Home Blog Page 5844

ஜெயலலிதா அறிவித்த திட்டத்தை நிறைவேற்ற நினைவுபடுத்தும் மருத்துவர் ராமதாஸ்

0

ஜெயலலிதா அறிவித்த திட்டத்தை நிறைவேற்ற நினைவுபடுத்தும் மருத்துவர் ராமதாஸ்

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்காக ஆந்திரத்தில் நிறைவேற்றப்பட்டது போன்ற அம்சங்களைக் கொண்ட சிறப்புச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். அத்துடன் கடலூரில் கருவுற்ற பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த 4 மனித மிருகங்களுக்கு கடுமையான தண்டனையை விரைவாக பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் “பாலியல் குற்றங்களுக்கு தூக்கு தண்டனை: விரைந்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள்!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

ஆந்திராவில் பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை 21 நாட்களுக்குள் விசாரித்து தீர்ப்பளிக்கவும், பாலியல் குற்றங்களைச் செய்தவர்களுக்கு அதிகபட்சமாக தூக்குத் தண்டனை விதிக்கவும் வகை செய்யும் சட்ட முன்வரைவு ஆந்திர மாநில சட்டப்பேரபையில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டிருக்கிறது. பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கான புரட்சிகரமான நடவடிக்கை இது என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க முடியாது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ‘திஷா’ என்ற கால்நடை பெண் மருத்துவர் 4 மனித மிருகங்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, தீயிட்டு எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து கொண்டு வரப்பட்டுள்ள இச்சட்டத்திற்கு மறைந்த பெண்ணின் நினைவாக ‘‘ஆந்திரப் பிரதேச திஷா சட்டம் – குற்றவியல் சட்டத்தில் (ஆந்திரப்பிரதேச திருத்தச்) சட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் விசாரணையை விரைந்து முடித்து 7 வேலை நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும்; குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து 14 வேலை நாட்களில் நீதிமன்ற விசாரணை முடிக்கப்பட வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை வழங்க வசதியாக இந்திய தண்டனைச் சட்டத்தில் 9 புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. பெண்கள் மீதான பாலியல் சீண்டல்களுக்கான தண்டனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

ஹைதராபாத்தில் ‘திஷா’வை பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்களை அந்நகர காவல்துறை சுட்டுக் கொன்ற போது, அதற்கு காரணமான காவலர்களை தெலுங்கானா மக்கள் கொண்டாடினார்கள்; அவர்களுக்கு பரிசுகளும், பாராட்டுகளும் குவிந்தன. எவ்வளவு கொடூரமான குற்றங்களை செய்தவர்களாக இருந்தாலும் அவர்கள் நீதிமன்றத்தின் படிகளில் ஏற்றப்பட்டு, சட்டப்படி தான் தண்டிக்கப்பட வேண்டும் என்று அறிவு கூறினாலும், குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனை கிடைக்க பல ஆண்டுகள் ஆகலாம்; அவர்களுக்கு உடனடியாக தண்டனை வழங்கப்படுவது தான் சரி என்று உணர்வு கூறியதன் வெளிப்பாடு தான் அத்தகைய கொண்டாட்டங்கள் ஆகும். சட்டப்படி நீதி கிடைக்க நீண்ட நாட்களாகும் என்ற சலிப்பு மக்களிடையே ஏற்பட்டிருப்பது தான் இதற்கெல்லாம் காரணம் ஆகும். அதைப் போக்கும் வகையில் தான் ஆந்திரம் இச்சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இது தேவையான நேரத்தில், தேவையான நடவடிக்கையாகும்.

