Home Blog Page 5855

அமமுக அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டதா?

0

அமமுக அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டதா?

டிடிவி தினகரன் தலைமையிலான அ.ம.மு.க அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு எதிராக அந்தக் கட்சியிலிருந்து விலகிய புகழேந்தி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதன்பேரில் ஐகோர்ட்டும் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த நிலையில் அ.ம.மு.க அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி கடந்த ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி அமமுகவை பதிவு செய்வதற்கான நாங்கள் அனுப்பிய ஆவணத்தை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்துவிட்டு ஆட்சேபனை குறித்து தெரிவிப்பதாக பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்க அறிவுறுத்தியது.

இதில் அதிமுக இன்னொரு கட்சி மற்றும் சிலரும் ஆட்சேபணை தெரிவித்த அம்மா பெயரை பயன்படுத்தக்கூடாது என்று அதிமுக சார்பில் ஆட்சேபனை தெரிவித்தது.

அதற்கு உரிய விளக்கம் கொடுக்கப்பட்டது இதனை ஏற்று தேர்தல் ஆணையம் அமமுகவை பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி அறிவித்திருக்கிறது இதற்கான அதிகாரப்பூர்வமான அதிகாரப்பூர்வ நகல் நாளை திங்கட்கிழமை கையில் கிடைக்கும் என தகவல் கிடைத்துள்ளது.

நிலக்கரி உற்பத்தி திறனை 40 கோடி டன்னாக அதிகரிக்க கோல் இந்தியா திட்டம்

0

நிலக்கரி உற்பத்தி திறனை 40 கோடி டன்னாக அதிகரிக்க கோல் இந்தியா திட்டம்

அடுத்த 5 ஆண்டுகளில் நிலக்கரி உற்பத்தி திறனை 40 கோடி டன் அதிகரிக்க கோல் இந்திய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சர்வதேச அளவில் நிலக்கரி உற்பத்தியில் இந்தியா நிறுவனமான கோல் இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது.

நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் கோல் இந்தியாவும் அதன் துணை நிறுவனங்களும் 80 சதவீத பங்கினை கொண்டுள்ளன. பொதுத்துறையை சேர்ந்த கோல் இந்திய நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் தனது நிலக்கரி உற்பத்தி திறனை 40 கோடி டன் அளவிற்கு உயர்த்த உள்ளதாக நிலக்கரித்துறை அமைச்சர் பிரகால் ஜோஷி தெரிவித்துள்ளார்.

இதில் 9 கோடி டன் புதிய சுரங்கங்கள் வாயிலாகவும் 31கோடி டன் தற்போதைய சுரங்கங்களின் விரிவாக்கம் மூலம் பெறப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று வர்த்தகம் தொடங்கியபோது கோல் இந்திய நிறுவன பங்குகளின் விலை பங்கு ஒன்று 196.60 பைசாவுக்கு கைமாறியது வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 197. 30 காசுக்கும் குறைந்தபட்சமாக 190.90 க்கும் இந்த பங்குகள் இறுதியில் 191.65 நிலைகொண்டது.

சென்னை விமான நிலையத்தில் ஓரே நாளில் 1 கோடியே 27 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

0

சென்னை விமான நிலையத்தில் ஓரே நாளில் 1 கோடியே 27 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு சார்ஜாவில் இருந்து விமானம் வந்தது அதில் வந்த தஞ்சாவூரை சேர்ந்த அகமது என்பவரிடம் சந்தேகத்தின் பெயரில் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர் அவரது உடமைகளை எதுவும் இல்லாததால் அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர்.

அதில் அவர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த 11 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 344 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர் அதேபோல் கொச்சியில் இருந்து சென்னை உள்நாட்டு முனையத்திற்கு விமானத்தில் வந்த இலங்கையைச் சேர்ந்த முகமது அப்துல் அஜிஸ் முஸ்தாக் ஆகியோரை சோதனை செய்தனர் அவர்களது உடைமைகள் மறைத்து வைத்து கடத்தி வந்த 81 லட்சம் மதிப்புள்ள இரண்டு கிலோ 80 கிராம் தங்கத்தை கைப்பற்றினர்.

மேலும் கொழும்பிலிருந்து சென்னைக்கு வந்த இலங்கையைச் சேர்ந்த மது இஷார் முகமது ஜாபீர் ஆகியோரின் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து இருந்த 35 லட்சம் மதிப்புள்ள 902 கிராம் தங்கமும் பறிமுதல்செய்யப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் ஓரே நாளில் 1 கோடியே 27 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

சென்னை விமான நிலையத்தில் 5 பேரிடம் ஒரே நாளில் இருந்து ஒரு கோடியே 27 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 3 கிலோ 320 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள் இது தொடர்பாக சம்பந்தமானவர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

வெங்காயத்தின் விலை சில தினங்களில் குறையும் !

