புதுச்சேரி
பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ராம்நாத்
கோவிந்த் புதுச்சேரிக்கு வருகைதந்து மாணவர்களுக்கு
பட்டங்களை வழங்கினார்., துணைநிலை
ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள்
வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் 27-வது பட்டமளிப்பு விழாவில்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்று சில மாணவர்களுக்கு பட்டங்களை
வழங்கினார்.
பட்டமளிப்பு
விழாவில் ஆராய்ச்சி மாணவர்களுக்கும் பல்வேறு
பிரிவுகளில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கும் தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
பட்டமளிப்பு
விழாவில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர்
நாராயணசாமி, பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத்சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். எனவே பாதுகாப்பு நடவடிக்கையாக
, விழாவிற்கு வந்த சந்தேகப்படும் வகையில்
இருந்த ஒரு மாணவர் மற்றும்
ஒரு மாணவியை பாதுகாப்பு அதிகாரிகள்
வெளியே அழைத்து விசாரித்து மாணவரை
உள்ளே அனுப்பினார்கள்.
விழாவில்
இருந்து வெளியேற்றப்பட்ட கேரள மாணவி ரபிஹாவை
அவரது தலையில் அணிந்து வந்த
ஹீஜாப்பை பாதுகாப்பு அதிகாரிகள் அகற்ற கூறியுள்ளனர். அதற்கு
மாணவி மறுப்பு
தெரிவித்ததால் அவர் வெளியேற்றப்பட்டார்.
இவர் பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பியல் துறையில்
முதுநிலை பட்டத்தில் தங்க பதக்கம் வென்றவர்.
ஜனாதிபதி புறப்பட்டு சென்ற பின்னரே அந்த
மாணவி உள்ளே அனுமதிக்கப்பட்டார். இதை
தொடர்ந்து மாணவி
ரபிஹாவுக்கு பட்டம் வழங்கபட்டது ஆனால் மாணவி
தனக்கு வழங்கிய பதக்கத்தை வாங்க
மறுத்து திருப்பி கொடுத்தார். தான் ஹிஜாப் அணிந்ததற்காக அனுமதிக்கப்படாததால் பதக்கத்தை திருப்பி கொடுத்துள்ளார்.
CAA மற்றும் NRC எதிராக போராடும் ஒவ்வொருவருக்கும்
ஆதரவளிக்கும் விதமாக இந்த பதக்கத்தை
வாங்க மறுத்துள்ளதாகவும் மாணவி ரபிஹா தெரிவித்துள்ளார்.
டெல்லியின் கிராரி என்ற பகுதியில் உள்ள அபார்ட்மெண்ட் உள்ளது இதில் மொத்தம் 3 தளங்கள் கொண்ட குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பில் நேற்று நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த குடியிருப்புவாசிகள் எழுவதற்குள் தீ மளமளவென பிற பகுதிகளுக்கும் பரவியதால் கட்டிடம் முழுவதும் கரும்புகையால் சூழ்ந்தது. இதனால் குடியிருப்பாளர்கள் தீயில் சிக்கிக்கொண்டனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறை 3 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த கொடூர விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். அதில் 3 பேர் குழந்தைகள் என தெரிவிக்க பட்டுள்ளது.
மேலும் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த 8ம் தேதி டெல்லியின் அனஜ் மண்டி பகுதியில் உள்ள 4 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழில் நாகராஜ சோழன் எம்.எல்.ஏ, சிக்கிக்கு சிக்கிக்கிச்சி, மணியார் குடும்பம் போன்ற படங்களிலும், மலையாளத்தில் ரெட் சில்லீஸ், அயாள் நிஜனல்ல போன்ற படங்களிலும் நடித்தவர் நடிகை மிருதுளா ரவி. என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி பலரது பாராட்டைப் பெற்றவர் நடிகை மிருதுளா முரளி. இவர் இந்தியிலும் ரத்தேஷ் என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நடிகை மிருதுளா ரவியும், உதவி இயக்குனர் நிதின் விஜய்யும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனையடுத்தி இரு குடும்பத்தினர்களும் இந்த காதலை ஏற்றுக்கொண்டதை அடுத்து சமீபத்தில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.
