Home Blog Page 5837

ரோஹித் சர்மா மற்றும் கோலிக்கு எதிராக திட்டமிடும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்!

0

ரோஹித் சர்மா மற்றும் கோலிக்கு எதிராக திட்டமிடும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்!

இந்த வருடம் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ள வீரர்கள் விராட் கோலி,ரோஹித் சர்மா மற்றும் ஷாய் ஹோப் ஆகியோர் தான்.அவர்கள் எடுத்த ரன்களின் எண்ணிக்கை விவரம்:

1. விராட் கோலி – 1292 ரன்கள்
2. ரோஹித் சர்மா – 1268 ரன்கள்
3. ஷாய் ஹோப் – 1225 ரன்கள்

இந்தியாவில் நடைபெறும் டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடா்களில் பங்கேற்பதற்காக மேற்கு இந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்று பயணத்தில் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் அந்த தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றியின் தொடர்ச்சியாக அடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடா் தற்போது ஆரம்பித்துள்ளது.

West Indies Team Plan against Rohit Sharma and Virat Kohli-News4 Tamil Latest Online Sports News in Tamil

இதனையடுத்து சென்னையில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் சற்றும் எதிர்பார்க்காத நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்திய அணிக்கு எதிராக அபார வெற்றி பெற்றுள்ளது. அடுத்ததாக நடைபெறவுள்ள 2 வது ஒருநாள் ஆட்டம் விசாகப்பட்டினத்தில் நாளை நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் இந்த வருடம் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடிக்கும் முனைப்பில் ஷாய் ஹோப் முயற்சித்து வருவதாக கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:

West Indies Team Plan against Rohit Sharma and Virat Kohli-News4 Tamil Latest Online Sports News in Tamil

ஒரு பேட்ஸ்மேனாக, தன்னுடைய அணியின் வெற்றிக்கு ரன்கள் எடுப்பதில் தான் திருப்தி அடங்கியுள்ளது. அதே சமயம், ஏற்கனவே உள்ள இருவரையும் சீக்கிரம் வீழ்த்தி விட்டு, அதிக ரன்கள் எடுத்து, அதிக ரன்கள் எடுத்தவர்களுக்கான இந்த வருடப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடிக்கவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் ஷாய் ஹோப் 102 ரன்கள் எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்து இரண்டாவது ஒரு நாள் போட்டி நடைபெறவுள்ள விசாகப்பட்டினம் ஆடுகளம் குறித்து ஷாய் ஹோப் கூறியதாவது: இந்த மைதானம் பேட்டிங்குக்குச் சாதகமான ஆடுகளமாக உள்ளது. பந்தை எளிதில் அடித்து ஆட முடியும். எதிர்பார்த்தவாறு ரன்கள் எடுக்கச் சுலபமாக இருக்கும் என்பதால் பந்து வீச்சாளர்களுக்குச் இந்த மைதானம் சவாலாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மீண்டும் பா.ரஞ்சித்துடன் இணையும் பிரபல இயக்குனர்!

0

மீண்டும் பா.ரஞ்சித்துடன் இணையும் பிரபல இயக்குனர்!

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் உருவான ’பரியேறும் பெருமாள்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதோடு உலகின் பல நாடுகளில் நடந்த சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒரே படத்தின் மூலம் பெரும் புகழ் பெற்ற இயக்குனர் மாரி செல்வராஜ் தனது இரண்டாவது படத்தை தனுஷை வைத்து இயக்க இருக்கிறார். கர்ணன் என்ற டைட்டில் கொண்ட இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் யாவும் முடிவடைந்து தற்போது படப்பிடிப்பிற்கு தயாராக உள்ளது

மீண்டும் பா.ரஞ்சித்துடன் இணையும் பிரபல இயக்குனர்!

