானின் தூண்டுதலில் இந்த கொலை நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

இந்நிலையில் நேற்று, சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள நீதி மன்றத்தில் கசோகி கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கபட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய ஐந்து பேருக்கு தூக்கு தண்டனையும், மூன்று பேருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. சவுதி அரசக்குடும்பத்துக்கு  நெருக்கமான இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது, போதிய ஆவணங்கள் இல்லை என அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக தண்டனை விதிக்கப்பட்டோரின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. 

‘ஒற்றுமைக்கான சத்தியாகிரகம்’ – அரசியல் சாசனத்தை பாதுகாக்க வலியுறுத்தி காங்கிரஸ் போராட்டம்.

0

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில், கடந்த சில நாட்களாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில், பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. கடந்த இரு தினங்களாக வன்முறை சம்பவங்கள் ஓய்ந்தாலும், போராட்டங்கள் தொடர்கின்றன.

இந்நிலையில், ‘ஒற்றுமைக்கான சத்தியாகிரகம்’ என்ற பெயரில், காங்கிரஸ் சார்பில், மஹாத்மா காந்தியின் சமாதி அமைந்துள்ள, டில்லி ராஜ்காட்டில் நேற்று போராட்டம் நடந்தது. இதில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். காங்., தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர், அரசியல் சாசனத்தின் அறிமுகவுரையை படித்தனர். கட்சியின் மற்ற மூத்த தலைவர்கள், தொண்டர்களும், அதை திரும்ப கூறினர்.

இந்த போராட்டம் குறித்து, கட்சியின் பொதுச் செயலர் கே.சி. வேணுகோபால் கூறியதாவது “மத்திய அரசின் மோசமான திட்டங்களால், நாடு மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளது.குடியுரிமை சட்டம் உள்பட அரசின் கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள், இளைஞர்களுக்கு ஆதரவாக நாங்கள் உள்ளோம் என்பதை உறுதி படுத்த இந்த போராட்டம் நடத்தப்பட்டது. அரசியல் சாசனம், மக்களுக்கு அளித்துள்ள உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்றது. மஹாத்மா காந்தியின் அஹிம்சை வழியில், புனிதமான அரசியல் சாசனத்தை பாதுகாக்க, சர்வாதிகார அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம். இவ்வாறு, அவர் கூறினார்.

மத்திய பிரதேசத்தின் முதல்வர் கமல்நாத், ராஜஸ்தானின் முதல்வர் அசோக் கெலாட், மூத்த தலைவர்கள் ஏ.கே. அந்தோனி, அஹமது படேல், குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே, ஆனந்த் சர்மா, திக்விஜய் சிங், மீரா குமார் உள்ளிட்டோர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். பல்வேறு மதத் தலைவர்களும் பங்கேற்றனர்.

”போராட்டங்களின்போது நடந்த வன்முறையில் உயிரிழந்தோருக்காக, இந்த போராட்டம் நடக்கிறது,” என, கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா கூறினார்.

ஐந்தாவது மாநிலமாக ஜார்கண்டில் ஆட்சியை இழந்தது பா.ஜ.க !!!

0

ஐந்தாவது மாநிலமாக ஜார்கண்டில் ஆட்சியை இழந்தது பா.ஜ.க !!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில்  ஐந்து கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பா.ஜ.க தனித்து ஒரு அணியாகவும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜே.எம்.எம் ), காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து மற்றொரு அணியாகவும் தேர்தலை சந்தித்தன.

மொத்தம் உள்ள 81 தொகுதிகளில், பா.ஜ.க 79 தொகுதிகளில் தனித்து களம் கண்டது,  ஜே.எம்.எம் 43 தொகுதிகளிலும், காங்கிரஸ் 31 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் 7 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன. எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே இரண்டு அணிகளுக்கும் இடையே இழுபறி நிலவியது.  ஜே.எம்.எம் கூட்டணி, பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளை விட கூடுதல் தொகுதிகளில் முன்னணி பெற்றது.

இதைத்தொடர்ந்து 47 தொகுதிகளில் ஜே.எம்.எம் கூட்டணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதில் ஜே.எம்.எம் 30 தொகுதிகளிலும், காங்கிரஸ் 14 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஒரு தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. பா.ஜ.க 25 தொகுதிகளில் வெற்றிபெற்றது.

இதைத்தொடர்ந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஜே.எம்.எம் கட்சியின் ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் முதல்வராக பதிவியேற்கவுள்ளார். ஏற்கனவே 2013ம் ஆண்டிலும் இதே கூட்டணியின் ஆதரவுடன் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவி வகித்தார். இந்த தேர்தலில் ஆளும் கட்சியான பா.ஜ.க தோல்வியை சந்தித்ததுடன் ஆட்சியையும் பறிகொடுத்துள்ளது.

இந்த ஒரு ஆண்டில் மட்டும் ஏற்கனவே ராஜஸ்தான், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பா ஜ க ஆட்சியை இழந்திருந்த நிலையில் தற்போது ஜார்கண்டிலும் தோல்வியை சந்தித்திருப்பது பா ஜ க வுக்கு பெருத்த பின்னடைவாக கருதப்படுகிறது.

விக்ரமின் அடுத்த படத்தின் அட்டகாசமான டைட்டில்!