தமிழ்நாட்டிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கும், வன்கொடுமைகளுக்கும் நியாயமான காலத்தில் நீதி கிடைப்பதில்லை என்ற கொந்தளிப்பு மக்களிடம் நிலவுகிறது. பாலியல் வன்கொடுமைகளை திட்டமிட்டு நிகழ்த்துவோர் தண்டிக்கப்படாததால், மீண்டும், மீண்டும் இத்தகைய குற்றங்களைச் செய்கின்றனர். கடந்த இரு நாட்களுக்கு முன்பு கூட கடலூரில் திரைப்படத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த கருவுற்ற பெண்ணை, அவரது கணவனை தாக்கிவிட்டு கடத்திச் சென்ற 4 மனித மிருகங்கள், கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுபோன்ற குற்றங்களைச் செய்தவர்கள் உடனடியாக தண்டிக்கப்படாவிட்டால், அடுத்த சில வாரங்களில் பிணையில் வந்து இதேபோல் மேலும் பல பெண்களை சீரழிப்பார்கள். எனவே, பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகள் நியாயமான அவகாசத்தில் விசாரித்து முடிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்பது தான் நிலைப்பாடு ஆகும். அதற்காக மரணதண்டனை ஒழிப்பு மாநாட்டை பா.ம.க. நடத்தியுள்ளது. ஆனாலும், தில்லியில் நிர்பயா, தூத்துக்குடியில் 7-ஆம் வகுப்பு மாணவி ஆகியோர் 2012-ஆம் ஆண்டு திசம்பரில் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சூழலில் நிலைப்பாட்டை தளர்த்திக் கொண்டு, பாலியல் வன்கொடுமை செய்து கொல்லும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. பா.ம.க.வின் இந்த நிலைப்பாடு இப்போதும் தொடர்கிறது.

பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்காக 2013-ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி, அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட 13 அம்சத் திட்டத்தில் முதன்மையான அம்சம், பாலியல் வழக்குகளை விரைந்து விசாரிக்க மகளிர் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்பது தான். ஆனால், அதன்பின் 7 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், ஒரு சில மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் இன்று வரை சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படவில்லை. மேலும் பல மாவட்டங்களில் போக்சோ சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க இப்போது தான் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வேகம் போதுமானதல்ல.

எனவே, தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்காக ஆந்திரத்தில் நிறைவேற்றப்பட்டது போன்ற அம்சங்களைக் கொண்ட சிறப்புச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். அத்துடன் கடலூரில் கருவுற்ற பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த 4 மனித மிருகங்களுக்கு கடுமையான தண்டனையை விரைவாக பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

முதல் மனைவி இருக்கும் போதே இரண்டாம் திருமணம் செய்த மோசடி மன்னன்!

0

முதல் மனைவி இருக்கும் போதே இரண்டாம் திருமணம் செய்த மோசடி மன்னன்!

உத்தர பிரதேசம் மாநிலத்தின் சாமிலி மாவட்டத்தை சேர்ந்தவர் பங்கஜ் குமார் (வயது 30). இவருக்கு மஞ்சு என்ற மனைவி உள்ளார். மஞ்சுவுக்கு தெரியாமல் இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய பங்கஜ் குமார் தீர்மானித்தார்.


இதையடுத்து திட்சாரி என்ற கிராமத்தில் நேற்று பங்கஜ் குமாரின் இரண்டாவது திருமணவிழா நடைபெற்றது.


அப்போது தனது குடும்பத்தாருடன் அங்கு சென்ற சென்ற பங்கஜின் முதல் மனைவி மஞ்சு மணமேடையில் இருந்த பங்கஜ் குமாரை அடி வெளுத்து வாங்கினார். இதையடுத்து அங்கு இருந்தவர்கள் கலைந்து சென்றனர். பின்னர் மஞ்சுவின் குடும்பத்தினர் பங்கஜ் குமாரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.


பங்கஜ் குமாருக்கு எதிராக மீரட் நகர் காவல்நிலையத்தில் வரதட்சணை மற்றும் குடும்ப தகராறு தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளது என போலீசார் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

44 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான ஓவியங்கள் கண்டுபிடிப்பு!

0

44 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான ஓவியங்கள் கண்டுபிடிப்பு!

