Home Blog Page 5854

ஒரே இரவில் காரை உடைத்து கொண்டு மரம் வளர்ந்ததா? அதிர்ச்சி தகவல்

0

ஒரே இரவில் காரை உடைத்து கொண்டு மரம் வளர்ந்ததா? அதிர்ச்சி தகவல்

பிரான்ஸ் நாட்டின் நட்ச் என்ற இடத்தில் ஒரே இரவில் காரை உடைத்துக்கொண்டு மரம் வளர்ந்ததாக வெளிவந்துள்ள புகைப்படத்துடன் கூடிய செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரே இரவில் காரை உடைத்துக்கொண்டு எப்படி மரம் முளைக்கும் என்று சிலர் பகுத்தறிவுடன் கேள்வி கேட்ட போதிலும் இந்த புகைப்படத்தை பார்த்த பலர் கடவுள் சக்தியால் இவ்வாறு மரம் முளைக்க வாய்ப்பு இருப்பதாக கூறினார்.

எனவே இந்த புகைப்படம் மற்றும் இரு குறித்த வீடியோ இணையதளங்களில் பயங்கர வைரலானது. இதனையடுத்து இந்த காரை பார்க்க நட்ச் பகுதிக்கு பலர் சென்று அந்த காரை பார்த்து அதிசயத்தினர். இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டில் உள்ள கார் நிறுவனம் ஒன்று தங்கள் நிறுவனத்தின் புதிய கார் மாடலை அறிமுகம் செய்யும் விளம்பரத்திற்காக செய்த ஆர்ட் வேலை தான் இந்த காரில் இருந்து மரம் முளைத்த விவகாரம் என்பது பின்னர் தெரியவந்தது.

காரை உடைத்து கொண்டு உண்மையாகவே மரம் முளைத்தது போன்று தத்ரூபமாக ஆர்ட் கலைஞர்கள் செய்துள்ளது அதிலும் ஒரே இரவில் இந்த ஆர்ட் வேலையை செய்துள்ளது அந்த பகுதி மக்களை வியப்படைய செய்துள்ளது.

விஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் ‘அசுரன்’ பட நாயகி!

0

விஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் ‘அசுரன்’ பட நாயகி!

தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்து இருந்தார் என்பதும் இந்த படத்தில் அவரது நடிப்பு பெரும்பாலானவர்களால் பாராட்டப்பட்டது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றியை அடுத்து மஞ்சுவாரியருக்கு தமிழ் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் மஞ்சு வாரியர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் இந்த படம் ஒரு தமிழ்படம் இல்லை என்பதும் விஜய் சேதுபதி நடிக்கும் மலையாள படம் ஒன்றில் தான் அவருக்கு ஜோடியாக மஞ்சுவாரியார் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஷான் என்பவர் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. வரும் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.

விஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் ‘அசுரன்’ பட நாயகி!

ஏற்கனவே நடிகர் விஜய் சேதுபதி, ஜெயராம் நடித்த ’மார்கோனி மாத்தாய்’ என்ற மலையாள படத்தில் நடித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு மலையாள படத்தில் விஜய்சேதுபதி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அருண் விஜய்யின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்கள்

0

அருண் விஜய்யின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்கள்

நடிகர் அருண்விஜய் தற்போது மாபியா மற்றும் அக்னி சிறகுகள் ஆகிய இரண்டு படங்களில் நடித்து வரும் நிலையில் சமீபத்தில் அவர் ’ஈரம்’ இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அருண்விஜய்யின் 31 வது படமான இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

ஏற்கனவே அறிவழகன் இயக்கத்தில் அருண்விஜய் நடித்த ’குற்றம்23’ என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதையடுத்து தற்போது அறிவழகன்-அருண் விஜய் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர். இந்த படத்தில் அருண் விஜய் ஜோடியாக நடிக்க நடிகை ரெஜினா ஒப்பந்தமாகியுள்ளதாகவும், இரண்டாவது நாயகியாக நடிக்க ஸ்டெபி பட்டேல் என்பவர் நடிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம் சிஎஸ் இசையில் ராஜசேகர் ஒளிப்பதிவில் சாபு ஜோசப் படத்தொகுப்பில் உருவாகவிருக்கும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கும் பகவதி பெருமாள் நடிக்க உள்ளார். குற்றம்23 படம் போலவே இந்த படமும் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாக இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு டெல்லி ஹைதராபாத் சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற திட்டமிட்டு இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர் . ஆல் இன் ஆல் பிக்சர்ஸ் மற்றும் விஜய ராகவேந்திரா நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த படத்தை பிரமாண்டமாக தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

ரூ.85 லட்சத்திற்கு ஒரே ஒரு வாழைப்பழம் வாங்கிய அமெரிக்கர்.