இந்த நிச்சயதார்த்த விழாவில் நடிகைகள் பாவனா, ரம்யா நம்பீசன், சரண்யா மோகன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். திருமண நிச்சயதார்த்தம் குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
திருமணமான சிறிது நாட்களிலேயே கணவனை தவிக்க விட்டு காதலனுடன் மனைவி செய்த அசிங்கம்?
திருமணமான 20 நாட்களில், கணவரை கைவிட்டு காதலனுடன் இளம்பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காடு பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார் இவருக்கும், பரசேரி என்ற பகுதியை சேர்ந்த ராஜஸ்ரீ என்பவருக்கும், கடந்த மாதம் 24-ம் தேதி திருமணம் நடைபெற்றது.
புதுமண தம்பதியர் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தனர், திருமண விடுமுறை முடிந்த வேல்முருகன் டிசம்பர் 16-ம் தேதி வேல்முருகன் தன் அலுவலகத்திற்கு சென்ற பின் பணி முடிந்து வீட்டுக்கு வந்த வேல்முருகன், மனைவி வீட்டில் இல்லாததைகண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதுகுறித்து மனைவியின் பெற்றோரை தொடர்பு கொண்டு பேசியதில், ராஜஸ்ரீ அங்கும் செல்லவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
மேலும், ராஜஸ்ரீ தாய் வீட்டில் கொடுத்த 70 சவரன் நகையுடன் ராஜஸ்ரீ மாயமானது தெரியவந்தது, இதனையடுத்து வேல்முருகன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் ராஜஸ்ரீ பள்ளி பருவத்தில் இருந்தே பக்கத்துவீட்டை சேர்ந்த சந்தோஷ் என்ற நபரை காதலித்து வந்துள்ளார், திருமணமான இருபதே நாளில் கணவனை விட்டு, காதலனுடன் பெங்களூருக்கு ஓட்டம் பிடித்ததும் தெரியவந்தது.
ஆனால்,பலரிடம் கடன் வாங்கியுள்ள சந்தோஷ், பணத்திற்காக தனது மகளை கடத்தி சென்றுள்ளதாக, அவரது தந்தை ராஜேந்திர பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார்
இது மாதிரி நபர்களை எல்லாம் கண்டு கொள்ள வேண்டாம்: பாடகி சின்மயி அதிரடி கருத்து
கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி சமீபத்தில் மீடூ குற்றச்சாட்டு கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது நடிகர் ஒய்ஜி மகேந்திரன் குறித்து கூறிய ஒரு கருத்தும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஒரு ஒய்ஜி மகேந்திரன் அவர்கள் மாணவர்களின் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார். இளம்பெண்கள் சைட் அடிக்க வேண்டும் என்பதற்காகவே மாணவர்கள் போராடுகிறார்கள் என்று அவர் தெரிவித்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஒய்ஜி மகேந்திரனுக்கு நாலா பக்கங்களிலும் இருந்தும் கண்டனங்கள் குவிந்த நிலையில் இது குறித்து கருத்து கூறிய பாடகி சின்மயி ’இது போன்ற நபர்களை திருத்தவே முடியாது. எனவே இவர்களை எல்லாம் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவதே சரியானதாகும்.
