Home Blog Page 5839

தேசிய அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது “திஷா”

0

தேசிய அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது “திஷா”

கடந்த சில வருடங்களாகவே பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதை எதிர்த்து போராட்டங்கள், பல்வேறு வகையில் கண்டனங்கள்  அரங்கேறுவதும், நாளடைவில் அவை அடங்கிவிடுவதும் நமக்கு வாடிக்கையாகவே ஆகிபோனநிலையில் அதிரடியாக களமிறக்கபட்டிருக்கிறது “திஷா”.

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக ஆந்திர அரசு கடுமையான சட்டத்தை இயற்றியுள்ளது.இதன்படி பெண்களையும், குழந்தைகளையும் பலாத்காரம் செய்பவர்களுக்கு 21 நாட்களில் மரண தண்டனை விதிக்கும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. 

இதற்க்கு “ஆந்திரப் பிரதேச திஷா மசோதா” கிரிமினல் சட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த மசோதாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மீதான புலன் விசாரணையை 7 நாட்களில் முடித்துக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து அடுத்த 14 நாட்களில் நீதிமன்றம் விசாரணையை முடிக்க வேண்டும்.

பெண்களை சமூக ஊடகங்கள் வாயிலாகவோ அல்லது டிஜிட்டல் ஊடகங்கள் வாயிலாகவோ துன்புறுத்தினால், முதல் முறையாகக் குற்றம் செய்பவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும், 2-வது முறையாகவும் தொடர்ந்து செய்பவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறையும் விதிக்கப்படும். இதற்காக 354இ பிரிவு இணைக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை வரவேற்கும் விதமாக பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் நடிகை ரோஜா உட்பட சிலர் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு இனிப்பு வழங்கி கையில் ராக்கி கட்டி தங்களது ஆதரவை தெரிவித்தனர். “திஷா” நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்து வருகிறது . பல்வேறு கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் , முன்னணி பிரபலங்கள் என அணைத்து தரப்பினரின் வரவேற்பையும் பெற்றுவருகிறது .

இந்நிலையில் திஷா சட்டத்தைப் போல் கேரள மாநிலத்திலும் கொண்டுவருவதற்கான சாத்தியங்களை ஆய்வு செய்வோம் என்று கேரள சுகாதார மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா உறுதியளித்துள்ளார்.

அதேபோல், தேசிய மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 21 நாளில் தூக்கு தண்டனை விதிக்கும் திஷா சட்டமசோதாவை நாடு முழுவதும் விரைவில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் ஆந்திர சபாநாயகர் நேற்று முன்தினம் சட்டசபையில் பேசும்போது “டெல்லி அரசாங்கம் நமது திஷா சட்டத்தின் மீது ஆர்வம் காட்டியுள்ளதோடு அதன் குறித்த விளக்கத்தை கேட்டு தெரிந்து கொண்டதாகவும் ” தெரிவித்தார்.

தனுஷ் 44’ பட இயக்குனர் யார்? வெளிவராத தகவல்

0

தனுஷ் 44’ பட இயக்குனர் யார்? வெளிவராத தகவல்

தனுஷ் நடித்துவரும் 40வது படம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் படம் என்பதும் 41 வது படம் பரியேறும் பெருமாள் மாரி செல்வராஜ் இயக்க உள்ள படம் என்பதும் 42வது படம் ராட்சசன் இயக்குனர் ராம்குமார் இயக்க உள்ள படம் என்பதும் 43 வது படம் செல்வராகவன் இயக்கத்தில் உருவாக உள்ள படம் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனுஷின் 44 வது படத்தை அறிவித்தது இந்த படம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகாத நிலையில் தற்போது இந்த படத்தின் முக்கிய தகவல்கள் கோலிவுட்டில் கசிந்துள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு மெர்சல் திரைப்படத்தை தயாரித்த பின்னர் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் அவர் இயக்கும் ஒரு படம் தொடங்கப்பட்டது. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் மெர்சல் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் இந்த படத்தை இந்நிறுவனத்தால் தொடர முடியவில்லை.