0

ரூ.85 லட்சத்திற்கு ஒரே ஒரு வாழைப்பழம் வாங்கிய அமெரிக்கர்.

வெங்காய விலை ரூபாய் 100க்கு மேல் விற்பதையே நம் மக்கள் புலம்பிக் கொண்டு வரும் நிலையில் அமெரிக்காவில் உள்ள ஒருவர் ஒரே ஒரு வாழைப்பழத்தை ரூபாய் 85 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த மவுரிசியா என்பவர் வித்தியாசமான கலைப்பொருட்களை கண்காட்சியில் வைப்பதில் புகழ் பெற்றவர். இவர் ஏற்கனவே தங்க கழிவறை உள்ளிட்ட பல பொருட்களை கண்காட்சியில் வைத்து பொது மக்களிடையே பிரபலம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் உள்ள மியாமி என்ற பகுதியில் நடைபெற்று வரும் கண்காட்சியில் ஒரு நிஜ வாழைப்பழத்தை சுவரில் ஸ்டிக்கர் வைத்து ஓட்டியுள்ளார். அந்த வாழைப்பழத்தை பார்த்த பலர் அதன் முன் செல்பி மற்றூம் குரூப் புகைப்படம் எடுத்து வந்தனர்.

இதனால் இந்த வாழைப்பழம் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது. தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த வாழைப்பழத்தை வந்து பார்த்து விட்டுச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்த வாழைப்பழம் ஏலம் விட்டபோது இதனை இந்திய மதிப்பில் 85 லட்சம் ரூபாய்க்கு அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் என்பவர் ஏலம் எடுத்தார். அதுமட்டுமின்றி ஏலம் எடுத்த உடன் அந்த வாழைப்பழத்தை அவர் அங்கேயே உரித்து சாப்பிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை வாழைப்பழங்கள் பஜாரில் கிடைக்கும் நிலையில் இந்த அமெரிக்கர் ரூபாய் 85 லட்சம் கொடுத்து இந்த வாழைப்பழத்தை வாங்கி அதை உடனே சாப்பிட்டு உள்ளது நெட்டிசன்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா சொதப்பல் ஆட்டம்: 2வது டி20-யில் மே.இ.தீவுகள் அபார வெற்றி!

0

இந்தியா சொதப்பல் ஆட்டம்: 2வது டி20-யில் மே.இ.தீவுகள் அபார வெற்றி!

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் நிலையில் சமீபத்தில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் அந்த அணி தோல்வி அடைந்தது. ஆனால் நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் மே.இ.தீவுகள் அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றதால் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்ற நிலையில் தற்போது உள்ளன
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் மட்டுமே எடுத்தது. டுபே 54 ரன்களும், ரிஷப் பண்ட் 33 ரன்களும் எடுத்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் குறிப்பிட்டு சொல்லத்தக்க வகையில் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா சொதப்பல் ஆட்டம்: 2வது டி20-யில் மே.இ.தீவுகள் அபார வெற்றி!

இதனை அடுத்து 171 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 18.3 ஓவர்களில் 2 விக்கெட் உங்களை மட்டுமே இழந்து 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரரான சிம்மன்ஸ் கடைசி வரை அவுட் ஆகாமல் 45 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்.

அதேபோல் நேற்றைய போட்டியில் புதிதாக களமிறங்கிய பூரன் 18 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக சிம்மன்ஸ் தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த போட்டி வரும் 11ம் தேதி மும்பையில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

நிறுவனங்கள் அவதிப்பட்டு வரும் முக்கிய விவகாரத்தில் மத்திய அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் ஆலோசனை

0

நிறுவனங்கள் அவதிப்பட்டு வரும் முக்கிய விவகாரத்தில் மத்திய அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் ஆலோசனை

ஜி.எஸ்.டி வரி விதிப்பு மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் மேலும் ஜி.எஸ்.டி வரி விகிதங்களை மத்திய அரசு உயர்த்த திட்டமிட்டு வருவதை நிறுத்தி ஏற்கனவே உள்ள வரி விகிதங்களை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் “ஜி.எஸ்.டி வரி விகிதங்களை குறைக்க வேண்டுமே தவிர, உயர்த்தக்கூடாது!” என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.