இவர்களை திருத்த நினைத்தால் நமக்குத்தான் டைம் வேஸ்ட் என்று கூறியுள்ளார். பாடகி சின்மயின் இந்த டுவிட் தற்போது நெட்டிசன்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
I think we should all generally ignore comments from these men. They cant be changed. And its a waste of time. https://t.co/PYPzs8XHaX
உலகளவில் பலவகையான அழகு போட்டிகள் நடப்பதுண்டு. உலக அழகி, பிரபஞ்ச அழகி போட்டிகளை தாண்டியும் பல வகையில் அழகு போட்டிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அப்படி ஒரு அழகி போட்டிதான் மிஸ் டீன் சர்வதேச அழகுப் போட்டி. இது உலகின் மிகப் பழமையான போட்டியாகும். கடந்த 27 ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து சென்ற ஒருவரும் இப்போட்டியில் வெற்றி பெற்றதில்லை, இந்நிலையில் சமீபத்தில் நடந்த இந்த ஆண்டிற்கான மிஸ் டீன் சர்வதேச போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் வதோதராவைச் சேர்ந்த பதினாறு வயதான ஆயுஷி தோலாகியா, “மிஸ் டீன் சர்வதேச “மகுடத்தை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
பாரம்பரிய
கதக் நடனத்தில் தேர்ச்சி பெற்றுள்ள இந்த 11-ஆம் வகுப்பு
மாணவி, இந்த ஆண்டிற்கான தேசிய அளவிலான சிறந்த ஆடை விருதும், சிறந்த
பேச்சாளர் விருதையும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மிஸ்
டீன் சர்வதேச மகுடத்துக்காக 22 நாடுகள்
போட்டியிட்டன; பராகுவேவைச் சேர்ந்த யெசீனியா கார்சியா
முதல் ரன்னர்-அப் ஆகவும்,
போட்ஸ்வானியாவைச் சேர்ந்த அனிசியா இரண்டாம்
ரன்னர்-அப்பாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
பொதுவாக அழகிப்போட்டிகளில்
கடைசியாக ஒரு கேள்வி முன்வைக்கப்படும், அதற்கான பதிலை வைத்தே வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கபடுவது
வழக்கம். அவ்வாறு ஆயுஷி தோலக்கியா’விடம்
கேட்கப்பட்ட கேள்வி “தனி நாடுகளாக இல்லாமல்
ஒரே உலகம், ஒரே அரசாங்கமும் என
இருந்தால் இவ்வுலகம் சிறந்த இடமாக இருக்கும்
என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” இந்த கேள்விக்கு அவரது
பதில் கூர்மையாக இருந்தது.
ஆயுஷி கூறுகையில்: “ஒரே உலகம், ஒரே
அரசாங்கமும் என
இருந்தால் இவ்வுலகம் சிறந்த இடமாக இருக்கும்
என்று நான் நினைக்கவில்லை, காரணம்
ஒவ்வொரு நாடும் அவற்றின் புவியியல்
பகுதி, மக்களின் பழக்க வழக்கம் மற்றும்
கருத்துக்கள் ஆகியவற்றில் பிரிக்கப்பட்டுள்ளன. உலகின் அனைத்து அரசியல்
தலைவர்களும் தங்கள் நாட்டு மக்களுக்கு
எது சிறந்தது என்பதை நன்கு அறிவார்கள்.ஒரு இந்தியராக இருப்பதால்,
“வசுதைவ குடுமகம்’ என்றுதான் நான் நினைக்கிறேன். அதாவது
உலகம் ஒரு குடும்பம் என்பதை
நான் உறுதியாக நம்புகிறேன். எனவே,
வெவ்வேறு நாடுகள், வெவ்வேறு அரசாங்கம் என்று பிரிந்திருந்தாலும், நாம்
அனைவரும் ஒரே குடும்பம். அன்பும் அமைதியையும் கொண்டவர்கள்.
” என்றார்.
வியட்நாமில்
இருந்து து ஃபான் மிஸ்
டீன் ஆசியாவையும், இத்தாலியைச் சேர்ந்த மரியா லூயிசா
பிராஸ் மிஸ் டீன் ஐரோப்பாவையும்,
போட்ஸ்வானாவைச் சேர்ந்த அனிசியா மிஸ்
டீன் ஆப்பிரிக்காவையும், பிரேஸிலிலிருந்து அலெக்ஸாண்ட்ரா சாண்டோஸ் மிஸ் டீன் அமெரிக்காவையும்
வென்றனர்.
MSD, கிரிக்கெட் சமூகத்தின் எல்லோரும் உச்சரிக்கும் தவிர்க்க முடியாத பெயர். சில மாதங்களாக இந்த பெயர் இந்திய அணி ஆடும் லெவேனில் இல்லாமல் இருப்பது இவரின் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்குமே ஏனோ ஏமாற்றம் தான்.
