Home Blog Page 5877

ஐ.எஸ்.எல் கால்பந்து: சென்னை அணிக்கு கிடைத்த முதல் வெற்றி

0

ஐ.எஸ்.எல் கால்பந்து: சென்னை அணிக்கு கிடைத்த முதல் வெற்றி

ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் சென்னையின் எப்.சி அணிக்கு நேற்று முதல் வெற்றி கிடைத்தது.

நேற்றைய போட்டியில் சென்னை அணி வீரர்கள் மிகவும் ஆக்ரோஷமாக மோதினர். எப்படியும் இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற வெறி அவர்களது விளையாட்டில் தெரிந்தது. இருந்தும் சென்னை வீரர்கள் கோல் போட எடுத்த 7 முயற்சிகளும் தோல்வி அடைந்ததால் முதல் பாதியில் 0-0 என்ற கணக்கில் இருந்தது

இந்த நிலையில் போட்டியின் 90+2வது நிமிடத்தில் சென்னை வீரர் ஒரு போல் போட, அதனை அடுத்து 90+5வது நிமிடத்தில் ஐதராபாத் ஒரு கோல் போட்டதால் மீண்டும் சமநிலை பெற்றது. இந்த நிலையில் 90+6வது நிமிடத்தில் சென்னை அணி மீண்டும் ஒரு கோல் போட்டதால் 2-1 என்ற கோல்கணக்கில் சென்னை அணி வெற்றி பெற்றது

சென்னை அணி இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடி மூன்றில் தோல்வியும் இரண்டில் டிராவும் ஒரு வெற்றியும் பெற்றுள்ளது. நேற்று போட்டி தொடங்கும் வரை சென்னை அணி கடைசி இடத்தில் அதாவது 10வது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியின் வெற்றியின் மூலம் 10வது இடத்தில் இருந்த சென்னை அணி தற்போது 9வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கொல்கத்தா, பெங்களூரு, கோவா, நார்த் ஈஸ்ட் யூனிடெட், ஜாம்ஷெட்பூர் ஆகிய அணிகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை

0

வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை

தொடர்ந்து உயர்ந்து வரும் சமையலுக்கு பயன்படுத்தும் பெரிய வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.இதற்காக எகிப்தில் இருந்து 6090 டன்கள் அளவிற்கு வெங்காயத்தை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

தேசிய அளவில் வெங்காய உற்பத்தியில் மகாராஷ்டிர மாநிலம் தான்முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் உள்ள நாசிக் மாவட்டத்தில் இருக்கும் லாசல்கான் வெங்காய சந்தையில் இருந்து தான் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் வெங்காயம் அனுப்பப்படுகிறது. இதற்கு அடுத்து கர்நாடக மாநிலத்திலும் அதிக அளவில் வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது.

கடந்த மாதம் மகாராஷ்டிராவில் துரதிஷ்டவசமாக பருவம் தவறி மழை பெய்தது. குறிப்பாக அந்த பகுதியில் தென்மேற்குப் பருவமழை காலத்தில் மட்டுமே மழை பெய்யும். அந்த சமயத்தில் பயிரிடப்பட்ட வெங்காயம் வளர்ந்து சிறிது காலத்தில் அறுவடை செய்யும் நிலையில் அமையும். வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில் அரபிக்கடலில் ஏற்பட்ட கியார் மற்றும் மஹா புயல் சின்னத்தால் மகாராஷ்டிரா மாநிலத்தில் கன மழை பெய்தது.

இவ்வாறு பருவம் தவறி கடந்த மாதம் பெய்த இந்த கனமழையால் அறுவடை செய்யும் நிலையில் இருந்த வெங்காயப் பயிர்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. இதனால் வெங்காயம் பயிரிட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் இதனால் போதிய வெங்காயம் சந்தைக்கு வராத நிலையில் அதன் விலையும் மார்கெட்டில் தொடர்ந்து உயர்ந்தது.

இந்நிலையில் நாட்டின் பல நகரங்களிலும் சில்லறை விற்பனையில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகபட்சமாக 120 ரூபாய் வரை தொட்டது. இதனையடுத்து விலையை செயற்கையாக உயர்த்தும் வகையில் வெங்காயத்தைப் பதுக்கி வைத்திருக்கும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் உத்தரவிட்டன.

பின்னர் வெங்காயத்தின் விலை சற்று குறைந்து விற்பனையாகி வந்த நிலையில் தற்போது மீண்டும் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனையில் தற்போது வெங்காயத்தின் கிலோ 100 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது.

