மகாராஷ்டிராவில் ஆட்சி தப்பிக்குமா? இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியின் தலைமையிலான ஆட்சி அமையும் என நேற்று முன் தினம் இரவு வரை எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென நேற்று அதிகாலை பாஜக ஆட்சி அமைந்ததை அங்குள்ள அரசியல் வல்லுனர்களாலே இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. இரவோடு இரவாக அமித்ஷா செய்த மேஜிக் காரணமாக, தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைக்கப்பட்டு தற்போது அங்கு கூட்டணி ஆட்சி ஏற்பட்டுள்ளது
இந்த நிலையில் பாஜகவை ஆட்சி அமைக்க மகாராஷ்டிர மாநில ஆளுநர் அழைப்பு விடுத்தது சட்டவிரோதம் என்று அறிவிக்கக் கோரி சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சார்பில் நேற்றிரவு சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக நள்ளிரவே விசாரணை செய்ய வேண்டும் என்றும் இக்கட்சிகள் கோரிக்கை விடுத்தது ஆனால் இன்று காலை 11 30 மணிக்கு இந்த வழக்கை விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
இன்றைய விசாரணையின்போது முதல்வர் பட்நாயக் தலைமையிலான அரசை உடனடியாக மெஜாரிட்டியை நிரூபிக்க கோர்ட் உத்தரவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு நடந்தால் பாஜக தலைமையிலான ஆட்சி தப்புமா? மீண்டும் சிவசேனா ஆட்சி அமைக்க முயற்சிக்குமா? அரசியல் குழப்ப நிலை தொடருமா? என்ற கேள்விகளுக்கு விரைவில் பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
எனக்கு நீங்களே மாப்பிள்ளை பாருங்கள்: நிருபரிடம் காமெடி செய்த தமன்னா
தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை தமன்னா நடித்த ’ஆக்சன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகியது. இந்த படம் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை என்றாலும் தமன்னாவின் நடிப்புக்கு விமர்சகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தமன்னா தற்போது இரண்டு தெலுங்கு படங்களிலும் ஒரு இந்தி படத்திலும் பசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கோவையில் திருச்சியில் நகை தனியார் நகைக்கடை ஒன்றின் திறப்புவிழாவில் தமன்னா கலந்து கொண்டார். இந்த விழாவின்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் நகைச்சுவையுடனும் சீரியஸாகவும் பதிலளித்தார். ஒரு செய்தியாளர் தமன்னாவின் திருமணம் குறித்து கேள்வி கேட்டபோது ’எனக்கு நல்ல மாப்பிள்ளையை நீங்களே பாருங்கள், நீங்கள் பார்க்கும் மாப்பிள்ளையை நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று நகைச்சுவையுடன் கூற, அந்த செய்தியாளர் வெட்கத்தில் சிரித்தார்
மேலும் தனக்கு நம்பர் ஒன் இடத்தில் நம்பிக்கை இல்லை என்றும் வலுவான கேரக்டர்களில் நடிக்கவும், நீண்ட நாள் நிலைத்து நிற்கும் கேரக்டர்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்துவதாகவும் அவர் கூறினார்
மேலும் தனக்கு அவ்வப்போது மன அழுத்தம் வரும் போதெல்லாம் சமூக வலைதளங்களில் வரும் மீம்ஸ்களை பார்த்து சிரித்து அதன் மூலம் தனது மன அழுத்தத்தை சரி செய்துவிடுவதாகவும், மன அழுத்தத்திற்கு வேறு எதுவும் சிகிச்சை தேவையில்லை என்றும் அவர் இன்னொரு கேள்விக்கு பதில் தெரிவித்தார்
இன்று நடைபெற்ற மூன்று வெவ்வேறு கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் மூன்று பிரபல கிரிக்கெட் வீரர்கள் ஒரே நாளில் செஞ்சுரி அடித்தது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே கொல்கத்தாவில் நடைபெற்று வரும் முதலாவது பகல் இரவு டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் விராத் கோலி இன்று சதம் அடித்து அசத்தினார். அவர் 194 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 136 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 580 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியில் இன்று லாபசஞ்சே 185 ரன்கள் எடுத்து அசத்தினார். இதில் 20 பவுண்டரிகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இதே போட்டியில் டேவிட் வார்னர் 154 ரன்கள் எடுத்து சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் வெயிட்லிங் சதம் அடித்து அசத்தியுள்ளார். இவர் 15 பவுண்டரிகளுடன் 119 ரன்கள் அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று ஒரே நாளில் நடைபெற்ற மூன்று வெவ்வேறு போட்டிகளில் மூன்று பிரபலங்கள் செஞ்சுரி அடித்தது கிரிக்கெட் உலகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இந்தியா
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெறும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நேற்று தொடங்கியது என்பது தெரிந்ததே. இந்தியா மற்றும் வங்கதேசம் விளையாடும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியான இந்தப் போட்டியில் வங்கதேச அணி டாஸ் வென்று 106 ரன்களுக்கு முதல் இன்னிங்சில் ஆட்டமிழந்தது