அப்படி இந்தியாவுக்கு என்ன செய்து விட்டார், சென்னை ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் இந்த “ தல தோனி”.
மகேந்தர் சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து இன்றுடன் 15 ஆண்டு நிறைவு பெறுகிறது. பங்களாதேஷ்க்கு எதிராக 2004 இதே நாளில் தன் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்தார். முதல் படியே மாபெரும் சறுக்கல், பங்களாதேஷிற்கு எதிராக ஆடிய முதல் போட்டியில் ரன் அவுட்டாகி டக் அவுட்டில் வெளியேறினார்.
virat-kohli-jasprit-bumrah-ms-dhoni-rohit-sharma-News4 Tamil Latest Sports News in Tamil
அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட அவர் அடுத்த ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் தேர்வானார் அந்தத் தொடர் அவர் வாழ்க்கையில் மிகவும் திருப்புமுனையாக அமைந்தது ஜெய்ப்பூரில் நடந்த மூன்றாவது போட்டியில் மகேந்திர சிங் தோனி 183 ரன்கள் எடுத்தார் இதுவே அவர் ஒருநாள் போட்டியில் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும் அதற்குப் பிறகு எல்லாம் அவருக்கு ஏறுமுகம்தான் .
அதுவரை ஒரு விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் என்பது இந்தியாவுக்கு சரியாக அமையவே இல்லை.அவர் பேட்டிங் கீப்பிங் திறமை விட அவரின் ஹேர் ஸ்டைல் தான் அனைவராலும் முதலில் உற்று நோக்கப்பட்டது. 2006ஆம் ஆண்டு பாகிஸ்தானில் பாகிஸ்தானுக்கு எதிரான நடந்த தொடரில் இந்திய அணி 4 க்கு 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.அப்போது பாகிஸ்தான் அதிபராக இருந்த முஷாரப் தோனியின் ஹேர்ஸ்டைலை வெகுவாக பாராட்டினார்.
2007 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்’ல் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா முதல் சுற்றிலேயே படு தோல்வி அடைந்து வெளியேறியது. இதன் பிறகு இந்திய அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. அந்த ஆண்டு டி 20 உலகக்கோப்பைஅறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது அணியின் கேப்டனாக இருந்த டிராவிட் விலகி இளைஞர்களுக்கு வழி கொடுக்க வேண்டும் என்று எண்ணினார்.
சேவாக், யுவராஜ் போன்ற முன்னணி வீரர்களில் ஒருவர் கேப்டனாக்க படுவர் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் . சச்சின் டெண்டுல்கர் வழிகாட்டுதலில் அதிரடியாக கேப்டனாக விஸ்வரூபம் எடுத்தார் தோனி.
ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், கங்குலி, டிராவிட் போன்ற அனுபவ வீரர்கள் இல்லாமல், தோனியின் தலைமையில் இளம் படை தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலக கோப்பையை எதிர்கொண்டது. சீனியர் வீரர்கள் இல்லாமல் 20 ஓவர் உலக கோப்பையை இந்திய அணி எப்படி எதிர்கொள்ளும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில் தோனியின் படை அந்த உலக கோப்பையை வென்று மாபெரும் சாதனை படைத்தது.
அதுவும் கடைசி ஓவரை யாரும் எதிர்பாராத விதமாக ஜோகிந்தர் சர்மாவை வீச வைத்துதான் தோனியின் முதல் “மாஸ்டர் ஸ்ட்ரோக்”. அதன்பிறகு டோனியை அனைத்துவிதமான போட்டிகளுக்கும் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற கருத்து மேலோங்கியது.
இதனால் ஒருநாள் அணிக்கும் தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரை கேப்டனாக நியமித்தது சரிதான் என்று நிரூபிக்கும் வண்ணம் 2011 ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற 50 ஓவர் கிரிக்கெட் உலக கோப்பையை 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வென்று சரித்திரம் படைத்தது.