இதனால் வெங்காயத்தின் விலையைக் குறைக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியது. இதற்காக ஈரான், எகிப்து, துருக்கி உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நாடுகளில் இருந்து கடல் வழியாக 80 முதல் 100 கண்டெய்னர்கள் அளவுக்கு பெரிய வெங்காயம் இறக்குமதி செய்ய அதிரடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டன. குறிப்பாக தனியார் நிறுவனங்கள் வெங்காயத்தை இறக்குமதி செய்யவும் அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து முதல்கட்டமாக 1000 டன்கள் வெங்காயத்தை இறக்குமதி செய்ய தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில் இந்த வெங்காயம் அடுத்த வாரத்தில் இந்தியா வந்தடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே பொதுத்துறை நிறுவனமான தேசிய விவசாய கூட்டுறவு விற்பனை நிலையம் மூலமாக எகிப்தில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலமாக எகிப்தில் இருந்து 6090 டன்கள் வெங்காயம் மும்பை துறைமுகத்துக்கு விரைவில் வந்து சேரும் என நுகர்வோர் நலத்துறை செயலாளர் ஸ்ரீவத்சவா கூறியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் நடக்குமா? அரசியல் விமர்சகர்கள் எழுப்பும் கேள்விகள்

0

உள்ளாட்சி தேர்தல் நடக்குமா? அரசியல் விமர்சகர்கள் எழுப்பும் கேள்விகள்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறும் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தாலும், இந்த தேர்தல் நடப்பது சந்தேகமே என அரசியல் விமர்சகர்கள் தொலைக்காட்சி விவாதங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்காக விருப்ப மனுக்களை ஒரு பக்கம் பெற்று வரும் நிலையில், இன்னொரு பக்கம் இரண்டு கட்சிகளுமே நாடகம் ஆடுகின்றன என்றும் இந்த விஷயத்தில் இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த அல்லது தள்ளிப்போட மறைமுகமாக முயற்சித்து வருவதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

இன்னும் ஒரு ஆண்டில் சட்டமன்ற பொதுத்தேர்தலை சந்திக்க இருக்கும் நிலையில் உள்ளாட்சித் தேர்தலை தற்போது சந்திப்பது சரியாக இருக்காது என்று இரண்டு கட்சிகளும் நினைப்பதாகவும், மேலும் இந்த தேர்தலில் தொகுதிகளை பிரித்து கொடுக்கும்போது கூட்டணி கட்சிகளுடன் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் அது சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்றும் இரு கட்சிகளும் கருதுவதாகவும் தெரிகிறது

எனவே வழக்கு அல்லது வேறு ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க இரண்டு கட்சிகளின் முன்னணி தலைவர்கள் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் உள்ளாட்சி தேர்தல் குறித்த வழக்கை யாராவது பதிவு செய்து தேர்தலை நடத்த விடாமல் செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர். இது எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தூர்தர்ஷன் – பொதிகை தொலைக்காட்சியில், அறிவிப்பாளர் பணிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

0

தூர்தர்ஷன் – பொதிகை தொலைக்காட்சியில், அறிவிப்பாளர் பணிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடத்தில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக பட்டம். ஆர்வமுள்ளவர்கள் தங்கள் சுய விபரங்களுடன் கூடிய விண்ணப்பத்தில், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி, நிலைய இயக்குநர், பொதிகை தொலைக்காட்சி, எண் 5, சுவாமி சிவானந்தா சாலை, சென்னை 600005 என்ற முகவரிக்கு அனுப்பவும். விண்ணப்பிக்க கடைசி நாள் இம்மாதம் அதாவது நவம்பர் 30-ஆம் தேதி ஆகும். இந்தப் பணியிடம் ஒப்பந்த அடிப்படையிலானது, நிரந்தர பணிக்கு உரியதல்ல என்று நிர்வாகத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தூர்தர்ஷன் - பொதிகை தொலைக்காட்சியில், அறிவிப்பாளர் பணிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

கார் கடன் வாங்கும்போது எத்தனை ஆண்டுகள் EMI போடுவது சிறந்தது?

0

கார் கடன் வாங்கும்போது எத்தனை ஆண்டுகள் EMI போடுவது சிறந்தது?