0

ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை அமைச்சர் காமராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடந்தது இதில் மாற்றுக் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜரிடம் நிருபர்கள் வெங்காய விலை பற்றி கேள்வி எழுப்பினர் அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது.

வெங்காயத்தின் விலை சில தினங்களில் குறையும் !

வெங்காயம் விளைகின்ற மழை பகுதிகளில் கூடுதலாக பெய்துள்ளதால் தற்போது விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டு விலை ஏற்றம் கண்டுள்ளது.

இந்த விலை உயர்வு தற்காலிகமானது தமிழகத்தில் உள்ள பசுமைப் பண்ணை கடைகள் தமிழக அரசு வெங்காயத்தை 40 க்கு விற்பனை செய்து வருகிறது இந்த நிலையில் மத்திய அரசு துருக்கி எகிப்து போன்ற நாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்து விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளது இந்த வெங்காயம் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் தமிழகத்திற்கு வந்து அடையும் என்றும் அதனை தமிழகத்தில் உள்ள 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனை கூட்டு துறை அமைச்சரும் உறுதிப்படுத்தியுள்ளார் இதன் மூலம் தற்காலிகமாக ஏற்பட்டுள்ள வெங்காய விலை ஏற்றத்தை சமாளிக்க முடியும் என்று அவர் கூறினார்.

ஐ. எஸ். ல் போட்டி கொல்கத்த அணி வெற்றி!

0

ஐ. எஸ். ல் போட்டி கொல்கத்த அணி வெற்றி!

10 அணிகள் இடையிலான ஆறாவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கவுகாத்தியில் நேற்று இரவு நடந்த 33 வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் அட்லடிகோ கொல்கத்தா 3-0என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

அதிகமாக கவுகாத்தி வசம் 57% சுற்றினாலும் இலக்கை நோக்கி வைப்பதற்கு கொல்கத்தாவின் ஆதிக்கமே மேலோங்கி இருத்தது டேவிட் வில்லியம்ஸ் 15 நிமிடம் ராஜ்கிருஷ்ணா 35 மற்றும் 90 வது நிமிடத்தில் கோல் போட்டனர் கொல்கத்தாவை மேலும் சில வாய்ப்புகள் மயிரிழையில் நழுவிப் போயின 7 வது லீக்கில் ஆடிய கொல்கத்தா அணி நான்காவது வெற்றி இதுவாகும்.

4 வெற்றி தோல்வி என்று 14 புள்ளிகளுடன் முதல் இடத்துக்கு முன்னேறியது நேற்றைய போட்டியில் தோல்வியை தழுவிய ஈஸ்ட் யுனைடெட் அணி(கவுகாத்தி) 10 புள்ளிகளுடன் 2 உள்ளது. இன்று இரவு ஏழு முப்பது மணிக்கு நடக்கும் போட்டியில் ஹைதராபாத் எப். சி.,எப். சி.கோவா ஹைதெராபாத்தில் மோதுகின்றன.

துப்பாக்கி சூட்டுடன் நடந்த வாக்குப்பதிவு ?

0


ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தல் 63.36 சதவீத ஓட்டுகள் பதிவாகின தேர்தலின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார்.

81 சட்டசபை தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஐந்து கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது அதன்படி கடந்த நவம்பர் 30 ஆம் தேதி நடந்த முதல்கட்ட தேர்தலில் 64.12 சதவீத வாக்குகள் பதிவாகின.

துப்பாக்கி சூட்டுடன் நடந்த வாக்குப்பதிவு ?

இந்நிலையில் அங்கு இரண்டாம் கட்டமாக 20 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது இரண்டாம் கட்ட தேர்தல் 29 பெண்கள் உட்பட 270 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் இதில் முதல்-மந்திரி ரகுபர் தாஸ் தொகுதியும் உள்ளடங்கும்


தேர்தலுக்காக 6066 அமைக்கப்பட்டு இருந்தன இதில் 262 வாக்குச்சாவடிகள் நக்சலைட்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளிலிருந்து இதனால் வாக்குச்சாவடிகள் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு 18 தொகுதிகள் பிற்பகல் 3 மணிக்கு முடிவடைந்தது ஆனால் முகம்மது முதல்-மந்திரி ரகுவர்தாஸ் போட்டியிடும் மற்றும் ஜாம்ஷெட்பூர்(கிழக்கு மற்றும் மேற்கு ) ஆகிய தொகுதிகளில் மட்டும் மூன்று மணிக்குப் பிறகும் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