2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் தோனி அடித்த வின்னிங் ஷார்ட் சிக்ஸர் இன்றும் மறக்க முடியாத ஒன்றாகும். கூல் கேப்டன் என்று அனைவராலும் அழைக்கப்படும் தோனி, 50 ஓவர் உலக கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை, சாம்பியன்ஸ் ட்ராபி போன்ற அனைத்துவிதமான ஐ சி சி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை பெற்றவர்.
கில்கிறிஸ்ட், சங்ககரா போன்ற உலகத்தரமான விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் பட்டியலில் உலகில் மூன்றாவது இடத்தை தக்க வைத்துள்ளார். கடந்த உலக கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிராக ஆடியதுதான் தற்போதைக்கு இவரின் கடைசி போட்டியாகும். அதற்குப்பிறகு பங்களாதேஷிற்கு எதிரான தொடரில் பங்கேற்காமல், ராணுவத்தில் பணியாற்றுவதாக தெரிவித்தார்.
அதன் பிறகு இரண்டு மாதம் கழித்து அடுத்து வரும் தொடர்களில் இவர் பெயர் இடம் பெறாததால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அடுத்தாண்டு துவங்கும் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்காக “தல தோனி “ களமிறங்குவார் என்று சென்னை ரசிகர்களும் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் . தோனியின் 15 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையை கொண்டாடும் விதமாக தோனியின் ஹேஷ் டாக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு நாடு
முழுவதும் பரவலாக எதிர்ப்பு காணப்படுகிறது. இந்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி எதிர்க்கட்சிகள்,
மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த போராட்டத்தில்
ஏற்பட்ட கலவரத்தில் உயிர் பலிகளும் நிகழ்ந்துள்ளன. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு
எதிராக நாளுக்கு நாள் போராட்டம் வலுத்து வருகிறது.
டெல்லியின்
ராஜ்காட் பகுதியில் இன்று மதியம் 3 மணிக்கு
காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம்
நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தில்,
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,
ராகுல் காந்தி உள்பட அந்தக்
கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்க
உள்ளனர். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான
போராட்டத்தில் பங்கேற்க வருமாறு மாணவர்கள், இளைஞர்களுக்கு காங்கிரஸ்
எம்.பி. ராகுல் காந்தி
அழைப்பு விடுத்துள்ளார்.
ராகுல்
காந்தி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள
பதிவில், “மாணவர்களே, இளைஞர்களே நீங்கள் இந்தியர்களாக உணர்ந்தால்
மட்டும் போதாது.
இது போன்ற தருணத்தில், நீங்கள்
இந்தியர்கள் என காட்டுவதோடு மட்டுமல்லாமல்,
வெறுப்புணர்வால் இந்தியாவை அழிக்க நாங்கள் அனுமதிக்க
மாட்டோம் என்பதை நீங்கள்
வெளிக்காட்டுவது மிகவும் முக்கியமானது. மோடி
மற்றும் அமித்ஷாவால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வெறுப்பு
மற்றும் வன்முறைக்கு எதிராக ராஜ்காட்டில்
இன்று நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்” என்று
தெரிவித்துள்ளார்.
சசி தரூர் அவ்வப்போது பல சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். `தி கிரேட் இந்தியன் நாவல்’ என்கிற புத்தகத்தை மகாபாரதக் கதையை மையமாகக் கொண்டு இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் மற்றும் விடுதலைக்குப் பின் 30 ஆண்டுகளை முன்வைக்கும் நையாண்டி கற்பனைப் படைப்பாக எழுதியிருந்தார்.