இருப்பினும் தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனத்தின் மூலம் இந்த படத்தை கைப்பற்றி அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்தினார். ஆனால் அவருக்கும் அடுத்தடுத்த படங்கள் தோல்வி அடைந்ததால் இந்த படத்தை அவர் பாதியில் நிறுத்தி விட்டதாக தெரிகிறது. தற்போது தேனாண்டாள் பிலிம்ஸ் மற்றும் வுண்டர்பார் நிறுவனம் ஆகிய இரண்டு நிறுவனங்களும் செலவழித்த தொகையை கொடுத்து இந்த படத்தை சன் பிக்சர்ஸ் கைப்பற்றியுள்ளது. இந்தப் படம்தான் தனுஷின் 44 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் தற்போது அறிவிக்கப்பட்டாலும் 2020ஆம் ஆண்டு இறுதியில்தான் தொடங்கப்படும் என்று தெரிகிறது.

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசுடன் பிரதமர் மோடியின் சகோதரர் திடீர் சந்திப்பு

0

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசுடன் பிரதமர் மோடியின் சகோதரர் திடீர் சந்திப்பு

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் திடீரென்று சந்தித்துப் பேசியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சந்திப்பின் போது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின்
முன்னேற்றம் குறித்துப் பேசியதாக அவரது முகநூல் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் அதில் இந்த சந்திப்பு குறித்து குறிப்பிட்டுள்ளதாவது.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் இளைய சகோதரரும், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருபவருமான திரு.பிரகலாத் மோடி இன்று மாலை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமானதாகும்.

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசுடன் பிரதமர் மோடியின் சகோதரர் திடீர் சந்திப்பு

தைலாபுரம் தோட்டத்திற்கு வந்த அவரை மருத்துவர் அய்யா அவர்களும், பா.ம.க. இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களும் வரவேற்றனர்.

தொடர்ந்து நடைபெற்ற சந்திப்பின்போது, தேசிய அளவில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றம், அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து மருத்துவர் அய்யா அவர்களும், திரு. பிரகலாத் மோடி அவர்களும் விவாதித்தனர்.

தமிழக அளவிலும், தேசிய அளவிலும் சமூக நீதிக்காக மருத்துவர் அய்யா அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை இந்தச் சந்திப்பின் போது, திரு. பிரகலாத் மோடி அவர்கள் நினைவு கூர்ந்தார்.

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசுடன் பிரதமர் மோடியின் சகோதரர் திடீர் சந்திப்பு

பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காகவும், கல்வி வளர்ச்சிக்காகவும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு செயல்படுத்தி வரும் பேட்டி பச்சாவோ, பேட்டி பதாவோ ( Beti Bachao Beti Padhao) திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த புத்தகம் ஒன்றை மருத்துவர் அய்யா அவர்களிடம் திரு.பிரகலாத் மோடி அவர்கள் வழங்கினார்.

மருத்துவர் அய்யா அவர்களுடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும் திரு.பிரகலாத் மோடி அவர்கள் தெரிவித்தார் என்றும் அதில் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்தின் ஆச்சரியமான செய்தியை வெளியிட்ட யுவன்!

0

சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்தின் ஆச்சரியமான செய்தியை வெளியிட்ட யுவன்!

சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் ’இரும்புத்திரை’ இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவான ’ஹீரோ’ திரைப்படம் வரும் வெள்ளியன்று பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று சென்னையில் நடந்த இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் இடையே இந்த படத்தின் பிரமோஷன் நடைபெற்றது என்பதும் மைதானத்தில் சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பிஎஸ் மித்ரன் ஆகியோர் பேட்டி கொடுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு ஆச்சரியமான தகவலை இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா அவர்கள் தற்போது தெரிவித்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை தனது தந்தையும் இசைஞானியுமான இளையராஜா பாடி உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இந்த தகவல் அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே யுவன் சங்கர் ராஜா இசையில் இளையராஜா பாடியிருந்தாலும் இந்த படத்தில் அவர் பாடியிருப்பதை இதுவரை படக்குழுவினர் ரகசியமாக வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

சமீபத்தில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் கூட இந்த பாடல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இளையராஜா பாடலை பாடிய இந்த பாடலை பாடலாசிரியர் பா விஜய் எழுதி உள்ளார் என்ற தகவலையும் யுவன்சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன், அர்ஜூன், கல்யாணி பிரியதர்ஷன், இவானா, ஷ்யாம் கிருஷ்ணன், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படம் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது என்பதும் இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அறிமுகம் ஆன முதல் ஆண்டிலேயே ஒன்ரறை கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை: பிரபல நிறுவனத்தின் சாதனை