இதனை அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, கேப்டன் விராட் கோலியின் அபார சதம் காரணமாக 9 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. விராட் கோலியின் 136 ரன்களூம், புஜாரே 55 ரன்களும், ரகானே 51 ரன்கள் எடுத்திருந்தனர்
இந்த நிலையில் 245 ரன் பின்தங்கியிருந்த வங்கதேச அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் தற்போது விளையாடி வருகிறது. சற்று முன் வரை அந்த அணி 4 விக்கெட்டுகளை 40 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது. இன்னும் 201 ரன்கள் பின்தங்கிய நிலையில் கையில் 6 விக்கெட்டுகள் மட்டுமே வைத்திருக்கும் வங்கதேச அணி, இன்னிங்ஸ் தோல்வி அடைய அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. மேலும் ல் இன்று இரண்டாவது நாளே இந்த டெஸ்ட் போட்டி முடிவடையும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
’தலைவி’ ஃபர்ஸ்ட்லுக்கில் டுவிஸ்ட் வைத்த இயக்குனர்!
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதா கேரக்டரிலும், பிரபல நடிகர் அரவிந்தசாம் எம்ஜிஆர் கேரக்டரிலும் நடித்து வரும் ‘தலைவி’ என்ற திரைப்படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி வருவது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை இயக்குனர் விஜய் சற்றுமுன் வெளியிட்டுள்ளார். ஜெயலலிதாவின் உருவத்தை போன்று இந்த ஃபர்ஸ்ட்லுக் இருந்தாலும், முகம் ஜெயலலிதாவுக்கு சம்பந்தமே இல்லாமல் இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் இந்த ஃபர்ஸ்ட்லுக் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் முழு படத்தையும் பார்த்த பின்னரே இந்த படத்தை பற்றிய உண்மையான விமர்சனத்தை சொல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த படம் 2020ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி வெளியாகும் என்று இயக்குனர் விஜய் ஒரு டுவிஸ்ட்டை இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த தேதிக்கும் ஜெயலலிதாவுக்கும் சம்பந்தம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் தவிர ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை பிரியதர்ஷினி என்பவர் ‘தி அயர்ன் லேடி’என்ற பெயரில் இயக்கி வருகிறார். மேலும் இயக்குனர் கவுதம் மேனன் ‘குவீன்’ என்ற பெயரில் வெப் சீரிஸ் ஆக இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
தனியார் மருத்துவக் கல்லூரி கட்டணத்தை மாநில அரசுகளே நிர்ணயிக்க வேண்டும்! மருத்துவர் ராமதாஸ்
தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணங்களை மாநில அரசுகளே நிர்ணயிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது.
இந்தியா முழுவதும் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணங்களை இந்திய மருத்துவக் குழுவின் ஆட்சிக்குழு நிர்ணயித்துள்ளது. இது மிகவும் குறைவான கட்டணம் என்று ஊடகங்கள் மூலம் செய்திகள் செய்திகள் பரப்பப்படும் நிலையில், உண்மையில் இந்திய மருத்துவக் குழு பரிந்துரைத்துள்ள கட்டணம் மிகவும் அதிகமாகும். இது ஏழை, நடுத்தர மாணவர்களை சுரண்டுவதற்கே வழி வகுக்கும்.
இந்திய மருத்துவக் குழுவின் ஆட்சிக் குழு அளித்துள்ள பரிந்துரைகளின்படி தனியார் கல்லூரிகளில் உள்ள 50% மருத்துவப்படிப்பு இடங்களுக்கு ஆண்டுக் கட்டணமாக ரூ.8 லட்சம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களுக்கு ஆண்டுக்கட்டணமாக ரூ.30 லட்சம் வரை வசூலிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மீதமுள்ள 50% இடங்களுக்கு கல்லூரி நிர்வாகமே விருப்பம் போல கட்டணம் நிர்ணயித்துக் கொள்ளலாம் என்றும் சலுகை காட்டப்பட்டுள்ளது. இந்தப் பரிந்துரை மருத்துவக் கல்லூரிகளுக்குத் தான் பயனளிக்குமே தவிர மக்களுக்கு பயனளிக்காது.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு வரை தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டணங்களை மாநில அரசால் அமைக்கப்பட்ட நீதிபதிகள் குழு தான் நிர்ணயித்து வந்தது. தமிழகத்திலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 65% இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்கும், 35% இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் வழங்கப் படுகின்றன. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு அதிகபட்சமாக ரூ.4 லட்சமும், நிர்வாக இடங்களுக்கு ரூ.12 லட்சமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இது ஒப்பீட்டளவில் மிகக் குறைவான கட்டணமாகும்.