உலகிலேயே முத்த மொழி தமிழ் தான் என்றும் கீழடியில் 3000 மற்றும் 4000 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால பொருட்கள் கிடைத்து வருவதை நாம் பெருமையாக சொல்லி கொண்டிருக்கின்றோம்

இந்த நிலையில் 44 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஓவியம் ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியங்கள் இந்தோனேஷியாவில் உள்ள குகையில் கிடைத்துள்ளதால் அந்த குகையில் பழங்காலத்தில் மனிதர்கள் வாழ்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது

மனித வரலாற்றிலே மிகவும் பழமையானதாக கருதப்படும் ஓவியம் இந்த குகை ஓவியம் தான் என்று கூறப்படுகிறது. இந்தோனேஷியாவின் தெற்கு சுலாவெசியில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள இந்த குகை ஓவியம் 44 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த குகை ஓவியங்களை பழங்காலத்தில் குகையில் வாழ்ந்த மனிதர்கள் வரைந்து இருக்கலாம் என கருதப்படுகிறது. மனித உடல் பாகங்கள், விலங்குகளில் தலைகள், எருமை வேட்டை, பன்றி உள்ளிட்டவை இந்த ஓவியங்களில் இடம்பெற்றுள்ளதாகவும் இந்த ஓவியங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், அந்த குகையில் இன்னும் இதுபோன்ற குகைகள் இருக்கின்றதா? என்பதை அறிய தொல்பொருள் துறையில் இருந்து தனிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

ஒரே நேரத்தில் தெரிந்த 3 சூரியன்கள்: அதிர்ச்சியில் பொதுமக்கள்

0

ஒரே நேரத்தில் தெரிந்த 3 சூரியன்கள்: அதிர்ச்சியில் பொதுமக்கள்

அண்டத்தில் கோள்கள் எத்தனை இருந்தாலும், இன்னும் புதிது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டு வந்தாலும் சூரியன் என்பது ஒன்றுதான் என்பதே இன்று வரை உள்ள நிலவரம். இந்த நிலையில் சீனாவின் ஒரு பகுதியில் ஒரே நேரத்தில் மூன்று சூரியன்கள் தெரிந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சீனாவில் உள்ள ஜின்ஜியாங் என்ற மாகாணத்தில் உள்ள கோர்காஸ் என்ற நகரத்தில் நேற்று இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. சூரியன் உதித்த சில நிமிடங்களில் திடீரென இரண்டு சூரியன்கள் தெரிந்ததைக் கண்டு மக்கள் ஆச்சரியப்பட்ட நிலையில் அடுத்த சில மணி நேரத்தில் 3வது சூரியனும் வானில் தெரிந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து வானியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தப்போது சூரியனின் ஒளி ஈரப்பகுதியை ஊடுருவிச் செல்லும்போது வானில் இருக்கும் பனித்துகள்களின் மீது பட்டு பிரதிபலிப்பதாகவும், இதனால் தான் இரண்டு, மூன்று சூரியன்கள் போல் தெரிந்ததாகவும், அரிதாக இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படும் என்றும் ஆனால் ஒரே சூர்யன் தான் என்றும் விளக்கமளித்தனர். பனிப்பிரதேசத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் அவ்வப்போது நடக்கும் என்றும் ஆனால் ஜின்ஜியாங் போன்ர பனி குறைவான பகுதியில் நடப்பது இதுதான் முதல்முறை என்பதால் அந்த பகுதி மக்களுக்கு இதுவொரு அதிசய நிகழ்வாக தெரிந்துள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பாமக பிரமுகரை கொன்றவர்களை பற்றி துப்பு கொடுத்தால் 1 லட்சம் சன்மானம்! NIA

0

பாமக பிரமுகரை கொன்றவர்களை பற்றி துப்பு கொடுத்தால் 1 லட்சம் சன்மானம்! NIA

தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த பாமக பிரமுகர் இராமலிங்கம், கடந்த பிப்ரவரி மாதம் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டார். இஸ்லாம் மதமாற்ற முயற்சியை இராமலிங்கம் தட்டிக்கேட்டதால் கொலை நடைபெற்றதாக இந்து அமைப்புகளின் கடுமையான அழுத்தம் காரணமாக 11 நபர்களை திருவிடைமருதூர் போலீசார் கைதுசெய்தனர்.