0

அறிமுகம் ஆன முதல் ஆண்டிலேயே ஒன்ரறை கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை: பிரபல நிறுவனத்தின் சாதனை

உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று இந்தியாவில் ஒரு புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்து முதல் ஆண்டிலேயே ஒன்றரை கோடி ஸ்மார்ட்போன்களை விற்று சாதனை செய்துள்ளது. சீன நிறுவனத்தை சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மீ பிராண்ட் என்ற நிறுவனம் இந்த ஆண்டு ஒரு புதிய மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. மே மாதம் முதல் விற்பனையை துவங்கிய நிலையில் இந்நிறுவனத்தின் புதிய மாடல் டிசம்பர் மாதத்திற்குள் ஒன்றரை கோடி ஸ்மார்ட்போன்களை விற்றுள்ளதாக ரியல்மீ பிராண்ட் தெரிவித்துள்ளது.

சீன நிறுவனத்தின் மற்ற நிறுவனங்களாகிய சியோமி மற்றும் சாம்சங் உள்பட பல நிறுவனங்கள் இந்தியசந்தையில் போட்டியில் இருக்கும் நிலையில் புதிதாக நுழைந்த ஒரு நிறுவனம் 1.5 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது பெரும் சாதனையாக கருதப்படுகிறது.

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி பிராண்ட் தற்போது நான்காவது இடத்தில் இருப்பதாகவும், விவோ மற்றும் ஓப்போ ஆகிய நிறுவனங்கள் கூட முதல் ஆண்டிலேயே இவ்வளவு அதிகமான ஸ்மார்ட்போன்களை விற்று சாதனை செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. சர்வதேச அளவில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் ரியல்மி பிராண்ட் சர்வதேச அளவில் தற்போது ஏழாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மேலும் சில முக்கிய மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் இந்திய சந்தையை மேலும் விரிவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் இந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மாதவ் சேத் தெரிவித்துள்ளார்.

நான் யாருன்னு கூடிய விரைவில் காட்டறேன்! முதல்வருக்கு எதிராக கிளம்பிய அதிமுக அமைச்சர்

0

நான் யாருன்னு கூடிய விரைவில் காட்டறேன்! முதல்வருக்கு எதிராக கிளம்பிய அதிமுக அமைச்சர்

தற்போதைய தமிழக அரசியலில் எதிர்கட்சிகளை சமாளிப்பதில் திறமையாக செயல்பட்டு வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அவரோட அமைச்சரவையில் உள்ள ராஜேந்திர பாலாஜியுடன் உரசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பால்வளத்துறைக்கு கீழ் வரும் ஆவின் நிர்வாகம் நாள்தோறும் கொள்முதல் செய்ய்யும் பாலில், 7 ஆயிரம் லிட்டர் வரை உபரியாக மிஞ்சுவதாக அது பற்றிய விவகாரத்தில் தான் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

அதிகமாகும் இந்த உபரிப் பாலை பால் பவுடராக மாற்றி விடலாம் என்று அதிகாரிகள் சிலர் கூறியிருக்கின்றனர், ஆனால் பால் பவுடருக்கு மார்க்கெட் குறைவு என்று இன்னொரு தரப்பு அதிகாரிகள் சொல்லியிருப்பதாக கூறுகின்றனர். அதனால், முடிவாக இவ்வாறு கிடைக்கும் உபரிப் பாலை வெளியே விற்கலாம் என்ற முடிவிற்கு வந்துள்ளனர்.

இந்நிலையில் இவ்வாறு வரும் இந்த உபரிப் பாலை நான் சொல்லும் நபர்களுக்கு டெண்டர் விடுங்கள் என்று பால்வளத் துறை அமைச்சரான ராஜேந்திர பாலாஜி கட்டளையிட்டதாக கூறப்படுகிறது. இவ்வாறு தனக்கு ஆதரவான நபர்களுக்கு டெண்டர் விட சொல்லி வலியுறுத்திய விவகாரம் தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் என்று கூறப்படுகிறது.

admk


அமைச்சருக்கு ஆதாரவு எம்.டி.யான காமராஜ் மாற்றப்பட்டு, இப்போது வந்திருக்கும் புதிய எம்.டி.யான வள்ளலாரோ, அமைச்சரின் முடிவை ஏற்க மறுத்ததோடு, அதை முதல்வர் எடப்பாடியின் கவனத்துக்குக் கொண்டு போயிருப்பதாக கூறுகின்றனர்.