தனுஷ் தற்போது கார்த்திக் சுப்பாராஜ் இயக்கி வரும் ‘சுருளி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை முடித்த உடன் அவர் மாரி செல்வராஜ் இயக்கவுள்ள ;கர்ணன்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இரண்டே மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தை இயக்கி முடித்த உடன் இயக்குனர் மாரி செல்வராஜ் மீண்டும் பா ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரடொக்சன்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ள அடுத்த படத்தை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர் ஒருவர் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

தேச துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு தூக்கு தண்டனை

0

தேச துரோக வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

முஷாரப் பாகிஸ்தானை ஆட்சி செய்து கொண்டிருந்த போது 2007 ஆம் ஆண்டு நவம்பரில் அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தார். இதற்கு எதிராக முஷாரப் மீது தேச துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கடந்த 2014 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கின் காரணமாக துபாய் சென்ற முன்னாள் பாகிஸ்தான் அதிபர் முஷாரப் அங்கேயே தங்கிவிட்டார். தேச துரோக வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அவர் விசாரணைக்கு ஆஜராகாததை தொடர்ந்து அவரது பாஸ்போர்ட் மற்றும் அவருக்கு வழங்கப்படும் சில சலுகைகளை உள்ளிட்டவைகளை முடக்க அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் துபாய்யில் தங்கியிருக்கும் முன்னாள் பாகிஸ்தான் அதிபர் முஷாரப் மருத்துவ சிகிச்சைகாக அங்கு தங்கியுள்ளதாக கூறி வந்தார். இதனையடுத்து அவர் மீது சுமத்தப்பட்ட தேச விரோத வழக்கு தொடர்பான விசாணைக்கு ஆஜராகுமாறு முஷாரப்பை தொடர்ந்து பாகிஸ்தான் அதிகாரிகள் வலியுறுத்து வருகின்றனர். எனினும் அங்கு அவர் மேற்கொண்டு வரும் மருத்து சிகிச்சையை காரணமாக கூறி தொடர்ந்து முஷாரப் மீண்டும் பாகிஸ்தான் திரும்பாமல் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் அவருக்கு எதிரான தேச துரோக வழக்கில் இன்று முஷாரப்புக்கு தூக்கு தண்டனை விதித்து பாகிஸ்தான் நாட்டின் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழக்கியுள்ளது.

இந்த தீர்ப்பை வழங்கிய சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி வாகர் அகமத் சேத் தலைமையில் மூன்று நீதிபதிகள் உள்ளிட்ட அமர்வு தான் தேச விரோத வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முஷாராப்புக்கு தூக்கு தண்டனை வழங்கியுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முக்கிய வீரர்கள் இல்லாமல் இந்தியாவை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி?

0

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீசுடன் விளையாடி வருகிறது. வருகிற 22-ந் தேதியுடன் இந்த தொடர் முடிகிறது. இந்த தொடர் முடிந்த உடன், இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் விளையாடுகிறது.

ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஆட்டம் ஜனவரி 14-ந் தேதி மும்பையிலும், 2-வது போட்டி 17-ந் தேதி ராஜ்கோட்டிலும், 3-வது மற்றும் கடைசி ஆட்டம் 19-ந் தேதி பெங்களூரில் நடக்கிறது.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டது. உலக கோப்பையில் விளையாடிய 7 வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய நட்சத்திர வீரர்களான மேக்ஸ்வெல், உஸ்மான் கவாஜா, ஷான்மார்ஷ், நாதன் ஹோல்டர் நைல், ஸ்டோனிஸ், நாதன் லயன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். காயம் காரணமாக பெஹரன் டார்ப் இடம் பெறவில்லை. டெஸ்ட் போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடி வரும் மார்னஸ் லபுஸ்சேன் ஒருநாள் போட்டிக்கான அணியில் அறிமுகமாகி உள்ளார்.

ஆல் ரவுண்டர் அபோட், ஆஸ்டன் அகர் ஆகியோர் நீண்ட இடைவெளிக்கு பிறகு அணியில் இடம் பெற்றுள்ளனர்.முக்கிய வீரர்கள் இல்லாமல் இந்தியாவை எதிர்கொள்கிறது.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் வருமாறு:-

ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், மார்னஸ் லபுஸ்சேன், ஸ்டீவ் சுமித், ஆஸ்டன் டர்னர், கானே ரிச்சர்ட்சன், அலெக்ஸ் கேரி, அபோட், ஆஸ்டன் அகர், கம்மின்ஸ், ஹேண்ஸ்ஹோம், ஹாசில்வுட், ஸ்டார்க், ஆடம் சம்பா.

