Home Blog Page 5859

தண்டவாளத்தை கடக்கும் போது விபரீதம் ! ரயில்மோதி ரயில்வே ஊழியர் உயிரிழப்பு !

0

தண்டவாளத்தை கடக்கும் போது விபரீதம் : ரயில்மோதி ரயில்வே ஊழியர் உயிரிழப்பு

கோபிசெட்டிபாளையத்தில் சேர்ந்தவர் சிவகுமார் திருப்பூர் ரயில் நிலையத்தில் மின் துறை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்

கடந்த மூன்று நாட்களாக சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே தொழிற் சங்கத்தில் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக பல்வேறு ஊர்களிலிருந்து தொழிற்சங்க நிர்வாகிகளும் பணியாளர்களும் சென்னை பெரம்பூர் வந்தனர். மூன்று நாள் கூட்டத்திற்கு பிறகு அவரவர் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். அவர்களுக்காக சிறப்பு ரயிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் சேர்ந்த சிவக்குமார் கொரட்டூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற அதிவிரைவு ரயில் அவர் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் அறிந்தவுடன் சிவகுமாரின் நண்பர்கள் கொடுத்த தகவலின் பேரில் பெரம்பூர் ரயில்வே காவல்துறை காவலர்கள் உடனடியாக கொரட்டூர் ரயில் நிலையத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் அவர்கள் சிவகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பெரம்பூர் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சூரியன் குறித்த தகவல்களை சேகரிக்க பார்கர் விண்கலம் நாசா அறிவிப்பு!

0

சூரியன் குறித்த தகவல்களை சேகரிக்க பார்கர் விண்கலம் நாசா அறிவிப்பு!

பூமி சூரியனில் இருந்து சுமார் 93 மில்லியன் மைல் தொலைவில் உள்ளது. முதன்முதலாக சூரியனை ஆய்வு செய்ய ‘பார்கர் சோலார் புரோப்’ என்ற விண்கலத்தை நாசா விஞ்ஞானிகள் தயாரித்தனர்.

சூரியன் குறித்த தகவல்களை சேகரிக்க பார்கர் விண்கலம் சூரியனுக்கு 15 மில்லியன் மைல் (24 மில்லியன் கி.மீ) தொலைவில் சென்று உள்ளது. இந்த விண்கலம் இறுதியில் சூரியனின் மேற்பரப்பில் இருந்து சுமார் 4 மில்லியன் மைல் (6 மில்லியன் கி.மீ) தொலைவில் பயணிக்கும், இது முந்தைய எந்த விண்கலத்தையும் விட ஏழு மடங்கு நெருக்கமாக இருக்கும்.

சூரியனின் வளிமண்டல மேலடுக்கான கொரோனாவை ஆய்வு செய்வதற்காக இந்த விண்கலம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த விண்கலம் இன்னும் 6 ஆண்டுகள் சூரியனுக்கு நெருக்கமாக பறந்து 24 மணி நேரமும் சூரியனை கண்காணிக்கும்.
இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் நெருக்கமாக சூரியனை படம் பிடித்து சோலார் புரோப் அனுப்பி உள்ளது.

இதற்கு முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சூரியனிலிருந்து சுமார் 27.2 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் இருந்தே எடுக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படமானது இந்த தூரத்தினை விடவும் குறைவானது என தெரிவிக்கப்படுகிறது.

பார்கர் சோலார் ப்ரோப் என்ற விண்கலம் கண்டுபிடித்த தகவல்கள் குறித்து நாசா விஞ்ஞானிகள் விவரித்து உள்ளனர். சூரியன் விண்வெளி வானிலை எவ்வாறு உருவாகிறது என்பது குறித்த புதிய விவரங்களை அளிக்கிறது, பூமியில் செயற்கைக்கோள்கள் மற்றும் மின்னணுவியல் ஆகியவற்றைத் தடுக்கக்கூடிய வன்முறை சூரியக் காற்று குறித்த வானியலாளர்களின் புரிதலை மாற்றியமைக்கிறது.

