Home Blog Page 5833

வெங்காயத்தை தொடர்ந்து இதன் விலையும் அதிகரித்து விட்டதா? கொந்தளிக்கும் மக்கள்

0

வெங்காயத்தை தொடர்ந்து இதன் விலையும் அதிகரித்து விட்டதா? கொந்தளிக்கும் மக்கள்

வெங்காயத்தை தொடர்ந்து அன்றாட சமையலுக்கு பயன்படுத்தும் சில பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

வெங்காயம் பெருமளவில் விளையும் மாநிலமான மகாராஷ்டிராவில் பருவம் தவறி மழை பெய்திருந்தது. அதாவது அந்த பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை காலத்தில் மட்டுமே மழை பெய்யும். அந்த சமயத்தில் பயிரிடப்பட்ட வெங்காயம் வளர்ந்து சிறிது காலத்தில் அறுவடை செய்யும் நிலையில் இருந்தது. வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில் அரபிக்கடலில் ஏற்பட்ட கியார் மற்றும் மஹா புயல் சின்னத்தால் மகாராஷ்டிராவில் எதிர்பார்க்காத அளவிற்கு மழை பெருமளவு கொட்டித் தீர்த்தது.

கடந்த மாதத்தில் பருவம் தவறி பெய்த இந்த மழையால் அறுவடை செய்யும் நிலையிலிருந்த வெங்காயப் பயிர்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. இதனால் வெங்காயம் விளைவித்த விவசாயிகளுக்கு பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இதனால் போதிய அளவில் வெங்காயம் சந்தைக்கு வராத நிலையில் அதன் விலையும் கட்டுக்கடங்காத அளவில் உயர்ந்தது.

மேலும் நாட்டின் பல்வேறு நகரங்களில் பெரிய வெங்காயத்தின் விலையானது சில்லறை விற்பனையில் அதிகபட்சமாக 120 ரூபாய் வரையிலும் விற்பனையானது. இதனால் வெங்காயத்தைப் பதுக்கி வைத்திருக்கும் பதுக்கல் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் உத்தரவிட்டன. மேலும் நிலைமையை சமாளிக்க மத்திய அரசு வெளி நாடுகளிலிருந்தும் வெங்காயத்தை இறக்குமதி செய்ய ஆரம்பித்தது.

வெங்காயத்தை தொடர்ந்து இதன் விலையும் அதிகரித்து விட்டதா? கொந்தளிக்கும் மக்கள்

இதனால் வெங்காயத்தின் விலை சற்று குறைந்து இருந்த நிலையில் தற்போது மீண்டும் வெங்காயம் விலை உயர்ந்துள்ளது மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கி வருகிறது. அதாவது தற்போது சில்லறை விற்பனையில் வெங்காயம் கிலோ 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரையிலும் விற்கப்பட்டு வருகிறது.

வெங்காயத்தின் விலையைக் குறைக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு துரிதப்படுத்த தொடங்கியது. இதனையடுத்து எகிப்து, துருக்கி போன்ற நாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து வெங்காயத்தின் விலை சற்று குறைந்துள்ளது.

இந்தநிலையில் வெங்காயத்தை தொடர்ந்து தற்போது உருளைக்கிழங்கின் விலையும் அதிகரித்து வருகிறது. உருளைக்கிழங்கு பயிரிடும் முக்கிய மாநிலங்களான பஞ்சாப், உத்திர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த அக்டோபர் மாதத்தில் பருவம் தவறிய மழை பெய்துள்ளது. இதனால் அந்த பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த உருளை கிழங்கு பயிர்கள் சேதமடைந்துள்ளன.

வெங்காயத்தை தொடர்ந்து இதன் விலையும் அதிகரித்து விட்டதா? கொந்தளிக்கும் மக்கள்

இதனால் அங்கு விளைச்சல் குறைந்துள்ளதால் இதனையடுத்து உருளை கிழங்கு விலையும் தற்போது உயர்ந்து வருகிறது. இந்நிலையில் தற்போது டெல்லியில் ஒரு கிலோ உருளைக்கிழங்கு 45 ரூபாய்க்கும், கொல்கத்தாவில் 60 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

கடந்த மாதம் இந்த மாநிலங்களில் உருளை கிழங்கு விலை சராசரியாக வெறும் 12 ரூபாய் என்ற அளவில் இருந்தது. தற்போது போதிய அளவில் உருளை கிழங்கு வராததால் இந்த விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் அறுவடை முடிந்த உருளை கிழங்கு வருகின்ற ஜனவரி மாதத்தில் சந்தைக்கு வரும் என்பதால் இந்த விலையானது அப்போது குறையும் என வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே வெங்காய விலை ஏற்றதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த உருளைக் கிழங்கு விலை உயர்வு பெரும் சோதனையாக அமைந்துள்ளது.

