Home Blog Page 5860

மதுரை இளைஞரை பாராட்டிய முதலமைச்சர்!

0

மதுரை இளைஞரை பாராட்டிய முதலமைச்சர்!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ (ISRO) கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி சந்திராயன் 2 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது.  சந்திராயன்-2 உடன் நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டர் நிலவில் தரையிறங்கும் விக்ரம் லேண்டர், தரையிறங்கி ஆய்வு செய்யும் ரோவர் ஆகியவை அனுப்பப்பட்டு இருந்தன. கடந்த செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி விக்ரம் லேண்டர்  தரையிறங்கியது. இந்நிகழ்ச்சியை பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்தில் இருந்து பாரத பிரதமர் மோடியும்  பார்த்துக்கொண்டிருந்தார்.

ஆனால் நிலவின் தரைப்பகுதியில் இருந்து சுமார் 2.1 கிலோ மீட்டர் உயரத்தில் லேண்டர் வரும்போது திடீரென சிக்னல் துண்டிக்கப்பட்டது. பின்னர் விக்ரம் லாண்டரி தேடும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டிருந்தனர். இதற்கிடையில்  நாசாவின் சார்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு அனுப்பப்பட்டுள்ள நிலவு புலனாய்வு ஆர்பிட்டர் நிலவைச் சுற்றி ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா இஸ்ரோவிற்கு உதவ முன்வந்தது. விக்ரம் லேண்டர்-ஐ ஆர்பிட்டர் படம் பிடித்து அனுப்பும் என்றும் அதனுடன் சமிக்கை தொடர்பை ஏற்படுத்த முயற்சிக்கும் என்றும் தெரிவித்தது.

இந்நிலையில் சந்திராயன்-2 விக்ரம் லேண்டர் இந்த பகுதிகளில் இருப்பிடத்தை கண்டறிந்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.

அமெரிக்காவின் நாசா நிலவைச் சுற்றி ஆய்வு செய்து அவ்வப்போது படங்களை வெளியிட்டு வந்தது இந்த படங்களை ஆராய்ந்த தமிழக பொறியாளர் சண்முக சுப்பிரமணியன் நாசாவுக்கு ஒரு ஈ மெயில் அனுப்பினார். அதில் விக்ரம் லேண்டர் இன் சிதைந்த பகுதிகள் என இருப்பிடம் குறித்து தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் ஆய்வு செய்த நாசாவும் விக்ரம் லேண்டர் இந்த பகுதிகளில் இருப்பதை கண்டுபிடித்து.

சண்முக சுப்பிரமணியனை இந்தியர்கள் அனைவரும் பாராட்டி வந்த நிலையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி கே பழனிசாமி அவர்கள், நாசாவின் பாராட்டைப் பெற்ற மதுரையைச் சேர்ந்த பொறியாளர் திரு சண்முகம் சுப்ரமணியன் அவர்களுக்கு மலர்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார் இந்த சந்திப்பின்போது தொழில்துறை முதன்மைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் முதன்மை செயலாளர் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் காகர்லா உஷா ஆகியோர் உடனிருந்தனர்.

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம் குறித்த முக்கிய தகவல்

0

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம் குறித்த முக்கிய தகவல்

சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டியராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ’நம்ம வீடு பிள்ளை’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் தற்போது பி.ஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவான ‘ஹீரோ’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படமான ’டாக்டர்’ என்ற படத்தை நெல்சன் இயக்க உள்ளார் என்பதையும் இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 6ஆம் தேதி தொடங்கவுள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

இதன்படி சற்றுமுன் இந்த படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இந்த பூஜையில் சிவகார்த்திகேயன், இயக்குனர் நெல்சன், வில்லனாக நடிக்கவுள்ள வினய் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த படத்தில் நாயகியாக நடிக்கும் ப்ரியங்கா மோகனன் மற்றும் காமெடி வேடத்தில் யோகிபாபு ஆகியோர்களும் இன்றைய பூஜையில் கலந்து கொண்டனர்.

இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் பாடல்கள் கம்போஸ் செய்யும் பணியை இசையமைப்பாளர் அனிருத் ஆரம்பித்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

சிவகார்த்திகேயனின் எஸ்கே புரடொக்சன்ஸ் மற்றும் ஜே.ராஜேஷ் அவர்களின் கேஜேஆர் ஸ்டுடியோ நிறுவனங்கள் ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

0

மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகம் மற்றும் புதுச்சேரியின்  கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சென்ற வாரம் தொடர்ந்து கனமழை பெய்த நிலையில் தற்போது மழை குறைந்து உள்ளது. தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது.

குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது இந்த மழை அடுத்த நான்கு நாட்களுக்கு தொடரலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சூறாவளிக்காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால் குமரிக்கடல் லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போது குமரிக் கடல் பகுதியில் சூறை காற்று வீசி வருவதால் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம், மற்றும் மீன்பிடி துறைமுகங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்வதில்லை அதன் காரணமாக 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இப்போது தான் என் மகளின் ஆன்மா சாந்தியடையும் ப்ரியங்காவின் பெற்றோர்

0

இப்போது தான் என் மகளின் ஆன்மா சாந்தியடையும் ப்ரியங்காவின் பெற்றோர்

ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் கால்நடை மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த பலாத்காரத்துக்கு சம்பந்தமுடைய நால்வரை கைது செய்து ஐதராபாத் சிறையில் அடைத்தனர் போலீசார். இதனிடையே சம்பவம் சம்பவம் நடந்த இடத்தில் நால்வரும் கொண்டுசெல்லப்பட்டு எப்படி கொலை செய்தனர் என்பதை நடித்து காட்டுவதற்காக சம்பவ இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால் அவர்கள் நால்வரும் காவலர்கள் மீது கல்லெறிந்து தப்பிக்க முயன்றதாக தெரிகிறது இதனால் காவலர்கள் அவர்களை என்கவுண்டர் செய்தனர்.

இப்போது தான் என் மகளின் ஆன்மா சாந்தியடையும் ப்ரியங்காவின் பெற்றோர்

நான்கு பேரை என்கவுண்டர் செய்த உத்தரவை போலீஸாரை அம்மாநில மக்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். தெலுங்கானா பொலிஸாருக்கு அம்மாநில மக்கள் மலர்தூவி பாராட்டி வருகின்றனர். நான்கு பேரையும் என்கவுன்டரில் சுட்டுக் கொன்ற தான் தனது மகளின் ஆன்மா சாந்தி அடையும் என பிரியங்காவின் பெற்றோர் தெரிவித்தனர்.

ஹைதெராபாத் என்கவுண்டர் நிர்பயா வின் தாய் கருத்து என்ன?

0

ஹைதெராபாத் என்கவுண்டர் நிர்பயா வின் தாய் கருத்து என்ன?

ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் கால்நடை மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த பலாத்காரத்துக்கு சம்பந்தமுடைய நால்வரை கைது செய்து ஐதராபாத் சிறையில் அடைத்தனர் போலீசார்.

இதனிடையே சம்பவம் சம்பவம் நடந்த இடத்தில் நால்வரும் கொண்டுசெல்லப்பட்டு எப்படி கொலை செய்தனர் என்பதை நடித்து காட்டுவதற்காக சம்பவ இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால் அவர்கள் நால்வரும் காவலர்கள் மீது கல்லெறிந்து தப்பிக்க முயன்றதாக தெரிகிறது இதனால் காவலர்கள் அவர்களை என்கவுண்டர் செய்தனர்.

நான்கு பேரை என்கவுண்டர் செய்த உத்தரவை போலீஸாரை அம்மாநில மக்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். தெலுங்கானா பொலிஸாருக்கு அம்மாநில மக்கள் மலர்தூவி பாராட்டி வருகின்றனர்.

ஹைதெராபாத் என்கவுண்டர் நிர்பயா வின் தாய் கருத்து என்ன?

இதனிடையே நான்கு பேரையும் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றது கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்று நிர்பயாவின் தாய் தெரிவித்துள்ளார்.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் யார்? யார்? அணியில்

0

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இன்று நடக்கிறது.

. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இன்று நடக்கிறது.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் யார்? யார்? அணியில்

அதேநேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் 20 ஓவர் போட்டிக்கு ஏற்ற வீரர்கள் இருப்பதால் கவனமுடன் ஆட வேண்டிய நிலையும் இருக்கிறது. அதேநேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் 20 ஓவர் போட்டிக்கு ஏற்ற வீரர்கள் இருப்பதால் கவனமுடன் ஆட வேண்டிய நிலையும் இருக்கிறது.

