Home Blog Page 5853

மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் சாதனை!

0

முப்பத்தி ஐந்தாவது முறையாக ஹாட்ரிக் கோல் அடித்து மெஸ்ஸி சாதனை

ஸ்பெயினில் கிளப் அணிகளுக்கான லா லிகா கால்பந்து போட்டி நடந்துவருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு ஆட்டத்தில் நட்சத்திர வீரர்களை உள்ளடக்கிய பார்சிலோனா அணி 5 -2 என்ற கோல் கணக்கில் ரியல் மாலோர்கோவை பந்தாடியது பார்சிலோனா வீரர் லூயிஸ் சுவாரஸ் 43 வது நிமிடத்தில் பின் வாக்கில் உதைத்த பந்து கோலாக மாறியது அதை பார்த்த ரசிகர்கள் பரவசத்தில் ஆர்ப்பரித்தனர்.

இதேபோல் பார்சிலோனா முன்னணி வீரர் லயனல் மெஸ்ஸி 17, 41, 83வது நிமிடத்தில் ஹாட்ரிக் கோல் அடித்தது இந்த ஆட்டத்தில் இன்னொரு சிறப்பம்சமாகும்.

இது அவர் எடுத்த 35 ஆவது ஹாட்ரிக் கோலாகும் இதன்மூலம் லா லீகா கால்பந்து வரலாற்றில் அதிக ஹாட்ரிக் அடித்தவர் என்ற சாதனையை படைத்தார்.

இந்த சாதனை பட்டியலில் போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்தவரும் ரியல்மாட்ரிட் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 34ஹாட்ரிக் உடன் அடுத்த இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

42 ஆண்டுகளாகியும் நடைமுறைக்கு வராத அரசாணை! தீவிரப்படுத்த மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள்

0

42 ஆண்டுகளாகியும் நடைமுறைக்கு வராத அரசாணை! தீவிரப்படுத்த மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள்

தமிழ்நாட்டில் உள்ள கடைகளின் பெயர்ப்பலகைகள் தமிழில் எழுதப்பட வேண்டும் என்ற அரசாணை 42 ஆண்டுகளாகியும் செயல்படுத்தப்படாதது வருத்தமளிக்கிறது என்றும்,இதை நடைமுறைபடுத்த அரசு முயற்சிக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் “தமிழில் பெயர்ப்பலகை: அரசாணையை 
மிகத்தீவிரமாக செயல்படுத்த வேண்டும்!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தமிழ் ஆட்சிமொழி சட்டம் உருவாக்கப்பட்டதை நினைவு கூறும் வகையில், தமிழ்நாட்டில் இம்மாதம் 21-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை தமிழ் ஆட்சி மொழி வாரம் கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது மகிழ்ச்சியளிக்கும் அதேநேரத்தில், கடைகளின் பெயர்ப்பலகைகள் தமிழில் எழுதப்பட வேண்டும் என்ற அரசாணை 42 ஆண்டுகளாகியும் செயல்படுத்தப்படாதது வருத்தமளிக்கிறது.

சென்னையிலிருந்து சில நாட்களுக்கு முன் தைலாபுரம் தோட்டத்திற்கு திரும்பிய நான், சாலையோரக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை பார்த்துக் கொண்டே வந்தேன். மொத்தம் 125 கி.மீ நீள பயணத்தில் ஒரு விழுக்காடு கடைகளில் கூட, விதிகளின்படி தமிழில் பெயர்ப்பலகைகள் எழுதப்படாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். தமிழ்நாட்டில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் தான் எழுதப்பட வேண்டும் என்ற நியாயமான எதிர்பார்ப்பு கூட நிறைவேற்றப் படவில்லை என்றால், ஆண்டுதோறும் தமிழ் ஆட்சி மொழி வாரத்தை கொண்டாடுவது அர்த்தமற்றது.

பெயர்ப்பலகைகள் தமிழில் எழுதப்பட வேண்டும் என்ற கோரிக்கை இன்றோ, நேற்றோ எழுந்ததில்லை. இந்தியா விடுதலை அடைந்த காலத்திலிருந்தே இக்கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. அதன்பயனாக 1977&ஆம் ஆண்டு தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்ற எம்.ஜி.ஆர், அடுத்த 50 நாட்களில், அதாவது ஆகஸ்ட் 8&ஆம் தேதி அனைத்து கடைகளின் பெயர்ப்பலகைகளும் தமிழில் தான் எழுதப்பட வேண்டும் என்பதை கட்டாயமாக்கும் வகையில், 1948-ஆம் ஆண்டு பெயர்ப்பலகைகள் தொடர்பாக இயற்றப்பட்ட சட்டத்தில் திருத்தம் செய்து, 575 எண் கொண்ட அரசாணையை பிறப்பிக்கச் செய்தார்.

