Home Blog Page 5876

10 ஆண்டுகளில் தமிழ்நாட்டை தாக்கிய 54 புயல்களில் 359 பேர் பலி

0
10 ஆண்டுகளில் தமிழ்நாட்டை தாக்கிய 54 புயல்களில் 359 பேர் பலி

10 ஆண்டுகளில் தமிழ்நாட்டை தாக்கிய 54 புயல்களில் 359 பேர் பலி
கஜா புயல் தொடர்பான ஆய்வறிக்கையை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தாக்கல் செய்துள்ளது.

அதில் கடந்த 10 ஆண்டுகளில் புயல்கள், அதில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை பற்றிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அதன் விவரம் தமிழ்நாட்டில் 2000-ம் ஆண்டுக்கு பிறகு 6 பெரிய புயல்கள் உருவாகின. 2005-ம் ஆண்டில் மட்டும் பியார், பாஸ், பானுஸ் என 3 புயல்கள் உருவாகி சேதத்தை உருவாக்கின.

அதன் பின்னர் 10 ஆண்டுகளில் வீசிய 5 புயல்கள் பெரும் உயிர் சேதத்தை உருவாக்கின. அதன்பின்னர் 10 ஆண்டுகளில் வீசிய 5 புயல்கள் பெரும் உயிர்சேதத்தை ஏற்படுத்தின. 2008-ல் நிஷா புயல் உருவாகி 102 கிலோமீட்டர் வேகத்தில் காரைக்கால் பகுதியை தாக்கியது. இதில் 189 பேர் இழந்தனர் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளில் தமிழ்நாட்டை தாக்கிய 54 புயல்களில் 359 பேர் பலி

2011-ம் ஆண்டில் வீசிய தானே புயல் கடலூர், புதுச்சேரி பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த புயல் 38 உயிரை பறித்தது. 2016-ல் உருவான வர்தா புயலில் 22 பேரும் உயிர் இழந்தனர். கன்னியாகுமரியில் 2017 ஆம் ஏற்பட்ட ஒக்கி புயலில் 185 மீனவர்கள் காணாமல் போனார்கள்.

ஒக்கி புயலை தொடர்ந்து வீசிய கஜா புயல் தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இது வரை 359 பேர் உயிர் இழந்துள்ளனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியாவை கைப்பற்றிய பின்லாந்து நிறுவனம்: மீண்டும் தொழில் நகரமாகும் ஸ்ரீபெரும்புதூர்

0

நோக்கியாவை கைப்பற்றிய பின்லாந்து நிறுவனம்: மீண்டும் தொழில் நகரமாகும் ஸ்ரீபெரும்புதூர்

கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வந்த நோக்கியா நிறுவனம் மூடப்பட்ட நிலையில் இந்த நிறுவனத்தை பின்லாந்து நாட்டின் சால்காம்ப் என்ற நிறுவனம் நோக்கியா வளாகத்தை கையகப்படுத்தி உள்ளதாகவும், அடுத்த ஆண்டு மார்ச் முதல் மீண்டும் நோக்கியா நிறுவனம் அதே இடத்தில் தொடங்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

ரூ.350 கோடி சால்காம்ப் நிறுவனம் வாங்கியுள்ள நிலையில் மேலும் ரூ.2000 கோடி அளவுக்கு முதலீடு செய்ய உள்ளதாகவும், இதனால் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள சுமார் 10 ஆயிரம் பேர்களுக்கு வேலை கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தொழில் மந்தமாக இருந்த நிலையில் இந்த ஆலை திறந்துவிட்டால் மீண்டும் தொழில் நகரமாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது

2019-ம் ஆண்டு தமிழக அரசு நடத்திய தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் சால்காம்ப் நிறுவனம் கலந்து கொண்டு தமிழகத்தில் ரூ.500 கோடி அளவுக்கு முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்தது என்பது தெரிந்ததே. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் தற்போது நோக்கியா நிறுவனத்தை விலைக்கு வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே ஆப்பிள் போன் நிறுவனம் தனது ஐபோன் எக்ஸ்.ஆர். போனை இந்தியாவில் தயாரித்து ஏற்றுமதி செய்ய உள்ள திட்டமிட்டுள்ளதால் செல்போன் உற்பத்தியில் இந்தியா உலக அளவில் முக்கியத்தும் பெரும் நாடாக உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா? தலித்துகளுக்கு இடஒதுக்கீடு கேட்டு செ.கு.தமிழரசன் வழக்கு

0

உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா? தலித்துகளுக்கு இடஒதுக்கீடு கேட்டு செ.கு.தமிழரசன் வழக்கு