மாமியாரை கடித்துக் குதறிய மருமகள்?

0

பொள்ளாச்சி அடுத்த மின் நகர் பகுதியை சேர்ந்தவர் நாகேஸ்வரி (வயது 62). இவரது மகன் சரவணகுமார் (42). இவரது மனைவி கல்பனா (38).இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். மதுபோதைக்கு அடிமையான சரவணகுமார் இதனால் அடிக்கடி கணவன் மனைவி இடையே தகராறு ஏற்படும்.

அப்படி கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டால் சரவணக்குமார் தனது தாய் நாகேஸ்வரி வீட்டில் தங்கி விடுவார். இதனால் மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் கல்பனா தன்னை தாக்கி விட்டதாக மாமியார் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசில் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தன் மீதான புகாரை வாபஸ் பெற கூறி கல்பனா மாமியாரை மிரட்டி வந்தார். இந்நிலையில் நாகேஸ்வரி மின்நகர் பகுதியில் நின்றுகொண்டுஇருந்தார்.

அப்போது அங்கு வந்த கல்பனா மாமியாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த கல்பனா மாமியாரின் தலையில் பலமாக கடித்தார்.

இதில் படுகாயம் அடைந்த நாகேஸ்வரி அலறி சத்தம்போட்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது தலையில் 6 தையல் போடப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மருமகள் கல்பனாவை கைது செய்தனர். மருமகள் கடித்ததில் மாமியாரின் தலையில் 6 தையல் போட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடம் பரபரப்பாக பேசப்பட்டது.

மொபைல் எண்ணை மாற்றாமல் வேறொரு டெலிகாம் சேவை நிறுவனத்துக்கு மாறுவதில் புதிய விதிகள்?

0

MNP(Mobile network portability) என்று அழைக்கப்படும் மொபைல் எண்ணை மாற்றாமல்  மொபைல் எண்ணுடன் வேறொரு டெலிகாம் சேவை நிறுவனத்துக்கு வாடிக்கையாளரால் மாற்றக்கூடிய இச்சேவை முறை கடந்த காலங்களில் ஒரு வாரம் முதல் 10 நாட்களுக்கு மேல் வரையில் கூட எடுக்கும்.

ஆனால், ட்ராய் இன்று அமல்படுத்தியுள்ள சேவை முறையால் இரண்டே நாட்களில் ட்ராய் விதிமுறைப்படி முன்னர் 96 மணி நேர சேவை ஆக இருந்த இந்த எம்என்பி சேவை தற்போது 48 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

MNP விரும்பும் வாடிக்கையாளர்கள் அதற்கான கோரிக்கையை முன்வைத்தால் ஒரு யூபிசி தடம் உருவாக்கப்படும். இதன் மூலம் அடுத்த 48 மணி நேரத்தில் நீங்கள் விரும்பும் டெலிகாம் நிறுவனத்துக்கு மாறிவிடலாம்.

போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்கள் தங்களுக்கான நிலுவைத்தொகை அத்தனையையும் செலுத்திய பின்னர்தான் மாற முடியும். மற்றபடி வாடிக்கையாளர் ஒருவர் தற்போது இருக்கும் நெட்வொர்க் நிறுவனத்தின் கீழ் 90 நாட்கள் வாடிக்கையாளராக இருந்திருந்தால் மட்டுமே அதே மொபைல் எண்ணுடன் வேறொரு நிறுவன சேவைக்கும் மாற முடியும்.

இச்சேவையைப் பெற உங்களது மொபைல் எண்ணிலிருந்து PORT 99XXXXXXXX (உங்கள் மொபைல் எண்) டைப் செய்து 1900 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் செய்ய வேண்டும். அடுத்த ஐந்து நிமிடங்களில் யூபிசி தடம் உருவாக்கப்பட்டு உங்களுக்கான ட்ரான்ஸ்பர் பணிகள் தொடங்கப்பட்டுவிடும்.

அதன் பின்னர் நீங்கள் புதிதாக மாற விரும்பும் நிறுவனத்துக்கு அடையாளச் சான்று மற்றும் இருப்பிடச் சான்று அளித்த பின்னர் மாற்றிக் கொள்ளலாம். 