அதன்பின்னர் 1983-84ஆம் ஆண்டில் 1541 என்ற எண் கொண்ட அரசாணையை எம்.ஜி.ஆர் அரசும், 1989-90 ஆம் ஆண்டில் 291 என்ற எண் கொண்ட அரசாணையை கலைஞர் அரசும் பிறப்பித்தன. இந்த 3 அரசாணைகளின் நோக்கமும் பெயர்ப்பலகைகள் தமிழில் எழுதப்பட வேண்டும் என்பது தான். ஆனால், இவற்றில் ஒன்று கூட செயல்படுத்தப்படவில்லை என்பது தான் வேதனையான உண்மையாகும்.

பெயர்ப்பலகைகள் குறித்து 1977-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை ஒவ்வொரு விஷயத்திலும் மிகவும் தெளிவாக உள்ளது. ‘‘எல்லா நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளும் தமிழில் எழுதப்பட வேண்டும்; பிறமொழிகள் பயன்படுத்த வேண்டும் என்றால், ஆங்கில வரிகள் இரண்டாம் இடத்திலும் ஏனைய மொழிகள் அதற்கு அடுத்தும் வர வேண்டும்; அத்தகைய சூழலில் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஏனைய மொழிகளுக்கான இடங்கள் 5 : 3 : 2 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, “ஹோட்டல்” என்ற ஆங்கிலச் சொல்லை “ஓட்டல்” என்று அப்படியே தமிழ்ப்படுத்தி எழுதாமல் “உணவகம்” என்று எழுத வேண்டும் என்றும் அரசாணையில் உறுதியாக கூறப்பட்டிருக்கிறது.

கடைகளின் பெயர்ப்பலகைகள் தமிழில் எழுதுவதை உறுதி செய்ய வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 25 ஆண்டுகளில் ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறது. முதன்முதலில் பிற மொழிகளில் எழுதப்பட்டுள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைககளை தார் பூசி அழிக்கும் போராட்டம் 28.4.1997 அன்று நடத்தப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்தது. ஆனால், அப்போதைய முதலமைச்சர் கலைஞர் அளித்த வாக்குறுதியை ஏற்று , அப்போராட்டம் 14.06.1997 அன்று நடத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து 2017-ஆம் ஆண்டு வரை தார்ப்பூசி அழிக்கும் போராட்டங்கள், வணிகர்களை சந்தித்து தமிழில் பெயர்ப்பலகைகளை எழுதுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மூன்றாவது மொழிப்போர் மாநாடு உள்ளிட்ட ஏராளமான இயக்கங்களை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தியுள்ளது. அதன்பயனாக குறிப்பிடத்தக்க அளவிலான கடைகளில் தமிழில் பெயர்ப்பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன என்ற போதிலும், அந்த எண்ணிக்கை மனநிறைவளிக்கும் வகையில் இல்லை.

ஆந்திரம், கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் அந்தந்த மாநில மொழிகளில் தான் எழுதப்பட்டு உள்ளன. அதைத் தான் அந்த மாநில மக்களும், வணிகர்களும் பெருமையாக கருதுகின்றனர். ஆனால், உலகின் மூத்த குடி, உலகின் மூத்த மொழி என்று பெருமை பேசிக் கொள்ளும் தமிழகத்திலோ தமிழைத் தவிர மற்ற மொழிகளில் கடைகளின் பெயர்ப்பலகைகள் காட்சியளிக்கின்றன. இது அவலம்.

தமிழில் பெயர்ப்பலகைகள் என்ற அடிப்படை எதிர்பார்ப்பு கூட இன்னும் நிறைவேறாததற்கு காரணம் இந்த விஷயத்தில் ஆட்சியாளர்கள் போதிய அக்கறை காட்டவில்லை என்பது தான். தமிழ்நாட்டில் தமிழில் பெயர்ப்பலகைகளை அமைப்பது தமிழன்னைக்கு நாம் செய்யும் தொண்டு ஆகும். அதைக்கூட செய்யாமல் நாமெல்லாம் தமிழர்கள் என்று கூறிக் கொள்வதிலோ, ‘‘எங்கும் தமிழ்…. எதிலும் தமிழ்’’ என்று முழக்கமிடுவதிலோ பயனில்லை. எனவே, பெயர்ப்பலகைகளில் தமிழ் என்பது தொடர்பான அரசாணைகளை நடைமுறைப்படுத்த தமிழக அரசு மிகத்தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார் படத்தில் இணைந்த கீர்த்தி சுரேஷ்: அதிகாரபூர்வ அறிவிப்பு

0

சூப்பர் ஸ்டார் படத்தில் இணைந்த கீர்த்தி சுரேஷ்: அதிகாரபூர்வ அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், டி இமான் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில், மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராக இருக்கும் திரைப்படம் ‘தலைவர் 168’.

இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் நாயகி குறித்த தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தலைவர் 168 படத்தின் நாயகியாக கீர்த்திசுரேஷ் நடிப்பார் என்றும், இருப்பினும் இவர் ரஜினிகாந்த் மகளாக நடிக்க இருப்பதாகவும், இவருடைய கேரக்டர் தான் படத்தின் மையப் புள்ளி என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா அல்லது குஷ்பு நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இதில் மீனாவுக்கு அதிக வாய்ப்பு என்றும் கூறப்படுகிறது.

இம்மாதம் படப்பிடிப்பு தொடங்கி வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இந்த படத்தை முடிக்க ‘தலைவர் 168’ படக்குழு திட்டமிட்டு உள்ளதாகவும் இந்தப்படம் 2020ம் ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

34 வயதில் பிரதமர் பதவி: உலகின் மிக இளைய பிரதமராகும் பெண்மணி

0

34 வயதில் பிரதமர் பதவி: உலகின் மிக இளைய பிரதமராகும் பெண்மணி

உலகின் மிக இளவயது பிரதமர் என்ற பெருமையை பின்லாந்து நாட்டின் அடுத்த பிரதமராக பதவி ஏற்க இருக்கும் சன்னா மெரின் என்ற பெண் பெறுகிறார்.

சமீபத்தில் பின்லாந்து நாட்டில் அஞ்சல் ஊழியர்களின் போராட்டம் வெடித்தது. இந்த மாபெரும் போராட்டத்தை அந்நாட்டின் பிரதமர் ஆண்டி ரயணி என்பவரால் கட்டுப்படுத்த முடியாத நிலையில் அவர் தனது பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.

இதனையடுத்து பின்லாந்து நாட்டின் அடுத்த பிரதமராக சன்னா மெரின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை ஐந்து கட்சிகள் பிரதமராக்க ஒப்புக் கொண்டுள்ளன. இதனையடுத்து சன்னா மெரின் அடுத்த வாரம் பிரதமர் பதவியை ஏற்க உள்ளார்.

இதற்கு முன்னர் பிரதமர் ஆண்ட்டி ரயணி அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தவர் சன்னா மெரின் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் பதவி ஏற்க இருக்கும் சன்னா மெரின் வயது 34 ஆண்டுகள் 23 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் உலகின் இளம் பிரதமராக இருந்தவர் உக்ரைன் நாட்டின் Oleksiy Honcharuk என்பவர் ஆவார். இவர் தனது 35வது வயதில் பிரதமர் பதவியை ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேச்சிப்பாறை அருகே கால்வாயில் பரிதாபம்!

0

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே மணியங்குடி அன்று முதல் இன்று வரை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் வயது 30 தேனீ வளர்க்கும் தொழிலான இவருடைய மனைவி மஞ்சு வயது 22 அமர்நாத் என்ற ஒரு வயது மகன் உள்ளார்.

நேற்று காலை அனிஷ் வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவதற்காக மனைவி மற்றும் மகனுடன் காரில் குலசேகரம்  சென்றார். காரை அனீஷ்  ஓட்டிச்சென்றார் கார் மதியம் 12 30 மணியளவில் மதுரை அருகே கால்வாய் கரையோரம் உள்ள சாலையில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது உடனே காரை அனீஷ்  கட்டுப்படுத்த முயன்றார்  ஆனால் எதிர்பாராதவிதமாக கால்வாயில் கார் கவிழ்ந்தது கால்வாயில் அதிகளவில் முற்றிலுமாக மூழ்கியது.

பேச்சிப்பாறை அருகே கால்வாயில் பரிதாபம்!