இந்திய பொருளாதாரம் குறித்து பிரதமர் மோடியின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் கூறிய அதிர்ச்சி தகவல்

0

இந்திய பொருளாதாரம் குறித்து பிரதமர் மோடியின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் கூறிய அதிர்ச்சி தகவல்

இந்திய பொருளாதாரம் பற்றி பொருளாதார ஆலோசகர்கள் மற்றும் பங்கு சந்தை ஆலோசகர்கள் என பலரும் பல விதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இவர்கள் அனைவரும் பல்வேறு கருத்துக்களை கூறினாலும் முடிவாக அனைவரின் ஒட்டு மொத்த கருத்தாக இந்திய பொருளாதாரம் மேலும் சரியும் என்பதே முடிவாக அமைகிறது.

அதாவது இந்திய பொருளாதார ஆலோசகர்கள், பங்கு சந்தை நிபுணர்கள் மற்றும் சர்வதேச ஆராய்ச்சி நிறுவனங்கள் என எதுவாக இருந்தாலும் வீழ்ச்சி, சரிவு, மந்தம் என வார்த்தைகள் மட்டுமே அவர்களிடமிருந்து மாறி வருகின்றன. ஆனால் இதன் ஒட்டு மொத்தமானவெளிப்பாடு என்பது இந்திய பொருளதாரம் வீழ்ச்சி கண்டு வருகிறது என ஒன்றாகத் தான் இருக்கிறது.

இந்நிலையில் இதையெல்லாம் உறுதி செய்யும் வகையில் பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசகர் குழுவில் இடம் பெற்றிருந்த, 16-வது பொருளாதார ஆலோசகரானஅரவிந்த் சுப்பிரமணியன் கூறியுள்ள கருத்து மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பொருளாதாரம் குறித்து அவர் கூறியுள்ளதாவது.

இந்திய வங்கிகளில் நிலவி வரும் கடுமையான நெருக்கடி காரணமாக, இந்திய பொருளாதாரம் கடுமையான மந்த நிலையை சந்தித்துள்ளது. இதனால் இந்திய பொருளாதாரம் ICU க்கு செல்கிறது. முதல் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியன் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் விலகினார். இந்த நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் இந்திய முன்னாள் அலுவலகத்தின் தலைவர் ஜோஷ் பெல்மனுடன் இணைந்து இந்திய பொருளாதாரம் குறித்து அவர் எழுதிய புதிய ஆய்வறிக்கையில், இந்தியா நான்கு சவால்களை எதிர்கொள்வது குறித்து கூறியுள்ளார்.

இந்திய பொருளாதாரம் குறித்து பிரதமர் மோடியின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் கூறிய அதிர்ச்சி தகவல்

இவர் குறிப்பிட்ட சவால்களில் வங்கிகள், உள்கட்டமைப்பு மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் மோசமான வட்டி வளர்ச்சி உள்ளிட்ட மோசமான பிரச்சனைகளில் சிக்கியுள்ளன. ஆக இது ஒரு சாதாரண மந்த நிலை இல்லை என்றும் தெரிகின்றது. இது இந்தியா பொருளாதாரத்தின் கடுமையான மந்த நிலை ஆகும். இதனால் இந்திய பொருளாதாரமானது தீவிர சிகிச்சைப் பிரிவை நோக்கிச் செல்கின்றது என்றும் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் சர்வதேச மேம்பாட்டு மையத்தின் வரைவுப் பணியில் அரவிந்த் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

பொருளாதார வீழ்ச்சிக்கான காரணங்கள்:

கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய பெரிய அளவிலான கடன்களை திருப்பிக் கட்டாத நிலையில், வங்கிகளில் வாராக்கடன் அளவு அதிகரித்துள்ளது. மேலும் உலகளாவிய அளவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையால், இந்திய பொருளாதாரம் மேலும் வீழ்ச்சி கண்டு வருகிறது. இதனால் முதலீடுகள் மற்றும் ஏற்றுமதிகள் சிதறடிக்கப்பட்டதால், இந்தியாவின் நீண்டகால வளர்ச்சியானது பெருமளவு குறைந்து விட்டது. மேலும் பொருளாதார நுகர்வும் குறைந்துள்ளது. இதனால் கடந்த சில காலாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி மிக விரைவாகவே வீழ்ச்சி கண்டு வருகிறது.