இந்த தொகுதி 5 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது அமைதியான முறையில் நடந்த இந்தத் தேர்தலில் 63.36 சதவீத ஓட்டுகள் பதிவாகின இதனிடையே சீசாய் தொகுதியில் உள்ள வாக்குச் சாவடி ஒன்றில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த அதிரடிப்படை போலீசாரின் ஆயுதங்களை சிலர் பறிக்க முயன்றனர் அவர்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தினர் இதில் ஒருவர் பலியானார் மேலும் இருவர் படுகாயமடைந்தனர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் மூன்றாம் கட்ட தேர்தல் வருகிற 12ஆம் தேதி நடைபெறுகிறது

ஆதித்யா அருணாச்சலம் கேரக்டரில் ஒளிந்திருக்கும் ரகசியம்: ஆர் முருகதாஸ் பேச்சு

0

ஆதித்யா அருணாச்சலம் கேரக்டரில் ஒளிந்திருக்கும் ரகசியம்: ஆர் முருகதாஸ் பேச்சு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ’தர்பார்’ படத்தில் ஆதித்யா அருணாச்சலம் என்ற கேரக்டரில் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. இந்த கேரக்டரின் பெயரே வித்தியாசமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வரும் நிலையில் இந்த கேரக்டருக்கு இந்த பெயரை ஏன் வைத்தேன் என்று தகவலை இயக்குனர் ஏஆர் முருகதாஸ் அவர்கள் நேற்று இசை வெளியீட்டு விழாவின்போது கூறினார்

எந்த ஒரு ஆணிடமும் உங்களுக்குப் பிடித்த இரண்டு ஆண்கள் யார்? என்று கேட்டால் உடனே தந்தை, மகன் என்ற இரண்டு உறவுகளை கூறுவார்கள். ஏனெனில் தந்தை மீது ஒவ்வொருவருக்கும் மிகப்பெரிய மரியாதை இருக்கும், மகன் மீது மிக ஆழமான ஒரு அன்பு இருக்கும். அந்த வகையில் ஒரு மனிதனுக்கு தந்தை மற்றும் மகன் ஆகிய இரண்டு உறவுகள் மிகவும் முக்கியமானவை

அந்த வகையில் என்னுடைய தந்தை அருணாசலம் பெயரையும் என்னுடைய மகன் ஆதித்யா பெயரையும் இணைத்து தர்பார் படத்தில் ரஜினி அவர்களின் கேரக்டருக்கு ஆதித்யா அருணாச்சலம் என்று பெயர் வைத்தேன் என்று கூறினார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களின் இந்த சுவாரஸ்யமான விளக்கம் அனைவரையும் கவர்ந்தது.

அவமானப்படுத்திய தயாரிப்பாளர், 2 வருடங்களுக்குள் முடித்த சவால்: ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு

0

அவமானப்படுத்திய தயாரிப்பாளர், 2 வருடங்களுக்குள் முடித்த சவால்: ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு

கோலிவுட் திரையுலகில் தான் நடிக்க வந்த புதிதில் தயாரிப்பாளர் ஒருவர் தன்னை அவமானப்படுத்தியதாகவும், அந்த அவமானத்தை தாங்கிக் கொண்டு இரண்டே வருடங்களில் தான் அவர் முன் கம்பீரமாக நின்றதாகவும் ரஜினிகாந்த் நேற்றைய தர்பார் ஆடியோ விழாவில் பேசினார்.

பாரதிராஜா உருவாக்கிய 16 வயதினிலே படம்தான் தன்னை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்த்தது என்றும், அந்த படத்தில்தான் நடித்துக் கொண்டிருக்கும்போது ஒரு தயாரிப்பாளர் தனக்கு வாய்ப்பு கொடுப்பதாக அழைத்துச் சென்று ஏமாற்றி விட்டதாகவும், அது மட்டுமன்றி தன்னை அவமானப்படுத்தி வெளியே போ என்று சொல்லி விட்டதாகவும் கூறினார்.

அந்த அவமானத்தை தாங்கிக் கொண்டு ’இதே இடத்தில்தான் மிகப் பெரிய சூப்பர் ஸ்டார் ஆகி காட்டுகிறேன் என்று சவால் விட்டதாகவும், அதன்படி இரண்டே வருடங்களில் தான் பெரிய நடிகராகி அதே தயாரிப்பாளர் முன் கம்பீரமாக நின்றதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

இருப்பினும் தன்னுடைய வெற்றிக்கு தன்னுடைய உழைப்பு, அதிர்ஷ்டம் மட்டும் காரணம் இல்லை என்றும், தனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் , தனக்கு அமைந்த கேரக்டர்கள், தன்னுடைய படம் ரிலீஸான நேரம் ஆகியவை தான் காரணம் என்பதை தான் உணர்ந்து அதன் பின் கர்வம் இன்றி நடந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

கிரிவலமும் அதன் பயன்களும்

0

கிரிவலமும் அதன் பயன்களும்

கார்த்திகை தீபம் வரும் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது இதனால் திருவண்ணாமலையில் அதிக மக்கள் கிரிவலம் செல்வர். பெரும் சிறப்புமிக்க அண்ணாமலையே என் அந்தந்த நாட்களில் கிரிவலம் வந்தால் என்னென்ன பலன்கள் என்று பார்ப்போம்

அண்ணாமலையை ஞாயிற்றுக்கிழமை வலம் வந்தால் சிவலோக பதவி கிடைக்கும் திங்கட்கிழமை வலம் வருவோருக்கு இந்திர பதவி கிடைக்கும் செவ்வாய்க்கிழமை வலம் வந்தால் கடன் சுமை குறையும் வறுமை நீங்கும் புதன்கிழமை வலம் வந்தால் கலைகளில் தேர்ச்சியும் முக்தியும் பெறுவர் வியாழக்கிழமை வலம் வருபவர்கள் ஞானம் பெறுவர்.

வெள்ளிக்கிழமை வைகுண்ட பதவி கிடைக்கும் சனிக்கிழமை வந்தால் பிணிகள் நீங்கும் அம்மாவாசையில் வருபவர்களுக்கு முக்தி கிடைக்கும் பிரதோஷம் அன்று வலம் வந்தால் சகல பாவங்கள் நீங்கும் ஏகாதசியில் வலம் வந்தால் பீடைகள் தொலையும் சிவராத்திரியில் வலம் வந்தால் பிறவிப்பிணி அகலும்.

கிரிவலமும் அதன் பயன்களும்

மாசிமகத்தில் வளம் வந்தாள் தேவர்களுக்கு நிகரான பதவி கிட்டும் காட்சியான புண்ணிய காலத்தில் வலம் வந்தால் தேவர்களால் கணிக்க முடியாத சிறப்பையும் உத்தராயன புண்ணிய காலத்தில் வலம் வந்தால் உயர்ந்த பதவியும் அடைவர்.


குறிப்பாக செவ்வாய்க்கிழமைகளில் வலம் வருவது கூடுதல் பலனைத் தரும் கர்ம வினைகளை நீக்கும் மேலும் செவ்வாய்க்கிழமை துர்க்கைக்கு உகந்த நாள் அன்னை மகிஷாசுரனை அழித்த நாள் அக்னிக்குரிய கிரகம் செவ்வாய் அக்னிக்குரிய தலம் திருவண்ணாமலை என்பதால் அதனால் அங்கு செவ்வாய் தோறும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது இந்நாளில் மலைவலம் வருவது மகத்தான பலனைத் தரும்.

கணவன் மீது மனைவி கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கொலை!சென்னையில் பரபரப்பு?

0

சென்னையில் குடும்பத் தகராறில் கணவன் மீது மனைவி கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை திருவிக நகரைச் சேர்ந்தவர் உபயதுல்லா வயது 39 இவருக்கு நஸ்ரின் என்பவருடன் 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர் நஸ்ரின் மற்றும் உபயதுல்லா இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததுள்ளது.

இந்த நிலையில் கடந்த 2 ம் தேதி குழந்தைகளை பள்ளியில் விட்டு விட்டு வீட்டுக்கு வந்த உபயதுல்லா மற்றும் நஸ்ரின் இடையே மீண்டும் சண்டை தொடர்ந்தது வாய் தகராறு முற்றவே எண்ணை சட்டியில் இருந்த கொதிக்கும் எண்ணெய்யை எடுத்து உபயதுல்லா மீது நஸ்ரின் ஊற்றினார் வலி தாங்க முடியாமல் உபயதுல்லா அலறவே அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இது தொடர்பாக போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது போலீஸ் வழக்குப்பதிவு செய்து நஸ்ரினை கைது செய்தனர் இந்நிலையில் தீவிர சிகிச்சையில் சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உபயதுல்லா சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மனைவியே கணவன் மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றி கொலை செய்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.