காணாமல் போன புஷ்பவனம் குப்புசாமி மகள் என்ன ஆனார்? திடுக்கிடும் தகவல்!
பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமியின் மகள் நேற்று காணாமல் போனதாகவும் இதனையடுத்து சென்னையில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் புகார் செய்ததாகவும் நேற்று செய்திகள் வெளிவந்தன. இந்த செய்தி கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து ஊடகங்களும் பரவி புஷ்பவனம் குப்புசாமி மகள் கடத்தப்பட்டாரா? காதலருடன் சென்று விட்டாரா? என்று பலவித தலைப்புகளுடன் பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளியானது.
இதனை அடுத்து தற்போது புஷ்பவனம் குப்புசாமியின் மகள் பல்லவி தனது சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். நான் காணாமல் போகவில்லை, எனது பெற்றோருடன் நான் வீட்டில் தான் இருக்கிறேன். நான் காணாமல் போனதாக எப்படி ஒரு செய்தி வெளிவந்தது என்று எனக்கு தெரியவில்லை. மேலும் என் பெற்றோர்கள் எந்த காவல் நிலையத்திலும் புகார் அளிக்கவில்லை.
காணாமல் போகாத ஒருவரைப் பற்றி யார் புகார் அளிப்பார்கள்? அதுமட்டுமின்றி எனது தந்தை நேற்று இரவில் இருந்து ஊரிலேயே இல்லை. பிறகு எப்படி அவர் புகார் அளித்திருப்பார். இப்படி ஒரு பொய் செய்தியை எப்படி பரவியது? அதை உறுதி செய்யாமல் எப்படி மீடியாக்கள் வெளியிட்டன என்பது எனக்கு தெரியவில்லை. இருப்பினும் என் மேல் அக்கறை கொண்டு என்னை விசாரித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றி என்று அவர் அந்த வீடியோவில் பதிவு செய்துள்ளார்.
எங்களை நீங்கள் குடிமக்களாகக் கருதவில்லையென்றால் நாங்கள் உங்களை அரசாக கருத மாட்டோம். என ஜே.என்.யு முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் பேசினார்!
குடியுரிமை சட்டத் திருத்தம் பா.ஜ.க அரசின் பெரும்பான்மையால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது.
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நடைபெற்ற போராட்டங்களின்போது போலிஸார் திட்டமிட்டு வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முன்தினம் நடத்திய போராட்டத்தில் போலிஸார் மாணவர்களை தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வலம்வந்தன.
இந்நிலையில், பீகார் பூர்னியா பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான மாணவர்களைச் சந்தித்த ஜே.என்.யு முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “எங்களை நீங்கள் குடிமக்களாகக் கருதவில்லையென்றால் நாங்கள் உங்களை அரசாக கருத மாட்டோம். நாடாளுமன்றத்தில் வேண்டுமானால் உங்களுக்கு பெரும்பான்மை இருக்கலாம். ஆனால், மக்கள் மன்றத்தில் எங்களுக்கு ஆதரவு இருக்கிறது.
இந்த போராட்டம் இஸ்லாமியர்களுக்கான போராட்டம் அல்ல; இந்தியா சாவர்க்கர் நாடாக மாறிவிடக் கூடாது என்பதற்கான போராட்டம். அரசியலமைப்பைக் காப்பாற்றுவதற்காக நாம் மேற்கொண்டிருக்கும் சண்டை இது. அமைதியாகப் போராடி நம் எதிர்ப்பைத் தெரிவிக்கவேண்டும்.” எனப் பேசினார்.மேலும், “எங்களுக்கு பா.ஜ.கவிடம் இருந்தும், ஆர்.எஸ்.எஸ்ஸிடம் இருந்தும் சுதந்திரம் தேவை” என முழங்கினார்.
ஆர்.கே.நகருக்கு இப்படி ஒரு சோதனையா? திரையுலகம் அதிர்ச்சி
பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவின் படம் வெளியாகிறது என்றால் ரசிகர்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அதிகமான திரையரங்குகளில் அவரது படங்கள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவர் தயாரித்த ஒரு படம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்தப் படம்தான் ஆர்கே நகர்
ஆர்கே நகர் படத்தை தயாரித்த வெங்கட்பிரபு அதனை ரிலீஸ் செய்ய பல்வேறு முயற்சிகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக எடுத்து வருகிறார். இருப்பினும் அந்த படத்தை அவரால் ரிலீஸ் செய்ய முடியவில்லை. இதனை அடுத்து தற்போது அவர் அந்த படத்தை நெட்பிளிக்ஸில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார். இதற்கான விளம்பரமும் தற்போது நெட்பிளிக்ஸ் வந்து கொண்டிருப்பதாகவும் விரைவில் நிலையில் அந்தப் படம் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது.