இதைக்கேட்டு கோபமடைந்த எடப்பாடியோ, திருட்டுப் பூனைகள் பாலைக் குடிச்சிடாமல் இ-டெண்டர் விட்டு விடுங்கள் என்று கறாராகச் சொல்லிவிட்டதாக கூறுகின்றனர். இதையறிந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எடப்பாடிக்கு எதிராக ருத்திர தாண்டவம் ஆடியதோடு, நான் யாருன்னு கூடிய விரைவில் காட்டறேன்னு நெருங்கிய வட்டாரங்களில் கூறி வருகிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மீண்டும் அதிமுகவில் ஒரு தர்ம யுத்தம் பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபல நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமியின் மகளைக் காணவில்லை! நடந்தது என்ன?

0

பிரபல நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமியின் மகளைக் காணவில்லை! நடந்தது என்ன?

பிரபல நாட்டுப்புற பாடகரும் மற்றும் திரைப்பட பின்னணி பாடகருமான புஷ்பவனம் குப்புசாமியின் மகளை காணவில்லை என்று சென்னை, அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நாட்டுப்புற மற்றும் தமிழிசைக் கலைஞரான புஷ்பவனம் குப்புசாமி தொடர்ந்து பல மேடைகளில் நாட்டுப்புற பாடல்களை பாடி வருபவர். கிராமத்து பாடல்களை பாடி பெரும்பாலான மக்களின் மனதை கவர்ந்த அவர் தமிழக அரசின் கலைமாமணி விருதினைப் பெற்றிருப்பவர். சென்னைப் பல்கலைக் கழக இசைத் துறையில் பயின்ற அனிதாவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.

புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் பல்லவி மருத்துவராக பணி புரிந்து வருகிறார். இரண்டாவது மகள் மேகா. 
 

family


இந்த நிலையில் புஷ்பவனம் குப்புசாமியின் மூத்த மகளான பல்லவியை நேற்று ஞாயிற்று கிழமை 8 மணி முதல் காணவில்லை என உறவினர் சார்பில் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் கூறியுள்ளனர்.

அந்த புகாரில் மூத்த மகள் பல்லவிக்கும், இரண்டாவது மகள் மேகாவுக்கும் இடையே சிறிய சண்டை ஏற்பட்டது. அதனால் பல்லவி கோபித்து கொண்டு காரை எடுத்து வெளியே சென்றுவிட்டாள் என்று கூறியுள்ளனர். இந்த புகாரை தொடர்ந்து வீட்டின் அருகே இருக்கும் சிசிடிவி கட்சிகளை வைத்து போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர். 

இந்த நிலையில் தற்போது பல்லவியின் பேஸ்புக்கில் ஒரு போஸ்ட் போடப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் “Guys some random fake news is spreading that I’ve been kidnapped or lost or something… I’m absolutely fine.. Do NOT believe such fake stuff!” என்று அதில் இடம் பெற்றுள்ளது.

பிரபல நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமியின் மகளைக் காணவில்லை! நடந்தது என்ன?

அதாவது, “நண்பர்களே, நான் கடத்தப்பட்டதாகவோ அல்லது காணாமல் போய் விட்டதாகவோ கூறி சிலர் செய்திகளை பரப்பி வருகின்றனர். அப்படியெல்லாம் எதுவும் இல்லை. நான் நலமாக இருக்கிறேன். போலியான செய்திகளை தயவு செய்து யாரும் நம்ப வேண்டாம்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த பதிவின் காரணமாக, பல்லவி காணாமல் போய் விட்டாரா அல்லது பத்திரமாக இருக்கிறாரா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது இதுவரை புஷ்பவனம் குப்புசாமி குடும்பத்தினர் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அவர்கள் சொல்வதே உண்மையாக இருக்க முடியும் என்பதால் மக்கள் அவர்களின் விளக்கத்துக்காக காத்துள்ளனர்.