மத்திய அரசின் வருவாயைப் பெருக்கும் நோக்குடன் ஜி.எஸ்.டி எனப்படும் பொருட்கள் மற்றும் சேவை வரி விகிதங்களை உயர்த்த ஜி.எஸ்.டி கவுன்சில் திட்டமிட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியை அளிக்கின்றன. பொருளாதார மந்த நிலையால் மக்கள் ஏற்கனவே அவதிப்பட்டு வரும் நிலையில், இந்த வரி உயர்வு அனைத்து தரப்பு மக்களையும் மிகக் கடுமையாக பாதிக்கும்.

இந்தியாவில் ஜி.எஸ்.டி வரி கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், தொடக்கம் முதல் நடப்பாண்டின் முதல் பாதிவரை ஜி.எஸ்.டி வரி வசூல் தொடர்ந்து அதிகரித்து வந்தது. கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் இதுவரை இல்லாத அளவாக ரூ.1.13 லட்சம் கோடியாக உயர்ந்த நிலையில், பொருளாதார மந்தநிலை காரணமாக கடந்த ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய மாதங்களில் ஜி.எஸ்.டி வசூல் ஒரு லட்சம் கோடிக்கும் கீழாக குறைந்து விட்டது. இதனால் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அதை சமாளிப்பதற்காகவே ஜி.எஸ்.டி வரி விகிதம் உயர்த்தப்படவுள்ளது.

ஜி.எஸ்.டி வரிவிகிதம் மொத்தம் 3 நிலைகளில் உயர்த்தப்படவுள்ளது. இப்போதைய நிலையில் பல்வேறு பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. மீதமுள்ள பொருட்களுக்கு 5%, 12%, 18%, 28% ஆகிய விகிதங்களில் ஜி.எஸ்.டி வசூலிக்கப்பட்டு வருகிறது. வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள பொருட்களில் சிலவற்றை வரி விதிப்பின் கீழ் கொண்டு வருவது; குறைந்தபட்ச வரியாக 5 விழுக்காட்டை 9-10% ஆக உயர்த்துவது, 12% வரி விகிதத்தை ஒழித்து விட்டு, அப்பிரிவில் உள்ள 243 பொருட்களை 18% பிரிவுக்கு கொண்டு செல்வது ஆகியவை தான் ஜி.எஸ்.டி குழுவின் உத்தேச வரி உயர்வு திட்டமாகும். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வரி வருவாய் எதிர்பார்த்ததை விட மிகவும் குறைவாகவே உள்ளது. ஜி.எஸ்.டி விதிகளின் படி மாநில அரசுகளுக்கு கிடைக்கும் ஜி.எஸ்.டி வருவாயின் வளர்ச்சி ஆண்டுக்கு 14 விழுக்காட்டுக்கும் குறைவாக இருந்தால் அதை ஈடுகட்டுவதற்காக ஜி.எஸ்.டி மீது கூடுதல் வரி வசூலிக்கப்படுகிறது. ஆனாலும், மாநில அரசுகளுக்கு இழப்பீடு வழங்க முடியாமல் மத்திய அரசு திணறிக் கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் ஜி.எஸ்.டி வசூலை அதிகரிக்க வேண்டியது தவிர்க்க முடியாதது ஆகும். ஆனால், அதற்கு ஆக்கப்பூர்வமாக பல்வேறு வழிகள் இருக்கும் நிலையில், ஜி.எஸ்.டி வரி விகிதங்களை உயர்த்தும் முடிவுக்கு மத்திய, மாநில அரசுகள் செல்வது ஏன்? என்பது பாட்டாளி மக்கள் கட்சியின் வினா ஆகும்.

ஜி.எஸ்.டி வரியை உயர்த்துவது என்பது பொன்முட்டையிடும் வாத்தை அறுப்பதற்கு சமமானதாகும். வரியை உயர்த்துவதால் மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுமானால் ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும். ஆனால், அதன் காரணமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஜி.எஸ்.டி குழுவின் உறுப்பினர்கள் எவரும் சிந்தித்ததாக தெரியவில்லை. உலக அளவில் ஜி.எஸ்.டி வரி விகிதம் அதிகமாக உள்ள நாடுகளில் இந்தியா முக்கியமானதாகும். நாட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் நசிவடைந்ததற்கு முக்கியக் காரணம் அதிக ஜி.எஸ்.டி வரிவிகிதம் தான் என்பதை அனைவரும் அறிவர்.