தொடக்க வீரர் தவான் மிகவும் மோசமான நிலையில் உள்ளார். ஆனாலும் தேர்வு குழு அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கி உள்ளது. அவர் நெருக்கடியில் இருந்து மீள வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

இது தவிர வாஷிங்டன் சுந்தர், யசுவேந்திர சாஹல் ஆகியோரும் நேர்த்தியாக வீசக்கூடியவர்கள். வேகப்பந்து வீரர்களான முகமது ‌ஷமி, புவனேஷ்வர் குமார் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள். இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும்.
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை தொடர்ச்சியாக இரண்டு முறை (2018 நவம்பர், 2019 ஆகஸ்டு) இழந்து இருந்தது.

இதற்கு தற்போது நடைபெற இருக்கும் தொடரில் பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணி சமீபத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்து இருந்தது.

வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் போல்லார்ட் சிறந்த அதிரடி வீரர் ஆவார். இது தவிர லெண்டில் சிம்மன்ஸ், லீவிஸ், ஹெட்மயர், முன்னாள் கேப்டன் ஜேசன் ஹோல்டர், கோட்ரல் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். 7 மணிக்கு தொடங்கும் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் ஒளிபரப்பு செய்கிறது.

வெப் சீரீசில் கலக்க வரும் முன்னனி இயக்குனர்

0

வெப் சீரீசில் கலக்க வரும் முன்னனி இயக்குனர்

சமீபகாலமாக மக்கள் திரை அரங்கத்திற்கு சென்று படம் பார்க்கும் சதவிகிதம் வெகுவாக குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் செல் ஃபோன் மற்றும் இணையதளம் மட்டுமே. அந்த வரிசையில் இப்போது வெப் சீரிஸ்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளன.

“கேம் ஆஃப் த்ரான்ஸ்” போன்ற பல ஆங்கில தொடர்களுக்கு இந்திய மக்களிடையே பெ‌ரிய அளவிலான வரவேற்பு இருந்தது. அதன் தொடர்ச்சியாக ஹிந்தி மற்றும் பல தென்னிந்திய மொழியில் வெப் சீரிஸ் வர தொடங்கியது. அமேசான், நெட்ஃபலிக்ஸ், ஜீ 5 போன்ற நிறுவனங்கள் பெரிய அளவிலான பொருட்செலவில் வெப் சீரிஸ்களை இயக்க தொடங்கிண.

அந்த வரிசையில் தற்போது காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, போன்ற பல வெற்றி படங்களை இயக்கிய கௌதம் மேனனும் இணைந்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இந்த வெப் சீரிஸ் வெளிவர உள்ளது. தற்போது குவீன் (Queen) எனும் வெப் சீரிஸ் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகிறது. MX நிறுவனத்துடன் இணைந்து ஒன்றாக என்டர்டைன்மென்ட் தயாரிக்கிறது.

இளம் வயது நடிகை, இளம் வயது முதல்அமைச்சர் ஆகிய பெருமைகளை எல்லாம் வைத்து இயக்கி வருகிறார் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். இதன் டீசர் ( டிசம்பர் 5 ) ஜெயலலிதா நினைவு நாளான நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார்.

முன்னதாக இயக்குனர் விஜய் இயக்ககத்தில் கங்கனா நடித்த தலைவி படத்தின் ட்ரைலர் வெளியாகி வரவேற்பையும் சர்ச்சைக்குரிய கருத்தையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

பிரியங்கா ரெட்டி கொலையாளிகள் என்கவுண்டர்: பெரும் பரபரப்பு

0

பிரியங்கா ரெட்டி கொலையாளிகள் என்கவுண்டர்: பெரும் பரபரப்பு

தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் கடந்த 27-ம் தேதி இரவு கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட நால்வரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்க வேண்டும் என பெண் எம்பிக்கள் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தனர். மேலும் இந்த வழக்கில் குற்றவாளிகளை விரைவாக விசாரித்து, கடுமையான தண்டனை வழங்கவும், வழக்கை விசாரிக்க விரைவு நீதிமன்றத்தை அமைக்கவும் தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் கொலை வழக்கில் கைதான நால்வரும் இன்று அதிகாலை சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டு எப்படி கொலை செய்தனர் என்பதை நடித்து காட்டிய போது நால்வரும் தப்பி செல்ல முயன்றதாக தெரிகிறது. இதனை அடுத்து காவல்துறையினர் நால்வரையும் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று நாள் யாருக்கு எப்படி அமையும்? இன்றைய ராசி பலன்கள்

0

இன்று நாள் யாருக்கு எப்படி அமையும்? இன்றைய ராசி பலன்கள்

தேதி: 06.12.2019

மேஷம் :
வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் முயற்சி செய்து வெற்றி உண்டாகும்.வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த தனவரவால் சேமிப்பு அதிகரிக்கும். சொத்துச்சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். நிர்வாக திறமைகள் வெளிப்படும். தம்பதிகளுக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்

அஸ்வினி : நன்மைகள் உண்டாகும்.
பரணி : பொருளாதாரம் மேம்படும்.
கிருத்திகை : அனுகூலம் ஏற்படும்.

