Home Blog Page 5840

இவர்களிருந்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம்: விமர்சிக்கும் நெட்டிசன்கள்

0

இவர்கள் இருந்திருந்தால் வெற்றி பெற்று இருக்கலாம்: ட்விட்டரில் வருத்தெடுத்த நெட்டிசன்கள்

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஹெட்மையர் அடித்த அதிரடி சதத்தால் இந்தியா அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ் அணி.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான T 20 போட்டி முடிவடைந்ததையடுத்து நேற்று இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து பேட்டிங் செய்ய முதலில் களம் இறங்கிய இந்தியா ரிஷப் பந்த் (71), ஷ்ரேயாஸ் அய்யர் (70), கேதர் ஜாதவ் (40) ஆகியோரின் அசத்தல் ஆட்டத்தால் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்தது.

இவர்களிருந்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம்: விமர்சிக்கும் நெட்டிசன்கள்
Virat Kohli

இதன் பிறகு 288 ரன்கள் அடித்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்து பேட்டிங் செய்தது. ஷாய் ஹோப், சுனில் அம்ப்ரிஸ் ஆகியோர் அந்த அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்நிலையில் சுனில் அம்ப்ரிஸ் வெறும் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து களமிறங்கிய ஷாய் ஹோப் உடன் ஷிம்ரோன் ஹெட்மையர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியானது மிகவும் அபாரமான ஆட்டத்தை ஆடினார்கள். ஷாய் ஹோப் ஒரு பக்கம் நின்று நிதானமாக ஆட மறுபக்கம் ஹெட்மையர் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஹெட்மையர் 50 பந்திலும், ஷாய் ஹோப் 92 பந்திலும் தங்களுடைய அரை சதத்தை அடித்தனர். இந்நிலையில் 50 பந்தில் அரைசதம் அடித்த ஹெட்மையர் அடுத்து 85 பந்தில் சதம் அடித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் ஹெட்மையரின் 5-வது சதம் இதுவாகும்.

இவர்களிருந்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம்: விமர்சிக்கும் நெட்டிசன்கள்

சதம் அடித்த ஹெட்மையர், 106 பந்தில் 11 பவுண்டரி, 7 சிக்சருடன் 139 ரன்கள் குவித்து ஆட்டமிழந்து வெளியேறினார். மறுமுனையில் ஷாய் ஹோப் தங்களது அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார். 47-வது ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸ், பவுண்டரி அடித்து அவரும் தன்னுடைய 8-வது சதத்தை பூர்த்தி செய்தார்.

ஹெட்மையர், ஷாய் ஹோப் சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் 47.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. இறுதியாக ஆடிய ஷாய் ஹோப் 102 ரன்னுடனும், பூரன் 29 ரன்னுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதற்கு முன்பு இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற T20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில் தற்போது நடைபெற்று முடிந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இதனையடுத்து எதனால் இந்திய அணி தோற்றது என்பது குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் ஒவ்வொருவரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இவர்கள் இருந்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்பது குறித்தும் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் சில பதிவுகள்:

டிடிவி தினகரனுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்: குழப்பத்தில் அமமுக தொண்டர்கள்

0

டிடிவி தினகரனுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்!குழப்பத்தில் அமமுக தொண்டர்கள்

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஏற்பட்ட உட்கட்சி குழப்பங்களினால் டிடிவி தினகரன் மற்றும் சசிகலா இணைந்து அமமுக என்ற கட்சியை ஆரம்பித்தனர். இதன் மூலமாக அதிமுக தொண்டர்களை தங்கள் பக்கம் வரவைத்து விடலாம் என்றும் திட்டமிட்டனர். ஆனால் அரசியல் நகர்வுகள் இதற்கு எதிராக அமைந்து கட்சியில் இருக்கும் நிர்வாகிகளை தக்க வைத்து கொள்ளவே தினகரன் தரப்பு கடுமையாக போராட வேண்டியதாகி விட்டது. அந்த அளவிற்கு அதிமுக மற்றும் திமுக என இரண்டு கட்சிகளும் அவருக்கு அதிர்ச்சியை கொடுத்து வருகின்றன.