0

விக்ரமின் அடுத்த படத்தின் அட்டகாசமான டைட்டில்!

கோலிவுட் திரையுலகில் திறமையான இயக்குனர்களில் ஒருவர் அஜய் ஞானமுத்து. இவர் இயக்கிய டிமான்டி காலனி மற்றும் இமைக்கா நொடிகள் ஆகிய இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் விக்ரம் நடித்து வரும் ’விக்ரம் 58’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் இந்த படத்திற்கு இந்த படத்தில் கோப்ரா என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. இருப்பினும் படக்குழுவினர் இதனை செய்யவில்லை. இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட்லுக் வரும் ஜனவரி ஒன்றாம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ஏற்கனவே ’அமர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு வதந்தி பரவி பின்னர் அது படக்குழுவினர்கள் மறுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டிநடிக்கும் இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் மற்றும் கே எஸ் ரவிக்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

விக்ரமின் அடுத்த படத்தின் அட்டகாசமான டைட்டில்!

இந்த படத்தின் படப்பிடிப்பை பொங்கலுக்குள் முடிக்கும் விக்ரம், அதன்பின்னர் தாய்லாந்தில் நடைபெற்று வரும் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

திருமணமான 9 மாதத்தில் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை?

0

தக்கலை அருகே திருமணமான 9 மாதங்களில், அரசு மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்புகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்த கிருஷ்ணா ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இவருக்கும் திருவனந்தபுரத்தை சேர்ந்த மருத்துவரான ஆர்யா என்பவருக்கும்  9 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில நாட்களில் ஆர்யா மேற்படிப்பு படிப்பதற்காக அகமதாபாத் சென்றதால் லூலு கிருஷ்ணா தன் பெற்றோருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மனைவியுடன் செல்போனில் நீண்ட நேரம் பேசிய கொண்டு இருந்த கிருஷ்ணா அறையின் கதவு வெகு நேரமாகியும் திறக்காததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கிருஷ்ணா மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தனுஷ்-அனிருத்தை மீண்டும் இணைத்து வைத்த பிரபல இயக்குனர்!

0

தனுஷ்-அனிருத்தை மீண்டும் இணைத்து வைத்த பிரபல இயக்குனர்!

தனுஷ் மற்றும் அனிருத் ஆகிய இருவரும் இணைந்து பணிபுரிந்த 3, வேலையில்லா பட்டதாரி, மற்றும் ’மாரி’ ஆகிய மூன்று படங்களுமே சூப்பர்ஹிட் ஆகிய நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதன் பின் மீண்டும் இணையாமல் இருந்தனர். இந்த நிலையில் தற்போது துரை செந்தில்குமார் இயக்கி வரும் ’பட்டாஸ்’ படத்தில் தனுஷ் நடிக்க அதில் அனிருத் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது உறுதியாகி உள்ளது

பட்டாஸ் படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளிவந்து விட்ட நிலையில் வரும் 25-ஆம் தேதி மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியாக உள்ளது. இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத அனிருத் பாடியுள்ளார் என இந்த படத்தின் இசையமைப்பாளர் விவேக் மற்றும் மெர்வின் தங்களது டுவிட்டர் பக்கங்களில் உறுதிசெய்துள்ளனர். இதனை அடுத்து தனுஷ், அனிருத் மீண்டும் இணைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தனுஷ் படத்தில் அனிருத் இசையமைக்க வேண்டும் என்று ரசிகர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளனர்

தனுஷ், சினேகா, மெஹ்ரின் பிர்ஜதா, ஜெகபதிபாபு, முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவில் பிரகாஷ்பாபு படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. இந்த படம் வரும் ஜனவரி 16ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் இந்த படத்தின் டீசர், டிரைலர், பாடல் வெளியீட்டு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன

ஜார்க்கண்டில் ஆட்சியை இழக்கிறது பாஜக?

0

81 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் 5 கட்டங்களாக நடந்தது. நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக உள்ள மாநிலமாக இருந்தாலும் ஒரு சில இடங்களில் சிறு வன்முறையுடன்பெரும்பாலும் ஓட்டுப்பதிவு அமைதியாகவே நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 65 சதவீதத்துக்கு அதிகமான ஓட்டுகள் பதிவாகின.

இந்நிலையில், பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. ஆட்சியமைக்க 42 எம்எல்ஏக்கள் ஆதரவு நிலையில். வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில் இருந்தே ஆளும் பாஜக பின்தங்கியது. ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ரகுவர்தாஸ் தன் சொந்த தொகுதிலேயே பின் அடைந்தார்.

காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் கூட்டணி தொடர்ந்து முன்னிலை பெற்றது.

தற்போதைய நிலவரப்படி ஆட்சியமைக்க தேவையான மெஜாரிட்டியை விட அதிக தொகுதிகளில் இந்த கூட்டணி முன்னிலை பெற்றது.

இந்த கூட்டணி 46 தொகுதிகளிலும், பாஜக 25 தொகுதிகளிலும் மற்ற கட்சிகள் 10 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.

இதன்மூலம் ஜார்க்கண்டில் பாஜக ஆட்சியை இழந்து, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைக்கும் சூழல் உருவாகி உள்ளது. இந்த கூட்டணி மெஜாரிட்டியை நெருங்கி உள்ளதால், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.