ரிஷபம் :
உத்தியோகத் துறையில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பொதுச்செயல்களில் ஈடுபட்டு மகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்பாராத தனவரவால் சேமிப்பு உயரும். உறவினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். பெரியோர்களிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

கிருத்திகை : மகிழ்ச்சி அடைவீர்கள்.
ரோகிணி : சேமிப்பு அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : புகழ் பெறுவீர்கள்.

மிதுனம் :
தொழில்துறையில் உள்ளவர்கள் நண்பர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். பணியில் சக ஊழியர்களால் மனநிம்மதி ஏற்படும். கெளரவ பதவிகளால் உங்களின் மதிப்பு உயரும். தந்தைவழி உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். கொடுக்கல், வாங்கலில் எச்சரிக்கை வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மிருகசீரிஷம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
திருவாதிரை : அனுசரித்து செல்லவும்.
புனர்பூசம் : வார்த்தைகளில் கவனம் தேவை.

கடகம் :
குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வார்த்தைப் போரில் ஈடுபட வேண்டாம். உயர் அதிகாரிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். புதிய நபர்களால் அலைச்சல்கள் ஏற்படும். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்க காலதாமதமாகும். உடைமைகளில் பொருட்களில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்

புனர்பூசம் : அனுகூலமான நாள்.
பூசம் : அலைச்சல்கள் ஏற்படும்.
ஆயில்யம் : பொறுமை வேண்டும்.

சிம்மம் :
உத்தியோகத் துறையில் உள்ளவர்கள் சக ஊழியரிடம் பழகும்போது கவனம் தேவை. செய்யும் செயல்களில் நிதானம் வேண்டும். எண்ணிய செயலை செய்து முடிப்பதில் சில கால தாமதம் உண்டாகலாம். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். புதிய முயற்சிகள் செய்வதில் சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : தென்வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

மகம் : காலவிரயம் ஏற்படும்.
பூரம் : கவனமாக செயல்படவும்.
உத்திரம் : விவேகத்துடன் செயல்படவும்.

கன்னி :
கணவன் மனைவிக்கு இடையே இருந்த சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். செய்யும் செயல்களில் வேகம் அதிகரிக்கும். வியாபாரம் சம்பந்தமான பிரச்சனைகள் குறையும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கைக்கு வரும்.பணியில் ஒருவிதமான குழப்பமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : வெள்ளை நிறம்
அஸ்தம் : பிரச்சனைகள் குறையும்.
சித்திரை : குழப்பமான சூழல் ஏற்படும்.

துலாம் :
புதிய மனை வாங்குவது தொடர்பான முடிவுகள் வெற்றியாகும்.
தொழில் சம்பந்தமான முடிவுகளில் உறவுகளின் ஆதரவு கிடைக்கும். திட்டமிட்ட பணிகள் இனிதே நடைபெறும். பணியில் உயர் அதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். பிள்ளைகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

சித்திரை : முயற்சி வெற்றி ஆகும்.
சுவாதி : சாதகமான நாள்.
விசாகம் : சிந்தனைகள் உருவாகும்.

விருச்சிகம் :
பொருளாதாரம் முயற்சிகளில் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். செய்கின்ற பணியில் திருப்தியான சூழ்நிலை அமையும். மனை சம்பந்தமான விவகாரங்களில் சுமூகமான முடிவுகள் கிடைக்கும். பயணங்கள் தொடர்பான செயல்களில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை வெல்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு நிறம்

விசாகம் : உயர்வு உண்டாகும்.
அனுஷம் : எதிர்ப்புகள் விலகும்.
கேட்டை : வெற்றி உண்டாகும்.

தனுசு :
வியாபாரத்தில் உள்ளவர்கள் வாடிக்கையாளர்களிடம் கவனமாக செயல்படவும்.குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். எதிர்பாராத தனவரவுகளால் மேன்மையான சூழ்நிலை அமையும். நண்பர்களிடத்தில் இருந்துவந்த மனக்கசப்புகள் அகலும். பூமி விருத்திக்கான பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மூலம் : சுபமான நாள்.
பூராடம் : மனச் சஞ்சலம் விலகும்.
உத்திராடம் : அலைச்சல்கள் ஏற்படும்.