இந்நிலையில் பல போராட்டங்களுக்கு பிறகு கட்சியை இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து விட்ட தினகரன்,அடுத்து நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்குத் தனிச் சின்னம் வாங்க முயற்சி செய்து வருகிறார் என்று கூறப்படுகிறது. ஏறத்தாழ 6 ஆயிரம் உள்ளாட்சிப் பதவிகளுக்கு நடத்தப்படும் இந்த தேர்தலில் அந்தச் சின்னத்தைக் கட்சியின் பொதுச் சின்னமாக்கி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுடன் மோதிப் பார்த்து விடலாம் என்று திட்டமிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

Edappadi Palaniswamy will Break AMMK-News4 Tamil Online Tamil News Channel Live Tamil News Today2
Edappadi Palaniswamy will Break AMMK-News4 Tamil Online Tamil News Channel Live Tamil News Today2

ஆனால் இதை எப்படியோ அறிந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி தரப்பு,அமமுக கட்சிக்காக தினகரன் குக்கர் அல்லது பரிசுப்பெட்டி சின்னத்தைத் தான் கேட்பார் என்று தெரிந்து கொண்டு, மாநில தேர்தல் ஆணையத்தின் லிஸ்டில் இந்த இரண்டு சின்னமும் இல்லாதபடி செய்து, தினகரன் தரப்புக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது. 
 

admk


இந்நிலையில், தினகரனின் கட்சிக்கு தனியாக ஒரு பொதுச் சின்னத்தை எங்களால் ஒதுக்க முடியாது. இதற்காக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தைத் தான் அவர்கள் அணுக வேண்டும் என்று  11 ஆம் தேதி மாலை மாநிலத் தேர்தல் ஆணையமும் கூறி தன் பங்கிற்கு தினகரன் தரப்பிற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இதன்படி தலைமைத் தேர்தல் ஆணையத்தை அணுகி இனிமேல் தனிச் சின்னத்தை வாங்க போதுமான நேரம் இல்லாததால், நடைபெறவுள்ள இந்த 6 ஆயிரம் உள்ளாட்சிப் பதவிகளுக்கும் மீண்டும் சுயேட்சையாகப் போட்டியிடும் கட்டாயத்தில் இருக்கிறார் தினகரன். இதனால் தினகரன் தான் போட்ட திட்டம் எதுவும் நடக்கவில்லை என்று குழப்பத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

நீண்டகாலமாக நீடிக்கும் இந்த நவீன கொடுமைக்கு நடவடிக்கை வேண்டும் : மருத்துவர் ராமதாஸ்

0

நீண்டகாலமாக நீடிக்கும் இந்த நவீன கொடுமைக்கு நடவடிக்கை வேண்டும் : மருத்துவர் ராமதாஸ்

நீண்டகாலமாக நீடிக்கும் நவீன கந்து வட்டி கொடுமைக்கு முடிவு கட்ட இன்று வரை நடவடிக்கை எடுக்கப்படாதது மிகுந்த வருத்தமளிக்கிறது என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் “உயிரைப் பறிக்கும் நவீன கந்துவட்டி கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும்!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.

வரமே சாபமாக மாறுவதைப் போன்று, தமிழகத்தில் பல மாவட்டங்களில் சிறுதொழில் தொடங்குவது உள்ளிட்ட தேவைகளுக்காக தேடி வந்து கடன் கொடுக்கும் நிறுவனங்கள், அதற்கு வட்டிக்கு மேல் வட்டி கேட்டு கொடுமைப்படுத்துவதால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. நீண்டகாலமாக நீடிக்கும் இந்தக் நவீன கந்துவட்டி கொடுமைக்கு முடிவு கட்ட இன்று வரை நடவடிக்கை எடுக்கப்படாதது மிகுந்த வருத்தமளிக்கிறது.