இந்தியாவில் ஜி.எஸ்.டி வரி அறிமுகம் செய்யப்பட்ட போது சராசரி வரிவிகிதம் 14.4% ஆக இருந்தது. பின்னர் வரி விகிதங்கள் குறைக்கப்பட்ட பிறகு சராசரி வரி விகிதம் 11.6% ஆக குறைந்தது. இப்போது திட்டமிடப்பட்டுள்ள வரி உயர்வு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டால் சராசரி வரி விகிதம் 20% ஆக உயரும். இது சிங்கப்பூர், மலேஷியா போன்ற நாடுகளில் வசூலிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியை விட மூன்று மடங்கு அதிகமாகும். ஜி.எஸ்.டி விகிதம் 11.6% ஆக இருந்த போதே பொருளாதார வளர்ச்சி குறைந்த நிலையில், ஜி.எஸ்.டி விகிதத்தை 20% ஆக உயர்த்திய பிறகு பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்ப்பது முரண்பாடுகளின் உச்சம் ஆகும். இது எந்த வகையிலும் வளர்ச்சிக்கு உதவாது.

பொருளாதார மந்தநிலை தென்படத் தொடங்கிய போது, அதை போக்குவதற்காக பெரு நிறுவனங்களின் வரியை 30 விழுக்காட்டில் இருந்து 22% ஆக மத்திய அரசு குறைத்தது. பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக பெருநிறுவனங்களுக்கு வரி குறைப்பு, சிறு நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும் வரி உயர்வு என்பது நல்ல பொருளாதாரக் கொள்கை அல்ல. இது சிறு தொழில்கள் மற்றும் வணிகத்தின் வீழ்ச்சிக்கு தான் வழிவகுக்கும். எனவே, ஜி.எஸ்.டி வரி விகிதத்தை உயர்த்தும் திட்டத்தை ஜி.எஸ்.டி குழு கைவிட வேண்டும். மாறாக, வரி விகிதங்களை குறைத்து, வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரித்து அதன் மூலம் வருவாயைப் பெருக்க ஜி.எஸ்.டி குழு முன்வர வேண்டும். பொருளாதார மந்த நிலையைப் போக்கி, வளர்ச்சிப் பாதையில் நாட்டை அழைத்துச் செல்ல இந்த அணுகுமுறை தான் உதவும் என்றும் அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

மாஸ் என்ட்ரி கொடுத்த தளபதி விஜய்!

0

தென்னிந்திய சினிமா துறையில் மாஸ் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கும் தளபதி விஜய் அவர்களுக்கு நடிகர் அதர்வா சொந்தக்காரராக போகிறார். இந்நிலையில் அதர்வா தம்பிக்கும் விஜய்யின் நெருங்கிய உறவுக்கார பெண்ணக்கும் நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடை பெற்றது.

மேலும், இந்த நிகழ்விற்கு விஜய் அவர்கள் மாஸ் என்ட்ரி கொடுத்து உள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் அவர்கள் நடித்த பிகில் படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் அடுத்ததாக அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “தளபதி 64” என்ற படத்தில் மும்முரமாக நடித்துக் கொண்டு வருகிறார்.

மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதத்தில் முடிவடைய உள்ளது.


அதோடு இந்த படம் அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு திரையரங்களில் வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் அறிவித்தார்கள் இதனிடையே நிச்சியதார்த்த போட்டோவை தளபதி ரசிகர்கள் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

0

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் மீதான முதலீடு என்பது நம்பிக்கையாகவும் பாதுகாப்பாகவும் கருதுகின்றனர்.

மேலும் சாமானிய மக்கள் முதல் மேல்தட்டு மக்கள் வரை தங்கத்தில் தான் முதலீடு செய்கின்றனர். உலக அளவில் தங்கத்தில் முதலீடு செய்வதில் இந்தியா முக்கிய பங்கில் உள்ளது. எனவே நாள் தோறும் தங்க ஏற்ற இரக்கம் அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது.

அந்த வகையில் இன்று வர்த்தகம் நடைபெறாது எனவே நேற்றைய விலையே தொடரும். தங்கத்தின் விலை வருமாறு:
ஆபரண தங்கம் 22 carat கிராம் ஒன்றுக்கு 3612 ரூபாய் ஆகவும்
ஒரு பவுன் தங்கம் பவுன் ஒன்றுக்கு 28896 ரூபாயாகவும் உள்ளது.

அதே போல் 24 கேரட் தூய தங்கத்தின் விலை 1 கிராம் 3793 ரூபாய் ஆகவும் 10 கிராம் தூய தங்கத்தின் விலை ரூபாய் 37930 ஆகவும் உள்ளது.

வெள்ளியின் விலையைபொறுத்தவரை கிராம் 1 ரூபாய் குறைந்து ரூபாய் 46.60 க்கும் 1கிலோ ரூபாய் 46600 க்கும் வர்த்தகம் செய்யப்பட்டது.

மஹாலக்ஷ்மி குற்றச்சாட்டுக்கு…! அவர் கணவர் பதில்?