திருடியதாக கூறி இளைஞரை அடித்துக் கொன்ற பரிதாபம்?

0

கேரளா, திருவல்லம் பேருந்து நிலையத்தில் மலப்புறம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது கைப்பையை ஒருவர் திருடிச் சென்றதாக அருகே இருந்த ஆட்டோ ஓட்டுநர்களிடம் கூறியுள்ளார்.

மேலும், அந்த கைப்பையில் பணம், பாஸ்போர்ட், மொபைல் ஃபோன் என அனைத்தும் இருந்ததாகவும் கூறி திருடிய நபர் குறித்த அடையாளங்களையும் ஆட்டோ ஓட்டுநர்களிடம் விளக்கியுள்ளார்.
இதனையடுத்து, அந்த நபரை தங்களுக்கு தெரியும் என கூறி முட்டக்காடு பகுதியைச் சேர்ந்த அஜீஸ் என்ற நபரை பிடித்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். ஆனால், திருடியது அவர் தான் என்பது அவர்களுக்கு உறுதியாகத் தெரியாது.

பின்னர், அஜீஸை ஒரு வீட்டிற்குள் அழைத்துச் சென்று அடித்து உதைத்தது மட்டுமல்லாமல். தாக்குதலுக்கு பிறகு திருவல்லம் பகுதியில் உள்ள வயல்வெளி ஒன்றில் அஜீஸ்ஸை தூக்கி எறிந்துள்ளனர்.அஜீஸ் பரிதாபமாக இறந்தார்.

இதற்கு பிறகு அந்த பகுதியில் ஆணின் சடலம் ஒன்று இருப்பதாக வந்த தகவலை அடுத்து ஆம்புலன்ஸ் மூலம் சம்பவ இடத்துக்கு போலிஸார் விரைந்தனர். அஜீஸின் உடலை மீட்டனர்.

இதனையடுத்து விசாரணையில் ஈடுபட்ட திருவனந்தபுரம் போலிஸாருக்கு மேற்குறிப்பிட்ட சம்பவம் தெரிய வந்துள்ளது. மேலும், கும்பல் தாக்குதல் நடந்த போது எடுக்கப்பட்ட வீடியோவைக் கொண்டு அந்த ஆட்டோ ஓட்டுநர்கள் மூவரையும் போலிஸ் கைது செய்துள்ளதாகவும் எஞ்சிய இருவரை தேடும் பணி தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கைக்கூலி அ. தி. மு. க. கனிமொழி?

0

குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் இன்று தி.மு.க சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதில், கலந்துகொண்டு பேசிய தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, பொருளாதார வீழ்ச்சி, விலைவாசி உயர்வு ஆகியவற்றை திசைத்திருப்பவே குடியுரிமை சட்டத் திருத்தத்தை பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ளதாக கூறினார்.

குடியுரிமை மசோதாவை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் பா.ஜ.கவுக்கு கைக்கூலியாக அ.தி.மு.க செயல்பட்டதாக கூறினார். இதை தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்றும் , பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் சீக்கியர்கள், இந்துக்களை குடிமக்களாக ஏற்கும் மத்திய அரசால், இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு வந்துள்ள தமிழர்களை ஏன் குடிமக்களாக அங்கீகரிக்க முடியவில்லை என கூறினார் .

மேலும், இந்த சட்டத்தை வாபஸ் பெரும்வரை தி.மு.கவின் போராட்டம் தொடரும் என்றார்.மேலும் மாநிலம் முழுவதும் தி.மு.க வினர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

திட்ட மிட்டபடி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா?

0

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அதில்

தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் ஏற்கனவே மாநில தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்பட்டு விட்டது. கடந்த ஜூன் 30-ந் தேதி வரை சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் அதில் உள்ளன. அதன்பின்பும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு தொடர்பாக கடந்த 6-ந் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன

அவற்றில் தகுதியுள்ள விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, வாக்காளர் பட்டியலில் புதிய பெயர்கள் சேர்க்கப்பட்டு துணைப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் துணைப்பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

வலுவான ஜனநாயகத்துக்கான வாக்காளர்களின் அறிவு’ என்ற கருத்தின் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான வாக்காளர் தினத்தை கடைப்பிடிக்க இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

கணிப்புகளை பொய்யாக்கி முன்னோக்கி ஏற்றம் காணும் சென்செக்ஸ்

0

கணிப்புகளை பொய்யாக்கி முன்னோக்கி ஏற்றம் காணும் சென்செக்ஸ்

சந்தை ஆலோசகர்கர்களின் கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கி கொண்டு இந்திய பங்கு சந்தையானது முன்னோக்கி ஏற்றம் கண்டு வருகிறது.