வறுமையின் பிடியிலிருந்து ஏழை மக்களை மீட்பதற்காக உருவாக்கப்பட்டது தான் நுண் கடன் எனும் அற்புதமான தத்துவம் ஆகும். இந்த தத்துவத்தை உருவாக்கிய வங்கதேச பொருளாதார வல்லுனர் முகமது யூனுசுக்கும், அதை செயல்படுத்த அவரால் தொடங்கப்பட்ட கிராமிய வங்கிக்கும் கடந்த 2006 & ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதிலிருந்தே நுண்கடனின் சிறப்பை அறிந்து கொள்ள முடியும். அந்த தத்துவத்தின் அடிப்படையில் தான் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அவற்றுக்கு வங்கிகள் மூலம் நுண்கடன் வழங்கப்பட்டு வருகிறது.

மக்களின் நலனுக்கான எந்தவொரு தத்துவத்திற்கும், மோசமான எதிர்வினை இருக்கும் என்பதற்கு உதாரணமாக தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில், குறிப்பாக மேற்கு மாவட்டங்களில் நுண்கடன் என்ற பெயரில் கந்துவட்டி கலாச்சாரம் பெருகி வருகிறது. மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு அவர்கள் எத்தகைய தொழில் தொடங்கவுள்ளார்கள் என்பதை அறிந்து, பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டு தான் நுண்கடன் வழங்கப்படுகிறது. இந்தக் கடனுக்கு மிகக்குறைந்த வட்டி வசூலிக்கப் படுகிறது. வங்கிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மேற்பார்வையில் தான் இந்த குழுக்கள் செயல்படுகின்றன என்பதால், இவர்களுக்கு அதிக சிரமம் இன்றி கடன் கிடைக்கிறது.

ஆனால், மகளிர் குழுக்களில் இல்லாத பெண்களுக்கு குடும்ப விசேஷங்கள், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்காக பணம் தேவைப்படும் போது, அதை பெறுவதற்கு முறை சார்ந்த வாய்ப்புகள் எதுவும் இல்லை. இத்தகைய பெண்களைத் தான் நுண்கடன் நிதி நிறுவனம் நடத்தும் தனிநபர்கள் தங்களின் கந்துவட்டிப் பசிக்கு இரையாக்கிக் கொள்கின்றனர். பணம் தேவைப்படும் 10 பெண்களை அழைத்து, அவர்களைக் கொண்டு ஒரு குழுவை ஏற்படுத்தி, அவர்களுக்கு பெரிய அளவில் எந்த ஆவணங்களும் இல்லாமல், சில வெற்றுப் பத்திரங்களில் மட்டும் கையெழுத்து வாங்கிக் கொண்டு கடன் வழங்குகின்றனர். இந்த பணத்தை சிறு தவணைகளாக ஓராண்டுக்கு செலுத்தலாம் என்றாலும் கூட, அதற்காக வசூலிக்கப்படும் வட்டி இமாலயத்துக்கு இணையானதாகும்.

ஒரு குழுவில் 10 உறுப்பினர்கள் இருந்தால், ஒவ்வொருவருக்கும் தலா ரூ.20 ஆயிரம் கடனாக வழங்கப்படும். இந்தக் கடன் மற்றும் வட்டியை அவர்கள் 52 வாரங்களுக்கு தலா ரூ.625 வீதம் செலுத்தி அடைக்க வேண்டும். இந்த வகையில் பார்த்தால் 52 வாரங்களில் அவர்கள் ரூ.32,500 செலுத்தியிருப்பார்கள். நேரடியாகப் பார்த்தால் இது ஆண்டுக்கு 62.50% வட்டி போலத் தோன்றும். ஆனால், தவணை முறையில் பணம் செலுத்தப்படுவதை கணக்கில் கொண்டு பார்த்தால் மொத்த வட்டியின் அளவு 75 விழுக்காட்டைத் தாண்டும். வங்கிகளில் செய்யப்படும் வைப்பீடுகளுக்கு ஆண்டுக்கு 7% மட்டுமே வட்டியாகத் தரப்படும் நிலையில், அதைவிட சுமார் 10 மடங்கு தொகை வட்டியாக வசூலிக்கப்படுவது பகல் கொள்ளையை விட மிகவும் மோசமான குற்றம் ஆகும்.