மகரம் :
பொன் பொருள் தன சேர்க்கை உண்டாகும். தம்பதிகளுக்கிடையே புரிதல் உணர்வு அதிகரிக்கும். கூட்டாளிகளால் பொருள் இலாபம் உண்டாகும். திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் சுபிட்சம் உண்டாகும். சம வயதினரால் நன்மைகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

உத்திராடம் : புரிந்து செயல்படுவீர்.
திருவோணம் : சேமிப்பு உயரும்.
அவிட்டம் : நன்மை உண்டாகும்.

கும்பம் :
உடல்நலத்தில் முன்னேற்றமான சூழ்நிலை ஏற்படும்.
செய்கின்ற பணியில் இடமாற்றம் ஏற்படலாம். குடும்ப
உறுப்பினர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பாலின மக்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும்.எண்ணிய செயலை முடிப்பதில் துரிதம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அவிட்டம் : இடமாறுதல் ஏற்படலாம்.
சதயம் : இன்னல்கள் குறையும்.
பூரட்டாதி : உடல் நலம் சீராகும்.

மீனம் :
வெளியூர் பயணங்களில் மூலம் அனுகூலமான சூழ்நிலை ஏற்படும்.
கலை சம்பந்தமான அறிவால் முன்னேற்றமான சூழல் ஏற்படும். சபைகளில் எதிர்பார்த்த ஆதரவால் மகிழ்ச்சி உண்டாகும். சாதுர்யமான பேச்சுக்களால் பிரச்சனைகளை பேசி முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

பூரட்டாதி : ஜெயம் உண்டாகும்.
உத்திரட்டாதி : சந்தோசமான சூழல் ஏற்படும்.
ரேவதி : சிந்தனைகள் வெற்றி பெறும்.

ஜோதிடர்: சிவஸ்ரீ த. ஸ்ரீமுருகன் குருக்கள்.

நித்தியின் விலாசம் – கைலாசம் கொண்டாட்டத்தில் பக்தர்கள்

0

நித்தியின் விலாசம் – கைலாசம் கொண்டாட்டத்தில் பக்தர்கள்

பெங்களூருவில் பிடதி ஆசிரமம் அமைத்து மக்கள் மத்தியில் ஆன்மீக சொற்பொழிவாற்றி பிரபலமடைந்தவர் நித்தியானந்தா. இவர் மீது பாலியல் குற்றச்சாட்டு, சிறுமிகளை வசியப் படுத்துதல், பணம் நகைகளை அபகரிப்பது போன்ற பல்வேறு புகார்கள் இருக்கின்றன. இதுபோல பல்வேறு சர்ச்சைகளுக்கு பயந்து அவர் வெளிநாட்டுக்கு சென்று விட்டதாகவும் தகவல்கள் உண்டு. ஆனால் அவ்வப்போது இணையதளத்தில் தோன்றி தன்மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து வருகிறார் நித்யானந்தா.

சென்ற மாதத்தில் கூட தனது மகள்களை நித்தியானந்தா அடைத்து வைத்திருப்பதாகவும் அவர்களை விடுவிக்கக் கோரியும் குஜராத்தைச் சேர்ந்த ஒருவர் நித்யானந்தா மீது வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த சர்ச்சைகள் அடங்குவதற்குள் தற்போது நித்தியானந்தா ஒரு தீவையே விலைக்கு வாங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன .

அதன்படி தென் அமெரிக்காவின் ஈக்வடார் நாட்டின் ஒரு தீவையே நித்தியானந்தா வாங்கி இருப்பதாகவும் அதற்கு அவர் கைலாசம் என பெயரிட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த நாட்டின் தனிக்கொடி, இலட்சினை, பாஸ்போர்ட் போன்றவற்றை தயார் செய்து விட்டதாகவும் தகவல்கள் பரவுகின்றன. அதுமட்டுமில்லாமல் இந்த நாட்டை சட்டப்படி அங்கீகரிப்பதற்கு அங்குள்ள அரசு அதிகாரிகளால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக நித்தியானந்தா இணையத்தில் தோன்றி தன்னை யாராலும் அழித்துவிட முடியாது என நேரலையில் தனது ஆதரவாளர்கள்/ பக்தர்கள் மத்தியில் பேசியிருக்கிறார்.