உள்ளாட்சி அமைப்புக்களில் மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படும் துணை மேயர், துணைத் தலைவர் போன்ற பதவிகளில், பட்டியலின மற்றும் பழங்குடியின பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க, தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சிகள், 33 மாவட்ட பஞ்சாயத்துக்கள், 152 நகராட்சிகள், 561 பேரூராட்சிகள், 388 பஞ்சாயத்து ஒன்றியங்கள், 12,618 கிராம பஞ்சாயத்துக்கள் என, 13,870 பதவிகள் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இதுதவிர, உள்ளாட்சி அமைப்புக்களில் பல்வேறு நிலைக் குழுக்களும் உள்ளன. இக்குழுக்களில் பட்டியலின மற்றும் பழங்குடியின பெண்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

துணை மேயர், துணைத் தலைவர் பதவிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டால், நான்கு மாநகராட்சிகளில் துணை மேயர், 46 நகராட்சிகளில் துணைத் தலைவர், 168 பேரூராட்சிகளில் துணைத் தலைவர்கள், மாவட்ட பஞ்சாயத்தில் ஒரு துணைத் தலைவர், 3,786 கிராம பஞ்சாயத்து துணைத் தலைவர் பதவிகள் பட்டியலின மற்றும் பழங்குடியின பெண்களுக்கு கிடைக்கும் எனக் கூறியுள்ள அவர், துணைமேயர், துணைத் தலைவர் பதவிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கக் கோரி அரசுக்கு மனு அளித்தும் எந்த பதிலும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளாட்சி அமைப்புகளின் துணை மேயர், துணைத் தலைவர் பதவிகளில் பட்டியலின மற்றும் பழங்குடியின பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் வரை உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி கொண்ட அமர்வு, தமிழக தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை செயலாளர், மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 7 ம் தேதிக்கு தள்ளி வைத்தது.

மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்: முதல்வர், துணை முதல்வர் ராஜினாமாவா?

0

மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்: முதல்வர், துணை முதல்வர் ராஜினாமாவா?

மகாராஷ்டிராவில் அரசியல் களம் கடந்த ஓரிரு மாதங்களாக டி20 கிரிக்கெட் போட்டி போல ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக இருந்த நிலையில் இன்று சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவால் பெரும் திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன

முதல்வர் பட்னாவிஸ் தலைமையிலான அரசு நாளை மாலை 5 மணிக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே நேற்று சிவசேனா காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 162 எம்எல்ஏக்கள் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் அணிவகுக்கப்பட்ட நிலையில் பாஜக, அஜித் பவார் கூட்டணிக்கு 126 எம்எல்ஏக்கள் மட்டுமே இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

எனவே நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பட்னாவிஸ் அரசு தப்பிக்க வழியே இல்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில் சற்று முன் துணை முதல்வர் அஜித் பவார் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

இதனை அடுத்து முதல்வர் பட்னாவிஸ் அவர்களும் ராஜினாமா செய்துவிட்டதாகவும் இன்னும் சில நிமிடங்களில் அவர் பத்திரிகையாளர்களை சந்திக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன

நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னரே முதல்வர் மற்றும் துணை முதல்வர் ராஜினாமா செய்துள்ளதாக வெளி வந்துள்ள தகவல் மகாராஷ்டிர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் விரைவில் சிவசேனா தலைமையிலான புதிய அரசு மகாராஷ்டிராவில் பதவி ஏற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 மற்றும் பொங்கல் பரிசு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

0

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 மற்றும் பொங்கல் பரிசு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை இன்று (அக்.26) முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
அதன்பின் பேசிய முதல்வர், பொங்கல் பரிசுத் தொகுப்பு இந்த ஆண்டும் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசும்போது, பொங்கல் விழா தமிழ் மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட வேண்டும் என்றும் . தமிழ் மரபையும் பாரம்பரியத்தையும் அடையாளப்படுத்தும் இவ்விழா, தமிழ் மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். எனவேதான் கடந்த ஆண்டு, வறட்சி ஏற்பட்டிருந்த நிலையில், ஏழை மக்களைப் பாதிக்காத வண்ணம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ,1000-ம், பொங்கல் பரிசுத் தொகுப்பும் அரசி அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வழங்கியது.