இதைவிட கொடுமையானது என்னவென்றால், குழுவில் உள்ள ஒருவர் தவணையை செலுத்தத் தவறினால், அதற்கு குழுவில் உள்ள மற்ற பெண்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். வாரத்திற்கு ரூ.625 தவணை செலுத்த வேண்டும் என்றால், ஒரு நாளைக்கு ரூ.100 வீதம் சேமித்து வைக்க வேண்டும். கிராமப்புற ஏழை மக்களால் தினமும் ரூ.100 சேமிப்பது என்பது சாத்தியமற்றதாகும். இதனால் ஒரு கடனை அடைக்க இன்னொரு கடன் வாங்கும் பெண்கள், ஒரு கட்டத்தில் கடன் வலையில் இருந்து மீள முடியாமல் சிக்கிக் கொள்கின்றனர். அது அவர்களை இறுக்கத் தொடங்குகிறது.

கடன் தவணையை ஒரு பெண் செலுத்தவில்லை என்றால் அதனால் ஏற்படும் கூடுதல் சுமையை மற்ற உறுப்பினர்கள் தான் சுமக்க வேண்டும் என்பதால், அவர்கள் சம்பந்தப்பட்டவரை வசவுகளால் அவமானப்படுத்துகின்றனர். அதுமட்டுமின்றி, கடன் கொடுத்தவர்களும் சுடுசொற்களை வீசுவதுடன், சொத்துப் பறிப்பு, பாலியல் அத்துமீறல் போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இவற்றைத் தாங்க முடியாத பெண்களும், அவர்களின் கணவர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் தற்கொலை செய்து கொள்கின்றனர். இத்தகைய கந்துவட்டி தற்கொலைகள் நிற்காமல் நீடித்துக் கொண்டிருக்கின்றன.

இந்த கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டியது மத்திய மாநில அரசுகளின் கடமையாகும். முதல் கட்டமாக, சிறுதொழில் தொடங்கவும், பிற தேவைகளுக்காகவும் ஏழைப்பெண்களுக்கு கடுமையான நிபந்தனைகள் இல்லாமல் ரூ.50 ஆயிரம் வரை கடன் வழங்கவும், அந்த தொகையை தினசரி தவணையாக வசூலிக்கவும் பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும். இத்தகைய நவீன கந்துவட்டியின் தீமைகள் குறித்து ஏழைப் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவற்றுக்கெல்லாம் மேலாக கந்து வட்டி கும்பல்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் அவர் அதில் கூறியுள்ளார்.

61 வயது பிரபல பாடகியின் 26 வயது காதலன்!

0

61 வயது பிரபல பாடகியின் 26 வயது காதலன்!

உலகெங்கும் புகழ் பெற்ற பாடகி, நடிகை மற்றும் தொழிலதிபர் மடோனா தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இவருக்கு ஏற்கனவே இயக்குனர் கை ரிட்சி, கியூபா தடகள வீரர் கார்லோஸ், பிரஹிம் ஜலிபாட், திமோர் ஸ்டெஃபென்ஸ், மாடல் கெவின் சம்பாயோ உள்பட பல காதலர்கள் உண்டு.

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு காதலருடன் சுற்றிக்கொண்டிருந்த மடோனா தற்போது 26 வயது வில்லியம்ஸ் என்றா இளைஞர் ஒருவரை தனது காதலராக ஏற்றுக் கொண்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தனது 23 வயது மகளை பார்க்க சென்ற போது வில்லியம்ஸ் என்ற இளைஞரை அழைத்துச் சென்றதாகவும் அவர் தான் மடோனாவின் புதிய காதலர் என்றும் கூறப்படுகிறது.