பாமக பிரமுகரை கொன்றவர்களை பற்றி துப்பு கொடுத்தால் 1 லட்சம் சன்மானம்! NIA

இதனை தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம், வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில், கொச்சியை சேர்ந்த ஏ.எஸ்.பி. சவுகத் அலி தலைமையிலான குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

பாமக பிரமுகரை கொன்றவர்களை பற்றி துப்பு கொடுத்தால் 1 லட்சம் சன்மானம்! NIA

இந்நிலையில், இந்த வழக்கில் ரெஹ்மான் சாதிக், முகமது அலி ஜின்னா, அப்துல் மஜீத், புர்ஹாதீன், ஷாகுல் ஹமீது, நபீல் ஹாசன் ஆகிய 6 பேரை தேடப்படும் நபர்களாக என்.ஐ.ஏ அறிவித்துள்ளது. மேலும், அவர்களுக்கு எதிராக, கைது வாரண்ட் பிறப்பித்துள்ள என்.ஐ.ஏ அதிகாரிகள், இவர்கள் இருப்பிடம் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 1 லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மார்கழி மாதத்தில் இவ்வளவு நன்மைகளா?

0

மார்கழி மாதம் கடவுக்கான மாதமாகும். இறைவனை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கப்பட்டுள்ளதால் இம்மாதத்தில் எவ்வித மங்கள நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை.

மார்கழி மாதம் விரதம் இருந்து விஷ்ணுவை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்பைப் பெறுவர். திருமணத்தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொழிலில் நஷ்டம் நீங்கி லாபம் பெருகும். இந்த மாதத்தில் நோன்பு இருப்பது மிகவும் சிறந்தது. மார்கழியில் அதிகாலை எழுந்து, வீட்டை சுத்தம் செய்து, நீராடி, கோலமிட்டு, திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களைப் பாட வேண்டும்.

மார்கழி மாதங்களில் வீட்டு முன்பு கோலமிட்டால் மகாலட்சுமி வீடு தேடி வருவாள் என்பது நம்பிக்கை. இதனால் பெரும்பாலானோர் மார்கழியில் கோலமிடுகின்றனர். மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி வைகுண்ட ஏகாதசி என சிறப்புப் பெறுகின்றது. இந்த நாளில் விரதம் ஆரம்பித்துத் தொடர்ந்து வரும் விரத நாட்களிலும் (ஒவ்வொரு ஏகாதசியிலும்) விரதம் இருந்தால் நமக்குக் கிடைக்கும் பலன்கள் அளவிட முடியாது.

வைகுண்ட ஏகாதசியன்று விஷ்ணுவை நினைத்து விரதமிருக்க வேண்டும். துளசி தீர்த்தம் தவிர வேறு எதையும் உண்ணவும், பருகவும் கூடாது. இரவு முழுவதும் சோர்வில்லாமல் கண் விழித்து, பரந்தாமனைப் போற்றும் பக்திப் பாடல்களைப் பாடலாம். மறுநாள் துவாதசி அன்று விஷ்ணுவை வழிபட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

நிர்பயா குற்றவாளிகளுக்கு எப்போது தூக்கு?

0

நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தண்டனை மீண்டும் தள்ளிப்போகிறது டெல்லியில் 2012 ஆம் ஆண்டு நெருப்பை என்ற மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்ட அவர் உடன் சென்ற நண்பரும் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்த மாணவி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த டெல்லி போலீசார் இதில் தொடர்புடைய ராம்சிங்,முகேஷ்,வினய் அக்சய் ,பவன் மற்றும் ஒரு சிறுவனையும் கைது செய்தனர் அந்த சிறுவனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது மற்றொரு குற்றவாளி ராம் சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான் மற்ற நான்கு பேருக்கும் 2013ம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பை ஐகோர்ட்டும் சுப்ரீம் கோர்ட்டும் உறுதி அளித்தனர்.