இந்திய பொருளாதாரம் குறித்து பிரதமர் மோடியின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் கூறிய அதிர்ச்சி தகவல்

தற்போதுள்ள இந்த நிலையிலேயே இந்திய பொருளாதாரமானது ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஏறக்குறைய 4.5 சதவிகிதமாக வீழ்ச்சி கண்டுள்ளது. அதிலும் தொடர்ந்து தற்போது ஆறாவது காலாண்டாக இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி கண்டு வருகிறது. மேலும் பெரிய அளவிலான கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரும் அளவில் கடன்பட்டுள்ள நிலையில், அதனுடைய உற்பத்தி விகிதமும் வீழ்ச்சியடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் சரிந்து வரும் பொருளாதாரத்தை சரி செய்யவும்,தெளிவான பொருளாதாரத்தை உறுதிப்படுத்தவும், விரைவான வளர்ச்சியின் பாதையில் இந்திய பொருளாதாரம் திரும்பவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இதில் அரவிந்த் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போதைய சூழ்நிலைகளில் மத்திய அரசின் பொருளாதார கருவிகள் பயனுள்ளதாக இல்லை. ஆக மோடி தலைமையிலான மத்திய அரசு விரைவில் போதுமான நடவடிக்கைகளை இதற்காக எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

திருவண்ணாமலை மகா தீபம் நாளைவரை பக்தர்கள் காணலாம்?

0

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, கடந்த 10-ந் தேதி காலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது இதை தொடர்ந்து மலை உச்சியில் மாலை 6மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட்டது.

இப்படி ஏற்றப்படும் மகா தீபம், தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம். அதையொட்டி, திருவண்ணாமலை கோவிலில் இருந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட நெய், திரி ஆகியவை மலைக்கு கொண்டு செல்லப்பட்டு, தினமும் மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட்டு வருவது வழக்கம்.

மகா தீபத்தன்று நேரில் வந்து தரிசிக்க இயலாத பக்தர்கள், மகாதீபம் ஏற்றப்படும் 11 நாட்களில் திருவண்ணாமலைக்கு வந்து தீபத்தை தரிசிப்பது வழக்கம். அதன்படி, கடந்த ஒரு வாரமாக திருவண்ணாமலைக்கு வந்து தரிசிக்கும் மக்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில், இந்த மகாதீபம் ஆனது நாளை வெள்ளிக்கிழமை இரவுடன் நிறைவடைகிறது. தொடர்ந்து, நாளை மறுதினம் காலை மகாதீப கொப்பரை, மலை உச்சியில் இருந்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்படும். பின்னர், அடுத்த மாதம் 10-ந் தேதி நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தன்று, தீபச்சுடர் பிரசாதம் அருணாசலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு அணிவிக்கப்படும்.

பின்னர், நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு தீபமை பிரசாதம் கோவில் நிர்வாகம் சார்பில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கைதிகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு 12 பேர் பலி?

0

பனாமா நாட்டின் தலைநகர் பனாமா சிட்டியில் உள்ள சிறைச்சாலையில் உள்ள நூற்றுக்கணக்கான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த சிறையில் கைதிகள் இரு தரப்பினர் இடையே திடீர் மோதல் வெடித்தது.