தன்னுடைய வயதில் பாதி கூட இல்லாத இளைஞர் ஒருவரிடம் மடோனா சுற்றிக் கொண்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் மடோனாவின் சுற்றுப் பயண ஏற்பாடுகளை கவனித்து வந்த வில்லியம்ஸ், பின்னர் அவரோடு மிகவும் நெருக்கமாகி தற்போது காதலர் அந்தஸ்தைப் பெற்று விட்டதாக கூறப்படுகிறது. மடோனாவிற்கு ஏற்கனவே ஒரு மகள் உள்ளார். அதுபோக அவர் நான்கு குழந்தைகளை தத்தெடுத்து வரும் நிலையில் தற்போது இளம் வயது வாலிபர் ஒருவரிடம் சுற்றிக் கொண்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது

சிசிடிவி கேமராவும் ஹேக் செய்யப்படுகிறதா? அதிர்ச்சி தகவல்

0

சிசிடிவி கேமராவும் ஹேக் செய்யப்படுகிறதா? அதிர்ச்சி தகவல்

பாதுகாப்பை காரணம் காட்டி ஒவ்வொரு வீட்டிலும் சிசிடிவி கேமராக்கள் வைக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி வரும் நிலையில் சிசிடிவி கேமராக்களையும் ஹேக்கர்கள் ஹேக் செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அமெரிக்காவில் உள்ள ஆஷ்லி லிமே என்ற பெண் இரவு நேரத்தில் வேலைக்கு செல்ல இருப்பதால் அவரது 8 வயது மகளை தனியாக வீட்டில் விட்டு சென்றுள்ளார். இதனால் அவர் குழந்தையை கண்காணிக்க சிசிடிவி கேமரா ஏற்பாடு செய்து அதன் மூலம் அவர் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போதே குழந்தையையும் கண்காணித்துள்ளார்.

இந்த நிலையில் திடீரென சிசிடிவி கேமராவை மர்ம நபர் ஒருவர் ஹேக் செய்து குழந்தையுடன் பேசி உள்ளதாகவும் அது மட்டுமின்றி குழந்தையின் ஒவ்வொரு நடத்தையையும் ஹேக்கர் கண்காணித்து இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

சிசிடிவி கேமரா மூலம் பொருள் மர்ம நபர் பேசியதாக ஆஷ்லி லிமேயின் மகள் கூறியதும் அதிர்ச்சி அடைந்த அவர் கேமராவில் பதிவான வீடியோக்களை பார்த்தபோது அது உண்மை என தெரிய வந்தது.

இதனை அடுத்து சிசிடிவி கேமரா வாங்கிய நிறுவனத்திடம் அவர் புகார் கொடுத்துள்ளார். வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு தங்களுக்கு மிகவும் முக்கியம் என்றும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த கேமரா நிறுவனம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பிற்காக வைக்கப்பட்ட கேமராவே ஆபத்தாகி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பள்ளி மாணவன் பிறப்புறுப்பை பிடித்து கொடுமைப்படுத்திய பெண் ஆசிரியர்கள் மீது போக்சோ பாய்ந்தது! கோவையில் அதிர்ச்சி சம்பவம்

0

பள்ளி மாணவன் பிறப்புறுப்பை பிடித்து கொடுமைப்படுத்திய பெண் ஆசிரியர்கள் மீது போக்சோ பாய்ந்தது! கோவையில் அதிர்ச்சி சம்பவம்

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் பீகாரைச் சேர்ந்த மாணவர் ஒருவர் வகுப்பறையில் அதிகம் குறும்புத்தனம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் பள்ளிக்கு செல்போன் எடுத்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர்கள் மாணவரை தண்டிக்க முடிவெடுத்துள்ளனர்.

அதன்படி வகுப்பறையின் கதவைப் பூட்டிவிட்டு பள்ளி முதல்வர் உட்பட 4 ஆசிரியர்கள் இணைந்து மாணவரின் பிறப்புறுப்பை பிடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தன்னை நிர்வாணப்படுத்தி துன்புறுத்தியதுடன் அதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து விடுவதாக மிரட்டுவதாகவும் மாணவர் புகார் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், மாணவர் கொடுத்த புகாரின் பெயரில் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் 4 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி முதல்வர் மேகநாதன், ஆசிரியைகள் திவ்யா, தமிழரசி, அருணா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிசம்பர் 27ல் ரிலீஸ் ஆகும் தனுஷின் அடுத்த படம்!

0

டிசம்பர் 27ல் ரிலீஸ் ஆகும் தனுஷின் அடுத்த படம்!