குற்றவாளிகளில் ஒருவர் இன் கருணை மனு சில நாட்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது கருணை மனு நிராகரிக்கப்பட்ட 17 நாட்களில் குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவது என்பது விதியாகும் எனவே திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 பேரையும் தூக்கிலிட படலாம் என தகவல்கள் வெளியாகி நான்கு பேரும் 16ஆம் தேதி தூக்கிலிட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. இதனிடையே ஐதராபாத்தில் பெண் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொன்ற நால்வரையும் போலீசார் என்கவுண்டர் செய்தனர்.


என்கவுண்டர் செய்த போலீசாருக்கு அம்மாநில மக்கள் மிகுந்த பாராட்டுகளை தெரிவித்தனர். இதனால் நாடு முழுவதும் உள்ள பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்பது வலுத்தது எனவே நிர்பயா பாலியல் குற்றவாளிகளை தூக்கிலிட வதற்காக பீகாரில் இருந்து கயிறு ஆர்டர் கொடுக்கப்பட்டது. எனவே இம்மாதம் 16ஆம் தேதி அவர் தூக்கிலிடப்பட வார்கள் என்ற தகவல் கசிந்தது.

நிர்பயா குற்றவாளிகளுக்கு எப்போது தூக்கு?

இந்நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான அக்சய்குமார் சுப்ரீம் கோர்ட்டில் தனக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்த மனுவை 17ஆம் தேதி 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது இதனால் தூக்கு தண்டனை மீண்டும் தள்ளிப் போக வாய்ப்புள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக ரூ.70 கோடி போனஸ் தந்த நிறுவனம்: ஊழியர்கள் மகிழ்ச்சி!

0

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக ரூ.70 கோடி போனஸ் தந்த நிறுவனம்: ஊழியர்கள் மகிழ்ச்சி!

அமெரிக்காவில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் 200 ஊழியர்களுக்கு ரூபாய் 70 கோடி போனஸ் தொகை அளித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

அமெரிக்காவின் மேரிலேண்ட் என்ற பகுதியில் உள்ள செயின்ட் ஜான் ப்ராப்பர்ட்டீஸ் என்ற தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் மிகப்பெரிய அளவில் செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் முன்னணி நிறுவனங்களில் இந்த நிறுவனம் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் பணிபுரிந்ததால் இந்நிறுவனம் பெரும் வளர்ச்சி அடைந்தது.

இந்த நிலையில் தன்னுடைய நிறுவனத்தின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் ஊழியர்களுக்கு மிகப்பெரிய அளவில் போனஸ் கொடுக்க அந்நிறுவனத்தின் தலைவர் விரும்பினார். இதனையடுத்து தனது ஊழியர்கள் அனைவருக்கும் ஒரு விருந்தை ஏற்பாடு செய்தார்.

பிரம்மாண்டமாக நடந்த இந்த விருந்தின் இடையே அனைவருக்கும் சிவப்பு நிற உறைகள் ஒன்று கொடுக்கப்பட்டது. இந்த உறைகள் எதற்காக கொடுக்கப்படுகிறது என ஊழியர்கள் மிகவும் ஆச்சரியத்துடன் காத்திருந்த நிலையில் நிறுவனத்தின் தலைவர் ஊழியர்களைப் பார்த்து அந்த உறைகளை பிரித்து பாருங்கள் என்று கூறினார்.