ஆனால், 50% இடங்களுக்கு இந்திய மருத்துவக் குழு, தமிழக அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட இரு மடங்கு கட்டணத்தை நிர்ணயித்திருக்கிறது. அதேபோல், மீதமுள்ள 50% இடங்களுக்கு தனியார் கல்லூரிகளே விருப்பம் போல கட்டணம் நிர்ணயித்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருப்பதால், அத்தகைய இடங்களுக்கு தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு இணையாக ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்படலாம். இதுவும் தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட இரு மடங்கு அதிகம் ஆகும். இதனால் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவர்.
முதுநிலை மருத்துவப் படிப்புக்கு தனியார் பல்கலைக்கழகங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ. 3 லட்சமும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.11.50 லட்சமும் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப் படுகிறது. ஆனால், இந்திய மருத்துவக் குழு பரிந்துரைத்திருக்கும் கட்டணம் சராசரியாக ஆண்டுக்கு ரூ.30 லட்சம் ஆகும். இந்திய மருத்துவக் குழுவின் கட்டண பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால், தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கும் எந்த வேறுபாடும் இருக்காது. அதன்பின் பணம் படைத்தவர்கள் மட்டும் தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டு விடும்.
கட்டண நிர்ணயத்தைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு வரை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்த தனியார் மருத்துவக் கல்லூரிகள், இப்போது இந்திய மருத்துவக் குழுவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லப்பட்டதற்கு காரணம் சில மாதங்களுக்கு முன் நிறைவேற்றப்பட்ட தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் தான். இந்த சட்டத்தின்படி தான் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கும் உரிமை மாநில அரசுகளிடமிருந்து இந்திய மருத்துவக் குழுவுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. ஓர் சீர்திருத்தம் செய்யப்பட்டால், அது மக்களுக்கு நன்மை பயப்பதாக அமைய வேண்டும். ஆனால், மருத்துவக் குழுவுக்கு அதிகாரம் அளிக்கும் இந்த சீர்திருத்தம் மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பதுடன் மட்டுமின்றி, ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவுகளையும் அடியோடு சிதைத்துள்ளது.
தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணம் ஒப்பீட்டளவில் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தான் மருத்துவப் படிப்புக்காக கோடிக்கணக்கில் கட்டணம் வசூலிக்கின்றன. மருத்துவப் படிப்பு வணிகமயமாக்கப்பட்டிருப்பதற்கு இது தான் முதன்மைக் காரணம். கல்விக்கட்டண சீர்திருத்தங்கள் நிகர்நிலை பல்கலை.களிடமிருந்து தான் தொடங்கப்பட வேண்டும்.
எனவே, தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கும் அதிகாரம் மீண்டும் மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அதேபோல், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 65% இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுவதுடன், அனைத்து இடங்களும் 69% இட ஒதுக்கீட்டைப் பின்பற்றி மாநில அரசின் மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பட வேண்டும். அத்துடன், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களிலும், மருத்துவக் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கே வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் தளபதி விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்து வருவதாகவும் ஒரு படம் நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் கதை என்றும் கூறப்படுகிறது
இந்த நிலையில் இந்த படத்தின் டெல்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ள நிலையில் அடுத்த மாதம் சென்னை திரும்பும் படக்குழுவினர் முதல்கட்டமாக இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபஸ்ட்லுக்கை ரிலீஸ் செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்தது
அனேகமாக ஜனவரி 1ஆம் தேதி இந்த படத்தின் டைட்டில் வெளிவர வாய்ப்பு இருப்பதாகவும், இந்த படத்திற்கு ’டாக்டர்’ அல்லது ’சம்பவம்’ ஆகிய இரண்டு டைட்டில்களில் ஒன்று தேர்வு செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது
எனவே ஜனவரி 1-ஆம் தேதி விஜய் ரசிகர்களுக்கு தரமான ’சம்பவம்’ காத்திருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. கமல்ஹாசனின் ’நம்மவர்’ படத்தின் ரீமேக் என்று கூறப்படும் இந்த படத்தின் இந்த படம் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய், மாளவிகா மேனன், சாந்தனு, அந்தோணி வர்கீஸ், ஆண்ட்ரியா, பிரிகிதா உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
சினிமா கூத்தாடிகள் தமிழகத்திற்கு என்ன செய்ய போகிறார்கள்: சுப்பிரமணியன் சுவாமி
சினிமா கூத்தாடிகள் தமிழகத்திற்கு என்ன செய்ய போகிறார்கள்: சுப்பிரமணியன் சுவாமி
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ரஜினி, கமலை சுற்றியே அரசியல் நடந்து கொண்டிருக்கும் நிலையில் ரஜினி, கமல் போன்ற சினிமா கூத்தாடிகளால் எந்த பயனும் இல்லை என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுப்ரமணியன் சுவாமியிடம், ரஜினி அரசியலுக்கு வருவது, ரஜினி – கமல் இணைவது, சசிகலா விடுதலை பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது. சுப்பிரமணியன் சுவாமி இதுகுறித்து கூறியதாவது:
சினிமா கூத்தாடிகளால் தமிழகத்திற்கு ஒன்றும் செய்ய முடியாது என்றும் நடிகர்கள் அவர்களது திரைப்படம் வெளியாகும் போது மட்டும் விளம்பரத்திற்காக அரசியலுக்கு வருவதாக கூறி இருக்கலாம் என்றும் இதற்கு முன் பலமுறை அரசியலுக்கு வர போவதாக கூறியிருந்தும் ஒருமுறை கூட எதுவும் நடக்கவில்லை என்றும் கூறினார்.