கவுதம் மேனன் இயக்கத்தில் தயாராகிய ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ என்ற திரைப்படம் சமீபத்தில் தமிழகம் முழுவதும் வெளியாகியது. இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தபோதிலும், படம் எதிர்பார்த்த அளவு ரசிகர்களை கவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் வாய்ஸ் ஓவர் மிக அதிகமாக இருந்ததாகவும் படத்தின் காட்சிகள் பல பார்வையாளர்களுக்கு புரியவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது. இதனை அடுத்து இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு ரூ 8 கோடி நஷ்டம் என்ற செய்தி கோலிவுட்டில் பரவி வருகிறது.

டிசம்பர் 27ல் ரிலீஸ் ஆகும் தனுஷின் அடுத்த படம்!

இந்த நிலையில் இந்த படத்தின் தெலுங்கு டப்பிங் வரும் 27ஆம் தேதி ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் வெளியாக உள்ளது. தெலுங்கில் காதல் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பதும் கௌதம் மேனனின் முந்தைய படங்கள் தெலுங்கில் நல்ல வெற்றியைப் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ’எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம்’ தெலுங்கில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘தோட்டா’ என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகும் இந்த படம் தெலுங்கு மாநிலங்களில் வெற்றி பெற்றால் தயாரிப்பாளரின் நஷ்டம் ஈடு கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தயாரிப்பாளரின் நஷ்டத்தை தனுஷின் தெலுங்கு ரசிகர்கள் குறைப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, சசிகுமார், ராணா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘மறுவார்த்தை’ உள்பட அனைத்து பாடல்களும் தமிழை போலவே தெலுங்கிலும் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று வெளியாகிறது ரஜினியின் தர்பார் !!!

0

ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே எதிர்பார்த்திருந்த கனவு கூட்டணி ரஜினி – முருகதாஸ். இந்த மெகா கூட்டணியின் அதிரடியான அட்டாக் தான் “தர்பார்”.

தலைவர்167 என்ற தற்காலிக பெயருடன் கடந்த ஏப்ரல் மாதம் மும்பையில் துவங்கியது தர்பார் திரைப்படத்தின் படப்பிடிப்பு.ஏப்ரல் 9’ம் தேதி பர்ஸ்ட்  லுக் போஸ்டரை வெளியிட்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார் முருகதாஸ். தொடர்ந்து பல கட்டங்களாக இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றது.

நவம்பர் 7’ம் தேதி இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது, இந்த மோஷன் போஸ்டர்’ரை தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி ஆகிய மொழிகளில் முறையே கமல்ஹாசன், மகேஷ்பாபு, மோகன்லால் சல்மான்கான் வெளியிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றனர்.. அத்துடன் அனிருத் இசையில் வெளியான “தலைவர் தீம்”  ரஜினி ரசிகர்களின் ரிங் டோனாகவும் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்சாகவும் களைகட்டியது. நவம்பர் 27’ம் தேதி “சும்மா கிழி” சிங்கிள் ட்ராக் வெளியாகி ரசிகர்களை அதிர வைத்தது.

தர்பார் கொண்டாட்டத்தின் முத்தாய்ப்பாக அமைந்ததுதான் ஆடியோ லான்ச், டிசம்பர் 7’ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அரங்கேறியது பிரம்மாண்ட நிகழ்ச்சி.

ரஜினி – முருகதாஸ் கூட்டணி இன்றைய தினம் ரசிகர்களுக்கு வைக்க போகும் மெகா ட்ரீட், ட்ரைலர் வெளியீடு. இன்று(திங்கள்) மாலை 6.30க்கு வெளியாகவுள்ளது “தர்பார் ட்ரைலர்”

வரும் ஜனவரி 10ம் தேதி வெளியாகிறது ரஜினியின் “தர்பார்”.

களத்தில் மாணவர்கள் !!! சிக்கலில் குடியுரிமை திருத்த சட்ட மசோதா ???