இங்கிலாந்து நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ஆகும் இந்திய பெண்!

0

இங்கிலாந்து நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ஆகும் இந்திய பெண்!

இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகும் வாய்ப்பு இந்திய வம்சாவளிப் பெண் ஒருவருக்கு கிடைத்துள்ளது. இதனால் இந்தியர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் சமீபத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனை அடுத்து மீண்டும் பிரதமராக போரீஸ் ஜான்சன் பதவியேற்கிறார். இந்த நிலையில் இந்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்துக் கணிப்பில் கூறப்பட்ட தொழிலாளர் கட்சி படுதோல்வி அடைந்தது. இதனை அடுத்து அக்கட்சியின் தலைவர் ஜெரேபி கார்பைன் அவர்களுக்கு கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளது

இதனை அடுத்து அவர் கட்சி தலைவரின் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது. மேலும் தொழிலாளர் கட்சியை இன்னொரு தேர்தலுக்கு கொண்டு செல்ல தான் தயாராக இல்லை என்றும் ஜெரேபி கார்பைன் அவர்களே கூறியுள்ளார்.

இந்த நிலையில் தொழிலாளர் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கான போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லிசா நண்டி என்ற பெண் வேட்பாளரும் உள்ளார். இவர் சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வட மேற்கு இங்கிலாந்தில் உள்ள விகான் என்ற தொகுதியில் இருந்து எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடைய தந்தை இந்தியர் என்பதும் தாயார் ஆங்கிலேயர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொழிலாளர் கட்சியின் தலைவராக லிசா நண்டி தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்தான் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராகவும் வர வாய்ப்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டாலின் எங்கிருந்து வந்தார்? அவரது தலைவர் எங்கிருந்து வந்தார்? அவரது பூர்வீகம் என்ன? சொல்ல முடியுமா? தைரியம் இருக்கிறதா? அமைச்சர் சி.வி.சண்முகம்

0

ஸ்டாலின் எங்கிருந்து வந்தார்? அவரது தலைவர் எங்கிருந்து வந்தார்? அவரது பூர்வீகம் என்ன? சொல்ல முடியுமா? தைரியம் இருக்கிறதா? அமைச்சர் சி.வி.சண்முகம்

என்னை தனிபட்ட முறையில் விமர்சனம் செய்ய ஸ்டாலின் காந்தியும் இல்லை, தான் புத்தனும் இல்லை என, தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கொந்தளித்துள்ளார்.

சென்னை, பசுமைவழிச் சாலையில் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த பேட்டியில் இது குறித்து பேசியதாவது:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தல் நடைபெறக் கூடாது என்பதற்காக, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடுத்து முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், உச்ச நீதிமன்றம் கடைசியில் இது குறித்து தெள்ளத் தெளிவான தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

மேலும் புதிதாக தொடங்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து, மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி உள்ளாட்சி தேர்தல் நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

ஆனாலும், மீண்டும் தெளிவு வேண்டும் என்று ஸ்டாலின் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளார். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்த விவகாரத்தில் திமுகவுக்குக் குட்டு வைத்தார். தேர்தலைச் சந்திக்க அஞ்சி, மக்களைச் சந்திக்க தைரியம் இல்லாமல், திமுகவும், மு.க.ஸ்டாலினும் தேர்தல் ஆணையத்தை அச்சுறுத்தும் வகையில் ஒரு நோட்டீஸை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளனர்.

அதில் உச்ச நீதிமன்ற உத்தரவின் படி தேர்தல் நடத்தப்படாவிட்டால், ஆணையத்தின் மீது அவமதிப்பு வழக்குத் தொடரப்படும் என்றும் திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1991 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி தேர்தலை நடத்துவதாக, திமுக உச்ச நீதிமன்றத்தில் பொய் சொன்னது. ஆனால், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தான் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, தமிழக அரசும், தேர்தல் ஆணையமும் ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு தான் இது சம்பந்தமாக உச்ச நீதிமன்றம் தெளிவான உத்தரவைத் தந்தது.