காரின் கண்ணாடி முழுவதும் மூடப்பட்டு இருந்ததால் உள்ளே இருந்தவர்கள் வெளியே வரமுடியாமல் சிக்கிக்கொண்டனர் மேலும் அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்ததால் உடனடியாக யாரும் உதவிக்கு வரவில்லை சிறிது நேரம் கடந்து அந்த வழியாக சென்றவர்கள் கால்வாயில் கார் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த உடனே கார் கண்ணாடிகளை உடைத்து உள்ளே இருந்த மூன்று பேரையும் மீட்டு வெளியே கொண்டுவந்தனர்.

அவர்களை ஆம்புலன்சில் ஏற்றி தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மூன்று பேரும் ஏற்கனவே இறந்ததாகத் தெரிவித்தனர் பின்னர் அவர்கள் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வட தமிழக பெண்களை மட்டுமே குறிவைப்பது ஏன்? பா ரஞ்சித் முகத்திரையை கிழித்த இயக்குனர் மோகன்

0

வட தமிழக பெண்களை மட்டுமே குறிவைப்பது ஏன்? பா ரஞ்சித் முகத்திரையை கிழித்த இயக்குனர் மோகன்

கடந்த 2012 ஆம் ஆண்டு வெளிவந்த அட்டகத்தி படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் தான் பா.ரஞ்சித். பின்னர் அவரது இயக்கத்தில் மெட்ராஸ்,கபாலி,காலா உள்ளிட்ட படங்கள் தமிழில் வெளியாகி உள்ளன. ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி மற்றும் காலா படத்திற்கு பிறகு தமிழ் திரையுலகில் பிரபலமாகினார்.

இந்நிலையில் தன்னுடைய தலித் சமுதாயம் சம்பந்தமான கருத்துக்களை அவருடைய படங்களில் தெரிவிக்க வசதியாக “நீலம் புரொடக்சன்” என்ற பெயரில் சொந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் ஆரம்பித்தார். இதன் மூலமாக தன்னுடைய கருத்துக்கு ஏற்றவாறும் தனக்கு கீழ் பணியாற்றியவர்களையும் இயக்குனராக அறிமுகம் செய்து வைத்துள்ளார். அந்த வகையில் தன்னுடன் பணியாற்றிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் பரியேறும் பெருமாள் என்ற படத்தை அவரது முதல் படமாக தயாரித்தார்.

இதனையடுத்து தற்போது அவருடைய அடுத்த தயாரிப்பாக இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு என்ற படம் தற்போது வெளியாகியுள்ளது. பா.ரஞ்சித்துடன் பணியாற்றிய அதியன் ஆதிரையின் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ்,ஆனந்தி,முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழ் திரையுலகில் ஓரளவு பிரபலமாகி வரும் இவருடைய படங்களில் தொடர்ந்து சாதிய கருத்துக்களை திணித்து வருகிறார் என்று குற்றசாட்டும் எழுந்து வருகிறது. இவர் இயக்கிய மற்றும் இவரது தயாரிப்பில் வெளிவந்த அனைத்து படங்களிலுமே தொடர்ந்து ஒரு சமுதாய மக்களை மிகவும் கொடுமை செய்பவர்கள் போலவும், அந்த சமுதாயத்தை சார்ந்த பெண்களை மட்டுமே காதலிப்பது போலவும், அவர்கள் காதலுக்கு எதிரானவர்கள் போலவும் கதை அமைத்து எடுத்து வருகிறார் என்றும் ஒரு சாரார் குற்றம் சாட்டி வருகின்றனர்.

குறிப்பாக பெண்களை விரட்டி விரட்டி காதல் செய்யும் “நாடக காதல்” கலாச்சாரத்தை இவரது படங்களில் ஊக்குவிப்பதாக விமர்சனம் செய்யப்படுகிறது.தமிழகத்தில் சமீபத்தில் நடந்த பெரும்பாலான பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு இது போன்ற விரட்டி விரட்டி செய்யப்படும் நாடக காதலே மூலக் காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தொடர்ந்து பா.ரஞ்சித் தற்போது வெளியான இந்த படத்திலும் அவ்வாறான கதையை திணித்துள்ளது பெரும்பாலான மக்களிடத்தில் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இவர் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட அதாவது வட தமிழகத்தில் வாழும் பெண்களை மையப்படுத்தியே படம் எடுத்து வருவதாக பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் இயக்குனர் மோகன் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து இயக்குனர் மோகன் தன்னுடைய ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது. “திருவள்ளூர், வடசென்னை, திருநெல்வேலி, விழுப்புரம் போன்ற ஊர்களில் எல்லாம் உள்ள சமூகங்களின் பெண்களை காதலிப்பது போல காட்டியாச்சி.. எப்ப சார் மயிலாப்பூர் பக்கம் மதுரை பக்கம் உள்ள சமூகத்தின் பெண்களை கதாநாயகியாக காட்டி காதல் பண்ணுவீங்க @beemji.. ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்..” என்றும் இயக்குனர் பா.ரஞ்சித்திடம் கேள்வியெழுப்பியுள்ளார்.

