Home Blog Page 5852

நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்கு?

0

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த இளம்பெண் டாக்டரை 4 பேர் பலாத்காரம் செய்தனர். பின்னர் அந்த பெண்ணை கொன்று உடலை தீ வைத்து எரித்தனர். இந்த கொடூர கொலை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


பின்னர் விசாரணைக்காக அழைத்து சென்ற போலீஸ்காரர்களை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதால், அவர்கள் 4 பேரும் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதற்கு நாடு முழுவதும் பலர் ஆதரவு தெரிவித்தனர்.

இதையடுத்து பாலியல் வழக்கில் தொடர்புடையவர்களுக்கு இதேபோன்று உடனடியாக தண்டனை வழங்கப்பட வேண்டும் என குரல் எழுந்தது.

டெல்லியில் 2012-ம் ஆண்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட ‘நிர்பயா’ வழக்கு குற்றவாளிகள் உள்பட சிலரது மரண தண்டனை விரைவில் நிறைவேற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில் பல்வேறு மாநில சிறைத்துறை சார்பில், 10 தூக்கு கயிறுகளை வருகிற 14-ந் தேதிக்குள் தயாரித்து தரும்படி, பீகாரில் உள்ள பக்சர் சிறைக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்கு?


இந்தியாவில் உள்ள பல்வேறு சிறைகளில் மரண தண்டனை நிறைவேற்றும் வசதி இருந்தாலும், குறிப்பிட்ட சில சிறைகளில் மட்டுமே தூக்கு கயிறு தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக பீகார் மாநில பக்சர் சிறையிலேயே அதிகமாக இந்த கயிறுகள் தயாரிக்கப்படுகின்றன. இவ்வாறு தயாரிக்கப்படும் தூக்கு கயிற்றின் சிறப்பு அம்சம் என்னவென்றால் அதை உடனடியாக பயன்படுத்த வேண்டும்.நீண்ட நாட்களுக்கு பாதுகாப்பாக வைத்து இருந்து இதை பயன்படுத்த முடியாது.

கீர்த்தி சுரேஷை அடுத்து ’தலைவர் 168’ படத்தில் இணைந்த பிரபல நடிகை

0

கீர்த்தி சுரேஷை அடுத்து ’தலைவர் 168’ படத்தில் இணைந்த பிரபல நடிகை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த படமான ’தலைவர் 168’ படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார் என்பதை நேற்று பார்த்தோம். அவர் இந்த படத்தில் ரஜினியின் மகளாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல் நடிகர் பிரகாஷ்ராஜ் இந்த படத்தில் இணைந்து உள்ள செய்தியையும் நேற்று பார்த்தோம். பிரகாஷ்ராஜ் கேரக்டர் குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரகாஷ்ராஜ் மற்றும் கீர்த்தி சுரேஷ் இவர்களை அடுத்து தற்போது இந்த படத்தில் நடிகை மீனா இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகை மீனா, ரஜினிக்கு ஜோடியாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ரஜினிக்கு ஜோடியாக எஜமான், வீரா மற்றும் முத்து ஆகிய திரைப்படங்களில் மீனா நடித்துள்ளார் என்பதும் 24 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ரஜினிக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே தலைவர் 168 படத்தில் நடிகர் சூரி காமெடி வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுத்தை சிவா இயக்கத்தில், டி இமான் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

15 வருடங்களுக்கு பின் விஜய்யுடன் இணையும் நடிகர்!

0

15 வருடங்களுக்கு பின் விஜய்யுடன் இணையும் நடிகர்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியிலும் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் நடைபெற்ற நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஷிமோகா சிறைச்சாலையில் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் இன்னும் ஓரிரு நாளில் படக்குழுவினர் ஷிமோகா செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது

15 வருடங்களுக்கு பின் விஜய்யுடன் இணையும் நடிகர்!

இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே விஜய்சேதுபதி, மாளவிகா மேனன், சாந்தனு, ரம்யா, உள்பட பல நட்சத்திரங்கள் இணைந்துள்ள நிலையில் தற்போது புதியதாக இயக்குனரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் சகோதரர் நாகேந்திர பிரசாத் இந்த படத்தில் இணைந்துள்ளார். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு விஜய் நடித்த கில்லி படத்தில் விஜய்யுடன் நடித்து இருந்தார் என்பதும் அதன் பின்னர் 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் விஜய் படத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

விஜய், மாளவிகா மேனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிலோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். இந்த படம் வரும் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது

அடுத்த என்கவுன்டர் தமிழகத்திலா? அதுவும் விசிக நிர்வாகியா?

0

அடுத்த என்கவுன்டர் தமிழகத்திலா? அதுவும் விசிக நிர்வாகியா?

சமீபத்தில் தெலங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே 27 வயது கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவமானது நாடு முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் கண்டன குரல்கள் எழுந்த வண்ணமே இருந்தன.

இதனையடுத்து வழக்கு தொடர்ந்த காவல் துறையினர் சம்பவம் நடந்த பகுதியிலிருந்த சி.சி.டி.வி கேமரா மூலமாக குற்றவாளிகளை கண்டு பிடித்து கைது செய்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் இது பல நாட்களாக திட்டமிட்டு நடத்தப்பட்ட குற்ற சம்பவம் என்பது உறுதியானது. இதனையடுத்து இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களான ஆரிஃப். நவீன், சிவா, சென்னகேசவலு ஆகியோர் பெண் மருத்துவர் எரித்து கொல்லப்பட்ட அதே இடத்தில் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர்

இந்த என்கவுன்டர் மூலம் குற்றவாளிகள் கொல்லப்பட்டதால் உடனடி நீதி வழங்கப்பட்டிருப்பதாக சமூக ஊடகங்களில் பெரும்பாலான மக்கள் கொண்டடி வருகின்றனர். மக்களின் இந்த கொண்டாட்டத்தின் மூலமாக எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதை தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.

அதே நேரத்தில் இது போன்ற என்கவுன்டர் தீர்ப்புகள் தமிழகத்தில் நடைபெற்ற பெண்களுக்கெதிரான குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கும் கிடைக்குமா? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். வசதியான குடும்பத்தை சார்ந்தவர்களாக இருந்தாலோ? அரசியல் வாரிசாக இருந்தாலோ இது போல என்கவுன்டர் செய்வீர்களா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

When will Encounter VCK Party Person in Tamilnadu-News4 Tamil Latest Online Tamil News1
When will Encounter VCK Party Person in Tamilnadu-News4 Tamil Latest Online Tamil News1

குறிப்பாக பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை இப்படி செய்வீர்களா? என்றும் கேட்டு வருகின்றனர். மேலும் இதை போலவே கொடுமையான குற்றத்தை செய்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த விசிக பிரமுகரை என்ன செய்ய போகிறீர்கள் என்றும் கேள்வி வலுத்து வருகிறது.

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள செல்லியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தான் மோகன்ராஜ். இவர், இளம்பிள்ளை பகுதியில் விசிக சார்பில் இயங்கி வரும் ஆட்டோ ஓட்டுநர்கள் தொழிற்சங்கத்தில் முக்கிய பொறுப்பு வகித்து வந்துள்ளார். இதன் மூலமாக ஆட்டோவில் ஏறும் பெண்களிடம் பேச்சு தந்து, அவர்களுடைய போன் நம்பரை தந்திரமாக வாங்கி வைத்து கொண்டு, பிறகு மிரட்டி தன் ஆசைக்கு பணிய வைத்துள்ளார். இப்படியே அந்த பகுதியில் 40 க்கும் மேற்பட்ட பெண்களை மோகன்ராஜ் நாசம் செய்துள்ளார்.

When will Encounter VCK Party Person in Tamilnadu-News4 Tamil Latest Online Tamil News Today
When will Encounter VCK Party Person in Tamilnadu-News4 Tamil Latest Online Tamil News Today

இதனையடுத்து இவரை கைது செய்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில் கல்யாணம் ஆன பெண்கள் தவிர, பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவியும் இவரால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. தன்னிடம் சிக்கும் பெண்களை அவருடைய நண்பர்களுக்கும் விருந்தாக்கி உள்ளார் இந்த மோகன்ராஜ். மேலும் இவனுக்கு பயந்து ஒரு சில பெண்கள் ஊரை விட்டே போய்விட்டார்கள் என்பதும் அந்த பகுதியில் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், தான் பதவி வகிக்கும் விசிக கட்சி பெயரை சொல்லி தான் பல பெண்களை இவர் மிரட்டி இருக்கிறார் என்றும் விசாரணையில் தெரிய வந்தது.

தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பதவியில் இருக்கும் இவரை போன்ற ஆட்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டிருக்கும் நிலையில் ஹைதரபாத்தில் பெண் மருத்தவரை எரித்து கொன்ற குற்றவாளிகள் மீது நடத்தப்பட்ட என்கவுன்டர் போல இவர் மீதும் நடத்தப்படுமா? என்றும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

திருவண்ணாமலையில் இன்று அதிகாலை ஆலயத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

0

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் ஆலய கார்த்திகை தீபத்திருவிழா இன்று நடைபெறுகிறது.

நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கும் உலக புகழ்பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் ஆலயத்தில் நடைபெறும் கார்த்திகைy தீபத்திருவிழா இன்று நடைபெறுகிறது.

தீபத்திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனுக்கும், மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.இதை தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணிக்கு ஆலயத்தில் உள்ள சாமி சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

ஏகன் அனேகன் என்னும் தத்துவத்தை விளக்கும் வகையில் ஒரு மடக்கிலிருந்து 5 மடக்கிற்கு தீபம் ஏற்றப்பட்டு அதிலிருந்து ஒரு மடக்கில் பரணி தீபம் ஏற்றப்பட்டு சாமி கருவறை பிரகாரத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து பின்னர் அம்மன் சன்னதியிலும் தீபம் ஏற்றப்பட்டது.

பரணி தீபத்திருவிழாவில் மாநில இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் , மாவட்ட ஆட்சித்தலைவர் க.சு.கந்தசாமி உள்ளிட்ட பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பரணி தீபத்தை கண்டு வழிப்பட்டனர்.

இன்று மாலை ஆலயத்தில் உள்ள தீபதரிசன மண்டபத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருள அப்ழுபோது ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே ஒரு நிமிடம் காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் பக்தர்களுக்கு காட்சி தர மாலை 6 மணிக்கு 2668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை உச்சியின் மீது மகா தீபம் ஏற்றப்படும் .

பிக்பாஸ் 3 சீசன் போட்டியாளர்களுக்கும் அழைப்பு விடுத்த ரித்விகா! ஏன் தெரியுமா?

0

பிக்பாஸ் 3 சீசன் போட்டியாளர்களுக்கும் அழைப்பு விடுத்த ரித்விகா! ஏன் தெரியுமா?

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 சீசன்களில் கலந்துகொண்ட போட்டியாளர்களை குடும்பத்தோடு வருமாறு நடிகையும் பிக்பாஸ் சீசன் 1 வெற்றியாளருமான ரித்விகா அழைப்பு விடுத்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

நடிகை ரித்விகா நடித்த ’இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த திரைப்படத்திற்கு பத்திரிகையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தினேஷ் மற்றும் ரித்விகா நடிப்புக்கு பெரும் பாராட்டுக்கள் கிடைத்தது.

பிக்பாஸ் 3 சீசன் போட்டியாளர்களுக்கும் அழைப்பு விடுத்த ரித்விகா! ஏன் தெரியுமா?

இந்த நிலையில் சென்னையில் உள்ள ஒரு பிரிவியூ திரையரங்கில் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்த ரித்விகா, அந்த காட்சிக்கு முழுக்க முழுக்க பிக்பாஸ் சீசன் 3 சீசன்களில் கலந்துகொண்ட போட்டியாளர்களை குடும்பத்துடன் வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு பெரும்பாலான பிக்பாஸ் போட்டியாளர்கள் வருகை தந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மும்தாஜ், சேரன், ஆர்த்தி, ஜனனி ஐயர், சென்றாயன், ரம்யா, உள்பட பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3 சீசன்களின் போட்டியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்த காட்சியில் கலந்து கொண்டனர்.