ஒரு பெரிய இயக்குனர் தயாரித்த படத்திற்கே இந்த நிலை என்றால் மற்ற சின்ன பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்கள் நிலை என்ன என்பதே தற்போதைய கோலிவுட் திரையுலகினர்களின் கேள்வியாக உள்ளது. வைபவ், சனா அல்தாப், சம்பத்ராஜ், அஞ்சனா கிர்த்தி, சந்தான பாரதி, சுப்பு பஞ்சு, பிரேம்ஜி, கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவில், பிரவீண் கே.எல் படத்தொகுப்பில் இந்த படம் தயாராகியுள்ளது.
பாய்ந்த அமைச்சர்! பதுங்கிய எதிர்க் கட்சித் தலைவர்! வழக்கம் போல முட்டு கொடுத்த கழக நிர்வாகி
தமிழகத்தில் பல வருடங்களாக நடத்தப்படாமல் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரு வழியாக தேர்தல் நடத்த ஆளும் தரப்பு தயாராகி அறிவிப்பு வெளியாகியது. இவ்வளவு நாளாக காரணம் சொல்லி கொண்டிருந்த ஆளும் கட்சி தற்போது தேர்தலை நடத்த தயாராகியுள்ளது எதிர்க்கட்சிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதற்கு காரணம் சமீபத்தில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் ஏற்கனவே திமுக வசமிருந்த இரண்டு தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியது தான் என்பது பெரும்பாலானோருக்கு தெரியும்.
மேலும் இது வரை நடத்தப்படாமல் இருக்கும் உள்ளாட்சி தேர்தலை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று திமுக தரப்பு முயற்சித்து வருகிறது. அதற்கு வெளிப்படையாக பல்வேறு காரணங்கள் கூறினாலும் மறைமுகமாக நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வாங்கிய பலமான அடி தான் என்றும் கூறப்படுகிறது.
law minister cv shanmugam-news4 tamil latest political news in tamil
இந்நிலையில் தேர்தல் நடத்தப் பட்டால் அது ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும், திமுகவிற்கு எதிராகவும் தான் அமையும் என்று எண்ணி எவ்வாறாவாது இந்த தேர்தலை சட்டப் பூர்வமாக நிறுத்த வேண்டும் என்று திமுக தரப்பு முயன்று வருகிறது. இதனை ஆளும் கட்சி சட்டத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் சி.வி. சண்முகம் சிறப்பாக கையாண்டு வருகிறார்.
இதனால் திமுக தரப்பு அமைச்சர் மீதான தனிப்பட்ட விமர்சனங்களை எழுப்ப ஆரம்பித்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பில் திமுக தலைவர் ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்து விளாசி எடுத்தார். குறிப்பாக தனிபட்ட முறையில் விமர்சனம் செய்ய வேண்டும் என்றால் தனியாக ஒரு மேடை போடட்டும் அங்கு என்னைப் பற்றி அவர் பேசட்டும், அவரை பற்றி நான் பேசுகிறேன் என ஸ்டாலினுக்கு நேரிடையாகவே சவால் விட்டிருந்தார் அமைச்சர் சி.வி.சண்முகம்.
இதுகுறித்து திமுகவின் சார்பாக அக்கட்சியின் எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன், அண்ணா அறிவாலயத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியின் போது அவர் கூறியதாவது, நாங்கள் தேர்தல் ஆணையத்தை அச்சுறுத்தவில்லை. திமுக நீதிமன்றத்தை நாடியதால் தான் முறைப்படுத்தாத 9 மாவட்டங்களில் தேர்தல் தவிர்க்கப்பட்டது.
மேலும் முறையாக உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்ற அடிப்படையில் தான் தேர்தல் ஆணையத்தை அணுகினோம். இன்றைய பேட்டியில் அமைச்சர் சி.வி. சண்முகம் நிதானத்தில் பேட்டி கொடுத்தாரா? என்பது தெரியவில்லை. அவருடன் ஒரே மேடையில் விவாதிக்க நான் தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் ஸ்டாலினுக்கு எதிராக சரவெடியாக சவால் விட இதையாவது திமுக தலைவர் ஸ்டாலின் நேரிடையாக எதிர் கொள்வாரா? என்று எதிர்பார்த்திருந்த நிலையில் வழக்கம் போல அவர் பதுங்கி கொண்டு கட்சி நிர்வாகி ஒருவர் மூலம் பதிலளிக்க வைத்துள்ளார்.