அவருடைய கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் பெரும்பாலான நபர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதில் இயக்குனர் மோகன் தெரிவித்துள்ள கருத்து சரியென்றே பெரும்பாலான நபர்கள் பதிவிட்டு வருகின்றனர். கலையாக பார்க்க வேண்டிய திரைப்படத்தின் மூலமாக தன்னுடைய சொந்த கருத்துக்களை திணிக்க முயல்கிறார் பா. ரஞ்சித் என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர். எடுக்கும் எல்லா படங்களிலும் தனக்கு பிடிக்காத ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களை தவறாக சித்தரித்து வருகிறார் என்றும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

யார் இந்த மோகன்? எதற்காக இதை விமர்சிக்கிறார்?

சமூக ஆர்வலரான இவர் யாருடைய தயவும் இல்லாமல் தன்னுடைய சொந்த முயற்சியால் பழைய வண்ணாரப்பேட்டை என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தன்னுடன் சார்ந்தவர்களுடன் இணைந்து தொடர்ந்து பல சமூக பணிகளை மேற்கொண்டு வருகிறார். இளைஞர்களின் எழுச்சி போராட்டமாக கருதப்படும் மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு விதை போட்டவரும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பா.ரஞ்சித் போன்ற இயக்குனர்கள் தமிழ் திரைப்படங்களில் பெண்களை சித்தரிக்கும் விதத்திற்கு மாறாகவும், இது போன்ற திரைப்படங்களால் தமிழக பெண்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பது பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திரௌபதி என்ற படத்தை இயக்கி வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய மோகன் தற்போது இயக்கி வரும் திரௌபதி என்ற திரைப்படத்தில் பெண்களுக்கெதிராக நடைபெறும் வன்கொடுமைகள் மற்றும் காதல் என்ற பெயரில் நடைபெறும் குற்றங்கள் குறித்தும் பேசப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் பிறந்து நான்கு நாட்களே ஆன குழந்தைக்கு முறையாக சிகிச்சை அளிக்காததால் குழந்தை உயிரிழப்பு

0

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் பிறந்து நான்கு நாட்களே ஆன குழந்தைக்கு முறையாக சிகிச்சை அளிக்காததால் குழந்தை உயிரிழப்பு

காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியில் சேர்ந்தவர் சரவணன் இவருடைய மனைவி கார்த்திகாவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை பெண் குழந்தை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் பிறந்தது. காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் கடந்த 4ங்கு நாட்களாக தாயும் சேயும் சிகிச்சை பெற்று வந்தனர். குழந்தை பிறந்ததிலிருந்து பால் குடிப்பதற்கு சற்று சிரமப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை 4 30 மணி அளவில் குழந்தைக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து அங்கு பணியில் இருந்த செவிலியர் சுதாவிடம் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது, மருத்துவரிடம் காட்ட வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் பணியிலிருந்த செவிலியர் சுதா இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் காலை பார்த்துக்கொள்ளலாம் என்று கூறி விட்டதாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத் தரப்பில் கேட்டபோது, உடனடியாக இது குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும், செவிலியர் மீது தவறு இருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் பிறந்து நான்கு நாட்களே ஆன குழந்தைக்கு முறையாக சிகிச்சை அளிக்காததால் குழந்தை உயிரிழப்பு

இந்நிலையில், நேரம் செல்ல செல்ல குழந்தையின் நிலைமை மிகவும் மோசமாகி கை ,கால்கள் அனைத்தும் செயலிழக்க தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து குழந்தையின் தாய் கார்த்திகா கூச்சலிட்டு உள்ளார். அதன் பின்னரே குழந்தைக்கு காலை 7 மணி அளவில் சிகிச்சை அளிக்க அவசர சிகிச்சை பிரிவிற்கு கொண்டு சென்றுள்ளனர். பலமணிநேரம் சிகிச்சை இல்லாமல் தவித்த குழந்தை அங்கு சிகிச்சை பலனின்றி 7 30 மணி அளவில் உயிரிழந்துள்ளது. இதனை அறிந்த பெற்றோர் கதறி அழுதது பார்ப்போர் நெஞ்சை பதைபதைக்க வைத்தது.