நாம் சூரியனை நெருங்கும்போது புதிய நிகழ்வுகளையும் புதிய செயல்முறைகளையும் பார்ப்போம் என நிச்சயமாக நம்புகிறோம், நாங்கள் நிச்சயமாக அதை செய்வோம் என கூறினர்.

மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளரும், பார்க்கர் ஆய்வில் சூரிய காற்றை உணரும் கருவியை உருவாக்கியவருமான ஜஸ்டின் காஸ்பர் கூறும்போது
“விண்கலத்தை தழுவும் தனித்துவமான, சக்திவாய்ந்த அலைகளை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம், இது கடலில் உள்ள முரட்டு அலைகளைப் போன்றது. அவை மிகப்பெரிய அளவிலான ஆற்றலைக் கொண்டுள்ளன.

இது கொரோனா மற்றும் சூரிய காற்று எவ்வாறு சூடாகிறது என்பதற்கான எங்கள் கோட்பாடுகளை வியத்தகு முறையில் மாற்றும் என்று கூறினார். நாங்கள் கண்டறிந்த சில தகவல்கள் நாங்கள் எதிர்பார்த்ததை மிகவும் உறுதிப்படுத்தியுள்ளன, ஆனால் அவற்றில் சில முற்றிலும் எதிர்பாராதவை ஆகும்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை பயன்படுத்தி அத்துமீறும் கர்நாடகம்! எச்சரிக்கும் மருத்துவர் ராமதாஸ்

0

உச்சநீதிமன்றத் தீர்ப்பை பயன்படுத்தி அத்துமீறும் கர்நாடகம்! எச்சரிக்கும் மருத்துவர் ராமதாஸ்

உச்சநீதிமன்றத் தீர்ப்பை பயன்படுத்திக் கொண்டு பெண்ணையாற்றின் குறுக்கே அணை கட்டும் பணிகளை விரைவுபடுத்த கர்நாடகம் திட்டமிட்டிருக்கிறது. இது இரு மாநில உறவுகளை பாதிக்கும்; இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கது என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் “தென்பெண்ணை ஆற்று நீர் சிக்கலைத் தீர்க்க தீர்ப்பாயம் அமைக்க வேண்டும்!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.

தென்பெண்ணையாற்றின் துணைநதிகளில் ஒன்றான மார்க்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்ட தடை விதிக்க வேண்டும் என்று கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த மாதம் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. அதைப் பயன்படுத்தி மார்க்கண்டேய நதியின் குறுக்கே அணைகளை கட்டும் பணிகளை கர்நாடகம் எந்த நேரமும் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

கர்நாடக மாநிலத்தின் பங்கரபேட்டை ஒன்றியம் யார்கோல் கிராமத்தில் மார்க்கண்டேய ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணை கட்டுவதை நிறுத்த ஆணையிட வேண்டும்; அதேபோல் பெண்ணையாற்றின் குறுக்கே தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் எந்த பாசனத் திட்டங்களையும் செயல்படுத்தக் கூடாது என்று கர்நாடக அரசுக்கு ஆணையிட வேண்டும் என்று கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் கடந்த நவம்பர் 14-ஆம் தேதி தள்ளுபடி செய்து விட்டது. இந்த கோரிக்கைகள் குறித்து தீர்மானிப்பதற்காக நதிநீர் தீர்ப்பாயம் அமைக்கும்படி மத்திய அரசை அணுகும்படியும் ஆணையிட்டது. அதன்படி தீர்ப்பாயம் அமைக்கும்படி மத்திய நீர்வள அமைச்சகத்திடம் தமிழக அரசு விண்ணப்பித்துள்ளது.