பலருக்கும் கார் வாங்குவது வாழ்க்கையில் ஒரு பெரும் முதலீடாக இருக்கிறது. நம் நாட்டில் கார் வாங்குவோரில் 80 சதவீதத்தினர் கடன் திட்டங்கள் மூலமாகவே, தங்களது கார் ஆசையை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

ஆனால், தங்களது வருவாய்க்கு தகுந்தவாறு சரியான கடன் திட்டங்களையும், பட்ஜெட்டையும் தேர்வு செய்வது மட்டுமின்றி, சரியான கால அளவில் மாதத் தவணைகளை திருப்பிச் செலுத்துவதற்கான கடன் திட்டங்களை தேர்வு செய்வதும் அவசியம். அதுகுறித்த சில தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் பகிர்ந்து கொள்கிறோம்.

கடன் திட்டம்
கார் கடன் திட்டங்கள் பல்வேறு திருப்பிச் செலுத்தும் கால அளவு கொண்டதாக இருக்கிறது. புதிய காருக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் [84 மாதங்கள்] வரையிலும், பழைய காருக்கு 5 ஆண்டுகள் [60 மாதங்கள்] வரையிலும் திருப்பிச் செலுத்தும் கால அளவுகள் கொடுக்கப்படுகிறது. பழைய கார் என்றால் தயாரிப்பு ஆண்டுக்கு தக்கவாறு கார் கடன் திட்டத்தின் திருப்பிச் செலுத்தம் கால அளவு மாறுபடும்.

வருவாய்க்கு தக்கவாறு திருப்பிச் செலுத்துவதற்கான கால அளவை தேர்வு செய்து கொள்ளலாம். கார் கடன் வாங்குவதற்கு, சிலருக்கு வருவாய் போதுமானதாக இருக்காது. அது போன்ற சூழல்களில், மனைவி அல்லது குடும்பத்தில் வருவாய் உள்ள மற்றொரு உறுப்பினரை இணை விண்ணப்பதாரராக சேர்த்துக் கொண்டு அதிகபட்சமான திருப்பிச் செலுத்தும் மாதத் தவணைகள் கொண்ட கடன் திட்டத்தை தேர்வு செய்யலாம்.

இதன் மூலமாக, மாதத் தவணை குறைவாக இருக்கும் என்பதால், மாத செலவுகளை சமாளிக்க ஏதுவாகும். ஆனால், வட்டி விகிதம் அதிகமாக இருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, ரூ. 35,000 மாத வருமானம் உள்ளவர்கள் மாதத் தவணை ரூ.10,000க்கு மிகாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

கார் கடன் வாங்கும்போது எத்தனை ஆண்டுகள் EMI போடுவது சிறந்தது?

பொதுவாக புதிய காருக்கு கடன் வாங்கும்போது 5 ஆண்டுகளிலும், பழைய காருக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகளிலும் மாதத் தவணைகளை திருப்பிச் செலுத்தி விடுவது நல்லது. புதிய காருக்கு அதிகபட்சமான 7 ஆண்டுகள் வரை மாதத் தவணைகள் கொண்ட கடன் திட்டங்களுக்கு வட்டி விகிதம் அதிகம் என்பதுடன், நீண்ட நாள் திருப்பி செலுத்துவதால் உங்களது பொருளாதாரத்திலும் தடுமாற்றத்தை ஏற்படுத்தும்.

பொதுவாக புதிய காருக்கு கடன் வாங்கும்போது 5 ஆண்டுகளிலும், பழைய காருக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகளிலும் மாதத் தவணைகளை திருப்பிச் செலுத்தி விடுவது நல்லது. புதிய காருக்கு அதிகபட்சமான 7 ஆண்டுகள் வரை மாதத் தவணைகள் கொண்ட கடன் திட்டங்களுக்கு வட்டி விகிதம் அதிகம் என்பதுடன், நீண்ட நாள் திருப்பி செலுத்துவதால் உங்களது பொருளாதாரத்திலும் தடுமாற்றத்தை ஏற்படுத்தும்.

இது கோவா, கர்நாடகா இல்லை: ஆதரவு எம்.எல்.ஏக்கள் மத்தியில் சரத்பவார் ஆவேசம்

0

இது கோவா, கர்நாடகா இல்லை: ஆதரவு எம்.எல்.ஏக்கள் மத்தியில் சரத்பவார் ஆவேசம்

பெரும்பான்மை இல்லாமல் ஆட்சியமைக்க இது கோவா அல்லது கர்நாடகா அல்ல என்றும், இது மகாராஷ்டிரா என்றும் தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் மத்தியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் பேசினார்.