ரஜினியின் அரசியல் குறித்த சினிமா வசனங்களை பலமுறை கேட்டு அலுத்துவிட்டதாகவும், அவர் அரசியலுக்கு வரமாட்டார், வந்தால் பின்னர் பார்த்து கொள்ளலாம் என்றும் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.
மேலும் அதிமுக.,வை நல்லமுறையில் நடத்தும் திறமை சசிகலாவுக்கு மட்டுமே உண்டு என்றும் அவர் சிறையில் இருந்து வெளியில் வந்தால் நிச்சயமாக அதிமுக.,வினர் அனைவரும் சசிகலாவிடம் செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் மற்றொரு கேள்விக்கு பதிலளித்தார்.
ரஜினி, கமலுக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழக அரசியல்வாதிகளும் ஊடகங்களும் பேசிக்கொண்டிருக்க, அவர்கள் இருவரையும் ஒரு பொருட்டாகவே மதிக்காமல் சுப்பிரமணியன் சுவாமி கூறிய கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்: பாஜக அரசு பதவியேற்றது
கடந்த ஒரு மாதமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் பெரும் குழப்பங்கள் நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவில் சிவசேனா கட்சி ஆட்சி அமைக்கும் என்றும், சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே முதலமைச்சராகவும் அவருடைய மகன் ஆதித்யா தாக்கரே கல்வி அமைச்சராகவும் பொறுப்பு ஏற்பார்கள் என்றும் செய்திகள் வெளியாகின. மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா தலைமையிலான அரசு இன்று அல்லது நாளை பதவியேற்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜகவின் தேவேந்திர பட்நாயக் சற்றுமுன் முதல்வராக பதவியேறார். மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவு தர ஒப்புக்கொண்டதை அடுத்து பாஜக ஆட்சி பதவியேற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேவேந்திர பட்னவிஸ் அவர்களுக்கு முதல்வராகவும், அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்க அவர்களுக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்ற இருவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட்டு சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க நேற்று வரை பேச்சுவார்த்தை நடத்தி வந்த தேசியவாத காங்கிரஸ், திடீரென பாஜகவிற்கு ஆதரவு அளித்திருப்பது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு ஜனாதிபதி பதவியை தர பாஜக ஒப்புக் கொண்டுள்ளதாகவும் இதனையடுத்தே பாஜக ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் மகாராஷ்டிராவில் ஏற்பட்ட இந்த திடீர் அரசியல் திருப்பம் அம்மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் விற்கப்படும் பாலில் தான் இந்தியாவிலே அதிக நச்சுத்தன்மை உள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது திமுகவின் டி ஆர் பாலு எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அஸ்வினி குமார் சாவுபே, “2018 ஆம் ஆண்டு நடத்த பெற்ற ஆய்வில் 6 ஆயிரத்து 432 மாதிரிகள் சோதனைக்கு உள்ளாக்க பட்டன. அவற்றில் 368 மாதிரிகளில் அடலாடாக்ஸின் (aflotoxin) எம் -1 அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த வகையான நச்சுத்தன்மை உள்ள பால்கள் தமிழகத்தில் தான் அதிகம் விற்கப்படுகின்றன” என்றார்.
நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பாலில் 93 சதவீதம் மனிதர்கள் அருந்த சரியானது என்றும் அவர் கூறினார்.
அப்லோடாக்ஸின்(aflotoxin) என்னும் வேதிப்பொருள் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் புற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.