பெண்ணையாற்றின் துணை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுவதை தடுக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உச்சநீதிமன்றம் மறுக்க வில்லை. மாறாக, தொழில்நுட்பக் காரணங்களின் அடிப்படையில் தான் தமிழக அரசு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. பெண்ணையாற்று பிரச்சினைக்கு தீர்வு காண தீர்ப்பாயம் அமைக்கும்படி மத்திய அரசிடம் முறையிடுமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள நிலையில், தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு, அதன் முடிவு வெளியாகும் வரை பெண்ணையாற்றின் குறுக்கே எந்தவொரு பாசனத் திட்டத்தையும் கர்நாடக அரசு செயல்படுத்தாமல் இருப்பது தான் அறமாகும். ஆனால், அதை மதிக்காமல், உச்சநீதிமன்றத் தீர்ப்பை பயன்படுத்திக் கொண்டு அணை கட்டும் பணிகளை விரைவுபடுத்த கர்நாடகம் திட்டமிட்டிருக்கிறது. இது இரு மாநில உறவுகளை பாதிக்கும்; இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை பயன்படுத்தி அத்துமீறும் கர்நாடகம்! எச்சரிக்கும் மருத்துவர் ராமதாஸ்

காவிரி நதிநீர் பிரச்சினையைப் போலவே தென்பெண்ணையாற்று பிரச்சினையிலும் கர்நாடக அரசு அத்துமீறி செயல்பட்டு வருகிறது. 1892ஆம் ஆண்டில் சென்னை – மைசூர் மாகானங்களுக்கிடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் இந்த ஆறும் வருகிறது. அந்த ஒப்பந்தத்தின்படி முதல்மடை பாசனப் பகுதிகளில் எதை செய்வதானாலும், கடைமடை பாசன மாநிலமான தமிழகத்தின் ஒப்புதலை கர்நாடகம் பெற வேண்டும். ஆனால், தமிழகத்தின் அனுமதியைப் பெறாமல் கடந்த 2012-ஆம் ஆண்டு பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணைகளை கர்நாடக அரசு கட்ட முயன்ற போது, அதை எதிர்த்து பா.ம.க. போராட்டங்களை நடத்தியது. அதன்பிறகே கட்டுமானப் பணிகளை கர்நாடகம் கைவிட்டது.

அதுமட்டுமின்றி, 2013-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தமிழக – கர்நாடக எல்லையில் உள்ள முகளூர் தத்தனூர் என்ற இடத்தில் தென்பெண்ணையாற்றில் ராட்சத ஆழ்துளை கிணறுகளை அமைத்து, அதன் மூலம் உறிஞ்சப்படும் தண்ணீரை பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் கொண்டு சென்று அங்குள்ள 130 ஏரிகளில் சேமித்து வைத்து குடிநீர் வழங்க அம்மாநில அரசு திட்டமிட்டது. பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் எதிர்ப்பால் அத்திட்டமும் கைவிடப்பட்டது. அதேபோல் இப்போதும் பெண்ணையாற்றின் குறுக்கே பாசனத் திட்டங்களை கர்நாடக அரசு செயல்படுத்தக்கூடும்.

தென்பெண்ணையாறு கர்நாடகத்தில் தோன்றினாலும் அம்மாநிலத்தில் மிகக் குறைந்த தொலைவுக்கு மட்டுமே ஓடுகிறது. தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்கி பல்வேறு மாவட்டங்கள் வழியாக ஓடி கடலூர் மாவட்டத்தில் வங்கக்கடலில் கலக்கிறது. அந்த ஆற்றில் அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்படும். இதனால் லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள்.

எனவே, தென்பெண்ணையாற்று சிக்கலுக்கு உடனடியாக தீர்வு காணும் நோக்கத்துடன், தீர்ப்பாயத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும். தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்படும் வரை பெண்ணையாற்றில் பாசனத் திட்டங்களை செயல்படுத்த கர்நாடகத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் அதில் வலியுறுத்தியுள்ளார்.

நீரவ் மோடியை பொருளாதார குற்றவாளியாக அறிவித்து மும்பை கோர்ட் உத்தரவு.

0

வங்கியில் கடன் வாங்கிவிட்டு தப்பிய வைர வியாபாரி நீரவ் மோடி மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டத்தின் கீழ் தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவித்து மும்பை கோர்ட் உத்தரவிட்டது.

குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ்மோடி இவரது உறவினர் மெகுல் சோக்சி இவர்கள் மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் வாங்கி மோசடி செய்தது கடந்த ஆண்டு ஜனவரியில் வெளிச்சத்துக்கு வந்தது.

ஆனால் அதற்கு முன்னதாகவே இருவரும் நாட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகி விட்டனர் இந்த மோசடி தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர் இந்த வழக்கு இந்த நிலையில் லண்டனில் தலைமறைவாக இருந்த மோடி கடந்த மார்ச் 19ம் தேதி கைது செய்யப்பட்டார் லண்டன் சிறையில் உள்ள அவரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.


அரசு கடந்த ஆண்டு கொண்டுவந்த தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகள் புதிய சட்டத்தின் கீழ் நிரவ் மோடியை குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என அமலாக்கத்துறை மும்பையில் உள்ள சட்டவிரோத பரிவர்த்தனை தடுப்புச் சட்டப் பிரிவு கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அமலாக்கத்துறை கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட நீதிபதி நீரவ் மோடியை தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளியாக அறிவித்து நேற்று உத்தரவிட்டார்.

பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஜாமீன்!

0

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சேர்ந்தவர் நிர்மலாதேவி தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்த இவர் சில மாணவிகளிடம் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார் மேலும் இந்த வழக்கில் மதுரை பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர் இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்து வருகிறது கடந்த மாதம் 18 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது உதவி பேராசிரியர்கள் முருகன் கருப்பசாமி ஆகியோர் ஆஜராகி ஆனால் நிர்மலா தேவி அதனால் நீதிபதி பரிமளா நிர்மலாதேவி பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.


இதனை தொடர்ந்து மதுரை சிபிசிஐடி போலீசார் நிர்மலாதேவி கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர் அவரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார் ச போலீசார் மதுரை சிறையில் நிர்மலாதேவியை அடைத்தனர்.

இந்த நிலையில் பேராசிரியை நிர்மலா தேவி சார்பில் ஜாமீன் மனு ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

இதுதொடர்பான விசாரணை நேற்று நடந்தது நிர்மலாதேவி தரப்பில் வக்கீல் பசும்பொன் பாண்டியன் ஆஜரானார் மனுவை விசாரித்த நீதிபதி மகாராஜன் வழக்கு விசாரணைக்கு நிர்மலாதேவி தவறாமல் ஆஜர் ஆக வேண்டும் என உத்தரவிட்டு அவருக்கு ஜாமீன் வழங்கினார் மேலும் வழக்கு விசாரணையை வருகிற 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் குறித்த தகவல்!

0

லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் குறித்த தகவல்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ’மாநகரம்’ என்ற ஒரே ஒரு படத்தை இயக்கி கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது தெரிந்ததே. இதனையடுத்து அவர் இயக்கிய ’கைதி’ என்ற திரைப்படம் விஜய்யின் பிகில் படத்தையே மிஞ்சும் அளவிற்கு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது

இந்த படம் மிகப்பெரிய லாபத்தை தயாரிப்பாளர், வினியோகஸ்தர் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு கொடுத்ததால் லோகேஷ் கனகராஜ் மார்க்கெட் உச்சத்திற்கு சென்றது. அதுமட்டுமின்றி தற்போது அவர் விஜய் நடித்துவரும் ’தளபதி 64’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படமும் மிகப்பெரிய வெற்றி அடைந்தால் கோலிவுட்டின் முன்னணி இயக்குனர் பட்டியலில் லோகேஷ் கனகராஜ் இணைந்து விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சூர்யா உள்பட பல முன்னணி நடிகர்கள் லோகேஷ் கனகராஜ் தான் தங்கள் அடுத்த படத்தை இயக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளதாக செய்திகள் கசிந்து வந்தன.