சிறைக்குள் கடத்தி வரப்பட்ட துப்பாக்கிகளைக் கொண்டு கைதி ஒருவரை ஒருவர் சுட்டுக் கொன்றனர் இதனால் பெரும் பதற்றம் உருவானது இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கிச்சண்டை நடந்தது அதனைத் தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து மோதலில் ஈடுபட்ட கைதிகள் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

அதன் பிறகு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எனினும் கைதிகளுக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 12 பேர் பலியாகினர் 13 பேர் பலத்த காயமடைந்தனர் இந்த மோதலில் சிறைக்காவலர்களுக்கோ அல்லது அதிகாரிகளுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று அந்த நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது இதுகுறித்து அந்த நாட்டுப் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்: திருச்சியை அடுத்து சென்னையில் கைது நடவடிக்கை

0

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்: திருச்சியை அடுத்து சென்னையில் கைது நடவடிக்கை
குழந்தைகள் ஆபாச படங்களை பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்ததாக திருச்சியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் அடுத்ததாக சென்னையில் 30 பேர்கள் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

குழந்தைகள் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்பவர்கள் மட்டும் பதிவிறக்கம் செய்து அவர்களின் பட்டியல் தயாராக இருப்பதாகவும் அதில் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 30 பேர் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனை அடுத்து அந்த 30 பேரையும் கைது செய்ய இன்னும் ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குழந்தைகளின் ஆபாச பட விவகாரத்தில் காவல்துறை விறுவிறுப்பான நடவடிக்கையை எடுத்து வருவதால் இந்த பட்டியலில் உள்ளவர்கள் பெரும் பதட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

குழந்தைகள் ஆபாச பட விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாகவும், இந்த குற்றத்தை செய்தவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்படுவார்கல் என்றும் சமீபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவின் காவல்துறை இயக்குநர் ரவி அவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து வைரமுத்து நீக்கமா? என்ன காரணம்?

0

பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து வைரமுத்து நீக்கமா? என்ன காரணம்?

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தாய்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் விக்ரம், வந்தியத்தேவன் கேரக்டரில் கார்த்தி, ராஜராஜசோழன் கேரக்டரில் ஜெயம் ரவி, நந்தினி கேரக்டரில் ஐஸ்வர்யா ராய், பூங்குழலி கேரக்டரில் ஐஸ்வர்யா லட்சுமி, சுந்தரசோழர் கேரக்டரில் சரத்குமார் மற்றும் பிரபு, விக்ரம் பிரபு, ரகுமான், ஜெயராம், லால், அஸ்வின் உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான போது அதில் இந்த படத்தில் பணிபுரியும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் குறித்த பட்டியல் இருந்தது.

இந்த பட்டியலில் வைரமுத்துவின் பெயர் மிஸ் ஆகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னரே இந்தப் படத்தில் 12 பாடல்களையும் வைரமுத்துவே எழுத இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது திடீரென அவரது பெயர் மிஸ் ஆகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் மீடு பிரச்சனையில் வைரமுத்து சிக்கியதை அடுத்து அவர் இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது

குடியுரிமை சட்ட மசோதா மீண்டும் ரயில் மறியல்?

0

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன குறிப்பாக வட கிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.

மேலும் டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு, நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சென்னை பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டக் களத்தில் இறங்கினர். பல்கலைக்கழக வளாகத்தில் அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்நிலையில் போராட்ட மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

இந்நிலையில் பீகார் மாநிலத்தில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். தர்பங்கா மாவட்டம் லகரிசராய் ரெயில் நிலையத்திற்குள் திடீரென சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், அங்கு நின்றிருந்த ரெயிலை புறப்பட விடாமல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது. ஜனவரி 22ம் தேதிக்குள் விரிவான விளக்க அறிக்கை அளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

கடல் உணவு ஏற்றுமதியில் நல்ல லாபம்?

0

கடல் உணவு ஏற்றுமதி செய்யும் நாடுகள் உலக அளவில் இந்தியா முக்கிய இடத்தில் உள்ளது.நவம்பர் மாதத்தில் ரூபாய் மதிப்பு அடிப்படையில் கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி 8.4 சதவீதம் அதிகரித்து 4995 கோடியாக இருக்கிறது.

நாட்டின் ஒட்டு மொத்த கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதியில் இறால்களின் ஏற்றுமதி பங்கு சராசரியாக 50%அதிகமாக உள்ளது. மேலும் டாலர் மதிப்பு அடிப்படையில் இறால் ஏற்றுமதி பங்கு சராசரியாக 75 சதவீதமாக இருக்கிறது. இறால் மீன்கள் அளவு அடிப்படையில் 26 சதவீதமும் டாலர் அடிப்படையில் 10% பங்குகள் என்று உள்ளன.