இன்று இரவு சரியாக 7 மணிக்கு பத்திரிகையாளர்கள் முன் 162 எம்.எல்.ஏக்களை அணிவகுத்து காட்டிய சரத்பவார், எங்கள் கூட்டணியில் 162 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றார்கள் என்பதை நிரூபித்துவிட்டோம். இங்கே 162 எம்.எல்.ஏக்கள் என்றால், அங்கே 126 எம்.எல்.ஏக்கள் மட்டுமே இருப்பார்கள். எனவே எந்த அடிப்படையில் ஆட்சி அமைக்க பாஜகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பிய சரத்பவார், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது இன்னும் அதிகமான எம்எல்ஏக்களை அழைத்து வருவோம் என்று பத்திரிகையாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.

இந்த நிலையில் நாளை சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில் பட்நாவிஸ் தலைமையிலான அரசை உடனே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டால், அவரது ஆட்சி கவிழும் என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

இதுவரை அமித்ஷா ஐடியா அனைத்து மாநிலங்களிலும் வெற்றியைத்தான் கொடுத்துள்ளது. அந்த மாயாஜாலம் மகாராஷ்டிராவிலும் தொடருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

நடிகர் சங்க தேர்தலையே நடத்த முடியாதவர்கள் நாட்டை வழிநடத்துவார்களா? ஓ.எஸ்.மணியன்

0

நடிகர் சங்க தேர்தலையே நடத்த முடியாதவர்கள் நாட்டை வழிநடத்துவார்களா? ஓ.எஸ்.மணியன்

நடிகர் சங்க தேர்தலையே ஒழுங்காக நடத்த முடியாத நடிகர்கள் நாட்டை வழி நடத்துவார்கள் என்ற என்று தமிழக அமைச்சர் ஓ எஸ் மணியன் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சமீபத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் தேர்தல் நடத்தியபோது அதில் முறைகேடு நடந்ததாக கூறி ஒரு தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், நடிகர் சங்க தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் இன்னும் எண்ணப்படாமல் உள்ளன. எனவே நடிகர் சங்க தேர்தல் நடைபெற்று முடிந்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் முடிவு அறிவிக்கப்படாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த தேர்தலின் போது பல குழப்பங்கள் நடைபெற்றதாகவும் குறிப்பாக தபால் ஓட்டுகளை ரஜினிகாந்த் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் ஓட்டு போட முடியாத வகையில் குழப்பங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் நடிகர் சங்க தேர்தலையே ஒழுங்காக நடத்தி நியாயமான முடிவை ஏற்படுத்த முடியாத மூத்த நடிகர்கள் நாட்டை எப்படி வழிப்படுத்த முடியும் என்று அமைச்சர் ஓ எஸ் மணியன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கேள்விக்கு முன்னர் ரஜினி, கமல், போன்ற மூத்த நடிகர்களும், நாசர், கார்த்தி, விஷால் உள்பட போன்ற நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளாக இருந்தவர்களும் என்ன பதில் அளிப்பார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

பத்திரிகையாளர் முன் 162 எம்.எல்.ஏக்களை நிறுத்திய சிவசேனா? அமித்ஷா அதிர்ச்சி!

0

பத்திரிகையாளர் முன் 162 எம்.எல்.ஏக்களை நிறுத்திய சிவசேனா? அமித்ஷா அதிர்ச்சி!

மகாராஷ்டிர மாநிலத்தில் சமீபத்தில் பதவியேற்ற தேவேந்திர பட்னாவிஸ் அரசு இன்னும் ஓரிரு நாளில் தனது மெஜாரிட்டியை நிரூபிக்கும் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில் பாஜக அரசுக்கு ஆதரவு கொடுத்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவு எம்எல்ஏக்கள் திடீரென சரத்பவாரின் அழைப்பை ஏற்று மீண்டும் சரத்பவார் பக்கம் திரும்பி உள்ளதாக அதிர்ச்சி தரும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இதனால் முதல்வர் பட்னாவிஸ் எப்படி மெஜாரிட்டியை நிரூபிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது

இன்று இரவு 7 மணிக்கு பத்திரிகையாளர்கள் முன் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி, மற்றும் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் 162 பேர் அணிவகுப்பு செய்யப்பட்டார்கள் என்றும் இதனை அடுத்து பாஜக மற்றும் அஜித்பவார் கூட்டணி எப்படி மெஜாரிட்டியை நிரூபிக்க முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது

இந்த நிலையில் தங்கள் பக்கமே போதுமான எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதால் தங்களை ஆட்சி அமைக்க கவர்னர் அழைக்க வேண்டும் என சிவசேனா கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

இந்த நிலையில் இது குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் நிலையில் நாளை அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஒரு வேளை நாளையே மெஜாரிட்டியை நிரூபிக்க முதல்வருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டால், பட்நாவிஸ் ஆட்சி கவிழ வாய்ப்பிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