1989-ம் ஆண்டு இந்தப் புத்தகம் வெளியானது. சசி தரூர், இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்ட சமூகத்துப் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக எழுதியிருப்பதாகக் கூறி திருவனந்தபுரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சந்தியா என்பவர் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கு
தொடர்பாக திருவனந்தபுரம் நீதிமன்றம் சசி தரூரை நீதிமன்றத்தில்
ஆஜராகும்படி பலமுறை சம்மன் அனுப்பியும்
அவர் ஆஜராகவில்லை என்று தெரிகிறது. இந்த
வழக்கு திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, சசி தரூர் நீதிமன்றத்தில்
ஆஜராகவில்லை. அவர் தரப்பில் வழக்கறிஞர்
என யாரும் ஆஜராகவில்லை. இதனால்,
வழக்கை விசாரித்து வந்த திருவனந்தபுரம் நீதிமன்றம்
அவரைக் கைது செய்ய உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ட்விட்டரில் சசிதரூர் வெளியிட்டுள்ள பதிவில், ‘நீதித்துறை மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளேன். நீதிமன்றத்தை அவமதிக்கும் எண்ணம் இல்லை. நீதிமன்றம் மூலம் எனக்கு சம்மன்கள் வந்தன. ஆனால், எந்த தேதியில் நான் ஆஜராக வேண்டும் என்று அதில் குறிப்பிடப்படவில்லை. இதுதொடர்பாக ஏற்கெனவே நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மூலம் தெரிவிக்கப்பட்டது.
நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டு புதிய சம்மன் அனுப்பப்படும் என்று தெரிவித்தது. இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுகி விளக்கம் பெறுவோம்’’ என்று தெரிவித்துள்ளார். தனக்கு வந்த சம்மன்களையும் ட்விட்டரில் சசிதரூர் பதிவிட்டுள்ளார்.
இலக்கிய
படைப்புகளுக்கு வழங்கப்படும் இந்தியாவின் மிக உயரிய விருது
சாகித்ய அகாடமி. இந்த ஆண்டுக்கான
சாகித்ய அகாடமி விருதைப் பெறும்
எழுத்தாளர்களில் சசி தரூரும் ஒருவர்
என்பது குறிப்பிடத்தக்கது.
1964க்கு முன்பு பரபரப்பாக இயங்கும் தொழில் நகரமாகவும், சுற்றுலாத் தலமாகவும் இருந்தது தனுஷ்கோடி. இங்கு, துறைமுகம், மருத்துவமனை, அஞ்சல் நிலையம், தொடர்வண்டி நிலையம், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிடவை இருந்தன. இங்கிருந்து இலங்கையில் உள்ள தலைமன்னாருக்கு நாள்தோறும் 2 கப்பல்களும் சென்று வந்தன.
இப்படி பரபரப்பாக இயங்கி வந்த தனுஷ்கோடியை, 1964 ஆம் ஆண்டு இதே நாளில் வீசிய புயல், கனமழை மற்றும் ஆழிப்பேரலை சேர்ந்து சின்னா பின்னமாக்கின.
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணித்த தொடர்வண்டியை சக்கரமும், தண்டவாளமும் மட்டுமே மிஞ்சும் அளவுக்கு பேரழிவு இருந்தது. அதில் இருந்த மக்களின் மரண ஓலங்கள், புயல் ஓய்ந்த பிறகு அடுத்த நாளே நாட்டு மக்களுக்கு தெரிந்தது.
மீனவர்கள், சுற்றுலாப் பயணிகள் உட்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் உயிரை குடித்த புயல், தனுஷ்கோடி நகரம் இருந்ததற்கான அடையாளமாக சில சுவடுகளை மட்டுமே விட்டுச் சென்றது. பரபரப்பாக இயங்கிய நகரை வாழத்தகுதியற்ற பகுதியாகவும் மாற்றியதுதான் வேதனையின் உச்சம்.
இடிந்த வீடுகள், வழிபாட்டுத் தளங்கள் என மிஞ்சியுள்ள தனுஷ் கோடியில் தற்போது சுற்றுலாத் தலமாகவும், மீனவர்கள் வலைகளை உலர்த்தும் இடமாக மட்டுமே உள்ளது.
பாக்ஜலசந்தியை வடக்கு எல்லையாகவும், மன்னார் வளைகுடாவை தெற்கு எல்லையாகவும் தனுஷ்கோடியின் நிலப்பரப்பு இருப்பதால், கரைப்பகுதி மெல்ல கரைந்து சிறிது சிறிதாக கடலில் மூழ்கிக் கொண்டிருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதைத் தடுத்து வரும் தலைமுறைக்கு தெரியும் வகையில் பாதுகாக்க நடுவண் மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஆறாத வடுவை சுமக்கும் அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.