கடல் உணவு பொருள்கள் ஏற்றுமதியில் இந்தியா முன்னணி நாடுகளில் ஒன்றாக இருக்கும் நிலையில் . கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி கடந்த ஆண்டு கடந்த 5 ஆண்டுகளில் நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது 2017ஆம் ஆண்டு நிதி ஆண்டில் ஏற்றுமதி மதிப்பு 3200 கோடி வரையிலும் இருந்தது முந்தைய நிதி ஆண்டில் 2018 ரூபாய் 4607 கோடியாக உயர்ந்து புதிய சாதனை அளவை எட்டியது.

இந்நிலையில் நவம்பர் மாதத்தில் 4 ஆயிரத்து 995 கோடிக்கு கடல் உணவு பொருள்கள் ஏற்றுமதி ஆகியிருக்கிறது கடந்த ஆண்டின் இதே மாதத்தில் 4 ஆயிரத்து 607 கோடியாக இருந்தது ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி ஏறக்குறைய 8.4 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்திய ரூபாய்க்கு எதிராக டாலரின் மதிப்பு உயர்வு கூட இதற்கு ஒரு காரணமாக கருதப்படுகிறது.

ஈழத் தமிழர்களை காப்பதாக கூறி குடியுரிமை சட்டத்தை எதிர்க்கும் திமுகவிடம் தமிழனாக சில கேள்விகள்?

0

ஈழத் தமிழர்களை காப்பதாக கூறி குடியுரிமை சட்டத்தை எதிர்க்கும் திமுகவிடம் தமிழனாக சில கேள்விகள்?

தேர்தலுக்கு தேர்தல் ஆட்சி மாறுவது போல தமிழகத்தில் திமுகவின் நிலைப்பாடும் அப்படியே மாறிக் கொண்டே இருக்கும் தங்களுடன் கூட்டணி வைத்தால் அவர்கள் என்ன தவறு செய்திருக்கிறார்கள் என்று எதையும் பேச மாட்டார். ஆனால் கூட்டணியில் சேராமல் இருக்கும் கட்சிகளை தன் இஷ்டத்திற்கு வசை பாடி வருவார்கள்.

அந்த வகையில் இலங்கை தமிழர்களுக்காக மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பதாக கூறும் திமுகவிடம் கேட்க சமூக வலைதளங்களில் பதிவான தமிழர்களின் சில கேள்விகள் உங்களுக்காக.

போன வாரம் பாராளுமன்றத்தில் ஈழ தமிழர்களால் சோனியா காந்தியின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது அதனால் சோனியா காந்திக்கு கொடுக்கப்படும் சிறப்பு பாதுகாப்பு தொடர வேண்டும் என திமுகவின் பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு கூறியிருக்கிறார். ஒரே வாரத்தில் எல்.டி.டி.இ ஆதரவு ஈழ தமிழர்களுக்கு நிரந்தர குடியுரிமை தர வேண்டும் என்கிறீர்கள் . இங்கே அவர்கள் நிரந்தரமாக தங்கினால் சோனியா காந்திக்கும் அவரது குடும்பத்திற்கும் பேராபத்து வராதா ?

ஈழ அகதிகளைக் காக்க இப்போது போராடும் திமுக போர் நிகழ்ந்த காலத்தில் காங்கிரஸோடு இணைந்து போரை நடத்தியது ஏன் ? அவர்கள் அகதியாக இங்கே வர நீங்களும் தானே முக்கிய காரணம் ??

இந்திய-இலங்கை உறவில் பிளவு வளருவதற்கு மிக முக்கிய காரணமே கச்ச தீவை தாரை வார்த்தது தானே அதனால் தான் தினம் தினம் இருநாட்டு மீனவர்களும் பிரச்சனை உருவாகி இருநாட்டு அரசு உறவு வரை பாதிப்பை உருவாக்கியது கச்சத்தீவு யாரால் எப்போது தாரை வார்க்கப்பட்டது நினைவு இருக்கிறதா ??

போரின் உச்சக்கட்ட நாளில் பிரபாகரன் கொல்லப்பட்டதாக செய்தி வந்த அதே நாளில் கலைஞர் கருணாநிதி தள்ளாத வயதில் தள்ளுவண்டியில் தள்ளிப் போய் தனது பேரன்களுக்கு பதவி கேட்டு போராடியது நினைவில் இல்லையா ?

போரில் தமிழினமே அழிக்கப்பட்ட போதும் தொடர்ந்து இன அழிப்பை நிகழ்த்திய காங்கிரசுடன் 2009 தேர்தலிலும் கூட்டணி வைத்து 2014 வரை அமைச்சரவையில் பங்கெடுத்தது நினைவில் இல்லையா ??