கடந்த ஆண்டை போல அனைத்து அரிசி அட்டை தாரர் களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்கப்படும் என்றும் . சென்ற ஆண்டு பொங்கல் வைப்பதற்கான பொருட்கள் வழங்கப்பட்டன. அதேபோல, இந்த ஆண்டும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை உட்பட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.என்று முதல்வர் பழனிசாமி பேசினார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 மற்றும் பொங்கல் பரிசு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அஜித் திமுக: புதிய அரசியல் கட்சியால் பெரும் பரபரப்பு

0

அஜித் திமுக: புதிய அரசியல் கட்சியால் பெரும் பரபரப்பு

அஜித்தை அரசியலுக்கு இழுக்க வேண்டும் என அதிமுக, பாஜக உள்பட பல கட்சிகள் முயற்சி செய்து வரும் நிலையில் திடீரென மதுரையில் ’அஜித் திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற புதிய கட்சியை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருக்கும் செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது

மதுரையில் உள்ள முக்கிய இடங்களில் ’அஜித் திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற கட்சியை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் அஜித் மற்றும் எம்ஜிஆர் படங்கள் இருக்கின்றன என்பதால் அஜித் ரசிகர்கள் அல்லது எம்ஜிஆர் அபிமானிகள் இந்த போஸ்டரை ஒட்டி இருக்கலாம் என்று கருதப்படுகிறது

இருப்பினும் இந்த பெயரில் உண்மையிலேயே கட்சி ஆரம்பிக்கப்பட்டதா? என்பது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

அஜித் பெயரில் கட்சியை ஆரம்பித்திருந்தால் கண்டிப்பாக அஜித் தரப்பில் இருந்து மறுப்பு அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தனது ரசிகர்கள் பாஜகவில் இணைந்தது குறித்து வெளிவந்த செய்தியை அடுத்து அஜித் தனது எதிர்ப்பை அறிவிப்பு ஒன்றின் மூலம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அசைக்க முடியாத நிலையில் இந்தியா

0

அசைக்க முடியாத நிலையில் இந்தியா

உலக அரங்கில் டெஸ்ட் கிரிக்கெட் வரவேற்பை அதிகரிக்க உலக கோப்பை போல் உலக டெஸ்ட் தொடரை நடத்த ஐசிசி முடிவு செய்தது அதன் படி ஒரு அணி உள்ளுறிலூம் மற்றும் வெளி நாடுகளிலும் டெஸ்ட் தொடரை ஆட வேண்டும் ஒரு தொடருக்கு 120 புள்ளிகள் வழங்கப்படும் எடுத்துகாட்டாக 5 டெஸ்ட் கொண்ட தொடர் என்றால் ஒரு டெஸ்ட் க்கு 24 புள்ளிகள் வழங்கப்படும் அது போல இரண்டு போட்டி கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் என்றால் போட்டிக்கு 60 புள்ளிகள் வழங்கப்படும். ஆசஸ் டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இருந்து கணக்கு கொள்ளபடும்.

அசைக்க முடியாத நிலையில் இந்தியா

அதன்படி ஆஷஸ் தொடர் 5 போட்டிகள் கொண்ட தொடர் என்பதால் ஒரு போட்டியில் வென்றால் 24 புள்ளிகள். அந்தவகையில், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றதால் இரு அணிகளும் 24 புள்ளிகளை பெற்றன. ஒரு போட்டி டிரா ஆனதால் இரு அணிகளுக்கும் தலா 12 புள்ளிகள் வழங்கப்பட்டன. ஆஸ்திரேலிய அணி இரண்டாம் இடத்திலும் இங்கிலாந்து அணி ஆறாம் இடத்திலும் உள்ளன.

Second test cricket match between India and Bangladesh
Second test cricket match between India and Bangladesh

இந்தியா இது வரை மூன்று டெஸ்ட் தொடரில் ஒன்றில் கூட தோல்வி பெறவில்லை இதனால் இந்தியா 360 புள்ளிகளுடன் அசைக்கமுடியாத இடத்தில் உள்ளது அடுத்த இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா 116 புள்ளிகள் மட்டுமே பெற்று உள்ளது.எனவே வரும் தொடர்களில் இந்தியா அபார வெற்றி பெற்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் பையும்,வென்று சாதனை படைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

‘சூரரை போற்று’ படத்திற்காக சூர்யா பாடிய இரண்டாவது பாடல்!

0

‘சூரரை போற்று’ படத்திற்காக சூர்யா பாடிய இரண்டாவது பாடல்!