இராமசாமி படையாச்சி பிறந்தநாளை அரசு விழாவாக இனி கொண்டாடப்படும்! முதல்வர் எடப்பாடி அதிரடி உத்தரவு

0

இராமசாமி படையாச்சி பிறந்தநாளை அரசு விழாவாக இனி கொண்டாடப்படும்! முதல்வர் எடப்பாடி அதிரடி உத்தரவு

வன்னியர் சமுதாயத்தின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான மறைந்த ராமசாமி படையாட்சியாரின் மணிமண்டபத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

இராமசாமி படையாச்சி பிறந்தநாளை அரசு விழாவாக இனி கொண்டாடப்படும்! முதல்வர் எடப்பாடி அதிரடி உத்தரவு

கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் 2 கோடியே 15 லட்சம் செலவில் ராமசாமி படையாட்சியாருக்கு மணிமண்டபம் அமைக்க முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். பணிகள் நிறைவடைந்த நிலையில், மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

இராமசாமி படையாச்சி பிறந்தநாளை அரசு விழாவாக இனி கொண்டாடப்படும்! முதல்வர் எடப்பாடி அதிரடி உத்தரவு

மணிமண்டப திறப்பு விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத், கே.பி.அன்பழகன், துரைகண்ணு, கே.சி.வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் மணிமண்டபத்தில் உள்ள ராமசாமி படையாட்சியாரின் முழு உருவ சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இராமசாமி படையாச்சி பிறந்தநாளை அரசு விழாவாக இனி கொண்டாடப்படும்! முதல்வர் எடப்பாடி அதிரடி உத்தரவு

இதில் சிறப்புரை ஆற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழகத்தின் மாபெரும் சமுதாயமான வன்னியர் சமுதாயத்தின் தலைவர் திரு.ராமசாமி படையாச்சியின் மணிமண்டபத்தை நான் திறந்து வைத்தது என் வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் எனவும், ராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் அதிரடியாக தெரிவித்தார். வன்னியர் சமுதாய அமைச்சர்கள் கேட்காமலேயே இராமசாமி படையாச்சியின் படத்தை சட்டமன்றத்தில் திறக்க நான் நடவடிக்கைகள் எடுத்தேன் என்றும் தெரிவித்தார்.

மேலும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ்,சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் அவர்கள் என்னை சந்திக்கும் போதெல்லாம் நீண்டநாள் கோரிக்கை ஒன்றை வைத்துக்கொண்டிருந்தனர், அது தமிழக அரசு பரிசீலனையில் உள்ளது என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார், என்ன கோரிக்கையை என்பதை வெளியிட மறுத்துவிட்டார். வன்னியர் சமுதாயத்திற்காக இந்த அரசு தொடர்ந்து பல திட்டங்களை செயல்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

வரலாறு காணாத உச்சத்தில் மும்பை பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

0

வரலாறு காணாத உச்சத்தில் மும்பை பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

இந்தியாவில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் ஒருபக்கம் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் இன்னொரு பக்கம் முதலீட்டாளர்களின் வருகை அதிகரிப்பதால் இந்திய பங்குச்சந்தை இன்று உச்சத்தை தொட்டது.

மும்பை பங்கு சந்தையில் இன்று நண்பகலில் சென்செக்ஸ் குறியீடு 487 புள்ளிகளுக்கும் அதிகமானது. இது து இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை 9 மணிக்கு வர்த்தகம் தொடங்கியதும் 30 பங்குகள் கொண்ட சென்செக்ஸ் குறியீடு திடீரென வரலாறு காணாத வகையில் 487.76 புள்ளிகள் உயர்வடைந்து 40,847.17 புள்ளிகளாக இருந்தது. குறிப்பாக
பாரதி ஏர்டெல், டாடா ஸ்டீல், வேதாந்தா, இன்டஸ்இன்ட் வங்கி, எச்.டி.எப்.சி. வங்கி, மாருதி ஆகிய பங்குகள் நல்ல லாபத்தை பெற்றன.

அதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 136.80 புள்ளிகள் உயர்வடைந்து 12,051.20 புள்ளிகளாக இருந்தது.

மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளிடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட கூடும் என கூறப்படுவதால் சென்செக்ஸ் குறியீடு புதிய உச்சம் அடைந்து உள்ளதாக வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.71.69 என்ற அளவில் இருப்பது பின்னடவைவாக கருதப்படுகிறது.