ஆனால் லோகேஷ் கனகராஜ் ’தளபதி 64’ படத்தை இயக்கி முடித்து விட்டு ’கைதி 2’ படத்தை இயக்க விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் இதற்கு கார்த்தி மற்றும் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு ஆகியோர் ஒப்புதல் கொடுத்துள்ளதாகவும், எனவே ’தளபதி 64’ படத்தை முடித்தவுடன் அவர் ’கைதி 2’ படத்தையும் படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

நித்தியானந்தா ஈக்வடாரில் இருப்பது உண்மையா? தூதரகம் விளக்கம்

0

நித்தியானந்தா ஈக்வடாரில் இருப்பது உண்மையா? தூதரகம் விளக்கம்

பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தலைமறைவாக இருக்கும் நித்யானந்தா வெளிநாட்டிற்கு தப்பி ஓடி இருப்பார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஈக்வடாரில் உள்ள ஒரு தீவை விலைக்கு வாங்கி இருப்பதாகவும் அந்த தீவை ’கைலாஷ்’ என்ற தனி நாடாக அறிவித்து இருப்பதாகவும் அந்த நாட்டிற்கு உரிமை கேட்டு ஐநாவிடம் அவர் விண்ணப்பித்து இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

மேலும் இந்த தீவில் குடிமகனாக விண்ணப்பம் செய்யலாம் என்றும், இந்து என்ற ஒரே தகுதி மட்டுமே இந்த தீவில் குடிமகனாக தகுதி போதும் என்றும் அவர் தெரிவித்து இருந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் கைலாஷ் என்ற புதிய நாட்டிற்கு பிரதமராக ஒரு தமிழ் நடிகையை நித்தியானந்தா நியமனம் செய்யவிருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் நித்தியானந்தாவுக்கு ஈக்வடார் அடைக்கலம் தரவில்லை என ஈக்வடார் தூதரகம் விளக்கம் அளித்துள்ளது. டெல்லியில் உள்ள ஈக்வடார் தூதரகம் இதுகுறித்து கூறியபோது ’ஈக்குவடார் நாட்டின் அகதியாக தஞ்சம் அடைய நித்தியானந்தா கோரிக்கையை விடுத்தாகவும் ஆனால் அவரது கோரிக்கையை ஈகுவடார் அரசு நிராகரித்து விட்டதாகவும் ஈக்வடார் தூதரகம் விளக்கம் அளித்துள்ளது

இதனை அடுத்து நித்தியானந்தா குறித்து வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் அனைத்தும் உண்மைதானா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது. ஈக்வடாரில் உள்ள தீவுகளை அவர் உண்மையாகவே வாங்கினாரா? அவர் அறிவித்திருக்கும் கைலாஷ் என்ற தனி நாடு என்பது உண்மை தன்மை கொண்டதுதானா? போன்ற பல கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்காமல் உள்ளது
மொத்தத்தில் நித்யானந்தா தலைமறைவாக இருப்பது மட்டும் உண்மை என்பதும் அவர் பிடிபட்டால் மட்டுமே மேற்கண்ட மேற்கண்ட கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது

பலத்த பாதுகாப்பில் மதுரை மீனாட்சியம்மன் கோயில்!

0

பலத்த பாதுகாப்பில் மதுரை மீனாட்சியம்மன் கோயில்!

அயோத்தியில் பாபர் மசூதி பதினாறாம் நூற்றாண்டில் முகலாய மன்னர்களால் கட்டப்பட்டது. இந்நிலையில் ராமர் பிறந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டதாக இந்து அமைப்புகள் குற்றம் சாட்டி வந்தனர் கடந்த 1949ஆம் ஆண்டு மசூதிக்குள் ராமர் சிலை வைக்கப்பட்டது.  இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த மாவட்ட நிர்வாகம் மசூதியை மூடி முத்திரையிட்டனர்.

பின்னர் 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. பாபர் மசூதி இடிப்பை விசாரிக்க லிபரான் ஆணையத்தை 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் அமைத்தார் 1993 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்த சிபிஐ பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட 19 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

பல ஆண்டுகளாக நீடித்து வந்த சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. உச்சநீதிமன்றம் அயோத்தியில் இருக்கும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும், மேலும் சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்டுவதற்கான அமைப்பை மூன்று மாதத்திற்குள் மத்திய அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று, பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் போலீஸார் 4 வாசல்களிலும் பலத்த பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் போலீஸார், பக்தர்களை தீவிர சோதனைக்குப் பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கிறார்கள்.