ஆனால், தற்போதும் திமுக தேர்தல் ஆணையத்தை மிரட்டுகிறது. நல்ல வழக்கறிஞர்களிடம் இந்த உத்தரவு குறித்து கேட்டு மு.க.ஸ்டாலின் தெளிவு பெற வேண்டும். தன் தகுதிக்கும் பதவிக்கு ஏற்றாற்போல் ஸ்டாலின் பேச வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும் பேசிய அவர் என்னைப் பற்றி அவர் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்கிறார். என்னைப் பற்றிப் பேசுவதற்கான தகுதி ஸ்டாலினுக்கு இல்லை. ஸ்டாலின் காந்தியும் இல்லை, நான் புத்தனும் இல்லை. தனிப்பட்ட வழக்கை குறித்துப் பேச வேண்டுமென்றால், ஸ்டாலின் குறித்து இந்த ஆண்டு முழுவதும் பேசலாம். என் பணிகளில் குறைகள் இருந்தால் அதனைச் சுட்டிக் காட்டட்டும்.

ஆனால், நான்கு வார்த்தையை ஒழுங்காகப் பேசத் தெரியாத ஸ்டாலின், நா குழறி என்னைப்பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சிக்கிறார். தனிப்பட்ட முறையில் பேச வேண்டுமென்றால் அவர் மேடை அமைக்கட்டும். அவர் என்னைக் குறித்துப் பேசட்டும், நான் அவரைப் பற்றிப் பேசுகிறேன். இந்த மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன்.

மூன்றாம் தரப் பத்திரிகையான முரசொலியில் என்னைப் பற்றி எழுதுகின்றனர். நான் ஊர், பெயர் தெரியாதவனா? நான் தமிழகத்தின் குடிமகன். ஸ்டாலின் எங்கிருந்து வந்தார்? அவரது தலைவர் எங்கிருந்து வந்தார்? அவரது பூர்வீகம் என்ன? சொல்ல முடியுமா? தைரியம் இருக்கிறதா? நாவடக்கத்துடன் பேச வேண்டும். இதனை மீறிப் பேசினால், அதற்கான பதிலைத் தரத் தயாராக இருக்கிறோம். தைரியம் இருந்தால் என் பெயரைக் குறிப்பிட்டுப் பேசட்டும் என்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திமுக தலைவர் ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

திரைப்பட இயக்குனராகும் யூடியூப் பிரமுகர்

0

திரைப்பட இயக்குனராகும் யூடியூப் பிரமுகர்

ஏற்கனவே யூட்யூபில் திரை விமர்சனம் மூலம் பிரபலமான புளூசட்டை மாறன் அவர்கள் இயக்குனராகி தற்போது ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும், இந்த திரைப்படத்திற்கு அவர் ‘ஆன்ட்டி இந்தியன்’ என்ற டைட்டில் வைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பு நடந்து வருவதாகவும் இந்த படம் அனேகமாக இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் யூடியூபில் இருந்து இன்னொரு பிரபலம் தற்போது இயக்குனராகிறார். யூடியூபில் ‘புட் சட்னி’ என்ற பெயரில் ஒரு சேனலில் பிரபலமாகி அதன் பின்னர் பிளாக் ஷீப் அணியுடன் இணைந்து பல வீடியோக்களில் தோன்றியவர் ராஜமோகன். இவர் ஏற்கனவே ‘நட்பே துணை’ ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

திரைப்பட இயக்குனராகும் யூடியூப் பிரமுகர்

இந்த நிலையில் இவர் தற்போது ஒரு படத்தை இயக்க ஆரம்பகட்ட பணியை செய்து வருவதாகவும் இவர் இயக்கவுள்ள படத்தில் நடிக்கும் பெரும்பாலானோர் யூடியூப் சேனலை சேர்ந்தவர்களே என்றும் கூறப்படுகிறது. ராக்போர்ட் நிறுவனம் தயாரிக்க இருக்கும் படம் முழுக்க முழுக்க காமெடி பின்னணி கொண்ட ஒரு படம் என்றும் இருப்பினும் இறுதியில் சமூகத்திற்கு தேவையான ஒரு மெசேஜ் இருக்கும் என்றும் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

யூடியூபில் இருந்து பெரிய திரைக்கு இயக்குனர்களாகவும், நடிகர்களாகவும் அதிகம் அறிமுகமாகி கொண்டிருப்பது ஆரோக்கியமான ஒரு விஷயமாக கருதப்படுகிறது.