பாமக இளைஞர் அணி தலைவரும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் திமுக தலைவரிடம் ஆரம்பித்து வைத்த நேருக்கு நேர் விவாதம் என்ற சவால் தற்போது அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவரும் அவரை நோக்கி நேருக்கு நேர் விவாதம் செய்ய தயாரா? என்று சவால் விடும் அளவிற்கு கொண்டு வந்து விட்டது.
குடியுரிமை சட்டம் குறித்து பிரபல இயக்குனர்: வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்
சமீபத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர் மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒரு சில இடங்களில் பேருந்துக்கு தீ வைக்கும் அளவுக்கு இந்த போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த சட்டம் குறித்து கருத்துக் கூறுபவர்கள் கவனமாக வார்த்தைகளை உபயோகப்படுத்த வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் எச்சரித்துள்ளன. ஆனால் இதையும் மீறி ஒரு சிலர் உணர்ச்சிவசப்பட்டு ஒரு சில கருத்துக்களை தெரிவித்து நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக் கொள்ளும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது டுவிட்டரில் ’இந்த பூமி எவனுக்கும், அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது’ என்று குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். மேலும் போலீசாரின் மாணவர்கள் மீதான வன்முறைக்கும் அவர் கண்டனம் தெரிவித்தும் பதிவு செய்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் அவரை வெளுத்து வாங்கி வருகின்றனர். அமெரிக்கா, அரேபியாவில் இதேபோல் ‘இது எங்கள் அப்பன் வீட்டு சொத்து’ என்று கொண்டாட முடியுமா? சிங்கப்பூர் போன்ற நாடுகளில் குடியுரிமை கேட்க முடியுமா என்றும், இந்தியா இந்திய நாடு என் அப்பன் வீட்டு சொத்தை அது பாதுகாப்பாக வைப்பது எனது கடமை என்றும் ’கண்டவனும் கருத்து பேசிட்டு திரிய இது தனி மனித ஓழுக்கம் இல்லாத தமிழ் சினிமா இல்லே’ என்றும் தெரிவித்து வருகின்றனர்.
Citizenship Amendment Act – Sounds seriously wrong & against Secularism..
Let's keep India Secular Say NO to CAA Say NO to NRC Say NO to Police Violence on Students
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பாலியல் பலாத்கார சம்பவங்கள், பாதிக்கப்பட்ட பெண்ணை எரித்துக் கொலை செய்தல், ஆசிட் வீச்சு போன்ற சம்பவங்களும் நடந்து வருகின்றன.
குறிப்பாக, சமீபத்தில் ஐதராபாத்தில் பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. அதில் சம்பந்தப்பட்ட 4 பேர், போலீசுடன் நடந்த என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு காணப்பட்டது. பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் பற்றிய வெறுப்பையே இவை பிரதிபலிக்கின்றன.
இந்த அடிப்படையில், கற்பழிப்பு வழக்குகளை விரைவுபடுத்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே நிர்வாகரீதியான முக்கிய முடிவு ஒன்றை நேற்று எடுத்தார்.
அதாவது, நாடு முழுவதும் கற்பழிப்பு வழக்குகளை விரைவுபடுத்தவும், கண்காணிக்கவும் 2 நீதிபதிகள் கொண்ட குழுவை அவர் அமைத்தார். நீதிபதிகள் ஆர்.சுபாஷ் ரெட்டி, எம்.ஆர்.ஷா ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் சம்பந்தப்பட்ட ஐகோர்ட்டுகள் மூலமாக கற்பழிப்பு வழக்கு விசாரணையை கண்காணித்து வருவார்கள். மேலும், குறிப்பிட்ட காலவரையறைக்குள் வழக்கை முடித்து வைக்க அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிகிறது.
பொள்ளாச்சியில் ஏராளமான பெண்களிடம் பேஸ்புக் மூலம் நட்பாக பழகி, பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாச வீடியோ எடுத்து கும்பல் ஒன்று மிரட்டி நகை, பணம் பறித்து வந்தது.
இதுகுறித்து இளம்பெண் ஒருவர் அளித்த புகாரை அடுத்து, விவரம் வெளியுலகிற்கு தெரியவந்தது. இதுதொடர்பாக திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் நடிகரும் இயக்குனருமான கே.பாக்யராஜ் ஒரு திரைப்பட விழாவில் பேசும்போது ” பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பெண்களிடமும் தவறு இருக்கிறது, ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது” என பேசியிருந்தார்.