தங்கம் வெள்ளி நிலவரம்?

0

தங்கத்தின் மீதான முதலீடு என்பது அளவில் நம்பிக்கையாகவும் பாதுகாப்பாகவும் கருதுகின்றனர்.
மேலும் சாமானிய மக்கள் முதல் மேல்தட்டு மக்கள் வரை தங்கத்தில் தான் முதலீடு செய்கின்றனர். உலக அளவில் தங்கத்தில் முதலீடு செய்வதில் இந்தியா முக்கிய பங்கில் உள்ளது.

எனவே நாள் தோறும் தங்க ஏற்ற இரக்கம் அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது.
அந்த வகையில் இன்றைய தங்கத்தின் விலை வருமாறு
ஆபரண தங்கம் 22 carat கிராம் ஒன்றுக்கு நேற்றைய விலையை விட 7 ரூபாய் குறைந்து 3605 ரூபாய் ஆகவும்
ஒரு பவுன் தங்கம் நேற்றைய விலையை விட 56 ரூபாய் குறைந்து பவுன் ஒன்றுக்கு 28840 ரூபாயாகவும் உள்ளது அதே போல் 24 கேரட் தூய தங்கத்தின் விலை1கிராம் 3785 ரூபாய் ஆகவும் 10 கிராம் தூய தங்கத்தின் விலை ரூபாய் 37850 ஆகவும் உள்ளது.

வெள்ளியின் விலையைபொறுத்தவரை நேற்றைய விலையில் மாற்றம் இல்லாமல் 1 கிராம்க்கு ரூபாய் 46.60 க்கும் 1கிலோ ரூபாய் 46600 க்கும் வர்த்தகம் செய்யப்பட்டது.

’தலைவர் 168’ படத்தில் இணைந்த அடுத்த பிரபலம்

0

’தலைவர் 168’ படத்தில் இணைந்த அடுத்த பிரபலம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படமான ’தலைவர் 168’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதை அடுத்து இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் அறிவிப்புகள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன

முதலில் இந்த படத்தில் சூரி நடிப்பதாகவும், அதன் பின்னர் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாகவும் வந்த தகவல்களை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தில் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் இணைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே ரஜினிகாந்த்-பிரகாஷ்ராஜ் ஆகிய இருவரும் ’படையப்பா’ என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

சிறுத்தை சிவா இயக்கத்தில், டி. இமான் இசையில், சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும், இந்த படம் வரும் 2020ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. சூரி, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ் ஆகியோர்களை அடுத்து இந்த படத்தில் நடிக்கும் அடுத்த நட்சத்திரம் யார் என்பதை அறிய அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்

இந்தியாவின் வளர்ச்சி 5 சதவீதத்தை தாண்டுவதே கடினம்: பிரபல ஆய்வு நிறுவனம் அறிவிப்பு

0

இந்தியாவின் வளர்ச்சி 5 சதவீதத்தை தாண்டுவதே கடினம்: பிரபல ஆய்வு நிறுவனம் அறிவிப்பு

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது நடப்பு நிதியாண்டில் 5 சதவீதத்தை விட குறைவாகவே இருக்கும் என்று ஆய்வு நிறுவனமான ‘ஐஎச்எஸ் மார்க்கிட்’ அறிவித்துள்ளது.

நிதித்துறையானது தொடர்ந்து நெருக்கடியில் இருக்கிறது. வங்கிகளில் அதிகரித்துவரும் வாராக் கடன்கள் காரணமாக, வங்கிகளானது மேலும் கடன் அளிப்பதில் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகின்றன. இதன் விளைவாக நிதி சுழற்சியானது குறைந்து விட்டது. இதனால் சிறு வர்த்தகர்கள், தொழில் முனைவோர்கள் கடுமையான சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். தொழில் முதலீடுகள் குறைந்து விட்டன. இது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் கடுமையான பின்னடைவை ஏற்படுத்துகிறது என்றும் அந்த ஆய்வு நிறுவனம் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவி வரும் நெருக்கடி நிலையை சமாளிக்கும் வகையில், தற்போதைய மத்திய அரசு பல்வேறு பொருளாதார மீட்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசு மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்த மேலும் சில காலம் ஆகும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