தமிழீழ தலைவர் பிரபாகரனின் தாயார் ஒரு நோயாளியாக சென்னைக்கு சிகிச்சை பெற வந்த போது கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாமல் சிகிச்சைக் கூட பெற அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியது யார்?

போர்க் குற்றவாளியான ராஜ பக்சே நடத்திய விருந்தில் திமுகவின் சார்பாக டி.ஆர்.பாலு மற்றும் கனிமொழி கலந்து கொண்டு அங்கு அவர் வழங்கிய பரிசை இன்முகத்துடன் பெற்று கொண்டதன் சூழ்ச்சி என்ன?

ஈழத் தமிழர்களை காப்பதாக கூறி குடியுரிமை சட்டத்தை எதிர்க்கும் திமுகவிடம் தமிழனாக சில கேள்விகள்?

மத்திய அரசின் கொடுங்கோல் சட்டங்களாக NIC திருத்தம் உள்ளிட்ட பல சட்ட மசோதாக்களை ஆதரித்துவிட்டு ஆர்ட்டிக்கிள் 370 நீக்கத்துக்கு கூட பெரிய போராட்டம் அறிவித்து பிறகு பெயரளவு போராட்டத்தோடு முடித்துக் கொண்ட நீங்கள் இதற்கு மட்டும் கொந்தளிப்பது ஏன் ?

ஈழ அகதிகள் அடைக்கப்பட்டுள்ள முகாம்களில் அவர்களின் அடிப்படை வசதிகளை நேரில் போய் என்றாவது ஆராய்ந்தது உண்டா ? சுமார் 10 ஆண்டுகளாக இங்கேயே தங்கி இருக்கும் அவர்களுக்கு குடியுரிமை வழங்க கோரி இதற்கு முன் பாராளுமன்றத்தில் வலுவான கோரிக்கையோ , ஆர்பாட்டமோ செய்தது உண்டா ?

இந்த சட்ட மசோதாவில் உங்களின் பாராளுமன்ற நிலைப்பாடு என்ன ? ஏன் மக்களின் நேரடி பிரதிநிதிகளாக திமுகவின் லோக் சபா MP கள் ஏன் எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தீர்கள் ? நீங்கள் எதிர்த்து வாக்களித்திருந்தால் மேல்சபையில் எதிர்ப்பு வாக்குகள் கூடி இருக்கும் அல்லவா ? ஏன் கீழவையில் வாக்களிக்காமல் மறைமுக ஆதரவு கொடுத்தீர்கள் ??? என பல விமர்சனங்கள் எழுந்த பிறகு அதை எதிர்த்து வாக்களித்தனர் என்று திமுக எம்பி கனிமொழி சார்பாக காலம் தாழ்ந்த விளக்கம் கொடுத்தது ஏன்?

ராசியான அந்த 33 ஓவர்?

0

வெஸ்ட் இண்டீஸ் க்கு எதிராக நேற்று இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இதில் இந்திய அணியின் இடுக்கை பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆட்டத்தின் 33வது ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்தார் அந்த ஓவரின் 4வது பந்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் விக்கெட்டை எடுத்தார், அதற்கடுத்த ஐந்தாவது பந்தில் ஜாசன் ஹோல்டர் ஆறாவது பந்தில் ஜோசப் விக்கெட் எடுத்ததன் மூலம் இரண்டாவது முறையாக எடுத்த முதல் இந்தியர் என்ற பெருமையை படைத்தார்.

எனவே 2017 ஆம் ஆண்டு கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இதே 33வது ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டு முறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் இந்தியர் என்ற மகத்தான சாதனை படைத்த குல்தீப் யாதவ், பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் saqlain முஷ்டாக், இலங்கையின் சமிந்தா வாஸ் லசித் மலிங்கா, நியூசிலாந்தின் டிரென்ட் போல்ட் ஆகியோர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர்.

அந்த வரிசையில் ஆறாவது வீரராக இணைந்துள்ளார் இடக்கை பந்து வீச்சாளரான குல்திப் யாதவ் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஆஸ்திரேலிய எதிராக 33வது ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி குல்தீப் யாதவ் அதேபோல் நேற்று நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் 33வது ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.