கரும்பு லாரிகளை குறிவைக்கும் காட்டுயானைகள்!

0

கரும்பு லாரிகளை குறிவைக்கும் காட்டுயானைகள்

அவ்வப்போது காட்டு யானைகள் ஊருக்குள் புகுவது பயிர்களை நாசம் செய்வதும் ஒரு தொடர்கதையாகி வருகிறது. மனித நாகரிகத்தின் வளர்ச்சி, மனிதன் காட்டை ஆக்கிரமித்து பல கட்டிடங்களை எழுப்புவதன் காரணத்தினாலும் காட்டு யானைகள் வேறுவழியின்றி உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்து விடுகின்றன.

இந்நிலையில் தமிழக-கர்நாடக எல்லை ஒட்டிய நெடுஞ்சாலையில் யானைகள் முகாம் இருப்பதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு வனத் துறை அறிவுறுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே அமைந்திருக்கும் பெங்களூர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்கிறது எங்கு 24 மணி நேரமும் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் நிலையில் அவ்வப்போது யானை கூட்டங்கள் அங்கு முகாமிடுவது வழக்கமாகியுள்ளது.

வாகனம் மூலம் நெடுஞ்சாலை வழியாகக் கொண்டுசெல்லப்படும் கரும்புகளை குறிவைத்து யானைகள் முகாம் இடுவதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

என்கவுண்டர் செய்தவர்கள் எனக்கு ஹீரோவாக தெரிகின்றார்கள்: பிரபல நடிகை கருத்து

0

என்கவுண்டர் செய்தவர்கள் எனக்கு ஹீரோவாக தெரிகின்றார்கள்: பிரபல நடிகை கருத்து

ஹைதராபாத் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து, எரித்து கொலை செய்த குற்றவாளிகளை அம்மாநில போலீசார் இன்று அதிகாலை என்கவுண்டர் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த என்கவுண்டர் குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வருகின்றன

பெரும்பாலான மக்கள் மற்றும் அரசியல்வாதிகள், பெண்ணியவாதிகள் ஆகியோர் இந்த என்கவுண்டரை பாராட்டி வருகின்றார். ஆனாலும் ஒரு சிலர் இது சட்டப்படி நடந்திருக்க வேண்டும் என்றும் போலீசார் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டது விபரீதத்தை ஏற்படுத்தும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்

என்கவுண்டர் செய்தவர்கள் எனக்கு ஹீரோவாக தெரிகின்றார்கள்: பிரபல நடிகை கருத்து

இந்த நிலையில் பிரபல நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் இது குறித்து கருத்து தெரிவிக்கையில் ’ஒரு பெண்ணாக ஒரு தாயாக இந்த என்கவுண்டரை நான் வரவேற்கின்றேன். இந்த என்கவுண்டரை செய்தவர்கள் எனக்கு ஹீரோ போல் தெரிகிறார்கள். ஆனால் அதே நேரத்தில் ஒரு பொறுப்புள்ள குடிமகளாக இதனை நான் கண்டிக்கின்றேன்.

நம் நாட்டில் நீதி கிடைக்க பல வருடங்கள் ஆகிறது. நிர்பயா விவகாரம் உட்பட பல பெண்களுக்கு எதிரான கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 10 வருடங்கள் 15 வருடங்கள் ஆகியும் தண்டிக்கப்படாமல் உள்ளனர். தாமதமாக கிடைக்கும் நீதி தான் இது போன்ற என்கவுண்டர்களுக்கு காரணம் என்று நான் நினைக்கின்றேன்

பெண்களுக்கு எதிராக குற்றம் செய்பவர்களுக்கு உடனடியாக தண்டனை கிடைத்தால் இம்மாதிரியான என்கவுண்டர்கள் தேவை இருக்காது என்று கருதுகிறேன் என்று நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்