இதுதொடர்பான வழக்கில் நேற்று மாநில மகளிர் ஆணைய தலைவி கண்ணகி பாக்கியநாதன் முன் தன்பேச்சு குறித்து விளக்கம் அளித்தார். பின் நிருபர்களை சந்தித்த அவர் “என் கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது, தவறாக புரிந்து கொண்டோருக்கு என் வருத்தத்தை தெரிவித்து கொள்வதாக ஆணையத்தில் கூறினேன். என் பதிலை மகளிர் ஆணையம் ஏற்றுக்கொண்டது” என் கூறினார்.
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக, டெல்லியில் மதுரா சாலையில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, டெல்லி போக்குவரத்து கழகத்தின் பேருந்துகளை ஒரு கும்பல் தீவைத்து கொளுத்தியது. போலீஸ் வாகனங்களும் எரிக்கப்பட்டன. தீயை அணைக்க வந்த தீயணைப்பு வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில், ஒரு தீயணைப்பு வாகனம் சேதம் அடைந்தது. இதில் போலீஸ் காரர்களும் காயம் அடைந்தனர்.
இந்நிலையில் இந்த மாணவர்களின் போராட்டம் நேற்றும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தொடந்தது.இதற்கிடையே இந்த மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கான்பூர்,சென்னை,மும்பையில் உள்ள ஐ ஐ டி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக மக்கள் நீதி மய்யம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இந்த சட்டம் காரணமாக இந்தியாவில் கிறிஸ்துவர், இந்து, சீக்கியர், ஜைனர், கிறிஸ்தவர், பார்சி மற்றும் புத்த மதத்தினர் மட்டுமே இதன் மூலம் குடியுரிமை பெற முடியும். அதே போல் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளானவர்கள் மட்டுமே இங்கு குடியுரிமை பெற முடியும். இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக இந்த மசோதா பார்க்கப்படுகிறது. இந்த சட்டத்திற்கு எதிராக மக்கள் நீதி மய்யம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இந்திய அரசியலைப்பின் சட்ட பிரிவு 14க்கு எதிராக இந்த சட்டம் இருக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் ஆலோசனையின் பெயரில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
ரஜினியின் அடுத்த பட தயாரிப்பாளர் யார்? கசிந்த தகவல்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ’தர்பார்’ திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்த நிலையில் அவர் நடிக்கவிருக்கும் அடுத்த படமான ’தலைவர் 168’ என்ற படத்தின் படப்பிடிப்பு இந்த வாரம் தொடங்க உள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பில் இடைவெளியின்றி நடக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தொடர்ச்சியாக 60 நாட்கள் நடக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் வரும் பிப்ரவரி இறுதிக்குள் முடித்து விட திட்டமிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் ’தலைவர் 169’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இந்த படம் குறித்து இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர்களை ரஜினிகாந்த் தற்போது முடிவு செய்துவிட்டதாகவும் இதுகுறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்கள் கழித்து வெளியாகும் என்றும் தெரிகிறது
’தலைவர் 169’ படத்தை தயாரிக்க இருப்பது அவரது மருமகனும் நடிகருமான தனுஷ் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் இயக்குனர் குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை என்றாலும் இந்த படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இந்த படத்தில் தனுஷ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
’தலைவர் 169’ படத்தை அடுத்த ஆண்டுக்குள் முடித்துவிட்டு அதன்பின்னர் கட்சி அறிவிப்பை அவர் வெளியிடவிருப்பதாக அவரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய்
பொருள்: வாள் போன்ற நீண்ட கண்களையுடைய தோழியே! முதலும் முடிவும் இல்லாத ஒளிவெள்ளமாய் பிரகாசிக்கும் நம் சிவ பெருமான் குறித்து நாங்கள் பாடுவது உன் காதில் கேட்கவில்லையா? செவிடாகி விட்டாயோ? அந்த மகாதேவனின் சிலம்பணிந்த பாதங்களைச் சரணடைவது குறித்து நாங்கள் பாடியது கேட்டு, வீதியில் சென்ற ஒரு பெண் விம்மி விம்மி அழுதாள். பின்னர் தரையில் விழுந்து புரண்டு மூர்ச்சையானாள். ஆனால், நீ உறங்குகிறாயே! பெண்ணே! நீயும் சிவனைப் பாட எழுந்து வருவாயாக!
விளக்கம்: திருவண்ணாமலையில் அண்ணாமலையார் மார்கழி அதிகாலையில் பவனி வருகிறார். அவரைத் தரிசிக்க பெண்கள் காத்து நிற்கிறார்கள். தங்களுக்கு கிடைத்த இந்த நற்பேறு தங்கள் தோழிக்கும் கிடைக்க வேண்டுமென்ற ஆசையில் அவளை எழுப்புகிறார்கள்.