0

கடந்த சில தினங்களாகவே இந்தியாவின் தலைப்பு செய்தாக இருப்பது குடியுரிமை சட்ட திருத்த மசோதா. இந்திய அரசின் இரு நாடாளுமன்ற அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

குடியுரிமை திருத்த மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததையடுத்து சட்டமாகியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், சமண மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.ஆனால், முஸ்லிம்களுக்கு இந்தச் சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை

இந்த சட்டத்தால் வடகிழக்கு மாநிலங்களில் வசிக்கும் மக்கள் தங்களின் அடையாளம், கலாச்சாரம், பாரம்பரியத்தை இழந்துவிடுவோம், எனக் கூறி போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக, டெல்லியில் மதுரா சாலையில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, டெல்லி போக்குவரத்து கழகத்தின் பேருந்துகளை ஒரு கும்பல் தீவைத்து கொளுத்தியது. போலீஸ் வாகனங்களும் எரிக்கப்பட்டன. தீயை அணைக்க வந்த தீயணைப்பு வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில், ஒரு தீயணைப்பு வாகனம் சேதம் அடைந்தது. இதில்  போலீஸ் காரர்களும் காயம் அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். இதில் பலர் பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.அமைதியாக போராட்டம் நடத்திய தங்கள் மீது போலீசார் தடியடி நடத்தி, வன்முறைக்கு வித்திட்டதாக மாணவர்கள் குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், “டெல்லியில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுமாறு துணைநிலை ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளேன். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர எங்களால் முடிந்த  அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். போராட்டக்காரர்கள் அமைதி காக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்

இதெல்லாம் ஒரு படமா? எஸ்ஏ சந்திரசேகரருக்கு கண்டனம் தெரிவிக்கும் விஜய் ரசிகர்கள்

0

இதெல்லாம் ஒரு படமா? எஸ்ஏ சந்திரசேகரருக்கு கண்டனம் தெரிவிக்கும் விஜய் ரசிகர்கள்

எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய் நடித்த கேப்மாரி என்ற திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி தற்போது திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்த படத்திற்கு பெரும்பாலான விமர்சகர்கள் மற்றும் ஊடகங்கள், சமூக வலைதள பயனாளர்கள் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்

ரயிலில் பயணம் செய்யும் ஒரு ஆணும் பெண்ணும் மது அருந்துவதும் போதையில் இருவரும் தவறு செய்வதுமான காட்சிகளும், அதேபோல் சாலையில் வண்டி ரிப்பேர் ஆகி நிற்கும் பெண்ணுக்கு உதவும் ஒரு வாலிபன் அந்தப் பெண்ணை வீட்டில் கொண்டு போய் விட்டு விடுவதை அடுத்து இருவரும் போதையில் தவறு செய்வதுமான காட்சிகளும் இந்த படத்தில் இருப்பதாக விமர்சகர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பாலியல் குற்றங்கள் அதிகமாகி வரும் நிலையில் , பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையில் இப்படி ஒரு படத்தை எஸ் ஏ சந்திரசேகர் போன்ற தரமான படங்களை இயக்கிய இயக்குனரிடம் இருந்து யாரும் எதிர்பார்க்கவில்லை என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

மேலும் தளபதி விஜய்யின் ரசிகர்கள் விஜய்யின் அப்பா இயக்கிய படம் என்பதால் இந்த படத்தை பார்த்து ஏமாந்துதாகவும் விஜய்யின் அப்பாவிடம் இருந்து இப்படி ஒரு படத்தை தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும் ’இதெல்லாம் ஒரு படமா’ என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் தமிழக திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் ஸ்ரீதரன் என்பவர் இப்படி ஒரு மோசமான படத்தை எடுத்த எஸ்.ஏ.சந்திரசேகர் மீது தாராளமாக போக்சோ சட்டத்தில் கைது செய்யலாம் என்றும் இது மாதிரி படத்தை எல்லாம் சென்சார் அதிகாரிகள் எப்படி அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை என்றும் கருத்து கூறியுள்ளார். மொத்தத்தில் கேப்மாரி திரைப்படம் கடும் கண்டனங்களை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது