வசதி இல்லை என்றால் தேர்தலில் சீட் கேட்காதீர்கள்: அமைச்சரின் சர்ச்சை அறிவிப்பு
உள்ளாட்சித் தேர்தல் தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் தற்போது அதிமுக, திமுக என இரண்டு பெரிய கட்சிகளில் இருந்தும் பெறப்பட்டு வருகிறது
இந்த நிலையில் வசதி வாய்ப்பு இல்லாதவர்களுக்கும், வயதானவர்களுக்கும் சீட் கொடுக்க முடியாது என்றும், எனவே இந்த இரு தரப்பினருக்கும் சீட் கேட்க வேண்டாம் என்றும் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டபோது கேட்டுக் கொண்டுள்ளார்
மேலும் தற்போதைய காலம், கம்ப்யூட்டர் காலம் என்பதால் இளைஞர்களை தேர்வு செய்ய கட்சி முடிவு செய்துள்ளதாகவும், வயதானவர்களுக்கும் பண வசதி உள்ளவர்களுக்கு மட்டுமே சீர் கொடுத்து திமுக அழிந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பணவசதி இல்லை என்றால் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்க வேண்டாம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் கூறியிருப்பது அக்கட்சியினர் களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பொறுப்பை சரியாக நிர்வகிக்க படிப்பு, புத்திசாலித்தனம் முக்கியம் என்ற நிலையில் பணம் இல்லாதவர்கள் சீட் கேட்க வேண்டாம் என்று ஒரு அமைச்சரே கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
எது நடக்கக்கூடாது என்று உலக தமிழ் மக்கள் வேண்டினார்களோ! அது நடந்து விட்டது! மருத்துவர் ராமதாஸ் ஆதங்கம்
இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்களின் எதிர்கால நலன் மற்றும் பாதுகாப்பு கருதி எது நடக்க கூடாது என்று உலக முழுவதும் உள்ள தமிழ் மக்கள் வேண்டினார்களோ அதுவே நடந்து விட்டது என கோத்தபாய ராஜபக்சே அமோக வெற்றி பெற்று இலங்கையின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று “இலங்கை தேர்தலில் கோத்தபாய வெற்றி: தமிழர்களுக்கு தமிழீழமே நிரந்தர தீர்வு!” என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.
இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஈழத் தமிழர்களின் எதிர்காலப் பாதுகாப்பு கருதி, எது நடக்கக்கூடாது என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வேண்டினார்களோ, அது நடந்து விட்டது. ஆம்…. தமிழினத்தின் எதிரியான கோத்தபாய ராஜபக்சே அமோக வெற்றி பெற்று இலங்கையின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது இலங்கையில் அமைதியை ஏற்படுத்த எந்த வகையிலும் உதவாது.
இலங்கையில் நேற்று நடைபெற்ற 8-ஆவது அதிபர் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் இலங்கை பொதுஜன கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சேவுக்கும், இலங்கை முன்னாள் பிரதமர் பிரேமதாசாவின் புதல்வரும், ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளருமான சஜித் பிரேமதாசாவுக்கும் இடையில் தான் கடுமையான போட்டி நிலவியது. இவர்கள் இருவருமே தமிழர்களுக்கு ஆதரவானவர்கள் அல்ல என்ற போதிலும், இந்த இருவரில் எவர் மிகவும் மோசமானவர், எவர் கொஞ்சம் மோசமானவர் என்ற அடிப்படையில் தான், அதிபர் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை இலங்கையில் வாழும் தமிழர்கள் தீர்மானிக்க வேண்டியிருந்தது.
அதைப்போலவே, ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாசா தமிழர்களின் நலன் காக்கப்படும்; தமிழர்கள் வாழும் பகுதிகளில் இருந்து ராணுவம் விலக்கப்படும்; மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். அதனால் அவருக்கு தமிழ் தேசியக் கூட்டணி, தமிழ் முற்போக்குக் கூட்டணி, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட தமிழர் கட்சிகள் ஆதரவு அளித்தன. அதனால் பிரேமதாசா தமிழர் ஆதரவு வேட்பாளராகவே பார்க்கப்பட்டார்.
Sri Lanka’s Gotabaya Rajapaksa On Election Victory-News4 Tamil Latest Online Tamil News Today
அதற்கு மாறாக கோத்தபாயா ராஜபக்சே சிங்கள பேரினவாதத்தின் சின்னமாகவே களமிறங்கினார். அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சே தொடங்கிய இலங்கை பொதுஜன கட்சியின் வேட்பாளராக அவர் போட்டியிட்டாலும், இலங்கையின் தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சியும் அவருக்கு ஆதரவு அளித்தது. இலங்கை அதிபர் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால் இலங்கை ராணுவம் வலிமைப்படுத்தப்படும்; போர்க்குற்ற விசாரணைகள் அனைத்தும் கைவிடப்படும் என்பன உள்ளிட்ட சிங்கள மக்களிடம் இனவெறியைத் தூண்டும் வகையிலான பிரச்சாரத்தையே கோத்தபாய முன்னெடுத்தார். அவரது இனவெறி பிரச்சாரம் தான் இப்போது அவருக்கு வெற்றியை தேடித்தந்துள்ளது.
இலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரைத் திட்டத்தை கோத்தபாய ராஜபக்சே அறிவித்த போதே, அவர் வெற்றி பெற்றால் இலங்கையில் தமிழர்கள் வாழ முடியாத நிலை ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தேன். இப்போது அவர் வெற்றி பெற்றுள்ள நிலையில் தமிழர்களுக்கு எதிராக அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. 2009-ஆம் ஆண்டு ஈழப் போரில் ஒன்றரை லட்சம் தமிழர்களை கொடூரமான முறையில் படுகொலை செய்த போர்க்குற்றவாளிகள் எவரும் இனி தண்டிக்கப்பட மாட்டார்கள். போர்க்குற்றவாளியான கோத்தபாய ராஜபக்சேவே அதிபராக வந்துள்ள நிலையில், எந்தவிதமான போர்க்குற்ற விசாரணையும் இனி நடக்காது. மொத்தத்தில் இதுவரை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்ட தமிழர்கள், இனி நான்காம் தர குடிமக்களாக நடத்தப்படுவர்.
இத்தகைய சூழலில் இலங்கையில் வாழும் தமிழர்களின் நலன்களை இனி எவ்வாறு காப்பாற்றலாம்? என்பது குறித்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் சிந்திக்க வேண்டும். இலங்கை தேர்தல் முடிவுகள் இன்னொரு கள எதார்த்தத்தை வெளிப்படுத்தியுள்ளன. தமிழர்களின் எதிரியாக வரித்துக் கொண்டு களமிறங்கிய கோத்தபாயவுக்கு தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் சராசரியாக 10% வாக்குகள் கூட கிடைக்கவில்லை; அதேநேரத்தில் சிங்களர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் 60 முதல் 70 விழுக்காடு வாக்குகள் கிடைத்துள்ளன. அதேபோல், தமிழர்களின் நண்பனாக காட்டிக் கொண்ட சஜித் பிரேமதாசாவுக்கு தமிழர்கள் வாழும் பகுதிகளில் 80 முதல் 90% வாக்குகளும், மற்ற பகுதிகளில் 40 விழுக்காட்டுக்கும் குறைவான வாக்குகளும் கிடைத்திருக்கின்றன. தமிழர்கள் தனித் தீவாகவும், சிங்களர்கள் தனித்தீவாகவும் வாக்களித்திருப்பது இரு இனங்களும் இனி சேர்ந்து வாழ வாய்ப்பில்லை என்பதையே காட்டுகின்றன. இதை அனைத்து உலக நாடுகளும் புரிந்து கொள்ள முயல வேண்டும்.
அதிபர் தேர்தல் முடிவுகள் சொல்லும் பாடங்களையும், புதிய அதிபர் தமிழர்களுக்கு எதிராக ஏவுவதற்கு காத்திருக்கும் அடக்கு முறைகளையும் வைத்துப் பார்க்கும் போது ஈழத்தமிழர்களுக்கு தனித்தமிழீழம் அமைத்துத் தருவது தான் ஈழப் பிரச்சினைக்கு சிறந்தத் தீர்வாக அமையும். அதிபர் தேர்தல் முடிவுகளையே அதற்கான பொதுவாக்கெடுப்பு முடிவாக கருதலாம் என்றாலும் கூட, தேவைப்பட்டால் மீண்டும் ஒருமுறை பொதுவாக்கெடுப்பு நடத்தியாவது தனித்தமிழீழம் அமைத்துக் கொடுக்க ஐ.நா. அமைப்பு முன்வர வேண்டும். இதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பை இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இந்துக் கோயில்! திருமாவளவனை கைது செய்யக் கோரி புதுச்சேரியில் கோரிக்கை
புதுச்சேரியில் உள்ள கம்பன் கலையரங்கத்தில் கட்சி நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இந்து கோயில் என இந்து மதத்தினரை இழிவாக பேசினார். இதற்கு தமிழகம் முழுவதும் இந்துக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசிய பேச்சு சமூக வலைதளங்கள் மூலம் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இந்து மத அமைப்புகள் திருமாவளவன் மீது வழக்கு தொடர வேண்டுமென தமிழகம் முழுவதும் காவல்துறையிடம் புகார் அளித்து வருகின்றனர், தற்போது புதுச்சேரியிலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில், 9ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில், விடுதலை சிறுத்தை கட்சி தலைவரும், எம்.பி.,யுமான திருமாவளவன், ஹிந்து தெய்வங்களை இழிவாக பேசி உள்ளார். இதுகுறித்து திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி, ஹிந்து முன்னணியின் புதுச்சேரி மாநில செயலர் ரமேஷ் ஒதியன்சாலை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதேபோல் புதுச்சேரி நெட்டப்பாக்கம் காவல் நிலையத்திலும், இந்து முன்னணி தென் சென்னை மாவட்ட செயலர் நித்தியானந்தன் கிண்டி காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.
இலங்கையில் திடீர் திருப்பம்: கோத்தபய ராஜபட்ச வெற்றி
இலங்கையில் இன்று காலை கோத்தபய ராஜபக்சே பின்னடைவிலும் சஜித் பிரேமதாச முன்னிலையிலும் இருந்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக சஜித் பிரேமதாச பின்னடவு அடைந்திருப்பதா சற்றுமுன் வெளியான செய்தி தெரிவிக்கின்றன
இதனையடுத்து இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சியின் துணைத் தலைவர் பதவியில் இருந்து சஜித் பிரேமதாச விலகியுள்ளார். இலங்கை அதிபர் தேர்தலில் சஜித் பிரேமதாச பின்னடைவை சந்தித்து வரும் நிலையில் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக தெரிகிறது
சற்றுமுன் வெளியான தகவலின்படி இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபட்ச 52.87 சதவீத வாக்குகளும், ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாசா 39.67 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளனர். எனவே இலங்கையின் 8-ஆவது அதிபா் தோதலில் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபட்ச வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சஜித் பிரேமதாச தனது தோல்வியை ஒப்புகொள்வதாக அறிவித்துள்ளதோடு ஐக்கிய தேசிய கட்சியின் துணைத் தலைவர் பதவியில் இருந்து சஜித் பிரேமதாச விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
வெளிநாட்டில் திமுக எம்பியும் காங்கிரஸ் எம்பியும் இணைந்து அடித்த கூத்து
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தான் தமிழச்சி தங்கபாண்டியன். அவரும் காங்கிரஸ் எம்பியும் இணைந்து துபாயில் வலம் வரும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தென் சென்னை தொகுதியின் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் தான் சுமதி என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அழகிய வேட்பாளர் என்றாலே மேடம் அவர்களை தான் அனைவருக்கும் நினைவு வரும். இதற்கு காரணம் இவரை ஆதரித்து பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின் மக்களை கவர அவரை அழகான வேட்பாளர் என்று குறிப்பிட அதற்கு அவரும் வெட்கப்பட்டு சிரிக்க அன்றிலிருந்து சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலம் அடைந்தார்.
அதன் பிறகு அவர் நாடாளுமன்ற வேட்பாளராக வெற்றி பெற்ற ஆரம்பத்தில் மக்களவையில் அவர் தூங்குவது போன்ற வீடியோ வெளியாகி கடும் விமர்சனத்திற்கு ஆளானர். அடுத்து அவர் பதவி பிரமாணம் எடுத்த பொது ஆற்றிய உரை அவர் மீதான விமர்சனத்தை போக்க உதவியது என்றும் கூறும் அளவிற்கு விரிவாகவும் நேர்த்தியாகவும் பேசினார்.
அதன் பிறகு அவர் பெரும்பாலும் ஊடகங்களிலோ சமூகவலைத்தளங்களிலோ அதிகம் பேசப்படாமல் இருந்தார், இந்நிலையில் மீண்டும் தற்போது நெட்டிசன்களின் பாராட்டிற்கும் கூடவே கிண்டலுக்கும் உள்ளாகி வருகிறார் நம்ம அழகிய வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன்.
சமீபத்தில் துபாயில் உள்ள முஸ்லீம் அமைப்புகள் ஏற்பாடு செய்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழச்சி தங்கபாண்டியன் சென்றிருந்தார். தமிழச்சி தங்கபாண்டியன் என்று பெயரிலேயே தமிழை அடையாளமாக வைத்துள்ள அவர் அங்கு மாடர்ன் உடைகளில் வலம் வரும் சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி தற்போது வைரல் ஆகி வருகிறது. அந்த புகைப்படங்களில் ஒன்று தான் சமீபத்தில் அமெரிக்கா சென்று திரும்பிய காங்கிரஸ் எம்பி ஜோதிமணியுடன், திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் எடுத்துக் கொண்ட புகைப்படம்.
DMK MP Tamizhachi Thangapandiya Foreign Trip Updates-News4 Tamil Latest Online Tamil News Today Live
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோதிமணி தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த படத்தில் அவர் கருப்பு நிற ஜீன்ஸ் டிஷர்ட் அணிந்து உள்ளார், மேலும் இது போல் மற்ற சில புகைப்படங்களில் மஞ்சள் நிற ஆடையிலும், வெண்மை நிற லோஹிப் உடைகளிலும் கண்ணை கவரும் வகையில் கலர் கலராக போஸ் கொடுத்துள்ளார்கள். தற்போது இந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகின்றன.
சமீபத்தில் தமிழக முதல்வரும்,அவருக்கு உதவியாக அமைச்சர்களும் வெளிநாட்டு முதலீடுகளை கவர வெளி நாட்டு சுற்றுபயணம் மேற்கொண்ட போது,முதல்வர் மக்கள் நலனை மறந்து வெளிநாட்டு சுற்றுலா சென்றிருக்கிறார் என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்திருந்தார்.
இந்நிலையில் திமுக எம்பி மற்றும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் எம்பி என இருவரும் வெளிநாடு சென்றதன் காரணம் என்ன? மக்கள் நலனை மறந்து வெளிநாட்டில் இவர்களுக்கு என்ன வேலை? மேலும் இவர்கள் வெளிநாடு சென்றதன் மர்மம் தான் என்ன? என பல்வேறு விமர்சனங்கள் எழுந்த வண்ணமேயுள்ளது.
மே.இ.தீவுகளுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான்: 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் நாடுகளுக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில நாட்களாக இந்தியாவிலுள்ள லக்னோ நகரில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலாவது டி20 போட்டியில் வென்றது
இதனையடுத்து நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. நேற்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்ததை அடுத்து ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது.
இதனை அடுத்து 148 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 41 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது
ஆப்கானிஸ்தான் அணியின் கரீம் ஜெனாட் என்ற பந்துவீச்சாளர் மிக அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது இந்த போட்டியில் ஆப்கன் அணியினர் வெற்றி பெற முக்கிய காரணம் என்பதும் அவர் இந்த போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இதனை அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த போட்டியில் இன்று நடைபெறும் என்பதும், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணியே, தொடரை வெல்லும் அணியாக கருதப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது
இலங்கை அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில் புதிய ஜனநாயக கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச ஆகிய இரண்டு முன்னணி வேட்பாளர் உள்பட மொத்தம் 35 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். நேற்று தேர்தல் அமைதியாக முடிவடைந்து இரவு முதல் வாக்குகள் எண்ணப்பட்டன.
இதில் முதல்கட்ட வாக்கு எண்ணிக்கையின் தகவல்படி புதிய ஜனநாயக கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாச முன்னிலையில் இருப்பதாகவு அவர் இந்த தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன
இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சவை விட சுமார் 54,000 வாக்குகள் புதிய ஜனநாயக கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாச முன்னிலையில் இருப்பதாக இலங்கை ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன
இருப்பினும் தற்போது முதல்கட்ட வாக்கு எண்ணிக்கை மட்டுமே நடைபெற்று வருவதாகவும் இதனை வைத்து இப்போதே வெற்றி பெறுபவர் யார் என்பதை சொல்ல முடியாது என்றும், முன்னிலையில் திடீர் திருப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், இலங்கை அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
இரண்டாவது டி20 போட்டியில் அதிரடி காட்டிய ஆப்கானிஸ்தான்! வெல்ல போவது யார்?
ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கு இந்திய தீவு அணிகள் இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் போராடி வருகிறது.
ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி லக்னோவில் தற்போது நடைபெற்று வருகிறது.இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி தலைவர் ரஷீத் கான் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய குர்பாஸ் மற்றும் சாசாய் முதல் விக்கெட்டுக்கு 42 ரன்கள் சேர்த்தனர்.பின்னர் கெஸ்ரிக் வில்லியம்ஸ் வீசிய பந்தில் குர்பாஸ் 15 ரன்கள் மற்றும் சாசாய் 26 ரன்களில் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.அடுத்து களமிறங்கிய கரீம் ஜனத் 26 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஹோல்டர் வீசிய பந்தில் அவுட் ஆனார்.
பின்பு களமிறங்கிய பேட்ஸ்மேன்களான ஆஸ்கர்ஆப்கான், இப்ராகிம் ஜட்ரான்,நபி ஆகியோர் பெரிதாக ரன் எதுவும் எடுக்காமல் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். அடுத்து களமிறங்கிய நஜிபுல்லாஹ் ஐட்ரான்(20) மற்றும் குலாபுதின் நைப்(24) ஆகியோர் நிதானமாக தங்களது அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இறுதியில் ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் குவித்தது.மேற்கு இந்திய தீவு தரப்பில் அதிகபட்சமாக கெஸ்ரிக் வில்லியம்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.ஹால்டேர் மற்றும் கீமோ பால் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கணக்கில் மேற்கு இந்திய தீவுகள் அணி பேட்டிங் செய்து வருகிறது.முதல் போட்டியில் தோல்வியை கண்ட ஆப்கானிஸ்தான் ஆப்கானிஸ்தான் அணி இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் பௌலிங் செய்து வருகிறது.
உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு 4 மாநகராட்சியா? அதிமுகவில் பரபரப்பு
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிக மாநகராட்சி தொகுதிகளை கேட்டு வாங்க முடிவு செய்திருப்பதால் இரு கூட்டணிகளும் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது
குறிப்பாக அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக 4 மாநகராட்சி தொகுதிகளை பெற்றே ஆகவேண்டும் என்று அதிமுகவுக்கு அழுத்தம் தருவதால் அதிமுக தலைமை அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் பாஜகவிற்கு கோவை, நாகர்கோவில், திருப்பூர் மற்றும் வேலூர் ஆகிய மாநகராட்சிகளில் சாதகமாக இருக்கும் என்றும், அதனால் இந்த 4 மாநகராட்சி தொகுதிகளை அதிமுகவிலிருந்து கேட்டுப் பெற வேண்டும் என்றும் பாஜக தமிழக நிர்வாகிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். கடந்த மக்களவைத் தேர்தலில் வெறும் ஐந்து தொகுதிகள் மட்டுமே பெற்ற பாஜக, உள்ளாட்சி தேர்தலில் 4 மாநகராட்சி தொகுதிகளை கேட்டிருப்பது அதிமுக தலைமைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இதேபோல் தேமுதிக 3 மாநகராட்சி தொகுதிகளையும், பாமக 4 மாநகராட்சி தொகுதிகளையும் கேட்டு வலியுறுத்தி வருவதாகவும் இதை எல்லாம் கணக்குப் போட்டுப் பார்க்கும்போது அதிமுகவுக்கு மிகக் குறைவாகவே மாநகராட்சி தொகுதி தேறும் என்றும் கூறப்படுகிறது
மேலும் உள்ளாட்சி தேர்தலில் 15 முதல் 2 சதவீத தொகுதிகளை கேட்டு வாங்க வேண்டும் என்று தேமுதிக மற்றும் பாமக முடிவு செய்து இருப்பதாக கூறப்படுவதால் உள்ளாட்சித் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு பேச்சுவார்த்தையின் போது பெரும் சிக்கல் ஏற்படலாம் என்றும் இதனால் கூட்டணியே அடையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
அதேபோல் திமுகவிடம் இருந்து 5 மாநகராட்சி தொகுதிகளை கேட்டு பெற காங்கிரஸ் முடிவு செய்து இருப்பதாகவும் இதனால் அந்த கூட்டணியிலும் சலசலப்பு ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் உள்ளாட்சி தேர்தல், கூட்டணியை உடைக்கும் தேர்தலாகவே இருக்கும் என்று கணிக்கப்படுகிறது
ஆளுனரை சந்திக்கும் திட்டத்தில் திடீர் மாற்றம்: மகாராஷ்டிராவில் நீடிக்கும் குழப்பம்
சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் மகாராஷ்டிர ஆளுநரை சந்திக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறவிருந்த நிலையில் திடீரென கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
மகாராஷ்டிரா மாநிலத்தில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்காததால் சமீபத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில், ஆட்சியமைக்க சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. சிவசேனா தலைமையில் கூட்டணி ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கிவிட்டதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இன்று காலை செய்தியாளர்களிடம் கூறினார். இதனையடுத்து இன்று மாலை சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ஆளுநரை சந்திக்க திட்டமிடப்பட்டி அதற்கான அப்பாயின்மெண்ட்டும் வாங்கப்பட்டது
இந்நிலையில், சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் மகாராஷ்டிர ஆளுநரை சந்திக்கும் நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், ஆளுனரை சந்திக்கும் முன் மூன்று கட்சி தலைவர்களும் இணைந்து குறைந்த பட்ச செயல் திட்டத்தை இறுதி செய்வது குறித்து விவாதிக்கவுள்ளதாகவும், குறைந்தபட்ச செயல்திட்டம் தயாரானதும் நாளை சோனியா காந்தியை தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் சந்திக்க உள்ளதாகவும் அதன்பின்னரே ஆளுனரை சந்திக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
இதனையடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக இருந்து வரும் குழப்பம் மேலும் நீட்டித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது