வெங்காயத்தின் விலை சில தினங்களில் குறையும் !

0
76

ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை அமைச்சர் காமராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடந்தது இதில் மாற்றுக் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜரிடம் நிருபர்கள் வெங்காய விலை பற்றி கேள்வி எழுப்பினர் அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது.

வெங்காயம் விளைகின்ற மழை பகுதிகளில் கூடுதலாக பெய்துள்ளதால் தற்போது விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டு விலை ஏற்றம் கண்டுள்ளது.

இந்த விலை உயர்வு தற்காலிகமானது தமிழகத்தில் உள்ள பசுமைப் பண்ணை கடைகள் தமிழக அரசு வெங்காயத்தை 40 க்கு விற்பனை செய்து வருகிறது இந்த நிலையில் மத்திய அரசு துருக்கி எகிப்து போன்ற நாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்து விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளது இந்த வெங்காயம் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் தமிழகத்திற்கு வந்து அடையும் என்றும் அதனை தமிழகத்தில் உள்ள 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனை கூட்டு துறை அமைச்சரும் உறுதிப்படுத்தியுள்ளார் இதன் மூலம் தற்காலிகமாக ஏற்பட்டுள்ள வெங்காய விலை ஏற்றத்தை சமாளிக்க முடியும் என்று அவர் கூறினார்.

author avatar
CineDesk