growth-of-india

முதலீடுகளை பெருக்குவதற்காக மத்திய அரசு நிறுவனங்களுக்கான நிறுவன வரியில் 10 சதவீதம் அளவிற்கு குறைத்துள்ளது. மேலும் அந்நிய முதலீடு சம்பந்தமான பல கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளது. அடுத்ததாக மத்திய ரிசர்வ் வங்கியும் மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்கும் நோக்கில் தொடர்ந்து 5 முறை ரெப்போ விகிதத்தை இந்த ஆண்டில் மட்டுமே குறைத்துள்ளது. ஆனால் இது போன்ற நடவடிக்கைகளின் தாக்கத்தை சில ஆண்டுகளுக்கு பிறகே தெரிந்து கொள்ள முடியும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் வளர்ச்சியானது கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 5 சதவீதமாக குறைந்ததுள்ளது. இந்நிலையில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது.

இவ்வாறு பல்வேறு திட்டங்களை அறிவித்திருந்தாலும் இந்தியாவின் பொருளாதார நிலையானது முன்பு இருந்ததை விட மோசமடைந்து இருப்பதாக மூடி’ஸ் நிறுவனம் தெரிவித்தது. இதனைத்தொடர்ந்து தொடர்ந்து ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாம் காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவான 4.5 சதவீதமாக குறைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் விவசாயத்துறையில் உற்பத்தி குறைந்தது, உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறையில் தற்போது ஏற்பட்டுள்ள சரிவு போன்றவை இந்த பொருளாதார சரிவுக்கு முக்கியமான காரணமாக கூறப்படுகிறது.

நாட்டின் 8 முக்கிய ஆதார தொழில்துறைகளின் உற்பத்தியானது 5.8 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும் ஆட்டோமொபைல் துறையானது கடுமையான சரிவை சந்தித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் அதன் உற்பத்தி அளவானது 25 சதவீதம் அளவில் சரிந்துள்ளது. இதனால் அந்த துறையில் வேலையிழப்பும் தொடர்ந்து அதிகரித்துள்ளது. இவை அனைத்தும் நாட்டின் வளர்ச்சியில் கடுமையான தாக்கத்தை செலுத்தும்.

நாட்டின் பொருளாதார நிலை இருக்கும் இந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சியானது 5 சதவீதத்தை கூட தாண்டுவது கடினம் என்று அந்நிறுவனம் ஆய்வில் தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் எடப்பாடியுடன் பாமக வழக்கறிஞர் கே பாலு சந்திப்பு! சட்ட அமைச்சர் சிவி சண்முகமும் வாழ்த்து

0

முதலமைச்சர் எடப்பாடியுடன் பாமக வழக்கறிஞர் கே பாலு சந்திப்பு! சட்ட அமைச்சர் சிவி சண்முகமும் வாழ்த்து

சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பதவிக்கான தேர்தலில் வழக்கறிஞர்
பி.எஸ்.அமல்ராஜ் வெற்றி பெற்றார். துணைத் தலைவராக வி.கார்த்திகேயனும், அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினராக எஸ்.பிரபாகரனும் வெற்றி பெற்றனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு 25 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த ஆண்டு மார்ச் 28-ஆம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 198 வழக்கறிஞர்கள் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் போட்டியிட்ட பி.எஸ்.அமல்ராஜ், ஆர்.சி.பால்கனகராஜ், எஸ்.பிரபாகரன், ஆர்.விடுதலை, பாமக கே.பாலு, ஜி.மோகனகிருஷ்ணன், வி.கார்த்திகேயன், எம்.வேல்முருகன், டி.செல்வம், ஆர்.சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட 25 பேர் பார் கவுன்சில் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்நிலையில் வெற்றி பெற்ற பார்கவுன்சில் உறுப்பினர்கள் அனைவரும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர், சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகமும் உடனிருந்தார். பாமக சமூக நீதி பேரவையின் தலைவர் வழக்கறிஞர் கே.பாலு அவர்களும் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆதரவோடு பார்கவுன்சில் தேர்தலில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.