அதாவது இதுவரை சந்தையை பாதிக்கும் வகையில் வெளியான நுகர்வோர் பணவீக்கக் குறியீடு (CPI), மொத்த விலைக் குறியீடு (WPI) மற்றும் இந்திய தொழில் துறை உற்பத்தியைப் பிரதிபலிக்கும் ஐஐபி உள்ளிட்ட அனைத்து தரவுகளும் இந்தியப் பொருளாதாரமானது தவழ்ந்து கொண்டிருப்பதாகவே குறிப்பிட்டது. ஆனாலும் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இந்திய பங்கு சந்தை ஏற்றம் கண்டு கொண்டிருக்கிறது. இதனையடுத்து இந்திய பங்கு சந்தையில் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் செண்டிமெண்ட் பாசிட்டிவாக இருப்பதாகவே கருதப்படுகிறது.

இதன் விளைவாக இந்திய பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் புதிய உச்சங்களைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இதுவரை கணித்தபடி ஃபண்டமெண்டல் அடிப்படையில் இந்திய பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இறக்கம் காண்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மார்க்கெட் ஆலோசகர்கள் கூறியவற்றையெல்லாம் பொய்யாக்கி விட்டு சென்செக்ஸ் ஏற்றம் கண்டு கொண்டிருக்கிறது. இன்று புதிய உச்சத்திலேயே நிறைவடைந்தால் அது இந்திய பங்கு சந்தைக்கு மேலும் சிறப்பாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

இனியும் சென்செக்ஸை பின்னுக்கு இழுக்கும் வகையிலான ஃபண்டமெண்டல் செய்திகள் உள்ளிட்ட எது வந்தாலும் சந்தை, அந்த செய்திகளை கண்டு கொள்ளாமல் மேலும் ஏற்றம் காணும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே இன்றைய வர்த்தகமானது புதிய உச்சத்தில் நிறைவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று மாலை நடந்த வர்த்தகத்தில் பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 40,938 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று காலை வர்த்தகம் ஆரம்பித்ததும் சென்செக்ஸ் 41,052 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, கணிப்புகளை பொய்யாக்கி முன்னோக்கி ஏற்றம் காணும் சென்செக்ஸ் 41,308 புள்ளிகளைத் தொட்டு தொடர்ந்து வர்த்தகமாகிக் கொண்டு வருகிறது. நேற்றைய குளோசிங் ஆன புள்ளியை விட, இன்றைய உச்சப் புள்ளியானது 350 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது. மேலும் இன்று காலை மும்பை பங்கு சந்தை குறியீடான நிஃப்டி 12,082 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி 12,158 எனும் உச்சப் புள்ளியைத் தொட்டு தொடர்ந்து வர்த்தகம் ஆகிக் கொண்டு வருகிறது.

சென்செக்ஸில் பட்டியலிடப்பட்ட 30 பங்குகளில் 23 பங்குகள் ஏற்றத்திலும், மீதியுள்ள 07 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் வர்த்தகமாகி வரும் 2,350 பங்குகளில் 1,245 பங்குகள் ஏற்றத்திலும், 948 பங்குகள் இறக்கத்திலும், 157 பங்குகள் எந்தவொரு விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகி வருகின்றன.

மேலும் இந்த 2,350 பங்குகளில் 30 பங்குகளின் விலை 30 வார அதிகத்திலும், 92 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாகி வருகின்றன. இதில் டாடா ஸ்டீல், வேதாந்தா, ஹிண்டால்கோ, ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், டாடா மோட்டார்ஸ் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. கெயில், சன் பார்மா, பார்தி இன்ஃப்ராடெல், என் டி பி சி, யூ பி எல் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.