தளபதி விஜய் போலவே தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் ஒரு பாடலை பாட நடிகர் சூர்யா சமீபத்தில் முடிவு எடுத்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இதனடிப்படையில் ’சூரரைப்போற்று’ படத்தில் ’மாறா’ என்ற தீம் மியூசிக் பாடல் ஒன்றை சூர்யா பாடியதாகவும் இந்த தீம் மியூசிக் பாடல் மிக சிறப்பாக வந்திருப்பதாகவும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்கள் தனது டுவிட்டரில் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இதனை அடுத்து சூர்யா பாடிய ராப் பாடலான மாறா பாடல் விரைவில் சிங்கிள் பாடலாக வெளிவரும் என்று அவரது ரசிகர்கள் காத்திருந்தனர்

இந்த நிலையில் சூர்யா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் இதே படத்தில் சூர்யா இன்னொரு பாடலையும் பாடி இருப்பதாக சற்றுமுன் தகவல்கள் வெளிவந்துள்ளது. சூரரைப்போற்று படத்தின் தெலுங்கு பதிப்பிலும் இதே ’மாறா’ தீம் பாடலை சூர்யா பாடி இருப்பதாகவும் இந்த பாடல் நேற்று ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

எனவே சூர்யா இந்தப் படத்திற்காக தமிழ் தெலுங்கு என இரண்டு பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல்கள் ஹிட்டானால் தொடர்ந்து அவர் தான் நடிக்கும் படங்களில் பாடல்கள் பாட பாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது

மகாராஷ்டிரா அரசுக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

0

மகாராஷ்டிரா அரசுக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா தலைமையிலான அரசு அமைய அனைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தபோது திடீரென பாஜக அரசு பொறுப்பேற்றது. அந்த அரசுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவு ஆதரவு அளித்ததால் பெரும் திருப்பம் ஏற்பட்டது

இந்த நிலையில் முதல்வர் பட்னாவிஸ் அரசுக்கு எதிராக சிவசேனா தொடர்ந்த வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின்படி மகாராஷ்டிர மாநிலத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்னதாக இடைக்கால சபாநாயகர் ஒருவர் நியமனம் செய்யப்பட வேண்டும் என்றும், அவரது தலைமையில் அனைத்து உறுப்பினர்களும் உறுப்பினராக பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது

இதனையடுத்து இடைக்கால சபாநாயகர் தலைமையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும், இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு மறைமுகமாக நடத்தக்கூடாது என்றும், அதுமட்டுமின்றி நம்பிக்கை வாக்கெடுப்பை தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது

ஏற்கனவே நேற்று சிவசேனா கூட்டணிக்கு 162 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதை அக்கூட்டணியினர் நிரூபித்த நிலையில் மீதி உள்ள 126 எம்எல்ஏக்களை வைத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

சபரிமலைக்கு வந்த பெண்களை பெப்பர் ஸ்ப்ரே அடித்து விரட்டிய பக்தர்கள்: பெரும் பரபரப்பு

0

சபரிமலைக்கு வந்த பெண்களை பெப்பர் ஸ்ப்ரே அடித்து விரட்டிய பக்தர்கள்: பெரும் பரபரப்பு

சபரிமலை கோவிலுக்கு சென்று ஐயப்பனை வழிபட கருப்பு உடை மற்றும் மாலை அணிந்து வந்த பெண்கள் சிலரை ஐயப்ப பக்தர்கள் பெப்பர் ஸ்பிரே மற்றும் மிளகாய் பொடி ஸ்பிரே அடித்து விரட்டியது பெரும் பரபரப்பு ஏற்பட்டது

கேரளாவைச் சேர்ந்த ஐந்து பெண்கள் சபரிமலைக்கு செல்வதற்காக கொச்சி காவல்நிலையத்தில் அனுமதி பெற வந்தனர். அவர்கள் அங்கு அனுமதி பெற்ற பின்னர் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது, அங்கு தயாராக இருந்த ஐயப்ப பக்தர்கள் சிலர் திடீரென அந்தப் பெண்கள் மீது மிளகாய் பொடி மற்றும் பெப்பர் பொடி தூவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இதுகுறித்த வீடியோக்கள் தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் பெண்கள் சபரிமலைக்கு செல்வதை தடுக்கும் ஒரு சில அமைப்பினர் இவ்வாறு செய்து வருவதாகவும் இதனை அடுத்து காவல்துறையினர் எடுத்த நடவடிக்கையின் பேரில் பெப்பர் ஸ்பிரே அடித்த இரண்டு பேர்களை கைது செய்திருப்பதாகவும் போலீசார் தரப்பிலிருந்து தெரிவித்துள்ளனர்

சபரிமலைக்குச் சென்ற பெண்கள் மீது பெப்பர் ஸ்பிரே அடித்த சம்பவத்திற்கு மகளிர் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதால்தான் பெண்கள் சபரிமலைக்கு செல்கின்றனர் என்றும், சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது போலீசாரின் கடமை என்றும், போலீஸ் நிலையத்தின் வாசலிலேயே இவ்வாறு ஒரு கொடுமையான சம்பவம் நடந்தது கண்டிக்கத்தக்கது என்றும் மகளிர் அமைப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.