நலமாக உள்ளாரா…!பாடகி லதா மங்கேஷ்கர்?

0

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் 90 வயதான இவர் கடந்த மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர் இந்நிலையில் உடல்நலம் தேறியதையடுத்து நேற்று அவர் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் நான் 28 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தேன் எனக்கு நிமோனியா பாதிப்பு இருப்பது டாக்டர்களின் பரிசோதனையில் தெரியவந்தது டாக்டர்கள் முழுமையாக குணமடைந்து வீட்டுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர் கடவுளின் ஆசிர்வாதத்துடன் வீடு திரும்பி உள்ளேன் எனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் ரசிகப் பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என லதா மங்கேஷ்கர் தன் ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.

லதா மங்கேஷ்கர் சுமார் 20 க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடல் பாடியுள்ளார். இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா தாதாசாகேப் பால்கே உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திகை தீபத்தன்று கிரிவலம் செல்லலாமா?

0

பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கொண்டாடப் பட்டு வருகிறது இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை மாலை 6 மணிக்கு அருணாச்சலேஸ்வரர் கோவில் பின்புறமுள்ள 2668 அடி உயர உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

திருமாலுக்கும் பிரம்மனுக்கும் இடையே ஏற்பட்ட “தான்” என்ற அகந்தையை போக்க சிவபெருமான் திருவண்ணாமலையில் அடிமுடி காண முடியாத அக்னி பிழம்பாக காட்சி அளித்ததாக ஐதீகம் அந்த நாளே கார்த்திகை தீபத்திருவிழா திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.


பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீபத் திருவிழா நாட்களில் பல லட்சம் பக்தர்கள் அந்த மலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர் இந்த நிலையில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் சாமி சன்னதியில் ஆடியபடியே வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்.

கார்த்திகை தீபத்தன்று கிரிவலம் செல்லலாமா?

அர்த்தநாரீஸ்வரர் காட்சி தந்ததும் சரியாக மாலை 6 மணிக்கு சன்னதி முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படும் அதே நேரத்தில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.


மகா தீபம் ஏற்றப்பட்டதும் 14 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப்பாதையில் இருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலையை நோக்கி மகா தீபத்தை வணங்குவார்கள் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் பாதுகாப்பு பணிக்காக சுமார் 10,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் மகாதீபம் ஏற்றும் மலை உச்சியில் கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்படுகிறார்கள்.

பிட்ச் சரியில்லை…!போட்டி பாதிலேயே நிறுத்தம்?

0

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் முதல்-தர கிரிக்கெட் தொடர் ஷெஃப்பீல்டு ஷீல்டு. இந்தத் தொடரில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா – விக்டோரியா இடையிலான கிரிக்கெட் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

நான்கு நாட்கள் கொண்ட இந்த போட்டியில் விக்டோரியா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா முதலில் களம் இறங்கியது.

டிராப்-இன் ஆடுகளத்தில் (drop-in wicket) எதிர்பாராத விதமாக பவுன்சர் அதிக அளவில் இருந்தது. பனிப்பொழிவின் தாக்கத்தால் பந்து வெடிப்பான இடத்தில் பிட்ச் ஆகும்போது எதிர்பாரத விதமாக பவுன்சர் ஆகியது.

இதனால் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் பந்தை எதிர்கொள்ள பயந்தனர். விக்டோரியாவின் வேகப்பந்து வீச்சாளர் பீட்டர் சிடில் வீசிய பந்து ஷான் மார்ஷ் மற்றும் ஸ்டாய்னிஸ் ஆகியோரின் ஹெல்மேட்டை பதம் பார்த்தது.

இருவருக்கும் மூளையளர்ச்சி (concussion) பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால் இருவரும் தெளிவாக உள்ளனர் எனத் தெரியவந்தது. ஆனால் முதல் நாளில் வீரர்கள் விளையாட மறுத்ததால் முதல்நாள் ஆட்டம் 39.4 ஓவருடன் முடிவடைந்தது.
அதன்பின் பராமரிப்பாளர்கள் பந்து பவுன்ஸ் ஆகாத வகையில் ஆடுகளத்தை சரிசெய்ய முயற்சி மேற்கொண்டனர்.

அப்போது ஆடுகளம் விளையாடுவதற்கு உகந்ததாக இல்லை என போட்டியை ரத்து செய்தனர். சில ஆண்டுகளாகவே மெல்போர்ன் ஆடுகளம் தனது தனித்தன்மையை இழந்து வருகிறது.