இதனை அடுத்து பிரித்துப் பார்த்த ஊழியர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்தனர். ஏனெனில் அந்த உறையில் அவரவர் பணியின் தகுதிக்கேற்ப போனஸ் தொகை வழங்கப்பட்டு இருந்தது. 200 டாலர் முதல் இரண்டு லட்சத்து 70 ஆயிரம் டாலர் வரை ஊழியர்களுக்கு போனஸ் தொகை கொடுக்கப்பட்டதாகவும், மொத்தம் உள்ள 200 ஊழியர்களுக்கும் சேர்த்து இந்திய மதிப்பில் சுமார் 70 கோடிக்கு மேல் போனஸ் தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. ஒரே ஒரு நிறுவனம் ரூபாய் 70 கோடிக்கும் மேல் போனஸ் கொடுத்த செய்தி அமெரிக்காவில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மனைவிக்காக விலை உயர்ந்த காதணியை பரிசாகக் கொடுத்த பிரபல நடிகர்

0

மனைவிக்காக விலை உயர்ந்த காதணியை பரிசாகக் கொடுத்த பிரபல நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’2.0’என்ற படத்தில் வில்லனாகவும் பாலிவுட்டில் முன்னணி ஹீரோவாகவும் நடித்து வரும் அக்ஷய் குமார் தனது மனைவிக்காக விலையுயர்ந்த காதணி ஒன்றை பரிசாக அளித்துள்ளதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வருகிறது. அந்த காதலை என்னவெனில் வெங்காயத்தில் செய்யப்பட்ட காதணி என்பதுதான் அதன் சிறப்பு.

வெங்காயத்தின் விலை தற்போது விஷம் போல் ஏறி கொண்டிருக்கும் நிலையில் வெங்காயத்தை வைத்து பல்வேறு ஜோக்குகள், மீம்ஸ்கள் ஆகியவை வைரலாகி வருகிறது. திருமணத்திற்குக் கூட ஒரு கிலோ வெங்காயத்தை பரிசு கொடுக்கும் நிகழ்வுகளும் நடந்து வந்தன என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் வெங்காயத்தில் காதணி செய்து தனது மனைவிக்கு பரிசு கொடுத்தால் அதுதான் உலகிலேயே காஸ்ட்லியான காதணி ஆக இருக்கும் என நினைத்து அக்சய்குமார் வெங்காய காதணியை தனது மனைவிக்கு கேட்டு வாங்கி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அக்ஷய்குமார் மனைவியும் நடிகையுமான டிவிங்கிள் கன்னா தனது இன்ஸ்டாகிராம் கூறியதாவது: என் கணவர் எனக்காக இந்த வெங்காய காதணியை பரிசாக வாங்கி வந்துள்ளார். முதலில் கபில் சர்மா நிகழ்ச்சியில் கரீனாகபூருக்கு இதேபோல் ஒரு காதணி வழங்கப்பட்டது.

எனது கணவர் பெரிதும் விரும்பவில்லை என்றாலும் எனக்கு இந்த விஷயம் ரொம்ப பிடிக்கும் என நினைத்து அக்ஷய்குமார் எனக்காக வெங்காய காதணி வாங்கி வந்துள்ளார். சில நேரங்களில் சின்ன சின்ன விஷயங்கள் கூட உங்கள் மனதை கவரலாம்’ என்று கூறியுள்ளார். அக்ஷய் குமார் தனது மனைவிக்கு வெங்காய காதணி கொடுத்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் பரபரப்பாக பரவி வருகிறது.

குடும்ப கட்டுப்பாடு செய்த பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்?

0

செய்யாறு அருகே உள்ள புளியம்பாக்கம் காலனியை சேர்ந்தவர் அரவிந்தன். இவரது மனைவி வினித்ரா (வயது21). 2-வதாக கர்ப்பம் தரித்தார்.


பிரசவவலி ஏற்பட்டதால் செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆபரேசன் மூலம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இதைத் தொடர்ந்து அவர் குடும்பத்தார் கேட்டுக்கொண்டதன் பேரில் வினித்ராவுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது அவர் திடீரென இறந்து விட்டார். அங்கு பரபரப்பானது.

இதனால் அவரது உறவினர்கள் ஆத்திரமடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.

டாக்டர்கள் தவறான சிகிச்சை அளித்ததாக அவர்கள் கூறினர். இதனால் மேலும் பரபரப்பான சூழ்நிலை நீடிக்கவே செய்யாறு டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.