0

சின்னத்திரையில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருவது சீரியல் நடிகர் ஈஸ்வர், மகாலட்சுமி, ஜெய்ஸ்ரீ விவகாரம் தான். ஈஸ்வர் அவரது மனைவி இருவரும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகின்றனர். நடிகை ஜெய்ஸ்ரீக்கு 5 வயதில் குழந்தை ஒன்று உள்ளது.


சமீபத்தில் தனது கணவர், தாயாருடன் சேர்ந்து தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாகவும், மகாலட்சுமிக்கும் அவருக்கும் தவறான உறவு இருப்பதாகவும் அடையாறு போலீசில் ஜெய்ஸ்ரீ புகாரளித்தார்.

மஹாலக்ஷ்மி குற்றச்சாட்டுக்கு...! அவர் கணவர் பதில்?

இதையடுத்து நடிகர் ஈஸ்வரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் ஜாமினில் வெளியே வந்த ஈஸ்வர், தன்னிடம் பணம் பறிக்கும் என்ணத்தில் தான் நடிகை ஜெய்ஸ்ரீ குற்றம் சுமத்துவதாக தெரிவித்தார். மேலும் ஜெய்ஸ்ரீ கூறும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் பொய் என்று கூறிய அவர் மகாலட்சுமியின் கணவர் அணில்க்கும் ,தனது மனைவிக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறினார்.


இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்திருக்கும் நடிகை மகாலட்சுமி, தனது கணவருக்கும் தனக்கும் இடையே விவாகரத்து வழக்கு நடைபெற்று வருவதாகவும், ஈஸ்வரும் நானும் ஒரே சீரியலில் நடித்து வருவதால் இருவரும் நட்பாக பழகியது ஜெய்ஸ்ரீயின் கண்களுக்கு தவறாக தெரிவதாகவும் கூறியுள்ளார்.

மஹாலக்ஷ்மி குற்றச்சாட்டுக்கு...! அவர் கணவர் பதில்?

மேலும் தனக்கு ஏதாவது நடந்தால் அதற்கு என் கணவரும் ஜெய்ஸ்ரீயும் தான் காரணம் என்றும் மகாலட்சுமி கூறியுள்ளார்.


இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்திருக்கும் நடிகை மகாலட்சுமியின் கணவர் அனில், “என்னுடன் ஏன் சேர்ந்து வாழவில்லை என்று தான் நான் வழக்கு தொடர்ந்துள்ளேன்.

மகாலட்சுமியைப் பற்றி பேசினால் அது என்னைப் பற்றி பேசுவதாகத்தான் இருக்கும்.
நான் உன்னைப் பற்றி எப்போதும் தவறாக பேசமாட்டேன்.
எனக்கும் ஜெய்ஸ்ரீக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அவர் எனக்கு தங்கை மாதிரி. அவரிடம் இரண்டு மூன்றுமுறை தான் பேசியிருப்பேன். அதற்குள் எனக்கும் அவருக்கும் தொடர்பிருப்பதாக பேசுவதெல்லாம் தவறு. நானும் ஜெய்ஸ்ரீயும் தனியாக சந்தித்தது கூட கிடையாது என்றார்.

தீபாவளி அன்று ஈஷ்வர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் நண்பர்கள் அனைவரும் சந்தித்துக் கொண்டதாகவும், அதில் புகைப்படங்கள் எடுக்க பட்டதாகவும், அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தவறாக சித்தரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா!

0

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.

ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை பதம் பார்த்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு ஸ்டேடியத்தில் இன்று மாலை நடக்கிறது.

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா!

தொடக்க ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 207 ரன்கள் குவித்த போதிலும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 94 ரன்கள் விளாசி வெற்றிக்கு வழிவகுத்தார்.

ஆனால் பந்து வீச்சும், பீல்டிங்கும் மோசமாக இருந்தது. நிறைய கேட்ச்சுகளை தவறவிட்டனர். அதில் இந்திய வீரர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய வீரர்கள் காத்திருக்கிறார்கள்.

உலக சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் கிரிக்கெட்டில் கடைசியாக ஆடிய 10 ஆட்டங்களில் 9-ல் தோல்வி அடைந்திருக்கிறது. ஐதராபாத் போட்டியில் ஹெட்மயர், பொல்லார்ட், இவின் லீவிஸ் அதிரடி காட்டி ரன் மழை பொழிந்தனர். ஆனால் மெகா ஸ்கோர் குவித்தும் பலன் இல்லாமல் போய் விட்டது.

திருவனந்தபுரம் ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு எடுபட வாய்ப்புள்ளது. இரவில் பனிப்பொழிவின் தாக்கம் இருக்கும்.